ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

நீடூழி நீடூழி வாழ்க இவன்!!!

 "ஈறு"கெட்ட எதிர்மறைப்

பெயரெச்சம் இவன்.

"மாறா மாறன்"

கவிதைகளின் மாறன்.

ஈறு தெரிய சிரிப்பவரின்

(கவிஞர் வண்ணதாசன்)

சிரிப்பில்

ஊறும் ஊறும்

கோடிக்கவிதை இன்பம்.

நீடூழி நீடூழி வாழ்க இவன்!!!

_______________________________

சொற்கீரன்

"ஈறு"கெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம் இவன்.
"மாறா மாறன்"
கவிதைகளின் மாறன்.
நீடூழி நீடூழி வாழ்க இவன்!!!
_______________________________
சொற்கீரன்

கல் மட்டும் அல்ல புல்லும்

 


"உத்தமபுத்திரன்"கள் போல்

கவிதைக்கவசம் 

அணிந்து கொண்ட 

இரட்டையர்கள் தான்.

இவர்கள்

வில்லன்களும் அல்ல.

கதாநாயகர்களும் அல்ல.

இருவருக்கும்

பராம்ப்டர் ஒருவரே தான்.

அது 

சொற்பிரளயம்.

சோற்சுவாசத்தின்

வண்ண வாசல்களின்

எந்த வாசல் வழியாகவும் வந்து

இந்த கற்ப்னைப்பிரபஞ்சத்தின்

அஞ்சறைப்பெட்டியைத்திறந்து

கனவு மசாலாக்களை

தெளித்து விடுவார்கள்.

அதில்

கல் மட்டும் அல்ல புல்லும் 

சு"வாசிக்கும்"

___________________________________________

சொற்கீரன்

மழை ஊசிகளை...

 வண்ணதாசன் அவர்கள்

எட்டிப்பார்த்த 

கண்ணாடி சன்னலில்

கவிதையாய்

துளிர்த்திருந்தார்

பழனி பாரதி.

வளையல் பூச்சிகள் கூட‌

வளையல் ஓசைகளை

க்ளுக் என்று 

காட்டியிருக்குமோ?

கவிதைக்கண்ணாடி

தூளாய் நொறுங்கி

கலைடோஸ் சித்திரங்களில்

மனம் நொறுங்கிய 

மழை ஊசிகளை

நனைய விட்டிருந்தது.

_________________________________

சொற்கீரன்.

சனி, 15 ஆகஸ்ட், 2026

மதம் என்றொரு...

 ஆயுள் கடத்தும் விஞ்ஞானிகள் 

   BIO HACKING..........



மறந்து போ

மரத்துப் போ

சுருக்கமாய்

மதம் என்றொரு அபினி

கண்டு கொண்டான் மனிதன்.

பண்டை சித்தர்கள்

மூலிகைகளில்

மருந்து களில்

போதையில்



Father of biohacking hints that highly-addictive drug could be the next longevity breakthrough

கவிஞர் வண்ணதாசன் அவர்கள் கேட்டு உருகிய உருமி இது

 "என்னதான் சொல்ல வருகிறது அக்குரல்....?"

________________________________________________


"என்னதான் சொல்ல வருகிறது அக்குரல்....?"

அந்த உருமியில்

இன்னும் சுருண்டு சுருண்டு

அலை ததும்பிக்கொண்டிருக்கிறார்

அந்த "கண்மணி ராசா" அவர்கள்!

எங்கள் கல்லிடைக்குறிச்சியின்

அந்த "வேம்படியம்மன்" கொடையின்

பந்தல் அடியின் வட்ட வட்ட சூரிய ஒளியின்

காசு மழையில் நனைத்து

அந்த உருமியோடு

சுருதி சேர்த்து நின்றிருக்கிறேன்.

அது இசையா?

இழைவா?

ஓங்காரங்களின் அந்த மகா ஓங்காரத்தை

உரித்துக்காட்ட‌

இமயப்பனி உருகி

அந்த சிவன் இன்னும்

கருதரித்து வரவில்லை.

அந்த உருமிக்குள் தான்

டி என் ஏ ..ஆர் என் ஏக்கள் எல்லாம்

சங்கிலி கோர்த்துக்கிடகின்றன.

எழுபத்தெட்டு மேள்கர்த்தாக்கள்

இடுப்பு வலி யெடுத்துக்கிடக்கட்டுமே

இந்த உருமியே

மூச்சுகளின் உருவம் எல்லாம் காட்டும் 

பேருருவம்.

________________________________________

சொற்கீரன்.


கவிஞர் வண்ணதாசன் அவர்கள் கேட்டு உருகிய உருமி இது





"பொரு விளங்கா"லட்டு.

 

Scientists solve 90-year-old mystery in quantum physics




 "பொரு விளங்கா"லட்டு போன்ற உருண்டை எங்கள் திருனெல்வேலிச் சீமையிலே ஒரு சுவையான "மிட்டாய்" இந்த குவாண்டம் அப்படித்தான் அதன் பொரு(ள்)விளங்காமலே கூட இனிக்கிறது திடுக்கிடும் சுவைகளுடன்.பொருள் விளங்கா அதன் சுவை மிக மிக அருமையானது.பாருங்கள் 90 வருடமாக புரியாமலே இருந்த புதிர் இப்போது தான் அவிழ்ந்து "தீர்வுகளை"க்காட்டுகிறது. அது என்ன? பாருங்கள் மேற்கண்ட அந்த லிங்கில்.(மிக்க நன்றியுடன்)...

எண்ணிக்கொண்டே...


எண்ணிக்கொண்டே

எண்பதாம் ஆண்டும்

வந்து விட்டோம்.

கனவும் ஏக்கமும் காட்டின‌

இன்னும் நூறு நூறு

மைல்க்கல் தூரமென்று.

துன்பம் இன்பம்

விரவிக்கிடந்தோம்.

ஆயினும் 

எப்போதும் அது

இனிமையே!

என்றும் அது

இனிமையே!

நம் சுதந்திரம்!

_______________________________

சொற்கீரன் 

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

காலப்பிரளயமாய்...

 

The Odyssey ending, explained


நெடுங்கதையா?

நெடிய நெட்டைப் பெருங்கன‌வா?

ஹோமர் விட்ட கொட்டாவியில்

பூதங்களும்

சிறகு முளைத்த மிருகங்களும்

கூந்தல் சர்ப்பங்களின்

மரணத்து மங்கைகளும்

ஏதோ ஒரு கனியைத்தின்று

தடம் மாறி தவிப்பவர்களும்

இன்னும் இன்னும்

போர்க்களத்தின்

கூரிய வாட்களையே

குடலும் வயிறுமாக காட்டி

ஏய்த்த பொய்க்குதிரைகளும்

அது துரோகமா?

அபகரித்தலின் வேட்டையா?

ரத்தம் 

ஆறாகி கடலாகி

எதையோ பலிகேட்டது.

காலத்தின் பசி..

தீனியாகவே

எங்கும் எங்கும் மக்கள்!

முடிவின் வாய்

இன்னொரு ஆரம்பத்தை

கவ்வியத்தாக‌

மாயப்பாம்புகள்

நெளிந்து ஓடுகின்றன?

...............

___________________________________________

சொற்கீரன்


ஓடிஸ்ஸி பாருங்கள்.

முடிவில்லாத 

நம் அரசியல் அனக்கொண்டாவின்

வயிற்றூள்ளும்

அந்த கூரிய பல்லின் முனையிலும்

அந்த முடிவு

ஆரம்பித்துக்கொண்டே இருக்கிறது

அந்த் சொட்டும் ரத்தம்

புஷ்பிக்கிறது

காலப்பிரளயமாய்...

______________________________________________________

சொற்கீரன்


"கல்லத்தி முடுக்கு"

 

"கல்லத்தி முடுக்கு"

----------------- ------------------------------------------------


திருநெல்வேலியின் 

மூலை முடுக்குகள் கூட 

எனக்கு 

வரலாற்றுத் திருப்பங்கள்.

பள்ளிக்கூட கோடைக்கால 

விடுமுறைகளின் 

வசந்த மாளிகைகளாக 

அந்த திலி-டவுணின் சந்து பொந்துகள் 

உல்லாச வெளிச்சத்தை 

சொக்கப்பனையாக்கி நிற்கும்.

பாப்புலர் டாக்கீஸின் 

ஒலிச்சித்திரங்கள் 

கொலுசு கட்டி ஆடும்.

"வீடு நோக்கி ஒடி வந்த என்னையே ..."

என்ற அந்த சிவாஜியின் பாட்டு 

கன்னம் அதிர இசைக்கும் உணர்சசியை 

அங்கு படரவிடும்.

அதிலும் அந்த 

"கல்லத்தி முடுக்கு"

முடுக்கிவிடும் விசையை 

மறக்க முடியாது.

பெயர் சொல்லும் அந்த‌

கல் அத்தி மரம்

எங்கே நிற்கிறது என்று

தெரியவில்லை.

மரத்தையே கல்லாக போகுமாறு

எந்த முனிவன் சபித்தானோ?

பாவங்களும் சாபங்களும் தானே

நம் கடவுள் பிம்பங்கள்!

அந்த "குறுந்தெருவு"முனையிலிருந்து 

என் நடையைத் துவக்குவேன்.

நெல்லை நகரத்தின் 

விலாப்புறத்தை உரசிக்கொண்டே 

ஒரு 

கிச்சு கிச்சு தாம்பாளம் 

கீயாளித்தாம்பாளம் 

விளையாடிக்கொண்டே 

போவது போல் தான் இருக்கும் .

நடந்து கொண்டே 

மணித்திரமூர்த்தி  உயர்நிலைப்பள்ளியைத் 

தழுவிக்கொண்டு நிற்கும் 

தூங்குமூஞ்சி மரத்து பூஞ்சிறகு நிழல்களின் 

மகரந்தப்பொழிவில் 

கொஞ்சம் நனைந்து பார்க்கச்சொல்லும்.

கரிப்புகையை மூச்சு விட்டுக்கொண்டே 

செல்லும் 

மேக்கே போகும் ரயில் ஒன்று 

திலி ஜங்க்ஷனிலிருந்து 

தம் பிடித்து குப் குப்பென்று 

ஓடுவது 

ஒருவன் சட்டையின் பின் புறத்தை 

இன்னொருவன்  பிடித்துக்கொண்டு ஓடும் 

குறும்புக்கார பயல்களின் 

ரயில் விளையாட்டை 

கண் முன் நிறுத்தும்.

அந்த "அம்பதுகள் "

இந்த 

வைரப்பூங்கா கால ஓட்டத்தின் 

"ஸ்பேஸ் டிராவல்" புகை விளையாட்டை 

நடத்தித்தராதா?

---------------------------------------------------------------------------------------------

சொற்கீரன்.

சனி, 8 ஆகஸ்ட், 2026

"மகிழ்ச்சி ஜீவா"

"மகிழ்ச்சி ஜீவா
வணங்குகிறேன்"
. . . . . . . . .
திரு வண்ணதாசன் அவர்களே!
இந்த ஓவியத்தில்
சிரித்துக்கொண்டே
கண்மூடி
ஆனால் தூக்கத்தொடு
கண்ணாமூச்சியாடி
கனவு காண்பதைக்கூட‌
ஒவ்வொரு எழுத்தாக‌
நிறுத்தற்குறிகள்
அணிவகுக்கும்
வியப்புக்குறியாக‌
அந்த ஆரியன் காவு
குகைவழி நிழல் தூவல்களாக‌
கவிதையாக்கி
பரிமாறியிருக்கிறீர்கள்.
நன்று நன்று,,நன்றி
______________________________________

சொற்கீரன். 

நிழல் தூவல்களாக‌

 "மகிழ்ச்சி ஜீவா

வணங்குகிறேன்"

. . . . . . . . . 

திரு வண்ணதாசன் அவர்களே!

இந்த ஓவியத்தில்

சிரித்துக்கொண்டே

கண்மூடி 

ஆனால் தூக்கத்தொடு 

கண்ணாமூச்சியாடி

கனவு காண்பதைக்கூட‌

ஒவ்வொரு எழுத்தாக‌

நிறுத்தற்குறிகள்

அணிவகுக்கும்

வியப்புக்குறியாக‌

அந்த ஆரியன் காவு

குகைவழி நிழல் தூவல்களாக‌

கவிதையாக்கி

பரிமாறியிருக்கிறீர்கள்.

நன்று நன்று,,நன்றி

‍______________________________________

சொற்கீரன்.


ஒரு ரோஜாப்பூ

 

நவீனத்துவம் கவிதையை

கழுவேற்றும் 

கொடுமையைப்பாருங்கள்.

காதலி 

ஐ லவ் யூ

சொல்லிவிட்டாளாம்.

காதலன் 

வானத்துக்கும் பூமிக்கும்

குதிக்கிறானாம்

எப்படியெல்லாம்?

இப்படியெல்லாம் தான்

யாரையாவது நாலு சாத்து சாத்தி

அப்புறம்

அய்யா தெரியாதய்யா

மன்னிச்சிக்குங்க என்று சொல்லி

புன்சிரிப்போடு 

அவருக்கு பிரியாணி வாங்கிக்

கொடுக்கணும் என்று.

அது யாராய் இருக்கும்.

ஏன் காதலியின் அப்பாவாகக்கூட‌

அது இருக்கலாம்.

தக் லைஃப் என்று

ஒரு வக்கிரத்தின் மென்படலத்தை

அப்படியே பூசி

அதில் ஒரு ரோஜாப்பூ

பார்க்கவேண்டுமாம்.

நாம் திரைப்படங்களில்

பார்த்த சேதுக்களின்

வாழ்க்கையிலும் 

இப்படி ஓடிய சோக இழைகளைப்

பார்த்திருக்கிறோம்.

இது நவீனத்துவத்து இலக்கியத்து

ராட்சசமா?

இல்லை சர்ரீயலிசச் சவ்வுப் படலமா?

________________________________________________

சொற்கீரன்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

ALIENS IN OUR WATER WORLD ?

 


Snaiad built an entire ecosystem with no Earthlike animals






BOMBARDED BLOOMS OF ALIENS IN OUR WATER WORLD ?........EPS

இரண்டு புதிர்களை...

 



விண்வெளி எனும் பிரபஞ்சம்

இரண்டு புதிர்களை

தன்னுள் வைத்துக்கொண்டு

மனித மூளையையே

சலவை சலவை செய்து

மிக மிக நுட்பம் வாய்ந்த‌

ஒரு மூளையையே தனதாக்கிக்கொண்டு

இங்கு

எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறது.

அவை இந்த இரண்டும் தான்.


(1) கருந்துளை ...ப்ளாக் ஹோல்

(2) இருட்பிண்டம் ... டார்க் மேட்டர்


கட்டுரைக்குள் சென்று தெளிவுறுக!


சொற்கீரன்


The two biggest mysteries in the universe may be linked | Watch

"செயற்கை மூளையின் சேட்டைகளோ?"



நூறு அடிக்கு கீழே புதைந்த ஒரு

நவீன கலைநேர்த்தியுடன் ஒரு மாளிகையாக

கோவில்?!!!

நம்ப முடிகிறதா?

காதில் பூ சுற்றுவது போல் தான் இருக்கிறது

ஆனால் 

சாதிக்கிறார்களே...

"ந‌ம் பூமிக்கு காலப்பயணம் செய்தவர்களின் செயல்பாடுகள் இவையாம்!"

ட்ரில்லியன் கணக்கில் உள்ள விண்மீன்களின் கொத்து கொத்து புலங்களிலிருந்து

வரும் இவை என்கின்றனர்"

இது ஃபிக்ஷனா? உண்மையா?

ஒன்று செய்யுங்கள்

நம் மூளைக்குள்ளேயே செயற்கை மூளைகள் உருவாகி அவை செய்யும் 

சேட்டைகளோ இவை?"


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________இபியெஸ்


They found a secret temple 100 feet underground - then time travel came about | Watch

தாமிரவருணி



கல்லிடைக்குறிச்சி

நீ

வெறும் ஊர் அல்ல.

தாமிரபரணி எனும்

ஒரு தொப்பூள்கொடி

இந்த ஊர் எனும் குழந்தையை

சுற்றிப் பிணைந்து கொண்டிருக்கிறது.

அது கடலில் சங்கமிக்கும் போது

நக்கீரனின் திருமுருகாற்றுப்படை

அங்கு அலையடிக்கிறது.

அந்த வரிகளும் சொற்களும் 

வைரங்களாய் உருண்டு உருண்டு வந்து

கூழாங்கற்களாய் கூவி கூவி 

ஒலித்து எங்களையெல்லாம்

அழைக்கிறது.

பெரும் பெரும் பேராறுகள்

ஓடுகின்ற இந்த உலகத்தில்

நீ ஒரு சிற்றோடை தான்.

ஆனாலும் நீ

எங்களுக்கு ஒரு பளிங்கு வார்ப்பு.

பொருநை மலையடுக்குகளிலிருந்து

புறப்படுகிறாய் நீ

இங்கே பச்சை வண்ணத்தில்

இந்த மண்ணை வளப்படுத்துகிறாய்.

எங்கள் ஊர் உழவர்களுக்கு

எங்கள் ஊர் உயிர்ப் பசைகளுக்கு

ஒரு பயிரோவியம் தீட்டி

ஒரு உயிரோவியம் படைக்கின்றாய்.

கல்லிடைக்குறிச்சியே

வரலாற்றுப்படுகையாக 

உலகின் தமிழ் ஒளியை

உலகம் முழுவதும் பாய்ச்சுகிறாய்.

தமிழை தமிழே வந்து ஆற்றுப்படுத்தி

எங்களுக்கு

வியப்பு கூட்டி

களிப்பு பெருக்கி

ஒவ்வொரு வீட்டு வாசலையும்

கூட்டிப்பெருக்கி

தமிழைக் கோலம்போட்டு

செல்கிறது

எங்கள் பொருநை எனும் 

தாமிரபரணி!

நக்கீரன் உருட்டி உருட்டி

காண்பிக்கிறான் அந்த‌

தமிழாற்றுக் கலைடோஸ் கோப்பு எனும்

திருமுருகாற்றுப்படையை!

அந்த தமிழ் வண்ணக்குழம்பு காட்டும்

காட்சிகள் 

உலகின் மூலைகளில் எல்லாம்

அந்த தூசி துரும்புகளில் எல்லாம்

ஒவியம் காட்டுவதே

எங்கள் கல்லிடைக்குறிச்சியும்

தாமிரவருணி ஆறும்!

_________________________________________________

சொற்கீரன்



 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

படுத்து உறங்கும்...

 

பாசிச பாயாசங்கள்..

ஓட்டுகளின் 

ஓட்டைகள்...

தோலுரியும்

ஜனநாயக 

சர்வாதிகாரங்கள்...

காதலின் 

காமக்கணக்குகள்...

எதுகை மோனைகளின்

கட முடா உடைசல்களில்

முன் நவீனத்துவ‌

பின் நவீனத்துவங்கள்...

ஆழ்நிலைத் தியானங்களுக்குள்ளும்

கேட்கின்ற‌

கொல்லுலைக்கூட

டிங்கரிங் சத்தங்கள்....

கோவில்களின்

பளிங்குக்கட்டடங்களில்

எழுந்த‌

நவீன கட்டணக்கழிப்பறைகள்...

தெய்வங்களின் 

ராட்ச குணங்கள்...

ராமன்களின் 

முதுகுக்குப்பின்னே

ராவணன்கள்...

ஆதாம் ஏவாளுக்கு

எதிர் எதிராய்

உட்கார்ந்திருக்கும்

தேவன்களின் கையில்

சுற்றிக்கொண்டிருக்கும்

அந்த பாம்புகளும்

பழங்களும்...

தேர்தல் வாக்குறுதிகளும்

கஸ்டடியின் மரணங்களும்...

நம் வாழ்க்கை

அழகாய் ஜோடிக்கப்பட்ட‌

பூத்தேர்களில்

தாரை தப்பட்டைகளுடனும்

பாஞ்சஜன்ய முழக்கங்களுடனும்...

எல்லா சொற்களுக்கும்

எதிர் சொற்கள் எழுதுகின்ற‌

நம் இலக்கணப்பாடப்

புத்தகங்களுக்கு

இடையில்

சுகமாய் படுத்து உறங்கும்

மயில் தோகைப் பிஞ்சுகளும்...

____________________________________________________

சொற்கீரன்




இருப்பேன்.

 


எவ்வளவு வெயிலோ

அவ்வளவு நிழல்!

எப்படி?

அப்படியானால் 

வெயிற்கேற்ற நிழலுண்டுதானே?

இன்பம் அல்லது துன்பத்துக்கேற்ற‌

இன்பம் அல்லது துன்பம் உண்டு தானே.

ஒரு கவிதையைப்போல‌

இன்னொரு கவிதை உண்டா?

காகிதமும் பேனாவும்

கொஞ்சம் கசங்கிய சிந்தனையும் 

போதும்

கவிதை பிரசவம் ஆகிவிட.

அது வலியா?

வலி தீரலா?

சுமையா? தீர்வா?

கவிதைக்குள் கோவிலும் உண்டு.

சாத்தானின் சாப்பாட்டுக்கூடமும் உண்டு.

எப்படியும்

மனிதனுக்குள்

மனிதனுக்கேற்ற‌

இன்னொரு மனிதன் உண்டு.

அந்த கோல்டன் ஈக்குவேஷனை

நிழல் பதிக்கும்

நிழற்பாடுகளை

நாம் நம் மடியில் ஒரு

செல்லம் கொஞ்சம்

நம் மூன்றாவது மனிதனாய்

இருத்திக்கொள்வோம்.

எல்லைகளையெல்லாம் 

நொறுக்கிக்கொண்டு விடைக்கும்

பிரபஞ்சத்தின்

வேர்களின் கிளைகளின்

அந்த போன்சாய் "குட்டி மரத்தை"

வளர்த்துக்கொண்டு

வெட்டிக்கொண்டு

ஒரு மாயத்தின் பொழிப்புரையை

சொல்லிக்கொண்டே

இருப்போம்...இல்லை இல்லை

இருப்பேன்.

______________________________________________‍

சொற்கீரன்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

கந்தலும் கிழிசலுமாய்..

 கந்தலும் கிழிசலுமாய்

வந்தவனே கடவுள்?

தாறுமாறாய் இன்னும் 

அதை கிழிப்பதே

மதங்கள்!

__________________________________

சொற்கீரன்.



உன்னால் என்ன செய்து விட முடியும்?

 

உன்னால் என்ன செய்து

விட முடியும்?

உன்னால் முடியும் தம்பி

என்று

ஜிகினாப்பட்டங்கள்

கச்சா பிலிமின் வானத்தில்

எத்தனை

மிதக்க விட்டோம்?

அன்று இமயத்தில் தமிழ்க்கொடி

என்று

முழங்கித்தீர்த்தோம்.

தமிழின் முதுகெலும்பு இன்று

முறிந்து கிடக்கிறது.

குவிந்து கிடக்கும் இந்த‌

ஈசல் சிறகுகளிலிருந்து

ஏதாவது ஒரு "மின்னல் பூச்சி"

விண்ணில் ஏறி

நம் விடியல் காட்டி விடாதா?

________________________________________

சொற்கீரன்



புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்

 


புறவாசல் தரையில் முருங்கைப்பூக்கள்

_____________________________________________


(01.08.2026 ல் திரு வண்ணத்தாசன் அவர்கள்

முகநூலில் எழுதிய கவிதை)



மண் இடம் மாற்றிக்கொண்ட

விண்ணில்

விடிவெள்ளிகள்.

கை நிறைய மனம் நிறைய‌

அள்ளிக்கொண்டதில்

விரல் இடுக்குகளில்

குற்றாலப்பிழியல்கள்.

குளித்துவிட்டு தலை துவட்டும்

அந்த குற்றாலத்துண்டு

இழைச்சன்னல்கள் தோறும்

சூரியக்கண்களின்

ஏழுவர்ணப் பார்வைகள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________

சொற்கீரன்