புதன், 17 ஜூலை, 2024

ஈரோடு தமிழன்பன் 18.07.24

ஈரோடு தமிழன்பன் 18.07.24



பவளமல்லி

------------------------

பவளமல்லியிலிருந்து

உங்கள் நினைவுகளின் அட மழை

பூக்களைக்

கொட்டிக்கொண்டே இருந்தது.

மூச்சு விடாமல்

அந்த சங்கிலி 

இழை நீட்டிக்கொண்டே

இருந்ததில்

நாங்கள் கண்டு வியந்தது

நட்பின் உங்கள்

ஒரு நயாகரா அருவி.

தமிழ்ப்பட்டறையில்

பொன் குழம்பில் 

அடித்து அடித்து

நீங்கள் 

செய்த டிங்கரிங் வேலையில்

ஈர்த்துப்போன அந்த‌

தமிழ்ச்செல்வர்கள்

வாழ்க்கையின் அந்த‌

நாலுமுக்கு சந்திப்பில்

கண்ட ஈரோடு சந்திப்பு தான்

தமிழின் கவிச்சுடர்ச்சங்கம்.

இந்த இருப்புப்பாதயில் 

இதயம் கோர்த்துக்கொள்வோம்.

எங்கள் தண்டவாளங்களில்

உங்கள் தமிழ் ரயில்

ஓடிக்கொண்டே இருக்கட்டும்.


__________________________________________

சொற்கீரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக