வெள்ளி, 26 ஜூலை, 2024

தொடு வானம்

 

தொடுவானம் பார்ப்பது

ஒரு தாய்க்கு

ஒரு குழந்தை

பிறந்த உடனேயே

ஆரம்பித்து விடுகிறது.

நான் இந்த வானத்தை தான்

இத்தனை நாளாய்க்காத்திருந்து

கருவுற்றேனா

என்று திடுக்கிட்டுப் போகிறாள்.

அந்த வானம் நம் கைப்படாமல்

எப்போதும்

ஒரு கள்ளத்தனமான 

தீண்டாமையைத்தான் 

வைத்துக்கொண்டிருக்கிறது.

அது

கடவுளாயிருந்தால் என்ன?

மனிதனாயிருந்தால் என்ன?

யாரும் யாருக்கும் 

அகப்படுவதாயில்லை.

வாழ்க்கை இதை நமக்கு

சொல்லித்தரும்போது

அந்த தொடு வானம்

நம்மைவிட்டு வழுக்கிக்கொண்டுவிடும்

அது

ஒரு பெரிய உயரம்

அல்ல 

ஒரு நீண்ட ஆழம்.

மரணத்தை எப்படிவேண்டுமானலும்

அழைத்துக்கொள்ளுங்கள்.

____________________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக