ஏலியன்?
__________________________
யார் அந்த ஏலியன்?
அந்த நிலைக்கண்ணாடியை
உற்று நோக்குகிறான்.
ஐயமே இல்லை.
அவனே தான் இவன்.
இவனே தான் அவன்.
ஆனந்தக்கூச்சல் இடுகிறான்.
இது போலவே
எங்கோ ஒரு எக்ஸோ பூமியில்
இருந்து கொண்டு
அவன் அதே மாதிரி
கண்ணாடி பார்த்து விட்டு
கத்திக் களிக்கிறான்.
இதோ அவன்.
இதோ மனிதன்.
அந்தக்கண்ணாடி
பிறாண்டப்படுகிறது.
கீறல்கள் கீறல்கள்
பாதரசம் மறைந்து
ஊமை வெளியில்
கூச்சல்கள்.
மனிதனும் ஏலியனும்!
அது சரி
நடுவில் வந்து
தலை நீட்டிக்கொண்டிருந்த
அந்த
இறைவன் எனப்பட்டவன்
எங்கே?
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக