வளையல் பூச்சிகள்
______________________________________
சேயோன்.
காதலித்தவர்கள் இருந்த
தேசத்தில்
சொற்களே குவிந்திருந்தன.
அவையே
புத்தகங்களாய் குவிந்தன.
அவையே
பல்கலைக்கழகங்கள் ஆகின.
அங்கிருந்தே
மனிதம் விஞ்ஞானத்தால்
தன் தொப்பூள் கொடியை
பெருவெடிப்புகளின்
கர்ப்பப்பையில்
நட்டு வைத்தது.
காதல் எனும் புதிரில்
காதல் கழன்றது.
அப்புறம் பூலியன் அல்ஜிப்ராவில்
புதிர் மட்டுமே இருந்தது
காதல்
சொற்கள் இன்றி
பாலைவனம் ஆனது.
கண்ணாடி வளையல்கள் கூட
டிஜிட்..க்யூபிட் என்று
சத்தம் இன்றி
சிதறிப்போயின.
ஓரக்கண்ணில்
உலகங்களையே
முத்தானைக்குள் முடித்தவள்
வி ஆர் காமிராவில்
பார்வை பதித்துக்கொண்டாள்.
அந்த புல் திட்டில்
வளையல் பூச்சிகள் மட்டுமே
ஊர்ந்து ஊர்ந்து
காதல் செய்து கொண்டன.
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக