வெள்ளி, 26 ஜூலை, 2024

அகழ்நானூறு 74

 அகழ்நானூறு 74

______________________________________

சொற்கீரன்.


குண்டு நீர் ஆம்பல் கலித்த சுனையுள்

இலஞ்சி இலைஇய அஞ்சுரம் நிழல‌

முறத்து அன்ன சேம்பின் வரியிலை

மூசும் நுண்சிறைத் தும்பி இனத்தொடு

முரல அடுத்த பழனச்சூடு

உதிர் நெல் உண்ணும் குரீஇய‌

குரல் கெழு சூழ் திறம்

அவள் நெஞ்சில் பாய்ச்சும்

நெடுவேல் அன்ன அவன் விழி ஆங்கு

கனல் நுழைத்து அருவிகள்  இழியும்

கொடுங்கானல் ஏந்தல் அஞ்சும்

என்னுயிர் மாயும் அறிவையோ தோழி.

________________________________________________


குறிப்புரை

__________________________________


நீர்வளம் நிலவளம் செழித்த அந்த‌

சிற்றூரில் அறுவடை நடக்கிறது.

அங்கு வாழும் தலைவி தலைவனை

காணும் ஏக்கத்தில் துயர் உறுகின்றாள்.

சுனை சூழ்ந்த இலைகள் அடர்ந்த அங்கு

அறுவடை நெற்கதிர்கள் உதிர்த்த‌

நெல்லை மேயும் குருவிகள் எழுப்பும்

கூரிய குரல்கள் தலைவனின் 

வேல் விழிகள் போல்

அவள் நெஞ்சில் பாய்கிறது.

அந்த வேதனையின் வெளிப்பாடே

இங்கே நான் எழுதிய இந்த 

சங்கநடைச்செய்யுட் கவிதை ஆகும்.

_________________________________________

சொற்கீரன்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக