வியாழன், 11 ஜூலை, 2024

ஜனநாயகம்

 ஜனநாயகம்

____________________________



பத்து ரூபாய் நாணயத்தை

அந்த எடை பார்க்கும் எந்திரத்தில்

நுழைத்துவிட்டேன்.

என் எடையைப் பற்றி இங்கு

யாருக்கு கவலை?

என் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் பற்றி

அச்சடித்து தருமே

என்று தான் பத்து ரூபாய்

மொய் எழுதினேன்.

ஊஹும்..ஒன்றும் 

பயனில்லை.

அங்கு தட்டினேன் 

இங்கு தட்டினேன்

எதுவும் வேலைக்கு ஆகலை.

என் அதிர்ஷ்ட பலனை 

ஒரு நூத்திரெண்டு கோடி சொச்சத்தால்

கூட்டிப்பெருக்கி வகுத்துக் கழித்தால்

நம் நாட்டு நிலமை தெரிந்து விடுமே!

அதற்கு தான் நான் வெயிட்டிங்.

கொஞ்சநேரத்தில்

அந்த எந்திர பராமரிப்பாளன் வந்து

எந்திரத்தின் ஏதோ ஒரு

ரகசிய வாயைத் திறந்து சில்லறைகளை

அள்ளிக்கொண்டு போனான்.

"ஏம்பா..நான் காயின் போட்டேன்

கார்டு இன்னும் வரவில்லையே"

அப்படியா சார்.

எனக்குத்தெரியாது.

வேண்டுமானல் 

கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போங்கள்.

விக்கித்து நின்றேன்.

கனம் கோர்ட்டார் அவர்களே

என்று என்

மனப்பட்சி

சத்தம் போட்டுக்கொண்டே இருந்தது.


________________________________________________

கல்லாடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக