திங்கள், 30 நவம்பர், 2020

"run amuck"

 இதோ அந்த ஆங்கிலக்கவிதை

_________________________________


please do not fall in line

to that "run amuck" class with a fervour

of the god-spell brimming

all your lungs!

the ages after ages heap with

moth-eaten concepts 

of pray and pray unto these worms and germs.

man by himself bears all the crux of

these cosmology and what not?

everywhere around you the

obnoxious designs of caste and creed

shroud your charms of harmony and love!

Emerge a man among this mass

and feel your momentum..

don't be blind when the 

eye of your own storm hinges on 

you ..a hallow of a change

to throw all these corpses away and afar!

____________________ruthraa

தலை தெறிக்க எங்கே ஓடுகிறீர்கள்?

  தலை தெறிக்க எங்கே ஓடுகிறீர்கள்?

அந்த நாமாவளிப்பாடல்களை

மூச்சிரைக்க மூச்சிரைக்க‌

உங்கள் நுரையீரல்களுக்குள் 

நிரப்பிக்கொள்ளவா?

காலங்கள் தோறும் காலங்கள் தோறும்

செல்லரித்துப்போன அந்த‌

சொற்களையா குவித்துவைத்துக்

கொண்டிருக்கப்போகிறீர்கள்?

எல்லாம் 

புல்லிய உயிர்களுமாய் புழுக்களுமாய்

அந்த வழிபாடுகளில் 

நெளிந்து கிடக்கின்றன.

மனிதன் என்பவனே எல்லாமாய்

அவன் அறிவு மூலம்

இந்த பிரபஞ்சம் எல்லாம் 

பிதுங்கி வழிகிறான்.

எல்லா 

ஆற்றல்களின் இடைவெளிக்குள்ளும் 

கணித சூத்திரங்களாய்

கண் சிமிட்டுகிறான்.

மனிதா! உன்னைச்சுற்றி

நஞ்சாகிப்போன வேதாந்தங்கள்

பிளவு வாதங்கள் ஆயிரம் பேசுகின்றன.

ஒன்றிழைந்த உன் தூய அன்பு வாதத்தை

பிணங்கள் மூடும் சல்லாத்துணி கொண்டு

போர்த்துகின்றன.

மந்தையிலிருந்து தனித்தெழு!

மானிட ஒளியாய் சீறு!

உன் உயரே புதிய மாற்றத்தின்

ஊற்றுச்சுழி சுழல்கிறது.

கண்ணிழந்தவனா நீ?

உன் புயலின் கண்விழி வீச்சு

சவங்களாகிப்போன சிந்தனைகளை

எங்கோ ஒரு அப்பாலுக்கு

துரத்தி அடிக்கட்டும்!

____________________________________________ருத்ரா

எனது ஆங்கிலக்கவிதையின் தமிழ்க்கவிதை.

சனி, 28 நவம்பர், 2020

சிந்தனை செய் மனமே!

சிந்தனை செய் மனமே!


_______________________________________________ருத்ரா




காற்றைப்போல 


நமக்கு கடவுள்.


காற்று தான் கடவுள்.


காற்று அற்றுப்போன இடத்தில்


உயிரும் அற்றுப்போகிறது.


அப்படியென்றால் 


வாருங்கள் 


காற்றை உரித்து


கடவுள் தரிசனம் செய்வோம்.


ஆமாம்


அதற்கு ஆயிரத்தெட்டு


"யோகா" இருக்கிறது.


மூச்சின் நூலேணி ஏறி


பிரம்மதரிசனம் செய் என்றார்கள்.


அந்த நுரையீரல் வனத்துள்


திளைத்துப்பார்த்தோம்.


உயிர் வளியும் 


கரி வளியும் தான்


அங்கே மாலை மாற்றிக்கொண்டன.


வர்ணங்கள் அற்ற அந்த வனத்தில்


மூளிப்பிரம்மம் மட்டுமே


மூண்டு கிடக்கிறது.


இதற்குள் ஏது


உங்கள் முப்புரி நூலும்


மிலேச்சத்தனமான


சிந்தனை மலங்களும்?


சாதிகளின் சதிவலைகளும்


ஆதிக்க அசிங்கங்களும் அங்கே இல்லை.


வாயு புத்திரனுக்கு


உத்தரீயம் போட்டு


பிரம்மோபதேசம் செய்வதாயினும்


காற்று தான்


ஊற்று.


இதில் ஏன் பொய்களை


ஊதி பூதம் காட்டுகிறீர்கள்.


ஒரு மனிதனின் குடலைப்பிடுங்கி


மாலையாகப்போட்டு


மனமகிழும் கடவுள்களின்


மனம் எனும் மலக்குடலில்


என்னத்தை 


நாம் யோசித்துப்பார்க்கவேண்டியுள்ளது?


பிரம்மத்தையா?


நீ சொல்லும் பிரம்மம்.


நான் சொல்லும் பிரம்மம்


என்று


"ப்ராண்டு"கள் 


எதற்கு உருவாயின?


இந்த மனிதனின் கீழ் தான்


மற்ற எல்லா மனிதன்களும்


கரப்பான் பூச்சிகள் போல‌


நசுங்கிக்கிடக்க வேண்டும்


என்ற தர்மங்கள் எதற்கு உருவாயின?


தர்மங்கள் அதர்மங்கள்


என்று தராசுத்தட்டுகளை


ஏந்தியிருக்கும்


கைகள்


அதர்மங்களில் முளைத்தவையா?


என்ற ஐயங்கள் எப்படி


இங்கே புகை மூட்டம் போட்டன?


யுகங்கள் எல்லாம்


உடல் பிளந்து


உயிர் இழந்து


ரத்தச்சேற்றில் அவை


புதைந்து போவதற்கு


இந்த கேள்விகளே


முதலில் முளை விடுகின்றன.


இவற்றை மூர்க்கமாய் கிள்ளிஎறியும்


சிந்தனை வடிவங்களுக்குள்


மதங்கள் கண்ணாமூச்சி ஆடும்


நிகழ்வுகளைத்தான் 


தினந்தோறும் காண்கிறோம்.


மானிடனே!


நீ மந்தையில்லை.


உன் அறிவின் கூர்மை ஒன்றே


உன் ஆயுதம்.


நீ கிழிந்து கந்தலாய்ப்போகுமுன்


உன் கூர்மை காட்டு.


கூர்ம அவதாரங்கள் எல்லாம் இருக்கட்டும்.


உன் கூர்மையின் அவதாரமே


நீ மழுங்கல் அடைந்து மக்கிப்போவதை


தடுக்கும்.


சிந்தனை செய் மனமே!


அவர்களின் தீ வினைகள் அழிந்துபோக‌


சிந்தனை செய் மனமே!


சிந்தனை செய்!




______________________________________________










அதன் அர்த்தம் என்ன?

 அதன் அர்த்தம் என்ன?

______________________________________ருத்ரா


அதன் அர்த்தம் என்ன?

அந்த புன்முறுவலில் 

நான் புதைந்து விட்டது 

கொஞ்சம் கொஞ்சமாய் புரிகிறது.

என் கண்களின் விளிம்பில்

அந்த இருளும் ஒளியும்

ஒன்றுள் ஒன்று நுழைந்ததாய்

என்னை ஒரு

இன்பத்தின் சதுப்பு நிலக்காட்டில்

அமிழ்த்துகிறது.

அவள் சிரிப்பு என்ன சொல்லை

உள்ளே தைத்து வைத்திருக்கிறது?

தெரியவில்லை.

அதை தெரிந்து கொள்ளாமலேயே

இந்த அமுதக்கடலில்

ஆழ்ந்து கொண்டிருக்கிறேன்.

சிரிப்புக்கு அர்த்தமா?

சிரிப்பு சிரிப்பு மட்டும் தான்

என்று

இன்னொரு சிரிப்பில் 

ஒன்றுமில்லை என்று

ஒரு சூன்யத்தில்

என்னை அமிழ்த்தி விட்டால் 

என்ன செய்வது?

அந்த சிரிப்பின் அர்த்தம் 

எனக்குள் மின்னல் பிழம்பின் 

"களித்தொகை"யில்

ஒரு நங்கூரம் பாய்ச்சியிருக்கிறது.

அது அப்படியே இருக்கட்டும்.

அதைக் காதல் என்று

மொழிபெயர்க்க‌

என் இலக்கண இலக்கியம்

முதுகெலும்பு அற்று விழுந்து கிடக்கிறது.

உறுதியாய்

அவள் ஒரு சொல் உதிர்ப்பாள்

அதில் என் பூமி

விதைத்துக்கொள்ளும்

எல்லாவற்றையும்.

அறுவடையாய் அவள் இதயத்தை

அள்ளிக்கொள்ளும் வரை

அவள் சிரிப்பு போதும்.

அந்த அமுதத்தடம் மட்டுமே 

போதும்.


_______________________________________________



வியாழன், 26 நவம்பர், 2020

வேண்டும் வேண்டும்

 வேண்டும் வேண்டும்

______________________________ருத்ரா


நமக்கு 

உணவு வேண்டும்.

உடை வேண்டும்.

உறைவிடம் வேண்டும்.

வேண்டுதல் வேண்டாமை இன்றி

நமக்கு வேண்டும்

ஒரு சொல்.

"வேண்டும்" என்ற சொல்லே அது.

நமக்கு என்ன வேண்டும்?

நமக்கு என்ன வேண்டுமோ 

எல்லாம் தரும் 

நம் தமிழ் நமக்கு வேண்டும்.

தமிழ் மூச்சு வேண்டும்.

தமிழ் பேச்சு வேண்டும்.

இவற்றிற்கு உயிர் தரும்

தமிழ் உணர்வு வேண்டும்.

நம் தமிழை நசுக்க வந்திருக்கும்

நச்சுத் தந்திரங்கள் எல்லாம் 

அழிய வேண்டும்.

அதற்கும் கூட‌

நம் தமிழ் நமக்கு வேண்டும்.

நாம் வேண்டுவதை நாம் பெறும்

உரிமை 

நாம் பெற்றே ஆக வேண்டும்.

தமிழ் காக்கப்பட வேண்டும்.

தமிழகம் காக்கப்பட வேண்டும்.


______________________________________

எப்போது வருவாள்?

 எப்போது வருவாள்?

_______________________________ருத்ரா


கனவு என்பது

போதைகளின் போர்வை.

தூக்கம் கலைக்கும்

கொசுக்களையும் கவலைகளையும்

விரட்டியடிக்கும் 

ஒரு சல்லாத்துணியில்

அவனது போர்வை கலைத்தையல்

செய்யப்பட்டிருந்தது.

அழகிய பூக்கள்

அவற்றை மொய்க்கும் 

பட்டாம்பூச்சிகள் 

இவையெல்லாம் அச்சிடப்பட்டிருந்தன.

ஒரு பூங்காவே போர்வை ஆகி

பொன் மேகக்கூட்டங்களே

அதில்

நெசவு ஆகியிருந்தன.

ஆனாலும் 

அவள் முகத்தை அங்கு

காணவே இல்லை.

கண்கள் வலிக்க மூடிக்கிடந்து

கற்பனையைக் காய்ச்சி வடிகட்டி

அந்த ஊமைப்பிழம்பில்

ஊற்றிக்கொண்ட போதும்

அவள் முகம் அங்கே

வரவே இல்லை.

இருப்பினும்

சட்டென்று போர்வையை 

உதறி எறிந்து விட்டு

ஸ்கூட்டரை கிளப்பிக்கொண்டு

அவன் புறப்பட்டு விட்டான்.

எங்கே?

அவளைப்பார்க்கவா?

அவனுக்கே தெரியாது.

ஏனெனில் 

அவளுக்கு இன்னும் 

ஒரு காதலி கிடைக்கவில்லை!

என்ன!

இந்த மின்னணு வனத்திலா

ஒரு மின்மினி கூட கிடைக்கவில்லை?

ஆம்...

அவன் கலித்தொகையிலும் 

குறுந்தொகையிலும்

மனம் தோய்த்துக்கிடந்தான்.

அந்த "முளி தயிர் பிசைந்த‌

மென் காந்தள் விரலை"த்தேடினான்.

"கல் பொரு சிறு நுரை"ய‌ன்ன

காதல் பிரிவோடு துடிக்கும் அந்த‌

தட்டாம்பூச்சியின் கண்ணாடிச்சிறகுகளோடு

கண்புதைத்து செவி தைத்துக்கிடந்தான்.

நெடுநல் வாடைக்குள்ளும் 

அவன் மனம் தொடுநல் வாடை தேடி

சூடேறிக்கிடந்தான்.

எப்போது வருவாள் அவன் காதலி?


_____________________________________



செவ்வாய், 24 நவம்பர், 2020

தூண்டில்

தூண்டில் 

---------------------------------------------- ருத்ரா 

காலம் என்ற கடலில் 

காலத்தையே துண்டில் போட்டேன்.

அதில் துடித்து வந்தவையே 

இந்த கவிதைகள்.


=========================================


உடலை முடிச்சு போட்டு

உட்கார்.

உலகம் அவிழ்க்கும்.


சென்

______________________ருத்ரா


ஒவ்வொன்றும் நத்தைக்கூடு.

ஆயிரம் சூரியன் ஆயிரம் நிலவு.

கவலை இல்லை.


கவிதை.

_________________________ருத்ரா


பேனாவின் உள்ளுக்குள்

இருந்தே

உலகைப்பார்!


ஹைக்கூ

__________________________ருத்ரா


ஒரு பூணூல் போதாதா?

ஏழா வேண்டும்?

சனாதனக்கிறுக்கு பிடித்த‌ 

வானமே.


வானவில்

_________________________ருத்ரா

ஆயிரம் பேர்

__________________________ருத்ரா


சஹஸ்ரநாமம் என்று

ஆயிரம் பேர் சொல்லி

பூப்போட்டு அழைத்தான் ஒருவன்.

வரவில்லை.

அடேய்! செவிட்டுப்பயலுக்கு

பிறந்த பயலே!

என்றான் ஒருவன்.

ரோஷம் வந்து அவன்

வெடித்து

வெளியே வந்து விட்டான்.


பிக்பேங்க்

_______________________________ருத்ரா




(அழகிய படங்கள் பார்த்து எழுதிய கவிதைகள் இவை)



இது "ஃபேஸ் "புக்" அல்ல‌

அழகு பற்றி சொல்லும்

உலகத்திலேயே உள்ள 

ஒரு பெரிய நூலகம்!


_____________________________ருத்ரா 


உலகப்பேரழகியே!

உற்றுப்பார் அந்த மலரை!

அதன் பொறாமையை!

______________________________ருத்ரா

திங்கள், 23 நவம்பர், 2020

தரிசனம்

 தரிசனம்

________________________________ருத்ரா


கடவுள் இருக்கிறாரா?

இல்லையா?

இது கேள்வி அல்ல.

நம்பிக்கையின் விளிம்பிலிருந்து

விழும் ஓர் அருவி.

அதன் ஓசைக்குள்

அறிவுப்பரல்கள் சிதறுகின்றன.

அந்த சலங்கைக்குள் 

எட்டிப்பார்.

அவர்கள் பிரம்ம நர்த்தனம் 

என்பார்கள்.

இவர்கள் ப்ளாங்க்ஸ் கான்ஸ்டன்ட என்று

நுண்கணக்கு சொல்வார்கள்.

மனிதனின் உணர்ச்சியற்ற கல்லில்

கடவுள் இல்லை இல்லவே இல்லை

என்று

கல்வெட்டு செதுக்கப்படுகிறது.

மனிதன் அடிமனத்துள்

அச்சம் திகில் என்று 

தீக்கொளுந்துகள்

பற்றிக்கொள்ளும்போது

கல்வெட்டே அழிந்து போகிறது.

கடவுள் 

ஒரு மனிதனாய்

நம்மிடையே காலாற நடக்கும்போது

மேலும் மேலும்

புதிய பரிமாணங்களில்

பரிணாமம் கொள்ளுகிறான்.

அறிவின் வெளிச்சத்தோடு

கடக்கும் மைல்கற்களே இங்கு

ரத்னக்கற்கள் ஆகும்.

அப்போது அந்தக்கடவுள்

ஒரு பெரியாரின் கையின் கைத்தடியாய்

ஊன்றி ஊன்றி 

ஓசைப்புயல் எழுப்பி

அறியாமைத்தூக்கத்தைக்

கலைத்து கெடுக்கும்போது

கடவுளே கடவுளற்றவனாய்

காட்சி அளிக்கின்றான்.

இது கடவுளுக்கு கடவுளற்றவன் 

தரும் ஒரு தரிசனம்.

______________________________

பூக்காரி

 பூக்காரி

_____________________ருத்ரா.


அந்தக் கூடை நிறைய‌

நம் கனவுகள்.

அவளுக்கோ 

அவள் குழந்தையின்

பசிக்குரல்கள்.


____________________________

மணல் சிற்பம்

 மணல் சிற்பம்

_________________________________ருத்ரா


நீ வருவாய்
என 
இந்த மெரீனா கடற்கரையில்
காத்திருந்தேன்.
காலம் கரைந்து கரைந்து
உருகி 
எங்கோ காணாமல் போய் விட்டது.
நீ வரும் வரையில்
உன் முகத்தை 
மணல் சிற்பமாய் உருவாக்கலாம்
என்று
அந்த மணல் துளிகளில்
விரல்கள் அளைந்தேன்.
விரல்களில் அகப்பட்டது
நம் இதயங்கள் மட்டுமே.
உன் முகம் எங்கே?
உன் புன்னகையின்
அந்த மின்னல் வரிகளை 
எங்கே எங்கே
என்று மணலோடு மணலாய் 
இழைந்து கிடக்கிறேன்.
கூட்டம் சேர்ந்து விட்டது.
அதோ
அந்தக்கூட்டத்தில்
நீ நிற்கிறாய்!
உன்னை நினைத்து தொட்டதில்
அந்த கடற்கரை மணல்
அத்தனையும் பொன் துளி ஆனதால்
சுடர் பூத்த உன் விழிவெள்ளம் 
என்னை எங்கோ அடித்துக்கொண்டு
போய்விட்டது.
அதனால்
இப்போது நான் 
என்னைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

____________________________________



ஞாயிறு, 22 நவம்பர், 2020

உலக ஆண்கள் தினம்

 உலக ஆண்கள் தினம்

_______________________

ருத்ரா


பெண்களைப்போற்றுதும்!

பெண்களைப்போற்றுதும்!

ஆண்களின் நினைவெல்லாம்

பெண்களே ஆனதால்

பெண்களைப்போற்றுதும்!

பெண்களைப்போற்றுதும்!


________________________________

ஒளி படைத்த கண்ணினாய்.....

 ஒளி படைத்த கண்ணினாய்..... 

____________________________________ருத்ரா


இந்திய ஜனநாயகமே!

உன் முகம் சிதையும்

யுகம் இன்று

உன் முகத்தில் 

உன் மூக்கின் அருகே வந்து

தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறதே

இதன் சாக்கடை சுவாசம்

உன்னைக்

கொஞ்சமும் நெருடவில்லையா?

பீகார் எனும்

பிரதேசத்தில்

சாதிகளின் மதங்களின்

சதுரங்கக்காய்கள்

ஆடிய நர்த்தனங்களில்

இந்திய அன்னையின் திருப்பாதங்களே

காயம்பட்டு 

ரத்தம் வடிப்பது 

உனக்கு வலிக்க வில்லையா?

இவிஎம்

தேர்தலின் இதயம் என்றார்களே

அதன் ரத்த நாளங்களைத்

சொடுக்கி

ஓ! புனிதமான ஜனநாயகமே

உன்னை 

அவர்களின் "திருகு தாளங்களுக்கு"

ஏற்றவாறு ஆடவைத்துவிட்டார்களே!

வெள்ளமெனத் திரண்ட‌

எதிர்க்கட்சிகளின் கனவுகளின்

மென்னியைத் திருகி

தன் சுயலாபத்தை 

தக்க வைத்துக்கொண்டார்களே!

இதை எந்த‌

நீதித்தராசில் போட்டு

நியாயம் தேடுவது?

தராசுக்கோலை அழுத்திப்பிடிக்கும்

இடத்தில் அல்லவா

அவர்களின் அலங்கரித்த‌

சிம்மாசனம் நிறுவப்பட்டிருக்கிறது.

பீஹார் மாடலின் மந்திரக்கோல்

கையில் இருப்பதால்

வருகின்ற தேர்தல்கள் எல்லாம்

இனி 

அவர்களுக்குத்தானே

கவரி வீசும்.

ஓட்டுக்களின் நியாயம்

அந்த ஓட்டுகளின் ஆழத்துக்குள்ளேயே

சமாதியாக்கப்படும்

அவர்களின் சாணக்கியமே

இங்கு சனாதன‌ம்.

சனாதன நாயகம் இந்த நாட்டின்

ஜனநாயகமாய்

விளங்குவது

மானிட நீதி மலர்ச்சியின்

ஒரு தலைகீழ் பரிணாமம் ஆகும்.

அன்பான இந்திய மக்களே

இந்த தலைகீழ் தத்துவ யோகானங்களை

தவிடு பொடியாக்குங்கள்.

உண்மையான ஜனநாயகத்தின் 

உன்னத வெளிச்சம் உங்கள் 

கண்களில் பாயட்டும்.

புதிய பாரதமே! 

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா!

உறுதிகொண்ட நெஞ்சினாய் வா! வா! வா!


_______________________________________________

வியாழன், 19 நவம்பர், 2020

பூங்காவின் ஓரத்து பெஞ்சில்

  

பூங்காவின் ஓரத்து பெஞ்சில்

_____________________________________ருத்ரா 


பூங்காவின் ஓரத்து பெஞ்சில்

உட்கார்ந்து இருந்தேன்.

தூங்குமூஞ்சி மரத்தின்

இளஞ்சிவப்புக் கவரிபூக்கள்

பஞ்சு மிட்டாய்ப்பூக்களாய்

தனிமையின் இனிமையை

எனக்குத் தூவுவதாய் ஒரு உணர்வு.


பூங்கா என்றால்

ஓய்வு ஊதியக்காரர்களும்

ஊதியம் இல்லாத ஓய்வுக்காரர்களும்

கூடுகின்ற இடம் தான்.

சிலரது

பொருளாதாரக்கவலைகளும்

அல்லது சில‌

மலட்டுத்தனமான‌

அத்வைத விசிஷ்டாத்வைத 

சித்தாந்த உள்முனைப்புத்தேடல்களும்

அடித்துதுவைத்து

அலசிப்பிழியும் இடம் தான்

அந்த பூங்கா.


ஏதோ ஒரு குறுக்குத்துறைப்படியில்

தண்ணீர்த்திவலைகளில்

சிந்துபூந்துறையின் எதிர்ப்பாய்ச்சல்

தாமிரபரணியின்

பளிங்கு சிந்தனைகளில் 

புதுமைப்பித்தனை

தோய்த்து தன் நெஞ்சுக்குள் ஊட்டுவதாய்

ஒரு திருநெல்வேலிக்காரர்

தன் சட்டையின் பின்னால்

காக்கா எச்சம் இட்ட ஓர்மையே இன்றி

மேலே இலைப்பின்னல்களில்

நெசவு செய்து கொண்டிர்ந்தார்.


இன்னொரு பெஞ்சில்

ஒருவர் நெடுங்கிடையாய் 

படுத்துக்கிடந்தார்.

அவர் உடலின் பெரும்பகுதி

மறைக்கப்படாமல் ஒரு வித

 நிர்வாணத்தை

காட்டிக்கிடந்தது.

அவர் கந்தலில் 

கந்தாலாகிக் கிழிந்து கிடந்தார்.

அதை கந்த சஷ்டிக்கவசமா வந்து

போர்த்தப்போகிறது?

பசி மயக்கமா? போதையா?


இன்னொரு ஓரத்தில்

சமுதாயத்தின் அவலங்கள்

மனித ஈசல்களாய் 

மொய்த்துக்கிடக்க‌

அந்த புல் திடல்

கவலைகளும் கனவுகளுமாய்

இறைந்து கிடந்தது.


அந்த பெஞ்சின் சாய்வு சிமிண்டு

வெடித்து சில கீறல்களை 

ஓவியமாய் தீட்டியிருந்தது.

ஆனால் திடீரென்று

அந்த திருநெல்வேலிக்காரருக்கு

என்ன தோன்றியதோ?

அதில் கிளைத்திருந்த அந்த‌

அரசமரத்துக்கன்றின்  வேரையே 

அடியோடு 

பறிக்க முயன்றார்.

தளிர் மட்டுமே அவர்கையில்.

வேர் பலமாய் சிமிண்டுப்பெஞ்சை

ஒட்டிக்கிடந்தது.

அவர் கையில் அந்த அரசந்தளிர்

புத்தம் சரணம் கச்சாமி

என்றது.

ஆனால் திடீரென்று

அவரைச்சுற்றி ஒரு செங்கடல்

சுநாமியாய் தாக்கியது போல்

இருந்தது.

அது என்ன பிணக்கடல்?

மிதந்துக்கிடப்பது தமிழர்களா?

"கல் தோன்றி மண் தோன்றி" 

எல்லாம் இல்லை...

பூமியின் அடிவயிற்று

லாவா மணிவயிற்றில்

அது செந்தமிழாய்

வெளிப்படும்போதே

தமிழன் உரு பிண்டம் பிடித்துக்கொண்டது

இந்த சடலங்களிலா

அவன் சரித்திரம் மூழ்கிப் போய் விடும்?

இல்லை!

இல்லவே இல்லை!

ஏதோ ஒரு ரத்த  வாய்க்கால் 

நியாயங்களையெல்லாம் 

அடித்துக்கொண்டு போய்விடுவதா?

அவர் இறுக்கத்துடன்

பூங்காவை விட்டு வெளியேறினார்.


____________________________________


புதன், 18 நவம்பர், 2020

‍‍‍முகவரிகள்.

 

முகவரிகள்.

__________________________________ருத்ரா


என் இனிய தமிழ் நெஞ்சங்களே!

தமிழ் வாழும்.

தமிழ் வெல்லும்.

என்று சொல் அடுக்கி

நம் தமிழ் வீடு கட்டிய போதும்

நம் வீட்டுக்குள்

ஏன் இத்தனை கள்ளிகள்?

ஏன் இத்தனை முள்ளிகள்?

நம் வாழ்வின் நிகழ்வுகள் அத்தனைக்கும்

அந்த எச்சில் மந்திரங்கள்

உமிழ்ந்து நம்மீது

வர்ணம் ஏற்றிக்கொண்டிருக்கவேண்டுமா?

அந்த ஆதிக்கம் எனும்

காலமே செத்துப்போன ஒரு

பிணச்சுமை தான்

நம்மை இன்னும் 

அழுத்திக்கொண்டிருக்கவேண்டுமா

மனு தர்மம் என்ற பெயரில்?

அது நம் கண்ணுக்கு தெரியவில்லையே

என்று

அந்த "ஒநாய் உறுமல்களை"

தம் தொண்டைக்குள் மறைத்து

பல குரல் மன்னர்களாய்

பவனி வரும் ஜிகினா மகுடதாரிகளின்

வேடம்தனை புரிந்து கொள்ளுங்கள்.

சாதிஅடுக்குகளில்

ஒன்று தன் கீழுள்ளதை அமுக்க

அடுத்தது 

அடுத்த தன் கீழ் உள்ளதை அமுக்க

கடைசி 

மண்புழு வரை

இப்படி நசுக்கி நசுக்கி

நம்மை அறியாமலேயே

நாம் இந்த மண்ணில் 

புதைந்து போகவோ

தமிழை ஏந்தி நின்று கொண்டிருக்கிறோம்?

அழகிய நம் திணைகளில்

"பாலை" மட்டுமா எஞ்சியது?

அயல் மொழி ஆயுதம் தாங்கிய‌

அந்த "ஆறலை கள்வர்களா"

நம்மை அடக்கி ஆள்வது?

அறிவுச் சுடர் கொளுத்திய 

நம் அருந்தமிழை

தேர்தல் எனும்

அந்த கணிப்பொறிக்குள்ளா

கல்லறை கட்ட இந்த‌

சூழ்ச்சியாளர்கள் முயல்வது?

இந்த கோவில்களும் அதன்

உள்ளே சமஸ்கிருத‌

வவ்வால்களின் நாராச சடசடப்புகளும்

நம் தமிழை விழுங்கி

எச்சமிடுவதற்குள்

எச்சரிக்கை கொள்ளுங்கள்

அன்பான தமிழர்களே!

சென்ற தடவை வென்று விட்டோமே

என்று

இப்போது ஏமாந்து போய் விடும்

ஆபத்துக்குழிகள் 

நிறைய உண்டு நம் பாதையில்.

நம் கையை வைத்து

நம் கண்ணை குத்தச்செய்யும்

மந்திரங்களில்

மயங்கிப்போய்விடாதீர்கள்.

"தமிழ் காப்போம்.

தமிழகம் காப்போம்."

இந்த 

இரு வரிகள் மறவாதீர்.

மறந்தால் இவ்வுலகில்

நமக்கு இல்லை

முகவரிகள்!


_______________________________________________

வெள்ளி, 13 நவம்பர், 2020

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

 இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

__________________________________ருத்ரா


புராணம்

எண்ணெய்க்குளியல்

புதுச்சட்டை

பத்தாயிரம் வாலா

இனிப்பு பாக்கெட்டுகள்

எல்லாம் கலக்கியடிக்கும் இந்த‌

காக்டெயில் பண்டிகையில்

மொத்த மக்கள் தொகையில்

முக்கால் வாசிகள்

முங்கிக்களிக்கும்

உல்லாசம் தான் இது!

ஏதோ ஒரு சந்தையில்

ஆறு கோடிக்கும் மேல்

ஆடுகள் விற்பனையாம்

டிவியில் கட்டம் கட்டி

ப்ரேக் நியூஸ்.

கொரோனாக்கள் கூட‌

வழிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் போலும்.

நெரிசல்களில் பிதுங்கிவழிவதில்

உங்களுக்கு

என்ன தெரிகிறது?

ஜனநாயகத்தின் ஏக்கமா?

சிந்தனை அற்ற அனார்க்கிசமா?

புகை மூட்டமாய் தெரிகிற‌

மத உத்வேகமா?

கடவுள் என்னும் கசிவு வெளிச்சம் தேடி

கனவுகளே முரட்டு வேட்டையாய்

வெளிப்படும் 

எந்த எரிமலையும்  இல்லாத 

மூளி லாவாக்களின்..

வெம்மை தெறித்த காட்டாற்று வேகங்களின்...

உற்சாகப்பிரளயத்தின்...

வருடாந்திர வெளிப்பாடா?

வறுமைப்பொருளாதாரம்

ஒரு நாள் மடை திறந்து

தன் சுநாமி நாக்கை நீட்டி

ஜொள்ளு வடித்துக்கொள்ளும்

சமுதாயக் குத்தாட்டமா?

மக்களின் உற்சாகம் மட்டுமே இங்கு

மதம்!

கடவுள் இல்லாத ஒரு மதம் கூட‌

இப்படித்தான்

மகிழ்ச்சிப்பிழம்பாய் 

பொங்கிப்பெருகும்!

எப்படி இருந்தாலும்

இப்படி ஒரு இனிய வெளிச்சத்துக்கு

நம் 

மனங்கனிந்த 

இனிய ‌தீபாவளி வாழ்த்துக்கள்!

_________________________________________




வியாழன், 12 நவம்பர், 2020

சுட்டபழம் வேண்டுமா?

சுட்டபழம் வேண்டுமா? 

_____________________________________ருத்ரா


முருகன் அன்றே கேட்டானே

சுட்டபழம் வேண்டுமா? 

சுடாத பழம் வேண்டுமா? 

என்று.

பக்குவப்படாத அறிவு தானே

சுடாத பழம்.

பக்குவம் அடைந்தால்

கடவுள் யார் என்ற 

கேள்வி எனும்  சுட்டபழமே

உனக்குள் சுடர் காட்டும்!

பிரணவம் என்பது

பிரள்ணவம் எனும்

தமிழ்ச்சொல் தான்.

மூச்சு பிரண்டால்

முக்தி தான்.

ஆம்.

தமிழ்க்கடவுள் அன்றே எச்சரித்தான்.

தமிழா!

உன் தமிழ் மூச்சு பிரண்டால்

அப்புறம் நீ மிலேச்சன் ஆகி விடுவாய்!

நானும் "சுப்ரஹ்மண்யன்"ஆகி

உனக்கு அந்நியன் ஆகிவிடுவேன்.

நக்கீரன் கரடு முரடாய் 

ஒரு தமிழ் அருவி பொழியவிட்டானே

திருமுருகாற்றுப்படை என்று

அதுவே 

உன் படைபலம்.

வடபுலம் உன்னை வத்தலாய்ச்சுருக்கும் முன்

தமிழ்க்கடலாய் பொங்கி எழு.

இந்த சூர சம்ஹாரம் எனும் 

பொம்மை விளையாட்டை

அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழா!

உன்னை அசுரனாக்கி

உன் நெஞ்சுக்கூட்டின் மஞ்சாச்சோற்றை

குதறத்துடிக்கும்

அந்த வடபுராணக்குப்பைக்கூளங்களை

சொக்கப்பனை கொளுத்து!

உன் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்

சொல்லாத ஒலி அழகுகளா?

இந்த மந்திரக்கூச்சல்.

இவர்களின் 

சோளத்தட்டை வேலா

உன் வீரத்தை எதிர்கொள்வது?

வெற்றி வேல்!வீர வேல்!

உலகத்தமிழாய் உலகையே

சிலிர்க்கச்செய்யும்

உன் செந்தமிழ்ப்பாட்டின் முன்

இந்த யாத்திரைகள் என்ன செய்யும்?

வெறுமே ஆத்திரமூட்டும்.

அவர்கள் கத்திகளை தீட்டிக்கொள்ளட்டும்.

தமிழா! நீ புத்தியை தீட்டு.

புது வானம் தேடு.

புது விடியல் கூடு.

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!


_______________________________





அறிவு ஜீவி அவர்களுக்கு ஒரு கேள்வி

 அறிவு ஜீவி அவர்களுக்கு ஒரு கேள்வி

_____________________________________________ருத்ரா


கமல் எனும் அறிவு ஜீவி

அவர்களே!

அறிவு எனும் பரிமாணம் 

நீங்கள் உருவாக்கியதா?

சமுதாயத்தில் மானிடம் எனும்

ஆற்றல் முதலில்

அறிவு வடிவம் பெற்ற பின் தான்

சமுதாயமே இங்கு கண் விழிக்கிறது.

இந்த சமுதாய அமைப்பை

நீங்கள் உற்றுப்பார்க்க வில்லையா?

அடிமை வர்க்கம் என்பது தான்

சூத்திர வர்க்கம் 

என்று சொல்லும் வேதவரிகளுக்கு

அழகாய் சட்டம் போட்டு

இந்த சமுதாயத்தின் மீது 

படம் மாட்டப்பட்டிருப்பதே

"கொட்டை எழுத்துக்களில் போதிக்கும்"

புத்தகமாய்

"ஒரு மனு ஸ்ம்ருதியாய்"

தெரிவது உங்களுக்கு தெரியாமல் போனது ஏன்?

இதை அறிந்த‌ 

அறிவு ஜீவியாய் இருக்கமுடியாமல்

உங்கள் மீது "கிரகணம்"பிடித்திருக்கும்

அந்த இருட்டை எப்போது விலக்கப்போகிறீர்கள்?

மனுஸ்ம்ருதி என்ற‌

புத்தகம் புழக்கத்தில் இல்லை

அதனால் அதைப்பற்றி 

பேசவேண்டியதில்லை

என்று ஒரு

"நழுவல் வாதம்" வைத்திருக்கிறீர்களே!

இப்படி ஒரு பாத்திரம் ஏற்று 

நடிக்கும் ஒரு மெகா பட்ஜெட் படம் தான்

உங்கள் "மக்கள் நீதி மய்யமா?"

உங்களது "மய்யம்" என்பதே

ஒரு கானல் மையம் தான்.

நன்மைக்கும் தீமைக்கும்

இடையே

மெய்மைக்கும் பொய்மைக்கும்

இடையே

தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் 

இடையே

நான் ஒரு மையப்புள்ளி

என்று பறை சாற்றுகிறீர்களா?

சமுதாயப்பார்வை என்ற‌

மையப்புள்ளியை கழற்றி வைத்து விட்டு

எந்த தராசை வைத்துக்கொண்டு 

இங்கே நியாயம் சொல்ல வந்திருக்கிறீர்கள்?

"நான்கு வர்ணத்தின்" நிழல் படியாத‌

தூசு துரும்பு இல்லை இந்த தேசத்தில்.

பெரும்பான்மை மக்களின் மேல் உட்கார்ந்து

நசுக்கும்

சிறுபான்மைக்கூட்டம்

கூச்சல் இடும் தத்துவமே 

இங்கு "சனாதனம்" "மனு தர்மம்"

இத்யாதி.இத்யாதி...என்பதெல்லாம்.

இதற்கு என்று

இங்கே

எந்த விகடனும் குமுதமும்

புத்தகம் போடவில்லை என்று

சும்மாவாச்சுக்கும்

அரிதாரம் தீட்டிக்கொண்டு

கட்சி நடத்தினால் போதும்

என்பது தான் 

உங்கள் அறிவி ஜீவித்தனமா?

தோளில் சுமந்திருப்பவனுக்கு

தோளில் அமர்ந்திருப்பவனே

பிரம்மா.

மேலே உட்கார்ந்து இருப்பவனுக்கு 

எல்லாம் பிரம்மானந்தம்.

சுமப்பவனை

சுமையாய் இருப்பவன்

"தொடாதே தீட்டு" என்கிறான்.

பெண்களும் இங்கு

பாவ மூட்டைகள்.

மனிதக்குஞ்சுகளை பொரித்து 

அடை காக்கும் இந்த‌

தாய்ப்பறவைகள் கூட

"பெண்மையின்" தீட்டு நீக்கப்பட‌

"தீக்குளியல்" செய்யவேண்டும் என்பதே

ஸ்லோகங்களுக்குள் 

பொதியப்பட்டிருக்கின்றன.

ஸ்த்ரீ என்பவள் "நரகத்துவாரம்"

என்றே மூர்க்கமாய் சொல்கிறது

சன்யாசம்.

நம்மைச்சுற்றி இத்தனை நச்சுப் பாம்புகளும்

தேள் மற்றும் நட்டுவாக்கிளிகளும்

இருந்த போதும்

இந்த கொசுக்கடிகளை பெரிது படுத்தலாமா

என்று

இலக்கியமாய்க்கேட்கிற‌

அறிவு ஜீவி அவர்களே!

அதர்மத்தைக் கேள்வி கேட்கிற‌

அறிவை அடகு வைத்தா

உங்கள் அரசியல் வியாபாரத்தை 

தொடங்கப்போகிறீர்கள்?


________________________________________










திங்கள், 9 நவம்பர், 2020

தரிசனம்

 தரிசனம்

_________________________ருத்ரா


அத்தனை படியேறி

மூச்சு வாங்க நான்

நடந்தேன்.

என் கூடவே ஒருவரும் 

தோளில் ஒரு பையுடன்

நடந்தார்.

சன்னிதிக்குள் 

சுவாமியை தரிசனம் செய்து

திரும்பினேன்.

கூட வந்தவர் எங்கே காணோம்?

திரும்பிய போது

அதன் வெகு அருகில்

அவர் கீழே உட்கார்ந்திருந்தார்.

அருகில்

சில சில்லறைகளுடன்

ஒரு நசுங்கிய அலுமினியக்குவளை.

என்னிடம் இருந்த நாணயம் 

ஏற்கனவே உள்ளே கொடுத்தாகி விட்டது.

மிச்சம் இருந்தது

ஒரு பத்து ரூபாய் நோட்டு.

புன்னகையுடன் அதை

குவளையில் போட்டேன்.

அவரும் புன்னகைத்தார்.

படியேறி வந்த வழித்துணை அல்லவா

அவர்.

____________________________________



சிகரம் நோக்கி...

 சிகரம் நோக்கி...

_________________________ருத்ரா


 வாழ்க்கை என்பது வானத்தை

கனவாக்கி காதலாக்கி குடும்பமாக்கி

கனவுகளை சமைத்து உண்டு

பசியாறிக்கொள்வதாய் மீண்டும்

கனவுக்குள் படுக்கை போட்டு 

கனவு காண்பது.

____________________________________

அவள் வருவாள்?

 


அவள் வருவாள்?

________________________________ருத்ரா



சட்டையில் 

பொத்தானை அடிக்கடி

திருகி விடுகிறேன்.

இன்றைக்குத்தான் ஷேவ் செய்த‌

மீசை அருகே உள்ள மழ மழப்பை

தடவிப் பார்த்துக்கொள்கிறேன்.

பைக்குள் கைவிட்டு

அந்த கைக்குட்டைக்குள்

முகம் புதைக்கிறேன்.

அதில் ஏதோ தென்காசி அருகே உள்ள‌

இலஞ்சியின் அந்த பளிங்குச்சுனையில்

என் முகத்தோடு அகத்தையும் சேர்த்து

தோய்த்தாற்போல்

ஒரு உணர்வு.

முகமூடிப்பெண்கள் எத்தனையோ பேர்

இரு சக்கர வாகனத்தில்

கடந்து போய் விட்டார்கள்.

"இதுவும் கடந்து போகும்..."

எவன் எழுதினானோ

அது தான் தலைக்குள்

கிர் கிர் என ஒலியெழுப்பும்

அந்த சிறுவயது பொம்மையாய்

எனக்குள் விம்மிச்சுற்றுகிறது.

செல்லை "க்ளிக்கி"

டைம் பார்த்தால்.

இன்னும் அது 

ஏழு இருபத்தொன்பதிலேயே நிற்கிறது.

அது எப்போது

எட்டு பத்து ஆவது?

எப்போது 

தூரத்தில் வரும் அவளது அந்த 

"வழுக்கு உந்தை" 

எட்டிப்பார்ப்பது?

வாழ்க்கைப் புத்தகத்தின்

கனத்த புத்தகங்களில்

அவ்வளவும் இப்படி

காலியான வெள்ளைப்பக்கங்கள் தானா?

மில்லியன் கணக்காய் அதில்

கனவுகளை மொய்க்க விட்டபோதும்

அந்த மூளிவானத்தில்

வானவில் தோன்றப்போகும் 

சுவடுகள் மட்டுமே அந்த வானத்தை

உழுது போட்டது போல் 

ஆக்கி இருக்கின்றன.

வெறுமையே அழகு என்று

பொறுமையே 

அடிக்கடி கம்பியூட்டரில் தடவும்

பாஸ் வர்டு என்று

நின்று கொண்டிருக்கிறேன்.

இனியும் டைம் பார்த்தால்

அது 7‍ 29.999999 

என்று காட்டிக்கொண்டிருக்கும்.

காதலே  வா வா என்று

ஏக்கத்தோடு 

அழைத்துக்கொண்டிருக்கிறேன்.

எப்போது அவள் வருவாள்?

இது

ஒரு "நேனோ யுக"க் கல்வெட்டு 

ஆகிப்போனது.


__________________________






ஞாயிறு, 8 நவம்பர், 2020

மெல்லிய மயிலிறகைக்கொண்டு...

 மெல்லிய மயிலிறகைக்கொண்டு...

___________________________________________ருத்ரா


மெல்லிய மயிலிறகைக்கொண்டு

காளிதாசன் 

காதல் வரிகளை நீவினான்.

கண்ணதாசன் அந்த‌

காளிதாசனைப்பிழிந்து

பேனாவில் ஊற்றிக்கொண்டான்.

வைரமுத்து 

தமிழ்ச்சொற்களில்

அதன் அடுக்குகளின் இடுக்குகளில்

மின்னலைக்காய்ச்சி ஊற்றினார்.

இன்னும்

ந.முத்துக்குமார்

புதுக்கவிதைகளை

தயக்கம் இல்லாமல்

அந்த நரம்புக்கருவிகளிலும்

துளைக்கருவிகளிலும்

இசையமைக்க சுகமாக‌

உருட்டிக்கொடுத்து உயிர் ஊட்டினார்.

காதல் என்பது 

கவிதையா?

வாழ்க்கையா?

நாவலா? சினிமாவா?

இப்போது

கைபேசிகளுக்குள் ‌

மின்காந்தத்தை விட‌

காதலின் ஹார்மோன்களே அதிகம்.

வாழ்வு வடிவங்களின்

உப்பு புளி மிளகாயும்

சாதி மத சம்பிரதாயங்களின்

ரத்த சதைக்குள் நெருடும்

எலும்புக்குவியல்களுமாய்

இருக்கின்ற நிகழ்வுகள்

பாறைகளாய் அமுக்க‌

நசுங்கிய கரப்பான் பூச்சிகளின்

ரெக்கையும் மீசையும்

பாசில் சித்திரமாய் தெரிய‌

இங்கே

காதல் ஒரு படம் காட்டுகிறது.

பார்க்கும் வரை பாருங்கள்.

அதிலே

வாழும் வரை வாழுங்கள்.

இந்தக் கொடுமைகளும்

இனிமைகள் தான்.

இப்படி எழுதுவதும் 

இதை படிப்பதும்

ஒரு குகைவழிப்பயணம்.

வெளிச்சப்பிஞ்சு கண்ணைத் தடவும் வரை

இருட்டுகளே நம் விழிவெண்படலங்கள்.


_______________________________________________


சனி, 7 நவம்பர், 2020

தீபாவளி வாழ்த்துக்கள்

 தீபாவளி வாழ்த்துக்கள்

___________________________________ருத்ரா



மனிதனே அரக்கன்.

அவன் கடவுளைப்பற்றி

கேள்வியெல்லாம் கேட்கிறான்.

கடவுளின் 

தகப்பன் யார்? தாய் யார்?

என்றெல்லாம் கேட்கிறான்.

இது அடுக்குமா?

பிராமணன் கேட்கிறான்.

அடுக்காது சாமி?

அடேய்.இவன்

எங்களை ஆள‌

நாளை நீ யார் என்று

கேட்பான்?

ஆமாம் சாமி!

என்றான் க்ஷத்திரியன்.

ஐஸ்வரியம் வச்சிருக்கிறவாளைப்

பார்த்து

நாளை உங்கள் செல்வத்தையெல்லாம்

கொள்ளையடிப்பான்

என்றான்

ஆமாம் ஸ்வாமி என்றான்

அந்த "வைஸ்யன்"

காயத்ரி மந்திரம் சொல்லிக்கொண்டே..

பூணூலை உருவி விட்டுக்கொண்டே..

இப்போது

என்ன செய்யலாம்?

என்றார்கள்.

கூட்டணி உருவாயிற்று.

மூன்று பேரும் நூல் போட்டுக்கொண்டார்கள்.

முதல் நூல் போட்டுக்கொண்டவன்

நானே அந்த ஆண்டவன்.

நீங்கள் என்னை பாதுகாப்பதன் மூலம்

உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

என்றான்.

துப்பாக்கி தயார் ஆயிற்று.

குண்டுகளாய் இருந்தவன் பிராமணன்.

மற்றவர்கள் ஆயுதங்கள்.

நான்காவது வர்க்கம் அடித்து

நொறுக்கப்பட்டது.

மனிதனே இலக்கு ஆகினான்.

அவன் சூத்திரன் ஆனான்.

அவன் அரக்கன் ஆனான்.

மனிதன் கடவுளால் பிறப்பிக்கப்பட்டவன்

என்று சொல்லிக்கொண்டிருந்தவன்

அந்த கடவுள் புத்திரர்களைக்கூட‌

கசாப்பு செய்ய தயங்கவில்லை.

ஆதிக்க வெறியே 

அவர்கள் நாடி நரம்பெல்லாம்

முறுக்கேறியது.

"நரன்" எனப்பட்டவன் 

நார் நாராய் கிழிக்கப்பட வேண்டியவன்

என்றார்கள்.

உழைக்கும் மனிதனின் 

சிந்தனையும் அறிவோடு

கிளர்ந்தெழ ஆரம்பித்தது.

நரன் கொடும் அரக்கன் என்று

புராணங்களின் புற்றீசல்

புறப்பட்டது.

அவை இந்த மண்ணை மொய்த்தன.

விண்ணை மறைத்தன.

சூரியன் கூட‌

குருடன் ஆனான்.

எங்கும் கும்மிருட்டு.

மூன்று நூல் கூட்டணி மட்டும்

எல்லாம் தன் உடைமை ஆக்கிக்கொண்டன.

ஆயிரம் ஆயிரம் வருடங்கள்

இந்த கொள்ளை இருட்டில்

மின்மினிப்பூச்சிகளாய்

அறிவின் கசிவு வெளிச்சம்

கொஞ்சம் வழி காட்டியது.

ஆனாலும் 

"நரகாசுரன்" எனும்

அந்த பலூன் பொம்மை மட்டும்

ஊதிக்கொண்டே போகிறது.

அது வெடிக்கிறது.

அது மீண்டும் ஊதப்படுகிறது.

அவர்கள் சொல்வது போல்

நீங்கள் வெடிக்கிறீர்கள்.

மீண்டும் ஊதப்படுகிறீர்கள்.

இந்த பொய்மையின் "பிக்பேங்க்" தான்

வேத விஞ்ஞானம் என்று

சாசனம் எழுதப்படுகிறது.

உங்களை நீங்களே நசுக்கிக்கொல்ல‌

அந்த பட்டனைத்தட்டிக்கொண்டே

இருக்கிறீர்கள்.

அந்த "பொட்டு வெடிகளில்"

நீங்கள் புகைந்து கரைந்து போக‌

துடிக்கிறீர்கள்!

வெடிக்கிறீர்கள்!

வெடித்துச்சிதறியதில்

வாசல்கள் தோறும் 

காகித சவங்கள்.

சரி!

ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

எல்லோரும்

தீபாவளி கொண்டாடுங்கள்.

தீபாவளி வாழ்த்துக்கள்!


_______________________________________


 

வெள்ளி, 6 நவம்பர், 2020

வேல் வேல்


வேல் வேல் 

______________________


முருகு என்றால் அழகு.

முருகு என்றால் அறிவு.

முருகு என்றால் மலை.

முருகு என்றால் கடல்.

முருகு என்றால் காடு.

முருகு என்றால் அருவி.

முருகு என்றால் பூ

முருகு என்றால் பழம்.

முருகு என்றால் தேன்.

முருகு என்றால் வள்ளி.

முருகு என்றால் தமிழ்.

முருகு என்றால் ஆற்றுப்படை

தமிழின் ஊற்றுப்படை.

முருகு என்றால் நக்கீரன்

அவன்

தமிழ்ப்புயல் வீசும்

காற்றுப்படை!

.......


நிறுத்துங்கடா

"சுப்ரஹ்மண்யம்"

என்று சொல்லுங்கடா.


..........


தமிழா! கவனி!

அரக்கனின் ஆயுதம் 

 உன்னைக் குறி வைத்து

வருகிறது.


வேல் வேல் 

வெற்றி வேல்!!

அந்த அட்டை வேலை

அடித்து நொறுக்கு

வேல் வேல் 

வெற்றி வேல்!!

___________________________

ருத்ரா



திங்கள், 2 நவம்பர், 2020

அரிதாரங்கள் தந்த அவலங்கள்.

 அரிதாரங்கள் தந்த அவலங்கள்.

=======================================ருத்ரா


நமது ஜனநாயகத்துக்கு

பளிங்கு கட்டிடம் 

பிரம்மாண்டமாய் இருக்க

ஓலைக்கொட்டகைக்குள்

சினிமா நிழல் பூசிய 

ஒளிப்பூச்சிகள் 

அரிதாரம் பூசிக்கொண்டு

ஆள வந்தன.

அதிலிருந்து மீண்டு வரவில்லை

நம் சித்தாந்தக்கனவுகள்.

அந்த அட்டைகள் உறிஞ்சியது போக‌

இங்கே என்ன மிச்சம் இருக்கிறது

சிந்திப்பதற்கு?

இன்னும் சினிமாவின் குத்தாட்டங்களே

இந்த ஓட்டுகளில் 

கும்மியடித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நாட்டை கொஞ்சம்

ஆண்டு கொள்கிறேன்

அதற்கு "செங்கோல்"செய்ய‌

உங்கள் "முதுகெலும்பை"

கொஞ்சம் முறித்து தாருங்களேன்

என்று சொன்னால் போதும்

கோடி கோடி 

முதுகெலும்புகள் குவிந்து விடும்.

அப்படி  குவிந்ததால் 

கிட்டத்தட்ட ஒரு ஐம்பது ஆண்டுகளாய்

தமிழ் நாட்டில் இவர்கள்

முதுகெலும்பு இல்லாமலேயே  இருக்கிறார்கள்.

அது தேவையே இல்லை என்றும் 

பழகியும் போனார்கள்


நடந்தவைகள் இனியும் 

நடப்பவைகளாக இல்லாமல் 

பார்த்துக்கொள்வோமாக!


_______________________________________


"எட்டுத்தொகை"

 துட்டு தொகை

என்று ஓடி ஓடி தமிழா

நம் "எட்டுத்தொகை" மறவாதே!


"தமிழ்நாடு"

_____________________ருத்ரா

ஞாயிறு, 1 நவம்பர், 2020

தமிழ்நாடு தினம்

 தமிழ்நாடு தினம்

______________________________ருத்ரா


புல்லரிக்கிறது.
கிளர்ந்தெழுகிறது நெஞ்சம்.
தமிழ்ப்பற்றாளர்களின்
போராட்டங்களை
நாம் நினைவு கூர வேண்டும்.
ஆனால்
இது வெறும்
ஒரு நாள் கூத்து அல்ல?
நம் உணர்வில்
நம் தெளிவில்
நம் வரலாற்றில்
நம் தமிழில்
சலங்கை கட்டி
ஆடிக்கொண்டே இருக்கவேண்டும்.
அதன் பரல்களின் எல்லாம்
தமிழின் இதயத்துடிப்புகளின்
நம் உயிரொலி கேட்டுக்கொண்டே
இருக்கவேண்டும்.
உலகில் தமிழின் தொன்மை வெளிச்சத்தின்
சுடரேந்தியாய் உள்ள
திரு.ஒரிஸ்ஸா பாலு அவர்கள்
சொன்ன ஒரு குறிப்பு
நம்மை இன்னும் நிமிர வைக்கிறது.
தமிழ் நாட்டு ஊரின் பெயர்கள்
பேச்சு வடிவங்கள் எல்லாம்
உலகின் பெரும்பான்மை நாடுகளில்
தூவிக்கிடக்கின்றன என்கிறார்.
எல்லாக்கடலின்
திரைகளையும் தன் நாடித்துடிப்பாக்கி
திரை மீள்வன் ஆகினான் தமிழன்.
அதாவது திரைமீளன் என்பது
வடமொழியில் "த்ரமிளம்"ஆகி
தமிழம் ஆகி தமிழகம் ஆகியதும்
ஒரு வரலாறு தான் என்கிறார்.
அலைகள் தவளும் கடலோரம்
தமிழனின் இருப்பிடங்கள் ஆகி
புகழ் வளர்த்து "திரையிடத்தான்"ஆன பின்
திராவிடன் ஆகியிருப்பானோ?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்று
பஞ்ச் டைலாக்குக்காக‌
கணியன் பூங்குன்றன்
சொல் உதிர்க்க வில்லை.
பல்மொழி அழகினையும் பருகியவன்
தமிழன்.
சோமக்கள் பருகி உலக ஒலிப்புகளையும்
"காக்டெயிலாக" அவன் கலக்கி அடித்ததே
சமஸ்கிருதம் ஆகி யிருக்கலாம்.
எப்படியிருப்பினும்
என் இனிய‌
"தமிழ் நாடே"
இந்த அகன்ற "வளை நரல் பௌவமே"
உன் உடுக்கையாய்
உயிர் விரிப்பாய் பாய் விரித்து
அதில் நீ பயணித்து
உலகம் ஆண்டாய்.
ஆதிக்க வெறியாளர்கள்
ஒன்றரை லட்சம் தமிழர்களின்
உயிர் குடித்தனரே!
அந்த ஈழம் என்னும் சொல் தான்
"அக்கினிம் ஈழேம் ப்ரோஹிதம்"
என்று ரிக் வேதத்தில்
முதன் முதலாய் ஆரம்பிக்கிறது.
அவர்கள் வேறு அர்த்தங்கள்
சொல்லிக்கொண்டிருந்தாலும்
தமிழ் ஒலிப்பின் வேர்கள்
நிறைய அதில் ஊடுருவியுள்ளன.
அதிலிருந்து தமிழ் கிளைத்தது என்றால்
ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும்
அதுவும் கி.மு 1500 லிருந்து தானே
ஒலித்துக்கொண்டிருக்கும்.
அப்புறம் எப்படி
தமிழ் தோன்றியது
கி.பி ரெண்டு மூன்று
நூற்றாண்டுகள் என்று
"நூல்" விடவேண்டும்?
கல் எனும் சொல்லில்
தீயைக்காட்டியவனும்
கல் எனும் சொல்லில்
அறிவை கொளுத்தியவனும்
தமிழனே !
அதையே இவர்கள்
"யாகம்"
வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் நாடு என்பதில்
இந்த உலகமே பொதிந்து கிடக்கிறது
என்ற தொன்மை இன்னும்
கூராகி
குருட்டு வரலாற்றின் இருள் கிழிக்கிறது.
பனியுகம் பல ஊழிகள்
முன் தோன்றியது.
அது உருகி
பூமி மீண்டும்
தன் உடையை உடுத்துக்கொண்ட போது
முதலில் கல் எனும் மலை தோன்றும்
பின்னர் மண் பரப்பு தோன்றும்.
அப்படி
கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தேயும்
முன் தோன்றிய தமிழ்
என்பதை "கலாய்ப்பவர்கள்"
அந்த புராணங்களை மட்டும்
கன்னத்தில் போட்டுக்கொண்டு
பயபக்தியாய் வணங்குவதேன்?
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முந்திய வரலாறு கொண்ட‌
தமிழை
இந்த "அர்ச்சனைக்கூச்சல்" வாதிகளா
புறந்தள்ளுவது?
சீற்றம் கொள்கிறது
தமிழ் நெஞ்சம்!
பெருமிதம் பொங்க ஒலிக்கின்றோம்
தமிழ் நாடு என்று!
தமிழ் நாடு என்ற தமிழ் உலகே !
உனக்கு எங்கள்
மன்மாழ்ந்த வாழ்த்துக்கள்.
________________________________________
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

நினைவுகளால் வருடி வருடி

 நினைவுகளால் வருடி வருடி

_________________________________________ருத்ரா


நினைவுகளால் வருடி வருடி

இந்த தருணங்களை நான்

உருட்டித்தள்ளுகிறேன்.

அது எந்த வருடம்?

எந்த தேதி?

அது மட்டும் மங்கல் மூட்டம்.

அவள் இதழ்கள்

பிரியும்போது தான் தெரிந்தது

இந்த பிரபஞ்சப்பிழம்புக்கு

ஒரு வாசல் உண்டென்று.


அவள் இமைகள் படபடத்த போது தான்

தெரிந்தது

இந்த வெறும் வறட்டுக்கடிகாரத் துடிப்புகளுக்கு

வண்ணங்கள் உண்டு என்றும்

சிறகுகள் கொண்டு அவை

இந்தக்கடல்களை எல்லாம் 

வாரி இறைத்து விடும் என்றும்.


அது என்ன‌

பட்டும் படாத பார்வை என் மீது?

அவள் மேகங்களை தூவி விடுவது போல்

அல்லவா இருக்கிறது!


சொர்க்கவாசல் பார்க்கப்போகிறேன்

என்று 

பெருமாள் கோயில்களில் அலை மோதும்.

அம்மா கூட போவேன்

அந்த அந்த சவ்வு மிட்டாய்க்குச்சிக்கும்

கையில் சுற்றி கிர் கிர் என்று

ஒலியெழுப்பும் கிர்கிர்ப்பானுக்கும்

ஆசைப்பட்டு கூடப்போவேன்.

அப்போது என் சொர்க்கவாசல்

அந்த கிர்கிர்ப்பான் தான்.


அதன் பிறகு ஒரு நாள் தெரிந்தது

பெண்ணே! 

என்னை கிறு கிறுக்கவைக்கும்

உன் சுழல் மொழி அல்லவா

அந்த "கிறு கிறுப்பான்".



அன்று ஒரு சொல் உதிர்த்தாய்!

அப்பப்ப!

என்னைச்சுற்றி மில்லியன் கணக்காய்

தட்டாம்பூச்சிகள்

தங்க ஜரிகை சிறகுகளின் அதிர்வுகளில்.

சொர்க்க வாசல்

மாறிக்கொண்டே இருப்பதற்கு

வயதுகளின் மைல் கற்கள்

பிடுங்கி பிடுங்கி இடம் மாறி

நடப்படுவது தானே காரணம்.


இப்போது இந்த கூன்விழுந்த ஈசிச்சேரில்

ஒரு கனத்த புத்தகத்துடன் நான்.

அன்டோனி ஸீ என்பவர் எழுதிய‌

க்யூ எஃப் டி எனும் குவாண்டம் புலம் 

பற்றிய புத்தகம்.

ஹிக்ஸ் மெகானிசம் பற்றி

அவர் எழுதிய‌தைப்படித்தால்

சொர்க்கவாசல் என்பது இப்போது

எனக்கு மிகவும் சுவாரசியமான‌

அந்த "ஃபெய்ன்மன் வரைபடங்கள்"தான்.

துகள்களுக்குள் கள்ளத்தனமாய்

"மாஸ்" எனும் நிறை 

சவ்வூடு பரவிய‌தை அவர் அழகாய்

விளக்குகிறார்.

அது ஹிக்ஸ் மெகானிசமா? காதல் மெகானிசமா?

தெரியவில்லை.



அதுவும் கூட‌

அன்று என் உள்ளத்துள்

நீ கள்ளத்தனமாய் நுழைந்த பிறகு

உன்னைக்காணவே முடியாமல் 

தேடிக்கொண்டிருக்கிறேனே

அது போல் தான்.


அது போகட்டும்

இந்த நரைதிரைக் காடுகளின்

அடர்த்தியிலிருந்து

இந்த இருள் பொதிவுகளிலிருந்து

உன்னை இன்னும் 

தேடிக்கொண்டிருக்கிறேனே.


உன் மின்னல் வரிகள்

என்றாவது என் உள்ளத்தின் உடம்பில்

சாட்டை அடிகள் எனும்

இன்ப விளாறுகளை வீசாதா?


வரும் அந்த தருணங்கள் எல்லாம்

எனக்கு இனி

உன் அநிச்சப்பூக்கள் தைத்த‌

நடைவிரிப்புகளே.


=============================================