வியாழன், 27 ஜனவரி, 2022

ஓங்கி உலகளந்த......

ஓங்கி உலகளந்த. . . . . . .

.

____________________________________ருத்ரா


தமிழா! தமிழா!

உன் வரலாற்றுத்தடம் அழிக்க

நம் அலங்கார ஊர்திகளை

அலங்கோலமாய் ஆக்கும்

அவர்கள் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்

தமிழா!தமிழா!


வெறும் அட்டைக் கட்டு மானங்கள் 

அல்ல இவை.

அழல் வீசம்  நம் சுதந்திர மூச்சின்

அடையாளங்கள் இவை.


வெள்ளையன் ஆட்சியை

வேரோடு பிடுங்க 

தம் உயிர்களின் வேர்த்தூவிகளில் 

வீரம் பாய்ச்சி

கிளர்ந்து நின்றவர்கள் அல்லவா

தமிழர்கள்.


மருது இருவர்கள்

உருவிய வாட்களில்

கதிர் தெறிக்கும்

சினம் கொப்புளிக்கும்.

வெள்ளையர்கள் ஆதிக்கம் 

வீழ்ந்து போக‌

கடுமை போர் புரிந்து

வெள்ளைத்தூக்குகயிறுகளுக்கு

அவர்கள்

இரையாகிப்போன‌ அன்று தான்

நம் சுதந்திர ஒளி இமை உயர்த்தியது.


அந்த சூரியப்பெண் வீரமங்கை

வேலுநாச்சியார்

செங்கோல் ஏந்திய கையில்

வீர வாளும் தெறித்துச் சுழன்றதால்

வெள்ளை நரிகள் வெலவெலத்துப்போயின.


வ உ சி என்னும் சுதந்திரத்தின் 

பெருநெருப்பு

வெள்ளைக்கப்பல்களையே

வெறும் காகிதக்கப்பல்கள் ஆக்கி

கடல்கள் கூட‌

நம் சுதந்திர சுவாசத்தை

அலைவிரிக்கச்செய்த 

சரித்திரம் மறக்க இயலாதது அல்லவா.

அந்த கப்பலோட்டிய தமிழனின்

தமிழ் மீது அவ்வளவு வெறுப்பு

இந்த தமிழ்ப்பகையாளிகளுக்கு.

சுதந்திர வெப்பமூச்சின்

எரிமலைக்கவிஞன் பாரதி கூட‌

இவர்களுக்கு எதிரியானது எப்படி?

அவர் "அக்கிரகாரத்துக்கழுதையின்

கனப்புக்குரல் வேத சுருதிகளை"

அவமதிப்பு செய்து விட்டதோ?

ஓ! தமிழா!

நீ என்ன நிறத்தில் இருந்தாலும் சரி

இந்த சாக்கடையுடன் சங்கமம்

ஆகிவிடாதே!

வெள்ளைக்காரன் ஆண்டாலே போதும்.

இந்த சாதிகளின் சாத்தான்களான‌

சனாதன சாஸ்திரத்தை

பாதுகாத்து 

பத்திரமாக்கி கொடுத்தவன் 

என்று தானே

அவனை எதிர்த்துப்போரிட்ட‌

இந்த சுதிந்திரப்போராளிகள் மீது

இத்தனை வெறுப்பு.

வெள்ளையன் மீது அவர்கள் காட்டும் 

எதிர்ப்பெல்லாம் இது ஒன்று தான்.

ஆங்கிலக்கல்வி வழியாய்

அந்த வேதங்களின் புருஷசூக்தம் மூலம்

மானிட நீதிக்கு எதிரான வர்ண தத்துவங்கள்

எல்லாம் அம்பலமானதே என்று.

தேசத்துரோகத்தை 

தேசபக்தி வர்ணம் பூசித்தானே

நான்கு வர்ண தேசம் எழுப்ப‌

இத்தனை தந்திரத்தை

அவர்கள் கையாள்கிறார்கள்.

அந்த டெல்லி வீதிகளில்

அந்த சக்கரங்கள் 

நம் ஜனநாயகத்தையும்  சுதந்திரத்தையும்

நசுக்கிக்கொண்டு

நம் தேசிய ஒருமைப்பாட்டை

கந்தல் கந்தலாய் ஆக்கிக்கொண்டு

நகர்கின்ற காட்சிகளில்

திகில் கொண்டு உறைந்து போய்

நின்று பயனில்லை தமிழா!

விழித்தெழு தமிழா!

ஓர்மை கொள்!கூர்மை கொள்!

ஓங்கி உலகளந்தது உங்கள்

தமிழே ! தமிழே!

_____________________________________


















புதன், 26 ஜனவரி, 2022

கூர்மை கொள் தமிழா!

 கூர்மை கொள் தமிழா!

‍‍‍‍‍‍‍________________________________

ருத்ரா


தமிழா!.

எப்போ பார்த்தாலும் தமிழ் தானா?

கொஞ்சம் பிழைக்குறத பாருங்கப்பா.

என்று தமிழர்களே

முதுகு திருப்பிக்கொள்ளும் அவலங்களுக்கு

ஒரு சாட்சி இதோ!

ஆர்.பி.ஐ அலுவலக குடியரசு தினவிழா நிகழ்ச்சிக்கு

பாடப்பட்ட நம் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு

சட்டைசெய்யாத ஒரு ஊழியர்.

இதற்கு அலட்சியம் ஒரு காரணம்

இது "மத்ய அரசு அலுவலகம் தானே"

என்பது தான் அது.

அந்த அலட்சிய அகம்பாவம் ஒரு நோயாக மாறி

சமூக நீதி தேவைப்படுகிற

நம் மக்கள் இப்படி தமிழ் மீது அலர்ஜி ஏற்படுத்திக்கொள்ள‌

காரணம் ஆகி விடும் ஒரு ஆபத்தான் காரணமும்

கண்ணுக்குத்தெருயாத ஒரு 

அனகோண்டா பாம்பாய் நம்மை 

விழுங்கக்காத்திருக்கின்றன.

நமக்கு எச்சரிக்கை மிக மிக தேவை.

இப்போது திருக்குளை நம் மூக்குக்கு முன்னே

காட்டி கிச்சு கிச்சு மூட்டுவார்கள்.

காவியும் கொட்டையையும் சேர்த்துக்கொண்டு.

அந்த கனமான செத்த பிணமான சமஸ்கிருதம்

நம்மை இன்னும் அழுத்தி வதைப்பது தான்

நமக்கு இன்னொரு சுதந்திரப்போருக்கு

அவசியத்தை மூண்டு எரியச்செய்கிறது.

உலகமொழி ஆங்கிலம் நம் தமிழின்

முகவரி காட்டுவது.

சமஸ்கிருதமோ நம் முகத்தையே

அழித்துக்கொண்டிருப்பது.

தமிழர்களே இந்த நுண்மையான ஓர்மை

நமக்குள் கனன்றால் தான் 

சநாதன அதர்ம வர்ணங்கள்

நம்மை மத்தாப்புக்கொளுக்தி

மடிய விடாமல் தடுக்கும்.

தமிழா! தமிழா! கூர்மை கொள்.


___________________________________________



வியாழன், 20 ஜனவரி, 2022

குறும்பாக்கள்

 குறும்பாக்கள்

_________________________________

ருத்ரா



அணிவகுப்பின் அரிதார வர்ண‌

"அலங்காரம்"கலைந்து விட்டது 

நான்கு வர்ணமாய்.


மூவர்ணம்.

____________________________________ 1


பீரங்கிகள் அணிவகுக்கின்றன.

அடியில் "கந்தலாய்"

நம் ஒருமைப்பாடு.


அணிவகுப்பு

_____________________________________ 2


தமிழ் வீர மங்கையின் 

ரத்தம் உங்களுக்கு

தக்காளிச்சட்னியா?


வீரமங்கை வேலுநாச்சியார்.

_______________________________________ 3


கப்பலோட்டிய தமிழனில்

உங்களுக்கு எது கசக்கிறது

கப்பலா? தமிழனா?


வ உ சி

__________________________________________4


இன்னும் "வெள்ளையர்கள்"

இருக்கிறார்கள் இந்த கருப்பு

விடுதலைக்குரல்களை எதிர்த்து.


மருது சகோதரர்கள்

___________________________________________5




பட்டொளி வீசி. . . . . .

பட்டொளி வீசி. . . . . .


_____________________________________________


ருத்ரா






"பட்டொளி வீசி பறந்தது பாரீர்!"


பாரதி கொஞ்சம் விழித்துப்பார்


உன் கனவு நிறைவேறிவிட்டதே.


அந்த மூவர்ணக்கனவு 


இமை நிமிர்த்திக்கொண்டபோது


அதனுள் ஒரு மிருகம்


உறுமுகின்றதே


நான்கு வர்ணம் காட்டி.


அது உனக்கு கேட்கின்றதா?


தமிழ்ச்சாதி 


அந்த சாக்கடை மிருகங்களுக்கு


தாழ்ந்த சாதி ஆகிப்போனதின் 


கொடுமை உனக்கு புரிந்ததா பாரதி?


ஆடுவோமே பள்ளு பாடுவோமே 


என்றாயே.


மதவெறித்தீயில் ஆரத்தி காட்டி


இவர்கள் தட்டுகின்ற சப்பளாக்கட்டைகளில்


ஜனநாயகமும் சுதந்திரமும்


நசுங்கிப்போகின்றதே.


கங்கைநதிப்புரத்து கோதுமைப்பண்டம்


காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்


என்று மீசை முறுக்கிப்பாடினாயே.


இவர்கள் 


நம் செந்தமிழ் நாட்டை


கசாப்பு செய்ய கையில்


கத்தியோடு அல்லவா அலைகிறார்கள்.


குடியரசு எனும் சுந்திரச்சுடர்


நம் தமிழ் உள்ளங்களின்


எரிமலைக்குழம்பில் பூத்த‌


எழில் மிகு ரோஜா அல்லவா!


வீரமங்கை வேலுநாச்சியார்...


விடுதலையின் வீரம் 


கொப்புளித்த நம்


மருது சகோதரர்கள்....


மற்றும்


நம் தமிழ் மண் விரித்த 


வீரச்செங்கதிர்கள் எல்லாம்


அந்த வெள்ளை விலங்குகளை


உடைத்து நொறுக்க‌


எழுந்தவை அல்லவா!


வ உ சி எனும் பிரளயம் தந்த 


மூச்சு தானே


மூண்டு எரியும்  இந்த‌


மூவர்ணம்!


ஓ!பாரதி!


இந்த சீட்டுக்கட்டு ராஜாக்கள்


சாதி மத சாமரங்களில்


பள்ளிகொண்டு படுத்துக்கொண்டே


மக்களையெல்லாம்


புழுக்களாக்கி நசுக்கி


வேடிக்கை பார்ப்பதற்கா


வந்தது இந்த சுதந்திரம்?


நம் சுதந்திர அணிவகுப்பு வண்டிகளின்


ஜனநாயக அச்சு முறிந்த‌


சத்தம் கேட்கிறதா ஓ பாரதி!


சர்வாதிகார எச்சில் நாறும்


அந்த வெறியின் கூச்சலைக்கேட்டு


"நெஞ்சு வெடிக்கின்றதே.."


என்று தானே நீ பாடுவாய்.


"தாயின் மணிக்கொடி பாரீர்"


என்ற உன் மணிக்குரலோடு 


சுருதி சேர்ந்த‌


நம் தமிழ்க்கொடியின்


கனற்குரல்


இன்னொரு சுதந்திர வேட்கையாய்


கிளர்ந்து முழங்கட்டும்.


அந்த அணிவகுப்புக்கு


வெறும் அடையாளங்களின் 


பொம்மைகளையா


நம் அலங்கார ஊர்திகள் 


ஏந்திக்கொண்டிருக்கின்றன?


நம் மண்ணின் 


சுதந்திர ஊற்றுக்கண்கள் அவை.


மதநீர் ஒழுகி கண்ணை மறைக்கும்


பழமை வாதத்தின் பிடிவாதம் 


வேண்டுமென்றே


அந்த டெல்லி வீதியில் 


இந்த சுதந்திர செம்புயலுக்கு 


பூட்டுகள் போடலாம்.


நம் செந்தமிழ் மூச்சின் வீச்சுக்கு முன்னே


அவை தூசிகள்.துரும்புகள்.


என்றும் தணியாத நம் சுதிந்திர தாகம்


என்றும் சுடரட்டும்.


வென்று சுடரட்டும்.


எங்கும் பரவட்டும்.


வாழ்க தமிழ்!


வெல்க தமிழ்!




________________________________

சனி, 15 ஜனவரி, 2022

“Jai Bhim”

 



டி வி யில் "ஜெய் பீம்"

____________________________________

ருத்ரா


பாம்பும் எலியும் பிடித்து

வாழ்க்கை நடத்துபவர்களுக்கு

பட்டா எதற்கு?

இந்த சிறுபொறியில்

இது வரை அநீதியின் 

சொக்கப்பனைகள் தான் 

கொளுந்து விட்டு எரிந்திருக்கின்றன.

உண்மை நடப்புகளை

பெயர்த்து எடுத்து

சினிமாவில் பதியம் இட்டிருக்கிறார்கள்.

நடிப்புகளையும் 

உயிர்த்தீ பற்றி எரியும் 

அந்த கதையின்

 சுநாமி  அதிர்வுகளையும்

விமர்சித்து கொச்சையாகுவதில் 

ஒரு பயனும் இல்லை.

"சந்துருக்கள்"எனும் 

அக்கினி விதைகளின்

நெருப்புக்காடுகள்

அந்த காமிராப்படைப்பில்

நிச்சயம் 

நமக்கு வேண்டிய 

ஒரு ஆவேசத்தையும் சீற்றத்தையும்

ஒரு "சூப்பர் நோவா"வாய்

சுட்டெரிக்கும் 

வெளிச்சம் காட்டியிருக்கிறர்கள்.

நூறு குற்றவாளிகள் தப்பிக்கப்படலாம்.

குற்றமற்றவன் ஒருவன் கூட‌

தண்டிக்கப்படக்கூடாது

என்ற

அந்த பரிமாணத்தின் 

மானுட சூரியன்

புன்னகை புரிய‌

இங்கே எத்தனை வலியும் வேதனையும்

மனிதக்கபாலங்களை

குவித்து குவித்து

வதம் செய்திருக்கிறது?

"உங்களில் குற்றமற்றவன் எவரேனும் ஒருவன்

அந்த முதல் கல்லை எறியுங்கள்"

என்றானே ஒருவன் 

அந்த குரலின் 

உயிர்ப்பு நிறைந்த மயிரிழையில் 

இந்த உலகமே ஊஞ்சல் ஆடுகிறது!


___________________________________________________ 


வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொன் தூண்டில்

 பொன் தூண்டில்

________________________________________

ருத்ரா



சரித்திரத்தின்

காலச்சருகுகள் 

உன் காலடியின் கீழ்

சர சரப்பது

உனக்கு கேட்கின்றதா?

எத்தனை நூற்றாண்டுகள்

உன்னை மென்று விழுங்கின?

இன்னும்  உன் பசியை நீ

உணரவில்லை.

சிந்தனைச்சிற்பிகள்

இந்த சமுதாயத்தை செதில் செதிலாக‌

செதுக்கி

அதன் உருவத்தை உனக்கு

உரித்துக்காட்டியது

இன்னுமா புரியவில்லை?

முரண்பாடுகள் தானே

உனக்கு 

என்றும் மாறாத பாடத்திட்டம்

என்று வகுத்துக்கொடுத்தார்களே!

அதை நீ இன்னும் உணரவில்லை.

கடவுள் என்று

ஒரு கல்லை நட்டுக்கொள் என்றார்களே

அது முரண்பாடாய் 

ஒரு பெரும் கனமாய் உன்னை

அழுத்தி நசுக்கிக் 

கொண்டிருப்பதை

நீ உணரவில்லையா?

பரிமாண மலர்ச்சியின் 

சிகரமே மனிதன் தானே!

அவன் ஏன் 

இந்த சாதி மத வேற்றுமைத்தீயில் 

கருகி மாய வெண்டும்?

அறிவு உன்னை 

பதுப்பித்துக் கொண்டே அல்லவா இருக்கவேண்டும்!

உயிரற்ற வெற்றுச்

சடங்குகளின் கிடங்குகளில் கட்டிய 

மார்ச்சுவரிகளிலா உன் 

மார்க்கத்தைத் தேடுகிறாய்?

சுகமான அம்புலிமாமாக்கதை

புராணங்களின் அபினித்தூக்கத்திலா

இன்னும் நீ ஆழ்ந்து கிடப்பது?

ஓட்டு எனும் பொறி வைத்து பிடிக்கப்படும்

பூச்சியா நீ?

ஓ!மனிதா!

உன் குவாண்டம் கம்பியூட்டிங் எனும் 

நுண்ணறிவு கொண்டு உன்னையே

ஒரு சுரண்டல் உலக "டாய் ஸ்டோரியில்"

விளையாட்டு கிராஃபிக்ஸ் மசாலா வெளிச்சங்களில்

மூழ்கடிக்கப்பார்க்கும் சூழ்ச்சிகளை

புரிந்து கொள் மனிதா!

பொன் தூண்டில் விழுங்கும் மீன் அல்ல நீ!

மாற்றமும் முரண்பாடுகளுமே

உன் பசி!

உன் உணவு!

ஆம்!

பசித்திரு!விழித்திரு!


_____________________________________________________________________


புதன், 5 ஜனவரி, 2022

a sculpture

we want 

to chisel out 

a sculpture of democracy

but alas

from these draconian and

despotic mono lithic

 block of the stone which is 

petrified logs of 

deadly woods

all our breathes of thoughts

are robed away.

the gods and castes boom 

to blood thirsty demons

all red in tooth and claw.

the law making house

is crowded with

bills of lifeless voices   

laying along with length and breadth

of  Void and Void the

Biggest void

Where the “pestilence striken multitudes”

with hallucinated versions 

of motley godful costumes…

Awake ..Arise and

Peel all your languid doubts

for a vision of your

own judgment for

A change and for

Nothing but 

an Eventful Change!

—————————-ruthraa.