புதன், 10 ஜூலை, 2024

நிழல்

 




நிழல்

______________________________


ஒவ்வொரு தடவையும் 

நிழல் விழுகிறது.

கவ்விப்பிடித்துக்கொண்டு

குடையாய் கவிகிறது.

ஆனால்

ஒளியின் பிசிறுகள் எல்லாம்

நம் கண்ணீரில் 

நம் கனவுகளில்

நம் அவலங்களில்

நெய்யப்பட்டிருக்கின்றன.

ஓட்டுகளின் வெள்ளம் 

வடிந்த பிறகு தெரிந்தது

நம் எலும்புகளின் குப்பையில்

எழுப்பியது 

இந்த மாளிகை.


_____________________________________________________

ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக