திங்கள், 31 அக்டோபர், 2022

என்ன செய்யப்போகிறாய் தமிழா?

 என்ன செய்யப்போகிறாய் தமிழா?

______________________________________

செங்கீரன்



வரலாறு என்று

சொல்லி சொல்லி 

உன் எழுத்துக்களை 

அழகு பார்த்துக்கொண்டிருக்கும் 

தமிழனே!

ஈக்கள் மொய்த்துக்கொண்டிருப்பது 

போல் தான்

அந்த எழுத்துக்கள் கொத்து கொத்தாக‌

சிதறிக்கிடக்கின்றன.

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்

உன் அகமும் புறமும் காட்டுகின்றன

என்று 

அவை பல்கலைக்கழகக் கட்டிடங்களின்

நூலாம்படைத்தொட்டில்களில்

உறங்கிக்கொண்டிருக்கின்றன.

அந்த சொற்கள் எல்லாம் 

மின்னல் பூசி 

சுடர் தெறித்துக்கொண்டிருப்பதை

என்றாவது

உணர்ந்து ஓர்மை கொண்டிருக்கிறாயா?

உன் மீது 

சமஸ்கிருதச்சப்பாத்திக்கள்ளிகள்

மூடிக்கிடப்பதையாவது

கண்டு கொண்டாயா?

குழலினிது யாழினிது என்ப தம் மக்கள்

மழலைச்சொல் கேளாதவர்

என்றானே வள்ளுவன்.

உன் குழந்தைகளை 

ஈன்ற உடனேயே ஏதோ 

ஓலைப்பாயில் வைத்து சுற்றுவதைப்பொல்

வடமொழி கொண்டு தானே

போர்த்திக்கொண்டிருக்கிறாய்.

நாளை உன் பேரனுக்கு பேரன்

தமிழ்ப்பெயர் இழந்து

"ஆரியக்குஞ்சு"களின் பெயர் பொறித்து

அல்லவா வலம் வருவான்.

அவன் என்ன 

ஆரியப்படை கடந்த பாண்டியன் 

நெடுஞ்செழியனையா

அடையாளம் காட்டப்போகிறான்?

தமிழனை

இன்றே இப்படி வேதமொழிக்குள்

புதைத்து விட்ட பிறகு

"தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா"

என்று நிமிர்ந்து முழங்க

உனக்கு 

தலையும் இல்லை

தமிழ்க்குரலும் இல்லை.

என்ன செய்யப்போகிறாய் தமிழா?



_______________________________________________



ஞாயிறு, 30 அக்டோபர், 2022

இருட்டிலிருந்து தவளைச்சத்தங்கள்.


இருட்டிலிருந்து தவளைச்சத்தங்கள்.

_______________________________________

ருத்ரா



இருட்டு முன் வீடு போய்ச்சேர்.

இந்த இருட்டு உன்னை என்ன செய்யும்

என்று

சொல்லவே முடியாது.

ஏற்கனவே 

அரைப்பார்வை குறைப்பார்வை 

உனக்கு இருந்தால்

இப்போது நீ இந்த உலகப்பிடிப்பிலிருந்து

நழுவி ஒரு

படுகுழியில் விழுந்து விட்டதாய்

கிடத்தப்படுவாய்.

ராமாவைக்கூப்பிடு.

கிருஷ்ணாவைக்கூப்பிடு.

அவர்கள்

உன் கர்மா அக்கௌண்டை

சரி பார் என்பார்கள்.

பிறவிச்சங்கிலி உனக்குத்தேவையா

என்பார்கள்.

அறுத்துவிட்டு வா

என்பார்கள்.

இருட்டே ஒரு வெளிச்சத்தை

பிரசவிக்கும் ஆச்சரியம் தானே

இந்த மனிதம்.

மனிதமாவது?மண்ணாங்கட்டியாவது?

மோட்ச ராஜ்யம் 

வைகுண்ட ப்ராப்தி

இதெல்லாம் வேண்டாமா?

இன்னும் என்னவெல்லாமொ

ஸ்லோகங்கள் உமிழப்படுகின்றன.

இருட்டு விரட்டுகிறது.

வெளிச்சத்தை தேடிக்கொள் என்று.

கடவுள் எங்கள் எச்சில் மந்திரங்களில்

தான் ஜனிக்கிறார்  

என்று வைதிகம் கொக்கரிக்கிறது.

மறைக்கப்பட்ட சொற்களின்

மங்கலான ஒலிகள் மட்டுமே

உங்களுக்கு கிடைக்கும்.

இருட்டில் மறைந்து கொண்டா

பகவானுக்கு 

இந்த மந்த ஹாசம்?

உங்களுக்கு இந்த இருட்டு

பழகிப்போய் விடுகிறது.

இப்போது கண்கள் கூட 

உங்களுக்கு தேவையில்லை.

ஏன்

சிந்தனை எண்ணம் என்பவை கூட‌

உங்களுக்கு கெட்ட வார்த்தைகள்.

இந்த இருட்டு

அவர்கள் உங்கள் மீது பூசிய‌

வர்ணங்களைக் கூட காட்டுவதில்லை.

உங்களை 

அவர்ணத்தார் என்று

இந்த மை இருட்டுக்குள் 

வீழ்த்தியிருக்கிறார்கள்.

வரலாற்றை அவர்களிடம் தொலைத்துவிட்டு

வரலாற்றுக்குருடு ஆகிப்போன‌

உங்களுக்கு 

கூழ்ப்பூச்சிகளான இந்த மரவட்டைகள் கூட‌

அவதாரங்கள் தான்.

இருட்டையே கண்கள் ஆக்கி

இந்த உலகை நீங்கள் படித்து

தட்டுத்தடுமாறி எழுந்த போதும் கூட‌

சூத்திரன் என்ற‌

கனமான பாறாங்கல்லை

உங்கள் மீது ஏற்றி 

அழுத்திக்கொண்டே இருப்பார்கள்.

ஏதோ ஒரு

வேதப்பிரகாசத்தில் இருப்பதாக‌

தம்மைத்தாமே 

அவர்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் 

மனிதம் மறுத்த ஒரு 

பேய் இருட்டில் 

புரண்டு கொண்டிருக்கிறார்கள்.


அதை எப்படி

கண்டு பிடித்தீர்கள்?


வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்த‌

இங்கிலீஷை அதன் மீது 

ஒற்றித்தான் கண்டு பிடித்தோம்.


"அசதோ மாம் சத் கமய‌

தமசோ மாம் ஜ்யோதிர் கமய"


பொய்யர்களான நாங்கள் 

மெய்யர்கள் ஆகவேண்டும்.

இருண்டு கிடப்பவர்களான‌

நாங்கள் வெளிச்சம் பெறவேண்டும்.


இத்தனை ஆயிரம் ஆண்டுகளாய்

இருட்டில் கிடப்பவர்கள் அவர்களே.

பொய்களை புளுகுபவர்களும் அவர்களே.

மற்றவர்களான சூத்திரர்களுக்கு எல்லாம்

இது சொல்லப்பட‌ வில்லை 

என்று இரைச்சல் இட்டுக்கொண்டிருந்தவர்கள்

அவர்கள் தானே.


______________________________________________________________



















இருட்டின் புத்திரர்கள்.

 இருட்டின் புத்திரர்கள்.

________________________________________

ருத்ரா



இருட்டு முன் வீடு போய்ச்சேர்.

இந்த இருட்டு உன்னை என்ன செய்யும்

என்று

சொல்லவே முடியாது.

ஏற்கனவே 

அரைப்பார்வை குறைப்பார்வை 

உனக்கு இருந்தால்

இப்போது நீ இந்த உலகப்பிடிப்பிலிருந்து

நழுவி ஒரு

படுகுழியில் விழுந்து விட்டதாய்

கிடத்தப்படுவாய்.

ராமாவைக்கூப்பிடு.

கிருஷ்ணாவைக்கூப்பிடு.

அவர்கள்

உன் கர்மா அக்கௌண்டை

சரி பார் என்பார்கள்.

பிறவிச்சங்கிலி உனக்குத்தேவையா

என்பார்கள்.

அறுத்துவிட்டு வா

என்பார்கள்.

இருட்டே ஒரு வெளிச்சத்தை

பிரசவிக்கும் ஆச்சரியம் தானே

இந்த மனிதம்.

மனிதமாவது?மண்ணாங்கட்டியாவது?

மோட்ச ராஜ்யம் 

வைகுண்ட ப்ராப்தி

இதெல்லாம் வேண்டாமா?

இன்னும் என்னவெல்லாமொ

ஸ்லோகங்கள் உமிழப்படுகின்றன.

இருட்டு விரட்டுகிறது.

வெளிச்சத்தை தேடிக்கொள் என்று.

ஆனால் 

கடவுள் எங்கள் எச்சில் மந்திரங்களில்

தான் ஜனிக்கிறார் 

என்பது தானே வைதிகம்.

மறைக்கப்பட்ட சொற்களின்

மங்கலான ஒலிகள் மட்டுமே

உங்களுக்கு கிடைக்கும்.

இருட்டில் மறைந்து கொண்டா

பகவானுக்கு 

இந்த மந்த ஹாசம்?

உங்களுக்கு இந்த இருட்டு

பழகிப்போய் விடுகிறது.

இப்போது கண்கள் கூட 

உங்களுக்கு தேவையில்லை.

ஏன்

சிந்தனை எண்ணம் என்பவை கூட‌

உங்களுக்கு கெட்ட வார்த்தைகள்.

இந்த இருட்டு

அவர்கள் உங்கள் மீது பூசிய‌

வர்ணங்களைக் கூட காட்டுவதில்லை.

உங்களை 

அவர்ணத்தார் என்று

இந்த மை இருட்டுக்குள் 

வீழ்த்தியிருக்கிறார்கள்.

வரலாற்றை அவர்களிடம் தொலைத்துவிட்டு

வரலாற்றுக்குருடு ஆகிப்போன‌

உங்களுக்கு 

கூழ்ப்பூச்சிகளான இந்த மரவட்டைகள் கூட‌

அவதாரங்கள் தான்.

இருட்டையே கண்கள் ஆக்கி

இந்த உலகை நீங்கள் படித்து

தட்டுத்தடுமாறி எழுந்த போதும் கூட‌

சூத்திரன் என்ற‌

கனமான பாறாங்கல்லை

உங்கள் மீது ஏற்றி 

அழுத்திக்கொண்டே இருப்பார்கள்.

ஏதோ ஒரு

வேதப்பிரகாசத்தில் இருப்பதாக‌

தம்மைத்தாமே 

அவர்கள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் 

மனிதம் மறுத்த ஒரு 

பேய் இருட்டில் 

புரண்டு கொண்டிருக்கிறார்கள்.

அதை எப்படி

கண்டு பிடித்தீர்கள்?

வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்த‌

இங்கிலீஷை அதன் மீது 

ஒற்றித்தான் கண்டு பிடித்தோம்.


"அசதோ மாம் சத் கமய‌

தமசோ மாம் ஜ்யோதிர் கமய"


பொய்யர்களான நாங்கள் 

மெய்யர்கள் ஆகவேண்டும்.

இருண்டு கிடப்பவர்களான‌

நாங்கள் வெளிச்சம் பெறவேண்டும்.


இத்தனை ஆயிரம் ஆண்டுகளாய்

இருட்டில் கிடப்பவர்கள் அவர்களே.

பொய்களை புளுகுபவர்களும் அவர்களே.

மற்றவர்களான சூத்திரர்களுக்கு எல்லாம்

இது சொல்லப்பட‌ வில்லை 

என்று இரைச்சல் இட்டுக்கொண்டிருந்தவர்கள்

அவர்கள் தானே.


______________________________________________________________






ஓவியன்

 


ஓவியன்

________________________________

ருத்ரா



உன் மீதே ஒரு ஓவியம் வரை.

உன் உள்ளக்கீறல்களை

தூரிகையாக்கு.

உன் இதயக்குப்பியிலிருந்து

உணர்ச்சிப்பெருக்குகளை

குபீர் குபீர் என்று

பிதுக்கித்தள்ளும் குழம்பினை

வண்ணங்களாக்கு.

இயற்கையோ

மனித முகங்களோ

பெண்மைப்பேரழகின் 

பெருந்தக்க முருகியல் சுழிப்புகளோ

இன்னும்

பட்டாம்பூச்சியின் துடிக்கும் 

சிறகுகளிலேயே

நெளிவுகள் காட்டும் 

திரைகளையோ

வரை..வரை வரை.

உன் தீட்டல்களுக்கு

எந்த சாஸ்திரங்களும்

தீட்டுகள் கற்பிக்க முடியாது.

அவர்கள் கூப்பாடு போடும்

பிரம்மத்தின் பிழம்பு அல்லவா

அந்த தூரிகை மயிர் விளிம்பில்

துளிர்த்து துளிர்த்து வருடுகிறது.

உன் சோகமே 

உன் ஓவியத்தை

சொர்க்கமாக்கும்.

வலிக்கும் நரம்பின் ஆற்றோட்டங்களை

அங்குலம் அங்குலமாய்

அந்த படுதாவில்

கொஞ்சம் படுக்க வை.

அந்த கண்கள் அற்ற கண்களான‌

கனவுப்பிழியல்களின்

கண்ணீர்ப்பளிங்கில் உன்

கதைகள் எழுது.

ஓவியனுக்குள்

கோடி கோடி ஓவியங்கள்

அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

அவன் எண்ணத்தின் அகன்றகூடம்

இதோ ஒரு

மியூசியமாய்

விரிந்து கொண்டே இருக்கிறது.

நுழைவோம் வாருங்கள்.

அனுமதிச்சீட்டு ஏதுமில்லை.

அவன் இன்ப துன்பங்கள்

ஒரு மௌனத்தில் அங்கே 

பகிர்ந்து கொள்ளப்படுவதே

அவனுக்கு

ஒரு பாக்ஸ் ஆபீஸ் வசூல்.


___________________________________

 





ஐக்கூகள்

 ஐக்கூகள்
____________________________________
ருத்ரா


கனமழையா? மித மழையா?
தவளைகளிடம் கேட்டு
சொல்கின்றோம்.


ஒரு வானிலை அறிவிப்பு.
___________________________________1


வானத்தை கிழித்த பின்
காகிதக்குப்பைகளில்
மழை.

பட்டாசுகள்
____________________________________2


கங்கா ஸ்நானம் ஆச்சா?
ஆச்சு. ஆச்சு.
கங்கை தான் குளிக்கவே இல்லை.

ஸ்நானம்
_____________________________________3

"இத்தாலி" நம்மை தடுத்தது.
"இந்தியா " அவரைத் தடுக்கவில்லையே?

"ரிஷி சுனக்"
_______________________________________4

விலைகள் மட்டுமே அடைக்கப்படும் 

இனி "கேஸ்ஸுக்கு"ப்பதில்.


கேஸ் சிலிண்டர்

_______________________________________5


ஒரு பிரதமர் சொல்கிறார்

நான் தீபம் காட்டுகிறேன்.

நீங்கள் மணியாட்டுங்கள்.


பொருளாதாரம்.

_______________________________________6



வெள்ளி, 28 அக்டோபர், 2022

சிரிப்பு வருது! சிரிப்பு வருது!

சிரிப்பு வருது! சிரிப்பு வருது!

________________________________

ருத்ரா


தூசியிலும் தூசி

இந்த நிலவு மறைத்தா

எனக்குத்தீட்டு?

உங்கள் கோவிலுக்கும் பூட்டு?

என் கதவுகளை மூட‌

நீங்கள் யார்?


_____________________________

NASA’s satellite captures ‘spooky smiley face’ on sun after solar eclipse (telanganatoday.com)

PUBLISHED: PUBLISHED DATE - 05:11 PM, FRI - 28 OCTOBER 22
NASA’s satellite captures ‘spooky smiley face’ on sun after solar eclipse
Seen in ultraviolet light, these dark patches on the Sun are known as coronal holes and are regions where fast solar wind gushes out into space,” NASA Sun wrote in the caption of the post.

கரி தான் அது!


கரி தான் அது.

___________________________________________


ருத்ரா




ஒரு வழியாய் இறந்துவிட்டான்


எண்ணெய் தேய்த்து குளித்து


கொண்டாடுவோம்.


புத்தாடையுடன் பட்டாசுகளுடன்.


இறந்தது யார்?


நரகாசுரனா?


தீர்த்தங்கரரா?


நெடுஞ்சாலைகளும்


கடைத்தெருக்களும்


பிதுங்கி நசுங்கி வழிய‌


பயணம் தான்.


அதில் நசுங்கிப்போவது


யார் அல்லது எது?


தமிழா! தமிழா!


அது நீயே தான்.


உன் வரலாறு தான்.


உன் தமிழ் இனம் தான்.


வராக அவதாரத்து திருமாலும் பூமாதேவியும் 


திருமணம் புரிந்ததில்


ஒரு மண்ணின் மனிதன் தானே


பிறந்திருக்க முடியும்.


வராகமாய் பூமியைக்காத்து உழுத‌


ஒரு உழவன் தான் பிறந்திருக்க முடியும்.


கடவுளே


அப்படி மண்ணின் மைந்தனாயும்


உழவச்செல்வனாயும் 


பிறந்தவன் எப்படி அசுரன் ஆனான்?


கடவுள் அசுரன் ஆகித்தான்


ஆரியன் அல்லாத திராவிடனை 


வதம் செய்ய வேண்டும்.


ஓநாய்கள்


ஓடையில் மேல் திசையில் இருந்து


தண்ணீரைக்கலக்கியதாய்


ஆட்டுக்குட்டிகள் மேல் பாய்ந்தது போல்


ஒரு புளுகுக்கதை புராணமே


இங்கு வதம் செய்ய வந்திருக்கிறது.


தமிழர்கள் தங்களையே வதம் செய்யும் 


அவலங்களின் திரியைப்பற்றவைக்கும்


இந்த உற்சாகங்களில் 


தீபாவளி களை கட்டுகிறது.


தீபாவளிக்களையை


என்றைக்கு பறித்து எறியப்போகிறோம்?


பிதாவே!


இவர்களை மன்னியும்.


இவர்கள் உற்சாகமாயிருக்கிறார்கள்.


எப்படியேனும் உற்சாகமாக‌ இருக்கிறார்களே.


அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!


அந்த ஐயாயிரம் வாலாக்களை அவர்கள்


வெடித்து மகிழட்டும்.


மிஞ்சுவது


நரகாசுரன் கரி அல்ல!


வரும் நூற்றாண்டுகளுக்கு நம்


முகத்தில் பூசிக்கொள்ளும் 


கரி தான் அது!


______________________________________________

மரத்தில் மறைந்தது மாமதயானை?

 Space storm may trigger ‘internet apocalypse’ within next decade (msn.com)

By Mark Waghorn via SWNS

An internet apocalypse could be looming. (SWNS)
An internet apocalypse could be looming. (SWNS)© Provided by talker

கல்லிலே சிரித்து நிற்பான்

கல்லிலே சிரித்து நிற்பான்

_______________________________________________

ருத்ரா



கல்லிலே சிரித்து நிற்பான்

பளிங்கிலும் புன்னகை தான்.

வெறும் வெளியிலும் 

பெரியதோர் வெறுமையைக்

காட்டி நிற்பான்.

பூதமும் அவன் தான்.

புழுவும் அவன் தான்.

இருப்பது என்று காட்டியே

இல்லை என்று கைவிரிப்பான்.

இதுவும் அதுவென்பான் 

அதுவும் இதுவென்பான்.

இலக்கணங்கள் உடைத்ததிலே

இலக்கியம் ஆகிடுவான்.

எங்கே இருந்தால் என்ன?

எப்படி இருந்தால் என்ன?

வேண்டும் என்றால் தொழுது காட்டு.

வேண்டாம் என்றால் வெறுங்கை காட்டு.

மறுத்துப்பேசுவது  பாவம் அல்ல.

ஒப்புக்கொள்வது புண்ணியமும் அல்ல.

கண்ணாடி முன்னால் உன்னைப்பார்.

உனக்கு உன்னை  தெரியாமல் போனால்

உள்ளப்பிரளயம் நீ புகுந்து விட்டாய்.

உன் மீசையும் முறுக்கும் அதில் தெரிந்தால்

உனக்கு உள்ளச்சுவடு எதுவுமில்லை.

உன் உள்ளம் முறுக்கிப்பிழிகின்ற‌

ட்ரெட் மில் கூடமே உன் கோயில்.

பயிற்சி செய்து கொண்டே இரு.

அடுத்தவன் வலியுடன் தன்னையும் சேர்த்து

தைத்துக்கொள்பவனே கடவுள் இங்கு!

அவ்வலி போக்குதல் அறப்பணியாம்.

அடுத்தவன் அடுத்தவன் தான் அவனை

அழிப்பதே  முதல் வேலை என்பான்

இரக்கம் அற்ற அரக்கன் ஆவான்.

அவனை வதம் செய்ய இங்கு

ஆயிரம் தீபாவளிகள் போதாது.

நத்தைப்புழுவாய் நசுங்கியவன் மீதா

சங்கு சக்கரம் மழுவாயுதம்

மூர்க்கம் எல்லாம் காட்டுவது?

சாஸ்திரங்கள் வெறும் மேலுறை தான்.

உள்ளுறை என்பது மானிட ஓர்மை.

உள்ளே இருப்பதை அழியவிட்டு

உண்மை அழிய விடலாமா?

மேலுறை காத்தால் போதுமென்று

உட்பொருளை வெறும் சவமாக்கி

சப்பரங்கள் ஊர்வலம் விடலாமா?

சிந்திப்பீர்! உளம் செதுக்கிடுவீர்!

______________________________________



வியாழன், 27 அக்டோபர், 2022

சிந்து நதியில் ஒரு சித்திரம்

 


சிந்து நதியில் ஒரு சித்திரம்

_________________________________________

ருத்ரா


சிந்து நதியின் மிசை நிலவினிலே

சித்திரம் ஒன்று தெரியக்கண்டேன்.

நிழலாய் நிழலாய் இருந்த நிலா

நிஜமாய் நிஜமாய் நம் தோட்டத்து

மின் மினி பூச்சியாய் வந்ததுவே.

ஏவுகணைகள் ஏவிடும் அறிவில்

தூவிவிட்டோம் நம் கனவுகளை அங்கே.

நாளை விடுவோம் நாமும் அங்கு

சிறப்பு விண்வெளி பேருந்து

தீபாவளிக்கும் போய்வரலாம்.

சின்ன சின்ன பட்டாசும் அங்கு

நிலவுக்கு வெடித்துக்காட்டிடலாம்.

நம் மத்தாப்பு கண்டு அது சிரிக்கும்.

என்றும் இனிமேல் பௌர்ணமி தான் 

இருட்டு அமாவாசைகள் இனி இல்லை.


________________________________________________


வாழ்க வாழ்க இந்தியா!

 வாழ்க வாழ்க இந்தியா!

____________________________________

ருத்ரா



வாழ்க வாழ்க இந்தியா!

வளம் நிறைந்த இந்தியா!

உலகமெல்லாம் போற்றுகின்ற‌

உயர்தனி நாடு இந்தியா!


முதன் முதலாய் வானம் பார்த்து

வழி தெரிந்த இந்தியா!

ஒளியைக்கண்டு ஒளிந்திடாமல்

ஓங்கி நின்ற இந்தியா!


தத்துவம் என்றால் என்ன என்று

தடங்கள் காட்டிய இந்தியா!

பிறப்பும் இறப்பும் இன்னதென்று

வெளிச்சம் தந்தது இந்தியா!


மனிதனுக்குள் கடவுள் என்றும்

கடவுளுக்குள் மனிதன் என்றும்

உணர்வு பெறுதல் மட்டுமே என‌

உள்ளம் விரித்தது இந்தியா!


உள்ளறிவு சுடர் வீசும் 

உயரம் கண்ட போதிலே ஒரு

ஆழமும் கண்டிடலாம்  என‌

உண்மை கண்டது இந்தியா!


இந்தியாவின் உயர்விளக்கு

கலங்கரை விளக்காகி

உலகம் யாவும் சுடர்ந்திட

உயர்ந்திடும் நம் இந்தியா!


_________________________________________





செவ்வாய், 25 அக்டோபர், 2022

வாழ்க!வாழ்க!! நீடூழி வாழ்க!



2 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வானம் இன் படமாக இருக்கக்கூடும் 


 ANNE JOSEPHINE RAJESH.


 வாழ்க!வாழ்க!! நீடூழி வாழ்க!

____________________________________



அன்பின் அருமை ஓவியம் இது!

நம்மைச்சூழ்ந்தவர்களின்

கவலை இருட்டுகளை

விரட்டும்

நேயமிக்க 

புன்னகையாளர்கள் இவர்கள்!

அன்பும் நட்பும் 

பின்னிய சமூக வலைக்குள்

இவர்கள் தந்த

பழைய புதிய ஏற்பாடுகளில்

எல்லாம் 

அன்பும் தொண்டுமே

பொன்னெழுத்துக்களாய்

பொறிக்கப்பட்டிருக்கும்.

வாழ்க!வாழ்க!

இவர்கள் நீடூழி வாழ்க!


அன்புடன் 

ருத்ரா இ பரமசிவன்.




தீபாவளி வாழ்த்துக்கள்

 தீபாவளி வாழ்த்துக்கள்

___________________________________________

ருத்ரா


ஒரு வழியாய் இறந்துவிட்டான்

எண்ணெய் தேய்த்து குளித்து

கொண்டாடுவோம்.

புத்தாடையுடன் பட்டாசுகளுடன்.

இறந்தது யார்?

நரகாசுரனா?

தீர்த்தங்கரரா?

நெடுஞ்சாலைகளும்

கடைத்தெருக்களும்

பிதுங்கி நசுங்கி வழிய‌

பயணம் தான்.

அதில் நசுங்கிப்போவது

யார் அல்லது எது?

தமிழா! தமிழா!

அது நீயே தான்.

உன் வரலாறு தான்.

உன் தமிழ் இனம் தான்.

வராக அவதாரத்து திருமாலும் பூமாதேவியும் 

திருமணம் புரிந்ததில்

ஒரு மண்ணின் மனிதன் தானே

பிறந்திருக்க முடியும்.

வராகமாய் பூமியைக்காத்து உழுத‌

ஒரு உழவன் தான் பிறந்திருக்க முடியும்.

கடவுளே

அப்படி மண்ணின் மைந்தனாயும்

உழவச்செல்வனாயும் 

பிறந்தவன் எப்படி அசுரன் ஆனான்?

கடவுள் அசுரன் ஆகித்தான்

ஆரியன் அல்லாத திராவிடனை 

வதம் செய்ய வேண்டும்.

ஓநாய்கள்

ஓடையில் மேல் திசையில் இருந்து

தண்ணீரைக்கலக்கியதாய்

ஆட்டுக்குட்டிகள் மேல் பாய்ந்தது போல்

ஒரு புளுகுக்கதை புராணமே

இங்கு வதம் செய்ய வந்திருக்கிறது.

தமிழர்கள் தங்களையே வதம் செய்யும் 

அவலங்களின் திரியைப்பற்றவைக்கும்

இந்த உற்சாகங்களில் 

தீபாவளி களை கட்டுகிறது.

தீபாவளிக்களையை

என்றைக்கு பறித்து எறியப்போகிறோம்?

பிதாவே!

இவர்களை மன்னியும்.

இவர்கள் உற்சாகமாயிருக்கிறார்கள்.

எப்படியேனும் உற்சாகமாக‌ இருக்கிறார்களே.

அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!


_________________________________________________________





வியாழன், 20 அக்டோபர், 2022

ஆளை விடு சாமி

 ஆளை விடு சாமி

______________________________________

ருத்ரா




"நெஞ்சு பொறுக்குதில்லையே"

இந்த வரிகள் மூலம்

பாரதி நம் நெஞ்சில்

துயரத்தின் 

அந்த காக்காய் முட்களை

பாய்ச்சுகின்றார்.

சாதி மதங்களை 

இன்னும் இன்னும் இவர்கள்

சப்பாத்திக்கள்ளிகளாய் வளர்க்கிறார்கள்.

இறைவன் வகுத்த விதி என்று

இறைவன் வடிவமான மக்களைக்கூட‌

சேற்றில் அமுக்கி வைத்திருக்கிறார்கள்.

திரு அவதாரங்கள் எடுத்த கடவுளர்களே

உங்களை முகமூடிகள் ஆக்கி

உங்கள் கல்லறைகள் மீது அல்லவா

களிப்பு நடனங்கள் ஆடுகின்றார்கள்.

நீங்கள்

மீனாய் தவளையாய் பல்லியாய் பாச்சையாய்

பன்றியாய் பலவிதமாய்

அவதாரம் எடுத்தீர்களே

ஒரு மனிதனாய்

இந்த மாய்மாலங்களை எல்லாம்

சுட்டுப்பொசுக்குகிற‌

செந்தீச்சுடர் ஏந்திய மனிதனாய்

கிளர்ந்து வாருங்கள்.

கடவுள் சொன்னார்.

கடவுளாய் இருப்பது சுலபம்.

கல் தானே நான் கவலை இல்லை.

அவர்களே ஏதாவது புராணங்கள் தொடுத்து

மாலைகளாய் போட்டுக்கொண்டிருப்பார்கள்.

மனிதனாய் அவதாரம் எடுத்தால்

இந்தக்கல்லின் மீது தானே 

நானும் முட்டி முட்டிக்கேட்கவேண்டும்.

கடவுளாய் இருப்பதே எளிது.

நான் நாத்திகனாய் இருப்பதற்கு

இந்த கல்லே போதும்.

ஆளை விடு சாமி!



_________________________________________


செவ்வாய், 18 அக்டோபர், 2022

தமிழுக்கு எப்போதும் தமிழ் என்றே பேர்

தமிழுக்கு எப்போதும் தமிழ் என்றே பேர்

_______________________________________________


 


நம் மொழி

பக்தியா? தமிழா?

பக்தி எனும் செங்கல்லை

உருவி விட்டால்

தமிழ் இல்லை என்று

கதாகாலட்சேபம் செய்துவிட்டு

வந்திருக்கும்

அந்த புலமை பெற்ற தமிழ்ப்பேச்சாளருக்கு

ஒரு கேள்வி?

மேற்கிளையிலிருந்து கொண்டு

அடிக்கிளையை வெட்டும்

அதி மேதாவி அவர்களே.

தமிழ் இல்லாவிட்டால் 

கடவுளே இல்லை.

அப்புறம் 

பக்தி பூஜை தூப தீபம் எல்லாம் ஏது?

அதனால் தான்

சமயக்குரவர்களை

தமிழில் அடியெடுத்துக்கொடுத்து

பாடச்சொல்லியிருக்கிறார்

சிவபெருமான்.

அதே தமிழையும் நக்கீரனையும் 

வைத்து தான்

முதல் நாத்திகக்குரல் எழுப்பியிருக்கிறான்

தமிழன்.

மோசிகீரன் என்றொரு புலவன்

முரசுக்கட்டிலில் படுத்து இருந்ததைக்கண்டு

யாரோ ஒருவனால்

அரசின் இறைமை அவமானப்படுத்தப்பட்டதை 

கண்டு வெகுண்டு

அவரைக் கொல்ல வாளை உருவிய மன்னன்

அவர் தமிழ்ப்புலவர் என்று அறிந்ததும்

கவரி கொண்டு வீசி பணிவிடை

செய்திருக்கிறான்

பக்தி என்றதில் சமஸ்கிருதத்தை

உச்சரித்திருந்தால் 

இந்நேரம் அதுவும் செத்து தான் 

போயிருந்திருக்கும்.

பக்தியிலும் தமிழன் தமிழைத்தான்

பார்த்தான்.

தமிழ் தான் பக்தியை உயிர்ப்பித்து

இருந்திருக்கிறது.

தமிழில் தான் காதலாகிக் கசிந்து

கண்ணீர் மல்கியிருக்கிறான் பக்தன்.

இவன் தமிழில் கண்ணீர் மல்கியதில்

கடவுளின் கற்சிலையும் கண்ணிர் மல்கித்தான்

வேதியனையும் வென்ற‌

"வேடன்"கண்ணப்பனை  நமக்கு 

தரிசனம் காட்டியது.

தமிழிடமிருந்து

நீங்கள் பக்தியை மட்டும் பிரித்துக்காட்டியது

அந்த சிவனுக்கு கேட்டிருந்தால்

அவன் நெற்றிக்கண்ணில் நீங்கள்

பஸ்பமாகி இருப்பீர்கள்.

வாழ்க தமிழ்.

வீழ்க தமிழ்ப்பகை.


______________________________________________

செங்கீரன்


2024

 

2024

______________________________________

ருத்ரா


ஒவ்வொரு பெயர்களாய் சூட்டிக்கொண்டு

வருகின்ற புயல்களைப்போல்

நம்மையே விழுங்கிவிடுகின்ற‌

புயல் ஒன்று நம்மைப் பின் தொடர்கிறது.

அதன் பேர் "2024"

நாம் நம்மையே பார்த்துக்கொண்டு

பாடம் படிக்கிற தருணங்கள் இவை.

சுதந்திரம் வாங்கி 

எழுபத்தைந்து ஆண்டுகள் ஆயின என்று

ஆடிப்பாடினோம்.

நீங்கள் எல்லாம் ஓட்டுப் போட்டுத்தான்

நாங்கள் இந்த‌

நாற்காலிகளை பிடித்துக்கொள்ள முடியும் 

என்ற கதை மாறிப்போய்விட்டதே

அது தெரியுமா உங்களுக்கு?

பாருங்கள்.

இந்த சுதந்திரவிழா தோரணங்களில்

ஒளிந்திருக்கும்

அசுரக்குரல்கள் கேட்கின்றதா?

உங்களை உற்றுப்பார்த்து

சிந்தனை செய்ய வேண்டிய‌

ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறீர்கள்

என்பதை புரிந்துகொண்டீர்களா?

2024 உங்களை 

பின்னாலிருந்து வந்து தாக்கும்

ஒரு மிருகம் என்பதை

உணருங்கள்.

நீங்கள் பிறக்கும்போதே

பழமையின் நாற்றத்தோடு தான்

கன்னிக்குடம் உடைத்து வந்திருக்கிறீர்கள்

என்று

இந்த மூட சம்பிரதாயங்களின்

பூதங்கள்

காத்திருக்கின்றன.

இத்தனை நூற்றாண்டுகளாய்

சாதி மதங்களின் அபினி சுற்றிய‌

புழுக்கூட்டு மண்டலங்களில் தான்

நெளிந்து கொண்டிருக்கிறீர்கள்

என்று தான்

இந்த அசுர நாக்குகள் 

உங்களை 

சுருட்டிக்கொள்ளக்காத்திருக்கின்றன.

2024 காலண்டர் கண் விழிக்கட்டும் 

என்று நீங்கள்

காத்திருக்கத்தேவையில்லை.

அது உங்கள் மூக்குநுனியில்

இப்போதே வந்து 

உட்கார்ந்து கொண்டு

சோதிடம் சொல்லுவதைக் கேட்டு

சோர்ந்து போய்விடாதீர்கள்.

தெளிச்சியுறுங்கள்.எழுச்சியுறுங்கள்!


__________________________________________________________

சுடர் உன் கையில் !

 



சுடர் உன் கையில்!

_____________________________________

ருத்ரா



அன்பான இந்தியனுக்குள்

அதையும் விட சிறந்த அன்பான‌

மனிதன் இருக்கிறான்.

அவன் வெறுப்பால் வார்க்கப்பட்டவன் அல்ல.

அவன் ஒரு வரலாற்று ஈர்ப்பால்

ஒன்றிணைக்கப்பட்டவன்.

அடி கொல்லு அவனை வெட்டு

இப்படி தூண்டிய சொற்களையெல்லாம்

விழுங்கிச்செரித்து

விழுமியங்களுக்காக‌

முன் வந்தவன்.

மனித உந்துதலின் விசையை

தன் வாழ்க்கையில் 

நட்டு வளர்த்துக்கொண்டவ‌ன்.

தன்னுடன் வாழும் மனிதஉறவுகளில்

மதத்தின் 

கடவுள் சொற்களின்

சாரத்தை தன் ஓர்மையில்

உள் செலுத்திக்கொண்டவன்.

மனிதமும் அறிவும் 

அவனுக்குள் ஒளியேற்றியதில்

பிளவு வர்ணங்களின்

இருட்டுகள் யாவும் 

சலவை செய்யப்பட்டு நிற்பவன்.

புறவடிவங்களில் அவனுக்கு

ராமனின் வில்லும்

விஷ்ணுவின் சக்கரமும்

அனுமனின் கதாயுதமும்

இன்னும் வினோதமான‌

எல்லா ஆயுதங்களுமே

வெறும் பொம்மைகளே.

இதற்கு உயிரூட்டி வெறியூட்டி

காலச்சக்கரத்தை

பின்னோக்கிச்சுழற்றவா

இத்தனை சூழ்ச்சிகள் தந்திரங்கள்

பிம்பம் காட்டுகின்றன?

எங்கள் சுதந்திர சாசனத்தை

அந்த பிசாசுகள் பிய்த்து தின்னுவதற்கு

ஒரு பொழுதும் விடமாட்டோம்.

சமூக நீதி எனும் பெருவெளிச்சம்

எங்களிடையே

கனன்று கொண்டிருக்கிறது. 

மதத்தின் உச்சியில்

எல்லா கடவுள்களும்

அல்லது

மதங்களின் பெயர்கள் எல்லாம்

கழன்று போன‌

அந்த நுனியில்

மனித மலர்ச்சியின் புன்னகை

மட்டுமே

மாமிசம் நாறும் அந்த எலும்பு மிச்சங்கள்

இறைந்து கிடக்கும் குகைகளை

திறந்து காட்டி வழி அமைக்கும்.

ஓ!மனிதமே!

உன் பயணம் முற்றுப்பெறவில்லை

காலடியில் இடறும்

பிணக்குவியல்களால்

அச்சம் கொள்ளாதே.

ஆதிக்க வெறி..

இந்த தீயை நீ அணைக்கும் வரை

பயணம் தொடர்.

இடர்கள் களை.

சுடர் உன் கையில்.

இருட்டை 

நொறுக்கு....நொறுக்கு

நாகரிகத்தின் உன் உயிரெழுத்துக்களை

தின்னத்துடிக்கும் இந்த‌

அந்துப்பூச்சிகளை

அழித்தொழி!


_______________________________________________________





ஆளை விடு சாமி!

 ஆளை விடு சாமி

______________________________________

ருத்ரா




"நெஞ்சு பொறுக்குதில்லையே"

இந்த வரிகள் மூலம்

பாரதி நம் நெஞ்சில்

துயரத்தின் 

அந்த காக்காய் முட்களை

பாய்ச்சுகின்றார்.

சாதி மதங்களை 

இன்னும் இன்னும் இவர்கள்

சப்பாத்திக்கள்ளிகளாய் வளர்க்கிறார்கள்.

இறைவன் வகுத்த விதி என்று

இறைவன் வடிவமான மக்களைக்கூட‌

சேற்றில் அமுக்கி வைத்திருக்கிறார்கள்.

திரு அவதாரங்கள் எடுத்த கடவுளர்களே

உங்களை முகமூடிகள் ஆக்கி

உங்கள் கல்லறைகள் மீது அல்லவா

களிப்பு நடனங்கள் ஆடுகின்றார்கள்.

நீங்கள்

மீனாய் தவளையாய் பல்லியாய் பாச்சையாய்

பன்றியாய் பலவிதமாய்

அவதாரம் எடுத்தீர்களே

ஒரு மனிதனாய்

இந்த மாய்மாலங்களை எல்லாம்

சுட்டுப்பொசுக்குகிற‌

செந்தீச்சுடர் ஏந்திய மனிதனாய்

கிளர்ந்து வாருங்கள்.

கடவுள் சொன்னார்.

கடவுளாய் இருப்பது சுலபம்.

கல் தானே நான் கவலை இல்லை.

அவர்களே ஏதாவது புராணங்கள் தொடுத்து

மாலைகளாய் போட்டுக்கொண்டிருப்பார்கள்.

மனிதனாய் அவதாரம் எடுத்தால்

இந்தக்கல்லின் மீது தானே 

நானும் முட்டி முட்டிக்கேட்கவேண்டும்.

கடவுளாய் இருப்பதே எளிது.

நான் நாத்திகனாய் இருப்பதற்கு

இந்த கல்லே போதும்.

ஆளை விடு சாமி!


__________________________________________________


வியாழன், 13 அக்டோபர், 2022

திருநீறாற்றுப்படை

திருநீறாற்றுப்படை

_______________________________________

ருத்ரா




மந்திரமாவது நீறு என்று பாடி

சுந்தரத்தமிழ் அன்று ஒளிகாட்ட‌

இமை உயர்த்தி நாமும் வியந்தனமே.

இமையவன் புகழும் `பரவியதே.


சைவம் உலகில் தழைத்திடவே

தத்துவம் உயர்ந்து பரவியது.

என்ன தத்துவம் அது என்று

உள்ளே சித்தம் குதித்தது காண்.


பாட்டம் அப் ..டாப் பாட்டம் என‌

ஆங்கிலம் சொல்வதே அதுவாகும்.

அடி முடி கண்டால் போதும்

அண்டம் யாவும் விளங்கிடுமே.


உன்னை அறிய உன்னுள் நுழைய‌

உன் மிச்சம் என்ன அறிந்திடுவாய்.

வாழ்வு முடிந்து சுடலைப் பொடியாய்

மிஞ்சியதை நீ உள்ளறிவாய்.


சாம்பல் அல்ல அதுவென்றுணர்.

சாவி கிடைத்ததா?பூட்டுள் செல்.

பாஸ்வர்ட் தன்னைப்பற்றிக்கொள்

அதுவே அறிவியல் அது தெளிவியல்.


தெளிவு தான் "பிரசாதம்" என்றே உணர்.

குவாண்டம் இயற்பியல் உன் கோவில்

நாத்திகம் அறிய ஆத்திகம் செல்.

ஆத்திகம் அறிய நாத்திகம் செல்.


எது?என்ன? அது இது என்ன?

இருப்பும் இன்மையும் இரண்டறக்கலந்து

இன்மையும் ஆகி இருப்பும் ஆகி

நுண்மை அடர்த்தி புகுந்திடுவாய்.


ப்ராபபலிடி டென்சிடி அறிந்தாலே

ஆயிரம் சிவன்கள் உன் சிந்தையிலே

அடக்கம் ஆகும் அடங்காமையும் ஆகும்.

பெருவெடிப்பே உன் பிள்ளையார் சுழியாம்.


சுழிகள் ஸ்பைரல்களே காலக்சிகள் ஆகும்.

குவாண்டம் ஸ்பேஸ்ல் கோடி கோடியாய்

அண்டங்கள் யாவும் கரு தரிக்கும்!

அறிந்தால் போதும் சிவன்கள் எதற்கு?


இரண்டு குவாண்டம் எங்கோ இருந்து

சடை பின்னிக்கொள்ளும் இடையே

பில்லியன் பில்லியன் மைல்கள் என‌

ஒரு நொடியின் கோடித்துளியில்.


குவாண்டம் என்டாங்கிள்மெண்ட் எனும்

அந்த சிதம்பர ரகசியம் தெரிந்துவிடு.

இந்த வர்ண சாத்திரம் எல்லாம் இனி

தவிடு பொடிகள் ஆகிடட்டும்.


அந்த பொடியே  உன் திருநீறு.

பூசிக்கொள் உன் சிந்தையிலே அந்த‌

புரட்சியே உனக்கு தரிசனமாம் 

வறண்ட சாத்திரம் தொலையட்டும்.


திரு நீறாற்றுப் படை இதுவே.

இப்படை போதும் எப்படையும் வெல்ல.

உன்னை நீயே அழித்திடவா இங்கு

ஆகமம் ஆயிரம் நான் தந்தேன்.


அல்லவை அல்லவை அவை எல்லாம்

நல்லவை நல்லவை எது என்று

பகுத்தறிந்த கண் சொல்லும் இனி

அறிவியலே உன் திருநீறு.


நெற்றிக்கண் வேறு எங்கும் இல்லை

அந்த ஜேம்ஸ்வெப்பின் டெலஸ்கோப் தான்.

துருவு!துருவு!உற்றுப்பார்

எல்லாம் தெரிவாய்.எல்லாம் தெளிவாய்!


மன் திறம் இதுவே அறிவாய் நீ மற்ற‌

மந்திரக்கூச்சல்கள் தூர எறி.

எக்ஸொ பிளானட்டுகள் உனக்கு உண்டு.

சொர்க்கம் நரகம் இனி எதற்கு?



____________________________________________________________





















அந்த பாரதியும் இந்த பாரதியும்

 அந்த பாரதியும் இந்த பாரதியும்

_____________________________________

ருத்ரா


பக்தி இல்லையேல்

தமிழ் இல்லை.

தமிழ் இல்லையேல்

சிவபெருமான் 

சமயக்குரவர்களிடம் 

தமிழில் அடியெடுத்துக்கொடுத்து

பாடமுடியாமல் போய் இருக்கும்.

தமிழின் இனிமையை

கேட்க அந்த‌

புலித்தோலை அரைக்கசைத்தவன்

சீற்றமுடன் ஆணை இட்டிருக்கக்கூடும்.

தமிழ் இல்லையென்றால்

"பக்தி" என்ன பாடு பட்டிருக்கும்?

அந்த பாரதி அம்மையாருக்கும்

இது புரியாமலா இருந்திருக்கும்?

அவர் ஆணித்தரமாக பட்டிமன்றங்களில்

வாதிடும்போது 

தமிழில்

அறிவார்ந்த கருத்துகளைத்தானே

முன் வைக்கிறார்.

அதை விட்டு 

சப்பளாக்கட்டைகளை 

அடித்துக்கொண்டா பேசுகிறார்.

"நெஞ்சு பொறுக்குதில்லையே

............"

என்று 

அந்த பாரதி

இந்த பாரதியை நினைத்து தான்

மனம் புழுங்கியிருப்பாரோ?


_______________________________________________





புதன், 12 அக்டோபர், 2022

அம்மன்கள்

 அம்மன்கள்

__________________________________________

ருத்ரா



நேர்த்திக்கடன்.

துணி முடிதல்.

அவன் நாசமாகப்போகவேண்டும்.

இவள் கை கால் விளங்காமல் 

சாகட்டும்.

என்று ஒரு அம்மன் முன்னே

காகித விண்ணப்பங்கள் சுருட்டப்பட்டு

ஆயிரக்கணக்காய் 

வெள்ளைக்கம்பளிப்பூச்சிகள் போல்

மொய்த்துக்கிடக்கின்றன.

இன்னொரு அம்மன் வயிற்றில் 

மிளகாய் வற்றலை

அரைத்துப் பூசி

வயிறு எரிய வயிறு எரிய‌

சாபமிட்டு சாமி ஆடி

வழிபடுகிறார்கள்.

அந்த தெய்வச்சீற்றங்களை

பொருட்படுத்தாமல்

மக்களை சாதிகளின் மந்தைகள் ஆக்கி

தங்கள் இனம் மறந்து மொழி மறந்து

வாரி இறைந்த ஈசல் குப்பைகளாய்

சிதறிக்கிடக்க வைத்திருக்கிறார்களே

இதன் மீது கொப்பளிக்கின்ற‌

எரிமலைக்கோபங்களை

எங்கே கொட்டுவது?

ஆத்தாவுக்கு 

இதை கற்பூரம் கொளுத்திக்காட்டும்

கைகள் எங்கே போயின?

அந்த அம்மன் முன்னே

இந்த அம்மன்கள் இன்னும்

இமை உரிக்க வில்லையே.

விழி திறக்க வில்லையே!

இப்படியெல்லாம்

மனித அவலங்களின் 

நியாய அநியாயக்குரல்களுக்கு

தீர்ப்புகள்

அந்த அம்மனின் தொங்கும் நாக்கிலும்

முண்டக்கண்ணிலுமே

இருக்கின்றன‌

என்று உண்மையாகவே நம்புகிறார்கள்.

பொய்மைகள் அழுத்தமாய் 

கல்வெட்டு உண்மைகளாய் 

ஆகிப்போயினவே!

எல்லா நீதிமன்றங்களும் 

விறைத்த பார்வையுடன்

வானத்தையே நோக்குகின்றன.

வழக்குகளின் கூச்சல்கள் மட்டும்

கேட்டுக்கொண்டே இருக்கின்றன.


______________________________________________


செவ்வாய், 11 அக்டோபர், 2022

பரிமாணங்கள்

 


பரிமாணங்கள்

_________________________________

ருத்ரா


எனக்கு ஏதோ பயம்.

ஸ்ட்ரோக் வரலாம்.

சிறுநீரகம் நின்று விடலாம்.

இல்லாவிட்டால்

எந்த விதமாகவாவது

சின்னாபின்னம் நிகழலாம்.

இது ஒரு டைமன்ஷன்.

எல்லாம் ஐன்ஸ்டீனின் ஸ்பேஸ்டைம்ல்

சுருட்டி வைக்கப்பட்டது தான்.

இன்றைய இழைக்கோட்பாடு

இருப்பத்தாறு என்கிறது போசானிக்கில்.

பத்து என்கிறது

சூப்பர் சிம்மெட்ரியில்.

இது பிரபஞ்சமே கழன்று கொண்ட நிலை.

எம் தியரி எனும்

எல்லாவற்றுக்கும் ஆன தாய்க்கோட்பாட்டில்

பதினொன்று.

நம் ராமானுஜன் என்றைக்கோ

சொல்லிவிட்டுப்போன‌

மாடுலர் ஃபங்ஷன்ஸ்

எட்டுகளின் மடங்காய் 

இருபத்து நாலு என்று குறிப்பிட்டு

காட்டிவிட்டது.

ப்ரேன் காஸ்மாலஜி 

கணித சமன்பாடுகளை

சங்கிலி சங்கிலியாய் 

எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இந்த "பயம்"பற்றிய டைமன்ன்ஷனை

யாரிடம் கேட்பது?

புதிது புதிதாய் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்

திடுக்கிட வைத்து புல்லரிக்கச்

செய்து கொண்டே இருக்கிறது.

பாருங்கள் 

அந்த "செவ்வாய்க் கோளில்" கூட‌

ஒரு பெரிய சிவலிங்கச்சிலை 

அந்த பாழ்வெளியில்

சாய்ந்து சரிந்து கிடப்பதாய்

நாஸா காட்டுகிறதாம்.

இன்னும் விட்டால்

அந்த ப்ராக்ஸிமா பி எனும்

வெளி பூமியிலிருந்து

"போகர்"கூட சிக்னல் அனுப்பிவிடுவார்

போலிருக்கிறது.

இப்போது பயம் எனும் டைமன்ஷன்

பூதாகரமாய்

என்னை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

அட சீ என்ன இது?

அந்த சக்கரநாற்காலியின்

சக்கரவர்த்தி திருமகன்...

மனிதம் கோடி மடங்காய்

எழுச்சி பெற்ற அறிவியல் உருவகம்..

"ஸ்டீஃபன் ஹாக்கிங்" என 

உச்சரித்தேன்.

நானும் இப்போது "போகருடன்"

ஹாயாய்..அந்த‌

எக்ஸொப்ளேனட்டில்...


______________________________________


தமிழுக்கு எப்போதும் தமிழ் என்றே பேர்

தமிழுக்கு எப்போதும் தமிழ் என்றே பேர்

_______________________________________________


 


நம் மொழி

பக்தியா? தமிழா?

பக்தி எனும் செங்கல்லை

உருவி விட்டால்

தமிழ் இல்லை என்று

கதாகாலட்சேபம் செய்துவிட்டு

வந்திருக்கும்

அந்த புலமை பெற்ற தமிழ்ப்பேச்சாளருக்கு

ஒரு கேள்வி?

மேற்கிளையிலிருந்து கொண்டு

அடிக்கிளையை வெட்டும்

அதி மேதாவி அவர்களே.

தமிழ் இல்லாவிட்டால் 

கடவுளே இல்லை.

அப்புறம் 

பக்தி பூஜை தூப தீபம் எல்லாம் ஏது?

அதனால் தான்

சமயக்குரவர்களை

தமிழில் அடியெடுத்துக்கொடுத்து

பாடச்சொல்லியிருக்கிறார்

சிவபெருமான்.

அதே தமிழையும் நக்கீரனையும் 

வைத்து தான்

முதல் நாத்திகக்குரல் எழுப்பியிருக்கிறான்

தமிழன்.

மோசிகீரன் என்றொரு புலவன்

முரசுக்கட்டிலில் படுத்து இருந்ததைக்கண்டு

யாரோ ஒருவனால்

அரசின் இறைமை அவமானப்படுத்தப்பட்டதை 

கண்டு வெகுண்டு

அவரைக் கொல்ல வாளை உருவிய மன்னன்

அவர் தமிழ்ப்புலவர் என்று அறிந்ததும்

கவரி கொண்டு வீசி பணிவிடை

செய்திருக்கிறான்

பக்தி என்றதில் சமஸ்கிருதத்தை

உச்சரித்திருந்தால் 

இந்நேரம் அதுவும் செத்து தான் 

போயிருந்திருக்கும்.

பக்தியிலும் தமிழன் தமிழைத்தான்

பார்த்தான்.

தமிழ் தான் பக்தியை உயிர்ப்பித்து

இருந்திருக்கிறது.

தமிழில் தான் காதலாகிக் கசிந்து

கண்ணீர் மல்கியிருக்கிறான் பக்தன்.

இவன் தமிழில் கண்ணீர் மல்கியதில்

கடவுளின் கற்சிலையும் கண்ணிர் மல்கித்தான்

வேதியனையும் வென்ற‌

"வேடன்"கண்ணப்பனை  நமக்கு 

தரிசனம் காட்டியது.

தமிழிடமிருந்து

நீங்கள் பக்தியை மட்டும் பிரித்துக்காட்டியது

அந்த சிவனுக்கு கேட்டிருந்தால்

அவன் நெற்றிக்கண்ணில் நீங்கள்

பஸ்பமாகி இருப்பீர்கள்.

வாழ்க தமிழ்.

வீழ்க தமிழ்ப்பகை.


______________________________________________

செங்கீரன்


திங்கள், 10 அக்டோபர், 2022

பொன்னியின் செல்வன்‍ 2

 பொன்னியின் செல்வன்‍ 2

_______________________________

ருத்ரா



உலகமே 

தமிழனை உச்சியில் 

வைத்துக் கொண்டாடுகிறது.

ஒரு படைப்பில்

இத்தனை நுணுக்கங்களை

நடிப்பாய் கொண்டு வரமுடியுமா

தமிழனால் என்று வியக்கிறது!

தமிழர்களே 

எங்கிருந்தாலும்

அதற்கு உங்கள் கரவொலிகளை

உரத்து எழுப்புங்கள்.

நம் தமிழனுக்குள் இருக்கும்

"நூலாம்"படை போல் உள்ள‌

அந்த மெல்லிய காய்ச்சலை

புறந்தள்ளுங்கள்.

மெல்லியது இல்லை அது.

நம்மை அன்றும் இன்றும்

இன்னும் என்றுமே

கட்டிபோட்டு ஒரு வடக்கயிறாய் 

அமுக்கி 

"தேர்" இழுப்பு விளையாட்டுக்கெல்லாம்

உட்படுத்தி சிறைப்படுத்தும்

இந்த சித்திரவதையை

என்னவென்று சொல்வது?

ஆம் அது

அநீதிதான்

அநியாயம் தான்.

அதற்கு நீங்களே காரணம்.

உன் வீட்டு எல்லா சந்தோஷங்களுக்கும் 

எல்லா துக்கங்களுக்கும்

சடங்கு நடத்த தமிழ் இல்லையா?

தமிழாளர்கள் இல்லையா?

அதெல்லாம் வேண்டாம்.

அந்த கடபுடா மொழிதான் வேண்டும்

அதற்குள் தான் கடவுள் 

சுருண்டு கொண்டு இருந்து

நமக்கு சுகம் தருகிறார் என்ற‌

மூடப்போர்வையை

அவர்களா தந்தார்கள்?

அந்த 

பொன்னார் மேனியனை

புலித்தோலை அரைக்கு அசைத்தவனை

தமிழின் ஒலிப்புக்குள்

நான் கேட்டுக்கொள்கிறேன் நண்பரே

போய் வாருங்கள் என்று

நீங்கள் ஒரு 

"தீண்டாமையை"கடைப்பிடித்தால்

இந்நேரம் வரலாறு தலைகீழ் ஆகியிருக்கும்.

அவரே தமிழிலும் தயார் என்று 

முன் வந்து விடுவாரே.

அப்போது தமிழ் மொழியின் சமூக நீதி

காக்கப்பட்டிருக்குமே.

இப்படி ஒரு ஒத்துழையாமை இயக்கம்

நடந்தாலே போதுமே.

சிந்தியுங்கள் தமிழர்களே.

சரி.

அதெல்லாம் போகட்டும்.

பொன்னியின் செல்வன்

அதோ புறப்பட்டு விட்டான்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று.

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று

பாக்ஸ் ஆஃபீஸ் சாதனையில்

முன்னேறிக்கொண்டு 

வந்தியத்தேவன் குதிரை போல பாய்கிறான்.

வந்தியத்தேவன் கையில் உள்ளது

"தூது செய்திகளின் குழல்"அல்ல.

உலகமெல்லாம் வெல்லபோகும்

உயர் வெற்றியின் ஊது குழல் அது.

வாழ்த்துமின் வாழ்த்துமின்

ஆஸ்கார் எனும் அந்த மர்ம மாளிகையாம்

கடம்பூர் மாளிகையை வென்று

வலம் வரவேண்டும் என்று 

வாழ்த்துமின் வாழ்த்துமின் வாழ்த்துமின்.

____________________________________________________‍

நாவல்களின் நாயகர்

 நாவல்களின் நாயகர்

________________________________________

ருத்ரா



அம்பதுகளில்

டாக்டர் மு வ அவர்களின் நாவல்கள்

பற்றி

ஒலிக்காத வாய்கள் இல்லை.

நினைக்காத தமிழ் நெஞ்சுகள் இல்லை.

தூய தெள்ளிய நடையில்

அந்த நாவல்கள் நகரும் போது

தமிழ்ப்பூக்களின் ஓடைகள் போல‌

சலசலக்கும்.

நம் சிந்தனைகளில் அருவிகளாய்

பின்னணி இசைக்கும்.


கரித்துண்டு

டாக்டர் அல்லி

கள்ளோ காவியமோ

கயமை

மண்குடிசை...

இவை ஒவ்வொன்றும்

எழுத்துக்களின் செங்கல் சிமிண்டு கருங்கல்

கொண்டு கட்டப்பட்ட‌

புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள்.

தமிழ் இலக்கியம் 

சுடர் பூக்க வைத்தவர்.

மற்ற இலக்கியவாதிகளினின்று

வேறு பட்டு நின்று

நமக்கு ஒரு புதிய வெளிச்சம்

காட்டியவர்.

சமுதாய முரண்களை

மயிற்பீலி கொண்டு வருடுபவர்களிடையே..

ரத்தக்களறி கொண்டு

தூரிகை தீட்டியவர்களிடையே...

தமிழ்ப்பகைமையை

ஊதுபத்திப்புகைபோல்

தமிழைக்கொண்டே எழுதிக்காட்டி

வித்தை காட்டியவர்களிடையே...

எழுத்துக்குள் வெறும்

ஃப்ராய்டிசத்தை மதுவாய் பாய்ச்சி

நரம்பு புடைக்க வைத்தவர்களிடையே...

தமிழுக்கும் அல்ல தமிழுக்கு மட்டுமே

அமுது என்று சொல்லும்படி

உயிர்ப்பான செழிப்பான தமிழை

தமிழர்களுக்கு காட்டியவர்.

தமிழை ஒலித்துக்காட்டி

சிகரம் நின்ற அறிஞர் அண்ணா போல்

தமிழை எழுதிக்காட்டி

எழுச்சி காட்டிய 

தமிழ்ப்பெரும் எழுத்தாளர்

டாகர் மு வ.

ஓங்குக அவர் புகழ்!


___________________________________________________








ஞாயிறு, 9 அக்டோபர், 2022

புத்தகத்திருவிழா

 புத்தகத்திருவிழா

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________

ருத்ரா



இத்தனை காலமாய்

இருண்டு கிடந்து வீட்டுக்கு

இப்போதெல்லாம் பாருங்கள்

சன்னல்கள் சன்னல்கள் 

சன்னல்கள் தான்.

அறிவுப்பிழம்பும் 

புனைவுப்பிழம்பும்

கை கோர்த்துக்கொள்கின்றன.

மொழிபெயர்ப்புகளுக்கு

மொழிகள் 

இரவல் சட்டைகளாய் இல்லாமல்

இயல்பின் இருப்பை

அப்படியே எழுத்துக்களில்

உயிர்ப்பித்துக்கொண்டு

வருகின்றன.

கணினி அச்சுகள் போல்

எந்திர அச்சுகளும்

எந்திர அச்சுகள் போல்

கணினி அச்சுகளும்

நேர்த்தியின் கலைக்கூடங்களாய்

பொலிகின்றன இந்த‌

புத்தகக்கடைகள். 

புத்தகத்திருவிழா என்பதால்

எழுத்தாளர்க‌ளின் 

கற்பனைக்கட்டுமானங்களே

கோயில்கள்.

அவர்களின் புதுப் புது 

எழுத்துகளின் 

கும்பாபிஷேகங்களே

புத்தகத்திருவிழாக்கள்.

நல்ல புத்தகம் 

ஒன்று கொடுங்கள்.

யாரோ ஒருவர் கேட்டார்.

கதையா? கட்டுரையா? என்று

கேட்டார் புத்தக விற்பனையாளர்.

ஏதோ கொடுங்கள் என்றார்.

இவரும்

கைக்குக்கிடைத்த ஒரு புத்தகத்தை

அவரிடம் நீட்டினார்.

அது சோதிடப்புத்தகம்.

"அய்யோ..இதுவா

பக்கத்துக்குப்பக்கம் 

என்னை கசாப்பு அல்லவா

செய்து கொண்டிருக்கிறார்கள் இதில்?"

குரல் அட்டகாசமான சிரிப்பொலியாய்க்

கேட்டது.

யாரையும் அங்கே காணோம்.

சார்..சார்..சார்..

விற்பனையாளர் 

கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்.

விசிட்டுக்கு வந்த கடவுள் 

ஓடியே போய்விட்டார்.


___________________________________________________






பொன்னியின் செல்வன்

 பொன்னியின் செல்வன்

__________________________________

ருத்ரா




பொன்னியின் செல்வன்

பாதி எழுதியது கல்கி.

மீதி வரைந்தது மணியம்.

வரலாற்றுப்புதினம் 

படிக்க படிக்க‌

பரபரப்பாய் இருந்தது.

வரலாற்றின் படிப்பாக இல்லை.

ஏனெனில் 

புதினம் என்ற புனைவில் 

சுருட்டப்பட்டு இருந்தது.

அடிப்படையில்

சமணமும் சைவமும் வைணவமும்

தங்களுக்குள் 

கழுவேற்றிக்கொண்டு

இருந்தது தான் நிகழ்வுகளின் பின்னணி.

ராஜ ராஜனும் ராஜேந்திர சோழனும்

கடல் கடந்து வெற்றிக்கொடி

நாட்டியது 

இந்திய அரசர்களிலேயே எந்த அரசர்களும்

செய்யாதது.

அசோகர் கூட புத்தமதம் பரப்பவே

இலங்கைக்கு தன் மக்களை அனுப்பினார்.

சோழச்சக்கரவர்த்திகளின்

இந்த சிறப்பு வரலாறு

நம் இந்திய வரலாற்றுப்பாடத்தில்

இருட்டடிக்கப்பட்டு விட்டது.

பொன்னியின் செல்வனின் இந்த 

புகழ் வெளிச்சத்தை

மறக்கடிக்கவும் 

மறைக்கவுமே

நந்தினியும் வந்தியத்தேவனும் 

ஆதித்த கரிகாலனின்

கொலைச்சூழ்ச்சியை வைத்துக்கொண்டு

"கொல கொலயா முந்திரிக்கா 

நரியே நரியே சுத்திவா"

என்று விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அதோடு விடவில்லை

நாற்காலியைப்பிடிக்க 

பொன்னியின் செல்வனே இதை

ஏற்பாடு செய்திருப்பானோ

என்ற சந்தேகப்பழியையும்

வலையாக பின்னப்பட்டதே

சுவையையும் விறுவிறுப்பையும் 

புதினத்தில் முறுக்கேற்றுவதற்குத்தான்.

கதை என்றால் அப்படித்தான்

இருக்கும் என்கிற பாமர ரசிகர்களாய்த்

தமிழர்கள் தடம் புரள வீழ்ந்து கிடந்தார்கள்.

அந்த படுகொலையைச்செய்தவர்களுக்கு

தண்டனையோ 

வெறும் நாடு கடத்தலும் 

சொத்துகள் பறிமுதலும் தான்.

மற்றவர்கள் செய்திருந்தால் தலைகள்

உருண்டிருக்கும்.

மனு நீதியின் ஆயிரம் ஆண்டுகளுக்கு

முந்திய கோர முகமே அந்த தீர்ப்பு.

இதை வைத்துக்கொண்டு தான்

"இந்து என்று சொல்லடா"

என்று சில கூட்டங்கள் உறுமுகின்றன.

இந்த கூச்சல்களையும் தாண்டி

ராஜ ராஜ சோழன்

தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா

என்று

இடிக்குரல்கள் 

சிலிர்த்து எழுந்து முழங்குகின்றன.

தமிழா!

ஆயிரம்

இரண்டாயிரம் ஆண்டுகளாய்

நீ தொலைந்து கிடந்தாய்

என்பதை 

தோரணம் கட்டிக்கொண்டாடுவதற்குத்

தான்

பொன்னியின் செல்வனுக்கு

தலையணை தலையணகளாய்

நாலு ஐந்து பாகங்களில்

காத்துக்கொண்டிருக்கிறாய்.

இவற்றில் நீ

தூங்கிவிடாதே தமிழா!

தூங்கிவிடாதே.


___________________________________________

செவ்வாய், 4 அக்டோபர், 2022

ஆயுத பூஜை

 ஆயுத பூஜை


தேர்தல் வருகிறது.

மீண்டும் அந்த புல்வாமாவை

கழுவிச் சுத்தம் செய்யுங்கள்.

குங்குமம் சந்தனம் வைத்து

கற்பூரம் காட்டுங்கள்.


_________________________________‍

ருத்ரா


பிரம்ம சிரிப்பு

 


எல்லாவற்றையும் பூஜை செய்யும் 

வழக்கம் ஒட்டிக்கொண்டதால்

கடவுள் இல்லை என்பதையும்

தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி

பூஜை செய்தார்கள்.

கடவுளே உள்ளம் குளிர்ந்து

"வெளித்தோன்றி சொல்லிவிட்டார்.

நான் கடவுள் இல்லை.

கடவுள் நான் இல்லை.

கடவுள் கடவுளே இல்லை.

கடவுள் என்பது இல்லவே இல்லை.

சந்தோஷம் தானே"


சந்தோஷமா?

அயோக்கியப்பயலே

மொள்ள மாரி

கசமாலம் 

முடிச்சவிக்கி

முட்டாப்பயலே..

.................

"அப்படியா..

அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு

இது வரையும் 

இது தான் அர்த்தமா?"

கடவுள் ஓடியே போய்விட்டார்.

கடவுளைக்காணோம்.


"கடவுள்...

இதோ தூணிலும் இருப்பார்

துரும்பிலும் இருப்பார்.

..........

..............."


பக பகவென்று

சிரிப்பொலி மட்டும் கேட்டது.

பிரம்ம சிரிப்பு அது.


_____________________________________________________‍

ருத்ரா

சனி, 1 அக்டோபர், 2022

வீரசிவாஜி வாழ்க!

வீரசிவாஜி வாழ்க!

_______________________________________‍

ருத்ரா



வீரசிவாஜியே வாழ்க.

அந்த மராட்டிய மன்னனை அல்ல‌

உன்னைத்தான் சுட்டுகிறோம்.

வழக்கமான 

ஒரு மூக்குப்பொடி சிட்டிகையில்

எழுதிக்குவித்த அந்த நாடகப்பக்கங்கள்

எல்லாம்

நம் பேரறிஞர் வெடித்த பீரங்கிகள் 

அல்லவா?

சிம்மக்குரலோனே அன்று நீ

கர்ஜித்த வீரம்

இன்றும் தன் சூடு அடங்க வில்லை.

தமிழா!தமிழா!

சூத்திரன் சூத்திரன் என‌

இழிவு படுத்திய‌

ஆதிக்க கும்பலின் 

கும்பாபிஷேகங்களில்

கரைந்து விடாதே.

சிவாஜி வெடித்த தமிழ்

உன்னிடம் உண்டு.

அதைக்கொண்டு 

தமிழா

நீ ஆயிரம் எரிமலைகளை

பற்ற வைத்துக்கொள்.

உன் மீது கிடக்கும் 

அடிமை சாசனங்கள்

எரிந்தொழியட்டும்.


இமயங்கள் கூட‌

வணங்கிக்குனிந்ததே

வீர சிவாஜியாய் நீ

வீறிட்ட‌  குரலில்.

நடிகர் திலகம் அவர்களே!

"சிந்து நதியின் மிசை நிலவினிலே.."

என்ற பாடல் காட்சியில்

பாரதியின் அந்த‌

முறுக்கிய மீசையிலும்

கங்கு விழிகளாய் தெறித்த‌

பார்வையிலும்

எங்கள் உடம்பெல்லாம் இன்றும்

சிலிர்த்து நிற்கிறது.

நடிப்பின் மேதையே!

உன் நடிப்புக்கடலில் 

நீரை எங்கு அள்ளினாலும்

எங்கள் இதயங்களே அங்கு

மீன்களாய் துள்ளித்தும்பும்.

உன் நடிப்பின் மொழியும்

நம் தமிழ் போல் 

ஒரு செம்மொழி தான்.

நடிப்பின் எம்மொழியும் 

அதில் தான் உயிர் தரிக்கும்.

ஓங்குக‌

நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்!


___________________________________________________