பகடைகளின் ஓசைகள்
_______________________________________
ருத்ரா
வானத்து நட்சத்திரங்கள்
சொக்கட்டான் ஆடின.
என்ன குழப்பம் தெரியவில்லை.
வெளிச்சம் துகிலுரிந்து
எங்கு பார்த்தாலும்
டார்க் மேட்டர்.
சொல் அம்புகளும்
மெய் அம்புகளும்
வடித்த ரத்தம் எழுதின
மனிதா
மனிதனை தேடு.
நரிகளின் நீண்ட தாடிகளில்
பெரிய பெரிய யானைகள்
கழுத்து அறுந்து வீழ்ந்தன.
கதை சொல்வதற்கும்
கதை கேட்பதற்கும்
இங்கே
பில்லியன் பில்லியன்
மக்கள் மடிந்து
மண்ணாகிப்போக வேண்டியிருக்கிறது.
இன்னும்
அந்த சப்தரிஷி மண்டலத்தை
நோக்கித்தான்
சோழிகள் குலுக்கிப்
போட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஆலமரத்தடியில்
இன்னும் பட்சி சாஸ்திரங்களின்
எச்சங்களில் வர்ண சாஸ்திரங்கள்
குழி வெட்டிக்கொண்டு தான்
இருக்கின்றன.
_________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக