திங்கள், 8 ஜூலை, 2024

சேயோன் ஹைக்கூக்கள்

 ஹைக்கூக்கள்

______________________________

சேயோன்



சிவப்பாய் எப்போது

முட்டைகள் இட்டோம்.

பறவைகள் குழம்பின.


ஆலம்பழங்கள்.

___________________________________1



உங்களுக்கு இடுப்பில்

துண்டுகள் கட்டிக்கொள்ள‌

நாங்களா கிடைத்தோம்?


குற்றால அருவி.

_____________________________________2



விரைவாக ஓடுகின்ற இரைகள்.

விழுங்க முடிவதில்லை

மலைப்பாம்புக்கு.


நெடுஞ்சாலை

______________________________________3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக