ஞாயிறு, 31 டிசம்பர், 2023

"பெயரிடப்படாதது"



புத்தாண்டு தான்.

வாழ்த்துக்கள் தான்.

ஆனாலும்

பிறக்கவும் இல்லை.

பெயர் எதுவும்

வைக்கவும் இல்லை.

வெளிச்சம் என்று

பட்டன் அமுக்கினால்

எங்கும் இருட்டு

எதிலும்  இருட்டு.

விழித்து உணரும்

விழிகளும் இல்லை.

வழிகளும் இல்லை.

2024 என்று

இனி எண்ணிக்கை 

தொடரும்

இயற்பியல் கணிதம்

ஏதும் இல்லை.

அதோ மந்திரங்கள்

கேட்கின்றனவா?

ப்ரசன்னம் சொல்லும்

சோழிகளும் அதோ 

ஒரு கும்மிருட்டில்

குலுங்கி குலுங்கி

விழுகின்றனவே !

-----------------------------------------

ருத்ரா.

















திங்கள், 25 டிசம்பர், 2023

எத்தனை பாஷ்யங்கள்?

எத்தனை வியாக்ரணங்கள்?

அத்தனையும் படி.

பாராயணம் செய்.

சரி சாமி..

நானும் ஒங்களோட

பாடசாலைக்கு

வந்திடறேன்.







..



ஞாயிறு, 24 டிசம்பர், 2023

காத்திருக்கிறார்கள்.

 


வானம் 

தன்னைக் கிழித்து

வாசல் திறந்து

கட்டளை தந்தது.

இவர்களோ 

பொன்னைத் தேடி

சிதறி ஓடினார்கள்.

உருண்டு திரண்ட 

தூய்மை அன்பு

மாட்டுக் கொட்டிலில்

மலர்ந்து சிரித்தது.

மனிதம் பூத்து

புன்னகை புதிதாய்

மொழி பெயர்த்தது. 

அப்போதும் இவர்களுக்கு

அர்த்தம் புரியவில்லை. 

முள்முடி சூட்டி

சிலுவை ஏற்றி

மார்பிலும் 

ஆணிகள் அடித்து.....

வெறி இன்னும்

தணியவில்லை.

"மனித நேயமா

பேசுகிறாய்?" என

ஆணியும் சுத்தியலுமாய்

அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் என்ற பெயரில்

மானிடமே இங்கு

வலுத்திடுமோ என்று

ஏவுகணைகளால்

இந்த உலகை நிரப்பி

கடவுளைக்கூட

தவிடு பொடியாக்க

காத்திருக்கிறார்கள்

இவர்கள் 

காத்திருக்கிறார்கள்.

---------------------------------------

ஊழிமுதல்வன்





























செவ்வாய், 12 டிசம்பர், 2023

தூங்குமூஞ்சி மரங்கள்.

 

யார் சொன்னது?

அந்த தூங்குமூஞ்சி மரங்கள்

தூங்கிக்கொண்டிருக்கின்றன

என்று.

அந்த சாலைத்தூசிகளின்

குளியலில்

இரைச்சல்கள் சோப்பு தேய்க்க

நகர்வுகளும் நிகழ்வுகளும்

நிழல்களாய் 

பல்லக்கு தூக்க 

ஏதோ ஒரு வரலாறு

எச்சமிட்டுக்கொண்டே செல்கிறது.

மவுனத்தின் இந்த

தூக்குமரங்களிலா உங்களுக்கு

தஞ்சம் என்று

இந்த தூங்குமூஞ்சி மரங்கள்

கூக்குரலிடுவது கேட்கவில்லையா?

------------------------------------------------------

ருத்ரா.






திங்கள், 11 டிசம்பர், 2023

பூ மாரி..

 

ஏதோ அந்த ஒன்றிரண்டு

தீர்ப்புக்களுக்காக

வானத்தில்

மேலும் கீழுமாக குதித்தீர்களே.

மொத்தப் புத்தகத்தையும்

எங்களிடம் கொடுத்துவிட்டார்கள்.

அந்த காகிதங்களையெல்லாம்

கிழித்து சுக்கல் சுக்கலாய்

பூ மாரி 

பொழிந்துகொண்டிருக்கிறார்கள்

வானத்திலிருநது தேவர்கள்....

அப்படி யென்று இனி

புராணங்கள் 

சொல்லிக்கொண்டிருக்கும்....

------------------------------------------------------

ருத்ரா.














ரஜினிக்கு...

ரஜினிக்கு அன்பான வாழ்த்துக்கள்.!

-----------------------------------------------------------


12 12...2023

இவை மேஜிக் நம்பர்கள் அல்லவா!

எங்கள் மைல்கற்களின்  நடுவே

எப்போதாவது ஒரு திருப்புமுனையை

காட்டுவதற்கு

இந்த தரையிலும்

கொஞ்சம் திரை விலக்குவீர்கள்

என்று காத்து தான் கிடந்தோம்.

ஆனாலும் அன்று ஒரு நாள்

எங்களுக்கு பகீர் என்று ஆனது.



புதன், 6 டிசம்பர், 2023

கழுவி கழுவி...



சாதிகளின்

சாக்கடையைக் கடைந்து

நாற்காலிகளை செய்து கொள்வதே

நாசூக்காக இங்கே

"சோசியல் இஞ்சினீயரிங்" எனப்படுகிறது.

வர்ண வர்ண கசாப்புக்கத்திகளுக்கு

தலையாட்டிக்கொண்டு

தலை கொடுக்கவரும்

ஆடுகள் கோடிக்கணக்கில்

இந்த தேர்தல் சந்தையில்

கிடைக்கின்றன.

பாவம் ராமன்

அவன் கோதண்டம் 

இப்படி கசாப்புக் கத்தியானதில்

பீடித்த "பிரம்ம ஹத்தி"யை

கழுவி கழுவி

எங்கள் "ராமேசுவரங்களும்"

அழுக்காகிப் போயின.

------------------------------------------------

ருத்ரா.



செவ்வாய், 5 டிசம்பர், 2023

குடல்



சிந்துபாத் அந்தக் கிழவனை

தோளில் சுமந்து திரிவது போல்

எத்தனை அவதாரங்களிலும்

புராணங்களிலும்

உன்னைச் சுமந்து கொண்டிருக்கிறோம்.

அப்பறம் தான் தெரிந்தது

நாங்கள் சுமந்து கொண்டிருந்தது

எங்கள் 

அடிமைத்தனத்தையும்

முட்டாள்தனத்தையும்  என்று.

கடவுளே

கனத்த விலங்குகளாய்

எங்கள் மீது அழுத்திக்கொண்டிருக்க

உனக்குமா தேவை

அந்த பூணூல்?

குடல் கிழிக்க வந்த அந்த

சிங்க அவதாரத்தை உற்றுப்பாருங்கள்.

கையிலும் மார்பிலும்

சுற்றிக்கொண்டு கிடப்பது

குடலா? பூணூலா?

---------------------------------------------------

ருத்ரா.



திங்கள், 4 டிசம்பர், 2023

இலவச ராமன்.

 


உனக்கு ஓட்டுப் போடலேனா

அவர்களை என்னைப் 

பார்க்க விடாமல்

கதவைப் பூட்டிக்கொள்வாயா?

இப்படித் தான்

நான் எல்லோராலும் பார்வையால் கூட

தீட்டுப்பட்டு விடக்கூடாது என்று

வர்ண வர்ணமாய்

பூட்டு சாவிகளை 

வைத்துக் கொண்டிருக்கிறாய்.

அயோத்தி கோயிலில்

ஒரு சீற்றம் கேட்டது.

சிலை இல்லை.

வில் வளைத்து அம்பு எய்யும்

ஒலியும் கேட்டது.

இது ராவணனுக்கு அல்ல.

இலக்கிய ராமனை

இலவச ராமன் ஆக்கிய

அந்த கொச்சையான

வியாபாரிகளை நோக்கிய

அம்பு அது.

-------------------------------------------------------------

ருத்ரா.
















ஞாயிறு, 3 டிசம்பர், 2023

அஞ்சு மாநிலம்.

 அஞ்சு மாநிலம்


சனாதன "சாமி"க்கு

தேரோட்டமும் கும்பாபிஷேகமும்

நடந்தால் போதும்.

அடியில் நசுங்கி கூழாகும்

சனங்களைப் பற்றி

இங்கு கவலை இல்லை.

வெற்றி

அஞ்சுக்கு ஒன்று போதும்

என்று 

பட்டாசு வெடித்துக் கொள்வதில்

நம் இருட்டு மட்டுமே

ஓசை கிளப்புகிறது.

--------------------------------------------

ருத்ரா.







வெள்ளி, 1 டிசம்பர், 2023

பருத்திவீரன் 2

 பருத்தி வீரன் 2

-------------------------------

சொல்வண்ணன்.



என்ன இது

அந்த படத்தின் 

அடுத்த தொடரா?

அதில் நடித்ததது

கார்த்தியா? அமீரா?

அப்போது நடித்தவர்

அப்படியா!

அப்படியெல்லாம்

நான் நடிக்கவில்லை என்று

இப்போது நடிக்கிறாரா?

அமீரா?

யார் அவர் என்ற தொனியில்

இவர் மௌனம் காப்பதால் தான்

இப்படி கேட்க வேண்டியிருக்கிறது.