மீசை முறுக்கு எல்லாம்
நன்றாகத்தான் இருக்கிறது.
கண்கள் மட்டும் கொஞ்சம்
முண்டு தட்டி இருக்கிறது.
உதடுகளின் ஓரம்
ஏதோ முதலைவின் சுவடுகள்.
லேசாகத்தெரிந்த பற்கள்
பளீரென்று கண்களை
குருடாக்கி விடும் போல்
இருக்கிறது.
கன்னத்தின் முகடுகளில்
நம் ஊர் தாமிரவருணி ஆற்றுக்கரைகள்
மேடு கட்டியிருப்பது போல்
ஒரு கட்டு மானம்.
என்னடி?
ஃபோட்டோ புடிச்சிருக்கா?
உன்னை அவங்களுக்கு
ரொம்ப புடிச்சிருக்காம்.
நூறு ஏக்கர் வரை இருக்கு.
கோட்டை மாதிரி வீடு..
அம்மா வர்ணனை
அந்த பொருளாதாரமொக்கைத்தனத்தை
வெளிச்சம் போட்டது.
அவள்..
ப்ள்ஸ் டூ வில் 98 சதவீதம்
இப்போது கையில் இருக்கிறது.
கழுத்தில்
அந்த ஸ்டதெஸ்கோப் பாம்பு
கனவாய் நெளிந்து கொண்டிருக்கிறது.
என்னைத்தைச்சொல்ல?..
சரிண்ணு சொல்லேண்டி.
அப்பா அப்போவே கெளம்பியாச்சு
சரி சொல்ல.
அவளுக்கு
அப்படி ஒண்ணும்
காதல் சில்லிப்புகள் எதுவும்
இல்லை தான்.
பெண் எனும்
நிமிர்வு
ஒரு உரிமையின் திமிர்வு
இதெல்லாம்
எங்கோ நொறுங்கிக்கிடப்பது போல் தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக