வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

"பீ லி பெய்ச் சாகாடும்..."


"பீ லி பெய்ச் சாகாடும்..."
===========================================ருத்ரா

காதல் பற்றி
வண்டி வண்டியாய்
எழுத்துப்பொதிகள்.
இந்த "பீலி பெய்ச் சாகாடுகள்"
அச்சு முறிந்த கதைகளைத்தான்
கௌரவக்கொலைகளாக‌
உண்மைக்கதையாக‌
அதே முடை நாற்றத்துடன்
அதே ரத்தக்கவுச்சியின்
ஈரத்தில் தோய்த்த எழுத்துக்களுடன்
வெளிபடுத்துகின்றன.

உண்மையில்
காதல் என்பது
சமுதாய இதயத்துடிப்புகளுடன்
சின்க்ரனைஸ் ஆவதே இல்லை.
ஒரு ஆணும் பெண்ணும்
தனிமை மூலை தேடி
பார்க்கின்ற ஆகாயத்தை எல்லாம்
மற்றும்
நிலம் நீர் நெருப்பு காற்றுப்
பூதங்களையும் கூட‌
"இதயவடிவில்"
வெட்டியெடுத்துக்கொண்ட‌
அல்வாத்துண்டுகளுடன்
அடைந்து கொள்கின்றனர்.
சமுதாய அடினிலைப்பிரச்னையான‌
ஏழ்மை அறியாமை பிணி
மற்றும் பேய்த்தனமான மற்ற‌
சுரண்டல் வாதங்கள்
சாதி மதங்களின்
கொடூரமான நரம்போட்டங்கள்
இவற்றையெல்லாம்
களைந்தெறிவது யார்?
அதன் அடிப்படை சித்தாந்தங்கள்
பற்றிய சிந்தனை
சிறிதும் இல்லாமல்
கார்ப்பரேட் காரர்களின்
அச்சு வடிவங்களுக்குள்
அடை காத்துக்கிடக்கின்ற‌னர்.
கை பேசி களின்
"அண்ட்ராய்டு"களின்
அல்ட்ரா வெர்ஷன் களில்
மற்றும் "செல்ஃபி மானியா"
எனும் கடும் நோய் தாக்கி
வீழ்ந்து கிடக்கின்றனர்.

தன் சமுதாய ஆபாசங்களை
தன்  வக்கிரமான அவலங்களை
தானே பார்த்துக்களிக்கும்
ஒரு "சோசியல் நார்சிச"விழ்ச்சிக்கு
வித்திடும்  நாசகார
இந்த சமுதாய பொருளாதார சந்தைக்குள்ளே
சிதிலமான இந்த குப்பைக்காடுகளிலா
உங்கள் காதல் மயில்பீலிகள்
பூங்காக்கள் அமைக்கும்?

==============================================
வியாழன், 30 ஆகஸ்ட், 2018

மைக்கேல் ஜாக்ஸன்

பேழைக்குள் ஒரு பிரளயம்.
==================================================ருத்ரா
(மைக்கேல் ஜாக்ஸன் மறைவுக்கு ஒரு கவிதை அஞ்சலி)


கரடு முரடாய் வாழ்க்கை.
கனவுகளோ மூளி வானத்தை
பாதாம் அலவாவின் கனசதுரங்களாய்
வெட்டி வைத்திருக்கின்றன.
மொய்த்துக்கொண்டிருப்பது
கொசுக்களா?
பூச்சிகளா?
தேனீக்களா?
இல்லை சாக்கடை ஈக்களா?
அந்த "காதலைத்தான்" சொல்கிறேன்.
ஏக்கத்தின் தீக்கொளுந்துகளில்
ஜீன்ஸ் அணிந்து கொண்டு
ந‌ட‌மாடிக்கொண்டிருந்த‌ போதும்
ந‌ர‌ம்புக்கூட்ட‌ங்க‌ளின்
வ‌ர‌ம்புக‌ள் அறுந்துபோய்
அவிழ்ந்து நிற்கின்ற‌ன‌.

கம்பிக்காடுகளில்
பங்களாக்களில்
பதுங்கிக்கொண்டு
என்னத்தைப் பார்க்கிறீர்கள்?
சுவாசங்களில் கந்தல்விழுந்த
அந்த நுரையீரல்களை கழற்றிவைத்துவிட்டு
இசையின் புதிய யுகத்தைப்பூங்கொத்தாக்கிய
நுரையீரல்களை சூட்டிக்கொள்ளுங்கள்.
எத்தனை ஓசைகள்! எத்தனை வண்ணங்கள்!
தேன்சிட்டுகள் ரெக்கைகளில்
அதிரும் ஏ.ஆர்.ரஹ்மான்கள்
தட்டாம்பூச்சிகளின் கண்ணாடி சிறகுகள்...
அதில் எவ‌னாவ‌து ஒரு புதுக்க‌விஞ‌ன்
தாஜ்ம‌ஹால்க‌ள் க‌ட்ட‌த்த‌விப்ப‌து...
அதோ வான‌த்தை பிய்த்துக்கொண்டு கொட்டுகிற‌தே
மைக்கேல் ஜாக்ஸ‌னின்
"த்ரில்ல‌ர்" இசைக்குழ‌ம்பின்
வ‌ர்ண‌ப்பிர‌வாக‌ங்க‌ள்....
அவ‌னா இற‌ந்துவிட்டான்?
இந்த‌ செவிக‌ளுக்குள்
செதில் உதிர்த்துக்கொண்ட‌ இத‌ய‌ங்க‌ள்
இத‌ய‌ங்க‌ளுக்குள்
செதுக்கிக்கொண்டேயிருக்கும்
அவ‌ன் ர‌த்த‌ங்க‌ளின் ச‌ப்த‌ங்க‌ள்..
கோடி கோடி டால‌ர்க‌ள் கொட்ட‌த்த‌யாராய்
இருக்கும்
ர‌சிக‌ சூறாவ‌ளியின் அக‌ல‌விரித்த
பெருங்க‌ர‌ங்க‌ள்...
"ஒன்றாய் குர‌லெழுப்பினால்
ந‌ட‌க்காத‌து ஏதுமில்லை"
இந்த‌ உல‌க‌த்துக்கே வ‌லிக‌ள் தீர‌
சிகிச்சை அளிப்போம்"...
குர‌ல்க‌ள் ம‌ழை பொழிகின்ற‌ன‌.
இது க‌ண்ணீர் அல்ல‌.
வைரக் "கிடாரை" த‌ங்க‌ப்பேழைக்குள்
வைப்ப‌து போல்
அவ‌ன் உட‌ல் அட‌க்க‌ நிக‌ழ்வு
இந்த‌ உல‌க‌த்தையே உதிர‌வைத்த‌து.
அந்த பேழைக்குள் கிடப்பது
தூக்க மாத்திரைகளின் சதியோ?
தூங்காத இசையின் நதியோ?
எதுவாய் இருப்பினும்
அந்த பேழைக்குள் இருப்பது
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
ஒரு பிரளயம்.
எம‌ன் எனும் பொறாமைப்பிண்ட‌மே!
உன் தோலையே உரித்துப்போட்டுவிட்டு
ஒரு பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி செய்துகொண்டு வா!
இவ‌ன் இசையை உன்னால்
உருவாக்க‌ முடியாது.
ஐம்ப‌து வ‌ய‌துக்குள்
அவ‌னை ப‌ல‌கார‌ம் ப‌ண்ணிவிட்டேன் என்று
கொக்க‌ரிக்காதே.
நீ தின்ற‌து இவ‌ன் ச‌தையை ம‌ட்டும் தான்.
இசை "டோர்ன‌டோவாய்"
உய‌ர‌ங்க‌ள் எல்லாம் க‌ட‌ந்து
ஒரு சுழ‌லில் "ஃபுன‌ல்" வ‌டிவில்
விஸ்வ‌ரூப‌ம் எடுத்துக்கொண்டு நிற்கிறான்.
ஓ! ம‌னித‌ர்க‌ளே!
உங்க‌ள் துய‌ர‌ங்க‌ளை இதில் வ‌டிக‌ட்டிக்கொள்ளுங்க‌ள்.
ம‌னித‌ப்பிற‌விக‌ள் பிரபஞ்சக்கூழாய் க‌ரைந்து
அந்த‌ "எத்தியோப்பிய‌" சிசுக்க‌பால‌ங்க‌ளிலும்
க‌ண் குழிக‌ளிலும் உயிர் ஈர‌த்தை
ந‌க்கிக்காட்டுகிற‌து அது.
தாய்மையின் க‌த‌க‌த‌ப்பே அந்த‌ இசை.
இசைச் சுர‌ங்க‌ளுக்கு
ச‌ங்க‌மம் தான் உண்டு; ச‌மாதிக‌ள் அல்ல‌.
லாஸ் ஏஞ்ச‌ல‌ஸின் "ஸ்டேப்ள‌ர்ஸ் சென்ட‌ரில்"
அன்று (ஜூலை 7 2009)
தேச‌ எல்லைக‌ளின் காங்கிரீட் கோடுக‌ள் கூட‌
நொறுங்கிப்போயின‌.
குறுகிய‌ வ‌ன்முறைக‌ள் தொலைந்து போயின‌.
வெள்ளைக்க‌ண்க‌ளிலும்
க‌ண்ணீர்க்க‌ருங்க‌ட‌ல் முட்டிநின்ற‌ன‌.
நினைவின் க‌ட்ட‌ங்க‌ள்
சிறைவைத்திருக்கும்
இந்த‌ புழுக்கூட்டை உடைத்துக்கொண்டு
புற‌ப்ப‌ட்டு வ‌ருவேன்.
என்று ஒரு புதிய‌ இசையை
அந்த‌ ஹாலிவுட் ஹில்ஸின் தூரிகைப்புல்க‌ளில் கூட‌
ந‌ம்பிக்கையின் மெட் அமைத்து
பாடுகிறான் அவ‌ன்.
தியாகைய்ய‌ர் ஆராத‌னையென்றாலும் ச‌ரி
செம்ம‌ங்குடியின் தொண்டைக்குழியென்றாலும் ச‌ரி
என‌க்கு அதில் மைக்கேல் ஜாக்ஸ‌னின்
ஜெண்டை வ‌ரிசையும் க‌ம‌க‌மும் கார்வை நூற்கிற‌து.
அந்த‌ திருவால‌ங்காட்டு சிவ‌ன்
மைக்கேல் ஜாக்ஸ‌னாய்
மைக் பிடித்துக்கொண்டு ஆடிப்ப‌டுகிறான்.
திவ்ய‌மாய் கேட்க‌லாம் வாருங்க‌ள்.

=========================================================
09.07.2009

ருத்ரா
(இ.ப‌ர‌ம‌சிவ‌ன்)
த‌வுச‌ண்ட் ஓக்ஸ் (லாஸ் ஏஞ்ச‌ல்ஸ்)
க‌லிஃப்போர்னியா
யு.எஸ்.ஏ.


.

புதன், 29 ஆகஸ்ட், 2018

நடு கற்கள்

நடு கற்கள்

====================================ருத்ரா


அது எந்த வருடம்?

ரெண்டாயிரத்து சொச்சம்

இருபத்தஞ்சா?

முப்பத்தஞ்சா?

ஏதோ ஒன்று விடுங்கள்.

மதுரையிலிருந்து

ராமேஸ்வரம் செல்லும் பாதை

அல்ல அல்ல..

ஃபோர் வே ரோடு...

மைல் கற்களில்

இந்தி மட்டுமே..

வழியில் ஒரு ஸ்வச்சாலய்க்கு இறங்கி

இயற்கைக் கடன்..

மீண்டும் காரில் ஏறும் போது

அந்த மைல் கல்லை

இந்தியை எழுத்துக்கூட்டி படித்தேன்.

கீ...ழ..டி..

என்ன தமிழனின் தொன்மை

அடையாளம் அல்லவா?

காரை நிறுத்திவிட்டு

அதைச்சுற்றி பார்க்க நினைத்தேன்.

அங்கே இருந்த

தகவல் பலகைகள்.

இந்தியில்

என்னென்னவோ எழுத்துக்களை

வடாம் பிழிந்து வைத்திருந்தார்கள்.

வரவேற்பு தோரணத்தில் பெரிய இந்தி எழுத்து.

அதன் கீழ் ஆங்கிலத்தில்.

"திஸ் சைட் இன்டிகேட்ஸ் அவர் "ஆர்யன்" சிவிலிசேஷன்"

ஐயகோ!

தமிழின் தொன்மை

வடமொழிக்குள் தொலைந்து போய் விட்டதோ?

காரில் பயணம் தொடர்ந்தேன்.

ராம..ராம..ராம....ராம....

ராமேஸ்வரம் வரைக்கும்

அந்த மைல்கற்களில் எல்லாம்

ரத்தம் வழிந்தது.

தமிழன் தமிழை மறந்ததால்

அவன் பயணத்தின் மைல்கற்கள் எல்லாம்

இங்கே

அவன் அழிவை  அடையாளப்படுத்தும்

நடுகற்களாகவே தோன்றின!திடுக்கிட்டேன்.

................

.....................

சட்டென்று விழித்துக்கொண்டேன்.

தூக்கத்திலிருந்து தான்!

இந்த‌ வரலாற்று திருத்தங்களிலிருந்து

நாம்

எப்போது விழித்தெழுவது?==================================================
04.06.2017
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

ஸ்டாலினுக்கு ஒரு வாழ்த்து

ஸ்டாலினுக்கு ஒரு வாழ்த்து
==========================================ருத்ரா

திமுக என்பது
ஒரு பசிபிக் பெருங்கடல்
மட்டும் அல்ல!
அது பசிக்கும் பெருங்கடல்.
அதன் தமிழ்ப்பசிக்கு
உணவு
மீண்டும் தமிழ்ப்பசியே!
கலைஞர் என்ற பெருந்தமிழன்
கட்டிக்கோர்த்த இக்கட்சியை
மீண்டும் உறுதியாய்
கட்டிக்கொடுத்த‌
அரசியல் சிற்பி அருந்தலைவர் ஸ்டாலின்.
அவருக்கு நம் வாழ்த்துக்கள்.
தமிழ்மக்களிடையே
திராவிட நாகரிகத்தின் ஊற்றை
சுரக்க வைத்துக்கொண்டிருந்த‌
பூங்காற்றே!
தருணம் அழைத்தால்
புயல் காற்றாயும் ஆகிவிடும்
வல்லமை பெற்ற செயல்வீரரே!
சித்தாந்தங்கள் எல்லாம்
சிந்தனைகள் எல்லாம்
லட்சியங்கள் எல்லாம்
உரிமைக்கு எழும் ஆற்றல்கள்
எல்லாம்
ஒன்று திரட்டி
ஒன்று கூடி நின்று
இயக்கம் காட்டிய தலைவரே
தொடரட்டும் உங்கள்
சீரிய பணி!
இங்கு
ஓட்டுகள் எல்லாம் நோட்டுகளாய்
அடையாளம்
மாறி விட்ட பொழுதில்
அவற்றை
ஜனநாயகம் எனும்
உயிர் பூசிய வாக்குகளாய்
வார்த்தெடுக்கும் பணிக்குள்
உங்களை
வார்த்துக்கொண்ட தலைவரே
வாழ்க உங்கள் அரசியல் லட்சியம்!
அன்று ஒரு நாள்
உங்கள் சட்டை கிழிந்தது!
கிழிந்தது உங்கள் சட்டை அல்ல!
கிழிந்தவை
இவர்கள் சட்டதிட்டங்கள் தான்.
பொம்மை ஆட்சிகள் தொலைந்திடட்டும்.
தமிழன்
உண்மை ஆட்சி சுடர்ந்திடட்டும் என்று
உறுதிப்பயணம் செல்பவரே!

மாநில சுயாட்சியின் நிழலே
மத்திய கூட்டாட்சி.
மத்திய கூட்டாட்சியின்
உயிர்ச்சி நிறைந்த வேர்களே
மாநில சுயாட்சிகள் .

இதை அறிந்தால்
அன்றே "அண்ணா"சொன்ன
அந்த "ஆட்டுக்கு தாடி" தேவையில்லை
என்பதை புரிந்து கொள்ளலாமே.
அப்படியிருந்தும் அதை
சிங்கப்பிடரியாய் ஒரு அட்டை செய்து
மாநிலங்களுக்குள்
(அதாவது எதிர்க்கட்சிகள் ஆளும்
மாநிலங்களுக்குள் )
எல்லாம் போய்
பூச்சாண்டி காட்டுவது
எந்த வகை ஜனநாயக நியாயம்?

ஸ்டாலின் அவர்களே
உங்கள் கருப்பு (க்கொடி ) அலைகள்
நெருப்பு அலைகளாய்
அதை எதிர்த்து ஒரு வெளிச்சம் காட்டியதே!
அது
உங்கள் தலைமையின் வரலாற்று ஏட்டின்
முதல் அத்தியாயம் அல்லவா?

அது போல்
அவர்களின் எத்தனையோ
உளுத்துப்போன
பஜனைப்பாடல்களின் நடுவே
"எதிர் பூபாளங்களை"
 எழுச்சி விடியலுக்கு
பண் அமைக்கும் பண்பு
வீரம் சிலிர்த்து நிற்கிறது
உங்கள் வழி காட்டுதலில்.

எதிர்க்கிறேன் என்று
சிறுபிள்ளைத்தனமான
சிலரால்  
சோப்புக்குமிழிகள்
ஊதப்படும்போதே
உடைந்து போவதை
காணப்போகிறீர்கள் !
நெஞ்சுரம் கொண்ட தலைவரே!
நங்கூரம் இட்டு நில்லுங்கள்
உங்கள் உறுதியான கொள்கையில்.


அத்தனை கோடி தமிழர்களும்
உங்களுக்கு
தோள் கொடுத்து அறிவெனும்
வாள் எடுத்து போரிடுவார்.
சமூக நீதிகாக்கும்
சரித்திரம் படைக்கவும் செய்திடுவார்.
வாழ்க வாழ்க வாழ்க!
தலைவர் ஸ்டாலின் வாழ்கவே!

===================================================
திங்கள், 27 ஆகஸ்ட், 2018

குவாண்டம் எனும் "பொய்மானைத் தேடி"........

குவாண்டம் எனும் "பொய்மானைத் தேடி"........
============================================
ருத்ரா இ பரமசிவன்குவாண்டம் எனும் பொய்மானைப்பிடிக்க ஒரு பொய்த்தோற்றவெளியை நாம் உருவாக்கியாக வேண்டும்.அதை கணித மொழியில் "என்  டைமன்ஷனல் வெக்டார் ஸ்பேஸ்"எனலாம்.அதாவது "என்" அளவீட்டு திசையங்களின் வெளி"என்று பொருள் படும்.இங்கே நாம் "என்" என்று ஒரு எண்ணிக்கையைக்கொண்டு அந்த அளவீடுகளைக் குறித்தாலும்
அது ஒரு "எண்ணற்ற தன்மையை" (இன்ஃபினிடி) நோக்கி செல்வதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பொதுவாக நாம் பருமப்பொருளை அளவிட 3 அளவீடுகள் (த்ரீ டைமன்ஷனல்) வைத்து அளக்கிறோம்.

ஒரு கற்பனையாக இங்கு மூன்றுக்கும் மேல் அதிகமாய் "என்"அளவீடுகள் கொண்டிருப்பதாக ஒரு சமன்பாடு உருவாக்குகிறோம்.இது ஒரு கூட்டல் சமன்பாடு (சம்மேஷன்) இதில் திசையங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்று ஒரு நேரியல் தன்மையில் (லீனியர்லி இன்டிபென்டன்ட்) அதாவது எந்த விளைவுக்கும் உட்படாது அமைக்கப்படுகின்றன.

மேலே சொன்ன கட்டமைப்பில் புகழ்பெற்ற "ஹில்பர்ட் வெளி"
(ஹில்பர்ட் ஸ்பேஸ்) ஒன்று திசைய கணிதக்கோட்பாட்டில் அமைக்கப்படுகிறது.ஹில்பர்ட் என்ற தலைசிறந்த கணித மேதையால் இது உருவாக்கப்பட்டுள்ளது.இது அந்த குவாண்டம் என்ற பொய்மானை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் என  இயற்பியல் கணித மேதைகள் கருதுகின்றனர்.

ஆற்றலை ஒரு குறிப்பிட்ட புள்ளித்துகளின் (பாயிண்ட்  பார்டிகிள்) நகர்ச்சியாக (மோஷன் ) அளக்கும் "மரபு முறை"(க்ளாஸிகல் மெத்தட்)
இப்போது மலையேறி விட்டது. அதனால் குவாண்டம் எனும் அந்த "அளபடை "
ஆற்றலை ஒரு "அடைப்புக்குள்"(பிராக்கெட்) பிடிக்க முயன்று வெற்றி பெற்ற
ஒரு இயற்பியல் வேட்டைக்காரன்  ஒருவன் உண்டு.பி.ஏ.டிராக் எனும் இங்கிலாந்து  விஞ்ஞானியே அவர்.ஆற்றல் துகள்  புள்ளி நிலையிலிருந்து
மாறு பட்டபோது அவற்றை நகர்ச்சி திசையமாக  (வெக்டர்) எடுத்துக் கொண்டு  "அதன் நிலைப்பாடாக"(ஸ்டேட் ) கணக்கிட்டார்.எனவே இரண்டும் இழைந்த "திசைய நிலைப்பாட்டை"(ஸ்டேட் வெக்டர் ) ஒரு அடைப்புக் குறிக்குள் (பிரேக்கெட்) அந்த நிலைப்பாடுகளை இட்டார்.ப்ராகெட்டின் முன் பகுதியை "பிரா" (Bra) என்றும் பின் பகுதி அதாவது இறுதி பகுதியை "கெட் " (Ket) என்றும் குறித்தார். அவை முறையே "ஆரம்பம் " (இனிஷியல் ) மற்றும் 
"இறுதி "(பைனல் ) திசைய நிலைப்பாட்டுத்துண்டுகளைக்குறிக்கும்.(ஸ்டேட் வெக்டர் பார்டிகிள்ஸ்) இவற்றை வைத்துக்கொண்டு நிரலிய கணிதம் (மேட்ரிக்ஸ்) மூலம் அந்த "குவாண்டம் "எனும் "பொய்மான் கரடு" நோக்கி 
"டிராக் " செய்த இயற்பியல் சாகசங்கள் நம்மை  சிலிர்க்க வைக்கும்.

"கல்கி" அவர்களின் அற்புத படைப்பான "பொய்மான் கரடு " என்ற நாவலைப்படித்திருப்பீர்கள்.அந்த பொய்மான் கரட்டின்  "அபூர்வ"நிழல் போல ஒரு மாயமானாய் இந்த "குவாண்டம் " இயற்பியல் கணித வல்லுனர்களின் பிடியிலிருந்து தப்பிக்கொண்டே போகிறது.

(தொடரும்)

------------------------------------------------------------------------------------------------------------

"இப்பொழுதே..."

"இப்பொழுதே..."
==============================================
"ராபர்ட் ப்ரௌனிங்."உன் முழுவாழ்க்கையின் ஒரு சிறு பிசிறு
உன் கைமேல் ஒரு மைனாக்குஞ்சுவின்
சிறு பிஞ்சு ரெக்கையாய்
எப்படி துடிக்கிறது பார்!
நிகழ்காலத்தருணம் ஒன்றை
ஒரு பூதக்கண்ணாடி வைத்து உற்றுப்பார்.
வரும் காலம் பெரிய பூதமாய்
உன் முதுகு சுரண்டுவதைப்பற்றி
கவலை கொள்ளாதே.
இந்த இப்போதைய வினாடிப்பிஞ்சு ஒன்றின்
முழுமைக்குள் முகம் நுழை!
அதன் மூச்சுக்காற்றின் இழையை
உரித்துப்பார்.
அதை உன் சிந்தனையால்
கடைந்து கடைந்து உரு திரட்டிப்பார்!
ஒரு உள்வெறி உன்னைக் கிழித்துக்கந்தலாக்கியதில்
தொலைந்து போகாதே!
அந்த முழுமையே உன் அரண்.
அதில் நீயே எழுதிய உன் விவிலியங்கள்
குவிந்து கிடக்கின்றன.
உணர்வு ஆள்மை ஓர்மை எல்லாம்
அந்த ஒற்றைவிநாடியின் கடிகாரமுள்
கசியும் ரத்தமாய் நிகழ்பொழுதில்
என்னைத் தழுவிக் கழுவி கரையேற்றுகிறது.
"நீ" "நான்"ஆகியது
இந்த நிகழ்காலத்தருணம் பூசிய வர்ணம் தான்.
அந்த ஒரு கணம் கடைசியாய் என்னுள் அது...
அல்லது அதனுள் நான்...
அது என் வானமாய் மேல் நின்று
என் பூமியாய் காலடி நக்கி
என்னைச்சுற்றிலும்
சுவாசம் எனும் பெரும் பூவாய்
படர்ந்து.....
என்னில் கரைந்து கொண்டிருக்கிறது.
வரும் காலமும் கடந்த காலமும்
என்னை பொருட்படுத்தவில்லை.
எனக்கும் அது ஒரு பொருட்டே இல்லை!
மொத்தவாழ்க்கையை கடைந்தெடுத்த‌
அடர்த்தியான 
இந்த வெண்ணெயின் இன்பொழுது
எனும் நிகழ்பொழுது போதும் போதும்!
எவ்வளவு இனிப்பு? எவ்வளவு சுவை?
இது எவ்வளவு தான் என் மீது
ஒழுகிக்கொண்டிருக்கும்?
அந்த திரவம் ஒரு அமுதம்.
அந்த நிஜத்தை எப்படி வேண்டுமானாலும்
கற்பனை செய்வோம்!
அந்த அமுதத்தின் அடி ஆழம் வரை
தரை தட்டி நின்று
இப்படியே தவம் இருப்பேன்.
முகநரம்புகள் கன்னத்தில்
வேள்வி குண்டங்களை எரிக்கட்டும்.
விரிந்த கரங்களில் விழும்
ஒரு பிரபஞ்சம் தேடி
கண்கள் மூடி
இறுக்கிய ஒரு முத்தத்தில்...
நான் அனுபவிப்பேன்...
எல்லாம் அனுபவிப்பேன்.
===============================ருத்ரா இ.பரமசிவன்
(இது ராபர்ட் ப்ரௌனிங் கவிதையின் மொழிபெயர்ப்பு அல்ல.
ஒரு மாபெரும் கவிஞனின் உட்கிடக்கை இது.)


"NOW" by Robert Browning
______________________________

Out of your whole life give but a moment!
All of your life that has gone before,
All to come after it,—so you ignore,
So you make perfect the present,—condense,
In a rapture of rage, for perfection’s endowment,
Thought and feeling and soul and sense—
Merged in a moment which gives me at last
You around me for once, you beneath me, above me—
Me—sure that despite of time future, time past,—
This tick of our life-time’s one moment you love me!
How long such suspension may linger? Ah, Sweet—
The moment eternal—just that and no more—
When ecstasy’s utmost we clutch at the core
While cheeks burn, arms open, eyes shut and lips meet!

=====================================


QUANTUM PLUNGE-3

QUANTUM PLUNGE-3
==============================================
RUTHRAA  E  PARAMASIVANQuantum mechanics is the deadly abyss where it never seems with a foot-hold of a reality
in physical terms.More in clearer terms it is severely lacking a "locality theorem".Energy particles of course span the Quantum.When they are tagged in Quantum numbers it  is of so many parameters.Here mainly "position " and "Momentum " are the two keyholes to the whole Cosmo of Quantum Corpus.But these two are mutually evasive.When  one is Quantumized the other one  goes off the scene and vice versa.

The other bottle-neck is the "relativistic" fuss of the theory.That means Quantum theory
is basically in a premise of "time independence".But how far this may be true is  another question.Putting in the time slot we have to evaluate an "evolution theory" of this Quantum puzzle.The dynamic bondage of "Space-time" is the crux of the relativity how so ever it ranges from a "special" to "general".This important "causality" is just broken in
Quantum Theory which is very much linear and time independent.Linear in the sense is 
the quantum flow is nothing but a sum or adding up of vectors that too is built by superposition of states.Hence with out locality (reality) and causality how a theory will be based to Quantum. Einstein also thought this theory is looking a wind fall gain or loss
like a "dice throwing" carnival show.According to him law of physics is not just a whims and fancy lacking "determinism".But in the cobweb wilderness of probability and its density current the determinism slides stealthily vanishes.But is it a real vanish or a virtual vanish is still a million dollar question!

Another weird concept in Quantum Mechanics is the beautiful but a mysterious phenomenon is its "barrier penetration".The theory by itself seeming a non- local non- real
and breaking the very essence of logical cosmology axiom of "causality"is quite interesting and exciting.Let us now have a peep through a potential step barrier that magical feat in energy levels of E' E'' and E''' which I label that E'<PB ,E''=PB,E'''>PB.
Here PB refers to Potential Barrier.Let us also see diagrams and some mathematical equations in this regard.

_________________________________________________________
ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

என்ன பார்க்கிறாய்?என்ன பார்க்கிறாய்?
===============================================ருத்ரா

என்ன நீ பார்க்கிறாய்?
பார்த்துக்கொண்டேயிருந்தால்
மட்டும் போதுமா?
ஏதாவது பேசேன்.
அதற்கு
"க்ளுக்"என்ற மென்சிரிப்பை
இனிப்பாக்கி
இங்கு சுற்றியிருக்கும்
காற்றுக்குள் எல்லாம்
உன்னை ஊற்றாக்கி
வட்ட வட்ட சிற்றலைகளாய்
மோனப்பெருவெளியில்
விரவி விட்டாயே!
மறுபடியும்
அதே "க்ளுக்"
அவன் ஆனந்த ததும்புகளில்
திக்காடிப்போனான்..

"ஏண்டா ஃபூல்
ஒரு வார்த்தை உரத்து
என்னிடம் பேச
உனக்கு என்னடா தயக்கம்.
இப்படி
இந்த தடாகத்து நிழலோடு
இத்தனை பேச்சா?"

ஒரு சிறிய கூழாங்கல்லை
தடாகத்து தண்ணீர்ப்பரப்பில்
எறிந்து விட்டு
பக்கத்து மரத்தின் மறைவிலிருந்து
வெளிப்பட்ட அவள்
இப்போது கல கல வென்று
சிரித்தாள்.

இப்போது அவனுக்கு
அந்த தடாகத்திலிருந்தும் கூட‌
ஒரு சுநாமி
தட தடப்பது போல் இருந்தது.
இன்ப அதிர்ச்சி அது!

===============================================

ஆசை ஆசையாய்...ஆசை ஆசையாய்...
====================================ருத்ரா இ பரமசிவன்

ஆசை ஆசையாய்
மனம் எனும்
இந்த ரப்பரை நீட்டி நீட்டி
எத்தனை ஆயிரம் மைல்கள்
நீட்டியிருப்பான்.
உயர உயரப்போய்
அந்த விண்ணின்
எத்தனை எத்தனை கோடி மைல்கள்
ஏறியிருப்பான்.
காதலுக்கு மட்டுமே
இப்படி
நுரைக்கோபுரங்கள் கட்டுவதில்
அவனுக்கு
மிக மிக ஆசை..

"கடல் நுரை போல்
நரைத்துப் போகும் வரைக்கும்
சாக்ரடீசும்"
அறிவுக்கோபுரம்
கட்டிக்கொண்டே போகச்சொன்னான்.
பாவம்.
"கல்பொரு சிறு நுரைகள்"
என்ன செய்ய இயலும்?

இந்த பூச்சிமயிர்கள்
கட்டிய புழுக்கூடு
"வயதுக்கு வந்து"
மின்னல் குழம்பில்
விழுந்துவிட்ட விட்டில்கள் ஆனதால்
வாழ்க்கை வானம்
கசங்கிய காகிதம் ஆனது.

அன்று ஒருநாள்
அவள் ஓரக்கண்ணில்
உதய வானமும்
அந்தி வானமும்
மெகந்தி போட்டதில்
அவன் அடி ஆழத்தில் கிடக்கின்றான்.
எங்கே வானம்?
எங்கே பூமி?
இனி
மீண்டும் ஒரு முறை
அவள் சிரிக்கும்போது தான் தெரியும்!

================================================
20.06.2016 ல் எழுதியது.

ஐன்ஸ்டின் அறிவாலயம்
ஐன்ஸ்டின் அறிவாலயம் 
==============================ருத்ரா 
பிரபஞ்சவியல் எனும் காஸ்மாலஜி  பற்றிய ஒரு  அற்புத நுழைவாசலை 
திறந்து வைத்தவர் ஜெர்மானிய
இயற்பியல் விஞ்ஞானி "ஆல்பர்ட் ஐன்ஸ்டின் "ஆகும்.இவர் எந்த சோதனைக்கூடத்திலும் அடைந்து கிடக்கவில்லை.தன் நுண்ணிய கணித மற்றும் இயற்பியல் சிந்தனை களை மட்டுமே பயன்படுத்தினார்.
இவை உலகப்புகழ் பெற்ற "சிந்தனை 
பரிசோதனைகள் " (Thought Experiments) என அழைக்கப்படுகின்றன.

அது பற்றிய தொகுப்பாக நான் எழுதிய இந்த மின்னூல் பக்கங்களை 
முதல் பகுதியாய் இங்கு தந்துள்ளேன்.

கீழ் வரும் பக்கங்களை பெரிதாக்கி (zooming) படிக்கவும் 


                          


"செக்கச்சிவந்த வானம்..."

"செக்கச்சிவந்த வானம்..."
===========================================ருத்ரா

"ராக்கம்மா கையத்தட்டு"
என்று அந்த நெருப்பு நாக்குகளோடு
நாக்குகளாக
இசையை தாளம் தட்ட வைத்த‌
"தளபதி"
இங்கே நான்கு மண்டலங்களாக‌
பிரிக்கப்பட்டிருக்கிறது போலும்.

இங்கும் வானம் எல்லாம்
கீறல்கள் விழுந்த சிலேட்டு தான்.
"டுமீல் டுமீல்"களால்!
அது என்ன ஒரு நடிப்புக்கடலை
"காக்கி உடுப்புக்குள்"
திணித்திருக்கிறார்கள்.
விஜய்சேதுபதி
கதாநாயகன் பாதி
வில்லன் பாதியா?
மிடுக்கும் கடு கடுப்பும் தான்
அவர் பாத்திரத்தில் இருக்கவேண்டியது.
இருப்பினும்
அதற்குள்ளும்
கடுக்காய் கொடுக்க
ஏதாவது வைத்திருப்பார்.
அருண்குமார்
வழக்கமாய் ஒடிசலாய் அழகாய்
வந்து போவதே போதும்.
அப்பா விஜயகுமார் முத்திரைகளை
இப்படத்தில் பதிக்க
திட்டம் உண்டா என்பது
மணிரத்னம் அவர்களின்
"ஆக் ஷன்" "கட்"ஆணைகளில்
அல்லவா இருக்கிறது.
அரவிந்த சாமியின்
"ரோஜா பிஞ்சு" முகம்
சமீபத்திய முற்றிய "ஹீரோயிச வில்லன்"
வேடங்களுக்கு பின்
ஒரு புதிய மெருகுடன்
ரசிகர்களை வெகுவாய் கவர்ந்துள்ளது.
இதில் ஒரு வினோத ஸ்டைல் கம் மேன்னரிசம்"
இருக்கலாம்.
சிம்பு
"விண்ணைத்தாண்டி வருவாயா"வுக்குப் பிறகு
ஒரு நெருப்புவளையத்தையே
ஊதிவிட்டு வந்து விட்டார் என்று சொல்லலாம்.
சிம்புவுக்கு "கிசு கிசுக்களா?"
அல்லது
கிசு கிசுக்களுக்கு சிம்புவா?
வரதன் என்ற பெயரிலேயே
ஒரு சுவாரஸ்யமான பாத்திரம் பளிச்சிடுகிறது.

கதாநாயகிகளைப்பற்றி
கட்டுரைக்க‌
அவர்களின் கிளுக் வசனங்களும்
மற்றும்
சைக்கடெலிக் நிழல் மூட்டங்களில்
அவர்களின் "உடல் மொழிகளும்"
மிகவும் நுணுகி அணுக வேண்டியது
அவசியம்.

மணிரத்னம் அவர்களின்
திரைஇயக்கம்
நம் சினிமாக்கலைப்படைப்பாளிகளுக்கு
ஒரு பொக்கிஷம்.
ஒரு இருட்டையே கூட‌
ஒரு முழு நீள ஃப்ரேமாக‌
ஓடவிட்டு
நறுக்கென்று ஒரு தீம் சொல்லும்
குறும்படம் ஆக்கிவிடுவார்.
கதாபாத்திரங்கள்
சொற்களை கத்திரிபோட்டு போட்டு
ஒலிப்பது இருக்கலாம்.
அல்லது
கரும்பைச்சவைத்து
துப்பும் இனிமையான
மௌனம் கலந்த நெடியும் இருக்கலாம்.
அவர் படத்தை
மற்றவர்கள் காப்பி அடிக்க முடியாது.
ஆகா சுவையான ஆவி பறக்கும்
காப்பி அல்லவா இது
என்று குடிக்கலாம்.
திறமையான கூட்டணி இந்த‌
செக்கச்சிவந்த வானம் என்று
சொல்லலாம்.

==================================================================


சனி, 25 ஆகஸ்ட், 2018

கலைஞருக்கு ஒரு நினைவேந்தல்.

கலைஞருக்கு ஒரு நினைவேந்தல்.
==============================================ருத்ரா

கலைஞர் என்ற‌
தமிழ்க்கடல் தளும்பிக்கொண்டிருக்கிறது.
சந்தனப்பேழைக்குள்
தமிழ்ச்சரித்திரத்தின்
ஒரு மெகா மெமரி அல்லவா
பில்லியன் பில்லியன்
பூலியன் துடிப்புகளாய்
இந்த இளைய கணினியுகத்துள்ளும்
ஒளி பூத்துக்கொண்டிருக்கிறது!
தமிழ்
தூசி படர்ந்து
ஏதோ ஒரு பேய் பங்களாவுக்குள்
நூலாம்படைக்காடுகளில்
சிக்கிக்கிடந்ததை
சிக்கல் பிரித்து
அந்த அழகிய தமிழ் நூல்களை
ஏட்டுத்துடிப்புகள் மாறாமல்
துடிக்க வைத்து
தமிழ் எனும் செம்மொழியின்
ஒளிப்பிரளயம் உண்டாகச்செய்தவன்
அதோ அந்த பேழைக்குள்!
அது பேழை அல்ல
நம் வருங்காலத் தமிழ் எனும்
அறிவுத்திரட்சியின்
ஒரு சூப்பர் கம்பியூட்டர்!

அந்த பெருங்கலைஞனுக்கு
அஞ்சலி செலுத்த‌
கட்சி வரப்புகள் தாண்டி
இந்திய அரசியல் ஆர்வலர்கள்
எல்லோருமே வருகிறார்கள்
என்பது
ஒரு செய்தி மட்டும் அல்ல.
அது ஒரு பீதியும் கூட.
"கனக விசயர்களின் முடித்தலை நெறித்து
கல்லினை ஏற்றி வைத்த"
அந்த வீர வரிகளை
அந்த தமிழ்க்கனலை
இந்த மெரீனா திடலில்
எங்காவது ஒரு ஒலிப்பெருக்கிக்குழாயில்
ஒலிமழை பெய்துகொண்டிருப்பாரே
அந்த கவியரசு கண்ணதாசன்!
இதன் வீச்சு மழுங்கிப் போனதோ
என்பதே அந்த மெல்லிய அச்சம்.
ஆனால் கடந்து போன
நம் அடிச்சுவடுகள்
காலத்தின் கட்டாயம் எனும்
"படி"ச்சுவடுகளையும் நம்மை
படிக்க
வைத்திருக்கின்றன.
இது கலைஞர் சாணக்கியம் அல்லவா.
என்று
சிலர் மெய்  சிலிர்க்கலாம்.
சிலர் சீறிப்பாயலாம்.
ஆனாலும் நம் சறுக்கல்கள்
அதிலும் புதைந்திருக்கலாம்.
அழைப்புகள்
கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்
என கருதப்படுபவர்களுக்கு
கொடுபடாமல் இருப்பது 
நிச்சயம்
ஒரு கறையாக  பார்க்கப்படும்.
ஒற்றையாய் கொடியேந்தி
நானும் ஒரு திராவிடக்கழகம் தான்
என்று நிற்பவனும்
அந்த திராவிடக்கடல் அலையின் பிஞ்சு தான்
என்று கோட்பாடு
வகுக்க வேண்டிய தருணம் இது.
இன்னும் பங்காளிக்காய்ச்சல்
அது இது என்று சொல்லிக்கொண்டிருந்தால்
அதற்கு தனக்குத்தானே
மன சாட்சி எனும் மருந்தை
ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய
தருணமும் இதுவே!
"எதிரியை விடு துரோகியை அழி"
எனும் உளுத்துப்போன
பொய்  வீரத்தை
என்று தமிழன் கைவிடுகிறானோ
அன்று தான் அவன் முழங்கும்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்பது   உண்மையை "ஒளிர்க்கும்"
இல்லாவிட்டால்
அது தமிழின் உண்மையை ஒளிக்கும்.

அந்த "முள்ளிவாய்க்காலில்"
நம் மொத்த சரித்திரத்தின்
பக்கங்கள் எல்லாம் மொத்தமாய்
மூழ்கி காணாமல் போனது என்பது
உண்மையிலும் உண்மை.
அதன் வலி
"கல் தோன்றி மண் தோன்றா
காலத்தேயும்" முன் தோன்றிய
அந்த "ஃபாஸ்ஸில்" முனை வரைக்கும்
சென்று
நம்மை வதைத்துக்கொண்டு தான்
இருக்கிறது.
அதனால் நமக்கு
இப்போது புதிய கடமை ஒன்று உள்ளது.
இந்தியன் இறையாண்மை என்பது
தமிழன் இறையாண்மையே !
அந்த "சிந்து வெளித்தமிழின்"வெளிச்சமே
இந்தியாவுக்கு மட்டும் அல்ல
உலகத்துக்கே ஒரு கலங்கரை விளக்கம்.
நகுவதற்கு அல்ல இவ்வரிகள்.
நம் அறிவை அகழ்வதற்கே  இவ்வரிகள்.

மாற்றம் ஒன்றே மாறாதது
என்பது தானே
ஒரு சமுதாய வரலாற்றுப்பார்வை.
இந்தக் கூரிய மார்க்சிய நோக்கு
நம் "செந்"தமிழுக்கும் உண்டு.

===================================================ஜெயமோகனின் சொற்கோட்டை

ஜெயமோகனின் சொற்கோட்டை
===========================================================ருத்ரா


ஜெயமோகன் என்றால்
நான் கடவுள்
எந்திரம் 2
என்றெல்லாம்
திரை எழுத்துக்கள்
நிறைய நிறைய‌
பாப்கார்ன் பொட்டலங்களாய்
தியேட்டர்கள் தோறும்
கொறிக்கப்படுகின்றன என்பதுவே
அவர் பெற்ற ஒப்பற்ற விருது.
ஏன்
அவரது வெண்முரசங்கள்
கடிகார நேரங்கள் எல்லாம்
வெளிக்கிளம்புமுன்
அவற்றையும் பிதுக்கிக்கொண்டு
வெளியேறி
வாசகர்களையெல்லாம்
அந்த சூதர்களின்
வண்ண வண்ண ஓங்கரிப்புகளில்
அமிழ்த்தி அமிழ்த்தி
மூச்சுத்திணற செய்கின்றன என்பதில்
சந்தேகமில்லை.
அவர் "எழுத்துக்களின் பிதாமர் பீஷ்மர்"
என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியே.
அதற்காக பிதாமகரே !
இந்த தமிழர்களை ஆரிய நச்சு தோய்ந்த
அம்பு படுக்கையில் வீழ்த்துவதற்காக
உங்கள் எழுத்துக்கள் "ஒரு தந்திரபுரியாக"
இருப்பதை நாங்கள்
எப்போதோ உணர்ந்து கொண்டு விட்டோம்.

தமிழின் மீதும்
தமிழ் எழுத்துக்களின் மீது
தமிழையே உருட்டித்திரட்டி
கூரிய ஆயுதம் செய்து
தாக்குவீர்கள் என்றால்
தமிழ் மாண்பும் தொன்மையும்
காக்கப்படவேண்டும் என்னும்
தமிழர்கள்
அதை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஜெயமோகனின் "சொற்கோட்டை" எல்லாம்
தமிழர்களின் தன் மானத்தையே
எரிக்க வந்த ஒரு "அரக்கு மாளிகை"
மனுஷ்யபுத்ரன் கவிதைகள் மீது
ஒரு காழ்ப்பு மழையை
கொட்டித்தீர்த்திருக்கிறார்.

மனுஷ்யபுத்திரன் கவிதைகளில்
எழுத்துக்கள் புள் புகுந்தும்
வானம் தேடும்.
புல் பூண்டு பூக்கள் கூட
மனிதனை நோக்கியே
தன் விடியல்கள் தேடும்.
மனிதர்கள் ஏதோ
ஒரு உண்மை மற்றும்
ஒரு நியாயத்தை  உணர்த்த
கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பார்கள்..
ஜன்னல் திரைச் சீலையாய்
கரையில் மணல் சிற்பமாய்
அதில் கடற்காக்கைகளாக
இன்னும் என்னவெல்லாமோவாக..

மனித பாத்திரங்களிலும் வந்து
தன்  நசுங்கல் அல்லது பொசுங்கல்
மூலமாகவும்
பூமியின் அடிவயிற்று லாவாவை
ஒரு போன்சாய் மரமாக்கி
தன்  மடியில் ஏந்தியிருப்பார்கள்.
அந்தக்கவிதையை ஏந்தியிருக்கும்
தாள்கள் கூட வாள்கள் ஏந்தி
வாழ்க்கையைப்போராடும்.
உயர் தரமான கவிதைகள் அவை.

ஜெயமோகன்  எழுத்துக்களோ
அவற்றின் உயிர் மெய் தாண்டிய
ஒரு பொய்யில்
ருசிக்காக
பொரிக்கப்பட்டிருக்கும்.
மனிதனுக்கு
நாலுவர்ணசட்டை மாட்டி
சமூக அநீதிகளையே
அவனுக்கு
வரப்பு கட்டி
வாய்க்கால் வெட்டி
நாலாந்தரத்துக்கும் கீழாய்
ஒரு நாய்ச்சங்கிலியில்
அவனைக்  கட்டி வைக்கப்பார்க்கின்றன
அவர் எழுத்துக்கள்.

உசந்த வர்ணத்துக்கு
"மவுலி"கவித்து
அடிமைகள் எனும் நாலாம் வர்ணம்
அதற்கு கீழும் ஐந்தாம் வர்ணம்
என்றெல்லாம்
இந்த அடித்தட்டு மக்களை
பிய்ச்சு பிய்ச்சுத்தின்னும்
அந்த  சாதிப் "பேய் சாத்திரங்களையும்
ஒரு தங்க அரியாசனத்தில்
அமர்த்திக்கொண்டல்லவா
ஆல வட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன 
அவர் எழுத்துக்கள்.


அவர் எங்கே சுற்றி
எப்படி வந்தாலும்
சமஸ்கிருதத்துக்கு
செருப்பாக 
தமிழ் கீழே கிடக்கும்
என்ற கருத்திலும்
இந்துத்வா எனும்
பெத்தடின் ஊசிமருந்து
இந்துக்கள் தோலின்
ஒவ்வொரு மயிர்க்கண்ணிலும்
செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்
என்ற நோக்கத்திலும்
நங்கூரம் பாய்ச்சி நின்றுகொண்டே  இருப்பார்.

இந்து மதம்
அவர் போன்றவர்களுக்கு
பட்டா போட்டு கொடுக்கப்பட்டது
என்று யார் சொன்னார்கள்?
இந்து மக்கள்
நாத்திகம் மூலமாகவும்
கடவுளை கேள்வி கேட்டு
பாஷ்யங்கள் படைத்து இருக்கிறார்கள்.
இயற்கையிலேயே
மற்ற சித்தாந்தங்களையும்
அறிவுக்குள் ஊற வைத்து
அசை போட்டுக்கொட்டிருக்கும்
நியாய வைசேஷிகங்களும்
மற்றும் சாங்க்ய தத்துவங்களும்
கடவுளைத்தேடி தேடி
ஓய்ந்து அலுத்து இன்னும்
நாத்திகத்தின் அந்த
முட்டுச்சந்துக்குள் தான்
முடங்கிக்கிடக்கின்றன.

கடவுள் என்ற ஒரு பொதுச்சுவர் மீது
எல்லா காக்கைகளும் குருவிகளும்
மைனாக்களும்
வந்து அலகு தீட்டி ஒலித்துக்கொண்டுதான்
இருக்கும்.
உங்கள் மதம் எங்கள் மதம்
என்று
அடிப்படைவாத நோயினால்
அவதியுறுபவர்களுக்கு
சமுதாயம் கொடுக்கும்
அதிர்ச்சி மருத்துவமே இப்போதைய தேவை.

அந்த நோயாளிகள்
கையில் துப்பாக்கி இருக்கலாம்
முரட்டுத்தனமான சம்பிரதாயங்கள் இருக்கலாம்.
ஏன் மெல்லிய அருவி போல் எழுதப்படும்
எழுத்துக்களோடு எழுத்துக்களாக
அவற்றில் மனித நீதிக்கு
மரண அருவி தூவும் நுரைப்படலங்களும்
இருக்கலாம்.
அவர்கள்
ஒரு வேலிக்குள் வைக்கப்பட வேண்டியவர்கள்.

============================================================
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

ஓஷோ

ஓஷோ

======================================ருத்ராஅறிவு கொஞ்சம் கூர்மை தீட்டி

காமக்காடுகளை

பிருந்தாவன தோட்டம் ஆக்கி

கடவுளர்களுக்குப்பதில்

இந்த மனிதர்களை அங்கே

ஓட விட்டு

தன் ரன்னிங்க் கமெண்ட்ரியை

புத்தகங்களாக்கினாலும் போதும்

டாலர்கள் குவியும்.

இவர்களுக்கு

"செக்ஸில் பூஜை"

சில ஆங்கில ஃ பிரேஸ் களுடன்

எழுதிக்காட்டினால் போதும்.

"பெஸ்ட் செல்லர் " வரிசைக்குப் போய்விடும்.

சம்ஸ்கிருத வார்த்தைச்  சிணுங்கலுடன்

சில பத்திகளை

செருகி விட்டால் போதும்

இந்திய அறிவு ஜீவிகளுக்கு

செமத்தீனி தான்.

மறந்தும்

சமுதாய ப்ரக்ஞை

அது இது என்று

இந்த ஞானி

எழுத்துக்களை உருட்ட விடுவதில்லை.

அப்படி எழுதினாலும்

உலகத்திலேயே உயர்ந்த ஞானம்

"தனித்துவம்" தான் என்பார்.

பொது நீதி சம நீதி எனும்

ஆபாசங்களை கலக்கல் ஆகாதென்பார்.

உடற்கலவிகளால்

உயிர் கழுவிக்கொள்ளலாம் என்பார்.

சமுதாய வலைகளை

அறுத்தெறிந்து

"ஆத்மா" என்ற மாய வனம்

புகுந்திடுங்கள் என்பார்.

அழுகிய மதக்கருத்துகளுக்கு

அலங்காரம் செய்வதே

அவர் எழுத்துக்களின் வேலை.

மேட்டுக்குடி மக்களின்

புத்தக அலமாரியை

இந்த குப்பைக்கிடங்குகள் தான்

"இன்டீரியர் டெக்கரேஷன்" என்ற பெயரில்

ரொப்பிக்கொள்கின்றன.

என்ன

உங்கள் மூளைக்காட்டிலும்

இந்த "சீக்குப்"பிடித்த

மேகக்கூட்டங்கள் தானா?

இந்த வெற்று இலைக்காகிதங்களைத்

தின்று கொழுக்கும்

"புழுக்கூட்டு"மண்டலங்களாய்

தொங்கித் தூங்காதீர்கள்

ஓ! அறிவு ஜீவிகளே!

சமுதாய முரண்களை

அக்கினிச் சிறகுகளின்

இலக்கியங்கள் ஆக்கும்

மறு பக்கம் நோக்கி

கொஞ்சம்  ஊர்ந்து வாருங்கள்.

இந்த "ஃ பேண்டாசி" பலூன்களில்

ஊஞ்சல் ஆடும்

ஏமாற்று வித்தைகள்

போதும்!போதும்!=======================================================

https://vellaikkaakithangal.blogspot.com/

தேதி 15.02.2018

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

"ஓணம்"

"ஓணம்"
==============================================ருத்ரா

ஆண்டு தோறும் மக்கள்
குறைகளை கேட்க வரும்
மன்னன் மாவலி
கதவை தட்ட வரும்போது
இந்த ஆண்டு கலங்கிபோனான்.
கதவுகள் இருந்தால்
வீடுகள் இல்லை.
வீடுகள் இருந்தால்
கதவுகள் இல்லை.
கூரை இல்லை
அடுப்பும் இல்லை
உணவும் இல்லை
"ஓணம்" எனும் திருவோணம்
தலை திருகிய கோழியாய்
கிடந்தது.
ஐயகோ இது என்ன கொடுமை?
எந்த அரக்கன்
இப்படி வானத்தை
கந்தலாக்கி தண்ணீர்ப் பிரளயத்தை
இங்கே அனுப்பியது?
மன்னன் சீறினான்.
மாவலிக்கு செருக்கு இருந்ததாம்.
எல்லோரும் விஷ்ணுவை வழிபட்ட போது
இவன் சிவனை வழிபட்டானாம்.
அதற்காக குள்ளப்பார்ப்பானாய்
தாழங்குடையில் வந்து
மன்னன் பூமியை மக்களை எல்லாம்
தவிடு பொடி ஆக்குவானாம்.
விஷ்ணு சிரித்துக்கொண்டே கர்ஜித்தான்.
என் மக்களை விட்டுவிடு.
என்னை எடுத்துக்கொள்
என்று
தன் தலை பூமிக்குள் அமிழ‌
கொடுத்துவிட்டான்.
அவன் அரக்கனாயிருந்தால்
மக்கள்
இப்படி வட்டம் வட்டமாய்
தங்கள் உயிரை ஆன்மாவை
பூக்கோலமாய் இட்டு
அவனை வரவேற்பார்களா என்ன?
புரட்டி புரட்டி
கதைகள் சொல்லப்படுவதால் தான்
இவை புராணங்கள் ஆகின்றன.
மாவலியின் மனம் பதறுகிறது
மலர்க்கோலம் தெரியவேண்டிய‌
இடங்களில்
மனித சடலங்களா
ரங்கோலி இடுவது?
மன்னன் வெகுண்டான்.
விஷ்ணுவே
என்னை ஏமாற்றிவிட்டாய்
உன் விஷ மழையை
இங்கு தூவி உன் கோரச்சிரிப்பை
இந்த மண்ணின்
ஒவ்வொரு துளியிலும்
விஸ்வரூபம் காட்டுகிறாயே.
இது விஸ்வரூபம் அல்ல.அற்ப ரூபம்.
அரியும் சிவனும் ஒண்ணு இதை
அரியாதவர் வாயில் மண்ணு
என்று
மண்ணின் மக்கள்
உன் பிரமம்மத்தை புரிந்து கொண்டார்களே
நீ ஏன் அற்பத்தனமாய்
இப்படி நீர்த்தாண்டவம் ஆடுகிறாய்?
என் மக்கள் நெஞ்சுரம் கொண்டவர்கள்.
பகுத்தறிவு சுடர் வீசுபவர்கள்.
இந்த வெளிச்சத்தில்
இனி உன் பாஷ்யங்களை
திருத்திக்கொள்.
கேரள மக்களுக்கு
உலகமே ஒன்று திரண்டு
உதவிக்கரம் நீட்டுகிறது.
அசுரர்களும் தேவர்களும்
அவரவர் முகம்மூடிகளை
மாற்றிக்கொண்டார்கள்.
முதன் முறையாக‌
இறைவனைப்பார்த்து
பயப்படாமல் சிரித்தான் மனிதன்.

வெள்ளம் அல்ல சூழ்ந்தது
மானிட நேயப்பூக்கள் அல்லவா
சூழ்ந்தது கேரளத்தை.
பூக்களை வைத்து 
மக்கள் கொண்டாடிய
ஓணம் அல்ல இது.
மனித நேயமே மலர் வனமாகி
கொண்டாடும் ஓணம் இது!
எல்லோரும் கொண்டாடுவோம்
களிப்புடன் "ஓணம்"
எல்லோரும் கொண்டாடுவோம்.

=========================================================
சிம்பு செய்த‌ வம்பு


சிம்பு செய்த‌ வம்பு
============================================ருத்ரா

சமீபத்திய‌
ஆனந்த விகடன் இதழ்களில்
சிம்பு என்ற இந்த சிலம்பு
பரல்களை உடைத்து
தெறித்திருக்கிறது.
அவை மாணிக்கபரலும் அல்ல‌
முத்துப்பரலும் அல்ல.
சும்மா
கிசு கிசுக்களுக்கு
எதிர் கிசு கிசுக்கள்.

பீப் பாடல்கள்
ஏதோ இவர் சொன்ன மாதிரி
கொலைக்குற்றப் பட்டியலில் எல்லாம்
சேர்க்கப்பட வேண்டியதில்லை தான்.

இருந்தாலும் அந்தப்பாடல்களின்
ஓட்டைகள் வழியே
ஒழுகும் சேறும் சகதியும்
சுத்தப்படுத்தப்படவேண்டும்
என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேற்கத்திய இசை நாகரிகத்தின்
உச்சாணிக்கொம்பில் இருந்து
பாடப்பட்டவை
நம் உள்ளூர் மஞ்சள் குங்குமத்தோட்டத்துள்
அபஸ்வரமாய்த்தான்  இருக்கும்.
பிடிவாதமாய்
புள்ளிபோட்டு புள்ளிபோட்டுத்தான்
பாடுவேன் என்பது
தனிப்பட்ட சுதந்திர கீதமாக இருக்கலாம்.
ஆனால்
சமுதாய வரம்புக்குள் இருக்கும்
சமுதாய மனித பிம்பம்
சிதைக்கப்படச்செய்வது
ஒரு இசையின் நோக்கம் அல்ல.

இவை என் அந்தரங்க சொத்து.
இவற்றில் தலையிட யாருக்கும்
உரிமையில்லை
என்று முழங்கியிருக்கிறார்.
அது தெருமுனைக்கே வந்து விட்டது.
"வாஷிங் தி லினன் இன் தி பப்ளிக்"
என்பதையே மறுபடியும்
"வாஷிங் தி லினன் இன் தி பப்ளிக்"
என்பது போல‌
ஒரு விளம்பர யுத்தி தான் இது.

இந்த சில்லறைப்பேட்டிகள்
அவரை சிதறடித்து விடக்கூடாது.

சிம்பு சமீப காலப்படங்களில்
நடிப்பில் முத்திரைகள்
பதித்து வருகிறார்.
அவர் அதில் உயரங்கள் ஏறட்டும்.
புதிய சிகரங்கள் அடையட்டும்.

வாழ்த்துக்கள்.

=====================================================


QUANTUM PLUNGE-2

QUANTUM PLUNGE-2
==============================================
RUTHRAA  E  PARAMASIVAN


"Theory of everything" is a wonderful concept or a theory because the so called four fundamental forces meet a same point. A super symmetry is thrived in. Of course the Grand Unification Theory
(GUT) once upon time was a fond subject for Einstein.Hence his thought experiment succeeded to find a very famous and challenging theory of General Relativity.In a sense it is a field theory that couples the Energy tensor with Gravity Tensor.Though he was much irritated with Niels Bohr's Quantum Theory and his "quantum Jumps" the lack of determinism couched with "Uncertainty Principle" made him quip "God never throws "Dice" on Laws of Physics.Not only that it is escaping from  theorizing or measuring but the "local existence"of a Quantum itself needs a quagmire of magics to catch a solution amidst the woods of series of polynomials which evaporates towards infinities. Each loop of calculation renders to a sight of "an Alice in Wonderland".Quantum field theory beautifully weaves both the "General Relativity" and 
"String theory" so to say a "superstring theory"

Particles are considered as points asper classical picture. Quantum theory takes into account the vibrations and waves as instituted in the particles themselves.So the concept of particles has become hazy and instead of a point it was thought as a (vibrating) blob or 
cloud.Can we make packet of energy that consists or seems a point
or a line or both? This question is itself  both a problem and a key
to that puzzle. Hence Quantum theory is an Othello who asks that 
vulnerable question "to be " or "not to be" in his critical hours. As Shakespeare put such a question  our famous mathematical physicist Heisenberg also propounded a theory of "quantum" as if
based on a criterion of "uncertainty principle".Hence the theory of 
"probability" forms the most dynamic crux for the Quantum theory.
Like  a "shakespearean theatre" Quantum theory also unveils the curtain with a lot of surprises and surveillances.

==========================================

புதன், 22 ஆகஸ்ட், 2018

அரசியல் கலைடோஸ்கோப்

அரசியல் கலைடோஸ்கோப்
===============================================ருத்ரா
(நகைச்சுவைக்கவிதைகள்)


மோடி

"மைக்"கே துணை.
பேச்சுகள் எல்லாம்
அனுமன் சேனை
வாலை முறுக்க.


அமித்ஷா

இந்தியாவை
பகடை உருட்டியே
சுருட்டப்பாக்கும்
சாணக்கியர்

மற்ற பிஜேபி அமைச்சர்கள்.

ஏதோ மாயவிரல்களால்
நகர்த்தப்படும்
சதுரங்கக்காய்கள்.

ராகுல் காந்தி

சீம ராஜாவா?
சீறும் ராஜாவா?
தேர்தலே சொல்லும்.

ஸ்டாலின்

கலைஞர் சட்டை.
பொருத்தமா?
பொறுத்துப்பார்ப்போம்.

அழகிரி

திமுகவின்
முற்றுப்புள்ளியா
இந்த பெரிய புள்ளி?

எடப்பாடி

அரசியல் புழுக்கம்.
வீசுவதற்கு கையில்
இரட்டைஇலை.

ஓபிஎஸ்

எது எலி? எது தவளை?
ஒரு கயிற்றில் இவை.
டில்லியிலிருந்து கயிறு.

சீமான்.

பீரங்கி
முழக்கம் எல்லாம்
அட்டையில் செய்தது.

ரஜனி

மக்கள் செய்த நாற்காலி
தயார்.
யார் அந்த நிழல்?

கமல்

ட்விட்டர்களே போதும்.
அதில் தான் செய்துகொண்டிருக்கிறார்
அந்த நவாப் நாற்காலியை.

=====================================================

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

தர்மயுத்தங்களின் அதர்மங்கள்.

தர்மயுத்தங்களின் அதர்மங்கள்.
=================================================ருத்ரா


கீதையிலிருந்து
கிருஷ்ணன் தொடங்கி வைத்த‌
தப்புத்தாளங்கள் இவை.
நேற்றைய
மெரீனா சமாதி வரைக்கும்
இந்த தாளங்களின்
அபஸ்வரங்கள் தாங்க முடியவில்லை.
என் பதவி உன் பதவி
என்பதே
இவர்களின் குருட்சேத்திரம்.
இந்த ரத்தச்சேற்றில்
நாற்று நாட்ட முயல்வதே
இவர்களின் ஜனநாயகம்.

பாண்டவர்களுக்கு
சேர வேண்டிய பூமி
மறுக்கப்படுவது அதர்மம் தான்.
அதற்கு லட்சக்கணக்கானவர்கள்
யுத்தத்தில் மடிவது
தர்மம் ஆகுமா?

மனிதகுலம் பூண்டற்றுப்போகவா
வேதங்களும் பாஷ்யங்களும்
ஸ்லோகங்களை அடுக்கி அடுக்கி
வைத்திருக்கின்றன.
ஒரு கடவுள் அவதாரமான‌
கிருஷ்ணனால்
அந்த போர்வெறியை
பூ மனங்களின் பூங்காக்களாக‌
மாற்ற முடியாதா என்ன?
பிரபஞ்சத்தையே பிச்சு பிச்சு
விஸ்வரூபம் என்று காட்டியனுக்கு
அந்த அண்ணன் தம்பி உறவுகளிடையே
ஒரு அன்பு உலகத்தை
படைக்க முடியாமலா போயிருக்கும்?

கேட்டால்
நீங்கள்
தர்மம் என்று நினைப்பதும்
அதர்மம் என்று நினைப்பதும்
கடவுளாகிய எனக்கு
எல்லம் ஒன்று தான் என்பார்.
அப்படியென்றால்
மனிதனை ஒரே வர்ணமாக‌
படைப்பது தானே
நான்கு வர்ண மோசடிகள்
எதற்கு என்றால்
ஐந்து விரலும் ஒன்றாக இருக்கிறது
என்பார்.
அதாவது
ஆயிரம் அதர்மங்களை
சீட்டு சேர்த்துக்கொண்டு
ரம்மி ஆடி
அந்த துருப்புச்சீட்டான‌
தர்மத்தை மட்டும்
பதுக்கி வைப்பார்.
இது அஞ்ஞான தந்திரம் ஆகும்.
கடவுள் என்பது
வெறும் மனித ஏற்பாடு
எனும்
ஞானம் எப்போது துலங்குமோ
அப்போது
எல்லா கடவுள்களும் மதங்களும்
காணாமல் போய்விடும்.
இந்த புகைமூட்டத்தை வைத்தே
ஆட்சியாளர்கள்
தங்கள் கிரீடங்களுக்கு
முலாம் பூச முடியும்.

நேற்று
நடந்த அந்த தியானத்தின்
தர்மயுத்தத்தில்
மக்கள் ஜனநாயகமே
சில்லறை சில்லறையாக‌
சிதிலப்படும் அதர்மங்கள்
நடக்கின்றன.
கோடி கோடியாக‌
செல்வங்கள்
கண் முன்னே ஆவியாய் போவதே
இவர்களின்
தேர்தல் சித்திரங்கள்.
நியாயம் நிலை நாட்ட வந்திருக்கிறேன்
என்பவர்களும்
தூரத்து நாற்காலியோடு
பக்கத்து நாற்காலிகளை
முடிச்சு போட்டு
காவல் காக்கும் தர்மத்தையே
அடைகாத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தர்மம் ..அதர்மம்..
இதெல்லாம்
மர மண்டைகளா
உங்களுக்கு ஏன் புரியவேண்டும்?
சம்பவாமி யுகே யுகே !

==================================================


ஓலைத்துடிப்புகள்

ஓலைத்துடிப்புகள்
==========================================ருத்ரா இ பரமசிவன்

 சங்கத்தமிழின் தமிழ் எழுத்துக்களின் நாடி நரம்பாய் சுடர்ந்து நின்றவன் கபிலன். அவன்   பாடிய குறிஞ்சிப்பாட்டில் ஒரு நாள் நுழைந்தேன். சொல்லின் அழகு சொட்டும் வரிகளின் காடு அது.தலைவன் தலைவி ஒலி கல் பூ உயிர் புள் மலை மண் என எல்லாவற்றிலும் மின்னலின் ஒரு சாந்து பூசி கட்டியிருந்தான் அந்தப் பாட்டுக்கோடையை.அதில் "கல்" "உயிர்" என்ற இரு சொற்களை அவன் ஆண்ட விதம் என்னை அப்படியே கட்டிப்போட்டது.இவற்றிற்கு"ஒலி" என்ற பொருள் நம் சங்கத்தமிழில் வழங்கியிருப்பது கண்டு நான்வியந்து போனேன்.இந்த "வேர்" வழியே நாம் நம் தமிழ் தொன்மை பற்றி ஆழமாய் இறங்கி ஆராயவேண்டும்.


அவன் அவிழ் ஒரு சொல்
===============================================ருத்ரா இ பரமசிவன்.

குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌
நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்
நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு
பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.
பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்
நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை
அண்ணிய குன்றன் அகலம் தோஒய்
நரம்பின் புன்காழ் முடுக்கிய பண்ணின்
நளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்
அற்றை முற்றத்துப் பால்பெய் திங்களில்.
கல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு
கனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.
அவன் அவிழ் ஒரு சொல் விசும்பு  தூஉய்
எல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .
புல்லிய அரிபரல் பண்ணிய ஓடை
புதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.
ஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌
மண்ணின் பிளந்து வித்திய காட்டும்.
இடி உமிழ்பு இரும்பிழி வானம்
இயைந்தவர் என்றுகொல் எதிர்வரும் ஆங்கண்
நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
கான்றல் பூ காந்தள் விரி இணர்
காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
நோதல்மன் என்செயும்  முயங்கு இழைத்தோழி.

=====================================================


பொழிப்புரை
===============================================ருத்ரா இ பரமசிவன்


குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌
நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்
நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு
பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.
பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்
நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை
அண்ணிய குன்றன் அகலம் தோஒய்
நரம்பின் புன்காழ் முடுக்கிய நுண்சுரம்
நளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்
அற்றை முற்றத்து பால்பெய்த் திங்களில்.


குட்டை மயிர்களால் ஆன உடம்பை உடைய கரடியின் தோல் போர்த்தது போல் இருக்கும் நெடிய கருப்பு பனைமரத்தில் விளைந்த‌ பசுங்காயின் நுங்கு உரித்தபின் அதில் கசியும் நீர்போல அந்த பாறைகளிடையே பளிங்கு போன்ற சுனைநீர் இழைந்து கொண்டிருக்கும்.பச்சைப்பசேல் என்ற மலைத்தொடர்களும் அவற்றின் ஒடுக்கங்களான சரிவுகளின் இடுக்குகளும் அடர்ந்த‌ காடுகள் பொதிந்து கிடக்கும்.நெடியனவாய் ஆனாலும் உயர்ந்த மலை உயரங்களால் அவை வரிசையாய் அமைந்து "பொதிகை"என அழைக்கப்படும்.அந்த மலையின்
அருகே உள்ள‌ ஒரு சிறு மலையின்தலைவன் மீது காதலில் நான் கட்டுண்டபோது அவன் திரண்ட மார்பில் தோய்ந்து கிடப்பேன்.அன்றொரு நாள் அந்த முற்றத்தில் பால் போல் நிலவு பொழிய யாழின் மெல்லிய நரம்பின் இழையில் முறுக்கேற்றி இசைக்கப்படும் நுட்பமான பண்ணில் குழைவுற்று மெல்லசைவுகளோடு மயங்கிக்கிடப்பேன்.


கல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு
கனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.
அவன் அவிழ் ஒரு சொல் விசும்பு  தூஉய்
எல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .
புல்லிய அரிபரல் பண்ணிய ஓடை
புதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.
ஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌
மண்ணின் பிளந்து வித்திய காட்டும்.

கல்லிலிருந்து ஒலிக்கும்.உயிரிலிருந்தும் ஒலிக்கும்.என்ன அந்த நுண்ணொலி? அந்த ஒலிக்கற்றைகளை உற்றுப்பார்த்துக்கேட்டு கண்கள் மூடி
 கனவுகளில் மறைந்து கிடப்பேன்.ஆம்.அது அன்று அவன் என்னை நோக்கி அன்பொழுக கூறியது. மடல் அவிழ்ந்த மலர் போல் வந்த சொல் அல்லவா அது
 . விண்ணெல்லாம் பரவி அச்சொல் வெளிச்சமாய் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும்படி அதன் துடிப்பு ஒலிகள் கேட்கும். சிறு சிறு கூழாங்கற்களை உருட்டிச்செல்லும்  நீரோடை விட்டு விட்டு ஒலித்து சில குரல் பிஞ்சுகளை தூவிவிடும். அப்போது அது கரையோரத்து புல் புதர்களை
வருடிச்செல்வதைக்கண்டுநான் காதல் நினவில் மெய் நெகிழ்ந்து போக என் முன் கை வளையல்கள் கழன்று  விழும். ஒவ்வோரு பருவத்தேயும்
பயிர் செய்யும் காலச்சுழல்களில் அந்தந்த பருவத்திலும் தலைநீட்டும் பயிர் நாற்றுகளிலும்  விதைக்கப்பட்ட வித்து மண்ணைப்பிளந்து ஒலித்துக் காட்டுவது இந்த உயிரொலியே.அவன் விதைத்த சொல் இதோ இந்த மண்ணின் இதயத்துள்ளிருந்தும் ஒலிக்கும்.


இடி உமிழ்பு இரும்பிழி வானம்
இயைந்த போன்ம் அக்குரல் ஓப்பும்
நாள் ஈரும் வாளது கூர்முள்
என்றுகொல் மலர்தலை சீர்க்கும்?
நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
கான்றல் பூ காந்தள் விரி இணர்
காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
நோதல்மன் யானே முயங்கு இழைத்தோழி.

இடி முழங்கி அடர்மழை பிழியும் வானமாய் இயைந்தது போல் அக்குரல் என்னை கவர்ந்து கட்டுப்படுத்தும்.அப்போது ஒரு நாள் கழிவதும் வாள் போல்  அறுத்து வதை செய்யும்.அந்த கூரிய முள் எப்போது எனக்கு மென்மலராய் விரிந்து என்னைச் சீர் ஆக்கும்? அது வரை காலம் என்னைத் தின்னும் மாமிசமாய்க் கிடப்பேன்.காந்தள் மலர் கூட வெம்மை வறுக்கும்  பூவின் கொத்துகளாய்  இலங்கும்.அதன் அனல் என்னை அவித்துவிடும். உயிரை உறையாக்கி உள் உயிர் ஒன்றில் நான் ஒளித்த போதும் என்னை இந்த வேக்காடு அகலாது. அன்புத் தோழியே நீ அணிந்திருக்கும் உன் அணிகலன்கள் கூட உன்னோடு ஊடல் செய்தது போல் தான் விலகி விலகி எனக்கு தெரிகிறது. இப்போது என் துயர்தனை நீ அறிவாய்.


===============================================================
05.05.2015 ல் எழுதியது.

கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல்.

கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல்.
=========================================================
ருத்ரா இ.பரமசிவன்

இது அதிர்ச்சி.
கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி.
ரிக்டர் ஸ்கேலில்
ஏழெட்டுக்கு மேல் இருக்கும்.
நொறுங்கிக்கிடப்பது
சினிமாக்கலை என்ற கட்டிடங்கள்
மட்டும் அல்ல.
துடிப்புள்ள பேனாக்கள்
இதயங்கள் தூளாகிக்கிடக்கும்
அலங்கோலம் இது.
எத்தனைப்பாட்டுகள்?
எத்தனைக்கவிதைகள்?
திரைப்பட இருட்டுக்குள்
இப்படியொரு
"சைக்கடெலிக்"வர்ண வெளிச்சங்களை
இவன் ஒருவனால்
மட்டுமே தர முடியும்.
இசைக்கருவிகள் இனிமையைப்
பிழிந்து தரும்போதெல்லாம்
இதயங்களின்
அந்த ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள்
அறை ரகசியங்களின்
மதுவை வடித்துத் தரும்
அவன் உயிரின் ரசம்
அந்தப்பாடல்கள்.
இசை அமைப்பாளர்களுக்கு
ரத்னக்கம்பள விரிப்புகள் அமைத்துக்
கொடுத்ததே
இந்த சொல் அமைப்பாளன் தான்.
விருது வழங்கும் பீடங்கள்
வெறும் கூடுகள் ஆகிப்போயின.
அவை கண்ணீரால் நிரம்பி வழிகின்றன.
வயதுகளையெல்லாம்
பிதுங்கி வருபவை
ஒரு கவிஞனின் கவிதை.
அதோ அந்த பிதுக்கம் தாளாமல்
அந்த காலைச்சூரியனும்
கர்ச்சீஃப் கிடைக்காமல்
நனைந்து போன
தன்வெப்ப மண்டலத்தை
கசக்கிவிட்டுக்கொண்டிருக்கிறான்.
நாமும் தான்.

==================================================
14.08.2016 ல் எழுதியது.

திமுக அலை.

திமுக அலை.
===================================================

திமுக எதிர்ப்பு அலை உருவாக்குவது என்றால் சிலருக்கு அல்வா சாப்பிட்டது மாதிரி.ஊழல் என்பார். குடும்பம் என்பார்.அப்போது மற்ற கட்சிகள் எல்லாம் புடம் போட்ட உத்தமக்கட்சிகள் என்ற பிரமையை ஏற்படுத்த முயல்வார்கள்.ஒரு விமர்சகர் அப்படித்தான்
திமுக தான் கட்சியை முதலில் உடைத்தது என்ற தவறான சித்திரத்தை தருகிறார்.ஆனால் காங்கிரசின் இந்திரா காந்தி அவர்கள் தான் இப்படிப்பட்ட "தந்திரா காந்தி" ஆனவர்.
1970 களில் திமுகவில் நடிகர் மு க முத்து எம் ஜி ஆர் போல் வலம் வரத் துவங்கினார்.அப்போது அந்த கட்சிக்குள் கசப்பும் காழ்ப்பும் ஏற்பட்டன.அந்த சமயத்தில் "உலகம் சுற்றிய வாலிபனாய்" இருந்த எம் ஜி ஆரின் இன்கம்டாக்ஸ் ஃபைலை வைத்தே இந்திரா திமுக வை உடைத்தார்.இப்படி குத்துவெட்டுகள் நடந்தபோதும் பின்னர் எமர்ஜென்சி என்ற எதேச்சதிகார அலைகள் நாடு முழுவதும் வீசியபோது அதை கலைஞர் எதிர்த்தார்.எம்.ஜி.ஆரோ ஆதரித்தார்.

இதைத்தான் கவுண்டமணி நகைச்சுவைகள் "அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா" என்று ஒரு வரலாறு ஆக்கியது.எனவே இப்போது
சில ஊடகங்களும் விமர்சகர்களும் திமுக அலைகள் வீசக்கூடாது
என்று அழகிரியை வைத்து ரம்மி ஆடலாம் என நினைக்கின்றனர்.
அற்புதமாய் கார்ட்டூன்கள் போட்டாலும் திமுக வரக்கூடாது அதன் வழியாய் தமிழ் ஒலியும் தமிழர் ஓசையும் கிளர்ந்திடல் ஆகாது
என்பதே அவர்கள் எண்ணம்.அந்த எண்ணம் நிச்சயம் தவிடு பொடி ஆகும்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_________________________________________ருத்ரா

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

காகிதம்.

காகிதம்.
============================================ருத்ரா

"அன்பே!
ஏன் அவநம்பிக்கை கொள்கிறாய்?
நம் காதல்
நிச்சயம் கரையேறும்.
வானம் பிளந்து ஊற்றட்டும்.
மண் சரிந்து மாயட்டும்.
தெளியும்போது
காதலின் நம் பளிங்கு எழுத்துக்கள்
பளிச்சிடும்.
அதிலிருந்து தான்
தினச்சூரியன்கள் முளைக்கும்.

இப்படிக்கு
உன்..

யாருக்கு யார் எழுதிய கவிதையோ!
நீரில் அழிந்தும் அழியாததும் ஆன‌
அந்த வரிகள்
கரை ஒதுங்கின.

அந்த கேரள வெள்ளத்து
மீட்பு படையினரிடம்
பத்திரமாக மீட்கப்பட்டது
எழுத்துக்களில் கருக்கொண்ட‌
அந்த காகிதம் மட்டுமே!

==========================================


"ப்ரஸ்கிரிப்ஷன்"

"ப்ரஸ்கிரிப்ஷன்"
===========================================ருத்ரா

யார் இப்படி
என் பிடரியை முன் தள்ளுவது?
யார் குரல்
என் செவிக்குள் அலறும்
எஃப் எம் அதிர்வுகளில்
பூகம்பம் ஏற்படுத்தி
அந்த செவிக்குள் இருக்கும்
சில்லறை நகரத்தையும்
சில்லு சில்லு ஆக்குவது?
என் வயிறு மடக்கென்று கலங்கி
என் குடல் இத்யாதிகளில்
யார் இந்த வங்காளக்குடாகடல்
காற்றழுத்த தாழ்வு மண்டலங்களை
அமுக்கிக்கொண்டிருப்பது?
சாதாரண சன்னல் திரைச்சீலைகள் கூட‌
ஐந்து தலை நாகங்களின்
சுருள் நாவுகளாய்
இந்த காற்றுக்கடலில்
தடவி தடவி
யார் அந்த அறுந்த வீணையின்
காம்போதியை மீட்டுவது?

...............

"சரிப்பா..என்ன படிக்கிறே
காலேஜா?

ப்ரஸ்க்ரைப் பண்ண டாக்டர்
பேப்பரும் பேனாவுமாய்
ரெடியானார்.

அப்புறம் திரும்பி அப்பாவிடம் கேட்டார்.

"என்ன பையன் சினிமாக்கள் எல்லாம்
பார்க்கிறதில்லையா?"

"படம் பார்ப்பதே அரிது."

"அப்படீன்னா...சிட்டிலே இப்ப நடக்கிற‌
படங்களையெல்லாம் பார்க்கச்சொல்லுங்க"

"என்ன டாக்டர்? எல்லாம் ஒரே பேய்ப்படங்களால்ல இருக்கு"

"பரவாயில்ல..அந்த பேய்ங்களப்பார்த்தா இந்தப்பேய் ஓடிடும்."

"சரி..போகச்சொல்றேன்"

"ஆமா..உங்க வீட்ல காத்தோட்ட வசதி எல்லாம் எப்படி?"

"பரவாயில்ல ஸார்.
நடுக்கூடத்தில் ஒரு சன்னல் தான் இருக்கு.
வாஸ்து இஞ்சீனியர் சொல்லிட்டார்.
அது அடைத்தே இருக்கவேண்டும் என்று."

"எதிர்வீட்டுலேயும்
இதே மாதிரி சன்னல் இருக்குமே.
அது வழியா "துர்க்காந்தம்" உங்க வீட்டுக்கு வந்துடும்னு
அவர் "ஜீவ காந்த சாஸ்திரம்" சொல்லியிருப்பாரே."

"ஆமா..டாக்டர்.."

"சரியாப்போச்சு....
காத்தோட்டம் இல்லேன்னா
எல்லா வியாதியும் வந்து விடும்....
மொதல்ல அத தொறந்து வையுங்க"

சரி என்று
டாக்டர் கிறுக்கி கொடுத்த பேப்பரை வாங்கிக்கொண்டு
அப்பாவும் மகனும் சென்று விட்டார்கள்.

டாக்டர் நமுட்டுச்சிரிப்பு சிரித்தார்.

இந்தப் பசங்களுக்கு
சன்னல் அடிக்கிற மின்னல்கள் தானே டானிக்.
அந்த வாஸ்து சாஸ்திரத்தை
இந்த "சன்னல் சாஸ்திரம்"
அடித்துக்கொண்டு போய்விடும்.

================================================================

பியார் பிரேமா காதல்


பியார் பிரேமா காதல்
==============================================ருத்ரா

இது போல் தான்
அன்று "பாபி" என்று ஒரு படம்.
ராஜ்கஃபூரின் மகன் ரிஷிகபூரும்
டிம்பிள் கபாடியாவும்
வண்ணமும் இசையுமாய்
கலக்கினார்கள்.
ஆர்.டி .பர்மன் மெட்டமைப்புகளில்
எல்லா இசைச்சொர்க்கங்களும்
நம் பூமிக்கு இறங்கி வந்துவிட்டன.
காதல் என்பதற்கு
காளிதாசனைக்கொண்டோ
கம்பனைக்கொண்டோ
மயிற்பீலிகள் கொண்டு தடவி
எழுத்துக்கள் அலுத்துக்கொண்டபின்
உள் துடிப்புகளின் மேனி உரசல்கள்
ஒரு ஜெனடிக் டைனாமிக்ஸை
கச்சாபிலிம்களில் "வச்சு செய்தார்கள்".
அதுவே இந்தப்படம்.
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின்
இளம் பிஞ்சு யுகம்
இப்படி இனிப்பாய்
ஒரு எரிமலைக்குழம்பை
தாளித்துக்கொட்டி
தாவு தீர்த்துக்கொண்டது.
வயதுகள் விலக்கில்லை.
எழுபது எண்பதுகளுக்குள்ளும்
இந்தக் "கேரளாவின் காட்டு வெள்ளம்"
புரட்டிப்போடலாம்.
1960 களில்
கோயமுத்தூர் நாஸ் தியேட்டரில்
நான் பார்த்த
"ஜப் பியார் கிஸி சே ஹோதா ஹை.."
படம் தான்
இங்கும் விஷுவலைஸ் ஆகிறது.
படத்தின் பெயரில் வரும் பாட்டு
இன்னும் என் இதயம் வருடுகிறது.
அது இசையா?
அது காதலா?
எல்லாமும் தான்.
படம் பார்த்து கல்லூரி திரும்பிய பின்
கண்களுக்குள் வட்டம் வட்டமாய்
அமுத நிலவுகள்!
"தேவ் ஆனந்தும் ஆஷா பரேக்கும்"
இமை முட்டி நின்று கொண்டே இருந்தார்கள்.
அது என்ன
காதலின் விளிம்பில்
ஆஷா பிரேக்கின் அழகிய கண்களிலும்
கண்ணீர்க்கோடுகள்?
அதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு ஆஆஆஆழத்தில்
விழுந்து கொண்டே இருக்கிறேன்.

ஆனால் இந்தப்படம்
நாலும் மூணும் ஏழு தான்
என்று
காதல் கணக்கை
அப்படியே காட்டுகிறது.
இந்த கம்பளிப்பூச்சிகள் எல்லாம்
என்றைக்கு
பட்டாம்பூச்சிகளாய்
பரிணாமம் அடையப்போகின்றன?

======================================================சனி, 18 ஆகஸ்ட், 2018

இப்போது கடவுளை நம்புகிறீர்களா?


வக்கிரங்கள்
===================================================ருத்ரா

வெள்ளத்தைப்பார்த்தீர்களா?
இப்போது கடவுளை நம்புகிறீர்களா?
கடவுள் உங்களை
எப்படித் தண்டிக்கிறார் என்று
தெரிந்து கொண்டீர்களா?
என்று
சில ஊசவடைகள்
நாறும் பழமைவாதத்தை ஊசியேற்றுவதை
கண்டிருப்பீர்கள்
என நினைக்கிறேன் நண்பர்களே!
இது ஒரு ஃப்ரீக் ஃபினாமினன் என்பதை
இயற்பியல் அறிஞர்கள் அறிவார்கள்
இந்த வெள்ளத்தை  வைத்து
கேரளாக்காரர்களை காவியால் போர்த்த‌
இங்கே நமது
நண்பர்கள் சிலர்
தங்கள் சிந்தனை வக்கிரத்தை
வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதற்கு சில பங்காளிக்காய்ச்சல்காரர்களும்
பதாகை  தூக்கியிருக்கிறார்கள்.
இந்த பூமி திடீரென்று
துருவத்தை மாற்றிக்கொண்டு கூட‌
சுழலாம்.
அப்போது நம் கண்டங்களே கூட‌
கண்ட துண்டங்களாகலாம்.
டெக்டோனிக் ப்லேட் மூவ்மெண்ட்ஸ் என்பது
இயற்பியலின் ரம்மி ஆட்டம்.
சீட்டுகள் மாறுவது போல்
பூமித்திட்டுகள் மாறும்.
லட்சக்கணக்கான வருடங்களின்
இடைவெளிகளில் எதுவும் நடக்கலாம்.
பரசுராமர் கோடாலியை எறிந்து
கேரளம் எனும்
கடவுள் தேசத்தை ஆக்கியதாக
"சப்பளாக் கட்டை"தட்டுபவர்கள்
ஏதேனும்
இன்னொரு அங்குசத்தை எறிந்து
வெள்ளத்தை அடக்கலாமே!

பாஷ்யக்காரர்களும் ரிஷிகளும்
கடவுளை
இன்னும் பிண்டம் பிடிக்கமுடியாமல்
இது தான் அது
இல்லை
அது தான் இது
இல்லை
இதுவும் இல்லை அதுவும் இல்லை அது
ஒருவேளை இல்லையோ என்னவோ என்று
"சோம" பித்தத்தால்
கல்பம்  சங்கல்பம் என
"ஸ்லோக "ஜந்துக்களாய்
நெளிந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள்
புழு பூச்சி விலங்கு என்று
பரிணாமம் அடைந்து
"அறிவு"வெளிச்சத்தால்
எப்போது நாசா அனுப்பிய
விண்கோள் மூலம்
சூரியனை "ப்ரதட்சிணம்"
வரப்போகிறார்கள்.
கேட்டால்
"ஆதித்ய ஹ்ருதயம்" கைவசம்
இருக்கிறது என்று
ஆரம்பித்து விடுவார்கள்
அதை வைத்து அன்றே
அந்த வெள்ளத்துக்கு
அணை கட்டலாமே.
இப்போதும் கூட
அவர்கள் நிதி திரட்டலாம்.
வருண பகவானுக்கு
வராதே வராதே என்று
"ஹோமம்"நடத்த!

===================================================வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா
===========================================ருத்ரா

வியக்கத்தக்க விதமாய்
நடிப்பு வர்ணங்களின்
ரங்கோலியை வெளிப்படுத்தும்
நயன் தாராவுக்கு
"கோலமாவு" அடைமொழி
கொஞ்சம் பிசிறு தட்டுகிறது.
இருப்பின் கதைக்களத்தின்
யதார்த்தமே இங்கு முன் நிற்கிறது.
நானும் ரவுடி தான் என்று
சினிமாவை
ஏற்கனவே அவர் கலக்கியவர் தான்.
இதில் அதன் நிழல் ஏதுமில்லை.
ஆனாலும்
புதிய பரிணாமமாயும்
புதிய பரிமாணமாயும்
புதிய சிகரங்கள் தொட்டிருக்கிறார்.
வெகுளித்தனம் மிரளும்
அந்த கருவிழிகளில்
வில்லன்களை கொல்லும்
துப்பாக்கிக்குண்டுகளும்
புதைந்து கிடக்கும்படி
சிலிர்க்கவைக்கிறார் நடிப்பில்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
நம் ஊர்வசி விருது
துருபிடித்துக்கிடக்கிறது என்று.
இவரால் அது பளிச் ஆகும் வாய்ப்பு
வந்து விட்டபோதும்
விருதுக்காரர்கள்
உள் அரசியல் வெளி அரசியல்
என்று ஏதேனும்
சோழி குலுக்கிக்கொண்டிருப்பார்களோ?

அடுத்து நம் யோகிபாபு.
இவர் காமெடி
அவர் அடர்த்தியான தலை
குலுங்கி
ஏதேனும் சொற்கள்
உதிர்க்கும்போது தான்.
சிரிப்புவெடிகளை எங்கே
செருகி வைத்திருக்கிறார்
தெரியவில்ல.
தியேட்டர் கல கலக்கிறது.
என்.எஸ்.கே யிலிருந்து
விவேக் வடிவேலு வரை
நாம் குலுங்கி குலுங்கி
சிரித்திருக்கிறோம்.
இவரிடம்
செந்தில் தெரிகிறார்.
அந்தத்தலையா ,,இந்தத்தலையா
என்று சொல்லும்
கவுண்டமணி ரகசியமாய்
நம் காதுகளைக்கடிக்கிறார்.
ஆனால் இவர் வசனங்களோ
சிரித்து தொலையேண்டா
என்று நம்மை சிரிக்க வைத்து விடுகிறது.
"நான் கடவுள்" ராஜேந்திரன்
அந்த கரகரப்பான வில்லன் குரலில்
காமெடி டயலாக் அடிப்பது
நகைச்சுவையின் வினோத பாணி ஆகும்.
அதிலும்
அந்த"எட்டுக்கால் பூச்சி"
இன்னும் நம் மடி மீது
ஊர்ந்து ஊர்ந்து
எவரெஸ்ட் நோக்கி போவதாய்
ஒரு ஃபீலிங் சிரித்துக்கொண்டே
இருக்க வைக்கிறது நம்மை.

யோகிபாபுவுக்கு
அந்த "ஒரு தலை ராகத்தை"
ஒட்ட வைத்திருப்பது
ஒரு பெக்யூலியர் காம்பினேஷன் தான்.
நயன் தாராவின் நடிப்பு
அவருக்கு குடை பிடிக்கிறதா?
இல்லை
யோகிபாபு தன் உள்கசிந்த நடிப்பால்
கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டே
நம்மை கொஞ்சம்
நிமிர்ந்து உட்காரும்படி செய்கிறாரா?
எது எப்படி இருப்பினும்
கோலமாவு
கஞ்சாப்பொட்டலங்களுக்கிடையே
மயிர் கூச்செறியும்
சாகச திருப்புமுனைகளையும்
அற்புதமாய்
திகிலடித்து திகிலடித்து
அலையடித்திருக்கிறது!

===================================================

வெள்ளம் என்றொரு மிருகம்

வெள்ளம் என்றொரு மிருகம்
=========================================ருத்ரா

எவ்வளவு அழகிய சொல்!
எவ்வளவு இனிமையாய் ஒலிக்கும்!
வெள்ளம் என்று மலையாளம்
தண்ணீரைச் சுட்டும்.
அந்த தண்ணீரா இந்த‌
கேரளத்துக்குள் ஒரு மிருகம் ஆனது?
கவிதைகள் ஊறும்
கேரளத்து மண்ணே
என்று அழைப்பதற்குள்
ஒரு கருக்கலைவு ஏற்பட்டது போல்
மண் சரிவு.
ஒரு கட்டிடம் அப்படியே
கவிழ்ந்தது.
இந்தக்காட்சியைக்காட்டும்
டிவியே திகிலில் உறைந்து போய்
இருக்கலாம்.
விமான தளம் ஏரிப்பரப்பு போல் ஆகி
விமானங்களையே
விழுங்கிவிடுவது போல்
தள தளக்கிறது.

பலியானவர்களை
எண்ணிக்கை எனும் புள்ளிவிவரத்தில்
அடைத்தாலும்
அது நம்மை மிகவும் கலங்கடிக்கிறது.
நம் கண்ணீரும் சேர்ந்தால்
எங்கே அந்த "இடுக்கி"அணை
விளிம்பு மீறுமோ என்று கவலை கொண்டு
அந்த சோகம் அமுங்கி நின்று
நம்மை அழ வைக்கிறது.

நெஞ்சம் பதறும் அண்டை மாநிலத்தவர்கள்
நிதி உதவியைக்கொண்டு
அந்த வெள்ளங்களுக்கு அணை போட‌
வருகின்றார்கள்.

இந்தியத் தாயின் தவப்புதல்வர்களே
தாராளமாய் உங்கள் நெஞ்சத்தை திறந்து
நிவாரண வெள்ளங்களை பெருகவிட்டு
இந்த வெள்ளங்களை தடுத்து நிறுத்துங்கள்.
யானைகள் நிறைந்த கேரளம் என்பதால்
"யானைப்பசிக்கு சோளப்பொரி"போல்
மத்திய அரசு
உடனடியாய் நூறு கோடி கொடுத்திருப்பதற்கு
நன்றி தான்..நன்றி தான்..
ஆனாலும் வெள்ளவிவர கணக்குக்கு
காத்திருக்கத்தேவையில்லை.
ஆயிரம் ஆயிரம் கோடிகள்
தேவைப்படுவது போல்
கேரள மானிலம்
ஒரு "கேரளக்கடல்"ஆகிவிட்டதே.
இன்னுமா தயக்கம் காட்டுவது?
மத்திய அரசின் நிதி உதவிகள்
உடனடியாய் மிக மிக அதிகமாய்
அளிக்கப்படவேண்டும்.
இன்னும் மழை அபாயம்
மிரட்டிக்கொண்டு தான் இருக்கிறது.
வானமே "பொத்துக்கொண்ட"நிலையில்
வானிலை அறிக்கைகளோ
அபாய அறிவிப்புகளை மழை போலவே
கொட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

அன்பார்ந்த "ஈர"நெஞ்சங்களே
வாருங்கள்.
கேரளமக்களுக்கு கை கொடுப்போம்
வாருங்கள்.

===========================================================

காதல்


காதல்
===================================ருத்ரா

இந்த நாட்டில்
இரண்டு சொற்களும்
அடுத்தடுத்து
நெருங்கியிருந்து
காதல் செய்து 
கல்யாணமும் 
செய்து கொண்டதில்
இங்கு 
"காதல்" கயிற்றில் தொங்கியது.
அந்த இரண்டு சொற்கள்:
சாதி..மதம்!

================================================

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மக்கள் பிரதமர் வாஜ்பாய்


மக்கள் பிரதமர் வாஜ்பாய்
========================================ருத்ரா

மக்கள் பிரதமர் வாஜ்பாய்
அவர்களின் மறைவு
பேரிழப்பு என்பது
உன்மையிலும் உண்மை.
அவர் கட்சி என்ன என்பது
இந்த மக்களுக்குத் தெரியும்.
அவரைப்பொறுத்து
இந்துவுக்குள் இருப்பது
முதலில் இந்தியா அப்புறம் தான்
கௌடில்யரின் சாஸ்திரங்கள்.
முதலில் மனிதன்
அப்புறம் தான் வர்ணங்கள்.
மற்ற மதங்களுக்குள்ளும்
அவர் இந்தியாவைத்தான்
பார்த்தார்.

ஞானப்பழத்துக்கு
ஒரு தெய்வம் மயில் ஏறி
உலகம் சுற்றியது.
சுற்றியது சுற்றியது
சுற்றிக்கொண்டே இருந்தது.
இன்னொரு தெய்வம்
இருக்கும் இடத்தில்
உலகத்தையே கண்டது.
ஞானத்தின் ருசியும் தெரிந்தது.
இங்கே ஞானப்பழம் என்பது
நம் சமூகநீதியும் ஜனநாயகமும் தானே.
அவர் இந்த மக்களை
ஜனநாயக
அடையாளங்களாகத்தான் மதித்தார்.
வரலாற்று மைல்கல்களை
மாணிக்க கல்களாக மாற்றிய பெருமை
அவருக்கு உண்டு.

வாஜ்பாய் அவர்கள்
இந்தியாவில் இருந்துகொண்டே
உலகத்தை "அசையச்"செய்தார்.
நம் மதிப்பிற்குரிய மோடி அவர்களோ
உலகத்தைச் சுற்றி சுற்றி வரும் ஆர்வத்தில்
நம் இந்தியாவும் கூட‌
அவருக்கு
ஒரு அயல் நாடு ஆகிப்போனதோ?
என்ற ஐயத்தை
விதைத்துக்கொண்டிருக்கிறார்.

ஓட்டுக்கு மட்டுமே அவர் குரல்
ஓங்கி ஓங்கி ஒலிக்கிறது.
அவரது ஆத்மீக மௌனம் மட்டுமே
மக்களின் சலசலப்புகளுக்கு
கிடைக்கும் பதில்.

இங்கு ஒப்பீடு செய்வது முறையில்லை தான்.
வாஜ்பாய் அவர்களை தினம் தினம்
ஞாபகப்படுத்துகிறாரே
நம் மதிப்பிற்குரிய‌ மோடி அவர்கள்!
என் செய்ய?

எங்கோ இருட்டுக்குள் இருந்துகொண்டு
சவுக்கை சுளீர் சுளீர் என்று
ஆர் எஸ் எஸ் விளாசுவது இப்போது
மக்களின் மேல்
ஏன் ரத்தவிளாறுகள் ஆகவேண்டும்?
வாஜ்பாய் அவர்கள்
அந்த சவுக்குநுனிகளை
பூக்களாக்கி
ஜனநாயக செண்டு ஆக்கி
புன்முறுவலோடு நீட்டினார்.

பசுவோடு சேர்த்து மனிதனைப்பார்த்தார்.
இப்போதோ
மனிதனின் "ஆம்புலன்ஸ்களை" எல்லாம்
பசுக்களே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.
குமுதத்தில் வரும் ஆறு வித்யாசங்களை
கண்டு பிடிப்பது அல்ல இது.
மானிட வர்ணமற்ற ஜனநாயகத்தின்
ஆறாத புண்களை ஆற்றுவதற்கு
படும் அல்லல்களே இவை.

வாஜ்பாய் அவர்களின் "தங்க நாற்கரம்"
ஒரு ஆச்சரியமான பிரமையை
நம் அரசு நாற்காலியில்
நிழல் காட்டிக்கொண்டிருக்கிறது.
அந்த ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களில்
ஓடும் வாகனச்சக்கரங்கள்
நம் தேச வளர்ச்சியின்
கோடி கோடி"அசோகசக்கரங்களாய்"
உருண்டு கொண்டிருக்கின்றன.
மனிதநேயம் மிக்க வாஜ்பாய் அவர்களே!
நாங்கள் தேசியக்கொடியேற்றும் போதும்
நடுவில் சுழலும் அந்த அசோக சக்கரம் கூட‌
உங்கள் முகமே!உங்கள் அகமே!..அது.
எதிர்க்கட்சி மற்றும் மதக்கட்சி
என்ற சாயமே தோயாத‌
மானுட மணங்கமழும் கட்சியாய்
அல்லவா நீங்கள் நிறைந்து நின்றீர்கள்.

"உங்கள் ஆத்மா சாந்தியடைய‌
நாங்கள் பிரார்த்திக்கிறோம்"

இந்த சம்பிரதாய மொழி உங்களுக்குரியது.
அந்த மொழியில்
எங்கள் அஞ்சலிகளை இங்கு
சமர்ப்பிக்கின்றோம்!

=================================================================


புதன், 15 ஆகஸ்ட், 2018

ரஜனியின் பெருங்கனவு

ரஜனியின் பெருங்கனவு
==================================================ருத்ரா

கலைஞருக்கு
இரங்கல் அஞ்சலி செலுத்தும்போது
ரஜனி அவர்கள்
திராவிட இனமே புல்லரிக்கும் படியாய்
ஒரு கருத்து சொன்னார்.
எம்ஜியார் படத்தின் அருகேயே
கலைஞரின் படத்தையும் வைத்து
விழாக்கொண்டாடும்
நேரம் வந்து விட்டது என்றார்.
கலைஞரால் தான் எம்ஜியார் பிரிந்தார்
என்ற கருத்தும்
எம்ஜியாரால்
கலைஞர் இல்லாமல் திராவிடத்தை
உச்சரிக்கக்கூட முடியாது
என்ற கருத்தும்
அங்கே மௌனமாக
ஒரு "மோதலை" சிதறச்செய்து
அதிலிருந்து தமிழர்கள் என்ற‌
பேரினத்துக்கு
ஒரு ஆற்றல் பிழம்பை
இழைய விட்டது போல் தான்
அது இருந்தது.
அதற்குள் மோடியும் அமித்ஷாவும்
இருப்பார்களோ
என்ற சந்தேக ஈக்களையெல்லாம்
விரட்டிவிடுவோம்.
வரலாற்றைப் பின்புறமாக‌
திருப்பிப்பார்த்தபோது
அன்றைய ஒரிஸ்ஸாவின் முதலமைச்சர்
பிஜு பட்நாய்க் அவர்கள்
விதை ஊன்றியது தான்.
திராவிடநாடு திராவிடருக்கே
என்ற கொள்கையெல்லாம்
தேவையில்லை.
ஏனெனில்
சிந்து வெளி அரப்பாவின்
"நகர அமைப்பு" சிதைவுகளும்
அந்த முத்திரைக்குள் ஒலிக்கும்
"நன்னன்"போன்ற பெயர்களும்
சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே
நாம்
திராவிட இந்திய தமிழர்களாகத்தான்
இருந்திருக்கிறோம்
என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டன.
இப்போது வ‌ழங்கும்
எல்லா இந்திய மொழிகளும்
தமிழின் நிழலில் ஒதுங்கியிருக்கலாம்
என்று ஆராய்ச்சியாளர்கள்
கருதுகிறார்கள்.
திரை எனும் கடலலைகளையும்
திறம்பட ஆண்டவனே
அந்த "திரைவிடன்".
அவன் அலையிடை சென்று
கொண்டு வந்த ஒலிப்புகளை
"மறை"மொழி என்றான்.
தன்னிடம் உள்ள‌
தமிழ் எனும் "நிறை"மொழி
வாழும் வாழ்க்கையைப் பேசியது.
அந்த அயல் ஒலிப்புகள்
வாழும்போதே
வானம்பார்த்து கற்பனைகளை
பேசியது.
அந்த மறைமொழிக்கும்
வரி வடிவு தந்து
தன் உடனேயே பொம்மரேனியன் போல்
செல்லமாக வைத்துக்கொண்டான்.
காலப்போக்கில்
செல்லமாக இருந்தது அவன்
செல்வங்களையெல்லாம்
எடுத்துக்கொண்டது.
அவனும்
ஈ என்று இரப்பது இழிவு.
ஈ என்று இரப்பவர்க்கு தர மறுப்பது
அதை விட இழிவு என்று
எல்லாவற்றையும் கொடுத்தான்.
இரு மொழிகளுக்கும்
இடையே அவனே
மயிற்பீலியில் நெய்த ஒரு திரையைப்போல‌
ஒரு ஏற்பாடு செய்திருந்தான்.
ஒரு சம ஏற்பாடு செய்வது என்று தான்
சமஸ்கிருதத்தின் அர்த்தம்.
ஆட்சியின் யுத்தப்பசியில் ரத்த ருசியில்
வரலாற்றுத்தடங்கள்
தடம் மாறின.
தடம் புரண்டன.
இப்போது ஒரு புதிய கருத்தின்
உதயமாக இது
எழுச்சியுறட்டும்.
திராவிட சிந்திய (இந்திய) முன்னேற்றக் கழகம்
ஒன்று தோன்றட்டுமே.
ரஜனியின் இந்த பெருங்கனவு
இமயம் என்றால்
அந்த பின் புல தந்திரவாதிகள்
வெறும் கூழாங்கற்கள் தான்.
நம் அருமை அண்ணன்
திரு ஜெயக்குமார் அவர்கள்
இதற்கு
எங்கோ பார்த்துக்கொண்டு
"சாமி" ஆடவேண்டாம்.
திமுக நண்பர்கள் நாத்திகர்கள் என்பதால்
இப்படியெல்லாம்
"சாமி"ஆடமாட்டார்களோ!
தெரியவில்லை.
தேர்தல் ஆணையம்
சோழிகள் குலுக்கிப் போடும் வரை
கொஞ்சம் இப்படி
அசை போட்டுக்கொண்டிருந்தால்
அசையாதவையும் அசையலாம்.
தமிழுக்கும் ஒரு பூகம்பம் வேண்டும்!

===============================================================
தொலைத்துப்பார்தொலைத்துப்பார்
=======================================ருத்ரா


நீ
என்ன சொல்லை
விதைத்தாய்?
என் தேகம் முழுதும்
ரோஜாக்காடு ஆனது.

உன் ஒலியலையின்
அதிர்வு எண்
என் இதயத்துள்
எண்ணிக்கைகள் இறந்த
ஒரு கணிதத்தை கற்பித்தது.

அந்த சொல்லின் பொருளை
தோலுரிக்க கிளம்பினேன்.
தோலுக்குள்ளே..
தோலுக்குள்ளே..
என்று
வானத்தின் தோல் எல்லாம்
கிழிந்ததே மிச்சம்.

உலகத்து மொழிகளின்
அகராதிகள் எல்லாம்
கிறுக்குப்பிடித்து
தன் பக்கங்களையெல்லாம்
கிழித்து எறிந்து விட்டன.

அப்படி
என்ன தான்
சொல்லித்தொலைத்தாய்?
சொல்லித்தொலையேன்.

ஆம்
சொல்லித்தான் தொலைத்தேன்.
தொலைந்தது தொலைந்தது தான்.

என்ன சொல்கிறாய்?

"காதலை ஜெயிக்க வேண்டுமென்றால்
காதலை தொலைத்துப்பார்.!"

==========================================================

சுதந்திரம்

சுதந்திரம்
============================================ருத்ரா

இந்த சொல்
அதன் அர்த்தத்தை விட்டு
வெகு தூரம் சென்றுவிட்டது.
72000 ஆயிரம் மைல்கள் இருக்கும்.
ரத்தத்தின் சத்தம்
தியாகத்தின் முத்தம்
எல்லாம் எங்கோ
வெகு தொலைவில் தேய்ந்து
கரைந்து விட்டது.
உயிர்ளைக் கொடுத்து
வாங்கியதன்
"விலைச்சீட்டு"
நம் ஒவ்வொருவரின் கழுத்திலும்
தொங்குகிறது
பாறாங்கல் கனத்தில்.
ஆம்
உலகச்சந்தையின் கெடுபிடியுடன்.
அந்த திட்டம்
இந்த திட்டம்
என்று
உச்சரிக்கப்படும் சாக்கில்
நாடெங்கும்
இந்திச்சொற்கள் இடம் பிடித்துக்கொண்டன.
பன்முகம் கொண்ட இந்தியா
ஆசிட் வீசி முகம் அழிந்து போனதுபோல்
ஒரே மதம் ஒரே தேசம் என்று
சாதி மத நெருப்பு வீசப்படுகிறது.
ஜனநாயகத்தின்
பலகோடி இதழ்கள் கொண்ட‌
தாமரை போன்ற
அழகிய முகம் பூத்த‌
நம் இந்திய அன்னைக்கு
ஒரு இரும்பு முகமூடி மாட்ட‌
சாணக்கியம் செய்யும்
கும்பல்களின் கும்பமேளாக்கள்
ஆரவாரம் செய்கின்றன.
மக்கள் ஜனநாயகம்
மங்கியே போனது.
லஞ்சம் ஊழல் எல்லாம்
ஒழிக்கப்படும் ஒரே வழி
லஞ்சம் ஊழல் என்று
வேத மந்திரங்கள் போல் இங்கு
கன பாட்டம்
செய்து கொண்டிருப்பது தான்.
இராமாயணம் படித்துக்கொண்டே
பெருமாள் கோயில் இடிப்பது போல்
பாபர் மசூதியையும் இடித்து
பரபரப்பு ஊட்டும் அரசியலை வைத்து
பலூன் ஊதும் தந்திரங்கள் நிறைந்த‌
பூமியா நம் பாரத பூமி?
ஓட்டுப்போட்டு
ஆட்சி செய்யும் ஒரே பெரிய நாடு
நாங்கள் தான்
என்று நமக்கு மட்டும் அல்ல‌
மற்ற நாடுகளுக்கும்
ஒரு பெரிய நாமம்
போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
வரிசையாய் நின்று
வரிசையில் நின்று
எழுபத்தி இரண்டு ஆண்டுகளாக‌
தோற்றுக்கொண்டு இருக்கிறோம்.
ஆம்
தோற்றுக்கொண்டு தான்  இருக்கிறோம்!

===================================================

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

விசுவரூபம் 2

விசுவரூபம் 2
==================================================ருத்ரா

கமல நாயகன்
ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
என்று
அகல நின்று கொண்டு
படத்தை முடித்துவிட்டார்.
உளவாளிக்கதையில்
என்னத்தை உணர்த்த முடியும்?
வேண்டுமானால்
நம் அந்த புனித‌
"சாரே ஜாஹாம் ஸே அச்சா"வை
படம் நெடுக இசைக்கீற்றில்
இழைத்திருக்கலாம்.
ஆனால் இப்போது
தேசம் தேசவிரோதம் என்ற கருத்துக்கள்
எல்லாம்
அரசியல் ஆட்சி வாதிகளிளின்
வசதியான
சட்டைப்பை சாமான்கள் ஆகிவிட்டன.
எப்போது வேண்டுமானலும்
அதிலிருந்து
சிகரெட்டுகளையும் தீப்பெட்டிகளையும்
எடுத்துக்கொள்வது போல்
ஜனநாயகத்தின் ஆத்மா ஒரு எதிர்க்குரலாய்
சிலிர்க்கும் போதெல்லாம்
அந்த "சட்டப்பை"யிலிருந்து
துப்பாக்கிகளையும் லாட்டிகளையும்
எடுத்து பூச்சாண்டி காட்டிக்கொள்கிறார்கள்
அது சரி!
இந்தபடமும் அந்த நுணுக்கத்தனமான‌
போர்களை
பூதக்கண்ணாடி கொண்டு
அழகாய்த்தான் காட்டியிருக்கிறது.
வழக்கமான வில்லத்தனங்களை விட‌
செயற்கையாய் ஒரு சுனாமியை உருவாக்கி
அழிக்க நினைக்கும்
அந்தக் கொடூரத்தை
நன்றாகவே கோடு போட்டு காட்டியிருக்கிறார்.
கிருஷ்ணன்
இன்னொரு விஸ்வரூபம்
காட்டியிருந்தால்
வியாசரின் மகாபாரதப்"படம்" கூட
"ஃ ப்ளாப்" ஆகியிருக்கலாம்.
கமலின்
இரண்டாவது விசுவரூபம்
அப்படி 
ஒரு "ஆன்டி க்ளைமேக்ஸ்"தான்.
ஏனெனில்
அவர் அரசியலில் இன்னும்
ஊசிவெடிகளைத்தான்
வெடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்திலும் அவர்
ஆனை வெடிகள் ஏதும் வெடிக்கவில்லை.

=============================================
ஆகஸ்டு பதினைந்தே வருக வருக!

ஆகஸ்டு பதினைந்தே வருக வருக!
==================================================ருத்ரா

காலண்டர் தாள் சரசரப்புகளில்
ராணுவ பூட்ஸ்களின்
மரியாதை ஒலிகள் கேட்கின்றன.
அலங்கார வண்டிகள்
மாநிலம் மாநிலமாய்
பொம்மைக்காட்சிகளில் உயிர் பூசி
மிதந்து வருகின்றன.
ஆனந்த வெள்ளம் திரள்கிறது.
வந்தேமாதர முழக்கத்தின்
புடைப்பு பரிமாணம்
நம் நெஞ்சங்களில் விம்மிப்பெருகுகின்றது.
அது முக்காலங்களின்
வரலாற்றுக்கனத்தின்   பரிமாணம்.
நேற்று இன்று நாளை
என்று
எப்படிப்பார்த்தாலும்
வேர்வை கண்ணீர் ரத்தம்
என மூன்று அதிர்வலைகளில்
கனல் மூட்டும் பரிமாணம்.
சாதி சமய வர்ணங்கள் அற்ற
சமூக நீதியின் ஜனநாயகப்பூங்கா நோக்கி
நடை போட வந்திருக்கும்
இன்றைய "ஆகஸ்டு பதினைந்தே"
உன் பின்னே
சுரண்டல் அநியாயங்களால்
நியாயக் க‌பாலங்களின்
நொறுங்கும் ஒலி கேட்கிறதா?

மும்மலம் அறுக்கும்
முக்தி தத்துவம் இங்கே உண்டு.
வயிற்றுக்காக‌
மலம் அள்ளும் மனிதர்களும்
இங்கு தான் உண்டு.
இவர்கள் பூசிய‌ வர்ணங்களுக்கும்
அப்பாற்பட்ட இவ்வர்ணங்களுக்கு
ஓ! மூவர்ணமே
உன்னிடம் ஏதேனும் வர்ணம் உண்டா?
பிரம்ம சூத்திரங்கள் எல்லாம்
அந்த கடவுளைக்காட்டுவாதாய் சொல்லி
ஏமாந்து
ஏமாற்றி
இந்த ஸ்லோகக்காடுகளில்
சுகமாய் ஒளிந்து கிடக்கின்றன.
இந்திய அன்னையே
உன் குழந்தைகளைக்காப்பாற்று.
அறிவு ஒளியை தானே நீ
உன் குழ‌ந்தைகளுக்கு
பாலூட்ட வந்தாய்!
இவர்கள் இன்னும் இந்த‌
இருட்டின் "சோமக்கள்ளை" அல்லவா
புகட்ட முனைகிறார்கள்!


கீழ்சாதியும் மேல்சாதியும்
கலந்து விடக்கூடாதே என்று
கௌரவக்கொலை புரியும் இந்த‌
கௌரவர்கள் மீது
வஜ்ராயுதம் வீசும் கிருஷ்ணர்கள்
ஏன் உங்கள்
(மகா)பாரதத்தில் இல்லாமல் போனார்கள்?
இதை எல்லாம்
ஆடாமல் அசையாமல் நின்று
பார்த்துக்கொண்டிருக்கும்
"மரப்பாச்சி" ஜனநாயக‌மா
இந்த ஜனநாயகம்?

"ஆகஸ்டு பதினைந்தே!"
வழக்கமாய் கிழித்துப்போடும்
வெறும் காலண்டர் தாள் அல்ல நீ!
இன்று
புதுத்தீயில் புதுப்பித்து பதிப்பித்து
புடம்போட்டு வந்த
புதிய ஆகஸ்டு பதினைந்து நீ!
புதிய அர்த்தங்களோடு
காலண்டர் தாள்கள்
வரும்
அக்டோபர்களையும் நவம்பர்களையும்
ஒரு ஊமைக்காற்றின் அசைவுகளில்
அசைபோடும் உள்ளொலிகளையும்
உற்றுக்கேட்கிறாயா மூவர்ணகொடியே!
தியாக உடல்களின் துணி கிழித்து
எங்கள் இதயங்கள் கொண்டு
தைத்த
எங்கள் இன்னுயிர்க்கொடியல்லவா நீ?
சமுதாய‌ நீதியின் வெளிச்சமாய்
ஒரு "ஆகஸ்டு பதினைந்தை"
எங்களின்
இனியதோர் விடியல் ஆக்கு !
அதுவரை
எங்கள் நாளங்களும் நரம்புகளும்
புடைத்துக்கொண்டே இருக்கும்
துடித்துக்கொண்டே இருக்கும்.
"ஜெய்ஹிந்த்"

====================================================

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

blow to pieces....
blow to pieces....
===========================Ruthraa

the song books are pouring music and blood.

the laser beams pierce the soul of love

in nerve with a bubble swinging like a cocoon.

one morning she sieves my flow 

of sensuous burst in a mellow sensuality

they write lyrics of all dooms couched in

sweetening kisses otherwise 

in a deathful parlour

known of poisonous ivy blooms.

the moons are crushed and made with a

starry shake...to make  a gulp 

of god's other kingdom or heaven.

the description is cornered 

either to a bang or whimper.

the hollow epistemology is in a disguise

of a nectar but with taste of virtual reality

i lied deep in the abyss of her mind

where her heart's  a cheat 

'cause all my poesy of love

is butchered to a piece meal death!

Keatses and Byrons 

and their wasteful ventures of 

verbal love and mundane thirsts

war between lips for a kiss...

for a bodily lore of an imminent 

blow to pieces ..Alas!


===============================================