வியாழன், 18 ஜூலை, 2024

தமிழ்ச்செல்வியே!

 மகளிர் சிங்கம் மதிவதனிக்கு வாழ்த்துக்கள்

________________________________________________

சிந்தனைப்பீரங்கியிலிருந்து
அப்படியே
பிறந்து வந்த தமிழ்ச்செல்வியே!
மற்றப்பெண்களைப்போல‌
உன் விரல்நகங்களில்
வெறும் சாயப்பூச்சுகள் இல்லை.
சோம்பேறித்தனமான‌
எரிமலைகளையும் உசுப்பிவிடும்
செஞ்சூரியப்பஞ்சுக்குழம்பின்
ஒளிர்வுகள் மட்டுமே உண்டு.
உன் பேச்சு
மொட்டைப்பாறைகளையும்
செதில் செதில்களாக்கி விடும்
"சொற்றுளி"கள் தான்.
இந்த தமிழ் வீடு
உன் காவலில்
ஈடற்ற வலிமை பெறும்.
வாழ்த்துக்கள் செல்வியே
வாழ்த்துக்கள்.
_____________________________________
செங்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக