நிகழ்வுகள்

அக்டோபர் 6 இந்தியன் எக்ஸ்பிரஸ்


அம்மா நலமா?
============================ருத்ரா இ பரமசிவன்

அம்மா
நலம் நலமறிய அவா!
நீங்கள் அங்கு நலமா?
நாங்கள் இங்கு நலமே!

அம்மாவைக்கூப்பிட‌
அழாத பிள்ளையும் அழும்!
ஆனால்
அம்மா என்றால்
இங்கே அழுகின்ற பிள்ளையும்
வாய் மூடும்!
அம்மா என்றால் அன்பு
என்று
அம்மா பாடினார்களே
இங்கே
எழுத்துக்கூட்டி
அம்மா என்று
சத்தம் போட்டுக்கொண்டே
பிள்ளைகள்
சிலேட்டில் எழுத கூட‌ பயப்படுகின்றனவே!
பிரம்புகள்
எங்கே எங்கே இருந்து எல்லாமோ
நீளுகின்றன.
ஊடகங்களுக்கு
நவராத்ரி பட்டிமன்றங்களைப் ப‌ற்றிதான்
இங்கே கவலை.
இல்லாவிட்டால்
காசு பொறாத சர்ச்சைகளுக்கு
நாலைந்து பேரை வைத்துக்கொண்டு
நாக்குக்கச்சேரி.
ஒன்றுமே புரியவில்லை!
அம்மா நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்.
காக்கை குருவிகள் கூட
சத்தம் போட்டு கத்துகின்றன.
இங்கே "அம்மா" என்று கூப்பிட‌
உதடுகள் ஒட்ட பயப்படுகின்றனவே!
இந்த ஆயாக்களில்
அம்மா
யார் உங்களை பிரதிபலிக்கிறார்கள்
என்று தெரியவில்லை?
இது எதற்கு என்று கேட்கிறீர்களா?
"அம்மா"என்று நாங்கள் கூப்பிடும் குரலை
அப்படியே உங்களிடம்
சேர்ப்பிக்கத்தான் கேட்கிறோம்.
உங்களை அப்படியே காப்பி அடித்து
110 ஏ  ன் கீழ்
எவனும் "அம்மா" என்று
வாயைத்திறக்கக்கூடாது என்று
இவர்கள் சொல்லிவிட்டால் என்ன செய்வது?

இது எங்களுக்கு  உங்களால்
பழக்கமாகிப்போனது தான் என்றாலும்
இவர்கள் இதை கல்வெட்டுகளாக்கி
அடிமைச்சாசனம் தயார் செய்து விடுவார்களே.

அதனால் தான் அம்மா
உங்களை விரைவில் நலமுடன்
வீட்டுக்கு திரும்பி வாருங்கள்
என்று
கூப்பிடுகிறோம் அம்மா!
அம்மா என்று கூப்பிட‌
இங்கு வயதுகள் குறுக்கே
நிற்பதில்லை.
தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளில்
முதியோர் ஓய்வுத்தொகை
ஒவ்வொரு பைசாவும்
அம்மா அம்மா என்றுதான்
சப்தங்களை எழுப்பிக்கொண்டு
எண்ணப்படுகின்றன.
அந்த இற்றுப்போன நரம்புகளுக்கே
தெரியாது
தன் வியர்வை முத்துக்கள்
இந்த மண்ணில் விதைக்கப்பட்டிருக்கின்றன‌
என்று!
இருப்பினும் அந்த வற்றிச்சுருங்கிய
முதிய உதடுகள்
அம்மா! அம்மா! என்கின்றன.
எங்கள்
இதயங்களையும்
கைகளையும்
கூப்பி
கூப்பிடுகிறோம் அம்மா!
வாருங்கள் அம்மா!!!!

=================================================
 http://indianexpress.com/article/india/india-news-india/jayalalithaa-health-apollo-hospital-recovery-rumours-3063529/







========================================================================

03 அக்டோபர்  2016


திருமா போல வருமா ?
============================================= ருத்ரா இ பரமசிவன்.

நயத்தக்க நாகரிகம் உடையவர் திருமா.
நகத் தக்க நின்றவர் இல்லை.
சென்ற தேர்தலில் தமிழ் நாட்டுக்குள்
ஒரு விநோத  மகாபாரதம் அரங்கேற்ற  முயன்றவர்.
கௌரவக்கொலைகள் மலிந்து போன
இந்த தேசத்தில்
கிருஷ்ணர்களின் பாஞ்சஜன்யங்களும்
பின் புலமாக முழங்கும் ஒரு தந்திர பூமியில்
என்ன விதமான வியூகம் வைக்கவேண்டும்
என்று தெரியாமல்
ஒரு  நூலிழைக்குள் இடறி விழுந்தார்.
யாரோ ஒரு முகமூடியில்
இருந்த சகுனியை இனம் கண்டு கொள்ளாமல்
அவர்  கைப்பகடை ஆகிபோனார்.
இப்போது வரும் உள்ளாட்சியிலும்
"மாங்காத்தா" ஆட்டங்களுக்கு பஞ்சமிருக்காது.
இந்த நிலையில் ஊடகங்கள்
ஆளுநர் சொல்வதை நம்பாமல் அவர்
அப்பல்லோ சென்று வந்தார் என கூறுகின்றன.
அப்பால் அதற்கும் மேல் கோடு  தாண்டாமல்
நலம் விசாரித்தார் என்று மட்டும்
நாம் நம்புவோமாக !

(கீழே செய்தி )
.



===================================================================
ஆளுநர் சொன்னதையே நம்பாமல் அப்பல்லோ போன திருமாவளவன், யார் சொன்னதும் நம்பியுள்ளார் பாருங்கள் !

1 கருத்து:

Unknown சொன்னது…

thiruma of late converts every issue as dalit focussed
otherwise how could you pinpoint his interest in RAMKUMAR SWATHIS MURDER SUSPECT

கருத்துரையிடுக