ஊதா ரிப்பனும்
கண்ணாடி வளையல்களும்
நாவல் பழத்து விழிகளுமாய்
கசிய கசிய பார்வைகளை
வீசினவளே...
இன்றும் அதே அந்த
குடமுருட்டி சங்கரன் கோயில்
கூழாங்கற்படுகையில்
வைராவி குளத்திலிருந்து
படர்ந்து பாய் விரிக்கும்
கரும்பச்சைப் பளிங்கின்
நீர்த்தடத்தில்
உன்னைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
அந்த பச்சரிசி மாங்காயின்
மாவடுக்கள் போல்
விழிகள் உருளவிட்டு
மறைந்தோடுகிறாய்.
தூரத்து கிடை படுக்கையில்
ஓரக்கண் கொண்டு பார்த்துச்சிரிக்கும்
அந்த வண்டி மறிச்சி அம்மன்களே சாட்சி.
________________________________________________
அம்பைவாணன்.
_______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக