புதன், 17 ஜூலை, 2024

கல்லாடன்.

 


ஆதலினால் காதல் செய்வோம்.

_____________________________________

கல்லாடன்.



பட்டாம்பூச்சிகளுக்கு

பட்டா போட்டுக்

கொடுத்து விட்டார்கள்

அவற்றின் சிறகுகளை 

சித்திரவதை செய்ய.

அதன் வண்ணங்களைப் பிழிந்து

கூந்தலுக்கு

சாயமேற்றிக்கொள்ள.

மனத்தின்

ஏதாவது ஒரு பிஞ்சில்

அது பிளிறத்தொடங்கியிருக்கிறதா

என்று 

செவி கொடுக்காமலேயே

ஒரு பெரிய மலையை

ரோஜாப்பூவாக்கிக்கொண்டு

நின்று கொண்டிருக்கிறார்கள்.

உயிரற்ற செல்ஃபோன்

ரீல்களை

மண்ணுளிப்பாம்புகள் போல்

உள்ளே

நெளிய விட்டுக்கொண்டு.


__________________________________________







____________________________________


ஆழமான மனவலிகளின்

ஜாமெட்ரி தானே

அந்த உளியும் 

தூரிகையும்.

____________________________________

கல்லாடன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக