புதன், 31 மே, 2017

ஒரு பதவியேற்பு !

ஒரு பதவியேற்பு !
=====================================================ருத்ரா

ராஷ்ட்ரபதி மாளிகையில் ஒரே பரபரப்பு
க்யா பாத் ஹெ?
குச் நை ஜாந்தா?
ஃபிர் க்யோம் இத்னா ஹல்சல்.?
எனக்கு தெரியாதுபா?
அதற்கு மேல் அந்த வேட்டி கட்டிய‌
மத்ராஸிகள்
மௌனம் ஆகினர்.
ராம் கி ஜிந்தா பாத்!
அனுமன் கி ஜிந்தா பாத்!
பிச்சு பிச்சு போட்ட‌
கொத்து பரோட்டா மாதிரி
எங்கு பார்த்தாலும்
தேசிய பாஷையின் ஒலிச்சிதறல்.
பிரதமர் வரும் வழி
ரத்தினக்கம்பளம் விரிக்கப்பட்டு
பல கி.மீ. களுக்கு
படுத்துக்கிடந்தது.
கட்டுக்கடங்காத கூட்டம்.
மாளிகை வாசலிலேயே
"மன் கி பாத்" நேரடி ஒலிபரப்பாம்.
காவி வெள்ளம்
டெல்லியை முக்கி முக்கி எடுத்தது.
கட்டிடங்கள் எல்லாம்
காவி வர்ணத்தில் அக்ரிலிக் எமல்ஷன்
பூசியது போல் புது பொலிவு.
ஏ ஏ பி யின் அந்த தொப்பி உருவத்தில்
சூரியன் தன் நிழலை
கட்டிடங்கள் வழியே துப்பியிருந்தான்.
தொப்பி கிழிந்து கந்தல் போல் ஒரு காட்சி.
டெல்லி நகரம்
இலங்கா தகனம் நடக்காத குறையாய்
அனுமன் சேனையால்
கவ்விப்பிடிக்கப்பட்டு கிடந்தது.
யே ப்ரதான் மந்த்ரி ஆயே..
மக்கள் நெருக்கியடித்து கூழாகினர்.
மீண்டும்
கோஷங்கள்
நீல ஆகாயத்தைக்குத்திக்கிழித்து
காவி ரத்தத்தை வழிய விட்டது.
விகாஸ் கா ப்ரதான் மந்த்ரி ஜிந்தா பாத்!
"வளர்ச்சியை வடிவமைத்த பிரதம மந்திரி
வாழ்க! வாழ்க!!"
தமிழில்
இதை யாரும் மொழி பெயர்க்கவில்லை.
அந்த சிந்துவெளியின்
அடி வயிற்று தமிழ் லாவா
இப்படி மொழி பெயர்த்திருக்கலாம்.
மாற்றான் தோட்டத்தின் இந்த‌
மல்லிகையை இப்படித்தானே வாழ்த்தும்.
கூட்டம் முண்டியடித்தது.
ஒரு முரட்டு மீசைக்காரர்
கூட்டத்தை பிளந்து கொண்டு
அந்த ரத்னக்கம்பள நடைபாதையை
பார்த்தார்!
அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
"ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!
கோ மாதா பாரத் மாதா
ஜிந்தாபாத்!
கோமாதா ஹமாரே  ப்ரதான் மந்திரி
ஜிந்தாபாத்!"
என்னது! ஆவலில் மக்கள்
பாய்ந்து பாய்ந்து பார்த்தார்கள்.
ஆம்!
பிரதம மந்திரி பதவி ஏற்க‌
"சர்வாலங்கார பூஷிதையாக"
கோ மாதா சென்று கொண்டிருந்தாள்."
அருகே
பதவிஏற்புக்கு உதவி செய்யும்
அதிகாரிகள்
கையில் ஃபைல்களுடன்
அணிவகுத்தனர்.
சற்று தள்ளி பின்னால்
மோடிஜி
அதே புன்னகையுடன்
பித்தான்கள் நீண்டவரிசையில்
கோட்டில் கீழ்நோக்கி அணிவகுக்க‌
ஏதோ ஒரு நாட்டு விஜயத்துக்கு
விமானம் ஏறும் களிப்புடனும்
கோமாதாவை கும்பிட்டபடி
நடந்து கொண்டிருந்தார்.
கோ மாதா
மூத்திரம் பெய்து
தவறு தவறு
கோமியம் வர்ஷித்து
கௌ டங்கும்
அதாம்பா சாணியும்..
போட்டுக்கொண்டே போனது!
மக்கள் நெரிசலுடன்
உள்ளே நுழைய தள்ளு முள்ளுவில்
ஈடுபட்டார்கள்!
அவரவர் கையில் பாட்டிலுடன்..
பாட்டிலா..எதற்கு?
கோமியத்துக்குத்தான்!

...................
...................

"அந்த ராஜஸ்தான் செய்தியைப்பற்றி
ஏன் அப்படி புலம்பினீர்கள்.
அதான் இப்போ
கோ மாதா அது இது என்று
உளறிக்கொண்டு
கெனா கண்டுகொண்டிருக்கிறீர்கள்.
போதும் தூங்கியது.
எழுந்திருங்கள்."
என் மனைவி என்னை உலுக்கினாள்

=================================================
(சும்மா நகைச்சுவைக்காக  ஒரு கற்பனை)மியூசியம்

மியூசியம்
===============================================ருத்ரா


 கூத்துப்பட்டறை ஆரம்பித்துவிட்டது.
ஆம்
கேலிகூத்துப் பட்டறை தான்.
"காலா" வில்
ரஜனி அவர்களால்
ஸ்டைலாக ஓட்டிச்சென்ற‌
அல்லது செல்லப்பட‌
வைத்திருக்கிற அந்த புழுதிபடர்ந்த‌
"ஜீப்பை"
ஒரு மியூசியம் ஆக்கி
களிக்க காத்திருக்கிறார்
அந்த கோடீஸ்வர தொழில் அதிபர்!
இந்த "அறிவிப்புக்கே"
கோடிக்கணக்கில்
அவருக்கு விற்பனை பெருகியிருக்கும்!
சாப்பிட்ட சாதாரண தட்டும்
அந்த மூக்குக்கண்ணாடியுமே
நம்நெஞ்சில் அடையாளங்கள் ஆகி
மியூசியம் ஆகிப்போன
அந்த தேசத்தந்தையின் மண்ணில்
இப்படி செட்டிங்க் ஜீப்புகள்
மியூசியம் ஆகும் காலகட்டம் காட்டுவது
நம் "வரலாறுகளின்" வறட்சியைத்தான்.
உயிரோட்டம் எனும் நீரோட்டம் இல்லாத‌
இந்த ஆறுகளா நம் தாகம் தீர்க்கும்?
மக்கள் ஈசல்களாக பறந்து சிதறுவது
அவர்களது ஜனநாயக உரிமை.
ஆனால் கிரேசி எனும் பைத்தியக்காரத்தனம்
தோரணங்கள் கட்டிக்கொண்டு
நம்மை ஆள குத்தாட்டம்போட்டுக்கொண்டு
வருவதில்
என்ன வெளிச்சம் வந்துவிடப்போகிறது.
காட்டுத்தீயில்
தீ அணைப்பு எஞ்சின்களுக்குத்தான் வேலை.
வழி காட்டும் தீபங்களில் தான்
மக்களின் விடியல் புத்தகம்
பக்கங்களை திறந்து காட்டுகிறது.

எங்கள் அன்பான ரஜனி அவர்களே!
உங்களுக்கு புல்லும் ஆயுதம் என்று
எங்களுக்கு தெரியும்.
அந்த புல்லைக்கொண்டு
ஆயிரம் இமயமலைகளை
இழுத்துக்கொண்டு  வரும்
பாகுபலிகளுக்கெல்லாம் அப்பனான
பாகுபலி என்றும்
எங்களுக்குத்தெரியும்.
முதல்வராக பதவி நாற்காலி அமர‌
நீங்கள் வரும்
ரத்தினக்கம்பளம் எல்லாம் ரெடி!
நீங்கள் முன்பு நதிகளையெல்லாம்
கோர்த்து விடலாம் என்று
ஒரு "பரம பத" விளையாட்டுக்கட்டம்
கொடுத்துவிட்டுப் போனீர்கள்.
அதில் பாம்புகளும் ஏணிகளும்
பின்னல் போட்டு சிக்கல்கள்
ஆனது தான்மிச்சம்.

எங்கள் உயிரினும் மேலான‌
சூப்பர் ஸ்டார் அவர்களே!
இப்போது நீங்கள் ஒன்று செய்யவேண்டும்.
உங்களை பூஜிப்பதற்கு
உங்கள் ஜீப்பை மியூசியம் ஆக்கத்
துடிக்கின்றவர்களுக்கு
ஒரு புதிய மியூசியம் ஒன்றை
திறந்து காட்ட வேண்டும்.
செத்துப்போன ஜனநாயகம் என்று
தலைப்பு வைக்க வேண்டும்.
அதனுள் இருப்பது இதுதான்.

"கரன்சியினால் செய்த
மின்னணு எலிப்பொறி" ஒன்று.
அருகில்
மசால்வடை கடித்த வாயுடன்
ஒரு எலி"
எல்லாம் சலவைக்கல்லில்!

அந்த மசால்வடையில்
சாதி மாதங்கள் தான் இன்னும்
முடைநாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.
இதை முறியடிக்க
உங்கள் அரசியல் அறிவை
இன்னும் கூர்மையாக தீட்டவேண்டும்.
உங்கள் ஆத்மீகம் எனும் ஆயுதம்  கூட
சிந்துவெளித்தமிழன் எனும் திராவிடன்
தந்த கருத்தாக்கம் தான்.
மக்களின் நோக்கங்களை உள்வாங்கும்பொது
ஆத்மீகம் முனை முறிவது தான் நாத்திகம்.
அதுவே
மொகஞ்ச தாரோ ஹரப்பா கட்டிடம் எனும்
நம் தமிழிய திராவிட வரலாற்று எலும்புக்கூடுகள்.
நாத்திகம் எனும்
உலக மலர்ச்சியின் விளிம்புகள் தெறிக்கும்
விஞ்ஞான மகரந்தங்களை  மறுக்கும்
மாட்டு இறைச்சியின் மதம் பூசிய
அரிதாரங்களில் மாட்டிக்கொள்ளாமல்
வெற்றிகரமாய் வாக்குவங்கியை
காப்பாற்றுவதே
இப்போதைய உங்கள் "ஒரு வரிக்கதை"
திரைப்பட சாகசம் அல்ல இது.
நீங்கள் எழுதப்போகும்
"தரைப்படக்காவியம் இது"

================================================செவ்வாய், 30 மே, 2017

நகைச்சுவை (27)


நகைச்சுவை  (27)
===================================================ருத்ரா

செந்தில்

அண்ணே! மாட்டுக்கு புண்ணாக்கும் தவிடும் கரைத்து தண்ணி காட்டும்போது அந்த சட்டத்தையும் ஷரத்தையும் கரைத்து ஊத்தணுமாண்ணே!

கவுண்டமணி

எந்த சட்டம்டா!

செந்தில்

அதாண்ணே! பசுவதை சட்டத்தின் புதிய ஷரத்துகள்.

கவுண்டமணி

ஏண்டா "கோ"முட்டித்தலையா! விட்டா மாடுக‌ளையெல்லாம் "லா காலேஜுல" கொண்டுபோய் அடச்சுடுவே போலிருக்குடா!

==============================================================

மாட்டு இறைச்சிக்குள் ஒரு அரசியல்


 • மாட்டு இறைச்சிக்குள் ஒரு அரசியல்
 • ===============================================ருத்ரா

 • உயிர்களை
 • கொல்லாமை பற்றி
 • நம் தமிழ்ப்பாடல்கள்
 • கசிந்து கசிந்து உருகி
 • கண்ணீர் விட்டிருக்கின்றன.
 • வள்ளலாரின் வெள்ளையுடை
 • அந்தக் கருத்தின் தூய்மையான‌
 • அடையாளம்.
 • கொல்லாமை பரிணாமத்தின் உச்சி.
 • ஆனால் அப்போது
 • மனிதர்கள் இறைச்சி உண்டு
 • படை ஆட்சி செய்யும்
 • முறைகள் மாறிப்போகும்.
 • உலகம் எங்கும்
 • ஒருவரை ஒருவர் அடித்து வாழ‌
 • விரும்ப மாட்டார்கள்.
 • தேசங்களின்
 • எல்லைகள் கழன்றுவிடும்.
 • தேசங்களின் கொடிகள்
 • தங்கள் தங்கள் தேசத்தை
 • காக்கும் முரட்டுத்தனமான‌
 • தேச பக்தியை வீசியெறிந்து
 • வெறும் வெள்ளைக்கொடிகள்
 • ஆகி விடும்.
 • உலகப்பொது அமைதி அன்பு
 • தழைத்தோங்கும்.
 • ஆனால்
 • மாடுகளும் ஆடுகளும் பன்றிகளும்
 • பெருகி
 • நம் ஆட்சி நாற்காலியை
 • பிடித்தாலும்பிடிக்கலாம்.
 • எனவே கொல்லாமையை
 • கொடியாய் உயர்த்திய‌
 • புத்தமும் சமணமும்
 • எங்கோ காணாமல் போய் விடலாம்.
 • ஆனாலும்
 • இப்போது புத்தம் ஆளும் தேசங்களில்
 • கசாப்பு கத்திகள்
 • வெட்டிக்கொண்டு தான் இருக்கின்றன.
 • தூய்மையான கொல்லாமை அறத்தை
 • எப்படி கைக்கொள்வது?
 • புற்று நோய் மற்றும் கொடிய‌
 • எய்ட்ஸ் நோய்களை
 • கொல்லுவதற்கு அந்த
 • வைரஸ் எனும் நுண்ணுயிரியை
 • கொன்று தானே ஆகவேண்டும்.
 • அப்போது தான் மனிதன்
 • பகுத்தறிவுவாதி ஆகிவிடுகிறான்.
 • இயற்கை எனும் வல்லறம்
 • உயிர்களைக் கொன்று
 • மேலும் வலுவான உயிர்களை
 • உண்டாக்குகிறது.
 • மேலும் மேலும் வலுவான உயிர்கள்
 • நிலைத்து நின்று
 • பரிணாம ஆற்றலை முன் எடுத்துச்செல்கிறது.
 • மனிதன் வளர்ச்சியை நோக்கி செல்லுவதும் இயலும்
 • என்கிறான் பகுத்தறிவு வாதி.
 • தெய்வ சிந்தனை உள்ளவனோ
 • இறைவன்
 • ஆடு மாடு போன்றவைகளை
 • மனிதன் தின்பதற்கே
 • படைக்கிறான் என்கிறான்.
 • எல்லா உயிர்களும் சுதந்திரமாய்
 • இயல்பாய் "கசாப்பு" செய்யப்பட‌
 • வேண்டாத ஒரு
 • "மாதிரி வடிவ பிரபஞ்சத்தையும்"
 • மனிதனின் விஞ்ஞானமே
 • கண்டுபிடிக்க வேண்டும்.
 • இது இயலுமா?
 • ஆனால்
 • காவிக்காரர்களின்
 • மாட்டு இறைச்சி அரசியலில்
 • ஒரு குள்ளநரித்தந்திரமும்
 • ஒரு கள்ள சாணக்கியமுமே
 • இருக்கிறது.
 • காவி கார்ப்பரேட் பொருளாதாரத்தில்
 • மாய்மாலமாய்
 • வேத இரைச்சல்களோடு
 • கீழ்க்குடி பிறப்பு மக்களை
 • மேற்குடிப் பிறப்பு  மக்களின்
 • வேள்வித்தீயில் ஆகுதியாக்கி
 • அழித்தொழிக்க வேண்டும்
 • என்ற அரசியல் மட்டுமே இருக்கிறது.
 • மாட்டு இறைச்சியில்
 • மாடுகள் சாவதை விட‌
 • மானிடமே அதிகம் படுகொலை செய்யப்படுகிறது.
 • எளிய மக்களே.. அவர்கள் வியாபாரங்களே..
 • உண்மையில்
 • பொருளாதாரச்சுரண்டலில்
 • இறைச்சித்துண்டுகளாய்
 • ஒரு அரூப சர்வாதிகாரத்தின்
 • கோரப்பற்களில் தின்னப்படுகின்றன.

 • ==================================================

வெள்ளி, 26 மே, 2017

மும்பை கரிகாலன்


.
மும்பை கரிகாலன்
===============================ருத்ரா இ பரமசிவன்

சூப்பர் ஸ்டார் அவர்களே !
மும்பை கரிகாலனாய்
வாள் ஏந்த புறப்பட்டீர்கள் .
சிவாஜியின் குதிரையும் வாளும்
உங்களிடம் உண்டு.
எங்களுக்கு பூரிப்பு தான்.
சிங்க மராட்டியன் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
என்றானே பாரதி!
சிவாஜியின் வீரம் எங்கள் புற நானூறு!
ஆனால் அவன் குதிரையின் குளம்படிகள்
கிளப்பும் காவிப்புழுதியை வெறும்
குழப்பம் என்று நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.
காவிரித்து பூவிரித்து வர
காவிரிக்கு
காடு திருத்த கரை உயர்த்த
கனல் வீரம் காட்டியவன்
கரிகாலன்.
தமிழ் உயிர் மெய் எழுத்துக்களில்
எல்லாம்
வீர வரலாறாய் விரவி நிற்பவன்
கரிகாலன்.
எதிரிகளின் சாணக்கியங்களை
எதிரிகளின் சாணக்கியங்களைக்கொண்டே
முறியடித்தவன் கரிகாலன்.
உங்கள் படத்தில் வரும்
மாமூல் வில்லன்
சமுதாயத்தின்
ஏதோ இருட்டு மூலைகளிலிருந்து
மானுட ரத்தம்
குடிக்க கும்பல் சேர்த்து
ஒரு கும்பாபிஷேகம்
நடத்திக்கொண்டிருப்பான்
என விஷுவலைஸ் பண்ணுகிறோம்.
நீங்கள் தூள் கிளப்பி
அடியெடுத்து வைக்கும்போதே
அண்டங்கள்
கண்ட துண்டங்கள் ஆகும்.
அதர்மம் அடி கலங்கி
கால் வழியே ஒண்ணுக்கும் போய்விடும்.
அப்புறம் என்ன?
சத்யமேவ ஜெயதே!
சினிமா செட்டிங்  அமித்ஷாக்களின்
பாதாள பைரவி வேதாள வாய்கள்
பசியோடு திறந்திருக்க
அதனுள்
உணவு போல உட்புகுந்து
டைம் பாம்ப் ஆக வெடித்து
தர்மம் காப்பீர்கள் என
உறுதியாக நம்புகிறோம்.
கருப்புப்பணம் ஒழித்ததாக சொல்கிறவர்கள்
கருப்பு மனம் ஒழித்தார்களா?
ஒரு கிலோ மாட்டு இறைச்சிக்கு
அறுபது கிலோ மனித இறைச்சியை
பண்டமாற்றம் செய்யும்
மதவாத கருப்பு வானங்கள்
நம் விடியலின் கீற்றுகளையே
கசாப்பு செய்யத்தானே காத்திருக்கின்றன!

எங்களுக்கு
கரிகாலன் என்ற பெயரில்
இருப்பது
சினிமா எனும் ஜிகினாவின்
ஜொலிப்புகள் அல்ல.
தமிழ் ..
காவிரி ...
நீட் தேர்வு ...
உழவர்களின்
ரத்தம் சொட்டும் ஏர் ...
கீழடியின் அடியில் கிடக்கும்
தமிழ்த் தொன்மையின்
ஃ பாசில்கள் ..
எங்கள் சிந்து வெளியின் சித்திரங்கள் ...
கடல் சார்ந்த எங்கள்
"திரையிடம் " திராவிடம் ஆன
ஒரு உயிர்ச்சியின் வரலாறு...
எல்லாம்
கருக்கொண்டிருக்கிறது.
உங்கள் "கல்லாப்பெட்டி"
மருத்துவர்களால் அது
கருசிதைவு ஆகி விடுமோ என்று தான்
அஞ்சுகிறோம்.
ஈழம் என்றால்
லட்சம் தமிழ் ப்பிணங்கள்
என்றா அர்த்தம்?
இந்திய தேசமும்
இந்த "கார்ப்பரேட்" உலகமும்
தமிழின் இதயம் பிழிந்து
தேன் குடித்தனவே .
அதுவே ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.
எங்கள் சிதிலங்கள் மீண்டும்
உருக்கொள்ளும்
நெருப்பின் வார்ப்பு
அந்த "கரிகாலனில்" இருக்கிறது!
"ந‌டந்தாய் வாழி காவேரி"
என்ற சிலம்புக்கவிஞனின்
வழித்தடத்தில்
இடைஞ்சல் செய்யும்
அந்த அற்பப்புல்லைக் கூடவா
பிடுங்கியெறியாது உங்கள் வீரம்?
சூப்பர் ஸ்டார் அவர்களே!
நீங்கள் ஒலித்த "பச்சைத்தமிழனில் "
எங்கள்செம்மொழியின் சிவப்புத்தமிழும்
ஒரு வெற்றியின்
யாப்பிலக்கணம்
எழுதிக்கொண்டிருக்கும் என்று
உறுதியாய் நம்புகிறோம்.
வாழ்த்துக்கள்!

===========================================================
"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்.."

"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்.."
______________________________________________ருத்ரா இ பரமசிவன்.


"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
ஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன‌
அலையின் அலையின் நெளிதரும் நினைவின்
ஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்
இன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க!
காலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்
பண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே!"


பொருள் உரை.
_________________________________________________________________________


தலைவி தன் காந்தள் மலர் ஒத்த‌ மெல்லிய விரல்களால் கோதி கோதி தன் கூந்தலில் வகிடுபிரித்த போது வளைவு வளைவுகளாய்
இருக்கும் அந்த  கூந்தல் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள்.அந்த
கூந்த‌லைப்போலவே அலை அலையாய் அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து களிப்புற்ற போது "ஒரு மெல்லிசையை தவளவிட்டேனே! தோழி அதனை நீ கேட்டாயா?" என்று அவள் தன் தோழியுடன் பேசுவதாய் உணர்கிறாள்."அந்த இசை ஒலி காற்றினுள்ளும் ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக" என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.

__________________________________________________________________________

சிந்தனை வெள்ளம்!


சிந்தனை வெள்ளம்!
==============================ருத்ரா இ பரமசிவன்.

நல்லது கெட்டது
தர்மம் அதர்மம்
உள் உயிர் (ஜீவாத்மா)
வெளி உயிர் (பரமாத்மா)
மேலும்
எச்சில் தெறிக்க
எத்தனை சுலோகம்?
முக்குணம் என்பீர்.
தமோ ரஜ சத் என்று
தர்ப்பை க் காட்டில்
குரலை  எல்லாம்
கொளுத்துகின்றீர்
இருட்டு மனம்
வெளிச்ச மனம்
உண்மை  உள்ளம்
எல்லாம் புக
நெய்யை  வார்த்து
மெய்யைத் தேடினீர்.
சாதித்தீயில் ...மக்கள்
சாம்பற்பூக்கள் ஆனதைக்கொண்டு
ஆனந்தித்து
அர்ச்சிக்கிறீர்கள்!
கர்ச்சிக்கிறீர்கள்!
இன்னும் ..இன்னும்
சொல் அடுக்கி
பொருள் புதைத்து
என்னவெல்லாமோ சொல்கிறீர்கள்.

மனிதரில் பிளவு படுத்தல்
இதில்
எப்படி வந்தது?

அரசு ஆள்பவன்
ஒரு அமைப்பு செய்கிறான்.
அது உடையாமல்இருக்கவே
இந்த வேதம் சொல்கிறான்.
இப்படி "பேதம்" சொல்வதே
வேதம் ஆனதே!..பல‌
வேதனை ஆனதே!

ஒருவன் மூளை ஆளட்டும்.
அவனைக்கொண்டு
ஒருவன் அரசு ஆளட்டும்.
மூன்றாமவனோ
பணங்கள் ஆளட்டும்.
நான்காமவனோ
கை கட்டி பணிவுடனே
பண்டங்கள் ஆக்கட்டும்.
ஐந்தாமவனோ
எவர் கண்ணிலும் படாமல்
எங்காவது
இருந்து தொலைக்கட்டும்.
எம் மீது
அவன் காற்று பட்டால்
அவன் அழிந்தொழியட்டும்.
இதுவே இறைவன் செய்த விதி.
இது பிற‌ள்பவன்
இறைமை மீறுகிறான்.
அவன்  இல்லாமல் இருப்பதே
இறைவன் செய்த விதி.

சட்டம் செய்வோரே!
சட்டம் ஆள்வோரே!
இந்த உட்குறிப்பு தானே
உங்கள் சட்ட எலும்புக்குள்
"மஜ்ஜை"ஆனது.அணுக்கள் ஆனது.

மானிட மாட்சிமை எல்லாம்
மண்ணில் புதைவதற்கோ
செங்கோல் ஏந்த வந்தீர்!


சாக்கடை அள்ளுபவன்
இருட்டுகிட்டங்கியில்
கிடக்கவேண்டும்
என்று சொல்லும் தெய்வங்களை
அவர் வேதங்களை
சாக்கடையில் எறிவோம்.
ஒரு சாக்காட்டிலே புதைப்போம்!

அருள் நிறைந்த கடவுளுக்கு
இட்லர் வேடம் போட்டு
மனித சம நீதிக்கு
சமாதி கட்டி
சரித்திர திருத்தம் செய்ய
தகிடு தத்தம்  செய்யும்
தந்திரம் எல்லாம் இங்கே
தவிடு பொடி  ஆகவேண்டும்!

மானுடம் மறுக்கும் மதங்களுக்கு
மானுடம் மறைக்கும் கடவுளர்க்கு
மூடு விழா வேண்டும் இங்கே
மூடுவிழா வேண்டும்!

மனித நியாய அநியாய
தராசு தூக்கி
வரலாற்றுத்தூசிகள் போக்கி
சம மனித நீதியை காக்க
வந்தது தானே "ஒதுக்கீடுகள் "
மற்றும் "பட்டியல்" பாது காப்புகள்.
அதனை சுரண்டி அநீதிகள் செய்ய
அமைவாய் வந்தது தானே
உங்கள் ஆட்சி.

புராணங்களில் புனிதம் தெளிக்க
இந்த
புதையுண்ட மக்களின்
ரத்தம் தானா உங்களுக்கு வேண்டும்?
சாதி மதங்களின்
பிளவு செய்யும் புற்று நோயை
நாற்று நட்டு பயிர் வளர்க்கும்
உங்கள்
சாணக்கியம் தான்
இந்த ஆட்சியின் குறியா?

தொன்மையிலும்
தொன்மை மிக்கதாய்
சுடரும் தமிழை
சுட்டுப்பொசுக்கவா
இந்த மொழி ஆக்கிரமிப்பு?

வாக்குப்பெட்டியில்
சாதி மத வெறியின்
மின்னணுப்பொறியினை
கொள்ளியாய் ஆக்கி
மானுடம் தகர்த்து
மந்திரங்கள் செய்யும்
உங்கள் ஆட்சி
உதிர்ந்து போக
சிந்தனை வெள்ளம் பெருகட்டும்.
மானிட நேய
சிற்பம் உயர்ந்து நிற்கட்டும் ...மற்ற
அற்பம் எல்லாம்
அடி பட்டுப்போகட்டும் .
சிந்தனை வெள்ளம் பெருகும் போது
மனிதவியல் சிந்தனைகள் பெருகும்.
சமுதாய இயலில் சமநீதி என்னும்
சிந்தனைப் பொறிகளும்  பறக்கட்டும்
ஆம்!
சிந்தனைப்பொறிகளும் பறக்கட்டும்..

============================================
வியாழன், 25 மே, 2017

நகைச்சுவை (26)

நகைச்சுவை (26)
===========================================ருத்ரா

செந்தில்

அண்ணே! நம்ம சூப்பர் ஸ்டார்  கொகோ "கோலா"படத்தில் நடிக்கப்போகிறாராமே!

கவுண்டமணி

அடேய்ய்ய்! பாட்டில் தலையா. அது கொகோ கோலா இல்லடா.
காலா எனும் கரிகாலன்! ஏண்டா! முதல்ல அது என்னன்னு பாக்குறதுக்கு முன்னால ஏங்கிட்ட கேட்டிருக்கணும்டா..

செந்தில்

கேட்டிருந்தா?

கவுண்டமணி

நானே கொக்கோ கோலான்னு சொல்லியிருப்பேன்ல.

செந்தில்

என்னண்ணே..கொக்கோ கோலாவா?

கவுண்டமணி

அடேய்..என்னையும் ஒளற வச்சிட்டேய்டா..உன்ன..

(கையில் வைத்துக்குடித்துக்கொண்டிருந்த கொகோ கோலா பாட்டிலை ஆத்திரத்துடன் செந்தில் மீது எறியப்போகிறார்.
செந்தில்  தப்பி  ஓடி மறைகிறார்)

=============================================================புதன், 24 மே, 2017

சோளக்காட்டு பொம்மை மனிதர்கள் (பாடல் ll

 சோளக்காட்டு பொம்மை மனிதர்கள் (பாடல் ll )
=======================================
(THE HOLLOW MEN  by T S ELIOT....Stanza II )

                              II

    Eyes I dare not meet in dreams
    In death's dream kingdom
    These do not appear:
    There, the eyes are
    Sunlight on a broken column
    There, is a tree swinging
    And voices are
    In the wind's singing
    More distant and more solemn
    Than a fading star.
   
    Let me be no nearer
    In death's dream kingdom
    Let me also wear
    Such deliberate disguises
    Rat's coat, crowskin, crossed staves
    In a field
    Behaving as the wind behaves
    No nearer-
   
    Not that final meeting
    In the twilight kingdom

-------------------------------------------------------------------------


உள்ளே
ஒன்றுமில்லாமல்
வெறுமையைக்கொண்டு
மிடையப்பட்ட மனிதர்கள்  நாம்!

கனவு காண்பது
அந்த கண்களா? இந்த கண்களா ?
உறக்கம் என்பது சாக்காடு எனில்
அந்த ராஜ்யத்தில்
கண்கள் எங்கே புதையுண்டு கிடக்கும்?
கண்களுக்கு அந்த சதை அழுகிய
காட்சிகளை காண இயலுவதே இல்லை.
புகைபோல் திரைக்காட்டும்
அக்காட்சியில் கண்களுக்கு வேலையில்லை.
உயிர் வெளிச்சம் எங்கோ
இடுக்குகளில் கசிவது
உடைந்த தூண் சிதிலங்களில்
அந்த நொறுங்கிய சூரியன்
விழுவது போல் தெரிகிறது.
மரங்கள் முறிந்து கிளைகளுடனேயே
ஊஞ்சல் ஆடுக்கின்றனவோ?
..இந்த குரல் பிசிறுகள் எல்லாம்
எங்கே தூவப்படுகின்றனவோ?
மத வழிபாட்டுக்கூடங்களின்
அந்த ரத்தினக்கம்பளங்களில்
இறைந்து கிடக்கின்றனவோ?
காற்றின் சங்கீதங்களாய்
தொலை தூரங்களின்
தொண்டைக்கமறல்களில்
மிகக்கனமாய்
உறுத்தலோடு கேட்கின்றன.
விண்வெளியில் காணாமல் போய்
இறந்து போகத்துடித்து
வழுக்கிக்கொண்டு ஓடும்
அந்த "சீக்கு"பிடித்த நட்சத்திரங்களைப்போல
அந்த ஒலி மினுக்குகிறது.

வேண்டாம் அந்த கனவின்
சாக்காட்டுக்கோட்டை!
கண்களால்
அதை நெருங்க
துளி கூட வலு இல்லை.

நானும் அந்த பொய் உடுப்புகளை
மேலே "பொத்திக்கொள்ளுகிறேன்"
இந்த சோளக்காட்டு உருவத்துக்கு
எலித்தோலும் காக்கைச்சிறகும் தானே
"சூட்டும் கோட்டும்"!
சிலுவைக்குறியிட்ட கம்புகளில்
மரண நிழலாய் தொங்குகிறேன்.
இந்த மொட்டை வெளியில்
காய்ச்சி ஊற்றப்பட்ட
அந்த பரமண்டலத்தையும் காணோம்!
அதற்குள் இன்னும்
கர்ப்பமே தரிக்காத அந்த
பிதாவையும் காணோம் !
காற்று அசைப்புக்கேற்றாற் போல்
இந்த பொம்மை ஆட்டங்கள்..!
இன்னும் நெருங்கவா?...
அய்யோ.. ..என்ன செய்வது?
யின்
ஆத்மா எனும் ஆவியும் இல்லாமல் ..
ரத்தசதையான உடலும் இல்லாமல் ..
இந்த ரெட்டை ராஜ்ஜியத்தில்
அந்தியின் சிவப்பு மத்தாப்பு
ஊனொளி உருக்கி உள்ளொளி பெருக்கி ...
சவப்பெட்டியின் கடைசி ஆணி
இன்னும் அறையப்படவில்லை.
கூட்டமும் வசனமும் இன்னும்
மூசசு விட்டுக்கொண்டிருக்கிறது
இறுதிமூச்சுக்கு முந்திய ஒரு இறுதி மூச்சில்
முடிச்சு இறுக்கிக்கொண்டே  வருகிறது..
மேற்கில்
சூரியன் கழுத்தில்
இறுகுகிறது கயிறு.
...ஆனால்
உயிர் தளிர்க்கிறதே....

=====================================================
மொழி பெயர்ப்பு (அல்லது மறு வார்ப்பு) :
ருத்ரா இ பரமசிவன்.

தமிழுக்கும் "நான்கு வர்ணம்"

தமிழுக்கும் "நான்கு வர்ணம்"
=========================================ருத்ரா

என்னண்ணே தமிழன் தான் ஆளணும்ண்றாங்களே

ஆமா! அதுக்கென்ன இப்போ?

அதுக்கில்லை..சென்னைத்தமிழனா? கொங்குத்தமிழனா? தஞ்சைத்தமிழனா? பாண்டித்தமிழனா?

எதுக்கு வம்பு? ஒரு பச்சைத்தமிழன் தான் ஆளணும்.

அதென்ன? அண்ணே?  பச்சை சிவப்பு கருப்பு வெள்ளைன்னு.... தமிழன்லேயும் நான்கு வர்ணம் வந்துட்டுதா?

========================================================

செவ்வாய், 23 மே, 2017

சந்திக்கட்டுமே


சந்திக்கட்டுமே
======================================ருத்ரா

ரஜனி சிறந்த நடிகர்.
மோடி சிறந்த பிரதமர்.
இருவரும் சந்திக்கட்டுமே.
சந்தித்தால்
"ஹேப்பி ..இன்று முதல் ஹேப்பி"
என்று பாடுகிறார்
நம் மதிப்பிற்குரிய
வெங்கைய நாயுடு அவர்கள்!
மேதை பெர்னாட்ஷா
ஒரு பெண்மணியுடன் பேசிய‌
நகைச்சுவை நம் ஞாபத்திற்கு வருகிறது.
அது போல மாறலாம்..

ரஜனி சிறந்த பிரதமர்.
மோடி சிறந்த நடிகர்.

=============================================

திங்கள், 22 மே, 2017

ஆனாலும் துடித்துக்கொண்டு.....

ஆனாலும் துடித்துக்கொண்டு.....
‍‍‍‍‍‍‍================================================ருத்ரா

காதலே!
உனக்கு ஒரு சிலை வடிக்க ஆசை.
கல் தேடினேன்.
வைரம் தான் கிடைத்தது.
உளி தேடினேன்
மனம் தான் கிடைத்தது.
சம்மட்டிக்கு..
தேவையில்லை.
நீ கனமான தருணங்களில்
காத்திருக்கப்போகிறாய்.
அது போதுமே.
உருவம்..
எதை உருவகம் செய்வது..
கைக்கு அகப்படாத கனவுப்பிழம்பா?
தலைகீழ் பிம்பங்களா?
கடலை ஆகாயத்திலும்
ஆகாயத்தை கடல் தளும்பல்களிலும்
"மார்ஃப்"செய்வதா?
ரத்த சதை உடலங்களா?
மாயத்தைப்பிசைந்த‌
வெர்ச்சுவல் ரீயலிடிகளா?
ஐ பேடுகளை
சுரண்டினேன்.
லைட் எமிட்டிங்க் டையோடு
லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளே
பில்லியன் பில்ல்யன் பிக்செல்களிலும்
பிக்காஸோ
அவளை புதிர் காட்டினான்.
இருப்பினும்
அந்த நுரைப்பட‌ல‌த்தில்
கண்ணீர்த்துளிகள்..
விம்மி விம்மி வரும்
அதிர்வுகள்..
திடுக்கிட வைத்தன.
அவளா அழுகிறாள்?
காதல் கண்ணீர்த்துளிகளிலா
இங்கே அவள்
செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்?
அன்று ஒரு நாள்
என்னையே உற்று உற்று
பார்த்துக்கொண்டிருந்தாள்.
என் முகம் அங்கு திரும்பாமல்
நானும் என் கழுத்தைத் திருகி
இந்தப்பக்கமே வைத்துக்கொண்டிருந்தேன்.
அந்த மரணவலி
எனக்கு மட்டுமே தெரியும்.
எதற்கு அப்படி மிருகம் ஆனேன்.
விடையை
காதல் எனும் அந்த‌
மிருகத்திடம் தான் கேட்கவேண்டும்.
ஆனால்
அந்த விழிகளில்
இந்த "டெட் சீ" எனும் கருங்கடல்
என் பிணங்களை அல்லவா
மிதக்க விட்டுக்கொண்டிருக்கிறது.
போதும் சிற்பமும் சிதிலமும்....
என் கைகள் அங்கே
உளி இங்கே
துண்டு துண்டாய் சம்மட்டிகள்.
எதனுள்ளோ
நசுங்கிக்கிடக்கிறேன்.
யாராவது வாருங்களேன்...
மீன் குழம்பு வைக்க‌
சொறிக்கல்லில் தேய்க்கப்படும்
மீனாக..நான்...
வெள்ளை வெள்ளையாய்
செதில்களில் இறைந்து கிடக்கிறேன்..
ஆனாலும் துடித்துக்கொண்டு.....

=============================================
12.01.2014

ஞாயிறு, 21 மே, 2017

" ரன் அமக் "


" ரன் அமக் "
==========================================ருத்ரா

என்ன இது?
எப்படி இப்படி?
ஆங்கிலத்தில் " ரன் அமக் " என்பார்கள்.
எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமல்
கண் மண் தெரியாமல்
எதிரில்  வருபவர்களை
மிதித்து நசுக்கிக்கொண்டு
ஓடுபவர்களைதான் அப்படி சொல்வார்கள்.
ஆம்.
ஓட்டம் ஓட்டம் ரசிகர்களின் ஓட்டம்
சினிமா கொட்டகைகள் நோக்கி.
தெலுங்கு சீமையில்
பாகுபலி 2 வுக்கு கியூ வரிசை
பல கிலோ மீட்டர்களாம்.
எதற்கு இந்த ஓட்டம்.
கிராஃ பிக்சில்  ஒரு விநோத அம்புலிமாமா
கதைக்குத்தான்.
இது வரையுள்ள
வசூல் ரிக்கார்டுகளையெல்லாம்
அடித்து நொறுக்கி அள்ளிய
அந்த ஆயிரம் கோடி ரூபாய்களில்
அரண்டு போய் கிடக்கிறது
மொத்த சினிமா எனும் ஜிகினா உலகம்.
நம் தேசத்து புராணங்களில்
மழுங்கிப்போன நாம்
ஏன் அறிவு பூர்வமான நிகழ்வுகளையும்
சமுதாய நரம்போட்டமான
வரலாற்றுப் பக்கங்களையும்
குப்பையில் எறிந்துவிட்டு
அந்த சப்பளாக்கட்டைகளில்
நசுங்கிக்கிடந்தோம் என்று
இப்போது தான் தெரிகிறது.
மனம் நுரைத்த கற்பனைகளை
மின்னணுசித்திர  செதில்களாக்கி
"ஃ பேண்டாஸி " ரசமாய்
அருந்துவதே
இன்றைய சினிமா இலக்கியங்கள் ஆகும்.
ஃ பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹ்யூகோவின்
சமுதாய முரண்களின் உயிர்ப்பை
நாவலாய்
இதயம் பிழிய காட்டிய "லே மிரேபிள் "
எனும் "ஏழை படும் பாடு" சினிமா
அன்று "கருப்பு வெள்ளையிலும் "
கண்ணீரின் கரிப்பையும்
ரத்தத்தின் சிவப்பையும்
வெகு அழுத்தமாக அல்லவா காட்டின.
"நாகையாவும்  ஜாவர்சீதாராமனும்"
இன்றைக்கும் நம் கண்ணில் நின்று
நம்  உள்ளம் கசிய
நிழல் காட்டி நிஜமாகி நிற்கிறார்கள்.
சமூகம் தன் முக பிம்பம்
பார்த்துக்கொண்டிருக்கும் போது
விழுந்து உடைந்து சிதறும்
கண்ணாடி சிதிலங்களே
நம் சரித்திரங்கள்.
பாகுபலிகள்  போன்ற
பொம்மைப்படங்கள் நம்
உண்மைப்படங்கள் ஆகாது.

==============================================

படமில்லாத கார்ட்டூன்!

படமில்லாத கார்ட்டூன்!
====================================ருத்ரா
(விஷுவலைஸ் யுவர்செல்ஃப்)

நந்தவனத்தில் ஓர் ஆண்டி..அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி..அதை
கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி....

ஆகா! தலைவர்!
அரசியலுக்கு வருவதாய் 
"போட்டுடைத்தார்"
என்று மகிழ்கின்றவர்களே!

தோண்டி ஒன்றும் உடையவில்லை
உற்றுப்பாருங்கள்!
அது "ப்ளாஸ்டிக் தோண்டி".
"போர் வரும்போது எதிர்கொள்வோம்"
இந்த "பன்ச்"தான் அந்த "தோண்டி"
ஆனால் அது உடையவில்லை.
அடுத்த "பன்ச்"ஐ கவனியுங்கள்.
எனக்கும்
கடமை இருக்கிறது
தொழில் இருக்கிறது...
உங்களுக்கும்
கடமை இருக்கிறது.
தொழில் இருக்கிறது...

அதனால் அவர் சொல்லாமல் விட்ட பன்ச்:

"இன்று போய் நாளை வா"
"ராவணனுக்கு பத்து தலை இருக்கிறது.
ஒவ்வொன்றாக பார்த்துக்கொள்ளலாம்."

=====================================================
(கார்ட்டூனை நீங்களே வரைந்துகொள்ளலாம்)

சனி, 20 மே, 2017

ஒரு "பேச்சு வார்த்தை"


ஒரு "பேச்சு வார்த்தை"
============================================ருத்ரா

"நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை  என்பதே
எங்கள் நிபந்தனை."

"நிபந்தனையுடன் பேச்சு வார்த்தை என்பதே
எங்கள் நிபந்தனை"

"நிபந்தனை என்ற வார்த்தையே இல்லாமல்
இருப்பதே  எங்கள் பேச்சு வார்த்தை."

"நிபந்தனைகள் இருப்பதே எங்கள் வார்த்தைகளில்
இருக்கும் பேச்சு".

"அது சரி.பேச்சுகள் இருப்பதால் தான்
அது பேச்சு வார்த்தையா?இல்லாவிட்டால்
பேச்சுகளே இல்லாமால் இருந்தாலும்
அது பேச்சு வார்த்தையா?"

"அது போல் வார்த்தைகளை வைத்துக்கொண்டால் தான்
அது பேச்சு வார்த்தையா? வார்த்தைகளை வைத்துக்கொள்ளாமலே
இருந்தாலும் அது பேச்சு வார்த்தையா?"

"காக்கா கா கா காங்கிறதனாலதான்
அது காக்கா வா? "

"இல்ல அது காக்காவா இருக்கிறதனாலதான்
அது கா கா காங்கிறதா?"

"சரி டில்லிக்குப்போய் இத பேசுவோம்."

"கூடாது!நம் நாட்டின் தலைநகர்ல உக்காந்து இத பேசுவோம்"

"அது சரிண்ணே! இந்த பேச்சுவார்த்தைக்கு யாருண்ணே வசனம்?
நம்ம "பாக்கிய ராஜ்" தானே?"

"ஆமாண்ணே!உங்களுக்கு கதை வசனம் நம்ம "விசு" தானே!"

(அவர்களுக்கு தெரியாது இது நமக்கு தெரியும் என்று!

ஆம். இது பெருமதிப்பிற்குரிய மோடி அவர்கள் தான் என்று அவர்களுக்கு
தெரிந்தது நமக்கும் தெரியும் என்பது அவர்களுக்கும் தெரியாது என்பது அவர்களுக்கு எப்போது தெரியும்?

இது பேசினாலும் தெரியும் அல்லது தெரியாது!

இது பேசாவிட்டாலும் தெரியும் அல்லது தெரியாது!)

===================================================================
(இது ஒரு காமெடி அரசியல் அல்லது அரசியல் காமெடி)காஃபிக்கோப்பை ஆறுகிறது


காஃபிக்கோப்பை ஆறுகிறது
=================================ருத்ரா இ.பரமசிவன்

டேபிளில்
காஃபிக்கோப்பை ஆறுகிறது.
ஆம்.
காஃபிக்கு
ஆவி போய்க்கொண்டிருப்பதைப்பற்றி
அவனுக்கு கவலையில்லை.
அவன் படத்துடன்
கட்டத்துள் செய்தியுடன்
மூக்குக்கண்ணாடியையும்
பிதுங்கி வழிய
எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஸார் பேப்பர்"
வாசலில் குரல்.
சூரியன் கூட இன்னும்
படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை.
பத்திரிகை பக்கங்கள் படபடக்கின்றன.
அவன் அவசரம் அவசரமாய்
பத்திரிகைப்பக்கங்களை தேடுகிறான்.
பத்திரிகையில் அவனை
"ஃபோட்டோவில்"பார்த்துவிட்டான்.
இது போதும்.
அவன் படுக்கையில் போய்
விறைத்துக்கொண்டான்.
சூரியன் ஒளியை துப்பிக்கொண்டு
எழுந்திருந்தான்.
அந்த வீட்டின்
அந்த படுக்கை அறையிலிருந்து
கூக்குரல்கள் ஓலங்கள்
வெளிக்கிளம்பின!
ஆவி எப்போதோ போய்விட்டது.
கண்ணீர் அஞ்சலியுடன்
அந்தப்படத்தில்
அருமையாய் விழுதிருந்தான்
ஒரு முற்றுப்புள்ளியாய்!

===============================================
27.09.2015

வெள்ளி, 19 மே, 2017

நகைச்சுவை (25)நகைச்சுவை (25)
===============================================ருத்ரா

கவுண்டமணி

டேய் நான் உங்கிட்ட ரெண்டு ரூவா கொடுத்து என்ன சொன்னேன்.

செந்தில்

ரெட்ட எல வாங்கிட்டு வரச்சொன்னீங்க.

கவுண்டமணி

ஒரு எல இங்கே இருக்கு! இன்னொரு எலையை எங்கே!

செந்தில்

அதாண்ணே இது!

கவுண்டமணி

டேய் எங்கடா ஓடுரே! வாடா இங்க.

ஜூனியர் பாலய்யா

இருங்கண்ணே! நான் கேக்கிறேன்!

(அவருக்கே உரித்தான டி எஸ் பாலையா பாணியில்)

இதோ  பாருப்பா! அண்ணே உங்ககிட்ட ரெண்டு ரூவா கொடுத்து
என்ன வாங்கிட்டு வரச்சொன்னாரு?

செந்தில்

ரெட்ட எல‌

ஜூனியர் பாலையா

ஒரு எல இங்க இருக்கு....இன்னொரு எல எங்க இருக்கு.....

செந்தில்

அதான்யா இது.

ஜுனியர் பாலையா திகைத்து நிற்கிறார்.

கோவை சரளா அங்கே வருகிறார்.கொலுசுமணிகள் கொஞ்சும் குரலில்
சொல்லுகிறார்.

"ஆளாளுக்கு அவர வெரட்ரீங்க.இருங்க நான் கேக்கிறேன் "

செந்திலிடம் கேட்கிறார்

"இங்க பாருங்க.நான் கேக்கிறேன்.ஏங்கிட்ட பயப்படாம சொல்லுங்க!
ரெட்ட எல வாங்கியாரச்சொல்லி அண்ணன் உங்க கிட்ட எவ்வளவு கொடுத்தாரு?

செந்தில்

ரெண்டு ரூவா.

கோவை சரளா

சரி.அப்படீன்னா ஒரு எல குடுத்தீங்க.இன்னோரு எல  எங்க வச்சிருக்கீங்க!

செந்தில்

அதாம்மா இது...

கோவை சரளா

ஏனுங்க என்ன சொல்றீங்க.

"டேய்ய்ய்ய்ய்."

கவுண்டமணி பல்லை கடித்துக்கொண்டு செந்தில் மீது பாய்கிறார்.பிறகு அவர் மிகவும் சாந்தமாய் மெதுவாக கேட்கிறார்.

"அடேய்...கண்ணா!  நான் உங்கிட்ட எவ்வளவு குடுத்தேன்?

செந்தில்

ரெண்டு ரூவா குடுத்தீங்க.

கவுண்ட மணி

என்ன சொல்லி குடுத்தேன்?

செந்தில்

ரெட்ட எல வாங்கியாரச்சொல்லி.

கவுண்டமணி

நீயும் ரெட்டை எல வாங்கியாந்தே!

செந்தில்

ஆமாம்.


கவுண்டமணி

ஒரு எல எங்கிட்ட இருக்கு.இன்னொரு எல எங்கெ வச்சிருக்கே.

செந்தில்

அதாண்ணே..இது....(சொல்லிவிட்டு ஓடுகிறார்)

கவுண்டமணி

அடேய்ய் ......வாழைத்தண்டு தலையா...நில்லுடா! நில்லுடா!

(விரட்டிக்கொண்டே ஓடுகிறார்.)

செந்தில்

ஏங்கிட்ட கேக்காதீங்கண்ணே...."தேர்தல் ஆணையத்துக்கிட்ட" கேளுங்கண்ணே!

(சொல்லிக்கொண்டே ஓடி மறைகிறார்)

======================================================================
(நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட கற்பனை உரையாட இது. வேறு
எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறென்)"போர் வரும்போது......"

"போர் வரும்போது......"
============================================ருத்ரா

"போர் வரும்போது...."
இந்த சொற்கள் கேட்டதும்
அரங்கம் முழுதும் சீட்டி ஒலிகள்.
மோசஸ் செங்கடலை பிளந்து காட்டியது போல்
வழி பிளந்து வெளிச்சம் வந்தது.
அலைகள் சுருண்டு வழிந்து வழிந்து
ரசிகர்களின் முகத்தில்
பொங்கிக்குதிக்கும் சுனாமி!
ஆகா! தலைவர் கை காட்டிவிட்டார்.
தேர்தல் தான் போர்...
இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம்.
"அடித்தளமே சிதைந்து கிடக்கிறது.
சிஸ்டமே கெட்டுப்போச்சு.
ஜனநாயகத்தைக் காணோம்
.....................
........................"
சூப்பர் ஸ்டாரின் குமுறல்
அந்த குகையை உடைத்துக்கொண்டு
வந்து விட்டது.
இமயமலைக்கு பயணம் வேண்டியதில்லை.
இருட்டிக்கிடக்கும்
அந்த வாக்குப்பெட்டிக்குள்
நாம் நுழைந்தாக வேண்டும்.
"நான் கபாலிடா" என்பதையும் விட‌
ஒரு மில்லியன் வாட்ஸ் வெளிச்சம் ஏந்தி
சொல்கிறார்.
"நான் பச்சைத் தமிழன்"
அது பொய் இல்லை
தமிழ் மொழி மட்டுமே
எல்லா மொழியாகவும் ஒலிக்கும்.
அது ஒலி அல்ல.
அது உணர்வு.
அது நிமிர்வு.
அது எல்லா மரணங்களையும்
துடைத்து அழிக்கும்.
அது அமுதம்.
அது புத்தம் புதுக்குமிழியாய்
எரிமலைப்பிஞ்சுகளின்
எழுத்துக்களாய்
எழுந்திருக்கும்!
அவர் குரலில்
தமிழின் "டெசிபல்"கள்
எல்லா ஆதிக்கத்தையும்
அடித்து நொறுக்கும்!
அவர்கள் இப்போது ரசிகர்கள் அல்ல.
நம் மண்ணில் தலைகீழாய் தொங்கிக்கிடக்கும்
இருட்டு வௌவ்வால்களை
வெளிச்சப்பிரளயம் ஆக்கப்போகும்
ஒரு புதிய நம்பிக்கைக்கடல் !
அவர் சொல்கிறார்.
போர் வரும்போது...
நம் வலிமையை திரட்டிக்காட்டுவோம்!
இப்போது
கடமை இருக்கிறது.
தொழில் இருக்கிறது.
வாழ்க்கை இருக்கிறது.
ஆம்!
உங்களுக்கும் எனக்கும் தான்.
கடமை இருக்கிறது..
.............................
................................
அவ்வளவு தானா
படம் முடிந்து விட்டதா?
சிலிர்ப்புடன்
நெருப்பின் உயிர்ப்புடன்
தலைவரை பார்த்தது எல்லாம்
"ஹோலோகிராஃபிக் பிம்பமா?"
இந்தக்கேள்வி
ரசிகர்களின்
கனவுக்குள்
ஒரு நனவாக‌
எரிந்து கொண்டுதான் இருக்கிறது!
இது வெறும்
2.0 ன் முன்னோட்டம் அல்ல?
ஜனநாயகம் எங்கே
என்று கேட்டாரே!
அது ஒரு போரின் முன்னோட்டம்!
அமித்ஷாக்களும்
அவர்கள் போன்றவர்களும்
மயக்கத்தோட்டாக்களைக்கொண்டு
பிடிக்க‌
சுற்றி சுற்றி வந்து
இந்த வரிப்புலியிடம்
வரி விளையாட்டுகள் கொண்டு
வலை வீசி விடாமல் இருக்க.....
ஓ! ரசிகத் தமிழ் சிங்கங்களே!
தூங்கி விடாதீர்கள்.
விழித்துக்கொள்ளுங்கள்!

=================================================வியாழன், 18 மே, 2017

நகைச்சுவை (24)

நகைச்சுவை (24)
========================================ருத்ரா

செந்தில்

அண்ணே நம்ம முதலமைச்சரு எப்போண்ணே "ஸ்டேஷன் மாஸ்டர்"
ஆனாரு?

கவுண்டமணி

என்னடா கொழப்புற?

செந்தில்

அதில்ல அண்ணே. எப்ப பாத்தாலும் அந்த திட்டம் துவக்கறேன் இந்த திட்டம் துவக்கறேன்னு பச்சைக்கொடியும் கையுமா நிக்கிறாரே!

கவுண்டமணி

டேய் "ரயில் எஞ்சின் இரும்புத்தலையா" உன் மீது எஞ்சினை மோத விட்டு.....வேண்டாண்டா ..பாவம் அந்த எஞ்சினே உடைஞ்சு போய்டும்டா....
ஓடிப்போ!

===============================================================
(ஒரு கற்பனை காமெடி ட்ரேக் )

புதன், 17 மே, 2017

ரஜனி பாபா

ரஜனி பாபா
===============================================ருத்ரா

பாபா படத்தில் நடித்ததால்
ரஜனி
ரஜனிபாபா ஆகிவிட்டார்.
இந்த "எந்திர(ன்)"வாழ்க்கையை
பொய் என எண்ணுகிறார்.
இமயமலையின்
28000 அடிகளுக்கும் மேலான உயரத்துக்கு
போய்விட்டார்.
அதனால் மக்கள்
வெறும் ஈ எறும்புகள் தான்.
கடவுள் விருந்தாளியாக‌
உங்கள் இதயத்துள் நுழைய‌
இதயத்தை தூய்மையாக‌
வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்!
உயர்ந்த கருத்து.
கனமான கீதையை
ஆனந்தவிகடன் குமுதம் போல‌
சுவையாக்கி தருகின்றார்.
செட்டிங் வைத்துக்கொண்டு
வசனம் பேசவில்லை.
ஃபைட்டிங்கின்
பன்ச் வசனங்களும் இல்லை.
தன் உள்ளத்துக்குள்
ஒரு கடவுளை
"போன்ஸாய்" விருட்சமாய்
பதியம் போட்டு
இந்த "ஆரண்ய காண்டத்தை"
அரங்கேற்றி இருக்கிறார்.
லட்சக்கணக்கான ஸ்லோகங்களை
அள்ளித்தெளிக்கவில்லை.
எளிய முறையில்
கடவுளை தன் பேச்சால்
"படம்" பிடித்துக் காட்டிவிட்டார்.
மக்களுக்கு தேவை
வாழ்க்கையா? கடவுளா?
என்ற பட்டி மன்றங்களெல்லாம்
குப்பை தான்.
ஆண்டவன் இழுத்த இழுப்புக்கு
ஆடும் நூல் பொம்மை நான் என்கிறார்.
இருப்பினும் இவர்
சாதி மத வர் ணங்கள் காட்டும்
பூணூல் பொம்மையாக இருக்கமாட்டார் என
நம்புவோமாக!
நாம் அவருக்கு கை தட்டுவோம்!
கடவுளுக்கு வாழ்க்கை தேவையில்லை!
அது போல்
மக்களுக்கு கடவுள் தேவையில்லை!
இதையும்
எங்காவது அவர் பேசினாலும் பேசுவார்.
அதற்கும் நாம் கை தட்டுவோம்.
நம்மைப்பொறுத்தவரை.
கடவுள் ஒரு ஆள் இல்லை.
ஒரு ஆள் என்றால் தான்
அந்த "ஆள்மா" அல்லது "ஆத்மா"
மற்றும் ஆத்மீகம் பற்றி எல்லாம்
நாம் கவலைப்பட வேண்டும்.
அவர் பலப்பல ஆள்.
அவர் பெரும் ஆள்
அந்த பெரும் + ஆள் தான் "பெருமாள்"
தமிழின் கடவுள் அந்த "பெருமாள்"
எனும் மக்கள் தான்.
அவர்(கள்) படுத்திருக்கும்
பாற்கடல் எனும் ஓட்டு வங்கிகளே
அந்த‌ ஜனநாயகம் எனும் கோவில்.
இப்படியும் ஒரு நாள்
அவர் பேசுவார்.
அப்போதும் அவருக்கு நாம் கைதட்டுவோம்!
இப்போதைக்கு இவருக்கு
"ஆத்மீகம் கூட‌
வில்லன்களோடு மோத ஒரு ஆயுதம் தான்!"
இந்த "ஒரு வரிக்கதை" ரெடி.
தயாரிப்பாளர்களே!
தயாராகுங்கள்!
பி.ஜே.பி காரர்களே!
உங்கள் ராமராஜ்யத்தை
இந்த "காவி கார்ப்பரேட்டுகளை"க்கொண்டு
கட்டுவீர்கள் ஆனால்
இந்த "ஆண்டவனின் ரோபோ"வான‌
ரஜனியின்
ஆத்மீகம் அந்த சுரண்டல்வாதிகளோடும்
டிஷ்யூம் டிஷ்யூம் தான்,

============================================

திங்கள், 15 மே, 2017

நகைச்சுவை (23)

நகைச்சுவை (23)
====================================ருத்ரா

செந்தில்

ஆமாண்ணே! சூபர்ஸ்டார் அரசியலில் ஈடுபடலாம்னு பேசிக்கிறாங்களே

கவுண்டமணி

ஆமாண்டா!அப்படித்தான் பேசிக்கிறாங்க!

செந்தில்

அப்படீன்னா அவர் ரெண்டு தொகுதில தானே நிப்பாரு!

கவுண்டமணி

(திகிலுடன்) அடே! பயாஸ்கோப்பு தலையா! என்னடா சொல்றே!

செந்தில்

ஆமாண்ணே! அவர் ஒரு தொகுதிலே நின்னாலே நூறு தொகுதிலே ஜெயிச்ச மாதிரி தானே........

கவுண்டமணி

அடாங்கொக்க மக்கா! நீயெல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சா இந்த நாடு தாங்காதுடா

==================================================================
(இது ஒரு கற்பனை உரையாடல்)

ஞாயிறு, 14 மே, 2017

காதலை எப்படிச் சொல்வது?

காதலை எப்படிச் சொல்வது?
========================================ருத்ரா

காதலை எப்படி சொல்வது?
வார்த்தைகளை தோண்டி தோண்டி
எழுதலாம் என்று உட்கார்ந்தான்.
காகிதப்பரப்பு முழுவதும் மயான அமைதி.
அதன் மேல் பேனா.
அதன் மேல் ஒரு ஈ.
அது கூட கோளக்கண்ணாடி முட்டை போல் தெரிந்த‌
தன் கண்ணின் வலை மிடைந்த பிம்பத்தை
பிசைந்து பிசைந்து உருட்டியது.
முன்கால் நுண்கம்பிச்சுருளை
மீட்டி மீட்டி
ஏதோ வாசித்தது..
இவனுக்கு கேட்டது...
"கொல வெரியிலிருந்து..டங்கா மாரி" வரைக்கும்..
ஆகா.. அவனுக்கு பொறி தட்டியது.
பிச்சு பிச்சு வார்த்தைகளை
எறியணும்.
கடிச்சு கடிச்சுத் துப்பணும்.
மீன் எலும்பு கணக்கா வரி வரியா
அதுல நெழல் விழணும்.
லவ்வு அதுல கவ்வு செய்யணும்..
அம்ப்டித்தேன்..
அப்றம் ரவிக்கை கொக்கி கணக்கா
கப்புன்னு புடிச்சுக்கும்..
அவன் எளுத ஆரம்பிச்சான்.
"டகல் பேட்டா பால் பேட்டா.
ஒம் மூக்கு மேல நா போட்ட‌
சுவாச காத்து பட்டா
அது ஜென்மத்துக்கும் "பட்டா"
ஊய்..
அவன் காதலி விரல்களை
வாய்க்குள் அமுக்கிக்கொண்டு
அடிச்சா பாரு விஸிலு...
லேசர்க கலரு கலரா பிழிஞ்சுதுக
கிடாரும் ட்ரம்மும் ஒலிப்பூக்களை
பிச்சு பிச்சு கோத்துதுக..
ஐ லவ் யூயூயூ...
லவ் லெட்டர் "ச்ஜ்ஜெஸ்டிவ் க்ராபிக்ஸில்"..
நரம்பு நரம்பா கரப்பாம்பூச்சி மீச ஆட்டி ஆட்டி
..ஸூம் இன்..ஸூம் அவுட்.
ஆடியன்ஸ் சுநாமியில் தீக்கொளுந்தா மழ பெஞ்சு..
எல்லாமே கரஞ்சு போச்சு.
கனவுப்பீய்ச்சல்..கனவுப்பீய்ச்சல்
ஆகாசமே கந்தல் தான்...
மறுநாள் சூரியனைக்காணவில்லை.
மரம் தோறும் செடி தோறும்
தொங்கினான் வெட்டிப்போட்ட வேதாளமாய்.
மீண்டும் தொடங்கிவிட்டார்கள்
பேப்பரும் பேனாவுமாய்..
இந்த காதல் விக்கிரமாதித்தர்கள்..
==============================================
21 பெப்.2015 ல் எழுதியது.

சனி, 13 மே, 2017

சூபர்ஸ்டாரும் அடையாள அட்டையும்

சூபர்ஸ்டாரும் அடையாள அட்டையும்
====================================================ருத்ரா

சூபர்ஸ்டார் அவர்களே!
ஸ்டைல் நடிப்பின்
பெருங்கடல் நீங்கள்.
தேசங்கள் கடந்த
தேசம் உங்களுடையது.
ஜாக்கிச்சான் போன்றவர்கள் கூட‌
உங்கள் விசிறியாமே.
சாதி மத இன மொழி
எல்லைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு
உங்கள் சிகரெட் புகைவளையங்கள்
ஒலிம்பிக் வளையங்களாகியுள்ளன.
சாதிக்கப்பிறந்த
ஒரு சிலருள்ளும்
ஒரு சிலரில்
நீங்கள் ஒரு கோஹினூர் வைரம்.
ஆதார் அட்டை என்னும்
கொச்சைத்தனமான அடையாளமும்
அப்புறம்
மெடலிக் டிடெக்டர் கொண்டு
தடவப்படக்கூடாத இடங்களையெல்லாம்
தடவச்செய்யும்
ஒரு இறுக்கமான வளையங்களுக்குள்
சிறைப்படுவதும்
உலக மாமனிதன் எனும்
உயர்ந்த வானம் ஆகிப்போன‌
உங்களுக்கு
கொஞ்சம் கூட  பொருந்தவில்லையே.
ஆனாலும் உங்கள் பாதுகாப்பு
எங்களுக்கு உயிர் போன்றது தான்.
நெருக்கமாக உங்கள் ரசிகனுடைய‌
இதயத்துடிப்பும்
உங்கள் இதயத்துடிப்போடு
ஒன்றி கேட்க வேண்டும் என்ற‌
உங்கள் ஆசையின் மதிப்பு
கோடி கோடி கோடி ரூபாய்களால்
ஆனது என்பதை
யாரும் மறுப்பதற்கு இல்லை.
வியர்க்க விறு விறுத்து
நீங்கள் "மன்னன்"படத்தில்
அடித்து பிடித்து டிக்கட் வாங்கியதைப்போல‌
டிக்கட் வாங்கிய அன்பு உள்ளங்கள்
ஒவ்வொன்றும் ஓவ்வொரு பொற்காசு
என்று வைர(முத்து)வரிகள்
துல்லியமாகத்தான் உள்ளன.
அடையாள அட்டை என்று இருப்பது தான்
கொஞ்சம் இடிக்கிறது.
இதற்கு பேசாமல் எங்கள் முதலமைச்சராய்
வந்து விடுங்களேன்.
எத்தனை நாளைக்குத்தான்
உங்கள் "வள்ளி" பட வசனத்தை
நாங்கள் கிள்ளி கிள்ளி கேட்டுக்கொண்டிருப்பது?
நாங்கள் தமிழர்கள்.
எங்கள் தமிழுக்குள் தான்
எல்லா உலக மொழிகளும் ஒலிக்கும்
பொதுமை இதயம் உண்டு.
யாதும் ஊரே !
யாவரும் "நன்றாய் கேளீர்"
யாவரும் நம் கேளிர்!
அந்தக்கலிஃபோர்னியக்கவர்னர் வந்து
எங்கள் தமிழ்த்திரையில்
தோன்றினாலும் போதும்
எங்கள் தமிழ் அமெரிக்க இங்கிலீஷ்
அற்புதமாய் பேசும்.
அப்புறம் அவர் தான்
எங்கள் தமிழ் நாட்டுக்கவர்னர்.
எங்கள் மாமன்னர் ரஜனி அவர்களே
உங்கள் செங்கோல்
எங்கள் இதயத்தில்!
இதை அடையாள அட்டைகளால்
அழுக்காக்கி விடாதீர்கள்.

===========================================================அம்மா தின வாழ்த்துக்கள்

அம்மா தின வாழ்த்துக்கள்
======================================ருத்ரா

அன்னையர் தின வாழ்த்துக்களை
அம்மா தின வாழ்த்துக்கள்
என்று
அழைத்தாலும்
அதில் ஒரு பெண்ணின் கண்ணீர் சமுத்திரமாய்
அலை அடிக்கும்.
ஆம்.
பலாத்காரமாய் மரணதேவன்
கதற கதற பாசக்கயிற்றை வீசி
எருமை வாகனத்தில் வந்து
ஒரு அம்மாவை இழுத்துச்சென்ற
காட்சி புதைந்த இடத்தில்
புல் கூட முளைத்து விட்டது.
அந்த மகத்தான அம்மா
குழந்தையாய் பிறந்தபோதே
அரசியலோடு கொடிசுற்றி பிறந்தார் போலும்.
ஒரு கொடியேற்றி கோலோச்சி
வாழ்ந்தபோது அவருக்கு
காலையில் முழிக்கும் சூரியன் கூட‌
"ஹெய்ல்...ட்லர்"என்று
விறைப்பாக சல்யூட் வைக்க வேண்டும்.
கூடவே தொற்றிக்கொண்டிருக்கும்
பிசாசு வேத மந்திரத்தின் வேதாளங்கள்
ப்ரசன்னம் என்ற பெயரில்
கிசுகிசுத்ததில்
தமிழின் பெண்மைச்சூரியனான‌
கண்ணகிசிலையைக்கூட‌
கடலில் எறியாத குறையாய்
எங்கோ ஒரு அழுக்குமூலையில்
கடாசி விடும் அளவுக்கு
திராவிடம் அல்லது தமிழின் மீது
கண்மூடிய வெறியில் அவ்வளவு வெறுப்பு
அவர்களுக்கு.
ஆனால் குடியிருக்கும் கொடியின் நிழலோ
பிரம்மாண்டமானதொரு திராவிடம்.
இந்த முரண்பாடு
தமிழ் மக்களின் சிந்தனைக்குள் கொஞ்சம் கூட‌
ஒரு கீற்று வெளிச்சம் தரக்கூடிய அளவுக்கு
அந்த சன்னலை திறந்து காட்டவே இல்லையே!
அது தான் தமிழ் நாடு.
அவர்கள் தான் தமிழ் மக்கள்.
இந்த நிலையிலும்
தமிழர்களுக்கு அவர்கள்
அம்மா தான்.
ஏதோ ஒரு சிக்மெண்ட் ஃப்ராய்டிச‌
அல்லது கிஸோ ஃ பெர்னிய
வலிப்பின் சாட்டைநுனிகள்
அவர்களை அப்படி சொடுக்கிக்கொண்டேயிருக்கலாம்.
இல்லையென்றால்
தமிழ் மண்ணின்
நரம்புகளோடு ஊடி நின்றவர்
எதிர்க்கட்சிக்காரர்
அச்சிட்டுத் தந்த‌
அய்யன் வள்ளுவன் படத்தின் மீது
ஏதோ தூக்குத்தண்டனைக்கைதியின்
முகத்தை மறைப்பது போல‌
"அப்படியொரு கருப்பு நிழலைக்கொண்டு"
தார் பூசியிருப்பார்களா?
பரிகாரம் செய்வது போல்
அப்புறம் தமிழ் அன்னைக்கு
உயிரற்ற அந்த காங்கிரீட் கட்டிடத்தை
பல நூறு கோடி கொட்டி
எழுப்பியிருப்பார்களா?
இன்றும் அது லஞ்சக்கழுகின்
கூரிய அலகையும் தீக்கண்களையும் தான்
படம் காட்டுகிறது.
அன்றொரு நாள்
ஆட்சியின் அடங்காத ஒரு உள் வெறி
அரங்கேறிய நாள்.
ஒரு பெண் மங்கலமாய்
கழுத்தில் அணியும் மெல்லிய நகையின்
ஏக்கம்
பல நூறு கோடிகளின்
வைரமாலையாய் அவர்கள் கழுத்தில்
ஏறியிருந்தது.
அது
குன்ஹா அவர்களின் தீர்ப்புக்காவியத்தின்
பேனாவுக்குள் மையாய்
ஒரு ஹெம்லாக் நஞ்சின்  ரசம் போன்று அல்லவா
அவர்களின் வாழ்க்கையின் அந்திச்சூரியனை
அகல விரித்து வைத்து விட்டது !
அது
அவர்கள் கழுத்தில்
மலையாய் கனத்திருப்பது
பிற்றை நாளில் ஏதாவது ஒரு தருணத்தில்
அவர்கள் இதயத்தை பிசைந்திருக்கல்லாம்.
இருப்பினும்
அந்த அம்மாவுக்கு இந்த மண்ணில்
வடிந்த கண்ணீர் வெள்ளம்
முந்தைய ஆண்டின்
ஊழிப்பெருவெள்ளத்தையும்
மூழ்கடித்து விட்டதே!
ஆம்
அந்த அம்மா உணவகம்
ஏசு தன் சதையை அப்பமாக பிய்த்துத்
தந்ததாகத்தான் உணர்கிறோம்.
அந்த அம்மா குடிநீர்
ஏசுவின் தெள்ளிய ரத்தம் தண்ணீர் ஆன‌
விந்தை வரலாறு தான்.
அம்மா மருந்தகம்...
மற்றும் அந்த "மருத்துவக்காப்பீடு "அட்டை...
மனிதர்களின் கொடுநோயை
தன் தங்கக்கையால் தடவி "சொஸ்தம்" ஆக்கிய‌
அன்னைத்தெரசாவை சித்திரமாக்கி நிற்கிறது.
தன் இறுதி அத்தியாயத்தில்
கருங்கல்லும் உருகிப்போகும் அளவுக்கு
எல்லோர் கண்களிலும்
கண்ணீர்த்துளியாய் திரண்டுநின்று விட்டார்.
அந்த அம்மா என்றும் வாழ்க!
எதிரிகளுக்கும் அவர்
அம்மா ஆகினார்.
தொண்டு கிழங்கள் ஆன‌
மனிதர்களுக்கும் அவர்
அம்மா ஆகினார்.
மானிட மனக்கசிவுகளுக்கு
தீவிர அரசியல் பகைகள் கூட‌
தூள் தூள் தூள் தான்.
அதோ தூரத்தில் ஒரு பசு
"ம்மா..." என்கிறது.
அது அந்த அம்மாவைக் கூப்பிடுகிறது.
நாமும் தான்.

=========================================================
நகைச்சுவை (22)


நகைச்சுவை (22)
=================================================ருத்ரா


செந்தில்

அண்ணே..அண்ணே  உங்ககிட்ட ஒரு ஐடியா சொல்லப்போறேன்..
கேக்குறீங்களா?

கவுண்டமணி

அடேய்..வயத்தக்கலக்குதுடா! இப்டித்தான் அப்போ அந்த சிங்கப்பூர்
"டால்பின் ஷோ"வுலே சொன்னே."வழு வழுன்னு நல்லா இருக்கிற‌
அந்த குட்டி டால்பினை "உப்புக்கண்டம்" போடலாமான்னு கேட்டே!

செந்தில்

அட! போங்கண்ணே !ஒங்களுக்கு எப்போதும் என்னயக்காண்டாலே
கேலி தான்.

(முகத்தை ஓரமாக வைத்து சிணுங்கிக்கொள்கிறார்)

கவுண்டமணி

சரி! சொல்லுடா!

செந்தில்

ஏண்ணே! மெரினா பக்கத்துல நம்ம "கோட்டைக்கட்டிடம்"எப்ப பார்த்தாலும் சும்மாத்தானே கெடக்குது.அதுல அம்பது அறுபது
நெல்லுமூட்டையை அவுத்து நெல்லக் காயப்போடலாம்ல.....

கவுண்டமணி

அடேய் படுவா! தீச்சட்டித்தலையா! இப்ப நீ செத்தடா.....

(கவுண்டமணி கோபமாக செந்தில் மீது கல் எறிய குறி பார்க்கிறார்.
செந்தில் சிட்டாக பறந்து மாயமாய் விடுகிறார்)

=================================================================
(கற்பனைக் காமெடிக்காட்சி இது)

வெள்ளி, 12 மே, 2017

நகைச்சுவை (21)


  நகைச்சுவை (21)
=====================================================ருத்ரா


செந்தில்

ஆமாண்ணே ஏதோ "பேச்சுவார்த்தை" அது இதுன்றாங்களே என்னாண்ணே !

கவுண்ட மணி.

அடேய் அவங்ககிட்ட பேசறதுக்கு ஒண்ணுமில்லே ..சும்மா அந்த கோடிக்கும்
இந்த கோடிக்கும் இழுத்துக்கிட்டு இருக்காங்கப்பா !

செந்தில்

அப்படீன்னா கோடிகளுக்குதான் இழுத்துகிட்டு இருக்காங்களா?

கவுண்டமணி

ஏய்.. சவ்வுமிட்டாய்த்தலையா ...இந்த  குசும்பு தானே வேணாங்கிறது.

(செந்தில் தலையை பிடிக்க கவுண்டமணி ஓடுகிறார்.செந்தில் மண்டையில் அவர் கை பட்டு வலியால் அலறுகிறார்.)

=================================================================
(ஒரு கற்பனை உரையாடல்)

வெற்றி வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி வெற்றி
==============================================ருத்ரா

நான் சோம்பல் முறித்து
கை களை சொடக்கு போட்டுக்கொள்கிறேன்.
நெறைய வேலைகள் தலைக்கு மேலே !
அப்படி என்னப்பா என்று கேட்கிறீர்கள்.
இந்த வேலைகள் எல்லாம்
இடிஞ்சு போன வீட்டு உத்தரக்கட்டைகளைப்போல
என் மீது விழுந்து கிடக்கின்றன.
கட்டியிருக்கிற என் துணியை எல்லாம்
யாரோ டார் டார்னு கிழிச்சிருக்காங்க
வாய்க்குள்ள எல்லாம் ஒரே மண்ணு நறு நறுன்னு.
"உம் அப்புறம்..."
நல்லா .உம் கொட்டு .சினிமாக்கதை கேளு
குத்தாட்டம் போடு
ஏண்டா இப்படி இருக்கீங்க!

அவனவன் சோத்துக்கு
முதுகெலும்பை முறிச்சுணு  .இருக்கான்
அவன் "வேர்வையைப்புழிஞ்சா
நாலு இந்தியன் "ஓஷன்"தேறும்டா"
அட ஒட்டு போடறதுக்கு கூட
நாலாயிரம் ஐயாயிரம் கெடை க்குமான்னு
ஆச்சரியப்பட்டு கிடக்காங்கடா .

இங்க எங்க பாத்தாலும் பணம் தானடா
பிணம் குவிஞ்சாப்ல .
இவனுக்கு தான் விடியவே மாட்டேங்குதுடா.
இவன் பேசுற மொழியைக்கூட சுரண்டி  சுரண்டி
திங்கப்பாக்குது பூணூல் போட்ட
ஏதோ ஒரு மிருகக்கூட்டம்.
சாதி மதமுண்ணு சொல்லிக்கிட்டு
நம்ம சரித்திரத்தையே இங்க
கந்தல் கந்தலாய் ஆக்குதடா.
ஊழல் என்றொரு மௌன மிருகம்
கோரவாய் பிளந்ததால
காடு மலை ஆறெல்லாம் களவு போச்சுடா !
பாரு தலைக்கு மேல  வேலைடா
இதெல்லாம் சுத்தம்பண்ண
என்ன செய்யப்போறேனோ?
சிரங்கு வந்தவன் கை சொறிஞ்சாப்ல
இந்த "செல்ல"ப்புடிச்சு சொறிஞ்சுகிட்டிருக்கேன்
சொறிய சொறிய "பில்லு" கூடி புண்ணாச்சு .
புண்ணாகி புண்ணாகி ரத்தம் வழியட்டும்.
கடல் எல்லாம் இனி மக்கள் கடல் தான்!
"மெரீனா"கூட இனி மக்கள் கையில் தான்.

செல்லு  என்பது வெறும் மின்பொறி அல்ல
அதுல இனி
நம்ம சொல்லு எல்லாம் கூடணும்
சொல்லுக்குள்ள சொல்லுக்குள்ள
அணுக்களையும் பிளக்கணும் ....அதுல
ஏழு கடலும் அலை விரிச்சு ...
தீய  அறங்களையெலாம் பொசுக்கணும்.
வெற்றி வெற்றி வெற்றி
தமிழுக்கே இனி வெற்றி.

சோம்பல் முறிச்செதெல்லாம் போதும்டா
ஏமாத்து இதிகாச வில்லு முறிப்போம்டா
பம்மாத்துகும்பல்களின்  படையழிப்போம்டா!


==================================================வியாழன், 11 மே, 2017

கலைடோஸ்கோப்

கலைடோஸ்கோப்
=============================ருத்ரா

எத்தனை திருக்கு?
எத்தனை முறுக்கு?
அத்தனை கோணமும் காதல்.

கண்ணாடித்துண்டுகளில்
மின்னல் துண்டுகள்.
காதலின் கற்கண்டுகள்.

இதய நாளம்
காதலின் ஏழுவர்ண‌
ரத்தத்தில் துடித்தது.

செல்லில் அவன் நம்பரே
திருப்பி திருப்பி பார்க்கும்
என் "பயாஸ்கோப்"

"சீ யூ" என்றால் யார் சொன்னது
நாளை என்று?
அடுத்த "நானொ செகண்டுடா ஃபூல்.

============================================

கார்ட்டூன் (10)


கார்ட்டூன் (10)      BY  ருத்ரா இ பரமசிவன்.


புதன், 10 மே, 2017

"நீட்" தேர்வு

"நீட்" தேர்வு
==========================================ருத்ரா பரமசிவன்

"நில்லு"

"சார் கடைசி பெல்  அடிச்சிருவாங்க"

"அடிக்கட்டும் அதென்ன தலையில் சடைகள் .யாரப்பா அங்கே
இவன் தலைமுடியை வழிச்சுடு..."

"அது சரி கழுத்தில் என்ன புது மாதிரி "டை"? இதை கழற்றி எறிங்க ."

எறியப்பட்டது

திடீரென்று பாம்பு பாம்பு என்ற அலறல் .ஒரே திமு ..திமு ..தள்ளு முள்ளு

சோதனை அதிகாரி இதற்கு கொஞ்சமும் அலட்டிக்கொண்டவராக
தெரியவில்லை.

"சரிப்பா! நாங்க சட்டையை சோதிப்போம்னு சட்டையே போடாம வந்திருக்கியா?...அதென்ன இடுப்புல வரி வரியா ...தோலுல  "பெர்முடா"வா?
அத கழற்று..."

"சார் வேண்டாம்...விட்டுடுங்க! "

"அதெப்படி...?  யாரப்பா .இங்க வந்து இத கழட்டி விடுங்க"

"வேண்டாம்... வேண்டாம்..."

"பெரிய சிதம்பர ரகசியமா ...சரிதாண்டா .."

விறைப்பான சல்யூட்டுடன் ஒரு காவற்படை க்காரர் அந்த பையன்  "கதற கதற " துகில் உரித்தார்.

அங்கே ஒரு திகில் காட்சி...எல்லோரும் வியப்பில் உறைந்து போய்விட்டார்கள்.

அவன் இடுப்புக்கு கீழே ஒன்றுமே இல்லை. ஆம்  நாத்திகத்தனமாய் ஒன்றுமே இல்லை ..ஒன்றுமே இல்லாத நிர்வாணம்.

அதற்குள் ஆயிரம் புலிகள் உறுமிக்கொண்டு அங்கே வர ,,,
அண்ட சராசரங்கள் அதிர...எல்லாமே தலைகீழாய்....


"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து...."

பாட்டு ஒலி வெள்ளமானது.

"அவன் தலையிலிந்து "கங்கைப் பிரவாகம்"...

எங்கிருந்தோ முரட்டுக்காளை அங்கே வந்து சேர்ந்தது.

எங்கும் புகை மண்டலம் !

ஜெய ஜெய சம்போ சிவ சம்போ...

முழக்கமிட்டபடி கைகள் உயர்த்தி  கூப்பியபடி ...

மோடிஜி ...அவருக்கு பின் ராஜநாத்  சிங்க்ஜி ...அவருக்குப்பின்  மோகன் பாகவத்ஜி ...அப்புறம் ...

வெங்கய்யநாயுடுஜியின்கொடுக்கைபிடித்துக்கொண்டு அந்த சர்மாஜி இந்த ஜோஷிஜி அப்புறம் எல்லா ஜிஜிஜிஜிஜிக்களும் அந்தப் பையனை வலம்  வரத்தொடங்கினர்..
.
அந்தப்பையன் விஸ்வரூபம் எடுத்து விட்டான்
.
"அடி முடி " தெரியவில்லை...

தொப்புள் தான் தெரிந்தது ஒரு புள்ளியாய்.

சோதனை அதிகாரி அப்புறமும் விடவில்லை..அந்தப்புள்ளி ஏதோ
ஒரு "ட்ரோன் "ஆக  இருக்கலாம் ..என்று ஓடி  ஓடிப்போய்  தொப்பென்று விழுந்தார்.

அதற்குள் நாரதர் கூவிக்கொண்டே வந்தார்..

"பரமேஸ்வரா"  உங்கள் பையன் உங்களுக்கு "ஓங்காரம்"பற்றி சொல்லிக்கொடுக்க வந்த போது மிடுக்காய் நானே படித்துக்கொள்வேன்
என்று அந்த தண்டையார்  பேட்டை முட்டுசந்து "மாநகராட்சி "பள்ளியில்
ப்ளஸ் டூ  படித்து தேர்வு அடைந்து இந்த "நீட் தேர்வு" எழுத வந்துவிட்டீ ர்களே ..
இது தகுமா? இது பொறுக்குமா?"

நாரதர் புலம்பிக்கொண்டே  இருந்தார்!

சிவ கர்ஜனை தொடர்ந்தது...

"என்னையும் (சிவனை) எதோ திராவிடன் என்று தானே இவர்கள் அலட்சியம் செய்தார்கள்.....இந்து மதத்திற்காக ஆள வந்திருக்கும் இந்த "பினாமித்துவ"
வாதிகள் யார்? உலகமே இந்த தென்னாட்டிலிருந்து தான் தொடங்குகிறது.
இந்த தென்னாடுடைய சிவன் ஒலித்த தமிழ் இருக்கையில் வேறு கூச்சல்கள்
இங்கு எதற்கு...?"

உடுக்கை ஒலிகள் பூகம்பங்கள் போல் அதிர்வைத் தந்தன..

"பொறுத்துக்கொள்ளுங்கள் ஈஸ்வரா! உங்கள் "லாவா"வை  உமிழ்ந்து தீயின் ஊழிதாண்டவம் ஆடி விடாதீர்கள் .அந்த வெப்பம் தாங்க முடியாது..."

நாரதர் அமைதிப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.

..................................................

....................................................


"ஆமாம் ஆமாம் வெயில்  தாங்கால...வேண்டாம் ..வேண்டாம்.....சீக்கிரம் ..சீக்கிரம்  பரீட்சசைக்கு கிளம்ப வேண்டும்."

அந்த வீட்டுக்கூடத்தில் திடுக்கென்று அந்த பகல் தூக்கத்திலிருந்து அந்த சோதனை அதிகாரி விடுபட்டு மலங்க மலங்க விழித்தார்.

கையில் எதோ ஒரு தினச்செய்தி  "வேலூரில் "41 டிகிரி C "என்று கொட்டை எழுத்தில் காட்டியது.

""நாளைக்குத்தானே  அந்த பரீட்சைக்கு "சோதனை அதிகாரி"யாக போக வேணடும்..இப்போதே ஏன் இப்படி இந்த கனவின் உளறல்கள்..."

சோதனை அதிகாரியின் மனைவியார்  அவரை உலுக்கி எழுப்பினார்.


==========================================================================
(இது ஒரு கற்பனைசித்திரம் )
   


திங்கள், 8 மே, 2017

என்ன செய்யலாம் இந்த தமிழ்நாட்டை?

என்ன செய்யலாம் இந்த தமிழ்நாட்டை?
======================================================ருத்ரா


என்ன செய்யலாம் இந்த தமிழ்நாட்டை?
சாணக்கியபுரியில்
தினமும் இந்த சிந்தனை தான்!
"நான் ஆணையிட்டால்..."
என்று எம் ஜி ஆர் பாணியில்
சவுக்குகள் சொடுக்க பலவாறாய்
துருப்பு சீட்டுகள் கையில்!
இருப்பினும் முன் வாசல் வழியாகத்தான்
நாங்கள் வருவோம் என்று
தினமும் பிரகடனங்கள்.

அப்படியென்றால் அந்த கூர்மையான‌
சவுக்கு நுனிகள் இன்னும்
ஏன் அந்த முதுகுகளில்
கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருக்கின்றன.

எதிர்க் கட்சி ஒன்று
அந்த அரசியல் முக்குளிகளில்
தலை நீட்டி சீறிக்கொண்டு தான் இருக்கிறது.

ஈகோ எனும் புற்றுநோய் பற்றிக்கொண்டதிலே
ஈசல் கூட்டங்களாய் கிடக்கின்றாய்
என் அருமைத்தமிழா!

பிரச்னைகள் எத்தனை? எத்தனை?
சொல்லி மாளாது.
விவசாயிகளின் வறட்சிப்பிரச்னை.
ஆறுகள் ஏரிகள் வறண்டு
குடிநீர் பிரச்னை
காவிரி நடுவர் மன்ற பிரச்னை
நீட் தேர்வு பிரச்னை
மருத்துவர்கள் அம்பது சதவீத ஒதுக்கீட்டு பிரச்னை
ஹைட்ரோ கார்பன் பிரச்னை
ஊழல் ஊழல்
எங்கும் ஊழல்.
எதிலும் ஊழல்.
கத்தையாக எவனாவது
சில நோட்டுகளைக்கொடுத்தால் போதும்
"அமுதுக்கும் தமிழ் என்று பேர்"
என்ற வரியையும்
அந்த ஆதிக்க மொழியான் காலடியில்
வைத்து விடுவான் நம் தமிழன்.
இந்தி எனும் பேய்த்தீ மத்திய அரசின்
கஜானா கர்ப்பத்திலிருந்து
கொழுந்து வீசிக்கொண்டு வருகிறது.
தமிழா !நீயும் வருமுன் காவாதானாயிருந்தால்
"எரி முன்னர் வைத்தூறு போலக்கெடும்"
நம் செம்மொழி என்று
உணர மாட்டாயா?


நீ பேசாமல் இருந்தால்....
உன்  முதுகையே மைல் கல்லாக்கி
ஊர் பேர் தூரம் எல்லாவற்றையும்
இந்தியில் "பொறித்து"விட்டுப்போய்விடுவார்கள்.
உன் ஊரும் பேரும் தெரியாத
ஊமையானாய் ஆன பிறகு நீ
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்று முழங்கி என்ன பயன்?


குடியரசு தலைவர் வரை போய்
"பிராது" கொடுத்தாலும்
யெ ராஷ்ட்ர பாஷா ஹை என்று சொல்லிவிட்டு
சேம்பருக்குள் போய் உட்கார்ந்து கொள்வார்கள்.

எல்லாப்பிரச்னைகளுக்குள்ளும்
அடியாய பிரச்னை
நம் அடையாளப்பிரச்னைதான்.
உயிரான பிரச்னை தான்!
நம் உயர்தனிச்செம்மொழியான தமிழ்...தான்
நம் "ஆதார் அட்டை ..மெமரி கார்டு ..பாஸ் வர்டு" எல்லாம்.
தமிழா
நன்றாய் உற்றுப்பார்
நீயே...தமிழை..
உன் காலடியில் மிதித்து நசுக்கிக்கொண்டிருக்கிறாயே!
இது தான் இப்போதைய பிரச்னை!
மாற்றான் தோட்டத்து மல்லிகையை
உன் காதில் வைத்துக்கொண்டு
சினிமாப்பல்லக்குகள் தூக்கிக்கொண்டு இருக்கிறாய்.
உன் தலைமீது அந்த மாற்றன் தோட்டமே
உட்கார்ந்து உன்னைப் புதைக்க வந்து விட்டதே!
உனக்கு ஒரு ஆண்டவனைக்காட்டுகிறேன்
என்று
உன் மீது கொட்டிக்கவிழ்க்கும்
அர்ச்சனைகள் எனும் இரைச்சல்களில்
எதனைக்கண்டாய்?
சவத்து மொழி "சப்தங்களின்"
மார்ச்சுவரிக்குள்ளா
உன் வெளிச்சம் தேடினாய்?

கழுத்துவரை புதைந்து விட்டாய்.
உன் கண்களையும் செவிகளையும்
வாய்ச்சொல்லின் உரத்த குரல்களையும்
அந்த ஆதிக்கங்கள் விழுங்க வைத்து விடாதே!
அந்த "வாக்குரிமை" மட்டுமே இப்போது
உன் ஆயுதம்.
அந்த கரன்சிகள் அதையும் விழுங்கிவிடுவதற்குள்
சிலிர்த்துக்கொண்டு எழு!
திமிறிக்கொண்டு நில்
கிளர்ந்து உணர்ந்து செல்!
இந்த மண்ணுக்குள் தான் உன் குரல்!
இந்த மண்ணுக்குத்தான் உன் குரல்!
இந்த குரலுக்குள் தான் உன் மண்!
தமிழ் வெல்க!தமிழ் வாழ்க!
நம் தமிழ் என்றும் வாழ்க!வாழ்க!!

================================================
அம்மாவுக்கு ஒரு தினம்

அம்மாவுக்கு ஒரு தினம்
======================================ருத்ரா

ஆயிரம் யுகங்களைக் கூட‌
அடை காக்கும்
கருப்பைக் கடலுக்கு
ஒரு தினம் என்று
ஒரு துளி கண்ணீரை
துடைத்து எறிந்து விட்டு
எங்கே ஓடுகிறாய்
மனிதக்குஞ்சே?
மயிர்க்கால் தோறும் உன்
மனக்கால் ஊர‌
ஊறும்
அமுத உயிர் உன் அம்மா!
வயதுகள் நூற்றெட்டு ஆனாலும்
உன் நினைவே அவளுக்குள்
பலப்பல நூற்றாண்டுகள்.
மில்லியன் மில்லியன் ஆண்டு
டைனோஸார் எலும்புக்குள்ளும்
துருவிப்பார்
ஒரு தாயின் வாசனை
உன் சுவாசத்துள் சுவடு பதிக்கும்.
கோவில்கள் கூட
கிழிந்த பாயில் கிடக்கும்.
தெய்வங்கள் அதில்
பிள்ளை முகம் தேடி
சாக மறுத்து அடம்பிடிக்கும்.
புனிதங்களின் புனிதம் எல்லாம்
அதோ
அந்த முதியோர் இல்லங்களில்
அந்த வற்றிப்போன‌
எலும்புக்கூட்டில்
வாடாத பச்சை இலை தளிர்த்தது போல்
உயிர் துளிர்த்து துளிர்த்து
சிரித்து சிரித்துக் கிடக்கும்.
அவள் அன்பு தோற்றதில்லை.
தோற்றது மரணங்கள் மட்டுமே.

================================================


ஞாயிறு, 7 மே, 2017

TAMIL MANAM RANK

Tamil Blogs Traffic Ranking
3 Month Traffic Rank :104
Add this Traffic Widget to your blog

TAMIL NAMAM RANK   99  (38 pages)  AS ON 8 TH MAY 2017


3 Month Traffic Rank :99
Tamil Blogs Traffic Ranking

பாகுபலி.2

பாகுபலி.2
=============================================ருத்ரா இ பரமசிவன்.

ஆயிரம் கோடியைத்தாண்டி வசூல் சாதனை.
ஹாலிஉட்டோடு...ஏன்
ஹாலிவுட்டையும் மிஞ்சி ஓடும் வலிமை
"திராவிடத்தானுக்கு வந்து விட்டது"
(சும்மா தான் கோவிச்சுக்காதீங்கோ)
ஆம்! "இந்தியனுக்கு வந்து விட்டது"
பிரபாஸ் ராணா சத்யராஜ்
அனுஷ்கா தமன்னா ரம்யா கிருஷ்ணன்
இன்னும் எல்லாக்கலைஞர்களுக்கும்
மேலும்
ஏதோ ஒரு இருட்டு மூலையில் "லைட்  பாயாக"
உழைத்தவருக்கும்
எல்லாவற்றிற்கும் மேலாக
கணிப்பொறியின் மீது
நடனமிட்ட அந்த பொறியாள விரல்களுக்கும்
இந்த உலகத்தின் உயரிய விருது
அளிக்கப்படட்டும்!
இவர்களோடு அந்த‌
கிராஃபிக்ஸின் குதிரை  யானை....
மூன்று அம்பு தொடுத்த வில்.....
கட்டப்பா ஏன் பாகுபலியைகொன்றான்
என்ற‌
அந்த "பல அதிர்வுகளை"ஏற்படுத்திய‌
மண்டைக்குடைச்சலான கேள்வி...
ரத்தம் சொட்ட சொட்ட பச்சைச்சிசுவோடு
வீரம் கொப்புளிக்கும் ராஜமாதாவின் சபதம்
இன்னும்
ஈ எறும்புகளையெல்லாம்
வரிசையாய் அணிவகுக்க வைத்ததுபோல்
கணிப்பொறி தந்திர காட்சிகளின்
மிடுக்கான ராணுவ அசைவுகள்..
இதையெல்லாம்
ஒரு காமிராலென்ஸில்..அற்புதமான‌
"காக்டெயில்" ஆக்கித்தந்த‌
அந்த "ராஜமௌலி"யின் மேல்ஒரு
விலைமதிப்பில்லாத‌
வைரங்களின் திரட்சியில்
நாம் ஒரு "கலைக்கடல்" எனும்
பிரம்மாண்ட மௌலியை (மகுடத்தை)
சூடுவோமாக!
கபாலின்னா நெருப்புடா என்று
பூட்ஸ்கால் தேய்த்து பொறி பறக்கவைத்தது
போல்
"பிரபாஸ்னா பிரளயம்டா"
என்று எல்லோரையும்
திகிலடையச்செய்துவிட்டார் "பிரபாஸ்"!
ஆறாயிரம் கன்னிகளின்
கல்யாணக்கனவுகளுக்குள்
தூக்கணாங்குருவிக்கூடுகள்
ஊஞ்சலாட வைத்த பிரபாஸ்க்கு
"டைம்" இதழ் அட்டைப்படங்கள் எல்லாம் போதாது!
இமயங்கள் எல்லாம் இவர் காலடியில்
கூழாங்கல் ஆன பின்னே
இவரின் உயரம் கண்டு வியந்து நிற்கிறோம்.
கீரவாணி அவர்களின் இசை
அந்த படத்தின் பரப்பு முழுவதும்
ஒரு கம்பீர அதிர்வையும்
ஒரு மெல்லிய யாழின் இனிய சாரலையும்
கலந்து தருகிறது
அதெல்லாம் சரி!
படத்தின் தீம்
கிராஃபிக்ஸின் ரத்தமும் துடிப்பும் தானே.
கொஞ்சம் சிறுவர்களுக்கான வீடியோகேம்ஸில்
மீசை முளைக்க வைத்து
அந்த அட்டையின் கோட்டை கொத்தளங்களுக்குள்
ராஜாக்களின் சாணக்கிய கீற்றுகளுக்கு
தங்கமுலாம் பூசிய போர்த்தினவுகளின்
வண்ணப்பிழம்புகள் தானே!
ஒரு சமுதாயம்.
அதன் மக்கள்
அவர்களின் கண்ணீரும் ரத்தமும்
மெகந்தி வரையும்
இலக்கிய சிலிர்ப்புகள்
உள் எழுச்சிப் பொங்குதல்கள்
இவை எல்லாம்
இல்லாத
உயிர் வற்றிய சித்திரம் தான் இது.
ஒரு ஈழத்து தென்னை மரங்களின்
அடியில் ஒரு மொத்த இனமும்
கபால எலும்புகளின் உரமாய்ப் போய்விட்ட‌
வஞ்சகக்கதையின் அடியொற்றிய
சுவடுகளில் தமிழன் விடும்
அமிலக்கண்ணீர்த்துளிகளையும்
கலந்து பிசைந்துக்கொண்டு தான்
இதைப்பார்க்க வேண்டும் என்ற‌
ஒரு பொய்மை ஏக்கமும்
ரத்தமாய்
மனத்தின் ஏதோ ஒரு விளிம்பில் கசிகிறது.
இதற்குள் போய் ஒரு சத்யஜித் ரேயை
தேடுவது
பார்வையற்ற‌
அந்த ஐந்துபேர்கள் யானையைத்தடவிய கதை தான்.
ஒரு அம்புலிமாமா கதை தான் என்றாலும்
அதற்கு கோஹினூர் வைரத்தால்
"அட்டை போட்ட" ஒரு
அருமைச்சித்திரம் இது.
இதன் படைப்பாளிகள் எல்லோரும்
அந்த கச்சாபிலிம் சுருளை அற்புதமான‌
"பிரம்மச்சுவடிகள்" ஆக்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு
என் மனம் நெகிழ்ந்த‌
என் மனம் நெக்குருகிய‌
பாராட்டுகள்!

===========================================================

சனி, 6 மே, 2017

ஓலைத்துடிப்புகள்

ஓலைத்துடிப்புகள்
============================================ருத்ரா இ பரமசிவன்.
(12/05/2015 ல் எழுதுயது)கண்டிகும் அல்லமோ கொண்க‍   நின் கேளே?
தெண்டிரை பாவை வௌவ‌
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.

கற்பனை நயம் மிக்க வரிகளால் நம்மைக்கவர்ந்த சங்கத்தமிழ்ப்புலவர்  அம்மூவனார் எழுதிய ஐங்குறு நூற்றுப்பாடல் (125) இது. தெள்ளிய திரை என்று பொருள் படும் கடல் அலைகளின் நுண்மையான விளையாட்டு மிகவும் உற்று நோக்கத்தக்கது.அம்மூவன் எழுதிய "தெண்டிரை பாவை" எனும் சொல் கடல் விஞ்ஞானத்தில் அலைகளின் நுணுக்கமான இயக்கங்களை குறிக்கிறது.அதில் கிடைக்கும்"தெள்ளிய மண்ணில்" பாவை செய்து விளையாடும் தலைவியின் பால் மணம் மாறாத மனத்துள்ளும் சுரக்கும் காதலின் பிஞ்சு ஊற்றில் ஒரு பிரளயமே ஒளிந்திருக்கிறது என்பதை காட்டவே இந்த சங்கநடைக்கவிதையை யாத்து உள்ளேன்(தலைவின் துயரம் கண்டு பொருள் தேடச்சென்ற தலைவனை நோக்கி
சொல்லுவது போல் பாடப்பட்ட தோழியின் கூற்று.)

இலஞ்சி பழனத்தவள்
===================================================ருத்ரா

இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
கடாஅய்ச் செல்லும் இருப்பணைத் தோள!
அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!
தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
அளியள் காண்குவை.விரைதி விரைதி.
குவளையுள் குவளை பல்மழை தூஉய்
மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
முதிர் தகையன்று அறிதி அறிதி.
பால் இழி தாமரை காமர் புரையா
ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
பாவை கையில் மற்றொரு பாவை
படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.

===============================================


பொழிப்புரை
===================================================ருத்ரா

இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
கடாஅய்ச் செல்லும் இரும்பணைத் தோள!
அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!


உறுதி மிக்க மூங்கில் போன்ற தோள் வலிமை மிக்க தலைவனே!இலஞ்சி எனும் அடர்நிழல் தவளும் நீர்ச்சுனைகள் நிறைந்த ஊரின்
கனிச்சோலைகள் போல் கண்ணேதிரே எழிற்கோலம் காட்டும் உன் காதலியின் முகம் தோன்றும்படி கல்லும் முள்ளும் கலந்து வெம்மை
மிகுந்த காட்டுவழியில் கடந்து  செல்கிறாய்.கடலின் அலைகள் அரித்து அரித்து மண்திட்டாய் நிற்கும் கரை கூட கரைந்து போய்விடுகிறது. நிலப்பகுதியை பறித்துக்கொள்ளும் கடல் சங்குகளின் ஒரு வித ஒலியோடு ஆர்ப்பரிக்கிறது.அது போல் உன் நெஞ்சம் தலைவியை நினைத்து
 வேதனை உறுகிறது.
தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
அளியள் காண்குவை.விரைதி விரைதி.
திணையின் திரிதரு திரள்நெரி மயக்கமனைய‌
நின் ஆறலைக்கண்ணும் ஆழி சூழ்ந்தது.

கடல் அலைகளின் சீற்றம் மிகக்கடுமையானது.தொள் என்றால் குழி பறி என்று பொருள்.அப்படி குழி பறித்த அலைகளே தொண்டி எனும் பட்டினத்தை
உருவாக்கும்.தொண்டி எனும் ஊர் அப்படி உருவானதே அங்கே அந்த அலைகள் இன்னும் சில விளையாடல்களைச் செய்கின்றன.ஆழத்திலிருந்து மிகக்குழைவான வண்டல் மண்ணை தெள்ளியெடுத்து கரையில் குவிக்கிறது.தலைவி அதனோடு சிறுபிள்ளை போல் பொம்மை செய்து விளையாடுகிறாள்.ஆனால் அதே அலைகள் சீற்றத்தோடு அப்பொம்மையை பறித்துக்கொண்டு போய்விடுகிறது.மண்திரை அதாவது கரையை மண்கலந்து நீராட்டும் அலைகள் இப்படி வெறியோடு விளையாடுவது கண்டு தலைவி அச்சமுற்று அழுது கலங்குகிறாள்.அவள் பொம்மை அழிந்துபோனது பொறுக்காமல் அழுகிறாள்.இங்கே அது வெறும் பொம்மை அல்ல.உன்னை உன் நினைவைக் கொண்டு புனைந்த வடிவு அது.எனவே
விரைவில் வந்து அவளை தேற்று.கொடிய பாலையின் வழித்தடங்களில் அலையும் உனக்கு இவளது கடற்கரை விளையாட்டு ஒரு திணை மயக்கம்
திரண்டு நெரிக்கும் துன்பத்தை கொடுக்கிறது.


குவளையுள் குவளை பல்மழை தூஉய்
மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
முதிர் தகையன்று அறிதி அறிதி.
பால் இழி தாமரை காமர் புரையா
ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
பாவை கையில் மற்றொரு பாவை
படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.


அவள் அழுகையில் கண்ணுக்குள் கண் பூப்பது போல் குவளைக்குள் குவளைகள் குவிந்து அடர்மழையை கண்ணீராய் பொழிகிறது. இன்னும் காதலின் முதிர்ச்சி பெறாமல் மடம் எனும் சிறு பிள்ளைத்தனம் மட்டுமே அந்த வெள்ளைமனத்தில் பொங்கும் வெண் கண்ணீரில் அவள் மூழ்குகின்றாள்.ஐது எனும் மென்மை படர்ந்த அழகிய‌ முன்னங்கைகளை உடைய அவள் வெட்கமுறுவது ஒரு ஒப்பற்ற எழில் மிகு  காட்சி ஆகும்.பால் வழியும் தாமரை முகம் அவளது முகம்.ஆனாலும் காமம் புகாத அந்த பிஞ்சுக்காதலில் ஒளி சுடரும் நெற்றியில் கூர்ந்து  சிந்திப்பதால் ஏற்படும் சுருக்கங்கள் ஏதுமில்லை.
இருப்பினும் அவள் ஒரு சிறுமி போல் தான் இருக்கிறாள்.தெரிந்து கொள்.ஒரு மரப்பாய்ச்சியின் கையில் இன்னொரு மரப்பாய்ச்சி போல் இருக்கிறாள்.
அந்த மண் பொம்மை கரைந்ததற்கு அழுதுகொண்டே இருக்கும் அவளை விரைவாய் வந்து தேற்று.பொம்மைகளோடு ஒன்றிப்போனாலும் இவள்
பொம்மை அல்ல.அதுவும் பஞ்சாரை எனும் கோரைப்புல்லைக்கொண்டு கூந்தல் முடித்த பொம்மைப்பெண் அல்ல‌

=========================================================ருத்ரா

கண்களை கழற்றி எறி

http://www.msn.com/en-us/video/wonder/see-hubbles-spectacular-new-view-of-galaxies-far-far-away/vi-BBAMA5x?ocid=spartanntp


கண்களை கழற்றி எறி
===============================================ருத்ரா


பல ஆயிரம் ஆண்டுகளாக படித்த சொற்களையே வாந்தி எடுத்து சாதி சமய வக்கிரங்கங்களில் வதை பட்டுக்கொண்டிருக்கும் நமக்கு மேலை நாட்டினரின் அறிவு தாகம் பற்றிய அறிவு தாக்கம் பற்றி எந்தக்கவலையும்
இல்லை. கிரேக்க விஞ்ஞானிகளிலிருந்து கலிலியோ வரை அறிஞர்கள் பிரபஞ்சத்தை எட்டிப்பார்க்க பயன்படுத்திய "தொலைநோக்கி " எனும் உருப்பெருக்கி கண்ணாடிகள் வழியே பல அரிய உண்மைகளைக்கண்டு பிடித்தனர்.விண்வெளியை தம் விளையாட்டு மைதானம் ஆக்கிய இன்றைய விஞ்ஞானிகள் தம் அறிவு துழாவும் "கண்களையே"அந்த வெளியில் கழற்றி எறிந்ததைப்போல் "ஒரு ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கியை"உலவ
விட்டிருக்கின்றனர். அதுவே "ஹப்பிள் டெலஸ்க்கோப்" ஆகும்.அது "ஏபல் 370"
எனும் விண்ஒளி மண்டலங்களின் (கேலக்சிஸ்) விண் திரட்சியை (க்ளஸ்டர் )
"கண்டு "படங்கள் அனுப்பியதை "நாசா" நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

தமிழ் இளைஞர்கள் "தங்கள் கண்ணோட்டங்களை மாற்றியாக வேண்டும்.
உலகமே வியக்கும் வண்ணம் "கணிணிப்பொறியாளர்கள்" நம் தமிழ் நாட்டில் பெருகி வருகிறார்கள்.எனவே தமிழ் இளைஞர்கள் இன்னும் இந்த விண்வெளி விஞ்ஞானத்தில் இவர்கள்  சாதனைகள் புரிய வேண்டும். ஏற்கனவே தமிழ் விண்வெளி விஞ்ஞானிகள் நிறைய பேர் அமெரிக்கா போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணி புரிகிறார்கள் .விஞ்ஞானம் எனும் அறிவின் வலிமையே நம் தமிழின் வலிமை.
சினிமாவை இலக்கியமாக சமுதாயக்கண்ணாடியாக முகம் பார்த்துக்கொள்வதில் தவறு இல்லை.குறிப்பிட்ட கதாநாயக மோகத்தாலும்
குத்தாட்ட வெத்தாட்ட அசட்டுத்தனங்களாலும் நம் பயணத்தின் மைக்கற்களையே இழந்து போகிறோம்.திசைகள் தொலைத்து தவிக்கின்றோம்.நம் தமிழ் மொழியும் நமக்கு அந்நியமாகிப் போகிறது.
நம் கண்களை அந்த விண்வெளி நோக்கி வீசி எறிவோம்.ஆம் தொலைநோக்கிகள் வழியாக!.நம் பார்வை நம்மை அகலப்படுத்தும்.புதிய சிகரங்களை அடையச் செய்யும்.https://www.bing.com/search?q=hubble+telescope&filters=ufn%3a%22hubble+telescope%22+sid%3a%22a9092a91-1a01-1008-7b11-8152eeec5cf6%22&form=EDGTCT&qs=MB&cvid=69bb32836dd3411cb99f11192d896b67&pq=hubble+telescope&cc=US&setlang=en-US
===============================================================


வெள்ளி, 5 மே, 2017

நகைச்சுவை (20)

நகைச்சுவை (20)
==========================================ருத்ரா

"தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்"

"அப்புறம் என்னண்ணே செய்யும்?"

"பயப்படாதே! இந்த ஊறுகாயை நக்கிக்கோ!"

"அப்புறம் அதே இடத்திலே தர்மம் மீண்டும் ஊறுகாயை நக்கும்"

"டாஸ்மாக் தர்மம் அங்கேயே மறுபடியும் வந்துரும்னு சொல்றீங்க"

(ரெண்டு குடிமக்களின் பகவத் கீதை உரையாடல்கள்)

=================================================================

சூ மந்திரக்காளி

சூ மந்திரக்காளி !
==================================ருத்ரா

சூ மந்திரக்காளி!
இந்திய தேசப்படத்தில்
தமிழ் நாட்டைக்காணோம்.
உழவர்கள்
மண்ணுக்குள் புதைந்து போயினர்.
உழவு எனும்
மனிதனின் உந்து சக்தி
சின்னாபின்னமாகிப்போனது.
ஆட்சி எந்திரம் எனும்
பணம் பிழியும் ஆலைச்சக்கையில்
நம் அகநானூம் புறநானூறும்
வெறும் குப்பையானது.
தமிழ் எனும் மொழிக்குள்
ஊறும்
வீரம் மாண்பு விழுமம் எல்லாம்
டெண்டருக்குள்
குவாரி மணற் காடுகளுக்குள்
மர்மக்கதை நாற்றங்களுக்குள்
புதைந்தே போயின.
மத்தியில் கூட்டாட்சி
மாநிலத்தில் சுயாட்சி
என்ற சொல்லின் தோரணங்களில் எல்லாம்
மத்தியில் குவிந்த
வெறி பிடித்த... ஏதோ ஒன்றின்
ரத்தம் சொட்டிக்கொண்டே இருக்கிறது.
ஒரு விசாரணை போதும்.
கல்லெறிய.
பதவியும் ஊழலும் மலிந்த‌
காக்கைக்கூட்டங்கள் சிதற.
இவர்கள்
நெஞ்சை நிமிர்த்தி வலம் வந்தபோதும்
முதுகு சுரண்டும்
அந்த சவுக்கு நுனிகளில்
பாரதி தாசனின் அந்த‌
"சங்கே முழங்கு" கூட
மழுங்கிப்போய் ஒலிக்கிறது.
தமிழின் தொல்காப்பியப்பூங்கா
ஏதோ ஒரு சுடுகாட்டுப்புகைமூட்டத்தில்
மறைந்து போகும்
ஊமைவலிகள் ஊளையிடும்
தேசமா இந்த தமிழின் தேசம்?
கனக விசயர்களுக்காக‌
"மண்வெட்டி கூலி தின்னலாச்சே! நம்
வாள்வலியும் தோள்வலியும் போச்சே!"
ஓட்டளித்து பெருமை காக்கும்
நம் வலிமை எல்லாம் "நோட்டுக்கு"
ஓட்டழிக்கும் சிறுமையாகிப் போச்சே!
திராவிடம் என்றதோர் சிங்க சீற்றம்
கூவத்தில் மூழ்கவோ கூச்சல் இட்டார்.
குழுக்கள் ஆனதால்
புழுக்கள் ஆனார்.
புகைப்படங்கள் புழுதி பறக்க
கார்ப்பரேட் விளம்பர ஊடகங்கள்
சல்லடை போட
தமிழன்
தன்னையே உடைத்துக்கொண்டான்
சுக்கு நூறாய்.
இந்திக்காரன் போடும்
அம்புப்படுக்கையில் போய்விழ
போட்டிகள் போடுகின்றான்.
அந்த அடிமைப் பதவிகளின்
அடியில் போய் விழுகின்றான்.
கீழடியில் தமிழ்ச்சூரியன்
உதிக்காமல் உறைந்து போகும்
சூழ்ச்சிகள் புரிகின்றார்கள்!
இன்னும்
கீழே கிடக்கின்றான் ..தமிழன்
கீழே கிடக்கின்றான்.
ஜிகினாத்தலைவர்கள் இங்கே
சினிமாக்கள் காட்டுகின்றார்.
உறக்கம் கலையாத தமிழா நீ
உறக்கம் கலைவதெப்போ?
குடி முழுகி போவதும் தெரியாமலேயே
குடமுழக்கு மந்திரங்களில் நீ
கும்மாளம்போட லாமோ?
மழித்தலும் நீட்டலும் வேண்டாம்
என்றானே!..
இந்த  தாடி சாமியார்களா உனக்கு
செங்கோல்  ஏந்துவது?
தமிழ் வரலாற்றை நீ தொலைக்கலாகுமா?
சந்திக்க வேண்டிய திருப்பு முனை
உனக்கு இது !
சிந்திக்க வேண்டிய நெருப்பு முனையும்
உனக்கு இதுவே தான்!
தமிழனாக இரு!
தமிழனாக எழு !
தமிழே உன் ஒளி!
தமிழனே விழி !

=============================================================தியானம் என்பது....
தியானம் என்பது....
==================================================ருத்ரா


தியானம் என்பது
மூச்சுகளில் தக்கிளி நூற்றல்.
காற்றை
சோறு சமைத்து 
குழம்பு தாளித்து
சாப்பிடுதல்.
ஆக்ஸிஜனின் "வேலன்ஸி-பாண்ட்"
மோல்யூக்யூலர் ஸ்ட்ரக்ச்சர் என்று
வேண்டுமானால்
நுறையீரலுக்குள் புகுந்து
பாடம் எடுக்கலாம்.
பாடம் படிக்கலாம்.
உங்களை
மயிரிழையாக்கி
உங்கள் மூக்கின் வழியே
சுருட்டி நுழைத்துப்பாருங்கள்.
உங்கள் நெருடல்கள்
அங்கே
ஆயிரம் மலைகளின்
பனிக்குடம் உடைக்கும்.
சுகமாய் மரணம்.
சுகமாய் ஜனனம்.
மீண்டும் மீண்டும்
வேதங்கள்
எச்சில் பட்டு
புழுதின்று
உங்களுக்குள்
தகனம் ஆகி
சாம்பல் மேடு தட்டும்.
காதுப்பறைகளுக்குள்
காண்டா மணி ஒலிகள்
நார் நாராய் உரிந்து போகும்.
சங்கரர் போல்
எந்த ராஜாவாவது செத்துப்போனால்
அவர் கூட்டுக்குள் நுழைந்து
ராணிக்குள்ளும் அங்குலம் அங்குலமாக‌
சவ்வூடு பரவல் ஆகி
சௌந்தர லஹிரியாய் கசியும்.
இதற்கு முற்றுப்புள்ளி இல்லை.
மான் தோல் விரித்து
அந்த புள்ளிகளில்
புலியின் வரிகளை 
உயிர்ப்பித்துக் கொல்லுதல்
ஒரு இனிய பயிற்சி.
அனிமல் ப்ளேனட்டின்
கோரைப்பல் கிழிப்பும்
ரத்த சதை விளாறுகளும்
காமிராலென்ஸ் வழியே
டாலர் காய்ச்சி மரங்களாய்
கிளை விடுவதைப்போல‌
இந்த‌
நுரையீரல் முறுக்கல்களும்
நரம்பு சொடுக்கல்களும்
"ஃபௌண்டேஷன்" ஆகி
பண மழை கொட்டும்.
நீண்டு வளரும் தாடியில்
பல்முளைத்து
லட்சம் ஸ்லோகங்களை
பிய்த்து பிய்த்து தின்பதில்
ஒலிவிழுதுகள்
இருள் விழுதுகளோடு
பின்னியிருக்கும்
ஆரண்ய மூட்டங்களே
தியானம் என்பது.
தியானம் முடியவில்லை.
வரட்டிகள் மூடிக்கொண்டபோதும்
அரைவேக்காட்டின் ஆத்மச்சதை ருசி தேடி
ஆந்தைகளும் வல்லூறுகளும்
வந்து சேருகின்றன.
தியானம் இன்னும் முடியவில்லை.
நாபிக்கமலமும் தொப்பூள் கொடியும்
சடைக்குள்ளிருந்து பீய்ச்சப்படும்
கங்கைப் பிரவாகங்களும்
தியானத்தின்
மூட்டு தெறித்த நரம்புகளில்
மின்னல் உமிழ்கின்றன
"க்ராஃபிக்ஸ்"களில்!
பாம்பு படுக்கையை
"மார்ஃப்" செய்து
மல்லாந்து கிடந்தே
நிமிர்ந்து முதுகுத்தண்டை
விறைத்துக்கொண்டிருப்பதும்
தியானமே...
கீழ்ப்பாக்கத்தின் ஸ்பெஷல் வார்டுகளில்
பிரம்மசூத்திரம்
கழுவி ஊற்றப்படுவது
தியான வெள்ளம்.
தியானமே இங்கு மெர்ஸல் ஆவதே
தியானம்.
இன்னும் தியானம் என்பது.....
நியூரான் முடிச்சுகளில்
சினாப்டிக் ஜங்கஷன்களின்
பர்கிஞ்ஜே செல்கள்
பரங்கிக்காய்களாய் உடைக்கப்பட்டு
கூழாகின்றன...
தியானம் என்பது யாதெனில்...
"சட்"....
யார் 
என் உதடுகளை  ஊசி கொண்டு
தைப்பது?....

====================================================

வியாழன், 4 மே, 2017

நகைச்சுவை (19)

நகைச்சுவை (19)
===========================================ருத்ரா

செந்தில்

அண்ணே! தமிழ்நாடுங்கறதுக்குள்ளே கூட ஒரு தனி நாடுப்பத்தி
ஒரே களேபரமாயிருக்குதே! ஏண்ணே!

கவுண்டமணி

என்னடா ஞானப்பழம்! என்ன சொல்றே!

செந்தில்

அதுதாண்ணே! கொடநாடு..அது எங்கே இருக்குண்ணே?

கவுண்டமணி

நில்றா! அடேய். நில்றா! ஓம் மண்டையை ஒடைக்காம விடமாட்டேன்.
(செந்தில் ஓடி மறைகிறார்)

=========================================================

திங்கள், 1 மே, 2017

பாட்டாளிகள் தினம்

பாட்டாளிகள் தினம்
===========================================ருத்ரா

பாழடைந்த மானுட வீட்டின்
சன்னல் திறந்த நாள் இன்று.
அடைத்த வீட்டின்
அழுக்கு வீசும் புழுக்கத்தை
அகற்றும்
சில்லென்ற காற்று வீசிய நாள்.
எட்டு மணி நேரம் வேண்டி
தியாகப்போர் செய்த‌
அந்த தொழிலாளார்கள்
அந்த சாளரம் திறந்த போதுதான்
இந்த உழைக்கும் உலகத்தின்
புதிய வானத்தின்
புதிய காற்று வீசக்கண்டார்கள்.
பத்தம்பசலி பொருளாதாரகோட்பாடுகளை
அந்த பிரிட்டிஷ் காரன் குகை எனும்
அந்த நூலகத்துள்ளிருந்தே
உடைத்து நொறுக்கி
சமுதாய பொருளியல் சிறகுகளைவீசி
மானிட சம தத்துவத்தின்
மின்னற்பறவையாய் மிளிர்ந்து வந்த
பேரறிஞன் கார்ல்மார்க்ஸ்!
"தாஸ் கேபிடல்" எனும் அவனது நூல்
எல்லாவற்றிற்கும் தீர்வு வைத்திருக்கிறது.
ஆதிக்க கூப்பாடு போடும்
அடிமை சாசன வேதங்களையெல்லாம்
வேரோடி கிள்ளிஎறிகிறது
அதன் பக்கங்கள்!
மனித உழைப்பும் சிந்தனையும்
சமுதாய பரிணாமங்களில் ஓட்டிய‌
தேரோட்டப்பதிவுகளே
இங்கு வரலாறு எனப்படும்.
மனித‌ வேர்வையும் ரத்தமும்
சாந்துபூசிய வடிவங்களே
இங்கு வரலாற்று நிகழ்வுகள் ஆகும்!
"பணம்"போடும் உரிமை என்னிடம்
இருப்பதால்
நீ "பிணம்"ஆகும் வரை
உன்னையும்
உன் மண்ணையும்
நீரையும் காற்றையும்   சுரண்ட‌
எனக்கு முழு சுதந்திரம் உண்டு
என்று
சுரண்டப்படுபவனின்
மொத்த சுதந்திரத்தையும் விழுங்கும்
ஒரு "பகாசுரப் பொருளாதாரத்தையே"
உலகத்தின் "வளர்ச்சிப்பொருளாதாரம்"
என்று பகடை உருட்டுகிறார்கள்.
இவர்கள் இன்று கும்பல் சேர்த்து
கும்மாளம் போடுவதுதான்
ஆட்சியியல் என்று ஆகிப்போனது.
அந்த அநியாயத்துக்கு
ஆணி அடிக்கும் வரை
ஓயாத காற்று
இந்த வேர்வையின் உப்புக்கரிக்கும் காற்று.
உப்பரிகை வர்க்கம் வெல வெலத்துப்போக‌
உழைக்கும் மக்களின் ஆட்சியே
உன்னத ஆட்சி.
அதன் சித்தாந்தம் எங்கோ
நிழல் மறைத்துக்கிடந்தாலும்
சாதி மத வெறிகள் அற்ற‌
நிறவெறிக்கொடுமைகள் அற்ற‌
அந்த‌
தூய வெள்ளி விடியலுக்கு
உருக்கி வார்த்து அடிக்கப்படும்
அந்த சம்மட்டி ஓசைகள்
உங்களுக்கு
இந்த விளம்பரக்குத்தாட்டங்களையும்
மீறி கேட்கின்றனவா?
அது போதும்!
மற்ற ஜிகினாக்கூச்சல்கள்
சீக்கிரமே தேய்ந்து போகும்.
என் இனிய தோழனே
உனக்கு என் வாழ்த்துக்கள்!

======================================