ஒரு "குவாண்டம்"மனிதனின் குரல்.
___________________________________________
செங்கல்கள் அடுக்கிவிட்டார்கள்.
அடுத்து
கலவை பூசும் சத்தங்களுக்கும்
நான் காத்திருக்க வேண்டுமா என்ன?
அல்லது
அந்த வரட்டிகளை வைத்து
சன்னல் மூட்டங்களில்
கண்கள் அமைத்து
தீயின் கூந்தல் நீளமாய்
மயில் தோகை போல
வானம் முழுதும் அடைத்து
அகவுமே
அதற்கும் காத்திருக்க வேண்டுமா?
என் இடுப்பு டப்பியைத்தேடுகிறேன்.
அதில் தானே
அந்த குவாண்டம்
டெலிபோர்டேஷன் ஈக்குவேஷன்
இருக்கிறது.
அதன் மூலம் அந்த
ஈகிள் கேலக்ஸிக்கு போகலாம்
என்று தானே இருந்தேன்.
அதற்குள்ளாகவா எல்லாம்...
"வாங்கோ..
அந்தக்கலயத்தில் அஸ்தியை எடுத்துண்டு
காசி..ராமேஸ்வரம் போய்
கரைச்சுடுங்கோ..."
இந்த சத்தம் மட்டுமே எனக்கு
நன்றாக கேட்டது.
கலசத்தை உடைத்துக்கொண்டு
கதிர் வீச்சாய் கிளம்பினேன்.
இந்த மொட்டை மந்திரங்கள்
எவனுக்கு வேண்டும்?
அந்த குவார்க்குகளின்
ஏதோ ஒரு "குளுவானின்"
சூப்பர் ஸ்ட்ரிங் எனும்
அந்த உயர் அதிர்விழை அதிர்வு எண்ணாக
இந்த ஆயிரம் பிரபஞ்சங்களிலும்
உலவுவேன்.
கணினியின் விசைப்பலகைகளே
மனிதக்கனலின்
இந்த "க்யூபிட்டு"களோடு
தொடர்பில் இருங்கள்.
வருகிறேன்.
______________________________________________
செங்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக