செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

முகங்களின் காடுகள்







முகங்களின் காடுகள்

======================================ருத்ரா இ பரமசிவன்


மக்கள் தொகைப்பெருக்கம் பற்றி
"மால்தூசியன்" கோட்பாடு
அச்சமூட்டியது அதிகம்.
ஆறுதல் சொன்னது குறைவு.
நாம் பெருகியது
"பெருக்கல்"கணக்கு
அதாவது ஜியாமெட்ரிக் ப்ரோகிரஷன்.
நமது பொருட்கள் பெருகியதோ
கூட்டல் கணக்காம்.
அதாவது அரித்மெடிக் ப்ரோகிரஷன்.
அதானல் நமக்கு
சிவப்பு முக்கோணமே
கிருஷ்ணன் காட்டியதை விடவும்
ஒரு பெரிய விஸ்வரூபம்.
பொருளாதார தாராளமயம் என்பதற்கு
மக்கள் தொகை பெருகி
சந்தை ஈசல்கள் மொய்க்கவேண்டும்.
ஆனால்
முரண்பாடுகளே
நமது பசி.
மீண்டும் முரண்பாடுகளே
நமது உணவு.
அண்ணன் என்னடா?
தங்கை என்னடா?
அவசரமான உலகிலே என்று
ஒரு கூடு இரு பறவை போதும்...என
குஞ்சுகள் கூட‌
டிஜிட்டல் பொம்மைகளாகின.
ஸ்மார்ட் செல்லில்
எல்லாம் அடக்கி
இன்பம் மட்டும் வழிந்தால் போதும்
என்று
"ஆன் லைனில்"
அத்தனையும் சுருங்கிப்போனது.
பெண்ணும் ஆணும் வெறும்
பண்ட மாற்றம்.
ஆன் லைனில்
மனிதன் மீண்டும்
நீண்டதோர் குகைக்குள்
கும்மிப்போனான்.
பணத்தின் வெள்ளம் மட்டும்
சிலரின் கையில்.
மனிதம் என்றொரு
மகத்தான உலகம்
டெக்ஸ்டிங் மற்றும்
கேமிராக்கண்ணுள்
சுருங்கி சுருங்கி
மரவட்டை ஆனது.
கை பேசி
சிப்பிக்குள்ளே
ஏழுகடலும்
படுக்கை போட்டு
சுருண்டு கொண்டது.
வானங்கள் யாவும்
லைக்குகள் எனும்
நாக்குப்பூச்சிகள்
நானூறு கோடியின்
அலப்பறைக்குள்
அடங்கின ஆர்த்தன!
முகங்களின் காடுகள்
நிரம்பி வழிந்தன.
நிமிடங்கள் செகண்டுகள்
காசுக்கடலில்
அமிழ்ந்து கிடந்து
அலைகள் விரித்தன.
சுகமாய் ஒரு தென்றல் கீற்றின்
சுவர்க்கம் போலொரு
மனித உள்ளம்
மறைந்து போனது
முகவரி இன்றி.
"இறந்த அஞ்சல் அலுவலகம்"
(டி.எல்.ஓ) உள்ளே
எத்தனை எத்தனை
இதயங்கள்
துடித்து துடித்துக்
கிடந்திடுமோ?
யாரே அறிவார்!
அறியோம் நாம்!

==================================================



ஓலைத்துடிப்புகள் (3)

























ஓலைத்துடிப்புகள் (3)
==============================================ருத்ரா இ பரமசிவன்

கண்டிகும் அல்லமோ கொண்க‍   நின் கேளே?
தெண்டிரை பாவை வௌவ‌
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.

கற்பனை நயம் மிக்க வரிகளால் நம்மைக்கவர்ந்த சங்கத்தமிழ்ப்புலவர்  அம்மூவனார் எழுதியஐங்குறு நூற்றுப்பாடல் (125) இது. தெள்ளிய திரை என்று பொருள் படும் கடல் அலைகளின் நுண்மையான விளையாட்டு மிகவும் உற்று நோக்கத்தக்கது.அம்மூவன் எழுதிய "தெண்டிரை பாவை"
எனும் சொல் கடல் விஞ்ஞானத்தில் அலைகளின் நுணுக்கமான இயக்கங்களை குறிக்கிறது.அதில் கிடைக்கும்"தெள்ளிய மண்ணில்" பாவை செய்து விளையாடும் தலைவியின் பால் மணம் மாறாத மனத்துள்ளும் சுரக்கும் காதலின் பிஞ்சு ஊற்றில் ஒரு பிரளயமே ஒளிந்திருக்கிறது என்பதை காட்டவே இந்த சங்கநடைக்கவிதையை யாத்து உள்ளேன்



(தலைவின் துயரம் கண்டு பொருள் தேடச்சென்ற தலைவனை நோக்கி
சொல்லுவது போல் பாடப்பட்ட தோழியின் கூற்று.)


இலஞ்சி பழனத்தவள்
===========================================ருத்ரா இ பரமசிவன்

இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
கடாஅய்ச் செல்லும் இரும்பணைத்  தோள!
அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!
தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
அளியள் காண்குவை.விரைதி விரைதி.
குவளையுள் குவளை பல்மழை தூஉய்
மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
முதிர் தகையன்று அறிதி அறிதி.
பால் இழி தாமரை காமர் புரையா
ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
பாவை கையில் மற்றொரு பாவை
படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.

===============================================






பொழிப்புரை
==============================================ருத்ரா இ பரமசிவன்

இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
கடாஅய்ச் செல்லும் இரும்பணைத் தோள!
அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!

உறுதி மிக்க மூங்கில் போன்ற தோள் வலிமை மிக்க தலைவனே!இலஞ்சி எனும் அடர்நிழல் தவளும் நீர்ச்சுனைகள் நிறைந்த ஊரின்
கனிச்சோலைகள் போல் கண்ணேதிரே எழிற்கோலம் காட்டும் உன் காதலியின் முகம் தோன்றும்படி கல்லும் முள்ளும் கலந்து வெம்மை
மிகுந்த காட்டுவழியில் கடந்து  செல்கிறாய்.கடலின் அலைகள் அரித்து அரித்து மண்திட்டாய் நிற்கும் கரை கூட கரைந்து போய்விடுகிறது. நிலப்பகுதியை பறித்துக்கொள்ளும் கடல் சங்குகளின்ஒரு வித ஒலியோடு ஆர்ப்பரிக்கிறது.அது போல் உன் நெஞ்சம் தலைவியை நினைத்து வேதனை உறுகிறது.




தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
அளியள் காண்குவை.விரைதி விரைதி.
திணையின் திரிதரு திரள்நெரி மயக்கமனைய‌
நின் ஆறலைக்கண்ணும் ஆழி சூழ்ந்தது.

கடல் அலைகளின் சீற்றம் மிகக்கடுமையானது.தொள் என்றால் குழி பறி என்று பொருள்.அப்படி குழி பறித்த அலைகளே தொண்டி எனும் பட்டினத்தை உருவாக்கும்.தொண்டி எனும் ஊர் அப்படி உருவானதே.அங்கே அந்த அலைகள் இன்னும் சில விளையாடல்களைச் செய்கின்றன.ஆழத்திலிருந்து மிகக்க்குழைவான வண்டல் மண்ணை தெள்ளியெடுத்து கரையில் குவிக்கிறது.தலைவி அதனோடு சிறுபிள்ளை போல் பொம்மை செய்து விளையாடுகிறாள்.ஆனால் அதே அலைகள் சீற்றத்தோடு அப்பொம்மையை பறித்துக்கொண்டுபோய்விடுகிறது.மண்திரை அதாவது கரையை மண்கலந்து நீராட்டும் அலைகள் இப்படி வெறியோடு விளையாடுவது கண்டு தலைவி அச்சமுற்று அழுது கலங்குகிறாள்.அவள் பொம்மை அழிந்துபோனது
பொறுக்காமல் அழுகிறாள்.இங்கே அது வெறும் பொம்மை அல்ல.
உன்னை உன் நினைவைக் கொண்டு புனைந்த வடிவு அது.எனவே
விரைவில் வந்து அவளை தேற்று.கொடிய பாலையின் வழித்தடங்களில் அலையும் உனக்கு இவளது கடற்கரை விளையாட்டு ஒரு திணை மயக்கம் திரண்டு நெரிக்கும் துன்பத்தைக் கொடுக்கிறது.


குவளையுள் குவளை பல்மழை தூஉய்
மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
முதிர் தகையன்று அறிதி அறிதி.
பால் இழி தாமரை காமர் புரையா
ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
பாவை கையில் மற்றொரு பாவை
படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.

அவள் அழுகையில் கண்ணுக்குள் கண் பூப்பது போல் குவளைக்குள்
குவளைகள் குவிந்து அடர்மழையை கண்ணீராய் பொழிகிறது. இன்னும் காதலின் முதிர்ச்சி பெறாமல் மடம் எனும் சிறு பிள்ளைத்தனம் மட்டுமே அந்த வெள்ளைமனத்தில் பொங்கும் வெண்கண்ணீரில் அவள் மூழ்குகின்றாள்.ஐது எனும் மென்மை படர்ந்த அழகிய‌ முன்னங்கைகளை உடைய அவள் வெட்கமுறுவது ஒரு ஒப்பற்ற எழில் மிகு காட்சி ஆகும்.பால் வழியும் தாமரை முகம் அவளது முகம்.ஆனாலும் காமம் புகாத அந்த பிஞ்சுக்காதலில் ஒளி சுடரும் நெற்றியில் கூர்ந்து சிந்திப்பதால் ஏற்படும் சுருக்கங்கள் ஏதுமில்லை.
இருப்பினும் அவள் ஒரு சிறுமி போல் தான் இருக்கிறாள்.தெரிந்து கொள்.ஒரு மரப்பாய்ச்சியின் கையில் இன்னொரு மரப்பாய்ச்சி போல் இருக்கிறாள். அந்த மண் பொம்மை கரைந்ததற்கு அழுதுகொண்டே இருக்கும் அவளை விரைவாய் வந்து தேற்று.பொம்மைகளோடு ஒன்றிப்போனாலும் இவள் பொம்மை அல்ல.அதுவும் பஞ்சாரை எனும் கோரைப்புல்லைக்கொண்டு கூந்தல் முடித்த பொம்மைப்பெண் அல்ல‌

=========================================================ருத்ரா




திங்கள், 29 ஆகஸ்ட், 2016

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு







ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
=================================================ருத்ரா

இளைய யுகமே!
காட்சி மாறி இருக்கிறது.
பாடல் தொனி மாறி இருக்கிறது.
என் குடியிருப்பிலே ஒரு கோப்பை
என்று
சொற்கள் இடம் மாறியிருக்கின்றன.
முதல் இரவு கட்டிலுக்கு
மலர் அலங்காரம் எல்லாம் அப்புறம்
முதலில் வீட்டுக்குள்
கோப்பை இருக்கவேண்டும்.
சுகாதாரம் வீட்டுக்குள் நுழைய வேண்டும்
லெட்சுமி வருவது தானே நிகழும்.
மணப்பெண்ணின்
கனவு சீனில் கூட‌
குதிரையோடு
வருகின்ற ராஜகுமாரர்கள்
குதிரையை விட்டு இறங்கி
குளக்கரையை நாசம் செய்ய‌
கிளம்பி விடக்கூடாது.
"மேரா நாம் ஜோக்கர்" என்று
ராஜ் கபூருக்குப் பிறகு
ஒரு ஜோக்கர் கிளம்பியிருக்கிறார்
"மன்னர் மன்னனாக".
குரு சோமசுந்தரமும் ராஜு முருகனும்
ஒரு செமையான கூட்டணி.
இங்கிலாந்தில்
ராணிக்கு
தங்கத்தில் கோப்பையாமே!
இந்தியாவிலோ
"எல்லாருமே இந்நாட்டு மன்னர்கள்"
எல்லாருமே
ஒரு பீங்கான் கோப்பையோடு தான்
அடுத்த தட்வை
வாக்களிக்க வேண்டும்.
நம்மிடையே தலை காட்டும்
இந்த "அராஜக நாற்றம்" மறைந்து
ஜனநாயகம் மணம் கமழட்டும்.
ஓட்டுகளை
கரன்சிகளாக
மலங்கழித்தை விட‌
ஓட்டுகளாகவே
மலர்ச்சியுறச்செய்ய வேண்டும்.
ஜோக்கர் திரைப்படம்
சொல்லும்
சொக்கத்தங்கமான கருத்தும்
இது தானே!

===============================================




ஒளிமரம் (2)




ஒளிமரம் (2)


மனத்துக்கண்.......
=========================================ருத்ரா இ பரமசிவன்.

மனத்துக்கண் மாசிலன்
ஆதல் அனைத்து அறன்..

உன் மனச்சிலேட்டை அழி !
கண்ணீர்க்  கடல்களை துடைத்து அழி.
அந்த எரிமலை லாவாக்களை
இனிக்கும்
லாலாக்கடை அல்வா வாக‌
மாற்றி எழுது.
அகர முதல..அகர முதல..
என்று
கீறல் விழுந்த ரிக்கார்டாய்
சுற்றிக்கொண்டே இருக்காதே.
அந்த 1330க்கும் மேலே போ!
வள்ளுவன் சொல்கிறானே
கேட்டதில்லையா?
"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு?"
வேதத்துக்கு அந்தம் என்று ஆணி அடித்து
வேதாந்தம் என்று விளிம்பு கட்டுவது
வேதம் இல்லை.
அறிவு என்பதே
இருட்டை உடைத்துக்கொண்டு
மேலே மேலே போ!
என்பதே பொருள்.
சூரியன் எப்போதும்
உன் முகத்தில்
தீயைக்கொபுளித்துக் கொண்டே
இருப்பதன்
மெய்ப்பொருளும் அஃதே!
உன் உறக்கம் உனக்கு மரணம்
ஆகி விடக்கூடாதே
என்ற அதிர்ச்சி மருத்துவமே அது.
அறிவு மட்டுமே
முற்றுப்புள்ளியே
இல்லாத ஒரு மொழி!
அதன் நிறுத்தற்குறிகளும்
கால் அரை முக்கால்புள்ளிகளும்
விஞ்ஞானம் உனக்கு
நட்டு வைத்த மைல்கற்கள்.
ஒரு "ஹப்பில் டெலஸ்கோப்" மூலம்
இந்த அண்டத்தையே
உன் சட்டைப்பைக்குள்
சொருகிக்கொள்ள வேண்டும் என்று
நினைக்கிறாய் அல்லவா?
அதுவே உன் "ஆதித்ய ஹ்ருதயம்"
ஒளியே உன் இருட்டு.
அது துடிக்கும்
துடிப்புகள் மூலம்
வெளிச்ச சுநாமிகள்
உன் சன்னல் கம்பிகளில் மோதும்.
விஞ்ஞானிகள்
இருட்டுப்பிண்டத்தையும்
இருட்டு ஆற்றலையும்
தொட்டே
(டார்க் மேட்டர் அன்ட் டார்க் எனர்ஜி)
இந்த பிரபஞ்சம்
சோப்புக்குமிழி ஊதி ஊதி
விளையாடுகிறது
என்று கண்டறிந்து விட்டார்கள்.
"ஏம்பா! எப்ப பார்த்தாலும்
சாமி சாமின்னுட்டு...?"
இந்த எதிர்மறை இருட்டிலிருந்து தான்
உன் கோடிக்கண் பிரகாசம்
இமைககள் விலக்கப்போகின்றன!
மனக்கவலை மாற்றலரிது தான்,
அதனால்
மனக்கவலைகள் தாண்டி விடு.
மரணம் எனும் "அனாட்டமி" பற்றி
முதலில் படி.
தூங்குகையில் வாங்குகிற மூச்சு
சுழி மாறி போனாலும் போச்சு.
ஆம்..
அந்த சுழி
மனிதனின் அறிவில் இருக்கிறது.
மரணத்தை வெல்லும்
முதல் மனிதன்
பிறக்கும் போதே
ஜனன மரணக்கணக்குகளின்
காலம் முடிந்து விடும்.
குவாண்டம் நுரைக்கோட்பாடு
காலப்பரிமாணத்தை
கழற்றி எறியப்போகிறது.
குவாண்டம் டெலிபோர்டேஷனில்
மனிதன் ஒளிர்துகள்
எனும் ஃபோட்டானாய்
பற்பல பிரபஞ்சங்களில்
தட்டு தட்டுகளாய்
(ப்ரேன் காஸ்மாலஜி)
பாண்டி விளையாடப்பொகிறான்.
வெறும் கற்பனைக்கடவுள் எல்லாம்
இனி இல்லை...விஞ்ஞானக்
கற்பனையே நம் கடவுள்.

============================================================


.










































































































































ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

"ஓலைத்துடிப்புகள்"(2)



"ஓலைத்துடிப்புகள்"(2)
================================


தொண்டை சுற்றிய குவளை
===========================================ருத்ரா இ பரமசிவன்

நுண்சிறைத்தும்பி நுரைவிரித்தாங்கு
நுவலும் அதிர்வின் நரல் மொழி உய்த்து
கொண்டல் நாடன் கொழு நிழல் தழீஇ
தொண்டை சுற்றிய குவளையன்ன‌
தொடிநெகிழ் பசலை நோன்ற காலை
நோக்கும் நெடும் தேர் மணி இமிழோசை.



பொழிப்புரை
========================================

வண்டின் நுண்சிறகுகள் நுரை படர்ந்தாற்போல் அதிர‌
அதனுள் ஒலிக்கும் காதலனின் இன் சொல் உற்றுக்கேட்டு
மகிழ்கிறாள் காதலி.காதலன் நாட்டின் மழை மேகம் மறைக்கும்
அடர்ந்த நிழலில் அவன் நினைப்பில் தழுவிக்கிடக்கும் உணர்வை
அடைகிறாள்.தொண்டைக்கொடி சுற்றிய குவளை மலர் போல‌
அவன் தழுவலுக்கு ஏங்கி அவள் "தொடி" நெகிழும் வண்ணம்
பசலையுற்றாள்.அப்போது ஏக்கத்தோடு காதலனின் தேர் மணி ஒலிக்கும் ஓசையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.சங்க நடைக் கவிதையில் இது காதலின் எழில் பொங்கும் ஒரு காட்சி.

======================================================ருத்ரா

வாழ்க! வாழ்க! திரு வி.க !



http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/thiru-vi-ka

வாழ்க! வாழ்க! திரு வி.க !
=========================================================ருத்ரா

தமிழென்றால் புழுக்கம் என்று
முகஞ்சுழித்த நாட்களுண்டு.
தமிழ் கசந்து போனவர்கள்
சமக்கிருத குழிவிழுந்து
காணாமல் போனதனால்
இருண்ட கண்டம் போல‌
மிரண்டு நாம் கிடந்த போது
இன் தமிழ்த் தென்றலென‌
நன் தமிழ் தந்த மகன்
தமிழ்த்தாய் தந்த மகன்
திரு.வி.க என்ற ஒளி
திகழ்ந்தது நாம் கண்டோமே.
அவ் வழகுத் தமிழ் முகம் பார்க்க‌
கண்ணாடிகள் வேண்டுமென்றால்
மு.வ என்ற தமிழின் சோலை
கல்கி என்ற எழுத்தின் கடல்
என்றெல்லாம் நமக்கு
எத்தனை பேர்? எத்தனை பேர்?
தொழிலாளர் உரிமைக்கு
குரல் தந்த செங்கீரன் நம்
திரு வி க என்றாலே
மிகையில்லை மிகையில்லை!
தமிழுக்கும் அமுதென்ற‌
பேர் மட்டும் இல்லை
வேர்வைக்கடல் கூட இங்கு
தமிழ் ஆகும்த!த‌மிழ் ஆகும்!
மனித‌ உழைப்பின் 
உயர் வேதம் காட்டிய‌
உத்தமரே அவர் ஆகும்..அந்த‌
தமிழ்த்தோழர் காட்டும் வழி
தயக்கம் இன்றி நடப்போமே!
வாழ்க திரு.வி.க!
வெல்க எல்லாம் இங்கு
அவர் தமிழே!அவர் தமிழே!
வாழ்த்துகின்றோம்...நாம்
வணக்கத்துடன் அவரை என்றும்
வாழ்த்துகின்றோம் நாம்.

===============================================




விநாயகரை நோக்கி ஒரு அகவல்.








































நன்றி.. விக்கிப்பீடியா 


விநாயகரை நோக்கி ஒரு அகவல்.
=====================================ருத்ரா இ.பரமசிவன்


ஆனைமுகம் அஞ்சுதற்கல்ல.
ஞானமூறும் கண்முகம் கொண்டு
அண்ணிக் காண்குவம் அண்டம் யாவும்.
எண்ணிப் பார்த்திடில் எண்ணிக்கையில்லை.
பிண்டம் பிடித்த பண்டம் யாவும்
தின்று அதன் திண்மை தெரிந்திடவேண்டி
கொழுக்கட்டையாகி நம் முன் நிற்கும்.
முப்பரிமாண புடைப்பும் தாண்டி
காலம் கூட்டி கோலம் சேர்த்து
கூட்டுத்தொகை சங்கிலி பின்னி
பல பரிமாண அதிர்விழை என்னும்
எம் தியரியும் ஸ்ட்ரிங் தியரியுமாய்
விஞ்ஞான அர்ச்சனை செய்திட்டபோதும்
விண்டிட முடியலை அண்டம் தன்னை.
வடிவக்கணித ஜியாமெட்ரியில்
சொல்லிப்பார்க்க வேண்டும் என்றால்
கொம்பும் வயிறும் கோலிக்குண்டுகள்
காட்டும் மிரட்சியின் கண்கள் இரண்டும்
உருவம் காட்டுவதெல்லாமே
டோபாலஜி கணிதம் ஆகும்.
மூளி வெளியை வெட்ட வெளியை
உளியால் வெட்ட இயலுமா உள்ளுவீர்.
பிசைந்து எப்படி முறுக்கினாலும்
"ரப்பர்" வெளியிது அறிவீர்!தெளிவீர்!
மோபியஸ் ஸ்ட்ரிப் எனும் அற்புத வளையம்.
இருபக்கமும் ஒருபக்கம் காட்டும்.
இறப்பும் பிறப்பும் ஒருபக்கம் தானே.
மறு பக்கம் உற்று பார்த்திட்டாலும்
முகமே முதுகாய் ஆகும்.
முதுகும் கூட முகமே ஆகும்.
க்ளீயன் என்றொரு அருமை மேதை
ஒரு கண்ணாடிக்குடுவை காட்டிடுகின்றார்.
கொழ கொழ உருவெளி அண்டம் பற்றி
அழகாய்க் காட்டினார் தும்பிக்கையுடனே.
அதுவே எந்தன் கணித விநாயகர்
கடலில் கரைத்திட செய்திடவில்லை...உயர்
கருத்தில் மூண்ட அக்கனற்பிழம்பே
நான் உண்ணும் அருஞ்சுவை மோதகம்.


கொட்டும் முழுக்கும் 
கத்தி மிரட்டலும்
மின் கம்பம் மிரளும் உயர‌
களிமண் பொம்மையும்
காழ்ப்புகள் அடைத்து
கனபரிமாணம் எல்லாம்
கட்சிக்கொடிகள்
காலாவதி மதங்கள்
திணித்து செய்த‌
உருவம் தன்னில்
ஏன் தான் இத்தனை
உருட்டல் மிரட்டல்?
உலகம் உணர்வீர்!
மானிட அன்பே
மையம் கொண்டு
ஞானப்பழந்தனை
அறிவில் வென்ற‌
ஆனை முகமே நம்
அறிவின் முகமாம்.

===================================================
30 ஆகஸ்டு 2014 ல் எழுதியது.

என்னை உரித்துக்கொண்டு..





என்னை உரித்துக்கொண்டு...
==================================================ருத்ரா இ.பரமசிவன்.

எனக்குள் நான் இயல்பாய் இல்லை.
யார் என்னை பிதுக்கி க்கொண்டு   வெளியேறுகிறார்கள்.?
நாலு தலைமுறைக்கு முந்திய ஏதோ ஒரு பிறவி
தலை விரிகோலமாய் வெளியே வருகிறது.
வயது முடியாமல் எங்கோயோ ஒரு புளிய மரத்துக்கிளையில்
கயிற்றில் தொங்கி விட்டு
இப்போ சர  சரவென்று கீழே இறங்கி ஓடுகிறது.
என் எதிரில் உட்கார்ந்து சாவதானமாய் கேட்கிறது.
சமணத்துறவிகளை குடைந்து குடைந்து கேட்கிற
சங்கராசாரியார் பாஷ்யம்போல்
வாதராயணர் போல் கேட் கிறது.
காரணம் எது?காரியம் எது?
இரண்டுமேயாகவும் இரண்டுமே இல்லாமலும்
பரமாத்மாவுக்கு முந்திய ஜீவாத்மாவும்
ஜீவாத்மாவின் யோனிக்குள் தங்கியிருக்கிற பரமாத்மாவும்
.................
இன்னும் வாய்க்குள் நுழையா சம்ஸ்கிருத கொத்து கொத்தான
சொற்றோடர்கொண்டு
அது துளைத்துக்கொண்டே இருந்துது.
காலம் பின்னோக்கிக்கொண்டே போய்
காலம் காலத்திலிருந்தே கழன்று கொண்டது போல்
காலம் அறுந்து விழுந்தது.
யார் அது? எது அது?
திடீரென்று நாமக்கல் கோவில் தெய்வம்
கனவில் வந்து
எலிப்டிக் ஃ பங்க்ஷனின் க்யூப்த் ரூட் சொல்யூஷன்
சொல்லிசென்றதே அந்த தியரம் சொல்லு
என்று ராமானுஜனாய் ஒரு விஸ்வரூபக் குரல்  கேட்கிறது!
அது 2105 ஆம் ஆண்டின் நுணுக்கமான "ப்ரேன் காஸ்மாலாஜியின்"
கணித விவரம்..
என்ன இது? எதுவும் புரிய வில்லை.
நான் ஹீப்ருவில் கூட ஓல்டு டெஸ்டமெண்டை
அப்படியே ஒப்பிக்கிறேனாம்.
என்னை உரித்துக்கொண்டு
நிர்வாணமாய் ஓடியது யார்?
கோடி பறக்குது! கடல் துடிக்குது!ஒலி பெருக்கி வலியை பெருக்கியது.
ராவெல்லாம் என் நாக்கில் கோடாங்கி அதிர்ந்ததாம்.
அப்பா பதறி விட்டார்.அம்மா அழுது புரண்டாளாம்.
விடிந்தது.
முக்கு வீட்டு சாமியாடி பூதப்பாண்டிக்கு
ஆள் போயிருக்கிறது.

==================================================================






.

சனி, 27 ஆகஸ்ட், 2016

"புதல் மறைத்து வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று.."





"புதல் மறைத்து வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று.."
===============================================ருத்ரா இ பரமசிவன்.

எத்தனை கொடிகள்?
கொடிகளில்
எத்தனை வர்ணங்கள்?

தேதி அறிவித்தவுடனே
"ராமாயி வயதுக்கு வந்து விட்டாள்" பாணியில்
வாக்காளர் பட்டியலுக்கு
மஞ்சள் நீராட்டு.
தனி அதிகாரிகள்.
தனி ஜீப்கள்.
அதற்கப்புறம்
கொசு மருந்து அடித்தால்கூட‌
கொடுந்தண்டனை தான்.
கொடியில் கொத்துப்பூவோடு
இரண்டு இலையும் வரக்கூடாது.
கிழக்கே சூரியன்
உதிக்கும்போதெல்லாம்
அதிகாரி வந்து
கருப்புத்தாள் ஒட்டி
இருட்டடிப்பு செய்திடுவார்.
மக்கள் "ஹலோ" என்று
"கை" குலுக்க கை நீட்டினாலும்
கைகளுக்கு விலங்கு தான்.
பலசரக்குக்கடைகளில்
வசூல் ஆன "கரன்சி" நோட்டுகள் கூட‌
தன் "கற்பு"க்கு சாட்சி சொல்லியாக வேண்டும்.
ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்
தேர்தல்
"பார பட்சமின்றி" நடக்கிறது
என்ற நாடகம்
நாடு முழுதும் அரங்கேற்றப்படும்.
மஞ்சள் குங்குமம் பூசி
தேங்காய் உடைத்து
கற்பூரம் கொளுத்தி
கணிப்பொறிகளும் தயார்.
பஞ்சப்படியுடனும்
பயணப்படியுடனும்
ஊழியர்கள்
வாக்காளர் பட்டியலுடன்
இங்க் பேட் ஸ்கேல் சகிதம்
அணிவகுத்து வந்திடுவார்.
கத்தி பூட்டிய துப்பாக்கிக்குழலுடன்
காவல் காரர்கள்
அந்த பெட்டியை காக்கும்
பூதமாக
பின்னால் பூட்ஸ்காலுடன்
தடதடப்பார்கள்.
நேரம் காலம் பார்த்து
பிரம்ம முகூர்த்தம் பார்த்து
வேட்பார்கள்
வாக்காளர்களிடம்
கிசுகிசுப்பார்கள்.
இலவசமாக‌
என்ன வேண்டும்?
காம‌தேனுவா?
கற்பக விருட்சமா?
இந்திர லோகமா?
வேண்டுமானால்
சட்டசபையை
உங்கள் வீட்டு
மாட்டுக்கொட்டிலுடன் கூட‌
கட்டிவைக்கத்தயார்
நீங்கள் விரும்பும் நாட்களுக்கு.
இன்னும் என்ன வேண்டும்
உங்களுக்கு?
ஜனநாயகம் என்ற ஒரு
பாரிஜாதப் பூ இருக்கிறதாமே
எழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
அதை நாங்கள்
எடுத்து வருகிறோம்.
வாக்குப்பெட்டியை
நாங்கள் கவனித்துக்கொள்ளுகிறோம்.
பாரிஜாதப்பூ நிச்சயம் கிடைக்கும்
அப்புறம் அதை
நீங்கள் காதில் வைத்துக்கொள்ளுங்கள்.
..................
.................

மரா மரங்களூக்கிடையே
அம்புகளும் பாய‌
கூர்மை தீட்டிக்கொள்ளுகின்றன.

குறித்த நாளில்
தேவர்கள் பூமாரிப்பொழிய‌
"புதல் மறைத்து வேடுவர்களும்
புள் சிமிழ்த்தனர்."

மின்சாரத்தொண்டை மட்டுமே உள்ள‌
இதயம் இல்லாத‌
நீண்ட மைக்குகள் சாட்சியாக‌
தட்டி தட்டி முதுகு தேய்ந்த
மேஜைகளின் சாட்சியாக‌
ஒரு நவாப் நாற்காலி ஏலத்துக்கு
சும்மா ஒண்ணு ரெண்டு மூணு சொல்லும்
மற்ற‌ நாற்காலிகள் சாட்சியாக‌

அதோ சுவரில்
கம்பீரமாய் மீசையைக்க்காட்டும்
அசோகசக்கரத்து சிங்கங்கள் சாட்சியாக‌

ஜனநாயகம் ஜனங்களுக்கே
விற்கப்பட்டது
சந்தைக்கு வந்தது.

================================================ருத்ரா இ.பரமசிவன்
16 நவம்பர் 2013ல் எழுதப்பட்ட கவிதை.
தேதி முக்கியத்துவம் இழந்து போனது.
 சம்பவங்கள் மட்டுமே நமக்கு இன்னும்
"சம்பவாமி யுகே யுகே"





வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

"ஊமைப்படம்"






"ஊமைப்படம்"
===============================ருத்ரா இ.பரமசிவன்

அவள் இரைந்து கத்தினாள்.
பற்கள் கடித்தாள்.


மார்பில் கைகளை அடித்துக்கொண்டாள்.
ஆக்ரோஷம் ஆக்ரோஷம்.
டிஃபன் தட்டை ணங்கென்று
வைத்த போதும்
காஃபிக்கு நுரை மகுடம் சூட்டி
சூடாகவே தந்தபோதும்
அவள் உடம்பு நடு நடுங்க
குரல் எழுப்பினாள்.
கண் விழிகள்
கரும் கடுவாயின்
வெள்ளை விழிகளையும்
துப்பாக்கி குண்டுகளைப்போல‌
க‌ருங்க‌ன‌ல் துண்டுக‌ளையும்
ப‌ட‌ம் காட்டின‌.
புள்ளி போட்ட‌ மார்பிள் ஷிஃபான் கூண்டுக்குள்
இருந்துகொண்டு
கொசுவ‌த்தை சொடக்கு போட்டு
பேசிக்கொண்டே போனாள்.

நான் "ம்யூட்டிங்கில்"
இருந்தேன்.
"முப்பது"க‌ளின் ஒரு ஊமைப்பட‌ம்
ஓடிக்கொண்டிருந்தாலும்
அவ‌ள் முக‌ ந‌ர‌ம்புக‌ள்
எரிம‌லையின் வ‌யிற்றைத்
திருகி திருகி ஃபிடில்
வாசித்த‌து.
வ‌ந்த‌தும் வ‌ராத‌துமாய்
அவ‌ள் மீது
என்ன‌ சொல்லை வீசியிருப்பேன்?
இந்த‌ எதிர்வினைக‌ளின் க‌ன‌ல்ப‌ரிமாண‌த்தை
வைத்து
நியூட்ட‌னை த‌லைகீழாக‌ நிறுத்தி வைத்துக்கொண்டு
கேட்டேன்.
அந்த நேரான‌ சொல் தான் என்ன‌?.
சொன்னவன் எனக்குத் தெரியாதா?
இருந்தாலும் கேட்டேன்.
முக‌ம் க‌ழுவிக்கொண்டு
அமைதியாக‌ நான் அறைக்குள் போய்விட்டேன்.
ஆணாதிக்கம் தந்த அழுத்தமான முகத்துடன்.
சீதைகளையே
அரசாங்க இயல் காரணம் காட்டி
மண்ணுக்குள் அழுத்தத்தெரிந்த
ராமர்களாயிற்றே நாம்.

அவ‌ள்
இன்னும் அம்புப்ப‌டுக்கை த‌யார்செய்து
அதில் புரண்டாள்.
ர‌த்த‌மாக‌த்தான் ச‌த்த‌ம்போட்டாள்.
நான் என்ன‌ அப்ப‌டி கேட்டுவிட்டேன்.
என் குரூரம்
எனக்குள் பலூன்கள் பறக்கவிட்டது.
மீண்டும் அமைதியாய்
முக‌ம் துடைத்துக்கொள்ள‌
க‌ண்ணாடி பார்த்தேன்.

ட‌ப்பென்று க‌ண்ணாடி சித‌ற‌த‌ல்க‌ள்.
கீழே விழுந்த‌ சில்லுக‌ள் எல்லாம்
துண்டு துண்டாக‌ தெரிந்த‌து.
குரூர‌க்கொரைப்ப‌ல் தெரிந்த‌து.
ர‌த்த‌ம் சொட்டிய‌ ச‌வுக்கு
என் க‌ழுத்தில் வ‌ல்லாட்டுபோல்
தெரிந்த‌து.
நாகரிகத்தில்
முடி சூட்டிக்கொண்ட‌
என் அகலமான‌
ஸ்மார்ட் ஃபோன்
கீழே விழுந்து கிட‌ந்த‌து.
அத‌ன் "அண்ட்ராய்டு"க்குள்
வ‌ரை
அந்த‌ அசிங்க‌த்தின் கோர‌ம்
வ‌ர்ண‌மாய்த் தெரிந்த‌து.

==============================================
எழுதியது: 13 ஜூன் 2013


போன்ஸாய்



























போன்ஸாய்
====================================ருத்ரா இ பரமசிவன்

காக்கா போட்ட விதையில்
ஆலமரம் ஆக்கிரமித்து
விதைக்குள்ளே வீடே போனது.

அவள் சொன்ன "ஹாய்"

அவள் கைக்குட்டை வீசினாள்.
எதற்கும் இருக்கட்டும்
நாளை நான் கண்ணீர்க்கடலில்
கிடக்கலாம் என்று.

மொட்டை மாடி.
பிழியப்பட்டு கிடந்தது
வடாம் இல்லை.
அவள் நினைவில்
நான்.

நெருநல் உளன் ஒருவன்
இன்றில்லை.
ஆம்
நான் காதலிக்கத்துவங்கி விட்டேன்.

ஒரு சிவப்பு ரோஜாவுக்கு
அவள் கை நீட்டினாள்
ஒரு ரூபாய்க்கு
பூக்காரியிடம்.
காதல்
என்ன அவ்வளவு கொள்ளை மலிவா?


சலவைக்கல் பளபளக்கவில்லை
தாஜ்மகாலுக்கு.
இதுவரை
காதலிக்கும்
கோடி கோடி பேர்கள்
நினைத்து நினைத்து
பாலீஷ் போட்டதே அது.


வகுப்பில்
ஸ்க்ரோடிங்கர் ஈகுவேஷனாம்.
ஹெய்சன்பர்க மேட்ரிக்ஸ் மெகானிக்ஸாம்.
யாருக்கு வேண்டும் இதெல்லாம்?
குவாண்டம் ஃபிஸிக்ஸ்
முன் வரிசை பெஞ்சில்.
பின் பெஞ்சுகளில்
நாங்கள்
காதலின் மின்னல் குமிழிகள்.

புற்று வருமாமே!
காதலின் வால்மீகி நான்.
வில்லும் அம்பும் காதலே.
சிகரெட்டில் தவம்.
காதலே அந்த‌
புகை வளையங்கள்.

===========================================ருத்ரா
எழுதியது:‍‍ 19 அக்டோபர் 2013.

எனக்கு வலிக்கிறது







எனக்கு வலிக்கிறது
=============================================ருத்ரா

எனக்கு வலிக்கிறது.
ஆனால் அது என் வலி அல்ல.
என் கை கால் முறிந்தவலியின் போதும்
அது என் வலி அல்ல.
இந்த வலி
அதோ
அங்கே நாய் குதறிப்போட்ட‌
அந்த காக்கைக்குஞ்சின்
கடைசித்துளி
வலிச்சொட்டாக இருக்கலாம்.
அமைதியாய்
கிறு கிறுவென்று
பூவரச மரத்தின் மீதேறிக்கொண்டிருந்த‌
வளையல் பூச்சி
ஏதோ ஒரு பரு வண்டின்
கொடுக்குத்தட்டலில்
கீழே விழுந்து
சுருண்டு கிடக்கிறது.
அது மறுபடியும்
விரியல்லாம் அல்லது
விரியாமலேயே போகலாம்.
அதன் அரை மயக்க‌
வேதனை கூட‌
என் வலியில்
சிங்க்ரோனைஸ் ஆகியிருக்கலாம்.
அதோ ஒரு கிழவன் வருகிறான்.
முதுமையின் கூன்
அவனைச்சுருட்டிப்போட்டு விட்டநிலையிலும்
உடம்பில் பலத்த‌
காயங்களுடன் மரண வலிகளுடன்
வருகிறான்.
முடியாமல் கீழே விழுகிறான்.
அவன் முதலாளி
அவன் வேலை செய்யும்போது
அந்த வாளியை கீழே போட்டு
உடைக்காத குறையாய்
நெளிசல் ஆக்கி விட்டானாம்.
அதற்குத்தான் அந்த வலிகள்.
இது எனக்கு வலிக்கவில்லை.
எந்த வகையிலும்
என் சுண்டு விரலுக்கு கூட‌
வலிக்க வில்லை.
அது அவன் வலி.
அது
அவனும் அவன் சமுதாயமும் சார்ந்த‌
வலி.
மனிதன் வலிகளுக்கு
மனிதனே பொறுப்பு.
மரவட்டைகள் அல்ல.

======================================================

“ஒளிமரம்”










ஒளிமரம்"ருத்ராவின் க‌விதைக‌ள்"

விளக்குக்கு
இலைகளுக்கு‌ள்
ஒளிந்து விளையாட ஆசை.

அச்சத்தின் அந்த
நீலப்போர்வைக்குள்
ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளும்
எங்கோ ஒளிந்து கொண்ட‌ன‌.

"நெற்றி ஒற்றைக்க‌ண்ணனாக‌"
அந்த‌ சோடிய‌ம் விள‌க்கு.
ம‌ஞ்ச‌ள் ஒளி "ஷ‌வ‌ரில்"
ந‌டு ந‌டுக்க‌ம்.
ப‌ற்க‌ள் கிட்டித்த‌ன‌.

அவ‌ன் வ‌ருவானா?
ம‌ணி ஏறிக்கொண்டே போகிற‌தே.
காத்திருப்பு எனும்
க‌ண்ணுக்குத் தெரியாத‌
ஊசியில்
அவ‌ள் த‌வ‌ம்.

விஞ்ஞான‌த்தையும்
விழுங்கிய‌து காத‌ல்.
வினாடியில்
ல‌ட்ச‌ங்க‌ளின் ஒரு ப‌ங்கு
நேனோ கூட‌
ந‌த்தையாக‌த்தான் ஊர்கிற‌து.

அவ‌ன் வ‌ருவானா?
கேள்வி
அந்த‌ இலைக‌ளின்
ச‌ல்ல‌டையில்
ஒழுகி
துடி துடிக்கின்ற‌ன‌.



"டென் க‌ம்மாண்மெண்ட்ஸில்"
மோச‌ஸ்
க‌ட‌ல் பிள‌ந்து வ‌ருவ‌து போல்
இந்த‌
வான‌ம் பிள‌ந்து அவ‌ன்
வ‌ந்துவிட‌ மாட்டானா?

இந்த‌ விள‌க்கு காத்திருக்கிற‌து.
இலைகள் காத்திருக்கின்ற‌ன‌.
இந்த‌ ஒளியும் காத்திருக்கிற‌து.
இந்த‌ ஒளிக்குள் ஒளிந்திருக்கும்
ஒரு இருட்டும்
இங்கு காத்திருக்கிற‌து.

==========================================






விண் தோன்றிய போதே....

விண் தோன்றிய போதே....
================================ருத்ரா

இது
சூப்பர் நோவா எனும்
புத்தொளியின் படம்.
ஒரு விண்மீன் தொகுதியை
(காலக்ஸி)ப்போல‌
பல நூறு கோடி மடங்கு
விரியும்போது தான்
புதிய‌ விண்வெளியின்
வ‌யிறு திற‌க்கிற‌து.
சாதார‌ண‌ சிறு விண்மீன்க‌ள்
ஹைட்ர‌ஜ‌ன் ஹீலியங்களை ம‌ட்டுமே
த‌ன் கொல்ல‌ம்ப‌ட்டறையில்
அடித்து உருக்கி வார்க்கிற‌து.
ஆனால்
இந்த‌ "பிர‌ப‌ஞ்ச‌வெளியிய‌லை"
இவ்வ‌ள‌வு துல்லிய‌மாக‌
அறிந்து கொண்ட‌
ம‌னித‌ அறிவு தோன்ற‌க்கார‌ண‌மான
கனமான மூல‌ப்பொருள்க‌ள்
(கார்ப‌ன் போன்ற‌ க‌ரிப்பொருள்க‌ள்)
குமிழியிட்ட‌து
இந்த‌ புத்தொளி மீன்
வெடிப்பின் சித‌ற‌லில் தான்.
விண்தோன்றிய‌ போதே
ந‌ம‌க்குத்தெரிந்த‌
விஸ்வ‌ரூப‌ம் இது தான்.
"ம‌னித‌னின் முத‌ல் விஸ்வ‌ரூப‌ம் இது"
ம‌னிதனே அப்புற‌ம்
க‌ட‌வுளின் விஸ‌வ‌ரூப‌ம் ப‌ற்றி
க‌ருத்து விதைத்தான்.
க‌ல் தோன்றி ம‌ண் தோன்றும்
முன்ன‌ரேயே
"விண்தோன்றியாய்"
விந்தை காட்டிய‌வ‌ன் ம‌னித‌ன்.
இந்த‌ தெளிவு வ‌டிவே
ம‌னித‌ம் எனும் ம‌ல‌ர்ச்சியின்
ஒளிவு வ‌டிவ‌ம்.

======================================






Attachments (1)


supernova.jpg
323 KB   View   Download


வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஜென்





ஜென்
========================================ருத்ரா

ஜென் என்றால் என்ன?
இப்படி கேள்வி கேடபதே ஜென்.
கேள்வியே இல்லாத போது
கேள்வியைத் தேடும் பதில் ஜென்.

கடவுள் பற்றி
தியானம் செய்யும் வகுப்பில்
முதலில் உட்கார்வது கடவுள்.
வகுப்பை துவக்குவது ஜென்.

பிற‌ந்து தான்
வாழ்க்கையை ப‌டிக்க‌ வேண்டும்.
இற‌ந்து தான்
வாழ்க்கைக்கு கோடைவிடுமுறை.

அடுத்த‌வ‌குப்பு துவ‌ங்கும்போது
புத்த‌க‌மும் புதிது.
மாண‌வ‌னும் புதிது.
ஆசிரிய‌ர் ம‌ட்டும் அதே ஜென்.

ஜென் ஒரு புதிர்.
ஜென்னை அவிழ்ப்ப‌தும்
இன்னொரு புதிர்.
ம‌று ஜென்ம‌ம் உண்டு.
அதுவும் இந்த‌ ஜென்ம‌த்தில் தான்
உண்டு.
அதுவும் "ஜென்"ம‌ம் தான்.

ஞான‌ம் ஒவ்வொரு த‌ட‌வையும்
தோலுரிக்கிற‌து.
அதுவும் ஜென்ம‌மே
இந்த‌ ஜென்ம‌த்தின் க‌ருப்பை
அறிவும் சிந்த‌னையும்.

வ‌ழியை மைல்க‌ல்க‌ளில்
சொல்வ‌து புத்தியின் அடையாள‌ம்.
மைல்க‌ல்க‌ளை பிடுங்கியெறிந்து விட்டு
வ‌ழியை தேட‌ச்சொல்வ‌து ஜென்.

க‌ண்க‌ளை மூடுவ‌து அல்ல‌ தியான‌ம்.
க‌ண்க‌ளை திற‌ந்து வைத்து
பார்வையை மூடுவ‌து தியான‌ம்.
காட்சிப்பொருள‌ல்ல‌ ஜென்.
காட்சியின் பொருள் ஜென்.

ம‌னம் ஊசிமுனையில்
க‌ழுவேற்ற‌ப்ப‌டும்போது
ஆகாய‌த்தில் முக‌ம் துடைக்க‌ச் சொல்வ‌து
ஜென்.

ஆசை முத்த‌ங்க‌ளின் ருசி கேட்கும்போது
அங்கு சிக்கி முக்கிக்க‌ல் ஜென்.
தீக்குள் விர‌ல் வைத்து தீண்டி
ந‌ந்த‌ லாலாவை சுவைக்கும்போது
தீயின் லாலி பாப் ஜென்.

ஜென்
எது?
ஜென்
யார்?
ஜென்
எங்கே?
ஜென்
எத‌ற்கு?

ஜென் ஒரு ஜ‌ன்ன‌ல்.
இங்கிருந்து மூட‌ல‌ம் திற‌க்க‌லாம்.
அங்கிருந்து மூட‌லாம் திற‌க்க‌லாம்.
ஆத்திக‌ன் திற‌ந்தால் நாத்திக‌ம் தெரிவான்.
நாத்திக‌ன் திற‌ந்தால் ஆத்திக‌ன் தெரிவான்.

எல்லோரும் பாயை சுருட்டி ம‌ட‌க்கி
எடுத்துக்கொண்டு போவார்க‌ள்.
உட்கார்ந்து தியான‌ம் செய்ய‌.
எல்லோரும் பாயை சுருட்டி ம‌ட‌க்கி
எடுத்துக்கொண்டு வ‌ந்து விடுவார்க‌ள்.

சுருண்டு ம‌ட‌ங்கி விரிந்து
சுருண்டு ம‌ட‌ங்கி விரிந்து
தியான‌ம் செய்தது
அந்த‌ பாய் ம‌ட்டுமே.
அந்த‌ பாய் ம‌ட்டுமே ஜென்.

த‌ய‌வு செய்து வீசிஎறியுங்க‌ள்
ஜென் ப‌ற்றிய‌ புத்த‌க‌ம் ஒன்றை
வான‌த்திற்கு.
க‌ட‌வுள்க‌ள் விண்ண‌ப்பித்திருக்கிறார்க‌ள்.

===========================================================ருத்ரா
எழுதியது :-  23 ஜனவரி 2014


ஓலைத்துடிப்புகள் (1)














சங்கத்தமிழ் மை தொட்டு சங்கநடைச்செய்யுள் வடிவக்கவிதைகளை "ஓலைத்துடிப்புகள்" என்ற தலைப்பில்  இங்கு எழுதியிருக்கிறேன்.
===============================================ருத்ரா இ.பரமசிவன்




ஓலைத்துடிப்புகள் (1)
================================================ருத்ரா.இ.பரமசிவன்

ஐங்குறு நூறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). 2015ன் உறக்கம் வராத ஏப்ரல் மாதத்து ஒரு நாள் நள்ளிரவில் ஓரம்போகியாரின் வரிகள் எனக்குள்ளேயே கவிதை எழுதும் தினவை ஏற்படுத்தியது.அவரது அந்த"புளிங்காய்ச்சுவை" எனக்குள் ஒரு சங்கத்தமிழ்ச்சுவையை  ஏற்றியது .அதன் விளவே இந்த "என் உரு தின்னும்.." கவிதை.



என் உரு தின்னும்...
=========================================ருத்ரா இ.பரமசிவன்

புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.
இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.
கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தன அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
ஊழ்த்த விடத்து என் எஞ்சும்?
கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!

============================================




பொழிப்புரை
===========================================ருத்ரா இ.பரமசிவன்


புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.




தலைவன் பொருள் ஈட்ட கடுவழி ஏகிய பின் தலைவி அவன் நினைவு வாட்ட துயர் உறும் நிலையே இப்பாடல்.அவள் கருவுற்ற‌ நிலையில் எதைத் தின்போம் என்ற மசக்கைத்துன்பம் அடைந்து பெரிதும் வாடுகிறாள்.புளியங்காய் தின்கிறாள்.மண் அளைந்து சுவைப்பதும் அதன் சுவைக்கு ஒளிபொருந்திய வாயின் நீர் ஊறி வழிந்து நூல்போல அருவியாய்  அசைந்த நீர்ப்படலமாய் பெருகும் காட்சியும் அங்கே விளங்குகிறது. சாம்பல் கூட தின்று பார்த்து அச்சுவையின் அருமையைக்கண்டு வியந்து இது என்ன சுவையாய் என்று இருக்கலாம் என்று ஒப்பு நோக்குகிறாள்.
அறுசுவைகள் கூட பிடிக்காமல் போகும் தனிச்சுவை அல்லவா இது.

இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.


அவன் பொருள் தேடி சென்ற அந்த இலவங்காட்டில் இலவங்காய்கள் காய்த்து தொங்கும்.நிலாப்பிறைகள் போல பச்சைக்காய்கள் ஊஞ்சல் ஆடி தொங்கும்.அத்தகைய அடர் காட்டின் கடக்க அரியதாய் உள் நுழைய இயலாததாய் விளங்கும் கடுவழியை விலக்கி வேறு வழி செல்ல முடியாத அப்படிப்பட்ட கடும்பயணம் எல்லாம் எதற்கு?" தலைவி தவிக்கிறாள். "பொருள் தேடிய வரை போதும்.தார் குச்சியை செலுத்தி தேரின் குதிரையை விரைந்து செலுத்துவாயாக.என் விழிகளை மலர்கள் என்பாயே.பார் அவை இப்போது உன்னைக்காண முடியாமல் முள் மரங்களில் சிக்கியதைப் போல் வேதனை கொள்கின்றன.இவை என்னால் தாங்க இயலுமோ?" என்கிறாள்




கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தன அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
ஊழ்த்த விடத்து என் எஞ்சும்?
கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!





கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்


தலைவின் கருவுற்ற நிலையின் துயரம் அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது."நெருப்பு மூட்டிய பின் போல் வளரும் அந்த உயிரின் கரு கேட்கும் சுவை என்னைத்தின்கிறது.அச்சுவை எதை ஒத்து இருக்கின்றதென (செத்தென அறியேன்) நான் அறிய மாட்டேன்.இப்படி கருவால் தின்னப்படும் என்னை உன் காதல் பொங்கும் உருவம் வேறு தின்ன வருகிறது.இந்த பெருஞ்சுவைப் பசியில் நோதல் உற்று இம்மலை கடல் விண் மற்றும் விண்மீன்கள் ஆகிய எல்லாம் தின்னத்தொடங்கிவிடுவேனோ என அஞ்சுகிறேன்.நீ வரும் தேரும் வழியும் கூட ஆர்வம் மிக்க என் கண்கள் தேடும் பசியின் சுவையில் தின்னப்பட்டு விடலாம்.அதனால் விரைந்து தேரை செலுத்து.இக்காதலில் கொடிய நோய் (கருவுற்ற மசக்கையோடு) பேரூழியாய் அழித்த பின் என்ன மிஞ்சும் என அறிவாயா?"


கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!





"உடம்பு இற்று விழும்.அதற்கு முன் என் உயிரைக் காப்பாற்று.பறவைகள் எல்லாம் குஞ்சுகளுக்கு இரையூட்ட விரைந்து வருவது போல் விரைவாயாக. வேக வேகமாக குளம்புகள் பதிய‌ஓடிவரும் சிறந்த அந்த குதிரை வலிமை ஆர்ப்பரிக்க அது செல்லும் நீண்ட வழியையும் உன் கைக்குள் அடக்கி மிக மிக வேகமாய் வருக" என்கிறாள் தலைவி நெஞ்சப் படபடப்போடு.


==============================================================





ருத்ராவின் குறும்பாக்கள்





ருத்ராவின் குறும்பாக்கள்
===========================


110 ஏ

"அணிலாடு முன்றில்....."
கேள்வியின் மைக்குகள்
வெளியே துரத்தப்பட்டன.

________________________________

ஒலிம்பிக்

நமக்கு
ஒரு பவுன் தங்கத்தில்
8 கிராமும் சேதாரம்

________________________________

"ஆகஸ்டு"கள்

70 வருடங்கள் சேர்ந்தாலும்
கேலண்டர் தாள்கள்
கிலோவுக்கு 10 ரூபாய் தான்

_____________________________________

கபாலி ரஜனி

கருஞ்சிறுத்தைகளுக்கு
கோட்டு சூட்டு
தைத்தவர்.

___________________________________


கமல்

செவாலியே என்றால்
"உலக நாயகன்" என்பதன்
பிரெஞ்சு மொழிப்பெயர்ப்பு.

___________________________________


ஸ்டாலின்

நிற்பது மரத்தடி நிழல் அல்ல‌
ஜனநாயகத்தின்
மனத்தடி நிழல் .

___________________________________

செம்பரம்பாக்கம்

நாங்கள் பைத்தியம் ஆனது
போதும்டா சாமி!
இனிமேல் உன் பேர் கீழ்ப்பாக்கம்.

______________________________________

ருத்ரா இ பரமசிவன்.











மணல் சிற்பம்.







மணல் சிற்பம்.
 ==========================================ருத்ரா இ பரமசிவன்

தூரத்து அலைகளின் ஒலி
கூர்மை தீட்டி
உளி எடுத்துக்கொடுத்தது.
அவன் விரல்களும் கைகளும்
மணலுக்குள் வாய்பிளந்து
ஊட்டியது..
உருவத்தை.
வடிவத்தின் செதில்களை.
அவள்
எப்படி சிரித்தாள்?
எப்படியோ சிரித்தாள்!
மணலின் வைரத்துளிகளோடு
அவன் போராடினான்
அந்த சிரிப்பை உயிர்ப்பிக்க.
அந்த சிரிப்போடு
கொத்தாக குலையாக‌
முந்திரிக்கொடியின் பின்னல் வைத்து
இனிப்பின் மின்னல் தெறித்ததே!
கன்னம் குழிய...
அவள் சிரித்தாளே!
பௌர்ணமிக்குள்
கருநாவல் பழம் எனும்
அமாவாசைப்பிஞ்சை பதித்தது போல்..
அந்த குழிக்குள்
கோடி சூரியன்கள் இருட்டாகின.
பளிங்குத்தருணங்கள்
வழுக்கி வழுக்கி உருண்டன.
அதை எப்படி கொண்டுவருவது?
மணல் சிப்பங்களில்
அவன் அளைந்து கொண்டேயிருந்தான்.
"கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பாளம்"
விளையாடிக்கொண்டிருந்தான்.
அது பிடிக்குள் வரவில்லை.
அலை இரைச்சல்கள்
அவன் அருகில் வந்து வந்து
நண்டுக்குழிககளாய்
வதம் செய்தது
புற்று நோய்போல் பொதிந்து நின்று
கற்பனையால்
கொஞ்சம் கொஞ்சமாய் கொன்றது.
சிரிப்பு "உருப்"படவில்லை.
சிற்பத்தின் மற்ற உருவம்
அழகை அப்படியே அள்ளிக்கொண்டு வந்து விட்டது.
என்  சிற்பம்.
அவன் கணிப்புக்குள்
அது
இன்னும் சிரிக்க ஆரம்பிக்கவில்லை.
முழுமை அடையவில்லையே!
அவள் சிரிப்பு இன்னும் விடியல் காட்டவில்லையே.
என் சிற்பத்தை வெறித்துப்பார்க்கின்றேன்.
அந்த கண்கள் கொள்ளை அழகு.
கடல்கள் எல்லாவற்றையும்
குடித்துத்தீர்த்துவிடுகிற‌
தாகம் அதில் தெரிந்தது.
கன்னங்கள்...
மூக்கின் கூர்மை..
உலக சரித்திரங்களையே
தடம் புரட்டிவிடுகின்ற
ஒரு கோணம் அதில் புதைந்து கிடப்பதாய்
எனக்குள் பரபரத்தன அலைகள்.
கரும்பு வில் ஏந்தியவன் கூட‌
துரும்பாய் அல்லவா இங்கு கிடப்பான்!
ஆனால் இதழ்கள் உருவாகும் இடத்தில்
அந்த சிரிப்புக்கு ஏங்கும்
ஒரு மூளித்தன்மையே
அங்கு மூடியிருந்தது.
அதைக்கண்டதும்
குபீரென்று ஒரு சிரிப்பு என்னிடம் பொங்கியது.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு..
இந்த அண்டமே இரு உதடுகளாய் பிளந்து
சிரிப்பது போல்...அந்த சிரிப்பு.
ஆயிரம் ஆயிரம் விஸ்வரூபங்களையும்
விழுங்கித்தீர்த்துவிடும் சிரிப்பு..
அந்த சிற்பத்தில் என் கால்கள் அளைந்தன.
சிற்பம் சிதைய‌
நர்த்தனமிட்டுக்கொண்டே
அந்த சிரிப்பு
"அந்த சிரிப்பை" தேடியது..
இப்போது ஒரே மணல் வெளி..
"ஏய் நில்! எங்கே ஓடுகிறாய்?
வா!மறுபடியும் விளையாடலாம்..."
அவள் சிரிப்பு மட்டும் கேட்டது.
இப்படி
என் சிற்பத்தைக் கலைத்துவிட்டு
கல கலவென்று சிரித்துக்கொண்டு ஓடுவாளே!
என் இதயங்களின் ரத்தங்களுக்குள் எல்லாம்
நயாகராவாய் பொழிந்து கொண்டேயிருக்கும்
அந்த சிரிப்பு.
எந்த உளி கொண்டு செதுக்குவது?
அலைகள்
ஹோ ஹோ ஹோ வென்று சிரித்தன.

======================================================


புதன், 24 ஆகஸ்ட், 2016

குறையொன்றுமில்லை கண்ணா



குறையொன்றுமில்லை கண்ணா!
============================================ருத்ரா இ பரமசிவன்

"குறையொன்றும் இல்லை கண்ணா"

வழக்கம்போல் நாங்கள்
எருமை மாடுகள் மேய்க்கின்றோம்.
சாணி குவித்து
சுவரில் அசோக சக்கரங்கள் போல‌
வறட்டி தட்டுகின்றோம்.
சாணி நாற்றமே எங்கள்
சாம்பிராணி பத்தி வாசனைகள்.
சுரண்டுபவர்கள்
சுருதி குறையாமல்
சுத்த "வர்ணமெட்டில்" பாட்டு பாடி
சுரண்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
மலைகள் காணவில்லை
கிரானைட்டுகளாக்கி
தின்று தீர்த்து ஏப்பம் இடுகிறார்கள்.
ஆறுகள் காணவில்லை.
தண்ணீர் எல்லாம் கேன்களுக்குள்.
இந்த கொள்ளைக்காரர்களின் வீடுகளில்
காசு மழை.
கரன்சி வெள்ளம்.
பொறியியல் மருத்துவக்கல்லூரிகள் எல்லாம்
லட்சம் லட்சம் லட்சங்களாய்
பணம் தின்னும் முதலைகளின்
பெரிய பெரிய கிட்டங்கிகளாகின.
ஆற்றைச்சுரண்டும் மணல் லாரிகள்
கருப்புப்பண சுரங்கங்கள்.
கண்ணுக்குத்தெரியாத ஸ்விஸ் பேங்குகள்.
அஞ்சோ பத்தோ
கிடைக்கிறத வாங்கி கிட்டு
எங்களையே அடிமாடுகளாய் ஆக்கி
காத்து நிக்கிறோம்
அடுத்த தேர்தல் கசாப்புக்கு.
மற்றபடி
குறையொண்ணுமில்லை கண்ணா!
அவர்கள் வீட்டில்
கிருஷ்ண ஜயந்தி பட்சணங்களுக்கும்
குறையொன்றுமில்லை கோவிந்தா !
கண்ணா! மணி வண்ணா!
உன் யமுனா நதி தீரமும்
இந்தியாவின் மொத்த சாக்கடையாய்
கூவத்து நாற்றத்துடன்
கூக்குரல் இட்டு குப்பைகளோடு
பஜனை செய்த உன்
பக்தர்களால் மாசு பட்டு போனதே!
இந்த "கம்சர்களே"
உன் "கீதையை"இங்கு எழுதுகின்றார்களே கண்ணா .
"குறையொன்றும்....."

அதற்கு மேல் கீதம் கேட்க முடியவில்லையே!
நீல வண்ணக்கண்ணா!
உன் புல்லாங்குழல் கூட அடைத்துக்கொண்டதே
அந்த சாக்கடையால்.

=======================================================









இத்தாலியில் பூ கம்பம்

  இத்தாலியில்  பூ கம்பம்
.

http://www.cnn.com/videos/world/2016/08/24/italy-earthquake-red-cross-intv.cnn/video/playlists/strong-quakes-around-the-world/

மேற்கண்ட சுட்டியின் புகைப்படங்களை பாருங்கள்

நம் உடம்பின் முதுகுப்பாகமோ
வயிற்றுப்பகுதியோ
இதய நுரையீரல் கொத்துகளோ
அப்படியே
பிய்த்து எறிந்து போட்டது போல்
நமக்கு
ஒரு மரணவலி தொன்றுவது போல்
இருக்கிறதே!

இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?
அந்த ராட்சச எந்திரங்கள் போல்
உடனடியாய்
கைகளின் பத்து விரல்களும்
அந்த கட்டிடக்குப்குப்பையை அகற்றி
மனித உயிர்களை மீட்க வேண்டும்.
குடியிருப்புகள்
அந்த அழிவின் கர்ப்பப்பையிலிருந்து
உடனே பிரசவித்தாக வேண்டும்.
அதற்காக‌
நாம்
பணத்தால்
மனத்தால்
மற்றும்
எல்லாவகை ஆதரவுகளாலும்
ஆறுதல் கரங்கள் நீட்டுவோமாக!

========================================ருத்ரா இ.பரமசிவன்

"செவாலியே" கமல்

"செவாலியே" கமல்
==========================================ருத்ரா
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
என்று பால்வடியும் முகத்தில்
இன்று
நடிப்பின் "நயாகரா"அல்லவா
ஒரு பால் ஊழியின் பிரளயத்தை
அங்குலம் அங்குலமாய் காட்டுகிறது.
ஒரு "குணா" போதும்
அதிலிருந்து
ஒன்பதாயிரம் குணாக்களை
தோலுரித்துக்காட்ட வல்லவர்.
"சப்பாணியாய்"
நம்மை நிமிர்ந்து உட்கார்ந்து
பார்க்க வைத்தவர்
"உத்தம வில்லன்" வரை
நடிப்பில்
"உலகம் சுற்றி"வலம் வந்து விட்டார்.
செவாலியே கமல் என்ற
விருது
தமிழ் நாட்டைப்பொறுத்த வரைக்கும்
"செவாலியே கமல்" என்று உச்சரித்தாலும்
"சிவாஜியே கமல்" என்று உச்சரித்தாலும்
ஒரே மாதிரியாய் ஒலித்து
பூரிக்க வைக்கிறது.
எனவே அவர் பெயரின் முன்
இரண்டு "செவாலியே"க்கள்
ஒட்டிக்கொண்டது.
அவர் படங்களையெல்லாம்
பட்டியல் போட்டு
எழுதிப்பார்த்தாலே போதும்
இற்றைய நாட்களின்
"விஜய சேதுபதிகள்"எனும்
வைரப்புதையல்களை
கையில் அள்ளி மகிழலாம்.
தமிழ் நாட்டு
நடிப்புக்கலையின் செங்கோல்
இவர் கையில் இருந்து சுழல்கிறது
இருட்டுக்குள் இன்னும்
காமிரா நோக்கி தடவிக்கொண்டிருக்கும்
மாணர்களுக்கு
வெளிச்சம் காட்டும்
"கலங்கரை விளக்கமாக".
ஓங்கி வளர்க!
கமல் எனும் இக்
கலைச்சூரியனின் புகழ்!

======================================================

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

கொறிக்க கொடு..

























கொறிக்க கொடு..
============================================ருத்ரா இ பரமசிவன்.

எதையாவது எழுது.
படிப்பவன் விலா எலும்பை
உடைத்து முறுக்க‌
எழுத்துக்களின்
"கோணா மாணாவுக்குள் நுழை"
அட ! அப்படியா!
என்று வாய் "ஸிப்பை"
எப்படியாவது கிழித்து விடு.
அது கலக்கல் காமெடி ஆகிவிடும்.
இன்னும்
வயிற்றைக்கலக்க‌
ஏதாவது
குட்டிச்சுவர்
கக்கூஸ் சுவர் காவியங்களை
தெளி.
என்னத்தையோ கொறிக்க கொடு.
கடலை போடுவதிலிருந்து
கடலை தாவுவது வரை
ஏதாவது
பொட்டுக்  கடலையை சிதற விடு!

ராசி  பலன்கள்..
சாதி சூத்திரக்கயிறுகளைக் கொண்டு      
முடிச்சு போடும் கல்யாண  மாலைகள்...
கும்பாபிஷேக ஃ போட்டோக்கள்..
புற்றீசல் கூட்டங்களின்  பூஜை புண்ணிய அளப்புகள் ....
தனியுடமைத்தினவுகளுக்கான
நகாசு விளம்பரங்கள்...
வீட்டு மனைகள் ..காட்டு பங்களாக்கள்..
தனிமைத்தருணங்களை
மத்தாப்பு கொளுத்திய
மதர்ப்பான நிகழ்வுகள்..
இன்னும் இன்னும்..
புருடா கருடா பொறம்போக்கு  புராணங்கள்...
மறைமுகமாய் சப்பைக்கட்டும்
அரசியல் அசிங்கங்கள்..
மசாலா தடவிய
நடிகர் நடிகைகள் பற்றிய கிசு கிசுப்புகள்..
அந்த
பஞ்ச்  டயலாக் காரர்களின்
பஞ்சாங்க பேச்சுக்கள்...

அதுவே
வைர(ல்) எழுத்துக்கள்.
நோய் பரவட்டும்.
மண்ணாகக் கிடந்தவன் மனசு
பல் முளைத்து
அரைக்க ஆரம்பித்து விடட்டும்
அது போதும்
எப்போதும்
"பெட்" ஆகி அவன்
உன் மடியிலேயே
சடையை சட சடத்துக்கொண்டிருக்க.

"வாஷிங் பவுடர்"களிலிருந்து
"ஃ பேஷன் லோஷன்"கள் வரைக்கும்
விளம்பரத்து மோப்பங்களை மேயவிட்டு
"பாப் அப்" சன்னல்கள் மூலம்
பொருளாதார மூலங்களின்
முலைப்பாலை உறிஞ்சிக்கொள்ள
அவை போதும்.

அதோ அங்கே..
அசை போட்டு சவைக்க காத்திருக்கின்றன
அந்த தவிட்டுக்கும்
மாட்டுப்புண்ணாக்குகளுக்கும்!

==================================================
22.ஆகஸ்டு 2016........06.55 மாலை.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

பாய்





பாய்
=========================================================
ருத்ரா  இ பரமசிவன்




என் உள்ளே
வெங்காயக்குகை.
உரித்தேன்
ஆயிரம் ஆயிரம் வானம்.
சந்திர மண்டலத்து சதை பிய்ந்து இருந்தது.
ஆர்ம்ஸ்ட்ராங்கின் கால் நகம் பட்டு.
பழனி போகரும்
அங்கிருந்து மண் எடுத்து நெய்து
ஞானப்பழத்துச் சின்னப்பயலுக்கு
கோவணம் கட்டினார்.
"ஃபான்டாஸ்டிக் வாயேஜ்" நாவல் மாதிரி
என் சிறுகுடலுக்குள் சென்றேன்.
நுரையீரல் பூங்கொத்துகளில்
பிருந்தாவன் நந்தகுமாரன்களை
மயில்பீலி கிரீடத்துடன்
நடமாட விட்டேன்.
மூளையின் ஆப்லாங்காட்டா
அப்புறம் நியூரான் சினாப்டிக் ஜங்ஷன்
பர்கிஞ்சே செல்களோடு
கிசு கிசுத்து என் முந்தைய‌
ஐயாயிரத்து ஒன்பதாம் ஜன்மாவில்
திளைத்துக்களித்தேன்.
கடைசியாய்
குண்டலினியின் பிரம்மரந்த்ரத்தின்
நுனிக்கொம்பர் ஏறி
"அஃது இறந்து ஊக்கி..."


"போதும் எழுந்திருங்கள்.
ட்ரான்செண்டென்டல் தியானம் முடிந்தது.
போகும்போது
ஃபீஸ் பாக்கி இல்லாமல் கட்டி விட்டுப்போங்கள்.
மகரிஷி ஹோலோகிராம் போட்ட‌
ரசீது வாங்கிக்கொள்ளுங்கள்"

நான் அந்த‌
குட்டிச்சதுரப்பாயை
சுருட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு புறபட்டேன்.

===================================================