"இபியெஸ்"ஸின் ஹைக்கூக்கள்
__________________________________
சூரியோதயம்
_______________________________1
நில் கொஞ்சம்.
தலையை
பின்னி விடுகிறேன்.
காற்றில் நாணல்கள்
___________________________________2
நாராய்! நாராய்!
முழுச்செய்யுளையும்
கேட்காமல் ஓடுகிறது.
பறவைக்கூட்டம்
_____________________________________3
இபிஎஸ் ஹைக்கூக்கள்
___________________________________
தடவி தடவிப்பார்த்தும்
என் துடிப்புக்கு
வர்ணமில்லை.
தூரிகை
___________________________________4
காப்பியா? கோப்பையா?
எது ருசி?
சன்னலில் கேட்டது.
சூரியன்
_____________________________________5
நம்பிக்கை
அவநம்பிக்கை
ஒன்றின் அர்த்தம் இன்னொன்று.
வாழ்க்கை.
_________________________________________6
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக