முத்தாய்ப்பு
_______________________________________
11.07.2024 / 03.40 PM
அருமையான கவிதை என்று
முத்தாய்ப்பு வைப்பது
தூக்குத்தண்டனை தீர்ப்பை
எழுதிவிட்டு
பேனாவின் நிப்பை முறிப்பது ஆகும்.
அந்தக்கயிறும்
அந்தத்துடிப்பும்
கூட
ஒரு "காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட்"தான்.
இந்த சமுதாயம் முழுவதுமே
ஃப்ரான்கென்ஸ்ட்டீன் பிணமனிதர்களின்
சந்தைத்திடல் தான்.
ஆடுகள் நூறு கோடிக்கு
வியாபாரம் ஆனது என்று
கத்திகள் சந்தோஷப்பட்டுக் கொண்டன.
பசியா?
கோபமா?
எது கடவுள் அல்லது சைத்தான்?
______________________________________________
கல்லாடன்
(மௌவல் குழு மடலில் திரு முகமது பாட்சா அவர்களின்
கவிதைக்கு பின்னூட்டம் இது)
________________________________________________________________
ஒரு கவிஞர்
"பிரேதப்புலம்பல்" என்று
ஒரு சொல்லை
வீசியிருந்தார்.
என்ன ஒரு சொல் அது?
சடக்கென்று ஒரு சவம்
சப்பணமிட்டுக்கொண்டு
மூக்கைச்சிந்திக்கொண்டு
தனக்குத் தானே
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது
போல் இருந்தது அது.
மனிதப்பிழம்பில்
ஒரு ஆழமான காயத்தை அல்லவா
அது காட்டியிருக்கிறது.
அணுகுண்டுகளாலும்
அதன் திகில்களாலும்
இந்த உலகம் ஏற்கனவே
ஒரு சவம் ஆகிப்போனது.
அதனால் இனி
இங்கே என்ன அறிவு
கொழுந்துவிட்டு எரிந்தாலும் சரி
இலக்கியங்கள்
எத்தனை எத்தனை
குவிந்தாலும் சரி
கடல் போல கவிதைகள்
தளும்பிக் கொண்டிருந்தாலும் சரி
மரணத்தின் சுரங்கங்கள் தான்
தினம் தினம் வெட்டி யெடுக்கப்படுகின்றன.
பில்லியன் பில்லியன்
டாலர்கள் பிணக்குவியலாய்...
இந்த உலகம்
சோகத்தின் கனம் தாங்காத
பாரத்தில் தத்தளிக்கிறது.
அந்தக் கவிதையின் பாரமும்
அத்தகையதே.
அதைத்தான் இப்படி எழுதினேன்.
அருமையான கவிதை என்று
முத்தாய்ப்பு வைப்பது
தூக்குத்தண்டனை தீர்ப்பை
எழுதிவிட்டு
பேனாவின் நிப்பை முறிப்பது ஆகும்.
அந்தக்கயிறும்
அந்தத்துடிப்பும்
கூட
ஒரு "காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட்"தான்.
இந்த சமுதாயம் முழுவதுமே
ஃப்ரான்கென்ஸ்ட்டீன் பிணமனிதர்களின்
சந்தைத்திடல் தான்.
ஆடுகள் நூறு கோடிக்கு
வியாபாரம் ஆனது என்று
கத்திகள் சந்தோஷப்பட்டுக் கொண்டன.
பசியா?
கோபமா?
எது கடவுள் அல்லது சைத்தான்?
______________________________________________
கல்லாடன்
சொற்சடலங்களை
குவித்து
கவிதைத்தொகுதி
என்று அச்சுக்கோர்த்தேன்.
கட்டு கட்டுகளாய்
புத்தகத்தேக்கம்.
நூலாம்படை கட்டிய
நூல் கூடுகளாய்
தூசி படிந்து கிடந்தன.
அடக்கமுடியவில்லை
தும்மல்கள்.
அந்த புத்தகங்கள்
என் உள்ளத்து நெய்தல்கள்.
நொந்து போனேன் தான்.
இப்போதும்
நொந்து நூலாயினேன்.
________________________________
கூலவாணிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக