செவ்வாய், 30 ஜூலை, 2019

நண்பனே...நண்பனே...நண்பனே..

நண்பனே...நண்பனே...நண்பனே..
==========================================ருத்ரா
மேலே கண்ட வரிகளில்
"மூச்சிறைத்து மீண்டும் மூச்சிறைத்து "
வரும் இந்த இசைவரிகளில்
எனக்கு தெரிவது
இந்திய மக்கள் இயக்கத்தின்
அந்த புயல் மூச்சுகளின்
இ.சி.ஜி வரிகள் தான்.
ஆம்! நண்பனே!
உன் நுரையீரல் இடுக்குகளில்
காஷ்மீரிலிருந்து
கன்யாமுகுமரி வரை
எதிரொலிக்கிறது.
பாட்டாளிகளின் வேர்வை
சிந்து கங்கை மற்றும்
நம் அருகே சலசலக்கும்
சிந்து பூந்துறை வரை
துளித்துளியாய் பெருகுகிறது.
தன் வேர்வையையே பருகி
தாகம் தீர்த்து
தன் பசியிலேயே
அடுப்பு வைத்து உலை மூட்டிக்கொள்ளும்
உழைக்கும் வர்க்கத்தின்
உன்னதக்குரல்
அணுக்கதிர் விரிக்கிறது.
நண்பனே...நண்பனே...நண்பனே..
அது கனவு இல்லை.
ஆம்..அது கனல்!
இந்திய உறக்கத்தின்
மதம் கனத்த இமை மூட்டங்களை
உரித்து எழுப்பும்
உயிர் வெப்பம் அது.
உன் பயணம் வெற்றி பெற‌
எப்போதும் என் வாழ்த்துக்கள்!
அன்புடன்
ருத்ரா இ.பரமசிவன்
(என் கல்லூரி நண்பன் அன்புக்குரிய திரு சிவசங்கரசுப்பிரமணியன் பற்றி 2 வருடங்களுக்கு முன் எழுதிய கவிதை இது..1960 களில் கோவை பெரியநாயக்கன் பாளையம் கல்லூரியில் நாங்கள் ஒன்றாய் படித்தோம் சமுதாயத்தை வாழ்க்கையோடு பிணைக்கும்போது அந்த பட்டுப்பூச்சிக்கனவுகள் பட்டுப்போய் விடுகின்றன. ஆனால் அவன் அந்த சுடர் அணையாமல் காக்கும் சுடரேந்தியாய் இன்றும் வலம் வருவதைக்கண்ட பெருமிதத்தில் உதித்த கவிதை இது.)
===========================================================ருத்ரா 

கள்ளிக்காட்டில் ஒரு கனக சபை.


24 மார்., 2014, 
SDC12156.JPG


கள்ளிக்காட்டில் ஒரு கனக சபை.
=========================================== =========ருத்ரா இ.பரமசிவன்

எட்டு கோணலில் நின்ற‌
எண் குணத்தானே இங்கு
இது என்ன முள்ளின் கூத்து?
கள்ளிக்காட்டில் ஒரு கனக சபையா?
இங்கே எப்படி என்றேன்?

"அரிஸோனா கள்ளிச்சபையும்
எனக்கு ஒரு சிதம்பரம் தான்.
ரகசியம் ஏதுமில்லை.
ஐந்து பூதத்துக்கும்
ஐந்து சபைகள் வைத்தேன்.
ஆறாம் பூதம் ஒன்று
இங்கு தான் உண்டு கண்டேன்.
கணினி பூதம் அது
அதற்கோர் சபையும் செய்தேன்.
கணினியில் என் "கியூ பிட்ஸ்" தான்
ஊர்த்துவ தாண்டவமாகும்.
முள்ளிலே போட்ட முடிச்சு
மலரிலே அவிழ்ந்து போகும்.
எத்தனை கைகள் பார்.
எத்தனை கால்கள் பார்.
அவிர்சடை விரிந்ததென்றால்
ஆரக்கிள் என்று சொல்வார்.
உடுக்கைகள் ஒலித்து விட்டால்
யூனிக்ஸ் சிஸ்டம் தெரியும்.
அண்டமே அதிரவைக்கும்
அண்ட்ராய்டு என்னுள் உண்டு
பிக்பேங்க் வெடிக்கும் முன்னே
திரியினை பற்ற வைக்கும்
திரி சூலம் என்னிடம் தான்.
அமெரிக்கர் தெரிந்து கொண்டார்
அதனால் இங்கு வந்தேன்.
ஹிக்ஸ் போஸான் சூத்திரங்கள்
தீச்சுடர் ஏந்துமென் கையில்
தெரிந்ததென சொல்லுகின்றார்.
சாம்பலில் சிறகடிக்கும்
பறவையூர் ஃபீனிக்ஸ் கூட‌
திருநீறு தத்துவம் தான்
தெளிவுகொள் நன்றே இன்று."

===================================================


                                                 ருத்ரா இ.பரமசிவன்

எதைப்பற்றி...



எதைப்பற்றி...
=======================================ருத்ரா

எதைப் பற்றி கவலைப்படுவது?
அல்லது எழுதுவது?
இதோ மூச்சிறைக்கும் ஏக்கவிழுதுகளின்
இறகுப்பேனாவில்
கிறுக்கத்துவங்கினேன்.
இளம்பிராயத்தின் இடுப்பு அரைஞாண் கயிறுகள்
திடீரென்று ஒரு நாள்
மின்னல் கயிறுகள் ஆனபோது...
அந்த பூச்சி மயிர்களின்
மீசை வரிசை
திடீரென்று
ஏதோ ஒரு வானத்தின்
ஏதோ ஒரு விண்மீன் கண்ணடிப்புகளில்
பிரளய அலைகளாய்
புரட்டி போடும்போது...
வெறும் கூழ்ப்பூச்சியும் சிறகுமாய்
இருப்பதை
"பட்டாம்பூச்சியாய்" ஆக்கி
தன் பகல்கனவுகளின்
ஹார்மோன் எழுச்சிகளை
அதில் "பிக்காஸோ" ஓவியக்கூடமாக்கி
பிரமை தட்டிப்போய் கிடப்பது...
எதற்கு
இப்படி வார்த்தை ஜாலங்களைக்கொண்டு
என்னைச்சுற்றி
ஒரு "கோக்கூன்"கட்டிக்கொண்டு...
சட்டென்று
புதிய சிறகுகளைக்கொண்டே
பழைய சிறகுகளை முறித்துத் தள்ளிவிட்டு
ஒரே சொல்லில்
உயிரோடு எனக்கு
பளிங்கு சதையில் பொன் குழம்பு ரத்தத்தில்
கல்லறை கட்டிக்கொண்டேன்
சாக அல்ல‌
சாகாமல் சாவதை
ஒத்திகை பார்க்க..
காதல் என்று....
============================================
22.12.2016

திங்கள், 29 ஜூலை, 2019

சந்திராயன் 2

சந்திராயன் 2
===============================================ருத்ரா

நிலவே நிலவே ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா...

நிலவே நிலவே அங்கே நில்
நீ ஓடி வரவேண்டாம்
நான் அங்கே வந்திடுவேன்.
உன்னைச்சுற்றி நான் வருவேன்.
என்னைச்சுற்றி நீ வருவாய்.

உன்னைச்சூற்றி நான் ஓடி
நாய்ச்சோறு  விளையாட்டை
எத்தனை நாள் ஆடுவது?
எங்களைச்சுற்றி நீ ஓடும்
அன்பின் ஆட்டம் மறவோமே.
உன்னில் நீர் இருக்குமா?
உனக்கு நிலம் இருக்குமா?
அதற்கும் அங்கே பட்டா இருக்குமா?
இல்லை
இங்கே தான் நாங்கள்
பட்டா எல்லாம் வாங்கணுமா?
ஐயோ சாமி!
நிலவும் வேண்டாம் ஒண்ணும் வேன்டாம்
ஆளை விடு சாமி.விடு சாமி.
வெண்ணிலவே
வெண்ணிலவே
என்று
மனம் குளிரப்பாடுவோம்.
"சந்திராயன்"என்று
இன்று பெயர் சூட்டி
சரித்திரம் எழுதப்போகின்றீர்.
வெள்ளை நிலாவுக்குள்ளும்
நான்கு வர்ணம் உண்டென்று
நாளை ஒரு புராணம்
வானில் எழுதி சட்டமிட்டு
உலா வரத்துவங்கி விட்டால்
என் செய்வோம்? என் செய்வோம்?
ஐயகோ நாங்கள் என் செய்வோம்?
ஏழை வீட்டு நிலா முற்றம்
ரத்தம் கசியவா
விஞ்ஞானத்தில்
இத்தனை சத்தம்?

========================================================


ஞாயிறு, 28 ஜூலை, 2019

சீற்றத்தின் ஒரு ஆற்றுப்படை.

சீற்றத்தின் ஒரு ஆற்றுப்படை.
==========================================================ருத்ரா

இளைஞனே
ஒரு சொல் கேளாய்!
கோடி கோடி இளைஞர்கள் வெள்ளத்தில்
அந்த அலைக்கூட்டத்தில்
நீயும் ஒரு அலை.
நீ எழுதப்போகும் சரித்திரம்
இந்த அலைகளில்
எழுகின்றது.
படர்கின்றது.
இந்த தேசம் உன்னை நம்பிக்கிடக்கிறது.
இது வரை மூவர்ணக்கொடியை
ஏற்றி
இறக்கி
இவர்கள் என்னத்தைக்கண்டார்கள்?
இதில் இப்போது
நான்குவர்ணம் காட்டுகிறார்கள்.
நான்கு வேதம் சொல்கிறார்கள்.
பிறப்பால் பேதம் வளர்த்து
ஆட்சி பீடம் கட்டுகிறார்கள்
முன்று சதவீதம்
மற்ற தொண்ணூற்றேழு சதவீதத்தின்
முதுகில் ஏறி சவாரி செய்யவே
சாதி மத வெறியின் வேலிகளை
வலிமைப்படுத்துகிறார்கள்.
எதிர்க்கட்சிகள்
நெல்லிக்காய் மூட்டையாய்
சிதறிக்கிடப்பதே
இவர்கள் சதியாலும் சாணக்கியத்தாலுமே.தான்..
அன்பார்ந்த இளைஞர்களே
கம்பியூட்டரின் புயல்கள் நீங்கள்.
உங்கள் அல்காரிதங்களையே
அவர்கள் பஞ்சாங்கம் ஆக்கிக்கொண்டார்கள்.
கோடி கோடி ரூபாய்களை
தீவனமாக்கி
இவர்கள் வளர்த்த‌
பகாசுர கார்ப்பரேட்டுகளே
பத்தாம்பசலிக்கோட்பாடுகளையும்
சூடாக வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது..
"இந்து ராஷ்ட்ரா"வே
இந்தியாவை விழுங்கக்காத்திருக்கிறது.
ஓ!இளைஞர்களின் புயற்படையே!
"எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல்
இவிஎம் களில் மோசடிக்கு வழியே இல்லை
என்று
பரப்பல் யாகம் மும்முரமாய் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நெருப்பில்லாமல் புகையில்லை.
இ வி எம்கள் வாந்தியெடுக்கும் முன்
அந்த ஓங்கரிப்பின் குரலில்
கருத்துக்கணிப்பு
எப்படி துல்லியமானதாக இருந்தது?
ராணுவத்தில் நடத்தும் துல்லியத்தாக்குதலை
மக்களின் ஜனநாயக‌த்தின் மீதே
ஆபரேஷன் தாமரை ஆக்கிவிட்டார்களா?
மக்களாட்சியும் சிதைந்து போனதோ?
இளைஞர்களின்
சீற்றப்படையே
இனி நீங்கள் எழுதுங்கள் ஒரு ஆற்றுப்படை.
இந்த போலி ஜனநாயகவாதிகள்
புறமுதுகிட்டு ஓடட்டும்.
மின்னல் விழுதுகாளாய் தொங்குகின்ற‌
உங்கள் கேள்விகளே போதும்
அதில் வானமே தீப்பற்றி எரியும்!
அந்த வேள்வியில்
 அவர்கள் மந்திரவேதமும் தந்திரவாதமும்
தறிகெட்டு ஓட்டட்டும்.
கும்பமேளாக்களின் மாய்மாலங்கள்
குலைந்து சிதறட்டும்.
வருகின்ற ஆகஸ்டு பதினைந்து
நமது புதிய சுதந்திரம்..
ஏற்றுவீர் ஏற்றுவீர் மூவர்ணக்கொடியை!
தூற்றுவீர் தூற்றுவீர்
அந்த நான்கு வர்ணச்சுரண்டல் கொடியை!

=====================================================












வியாழன், 25 ஜூலை, 2019

கடவுளற்ற கடவுள்

கடவுளற்ற கடவுள்
===================================ருத்ரா

கடவுள் என்று
நினைத்தது
மனிதன் தானே.
அப்படியென்றால்
கடவுளைப்படைத்தது
மனிதன் தானே.
மிருகங்கள் அப்படி
எதையும் படைக்கவில்லை.
கடவுளும் அப்படி
எதையும் படைக்கவில்லை.
மனிதனின் மூளையே
எல்லாம் படைத்தது.
மனிதனின் மூளையை
படைத்தது எது?
நிச்சயம் அது கடவுள் இல்லை.
அது எது என்று
அறிவது இயற்கையின் உந்துதல்.
ஆனால்
இங்கே இயற்கை என்பது
கடவுள் இல்லை.
இயற்கையாகவே
ஒரு உந்துதல் எனும்
இயற்கையாலே எல்லாம் வந்தது.
அந்த
உந்துதல் இன்றி
மனிதனே இல்லை.
மனிதன் இல்லையெனில்
கடவுளே இல்லை.
முதல் முதல் சிந்தித்தவனே
கடவுளை
இங்கு ஈன்றெடுத்தான்.
மீண்டும் ம் சிந்தித்தவனே
படைக்கப்பட்டது
கடவுள் இல்லை என்றான்.
சிந்தனையே
இங்கு எல்லாம் ஆனது.
கடவுளின் கருவறையும்
கடவுளின் கல்லறையும்
இங்கு
சிந்தனையே.
அறிவு தோன்றும் போது
அறிவின்மை தொலைகிறது.
மனிதன் அறியும் போது
கடவுள் தொலைந்து போகிறான்.
மனிதனே
மறுபடியும் நீ
சிந்தனை செய்
கடவுள‌ற்ற கடவுளை!

===========================================



ஒலிகளின் சரித்திரம்.



ஒலிகளின் சரித்திரம்.
====================================================ருத்ரா

தமிழ் எனும் மொழி
இங்கு
ஒலிகளின் சரித்திரம்.
ஒரு நாள்
இரு கல் மோதி தீப்பொறி தெறித்தது.
அது தந்த வெளிச்சமே
"கல்"வி ஆனது.
கல் தோன்றும் முன்
மண் தோன்றும் முன்
கண் திறந்து ஒளி தேடியது தமிழ்.
கல் தெறித்த மொழியே இங்கு தமிழ்.

=========================================

புதன், 24 ஜூலை, 2019

ஓலைத்துடிப்புகள்

ஓலைத்துடிப்புகள்
===========================================ருத்ரா

ஐங்குறு நாறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). நேற்று நள்ளிரவில் அவர் வரிகள் எனக்குள்ளேயே கவிதை எழுதும் தினவை அந்த புளிங்காய்ச்சுவை ஏற்றி படாத பாடு படுத்தியது.அதன் விளவே இந்த "உன் உரு தின்னும்.." கவிதை.

என் உரு தின்னும்...
=========================================ருத்ரா

புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.
இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.
கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்
ஊழ்த்த விடத்து என் எஞ்சும்?
கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!

============================================


பொழிப்புரை
===========================================ருத்ரா

புளிங்காய் தின்னும் மணி மண் அளைபு
சுவைபடுத்தாங்கு வால்நீர் இமிழ்தர
நூலின் அருவி நுடங்கப் பெருக்கி
சாம்பர் தின்னும் இச்சுவை என் ஒக்கும்?
அறுசுவை உண்டியும் வெறுக்கும் தனிச்சுவை.


தலைவன் பொருள் ஈட்ட கடுவழி ஏகிய பின் தலைவி அவன் நினைவு வாட்ட துயர் உறும் நிலையே இப்பாடல்.அவள் கருவுற்ற‌ நிலையில் எதைத் தின்போம் என்ற மசக்கைத்துன்பம் அடைந்து பெரிதும் வாடுகிறாள்.புளியங்காய் தின்கிறாள்.மண் அளைந்து சுவைப்பதும் அதன் சுவைக்கு ஒளிபொருந்திய வாயின் நீர் ஊறி வழிந்து நூல்போல அருவியாய்  அசைந்த நீர்ப்படலமாய் பெருகும் காட்சியும் அங்கே விளங்குகிறது. சாம்பல் கூட தின்று பார்த்து அச்சுவையின் அருமையைக்கண்டு வியந்து இது என்ன சுவையாய் என்று இருக்கலாம் என்று ஒப்பு நோக்குகிறாள்.அறுசுவைகள் கூட பிடிக்காமல் போகும் தனிச்சுவை அல்லவா இது.
இலவு தொங்கும் காட்சிகள் மலியும்
நிலவுப்பிஞ்சு அன்ன காய் தூங்குபச்சை
கான் அடர் கடவுள் கடுஞ்சுரம் ஒரீஇ
செலவு என்னையோ? முள் ஓச்சி விரைதி
மீள்க.மீள்க. விழி மலர் ஈண்டு முள்மரம் ஆகி
காட்சி கொல்லுதல் ஒல்லுமோ பெரும.

அவன் பொருள் தேடி சென்ற அந்த இலவங்காட்டில் இலவங்காய்கள் காய்த்து தொங்கும்.நிலாப்பிறைகள் போல பச்சைக்காய்கள் ஊஞ்சல் ஆடி தொங்கும்.அத்தகைய அடர் காட்டின் கடக்க அரியதாய் உள் நுழைய இயலாததாய் விளங்கும் கடுவழியை விலக்கி வேறு வழி செல்ல முடியாத அப்படிப்பட்ட கடும்பயணம் எல்லாம் எதற்கு?" தலைவி தவிக்கிறாள். "பொருள் தேடிய வரை போதும்.தார் குச்சியை செலுத்தி தேரின் குதிரையை விரைந்து செலுத்துவாயாக.என் விழிகளை மலர்கள் என்பாயே.பார் அவை இப்போது உன்னைக்காண முடியாமல் முள் மரங்களில் சிக்கியதைப் போல் வேதனை கொள்கின்றன.இவை என்னால் தாங்க இயலுமோ?" என்கிறாள்

கரு தின்ற நெருப்பின் சுவைக்கு
எச்சுவை செத்தென அறியேன் மாதோ.
கரு தின்னும் எனை உன் உரு தின்னும்
நோகோ யானே!யானும் இம்மண் தின்னும்
மலையும் கடலும் தின்னும்
விண்ணும் மீனும் தின்னும்.
உன் தடமும் தேரும் தின்னும்..
விரைதி..விரைதி..காதல் கொடுநோய்

தலைவின் கருவுற்ற நிலையின் துயரம் அங்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது."நெருப்பு மூட்டிய பின் போல் வளரும் அந்த உயிரின் கரு கேட்கும் சுவை என்னைத்தின்கிறது.அச்சுவை எதை ஒத்து இருக்கின்றதென (செத்தென அறியேன்) நான் அறிய மாட்டேன்.இப்படி கருவால் தின்னப்படும் என்னை உன் காதல் பொங்கும் உருவம் வேறு தின்ன வருகிறது.இந்த பெருஞ்சுவைப் பசியில் நோதல் உற்று இம்மலை கடல் விண் மற்றும்
விண்மீன்கள் ஆகிய எல்லாம் தின்னத்தொடங்கிவிடுவேனோ என அஞ்சுகிறேன்.நீ வரும் தேரும் வழியும் கூட ஆர்வம் மிக்க என் கண்கள் தேடும் பசியின் சுவையில் தின்னப்பட்டு விடலாம்.அதனால் விரைந்து தேரை செலுத்து.இக்காதலில் கொடிய நோய் (கருவுற்ற மசக்கையோடு) பேரூழியாய் அழித்த பின் என்ன மிஞ்சும் என அறிவாயா?"

கூடு இறும்.உயிர் ஓம்புமின்.
கூடு சேர் புள்ளென விரைதி.விரைதி.
கதழ்பரி நன்மா கடுவிசை ஆர்ப்ப‌
நெடிய ஆறும் நின் கைப்படூஉம் மன்னே!


"உடம்பு இற்று விழும்.அதற்கு முன் என் உயிரைக் காப்பாற்று.பறவைகள் எல்லாம் குஞ்சுகளுக்கு இரையூட்ட விரைந்து வருவது போல் விரைவாயாக. வேக வேகமாக குளம்புகள் பதிய‌ஓடிவரும் சிறந்த அந்த குதிரை வலிமை ஆர்ப்பரிக்க அது செல்லும் நீண்ட வழியையும் உன் கைக்குள் அடக்கி மிக மிக வேகமாய் வருக" என்கிறாள் தலைவி நெஞ்சப் படபடப்போடு.

===========================================================ருத்ரா



5

அவையும் தான் அது! 

அவையும் தான் அது!
==========================================ருத்ரா

கண்ணே!
காதலின் தொன்மையை
எந்த ஃபாசில்களிலிருந்து
நிறுவுவது?
அதோ மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்த
ஒரு பெண்ணின் கபாலம்
அந்த மியூசியத்தில்
இருக்கிறது.
எனக்கு அந்த கண்குழிகளில்
ஒன்றும் தெரியவில்லை.
பெண்ணே!
இன்றும் உன் ஆழம் காணமுடியாத
ஒரு அமர்த்தலான பார்வை தான் அது.
மண்டையோட்டின் மேடுகளில் கூட
மயில் தொகை அன்ன கூந்தல்
என் புறக்கண்ணுக்குத்தெரியவில்லை தான்.
அகக்கண்ணில்
அதன் அடர்த்தியான அழகு தெரிகின்றது.
 வெறும் பாஸ்வரத்தின் ரசாயன
உன் மிச்சத்தில்
காதலின் உன் முதல் ரசாயனத்தின்
பக்கம் எங்கே?
ஆ! அதோ
உன் சிரிப்பு
எவ்வளவு அழகு?
அந்த பல் வரிசையில்
வள்ளுவன் காட்டிய
அந்த வாலெயிற்று இன் நீர்
வைரத்திவலைகளை
வாரி இறைக்கின்றதே!
அந்தக்கடல்களில்
எல்லா "சுராசிக்" மற்றும்
"பிரி கேம்பிரியன்"யுகங்களும்
அல்லவா மூழ்கிக்கிடக்கின்றன.
உற்றுக்கேட்கிறேன்
டி.ரெக்ஸ் எனும் பயங்கர‌
டினோசார்களின் உறுமல்கள் மட்டும்
அல்ல அவை.
நீ அன்றொரு நாள்
நான் ஒரு முத்தம் கேட்டதற்கு
அடம்பிடித்து
மறுத்து அதிர்வு அலைகள்
ஏற்படுத்தினாயே
அவையும் தான் அது!
==========================================
23.09.2017

செவ்வாய், 23 ஜூலை, 2019

"ஆடை"யும் அமலாபாலும்.

"ஆடை"யும் அமலாபாலும்.
===============================================ருத்ரா

எது அரசியல் ?
எது ஆன்மீகம்?
எது ஆபாசம்?

அரிசியில் மட்டும் தான்
அரசியல் இருக்குமா?
ஆடைக்காக
போராட்டம் நடத்திய
காலகட்டங்களும் உண்டு.
ஆடை என்பது
பால் அடையாளம் மட்டும் அல்ல
என்று
அமலா பால்
இப்படத்தில் அருமையாக
நெத்தியடி அடித்திருக்கிறார்.

மும்மூர்த்திகளும்
"சதி அனுசூயாவை"
நிர்வாணமாக
பார்க்க வந்தார்களாமே
அப்போது அவர்களையே
குழந்தையாக்கி
நிர்வாணத்தை
இறைமை என்ற
அந்த நிர்வாணத்திற்கே
தரிசனம் தந்ததாய்
நம்மிடையே ஆன்மீகக்கதைகளும்
உண்டு.

ஓவியர்கள்
நிர்வாணத்தை
ஓவியம் ஆக்கும்போது
அவர்களின்
தூரிகைகள் மட்டுமே
அந்தப்பெண்ணை
உற்றுக்கவனிக்கிறது.

ஏன் ஆண் மருத்துவர்கள்கூட
பிரசவம் பார்க்குபோது
அவர்கள் பிரம்மாக்களாக
மட்டுமே தான் இருக்கிறார்கள்.

இந்தக்கருவைத் தான்
திரைப்படமாக பிரசவித்திருக்கிறது
ஆடை.
அந்த டிவி ஸ்டுடியோவுக்குள்
நிர்வாணமாக மாட்டிக்கொண்டு
தவித்த தவிப்பின் நடிப்பை
மிக மிக அற்புதமாய்
உயிர்ப்போடும் துடிப்போடும்
காட்டியிருக்கிறார் அமலா பால்.

இயக்குநர் ரத்னகுமார்
எனும் சிற்பி
செதுக்கிய காட்சிகளில்
பெண்ணியம்
என்பது தெறித்துவிழுவதிலே
கண்ணியம்
மட்டுமே தெரிகிறது.

ஆடை என்பது
நூலும் ஊசியும் கொண்டு
தைக்கப்பட்ட போதும்
பெண்களின் ஆடைகள்
ஆண்களின் ஹார்மோன்களால் தான்
பார்க்கப்படுகிறது.

பெண்ணிய போராட்டத்தில்
சுதந்திரம்
என்பது தாறுமாறான
பரிமாணங்களில்
வெளிப்படுகிறது.
ஆடை
சுதந்திரத்தின்
மூச்சாக வீச்சாக வீறுபெற்றது
மலையாள தேசத்தின்
"மாராப்பு"போராட்டம்.
இப்போது
ஆடையே வேண்டாம்
என்று கூட
சுதந்திரத்தின் சிகரத்தில் நின்று
பேசும் பரிணாமமும் இருக்கிறது.

இந்த படத்தில்
நகைச் சுவைக் காட்சிகளாகவும்
இன்னும்
ஆணாதிக்க அரசியலின்
மண்டையில் பொளேர் என்று
அடிக்கிற காட்சிகளாகவும்
பல மின்னல் தோரணங்கள்
நிறையவே தொங்க விட்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கும்
ஆண்மை வேண்டும்.
ஆம்
தைரியமாக இது போல் நடிக்கும்
வீரம் வேண்டும்.

அப்படிப் பார்த்தால்
அமலாபால்
பெண்ணியத்தை
வீரம் செறிந்த கோணத்தில்
நடித்த ஒரு "பாகுபாலி"தான்!


அமலா பால் அவர்கள்
ஒரு அசுரத்தனமான நடிப்பில்
ஒரு தேவதையாய்
உயர்ந்து நிற்கிறார்.

=========================================================






ஆயா ராம் ..கயா ராம் ..அமித்ஷா "வெர்ஷன்"

ஆயா ராம் ..கயா ராம் ..அமித்ஷா "வெர்ஷன்"
=======================================================ருத்ரா

அமித்ஷா அவர்களே
கர்நாடகாவில்
உங்கள் கவிழ்ப்பு அரசியல் கண்டு
பாரத மாதா வெட்கித் தலைகவிழ்ந்தாள்.
கேட்டால்
காங்கிரஸ் செய்தது தானே
என்று கீறல் விழுந்த ரிக்கார்டை
ஒலிப்பது தானே
உங்கள் தேசியகீதம்.
உங்கள் தந்திரம் நேர்மையானது
என்றால்
அரசு எந்திரங்களை
உங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு
பொம்மலாட்டம் நடத்துவதை
உங்களால் நிறுத்த முடியுமா?
இதே கவிழ்ப்பு அவதாரங்களை
நீங்கள் ஆளும் அல்லது
உங்கள் பினாமி மாநிலத்தில்
நிகழ்த்த முடியுமா?
பாருங்கள் அண்டை மாநிலத்தில்
கழுதை தேய்ந்து கட்டெறும்பாய்
பரிணாமம் அடைந்து விட்ட
ஒரு சிறுபான்மைக்கு
முட்டுக்கொடுத்து அங்கு
தாமரையை பூக்க வைக்க
அதாவது தகிடு தத்த தாமரையை
பூக்க வைக்க முகூர்த்தம் 
பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆயா ராம் கயா ராம் என்று
அவர்கள் நடத்திய
ராமாயணத்தை தானே
நீங்களும் நடத்துகிறீர்கள்.
உங்கள் புடம் போட்ட
ராமனுக்கு
அயோத்தியில் கோவில் கட்டுவதில் கூட
இந்த அதர்ம ராமனைத்தானா
பிரதிஷ்டை செய்யப் போகிறீர்கள்?
இப்படி ராமர்களும் ராவணர்களும்
ஆள் மாறாட்டம் செய்வது தான்
உங்கள் ராமராஜ்யம் என்றால்
இனி அந்த "ராம் லீலா"மைதானத்தில்
எரிக்கப்படுவது
யார் என்று
உறுதி கூற முடியுமா?
உங்களால்?

====================================================================


தலைவா...


தலைவா...
==================================ருத்ரா

ஒரு நூறு இளைஞர்களைக் கொடுங்கள்
போதும்.
நம் முகத்தையே
நம் அகத்தையே
மாற்றிக்காட்டுகிறேன்.
இந்த உலகம் நம் மீது
அமுக்கிக்கொண்டிருப்பதற்குப் பதில்
நாம் நம் விரல் நுனியில்
இந்த உலகத்தை சுழலவைக்கலாம்
என்கிறார்கள்.
அதன் படி
நூறு இல்லை
மில்லியன் மில்லியன்களாக‌
மிஸ்ஸ்டு கால்கள்
மிதக்க விடுகிறார்கள்.
நம் வரலாறுகள் தொலைந்து போனதாக‌
புலம்புகிறார்கள்
வரலாறு என்பது
காலப்பாம்பு புதிது புதிதாக‌
சட்டையுரித்துக்கொண்டு
வெளிவருவது தானே
இயற்கையான பரிணாமம்.
ஆனால்
பழைய அடக்குமுறைக்கு
புதிய காஸ்டீயூம்களை
சாதி மத வர்ணங்களோடு
தைத்துக்கொடுக்கும்
கார்பரேட் ஊடகங்களையும்
அரசு எந்திரங்களையும்
கையில் வைத்துக்கொண்டு
இந்த மக்களை பஞ்சாங்கத்தின்
படுகுழியில் தள்ளுவதற்கா
இங்கு தலைமை வேண்டும் ?
குஜராத்தை காட்டி மிரட்டியவர்கள்.
புல்வாமாவையும் காட்டி மிரட்டுபவர்கள்.
இந்தியா முழுவதையும்
அவர்களுடை சுரண்டல் ராமர்களுக்கு
நைவேத்தியம் செய்யவே துடிக்கிறார்கள்.
இந்த தலைமையா
நம் சுதந்திரத்தை காக்கப்போகிறது?
இதற்குப்பதில்
சினிமா எனும் அந்த ஜிகினா உலகத்து
தலைவர்கள் எவ்வளவோ மேல்.
தலைவா என விசில் அடித்து
அங்கே பின் தொடருங்கள்.
அங்கே கூட அரசியல் நெடியும் காரமும்
நம்மை மிரள வைத்து சிந்திக்க வைக்கும்.
நாமும் சூப்பர் ஸ்டார் பின்னால்
அணி திரளத்தயார்
ஆனால் அவர் ஏதோ மாயமாய்
ஆனமீகப்புல்லாங்குழல் ஊதி
நம்மையெல்லாம் விநாயகர் சதுர்த்தி
எலிகளாக்கி கடலில் கொண்டுபோய்
கரைத்துவிட்டால்
என்னாவது?
நமக்கு ஒரு தலைவர் வேண்டும்
தமிழ் எனும் மின்னல் பாய்சசி
தமிழர்களின் இன்னல் போக்கும்
உரிமைத்தலைவன் வேண்டும்.
நம் சிந்துத்தமிழின் நாகரிகமே
இந்திய நாகரிகம் எனும்
உண்மையை
திராவிடம் எனும் சிந்தனையில்
சுடரேந்தியவனாக
இங்கே வலம் வரவேண்டும்.
சும்மா கர்ஜனைகள் செய்து
தமிழ் இனத்தையே கருவறுப்பதற்கு
காரணம் ஆகிவிடும்
தீப்பந்தக்காரர்கள் தேவையில்லை.
அங்கே மண்டியிட்டுக்கொண்டு
இங்கே
அம்மாவுக்கு மண்டபம் கட்டுகிறேன்
அய்யாவுக்கு மண்டபம் கட்டுகிறேன்
என்று
நம் தமிழின் ஐந்திணைகளையும்
கார்ப்பரேட்டுகாரர்களின் பசிக்கு
தீனியாக்க
தீனக்குரல் எழுப்பும் தலைவர்களும்
தேவையில்லை.
எங்கள் தமிழ்க்கனவுகளை
தாங்கிய
வீரத்தலைவா!
நீ எங்கிருந்தாலும் வா!
தமிழ் வாழ்க!
தமிழ் மக்கள் வாழ்க! வாழ்க!!

================================================================







================================================



திங்கள், 22 ஜூலை, 2019

சந்திராயன் 2

சந்திராயன் 2
===================================ருத்ரா

 நம் விஞ்ஞானிகளுக்கு
பொன்னாடைகள் போர்த்துவோம்.
ரோஜாக்களின் மழை பொழிவோம்.
உடனேயே சரி செய்து
விண்ணில் ஏவி விட்டது கண்டு
உலகமே பாராட்டுகின்றது.
நம் உளங்கனிந்த பாராட்டுக்கள்
கோடி கோடி கோடி என்று சொல்லுவோம்.
எதற்கெடுத்தாலும்
நாசாவைக் கண்டு
மூக்கில் விரல் வைக்கவேண்டியதில்லை.
யாரும் தொடாத நிலவின் அந்த
அமுத கன்னத்தை
நாம் வருடப்போகிறோமே.
அமுதைப்பொழியும் அந்த நிலவில்
எங்களுக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.
"தமிழுக்கும் அமுதென்று பேர்"
என்று பாடினானே எங்கள் கவிஞன் .
"நிலவுக்கும் தமிழ் என்று
பேர் சூட்டினால் என்ன? "
இஸ்ரோ என்றாலே
"இந்தி சிலேட்டு தானா?"
சந்திராயன்
பிராக்யான்
விக்ரமன்
அப்புறம்
ஹனுமான்
சுக்ரீவன் என்று
நாம் "பச்சோம் கி கிதாப்"தான்
படித்துக்கொண்டிருக்கவேண்டுமா?
திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் தான்
இந்தியத்துவத்தின் முதல் இருப்பிடம்.
வலிய இந்தியை திணிப்பதற்கு மட்டும்
அறிவியலை பயன்படுத்தும்
அறிவின்மை
நம் பாரதப்பேரொளியிலிருந்து
நீக்கப்பட வேண்டும்.

======================================================


குகை

குகை
============================================ருத்ரா

நான் தனிமையில் எத்தனையோ சிந்தித்திருக்கிறேன்.
முதலில் ஒரு இருட்குகையில் இருப்பது போல் இருக்கும்.
அப்புறம் அந்த இருட்டும் பழகிப்போகும்.
கருப்பு சூரியன் தன் கூந்தலை அவிழ்த்து
நம்மீதே காயப்போட உலர்த்துவது போல் இருக்கும்
இருள் கூட மயில் பீலிகள் போல்
பிசிறுகளை முகத்தில் வீசி கிச்சு கிச்சு மூட்டும்.


இந்த குகையில் உட்கார்ந்து
தியானம் செய்யவேண்டும் என்று
ரிஷிகள் வருகிறார்களாம்.
வாழ்கையின் ருசியும் வெளிச்சமும் வெளியில் இருக்க‌
இவர்கள் என்ன "பிரம்மானந்தை"சுவைக்க‌
உள்ளே வருகிறார்கள்.?

ஒரு சாமியாரும் ஒரு சாமான்யனும்
நண்பர்கள் ஆனார்கள்.

சுவாமி
அந்த சுவை எப்படித்தான் இருக்கும்?
காட்டுங்களேன்.

சரி இதோ சுவைத்துப்பார்!

ஒரு சுரைக்குடுவையிலிருந்து
என் வாயில் அதை ஊற்றுகிறார்.

ஆகா! திவ்யம் திவ்யம்..என்ன சுவை.
ஆனந்த கூத்தாடினேன்.

அப்பனே!
உண்மையில் அந்த ஞானாமுதம்
இதையும் விட ஆயிரமாயிரம் மடங்கு சுவை.

உனக்கு சிறிது அடையாளம் காட்டவே
இந்த "சோம பானம்"

சோம பானமா?
அது வேதகாலத்து டாஸ்மாக்கு சரக்கு ஆச்சே!
ஆனால்
என்னிடம் குவார்ட்டர் பாட்டில் ஒன்று தான் இருக்கிறது.

என்னப்பா அஸ்கு புஸ்கு என்கிறாய்?
அதை வைத்திருந்தால் கொடு.
நானும் அதை சுவைத்துப்பார்க்கிறேனே.
ஓங்காரத்திலிருந்து துரியப்பாய்ச்சல் புரியும்போது
நாங்கள் அனுபவிப்பது தான் அந்த ஞானானந்தம்.

நீங்கள் என்னமோ எங்கிருந்து கொண்டு வேறு எங்கோ
பாய்ச்சல் செய்வதைத்தான் சொல்கிறீர்கள்.
எங்கள் டாஸ்மாக்கை கொஞ்சம் உள்ளே ஊற்றினால்
எழுபதினாயிரம் பிரபஞ்சம் தாண்டி
எழுபதினாயிரம் சொர்க்கம் தாண்டி
பறந்து கொண்டிருப்போம்.

சரி உன் பாட்டிலை எடுத்துக்கொடு.
என் சுரைக்குடுக்கையை நீ எடுத்துக்கொள்.

இருவரும் பறிமாறிக்கொண்டார்கள்.

சுரைக்குடுக்கைககள்
கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்குள்
அட்மிட் ஆனது.
குவார்ட்டர் பாட்டில் தேவர்கள் வழியாக
எமதர்மன் கையில் மாட்டிக்கொண்டது.

பூமியில் இப்போது
ஐந்நூறு வயது ஆயிரம் வயதுக்காரர்களின்
கூட்டம் மிகுந்து விட்டது.

பூமியின் சுற்றும் வேகம் குறைந்து
ஒரு நாள் என்பது
ஒரு மாதம் ஆனது.

==================================================================





அருகம்புல்லும்

vaanavil vithaiyoonri...jpg
poem in the picture BY ruthraa

அருகம்புல்லும்....
====================================ருத்ரா இ.பரமசிவன் 


வானவில்லுக்கும் 
விதையூன்றினேன் .
சூரியனைக் கொஞ்சம்  கிள்ளி .
வானத்தையும் பிசைந்து
ஊன்றி வைத்தேன் .
புல்லே ஒரு நீர்ச்செடி .
வளர்த்தது.
ஏழு வர்ணத்தில்
இலை விரித்த காட்சி இது.
அழகு பொழியும்போது
பாருங்கள் அங்கே.
அருகம்புல்லும் 
வயதுக்கு வந்து விடும்.


பசி

பசி
==================================ருத்ரா

கம்பியூட்டர்
எண்ணை உரித்து
விண்ணை அளந்து
மண்ணைத்துளைத்து
எல்லாம் செய்தது.
ஏழையின்
ஒரு சொட்டுக்கண்ணீரின்
கன பரிமாணம் பற்றி
அறிய முடியவில்லையே.
மனித வாழ்க்கை
கணக்கு புத்தகம் அல்ல.
அது
ஒரு கனவு புத்தகம்.
நிறைவேறாத இருட்டுகளின்
புத்தகம் அது.
கம்பியூட்டர் அல்ஜீப்ரா
அதனுள் காணாமல் போனது.
பசியினால்
"பைனரி"அப்பத்தை
பிய்த்துத் தின்னமுடியாது.

=============================================



சனி, 20 ஜூலை, 2019

இதோ ஒரு உட்குரல்!

இதோ ஒரு உட்குரல்!
===============================================ருத்ரா

விஞ்ஞானம் தந்த அறிவு
நம் குறுகிய ஜன்னல்களையெல்லாம்
உடைத்துப்போட்டு விட்டது.
நீல வானத்தின் அகன்ற இதயமே
நம் இதயத்தோடு
பதியம் ஆகிவிட்டது.
மனிதன் மகத்தானவன்.
இறைவன் அவனை விட மகத்தானவன்
என்று
இறைவனுக்கு எடுத்துக்காட்டுபவனும்
மனிதனே.
ஆனால் இறைவனின் குரல் ஒலித்தால்
அது இப்படித்தான் கேட்கும்.
ஓ மனிதா எனக்கும் கூட ஒரு குரு வேண்டுமே
உன் மூளையின் உன் உணர்வுகளின்
மிக மிக ஆச்சரியமான மூலைகளை
தரிசனம் செய்ய
என் கோவிலை பிரதிஷ்டை செய்திருக்கிறேன்
என்பது உனக்கு தெரியுமா?
இருவரில் யார் பெரியவர் என்ற‌
போட்டி கூட தேவை தான்.
இறைவனோடு மனிதன் போட்டி போடவேண்டும்
இது
ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கு இடையே
நடத்தும் பட்டி மன்ற‌ம் இல்லை.
மனிதன் இறைமையாகி முழுமை அடையவேண்டும்
என்பது இறைவன் கனவு.
இறைவன் மனித வர்ணத்தில்
முகம் காட்டவேண்டும் என்பது
மனிதனின் தத்துவம் அல்லது லட்சியம்.
இதற்கு இடையே
ஏன் இந்த கத்திசண்டை போட்டி?
அன்று கிரேக்க சிந்தனையாளர்கள்
புராணங்களைக்கூட‌
மனித அறிவின் விளையாட்டுத்திடல்களாக்கி
அதிலும் கூட ஒலிம்பிக் நடத்தினார்கள்.
இந்தியாவில் தான்
அறிவு தேக்கம் அடைந்து
தெய்வீகம் ஆகி
அப்புறம் அதுவே ஆதிக்கம் ஆனது.
மதத்தை கொடி உயர்த்தி பரப்பும் மனிதன்
தன் அறிவை ஏதோ ஒரு இருட்டுக்கு
அடகு வைத்து விடுகிறான்.
இவனது வெளிச்சத்தை இவனே தான்
மீட்க வேண்டும்.
இந்த உட்குரல் அவனுக்கு
எப்போது கேட்கப்போகிறது?

=======================================================




முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி
======================================================ருத்ரா

நான் நீள நீளமாய்
வாக்கியங்கள் எழுதிக்கொண்டே போகிறேன்.
எங்கே முற்றுப்புள்ளியிட..?
எனக்குத்தெரியவில்லை.
அந்த நாற்றம்பிடித்த
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆன
எலும்புக்கூட்டிலிருந்து
துணிச்சுருளை நீக்கிப்பார்க்கிறேன்.
பிரமிடு எனும் பிரம்மாண்ட கட்டிடத்தின்
அடிவயிற்றில் இருக்கிறது அது.
அந்த தொடையெலும்பில்
ஏதோ எழுத்தை தீயால் சுட்ட
தடம் தெரிகிறது.
அது என்ன எழுத்து ?
.....
........
போதும் போதும்
ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு
மேலே வருகிறேன்.
இப்போது எல்லாம் புரிகிறது.
மனிதனுக்கு மனிதன் அடிமை
என்று
சூடு போட்ட தழும்பு அது.
இன்று
சூடும் தழும்பும் வேறு வேறு.
ஆம்
கடவுள் என்று
அந்த அறியாமை
மனிதனை விரட்டி விரட்டி
வர்ணம் தீட்டி வைத்திருக்கிறது.
அந்த அறியாமையே
அறிவின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

பாருங்கள்
இன்றும்
எறும்புகளாய்
அத்தி வரதர் அடியில்
நசுங்கி உயிர் தொலைக்கிறார்கள்.
மனிதனே
இன்றாவது ஒன்றைத்தெரிந்து கொள்.

லட்சம் அல்ல.
பல பில்லியன்கள் ஆண்டுகளாய்
அந்த வானம்
உன் சிலேட்டு தான்.
நீ தான் அதில் அகர முதல எழுதவேண்டும்.
அதை எப்போது எழுதப்போகிறாய்.
தினம் தினம்
ஈசல்களாய் நீ
உதிர்ந்தது போதும்.

===============================================================






வெள்ளி, 19 ஜூலை, 2019

கயிற்றரவு.


கயிற்றரவு.
===================================================ருத்ரா

இந்த நள்ளிரவு
ஒரு கோப்பை போல்
மேஜையில்
ஆறாத காபியாக
ஆவியை விட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆவிக்கும் நிழல் உண்டு
எங்கோ பிரேசில் காட்டில்
காப்பிக்கொட்டைகள்
நசுக்கப்பட்டு இங்கு வந்து கூட
அவை உயிரை விடலாம்.
நடு நிசியில்
அந்த நைந்த விளக்கின் ஒளியிலும்
காபியின் ஆவிச் சுருள்
நெளிந்து நெளிந்து நிழல் காட்டுகிறது.
என்ன ஆயிற்று ?
என் விலா எலும்புகள்
நொறுக்கப்படுகின்றன.
அரை குறையாய்
காகிதத்தில் கிறுக்குகிறேன்.
என்னை அனக்கோண்டா விழுங்கி விட்டது.
என்னைக்காப்பாற்றுங்கள்...
....
.....
மறுநாள் வெகுநேரம் வரை
கதவு திறக்கப்படாத வீட்டிலிருந்து
அழிந்து போயிருந்த கிறுக்கலுடன்
இருந்த காகிதக்கசக்கலையும்
ஒரு பிணத்தையும் மீட்டார்கள்.
அனக்கோண்டா என்ற அந்த
கிராஃ பிக்ஸ் பாம்பு அங்கு இல்லவே இல்லை.
அதன் சுவடுகளும் இல்லை.

=======================================================

கடவுள் விஞ்ஞானம்

கடவுள் விஞ்ஞானம்
================================================ருத்ரா

இது என்ன
ஒரு முட்டாள்தனமான தலைப்பு?
ஆத்திகர்களுக்கும்
நாத்திகர்களுக்கும்
கோபம் கொப்பளிக்கிறது.
கோபம் வேண்டாம்.
கடவுள் = கடவுள் உண்டு.
விஞ்ஞானம் =கடவுள் இல்லை.
இப்போது
இரண்டையும் பொருத்திய
சமன்பாட்டைப்பாருங்கள்.
கடவுள் உண்டு = கடவுள் இல்லை.
ஆத்திகர் =நாத்திகர்.
காஞ்சிப்பெரியவா = ஈ.வே.ரா
அதெல்லாம் எதற்கு
ராஜாஜி = ஈ.வே.ரா
என்று
ஒரு நட்பின் இலக்கணம்
சொல்கிறது.
அதனால் தான் இப்படியும்
ஒரு குட்டிக்கதை சொல்லலாம்.
கடவுளும் சைத்தானும்
ஒரு நாள் ஒரு வட்டமேஜையில்
சந்தித்துக்கொண்டார்களாம்.
அப்போது
தங்கள் தங்கள் முகமூடிகளைக் கழற்றிக்
கையில் வைத்துக்கொண்டார்களாம்.
ஆனால் அந்த வட்டமேஜையில்
ஒரு திடுக்கிடும் அதிர்சசி
உட்கார்ந்து கொண்டிருந்தது.
கடவுள் முகமூடி சைத்தான் கையிலும்
சைத்தான் முகமூடி கடவுள் கையிலும்
இருந்ததே
அந்த அதிர்ச்சி.
அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
"என்ன இந்தப்பயல்கள்
நம்மைக் கண்டுபிடித்தார்களா இல்லையா?"
ஊஹும்......
கண்டுபிடித்திருந்தால்
இப்படி மூடத்தனமாக
"அத்திவரதரை" பார்க்கப்போகிறேன்
என்று
அந்த நாலு பேர்கள் இறந்திருப்பார்களா?

கடவுளும் சைத்தானும்
நமுட்டுத்தனமாய் சிரித்துவிட்டு
கிளம்பிசென்றார்கள்.

==========================================================







குவாரன்டைன்

குவாரன்டைன்
===========================================ருத்ரா

ஒரு மதத்துக்காரர் 
இன்னொரு மதத்துக்காரரை
விமரிசிக்கப்புகுந்தவர்
"அவன் மூத்திரத்தைக்குடி
இவன் மூத்திரத்தைக்குடி"
என்று
அவருக்கு தெரிந்த
சாத்திரங்களையெல்லாம்
மூத்திரமாக்கிக்கொண்டிருந்தார்.
இந்த மின்தமிழ்ப்பக்கங்களில் எல்லாம்
இப்படி தமிழ் மணம் பரப்புவதன் மூலம்
எந்த மதத்தை அவர் பரப்ப முயல்கிறார்
என்பது
அவருக்கே தெரியுமோ தெரியாதோ
என்பதும் தெரியவில்லை.
உலகத்தில்
கை கண்ட மருந்து
பசு மூத்திரம் மட்டும் தான்
என்று
யாரோ ஒரு ஆர்யவைத்தியன் சொல்லியிருப்பான்
போலும்.
அந்த மூத்திரத்தை அவர்
அண்டா அண்டாவாய் குடித்தபின்னும்
அந்த மதவெறி அரிப்பு
இன்னும் போகவில்லை.
அதனால் வாயைத்திறந்தாலே
இப்படித்தான் சொரிய ஆரம்பித்து விடுகிறார்.
யாரைப்பார்த்தாலும்
மூத்திரத்தைக்குடிக்க சொல்லிவிடுவார்.
அவரைப்பிடித்து
ஏதாவது ஒரு
குவாரன்டைனில் அடைத்து வைக்கவேண்டும்.
இல்லாவிட்டால்
இந்த "இந்து" மகா சமுத்திரத்தையே
இந்து மகா "மூத்திரமாக்கி"விடுவார்
போலிருக்கிறது.

====================================================




வியாழன், 18 ஜூலை, 2019

கர்நாடகாவில் ஒரு துர்நாடகா

கர்நாடகாவில் ஒரு துர்நாடகா
=================================================ருத்ரா

டெல்லிக்காரர்களின் இதிகாசங்களில்
அவர்கள் ஆளாத மாநிலங்களில்
தாறு மாறான ராமாயணங்கள்
நடத்தப்படும்.
ஆளுநர்கள்
அவர்களுக்கு தோதான மராமரங்களில்
மறைந்து கொண்டு
அம்புகள் எய்வார்கள்.
எய்யப்படுவது
ஜனநாயக ராமர்கள் என்றாலும்
கவலையில்லை.
அவர்களுக்கு பிடிக்காத மாநிலங்களில்
திரை மறைவில் அந்த பெரும்பான்மையை
சிதைத்து விட்டுக்கொண்டே
பெரும்பான்மை எங்கே எங்கே
என்று கேட்பார்கள்.
அவர்களின் பினாமி ஆட்சிக்கு
அடி பணிந்த மாநிலங்களில்
மனம் ஒப்பாதவர்களைக்கூட
மணம் செய்வித்து
அவர்கள் கை கோர்த்துக்கொடுப்பார்கள்.
பெரும்பான்மை அங்கே சிறுபான்மையாய்
தேய்ந்து கிடந்தாலும்
வெறுமே கண்ணை மூடிக்கொண்டு
தெருக்குப்பைகளை கூட்டிப்பெருக்கி
படம் எடுத்துக்கொண்டிருப்பார்கள்.
வேண்டாத மாநிலங்களிலோ
சீதைக்கும் ராமனுக்கும்
நடந்த சுயம்வரத்தையே
கெடுத்துவைக்க யாகம் நடத்துவார்கள்.
எதிர்க்கட்சிகளின்
சுண்டைக்காய் மாநிலங்களில் கூட
பூசணிக்காய் அளவுக்கு
பொய்ப்புகார்கள் நீட்டுவார்கள்.
அவர்கள் ஆளாத மாநிலங்களில் மட்டுமே
ஆளுநர்களுக்கு
பீரங்கிகளைக்கொடுப்பார்கள்.
அவர்கள் ஆளுகின்ற மாநிலங்களில்
ஆளுநர்கள் கையில் இருப்பது
வெறும் அட்டைக்கத்திகள் மட்டுமே.
இந்திய ஜனநாயத்தை
ஒரு மரணத் தூக்கத்தில் ஆழ்த்திடவே
கர்நாடக சட்டசபையில்
இவர்களின் தூங்கும் விரதம்.

காங்கிரஸ்காரர்கள் செய்ததை தானே
நாங்கள் செய்கிறோம் என்று
கீறல் விழுந்த ரிக்கார்டுகளை
ஒலித்துக்காட்டுவார்கள்.
காங்கிரஸ்காரர்கள் செய்வதை செய்ய
நீங்கள் எதற்கு?
காங்கிரஸ்காரர்களே இருக்கட்டுமே
என்று
கீறல் விழாத ரிக்கார்டை
கேள்விகளாக்கி மக்கள் கேட்கிறார்கள்.
இவர்களிடம்
எண்ணிக்கை மட்டுமே இருக்கிறது.
ஜனநாயக சிந்தனை எனும்
"எண்ணிக்கை" இல்லாததால்
இந்தியத்தாய் எனும் சீதையை
தீக்குளிக்க வைத்து
அதில் ஆட்சியை சமைத்து
சோறாக்கி தின்பதே இவர்களது
ராமாயணம்.

===========================================================







பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி
==========================================ருத்ரா


அது என்னவோ தெரியவில்லை
காதலுக்கு
பட்டாம்பூச்சி தான் பல்கலைக்கழகம்.
இதன் நுணுக்கங்கள்
அறிந்த பின் தான்
அவளை அறிந்து கொண்டதாய்
அவனுக்கு பட்டம் கிடைக்கிறது.
இதன் சிறகு துடிப்புகளில்
ஆயிரம் வர்ணங்கள் உதிர்கின்றன.
ஆயிரம் வர்ணங்கள் தெரிகின்றன.
அவன்
அவளுக்காக
கவிதை எழுத
அவன் மனத்தை பிய்த்துக்கொள்ளும்போது
பட்டாம்பூச்சிகள்
தங்கள்
இறகுகளை பிய்த்துக்கொள்ளுகின்றன.
அவற்றின் வர்ணப்பிரளயங்களிலும்
சித்திரக்கூட்டங்களிலும்
பிக்காஸோக்கள்
பிரசவிக்கின்றனர்.
பட்டாம்பூச்சிகளிடம்
வர்ணங்கள் மட்டுமே உண்டு.
வர்ணாசிரமங்கள் இல்லை.
அதனால்
இவர்கள் காதலுக்கு
சாதி மதங்கள் இல்லை.
அதோ அந்த இறகுகள்
சாமரங்கள் வீசுவதில்
பூந்தென்றல் மட்டுமே கிசு கிசுக்கின்றன.
மனிதர்களின்
குறுகிய வெறிகள்
குறுக்கே மறிக்கும் போது தான்
ஒரு விடியலின் வர்ணம்
அங்கே பூகம்பமாய்
சிறகுகளை படபடக்கின்றன.

=========================================================






புதன், 17 ஜூலை, 2019

அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
========================================ருத்ரா

அண்ணே  நான் "போவா" போகப்போறேன்.
நீங்களும் வாரீங்களா..கை நெறைய காசு கெடைக்குமாம்.

என்னடா சொல்றே?

அதாண்ணே...கோன்னா "போ"அதோட வா சேத்தா
கோவா.."போய்ட்டு வந்துட்டு" இருந்தா துட்டு பாக்கலாமாமே..

அடே படுவா..ஓடிப்போய்டு....எண்ட் றெகிட்டே வச்சுக்காதே

இவர் அடிக்க ஓங்குகிறார்.அவர் ஓடிவிடுகிறார்.

======================================================



ஆனந்தவிகடனா? அழுகை விகடனா?

ஆனந்தவிகடனா? அழுகை விகடனா?
===================================================ருத்ரா

உதயநிதி
திமுகவின் இளைஞரணி தலைவர்
ஆனதற்கு
விகடன் பக்கங்களில்
ஏன் இத்தனை ஒப்பாரியும்
அழுகையும்?
அந்த உட்கட்சி விவகாரத்தில்
ஜனநாயகம் கொஞ்சம் சறுக்கியிருக்கலாம்.
ஆனால்
மத்தியில்
நாடே ஜனநாயகத்தை தொலைத்தது போல்
விக்கித்துப்போய் நிற்கிறது
அதைப்பற்றியெல்லாம்
பத்தி பத்தியாய் பற்றி எரியும்
என்று பார்த்தால்
ஒன்றையும் காணோம்.
ஆனால் உதயநிதி விவகாரத்தை
பூதமாய் காட்டி
தங்கள் தார்மீகக்கடமையை
புஸ்வாணம் ஆக்கிக்கொண்டிருக்கிறது விகடன்.
உதயநிதியை
அவசரம் அவசரமாக
நாற்காலியில் உட்கார்த்த வேண்டிய‌
அவசியம் இல்லை தான்.
ஆனால்
கோவாவில் மீண்டும் அதே வியாபாரம்
சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது.
கர்நாடகாவிலும் ஆள் பிடிப்பு அரசியல்
அமோகமாய் நடக்கிறது.
மத்தியில் இருந்து
சூத்திரக்கயிறு அசைக்கப்படுவதால்
சூத்திரர்களின் ஆட்சியை பிடுங்கிவிடும்
ஆரியக்கூத்து அம்பலம் ஆகிக்கொண்டிருக்கிறது.
இதற்கு சிறப்பு இதழே போடலாமே.
ஆனால்
ஆனந்தவிகடன் சிறப்பு எழுத்தாளர்கள்
திமுகவின் ஜனநாயகத்துக்குள் போய்
மீன் பிடிக்கக்கிளம்பியிருக்கிறார்கள்.
நடுநிலையாக பேனாவை தூக்கி நிறுத்துபவர்கள்
திமுகவை மட்டும் குறி வைப்பதேன்?
எதிர்க்கட்சி வரிசையை கலையச்செய்ய‌
ஏதாவது வியூகம் கிடைக்குமா என்று
எதேதோ எழுதிக்கொண்டிருந்தார்கள்.
அதன் தொடர்ச்சி தான்
ஏதோ கனிமொழி அவர்களுக்காக‌
கண்ணீர் வடிப்பது போல இந்த நாடகம்.
அப்படியே கனிமொழிக்கு
ஒரு பொறுப்பு கொடுத்தாலும்
குடும்ப கார்ப்பரேட் என்ற முத்திரையை
குத்த தயாராய் தான் இருக்கிறார்கள்.
திமுக மீது சேற்றை வாரியிறைத்தால்
இடைத்தேர்தலில் கொஞ்சம் இடைஞ்சல்
செய்து பார்க்கலாம் என்று தான்
இந்த கட்டுரை.
நரித்தனம் செய்துகொண்டே
பத்திரிகை நாட்டாண்மை செய்யும்
விகடனுக்கு இது அழகல்ல.
==========================================================


பிகில்

பிகில்
=================================ருத்ரா

பிகில் ஃபஸ்ட் லுக் வந்து விட்டது.
விஜய் ரசிகர்களுக்கு
கொண்டாட்டமோ கொண்டாட்டம்.
அது ஆங்கிலத்தலைப்பாக இருந்தாலும்
விஜய்யின் தமிழ்க்குரலாக‌
அதை கேட்கத்துவங்கிவிட்டார்கள்.
விசில் என்பதன் மதராஸ் மொழி அல்லவா அது.
சென்னையே சிலுப்பிக்கொண்டு
ஓடுவது போல் அல்லவா இருக்கிறது.
பெண்கள் கால் பந்தாட்டம்.
விஜய் ரெட்டைவேடம்.
இந்த சந்தடிக்குள் யோகிபாபு.
உதை படும் பந்தாக வேண்டுமானாலும்
அவர் நடிக்கத்தயார்.
ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கத்தயார்.
சர்காருக்குப்பின்
அரசியல் சூறைக்காற்று
என்ன ஆச்சு?
இந்த கால் பந்தாட்டத்திலும்
அந்த காற்றடைத்த பந்தில்
ஒரு புயலை நிரப்பி வைத்திருப்பாரோ?
தீபாவளி வரட்டும்
பார்க்கலாம்.
"சிவகாசி பட்டாசு" மாதிரி
வெறும் வெடிசத்தத்துக்கு மட்டுமே
இந்தப்படமா?
இல்லை அரசியல் நெடியும்
பிகில் சத்தத்துக்குள் இருக்குமா?
பார்க்கலாம்.
ஒரு விரல் புரட்சி என்று
ஆட்சி நாற்காலிகளை
பந்தாடியவர் ஆயிற்றே.
எதிர்ப்புகள் எகிறி எகிறி வரலாம்.
பந்தை
எங்கிருந்து வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும்
உதைப்பார்களே !
கோல் கீப்பராகவும் விஜய் தயார்.
கோல் அடிப்பவராகவும் விஜய் தயார்.
அவர் அடிப்பது பிகில் ஆனாலும்
அது புயல் அல்லவா.

====================================================




செவ்வாய், 16 ஜூலை, 2019

நகைச்சுவை


நகைச்சுவை
==============

ராமராஜ்யம்
=================================================ருத்ரா
ஏன் சந்திராயன் 2 நிறுத்தப்பட்டது?

நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து இப்போது தான் செய்தி கிடைத்துள்ளது.
என்னவாம்?
அதைப்பார்வையிட மோடிஜி கிளம்பும்போது எங்கே என் புஷ்பக விமானம்
என்று கேட்டிருக்கிறார்.அதிகாரிகளும் அவர் கேட்கிறாரே என்று விமானத்தில் ஆயிரம் கோடி ரோஜாப்பூக்களை அப்பிவைத்து கொண்டுவந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்
இது ராமாயணகாலத்து புஷ்பகவிமானம் இல்லை.அது தான் வேண்டும்
என்றாராம்.
அவர்களும் பெரிய அனுமான் கட் அவுட் இணைத்த‌ விமானத்தை கொண்டு
வந்து நிறுத்தினார்களாம்.
ஜெய் ஹனுமான் ஜி என்று சொல்லிவிட்டு அவர் விமானம் ஏறுவதற்குள்
கவுண்ட் டவுன் டைம் முடிந்துவிட்டதாம்.அதனால் சந்திராயன் 2
ஏவப்படவில்லை.
===============================================================
இது நையாண்டி சமாச்சார் பவனிலிருந்து ஒலிபரப்பப்பட்ட செய்தி.

திங்கள், 15 ஜூலை, 2019

பிக்பாஸ்  ஒரு நுரைக்கோபுரம்

பிக்பாஸ்  ஒரு நுரைக்கோபுரம்
====================================================ருத்ரா

சமுதாயப்பிரச்னைகளுக்குள்
தனி மனித பிரச்னைகள்
இடியாப்ப சிக்கல்கள் ஏற்படுத்திக்கொண்டு
இருப்பதை
எழுத்தில் வடித்தாலும் சரி
நடிப்பில் வடித்தாலும் சரி
அது காலத்திற்கேற்ற
இலக்கிய வடிவம் தான்.
ஆனால் அதில் யதார்த்தம் இருப்பதாய்
மாயை ஏற்றி இருப்பதில்
ஏதோ ஒரு மழுங்கடிக்கும் தந்திரம்
மறைந்து இருப்பதே பளிச்சிடுகிறது.
வெளியே சூடு கிளப்ப வேண்டியவை
உள்ளே சினிமாத்தனமாய்
மத்தாப்பு காட்டி
முக்காடு போடப்பட்டு விடுகிறது.
ஓட்டெடுப்பு எல்லாம் நடத்தி
ஜிகினாத்தனமான ஜனநாயகம்
அரங்கேறுவது
நம்மை மேலும் மொண்ணையாக்கி
விடுகிறது.
இதில் வனிதா என்ன?
ஓவியா என்ன?
எல்லாம் நிழல் உடம்புகள்.
இது கண்ணீர் சிந்துவதும்
இதயம் துடிப்பதும்
புதுமையான ரோபோ விளையாட்டுகளே.
தொலைக்காட்சிப்பெட்டிகள்
மர்மக்குகைகளாக இருக்கவேண்டும்..
அதில்
நம் வெறிகளும் ஆசைகளும் கனவுகளும்
மசாலா தடவிக்கொண்டு
நம் தட்டுகளில் பரிமாறப்படவேண்டும்.
இதுவே
மானுடத்தின் உள்ளொளியை
கள்ள ஒளியாக்கி
கள் வெறி யாக்குகிறது.
இந்த நுரைக்கோபுரம் ஏறியா
இதை
எவரெஸ்டுகள் என்கிறீர்கள்?
இது
கள்ளோ? காவியமோ?
டாக்டர் மு.வ அன்று கேட்டார்.
இன்று
எதையும் கேட்பார் யாருமில்லை.
மின்னணு ஒளியிலும்
சாராயம் காய்ச்சிக்குடிக்கலாம்.
நடப்பவை நடக்கட்டும்.
கிடப்பவை கிடக்கட்டும்.

====================================================




தேடினேன்

தேடினேன்
================================ருத்ரா இ பரமசிவன்
அந்த அழகிய மஞ்சள் நிற‌
பித்தளை வெற்றிலைச்செல்லத்தை
உருட்டி புரட்டித்தேடினேன்.
கைப்பிடி
சீறும் பாம்பின் சுருண்ட
அற்புத வடிவில் இருந்தது.
அதன் கடுகுக்கண்ணில் கூட‌
ஆலகால விஷம் தெரிந்தது.
மூடியில்
இலைப்பின்னலில்
பூக்களின் கண்கள்
உறுத்து விழித்தன.
கலை நேர்த்தி என்னை
கவனம் திருப்பிவிட்டது.
கவனத்தை மீண்டும் தேடலில்
நீள விட்டேன்.
அந்த செல்லத்தின்
உள்ளறை ஒவ்வொன்றையும்
தேடினேன்.
பாக்கு வைக்கும் இடம்.
சுண்ணாம்பு டப்பி
சுருண்டு படுத்து
கனவு காணும் இடம்.
விரலின் மூலம் வெற்றிலையை
ஸ்பரிக்கும் அந்த‌
கணங்களின் கனமான ஏக்கம்
அதனுள்ளே சிறை.
தங்கபஸ்பம் புகையிலையும்
அந்த நீல கண்ணாடிப்பேப்பரும்
என் செவிக்குள்
இன்னும் சரசரத்தன.
இறுதியாய்
வெற்றிலைக்கவுளி
மரகதப்பாய் அடுக்குகளாய்
அடைந்து கிடக்கும்
அந்த பெரிய அறை
மெல்லிய ஒரு குதப்பல் ஓசையை
அற்புத சங்கீதமாய்
அலை விரித்தது.
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
என் அப்பாவை
அந்த செல்லத்துக்குள்.
முப்பது நாப்பது வருடங்களாய்
அதற்குள்
அவர் வாசனையைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
......
அதோ!
புளிச்சென்று ஒரு குரல் கேட்டது.
மரணங்களுக்கு
அவர் பயம் கொண்டதில்லை.
எமன் மீது காறி உமிழும்
வெற்றிலை எச்சிலாகத்தான்
அது எனக்கு கேட்டது.
என்னை ஒரு உற்சாகம்
தொற்றிக்கொண்டது.
மீண்டும் அந்த செல்லத்துக்குள்
தேடினேன்.
அவர் மரணத்தை அல்ல.
மரண பயத்தால்
எப்போதும்
காக்கைச்சிறகைக்
கிழித்துக்கொண்டது போல்
வாழ்க்கையை கந்தல் ஆக்கிக்கொள்வதை
காறித்துப்பும்
அந்த நெருப்பு நம்பிக்கையை.
செல்லத்துக்குள்
அவர் ஒரு லாவாக்குழம்பாய்
ததும்பி நின்றார்.
========================================
ஒரு மீள்பதிவு.

மூன்று வர்ணமும் நான்கு வர்ணமும்

மூன்று வர்ணமும் நான்கு வர்ணமும்
========================================================ருத்ரா

சுதந்திர வரலாற்றின்
அரிச்சுவடிகளின்
அடிச்சுவடுகளிலிருந்து
பயணம் தொடங்கியவர்கள்
மேலே உள்ள வர்ணங்களை
மறக்க மாட்டார்கள்.
வெள்ளையனை எதிர்த்தவர்களின்
முழக்கங்களில்
பல வர்ணங்களின் தீக்கொளுந்துகள்
ஆவேசமாய் எரிந்தன.
வெள்ளைக்காரன்
பாகம் பிரித்துக்கொடுத்த போதுதான்
தெரிந்தது
அந்த தீக்கொளுந்துகள் எல்லாம்
இந்தியன் எனும்
ஒரு மதசார்பற்ற
மானிட தத்துவத்தை
உயிரோடு கொளுத்த முற்பட்ட‌
சாதி மத வெறித்தீயின் சொக்கப்பனை என்று.
உலகக்கண்ணோட்டத்தில்
இந்தியன் என்றால்
எந்த மதங்களுக்கும் அப்பாற்பட்ட‌
ஒரு வர்ணத்தான்
என பண்டிட் ஜவஹர்லால்
நம்பியதால்
அந்த சோசலிச வடிவத்தை
இந்தியாவுக்கு பதியமிட்டார்.
சாதி மத சுரண்டல் வாதிகள்
சமயம் கிடைக்கும் போதெல்லாம்
இந்த சமுதாய நாற்றை
சிதைத்து நாசம் செய்தபின்
எஞ்சியதே
இந்த சனாதன பூதம்.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாய்
பட்டொளி வீசி பறக்குமபோதெல்லாம்
அந்த நான்கு வர்ணமும் மறைந்திருந்து
தாக்கிய அவலங்களையும்
தாங்கி தாங்கி
விழுப்புண் ஏந்தி நின்றோம்.
ஒரு நாள் இரவில்
அந்த கீழ்வெண்மணியில்
அந்த சாதீய அரக்கத்தனம்
வியர்வை வர்க்கத்தின் பூக்களை
கொளுத்தி சாம்பல் ஆக்கியதே.
மறக்க முடியுமா அந்த மாபாதகத்தை?
இவர்கள் மானிட சித்தாந்தங்கள் எல்லாம்
எங்கோ போய் ஒளிந்து கொண்டனவே.
பொதுவுடைமைக் கட்சிகள் மட்டுமே
இந்தியாவின் இருட்டுக்கண்டத்திலிருந்து
விடியலின் மின்னல் கீற்றுகளுக்கு
உரிமை கீதம் பாடிக்கொண்டிருக்கின்றன.
ஆனாலும் ஒரு ஏகாதிபத்தியத்தின்
கோர நிழல் நம்மீது படிந்து கிடக்கிறது.
இன்னும்
ஆணவக்கொலை செய்ய "பட்டா"போட்டு
எடுத்துக்கொண்ட
அந்த ஆணவத்தின் ஆதிக்க வர்க்கம்
அந்த நான்கு  வர்ண தர்மத்தையும்
அந்த நான்கு வேதத்தில் ஒரு இந்திரனின்
சக்கராயுதத்தை வைத்துக்கொண்டு
இனப்போர் வெறித்தீ முழக்கங்களையும்
இப்போது சாசனம் ஆக்கத்துடிக்கும்
காட்சிகள் நம்மை
பதை பதைக்க வைக்கின்றன.
அந்த நான்கு வர்ண தீக்காடுகளிருந்து
நம் உயிரினும் இனிய அந்த
மூவர்ணக்கனவுகளை
மூண்டெழச்செய்யும் குரல்களை
உயர்த்துவோம் வாருங்கள்!
நம் இந்தியா
வாழ்க ! வாழ்க!! வாழ்கவே!!!

===========================================================


ஞாயிறு, 14 ஜூலை, 2019

"வீடு" (குறும்பாக்கள்)

"வீடு" (குறும்பாக்கள்)
===========================================ருத்ரா

அறம் பொருள் இன்பம் "வீடு.."
மண்ணில் கால்கோள்.
விண்ணில் தான் கூரை.

___________________________________________


நடப்பவர் காலடிச்சுவடுகளில்
கட்டிய மலிவான வீடு
"ப்ளாட்ஃபாரம்"

_______________________________________


சினிமாத்தட்டிகளிலும் வீடு.
நிழலையே அடுப்பு கூட்டி இங்கு
பொய்யாய் சாப்பிடுவதே வாழ்க்கை.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________


நகரத்து மையத்தில்
நட்டுவைத்த உயரமான கனவு
அப்பார்ட்மென்ட்

________________________________________


எல்லோரும் வீடு கட்டி முடிக்கையில்
ஆறுகள் மலைகள்  விழுங்கப்படும்.
பிரம்மாண்ட மயானமே மிச்சம்.

___________________________________________


அரை சதுர அடிக்கே ஆயிரங்கள் வேண்டும்.
காகித சிதை அடுக்கி பார்க்கிறோம்
கானல் நீரே எரிவதை.

_____________________________________________


நெல் முளைக்கும் பூமியை
கல் முளைக்க வைத்ததால் இனி
கவளச்சோறும் லட்ச ரூபாய் தான்.

_____________________________________________

இரும்பு எலும்பில் சிமிண்ட் சதையில்
இதயம் தொலைத்தும்
விறைத்து நின்றான் மனிதன்.

‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________________


குவாரியில் மானிடத்தின் கல்லறை.
பூமியையே தின்னுகின்ற மனிதனுக்கு
நிழல் தர குச்சிமரம் கூட இல்லை.

________________________________________________

தமிழர்களே உங்கள் கண்ணீரை
மேட்டூர் அணையாக்கி சேமித்து வையுங்கள்
காவிரிகள் களவாடப்படும்.

_______________________________________________

சனி, 13 ஜூலை, 2019

காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்

காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
_______________________________________________ருத்ரா


"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
ஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன‌
அலையின் அலையின் நெளிதரும் நினைவின்
ஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்
இன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க!
காலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்
பண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே!"

பொருள்
==========================================

தலைவி தன் காந்தள் மலர் ஒத்த‌ மெல்லிய விரல்களால் கோதி கோதி தன் கூந்தலில் வகிடுபிரித்த போது வளைவு வளைவுகளாய்
இருக்கும் அந்த  கூந்தல் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள்.அந்த
கூந்த‌லைப்போலவே அலை அலையாய் அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து களிப்புற்ற போது "ஒரு மெல்லிசையை தவளவிட்டேனே! தோழி அதனை நீ கேட்டாயா?" என்று அவள் தன் தோழியுடன் பேசுவதாய் உணர்கிறாள்."அந்த இசை ஒலி காற்றினுள்ளும் ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக" என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.
=================================================
sanganadaikkavithai composed by RUTHRAA E PARAMASIVAN
26.05.2017

வெள்ளி, 12 ஜூலை, 2019

ராட்சசி ஜோதிகா


ராட்சசி ஜோதிகா
================================================ருத்ரா

சிஸ்டம் சரியில்லை
என்று அரசியலில்
"பஞ்ச் டயலாக்" ஆகிப்போனதை
நிகழ்வுகளாக
ஒரு பள்ளிக்கூடத்தில்
வரலாறு ஆக்கியிருக்கிறார்
ஒரு சூப்பர் ஸ்டாரினி "ஜோதிகா"
ஜோதிகாவின் நடிப்பு
"குஷி"யிலிருந்து நாம் அறிந்ததே.
நடிகையர் திலகம் என்ற பட்டங்கள்
எல்லாம் எங்கே போச்சு?
அந்த வெறுமையை எப்போதோ
ஜோதிகா நிரப்பி விட்டார்.
விருது வழங்குபவர்கள் தான்
அதை விருதாவாய்
எங்கேயோ தொங்கவிட்டிருக்கின்றனர்.
நாடும் சரி
வீடும் சரி
பள்ளிக்கூடமும் சரி .
ஒரு இடி அமீன் தேவை தான்.
ஆனாலும் இவர்
சிர்திருத்தம் என்பதை மட்டும் தான்
கையில் எடுத்திருக்கிறார்.
மொத்த இடி அமீனையும்
ஜனநாயக ஜிகர் தண்டாவாய்
கலக்கி  அடித்து
மக்களின் அடிவயிற்றைக்கலங்கசெய்யும்
மொட்டை சர்வாதிகாரம் எல்லாம் இங்கு இல்லை.
பள்ளிக்கூடம் என்றால்
"பெயில் போடும்"
ஒரு முண்டைக்கண் முனிய சாமி கோயில் இல்லை
என்ற
பயத்தின் புகைமூட்டத்தை
அதிரடியாய் நீக்குகிறார்
இந்த ராட்சசி.
"அழகான ராட்சசி "தான்.
இவர் மின்னல் போல் சிணுக்கம் காட்டி
புயல் வருவது போல் விழிகள் உருட்டி
உணர்சசிக்கொந்தளிப்பை
முகம் பூராவும் தேக்கி
நடிப்பை கொப்பளிப்பதையும்
பூப்போல் காட்டுவார்.
இந்தப்படத்தில்
சிஸ்டம் சரியில்லை என்பதில்
உள்ள ருத்ர தாண்டவத்தை
காட் சிகளின் கனமான திருப்பங்களில்
இழைந்து சீற்றம் காட்டுகிறார்.
இயக்குனரும் வசனகர்த்தாவும்
இந்த சித்திர சிற்பத்தை
அருமையாக செதுக்கியிருக்கிறார்கள்.
ராட்சசி என்றால்
உங்களுக்கு அவ்வளவு அருவருப்பான என்ன?
கம்பராமாயணத்தில்
ராட்சசி குலத்து "மண்டோதரியை"
கம்பன் சொல் தூரிகையில்
ஓவியம் தீட்டியிருக்கிறார்
தேவ பிராட்டியார்களுக்கு இணையாக.
கல்வி தேவதை ஒரு "வில்லி"யாக உருமாறுவதை
தடுத்த நிறுத்தவே
ஜோதிகா இங்கே
ஒரு நளின ராட்சசியாய் நர்த்தனமாடுகிறார் .

=========================================================












மலை ஏறு .

மலை ஏறு .
=============================================ருத்ரா

மலை ஏறு !
பள்ளத்தாக்குகளில்
புழுக்கள் போல்
நெளிந்தது போதும்.
அந்த வானம்
எனும் டர்க்கி டவல் கொண்டு
வியர்வை துளிர்த்த
உன் முகம் துடைத்துக்கொள்.
பழம் நூற்றாண்டுகளில்
நீ தொலைத்த பாதையில்
உன்னை ரணப்படுத்திய
அந்த முள்ளின் நாட்களைக்கொண்டு
உன்னை நீயே
வேகப்படுத்திக்கொள்.
வண்டி இழுக்கும் மாடுகளைக்
குத்தி குத்தி ரோஷம் கொள்ள வைக்கும்
தார்க்குச்சியைப்போல
அந்த முட்களில் நீ ரத்தம் சிந்தினாலும்
அவை உனக்கு நாளை முகம் காட்டும்
ரோஜா அல்லவா?
இன்று
நீ விஞ்ஞான பூர்வமாய்
ஏமாற்றப்படலாம்.
நீ கும்பிடும் கடவுளின் கைகளைக்கொண்டே
நீ நெறிக்கப்படலாம்.
இவர்கள் சர்வாதிகாரம்
துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் இல்லை.
அந்த உளுத்துப்போன சம்பிரதாயங்களை
இருபத்தொன்றாம் நூற்றாண்டின்
வர்ணம் தீட்டி திணிப்பார்கள்.
சாதி மத கொட்டாங்கச்சிகளிலேயே
நீச்சல் அடிக்க வைப்பார்கள்.
கிருஷ்ணனும் கோபிகைகளும்
அடிக்காத லுட்டிகளா?
அவையெல்லாம் புனிதமாகி விடும்.
காதலர் தினம் என்று
இங்கு இளம் மொட்டுக்கள் கொஞ்சம்
இதழ் திறந்து இதயம் திறந்தால்
குரூரமாக அவை கூழாக்கப்படும்.
அதிலும்
பெரிய சாதியும் சின்ன சாதியும்
காதலை பரிமாறிக்கொண்டால் போச்சு.
அவர்கள் கசாப்பு தான்.
இன்னும் எத்தனை சுதந்திர போராட்டங்களுக்கு
கொடி உயர்த்த வேண்டுமோ?
மலை ஏறு !
சறுக்கலுக்கு இடம் தராதே.
தொலைக்காட்சிகளில் கூட
சனாதனத்தின் பிடிவாதங்கள் தான்
லேசர் ஜோடனைக்குள்
பொதிந்து தரப்படுகின்றன.
அந்த உச்சி வானத்தை பிடித்து விடு.
அப்போது தான்
அச்சமில்லை அச்சமில்லை என்று
நீ பாட முடியும்.
நம் விடியலின் தொப்பூள் கொடியே
நம் தேசக்கொடியை நம்பிக்கையோடு
ஏற்றி வைக்கும்.
"ஜெய்ஹிந்த்".
ஆம் ..இது "ஜெய்ஹிந்த்" மட்டுமே.
வர்ணாசிரம
மற்றும் வேதாந்த விசாரங்களின்
தீட்டுப்பட
ஒரு போதும் வழி ஏற்படுத்தி விடாதே.
ஜனநாயகத்தின் மிருக பலம்
முஷ்டியை எவ்வளவு முறுக்கி
உயர்த்தியபோதும்
நம் ஜனநாயகத்து ஆளுமையின்
ஊழிப்பேரலைகள் உறுமுவது
கேட்கின்றதா?
எச்சரிக்கையோடு முன்னேறு..
மலை ஏறு! மலை ஏறு !

--------------------------------------------------------




வியாழன், 11 ஜூலை, 2019

யார் இவள்?


யார் இவள்?
=============================================ருத்ரா
நான்
எழுதுவதன் சொல்லுக்குள்
எழுதுமுன்னேயே
நுழைந்து விடுகிறாள்.
நான் துடிக்கும் இதயத்துள்
என் வால்வுகள் திறக்குமுன்னே
அங்கு போய் துடித்து துடித்து
வதம் செய்கிறாள்.
நான் செல்ஃபோன் தொட்ட போதே
ஹாய்..என்னடா மேட்டர்.சொல்லுடா லூசு
என்கிறாள்.
என்னோடு அவள்.அவளோடு நான்.
உன் முகம் காட்டு என்றேன்.
வானத்தைப்பார் என்கிறாள்.
ஒன்றும் புரியவில்லையா?
கட கடவென சிரிக்கிறாள்.
என்னை நினைத்துக்கொண்டே
அந்த மேகத்தைப்பார் என்றாள்.
அப்படியே பார்த்தேன்.
என்ன ஆச்சரியம்?
அந்த குறிப்பிட்ட மேகம்
அச்சு அவளே தான்..
அதை அந்த மேகம் கலையும் முன்னே
அவளைக் "கைப்பிடித்தாக வெண்டும்"
முட்டி மோதிக்கொண்டு ஓடுகிறேன்.
...............
அந்த தினச்செய்தியில்
செய்தி இப்படித்தான் வந்தது.
ஒரு இளைஞன் விபத்தில்
ரத்த வெள்ளமாய்க் கிடந்தான்.
அந்த ரத்தச்சேறு கூட ஒரு பெண்ணின்
"சைடு போஸ் சிரிப்பு போல‌
உதடுகள் காட்டி
"ஏதோ சிரித்துச்சொன்னது"
=================================================
=========================================================

செவ்வாய், 9 ஜூலை, 2019

அளபடை இயக்கவியல்




அளபடை இயக்கவியல்

ருத்ரா



குவாண்டம் மெக்கானிக்ஸ் எனும் அளபடை இயக்கவியல் இந்த 21  ஆம்
நூற்றாண்டுக்குள் கூட அடை படாது. இதன் நுட்பமும் ஆராய்ச்சித் தினவும்
அறிவியலாளர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். விண்வெளி இயலில் இது புதிய கோட்பாடுகளை திறந்து வைத்திருக்கிறது.மேலே கண்ட இந்த நூல்  ஜான் எல் போவெல் ,பெர்னாட் க்ராஸ்மான் ஆகிய இருவரால் ஆக்கப்பட்டிருக்கிறது. 1988ல் முதல் பதிப்பாக இது வெளிவந்துள்ளது.கல்லூரி மாணவர்களுக்கான படைப்பு இது. அறிவியல் ஆர்வம் மிக்க கணித புத்தகப் புழுக்களுக்கு கூட இதில் தீனி நிறையவே இருக்கிறது. அருமையான நூல்
என விஞ்ஞான மேதைகளால் புகழப்பட்டிருக்கிறது இந்த நூல்.

அலை இயங்கியத்தின் அடிப்படையிலிருந்து இது துவங்குகிறது.(பக்கம் 35)
ஒளி மின்னியல் விளைவுகளின் பரிசோதனை ஒரு முககிய திருப்பத்தை நமக்குத் தந்திருக்கிறது.ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தந்த கோட்பாட்டுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.உலகமே அவரது "சார்புக்கோபாடுகளை கொண்டாடிய போதும் இதற்கே நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருப்பது அவரது அறிவு நுட்பம்  பெரிதும் பாராட்டப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. சிதறல் அடையும் மின்காந்த அலையின் ஆற்றல் உட்கொள்ளப்படுவது வெளியே கதிராக பாய்ச்சப்படுவதும்
"துண்டு பட்ட  அளவு பாடு அல்லது அளபடைகளிலேயே"தான் (டிஸ்கிரீட் குவாண்டா) உள்ளன என்பது தான் இந்த "அளவுபடை  இயக்கவியலின்" இதயம் போன்ற
முக்கியப்பகுதி ஆகும். இதன் உள்ளே இன்னும் நுழைந்தால் வியப்பும் அந்த  நுட்பம் தரும் ஒரு அறிவு நெகிழ்ச் சியும் நம்மை சிலிர்க்க வைக்கும்

(தொடரும்)




அவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டார்கள்.

அவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டார்கள்.
==================================================ருத்ரா

தாத்தா அடைந்து கிடந்த
அந்த அறையில்
காலம் நீண்டு நெளிந்து
சினைப்பிடித்து
சட்டையுரித்த நாற்றம்.
காலத்தின் குஞ்சுகள்
கடிகாரத்தின் "டிக் டிக் டிக்"குகளில்
அங்கே சிதறிக்கிடந்தன.
தாத்தா
அந்த வைக்கல் சுருட்டிய
கடைசித் தலையணையில்
கிடத்தி வைக்கப்பட்டபோது
அவர் கனவுகளின்
புகைச்சுருள்
கொள்ளிச்சட்டியில்
மிச்சமாய் சுருண்டு சுருண்டு வந்தது.
அப்படி என்ன தான்
அவர் அறையில்
அவரை இத்தனை வருடம்
கவ்விப்பிடித்திருக்க கூடும்?
அந்த பழைய ட்ரங்குப்பெட்டியை
குடைந்தேன்.
வர்ணம் உதிர்ந்து
அங்கங்கே நசுங்கி இருந்தது.
அந்த பழம்பொருட்களை கவிழ்த்தேன்.
உருண்டையாய் சிறிதாய்
இரண்டு காசிச்செம்புகள்.
இதனை எப்படி மறந்தனர்?
உள்ளே காசித் தீர்த்தம் குலுங்குவது
கேட்டது.
அழுகிறதோ ?
அப்புறம் பொடிப்பொடியாய்
உதிரும் பழுப்பேறிய காதிதங்களில்
தேவாரம் திருவாசகம் புத்தகங்கள்.
திருமந்திரத்தில் ஏதோ பக்கத்தை மடித்து
அடையாளம் வைத்திருந்தார்.
"மரத்தை மறைத்தது மாமத யானை.
மரத்தில் மறைந்தது மாமத யானை.
...........................................................
................................................................."
சிவபூசையில்
தீட்சை எல்லாம் வாங்கி விட்டாராம்!
சாமி என்னடா சாமி என்னடா சாமி?
அது ஓஞ்சா அது ஒம்மேல படுத்துக்கிடும்!
நீ ஓஞ்சா அது மேலே நீ படுத்துக்கோ!
ஒண்ணுக்கு இருக்கிற நாய்க்கு
செக்கும் சிவலிங்கமும் ஒண்ணு தாண்டா.
சொல்லிவிட்டு
அட்டகாசமாய் சிரிப்பார்.
இன்னும் குடைந்தேன்.
சில அபூர்வ சிலைகள்.
அனைத்தும் நிர்வாண சிலைகள்..
சில வேளைகளில்
அந்த  சிலைகளைப் பார்த்து
உரத்து முழங்குவார்..
புத்தம் சரணம் கச்சாமி
என்று சொல்லிக்கொண்டே போய்
"சமணமும் சரணம் கச்சாமி"
என்று முடிப்பார்.
இன்னும் தோண்டித்  துருவிப்  பார்த்தேன்.
என்ன!
அவை "போர்னோ புத்தங்களா?"
அதிர்ச்சியில் உறைந்தேன்.
இதில் உறைவதற்கு என்ன இருக்கிறது?
எல்லாவற்றையும்
எல்லாவற்றிலும்
கண்டவர் விண்டதில்லை.
விண்டவர் கண்டதில்லை.

அவர் கருத்தில்
நிர்வாணமே பிரம்மாண்ட தெய்வம்.
உயிர்ப்பிழம்பின்
சொக்கப்பனையில்
ஆண் என்ன? பெண் என்ன?

அவர்கள் எல்லோரும் திரும்பிவிட்டார்கள்
அவர் சாம்பலை கரைத்துவிட்டு.

==================================================





பட்ஜெட்



பட்ஜெட்
=======================================ருத்ரா


பொருளாதார வல்லுநர்களுக்கு
போதையேற்றும்
சில புள்ளிவிவரங்களின்
காக்டெயில் பார்ட்டி தான் இது.
ஏழைகளின் சொர்க்கம் இதோ
என்பார்
ஒரு அரைக்கால் சதவீத வளர்ச்சி காட்டி.
பணக்காரர்களுக்கு
சரியான சவுக்கடிகள் என்பார்.
அந்த சவுக்குள் எல்லாம் சும்மா
கிச்சு கிச்சு மூட்டும்
மயிற்பீலிகளின் சாமரம் தான்.
இரும்பு மனிதருக்கு
மூவாயிரம் கோடியில்
ஒரு சிலை..இதோ
பாருங்கள் என்கிறார்.
ஒரு மழையில்  எல்லாம் புரிந்தது.
சிலை
அவருக்கல்ல.
மழையின் ஆகாய கங்கை
அவர் தலை வழியே ஒழுகித் தீர்த்தபோது தான்
அது ஒரு "பகீர"தன் தவத்துக்கு என்று
புரிந்து போனது!
இவர்கள் ஒளித்து வைத்த ஊழல் எல்லாம்
கொட்டிக்கவிழ்த்து  காட்டியது.
இவர்கள் தவம் எல்லாம்
அந்த பங்குமார்க்கெட் பகாசுரர்களுக்குத் தான்
என்று புரிந்தது.
இன்னொரு உச்சம் தொடவேண்டுமென்றால்
ஒரு ஈ காக்கை இல்லாத
இமயமலையின் உச்சியிலே
கோடி கோடி காக்கை குருவிகளை
சுட்டு வீழ்த்தினோம் என்பார்கள்.
பங்கு வியாபாரமும் கொடிகட்டி பறந்து விடும்.
வருமானத்திலிருந்து விலக்கியே
வைக்கப்பட்டவர்களின்
பெரும்பான்மை ஜனநாயகத்தின் தேசம் இது.
ஆனாலும்
அந்த சிறுபான்மையின் "குச்சி மிட்டாய்"
வரிச்சலுகை எனும்
வருமான வரி விலைக்குகளை
வானளாவ புகழ்ந்து நிற்பார்.
சில கூழாங்கற்கள் சந்தோஷப்படலாம்.
ஆயிரம் இமயங்களை திரட்டி வைத்திருக்கும்
அந்த பெரும்பணக்காரர்களின்
கருப்புக்கோட்டைக்குள்
இவர்களின்
மூவர்ணக்கொடி முனைமுறிந்து அல்லவா
கிடக்கிறது.
அதுவும் அந்த
நான்கு வர்ண ஐந்து வர்ண
சாதி மத மத்தாப்புக்காடுகளில்
மாய்மாலங்கள் கொழுந்து விட்டு எரிய
நம் வரலாற்றுபக்கங்கள் எல்லாம்
கருகிக்கிடக்கின்றன.
ஆனாலும் அதோ
மேசைகள் தட்டுகிறார்கள்
காதுகள் பிளக்க.

==========================================================






திங்கள், 8 ஜூலை, 2019

குரல்

குரல்





குரல்
================================================ருத்ரா இ பரமசிவன்

ஒற்றையாய் நின்று ஒரு தவம்.
குருவிக் கூட்டங்களுக்கு ஏங்கி
அந்த பஞ்சு சிறகுகளின் வருடல்களுக்கு
கனவு கண்டு
நிற்கிறது இந்த ஒற்றை மரம்.
சூரியக்குளியலில்
வருடங்கள் எனும் சோப்புக்கட்டிகள்
கரைந்து
இப்படி ஒரு சிறு மரமாய் நிற்கிறது.
இலை இடுக்குகளில்
வெள்ளி ஒழுகும் வெளிச்சத்தின்
குமிழிப்பூக்களில்
தன் கன்னி ஏக்கங்களை
நிரவிக்கொள்ளும் சல சலப்புகளே
அதன் இதயத்துடிப்புகள்.
சிறுவர்களின் சைக்கிள் சக்கரங்கள்...
கால் பந்தாட்டக்காரர்களின்
விறைப்பான உதைப்புகள்..... .
அடியில் சிலநேரங்களில்
இளஞ்ஜோடிகள்
தங்கள் தாகத்தை
சில நுணுக்கமான சிற்பவடிவங்களைப்போல்
வெளிப்படுத்தும் இனிய தருணங்கள்.....
எல்லாமும்
அதன் வேர்த்தூவிகள் முனை வரைக்கும்
நனைத்து நிற்கும்.
அதன் இலை நரம்போட்டத்திலும்
"மெகந்தி"தீட்டும்.
"இப்போது தான் தெரிந்ததா?
என்னை?
வாருங்கள் ..வந்து அமருங்கள்"
அதன் குளிர்நிழலில் சற்று
அமரலாம் என்று அங்கே சென்ற
எனக்கு
அந்த மெல்லிய இனிய குரல் கேட்டு
திடுக்கிட்டு விட்டது.
இது என்ன குரல்?
யார் பேசுவது?
எனக்கு உடம்பு சில்லிட்டு விட்டது.
திரும்பி பிடரி தெறிக்க விரைந்தேன்.
"போகாதீர்கள் ...போகாதீர்கள்.."
குரல்
என்னைத் தொடருகிறது!

==================================================

the EVM

the EVM
-----------------------------------------
Our holy
But the largest
"White Elephant" born
In the digital womb
from where the dices are thrown
making our "bi-cameral" DEMOCRACY
always a myth of long drawn history
of gloom
studded with caste and creed.
In the darkest woods of computer memory
the people lost all their memory
And the question still hangs
to an existence or non-existence
but they are programmed
to  extinct to a void
But with praying hands and
chanting mouths
at frozen mum...a deadly silence
With no norms and forms
Of Democracy
Alas! to be only cherished
But not to be brought to LIFE.
-------------------------------------------

a road leading to A ROAD

a road leading to A ROAD
------------------------------ruthraa e paramasivan

When I gaze through a feeder road
it shows the other but
the invisible end of the
tunnel
Again pregnant with an infinity of
of A ROAD
Bearing an ever floating
name that
Suggests a God or no God...
a Google page is opened with
Fantacy of doors
With all its murals of graphics
Sans rationalist charms.

----------------------------------


வியாழன், 4 ஜூலை, 2019

கடவுளே...

கடவுளே...
===================================================ருத்ரா

கடவுளே
கை கூப்புகின்றோம்
தினம் தினம்
உன் திசை நோக்கி.
திசை தான் தெரியவில்லை.
ஆனாலும்
கை கூப்புகின்றோம்.

கடவுளை
உன் முகம் கண்டு
தரிசனம் செய்து களிக்கின்றோம்.
உன் முகம் தெரியவில்லை
ஆனாலும்
உன்னை தரிசனம் செய்கின்றோம்.

உன்னைப் புகழ் பாடி
தினம் தினம்
சொற்கள் அடுக்குகின்றோம்.
சொற்களில் வெறுமை தான்
உள்ளதென்று அறிகின்றோம்.
ஆனாலும்
உன் புகழ் பாடுகின்றோம்.

நீ யார்?
நீ எங்கே?
நீ எப்பொழுது பிறந்தாய்?
பிறந்தாய் என்று
இறந்து போவதும்
இயற்கை தானே!
அதை எங்களால்
பொறுக்க முடியாது.
அதனால்
உனக்கு பிறப்பு இறப்பு
இல்லை
என்று சொல்லி
பூரித்து புல்லரித்து
புளகாங்கிதம் கொள்கின்றோம்.

இப்படி
கேள்விளையும் விடைகளையும்
எங்களுக்குள்
கோர்த்துக்கொண்டு
நீ இருப்பதால்
நீ இருக்கிறாய் என்றும்
நீ இல்லை என்றும்
நாங்கள்
"பாஷ்யங்கள்" படைக்கின்றோம்.

வானத்திலிருந்து
ஒரு குரல் கேட்கிறது.

நீ என்னைப்பார்க்கிறாய்.
நான் உன்னைப் பார்க்கிறேன்.
இது
வெறும்
பிம்பங்களின் பரிமாற்றம்.

அப்படி என்றால்
நீ யார்?
நான் யார்?

விஞ்ஞானி கூறுகிறான்.
இப்போதைக்கு
அது "ஹிக்ஸ் போசான்".

என்னது?
ஹயக்கிரீவரா?
விளங்கும்படி சொல்லுங்களேன்.

ஆகட்டும் இருங்கள்.
சாக்பீஸில்
கணித சூத்திரங்கள்
வரிசையாய்
எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அந்த கணிதம்
எனும் மொழியில்
சுவர்கள் இல்லை?
வேலிகள் இல்லை?
தொடர்ந்து அவை
எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஆத்திகன் கண்ணீர் மல்கி
கன்னத்தில் போட்டுக்கொள்கிறான்.
நாத்தினோ
மொழியல்லாத அந்த மொழிக்குள்
நுழைந்து
போய்க் கோண்டேயிருக்கிறான்.

ஆமாம்.
அது யார்?
அது எங்கே?
அது எது?

முற்றுப்புள்ளிகளின் தோல்வியில்
அறிவின் வெற்றி
புன்னகைத்துக்கொண்டிருக்கிறது.

=========================================================

செவ்வாய், 2 ஜூலை, 2019

பிக் பாஸ் எனும் புதைகுழிகள்

பிக் பாஸ் எனும் புதைகுழிகள்
================================================ருத்ரா


தொலைக்காட்சிகள்
ஏதோ மந்திரவாதிகளின்
சூ மந்திரக்காளிப் பெட்டிகள்
கர்ப்பம் தரிக்கும் காட்சிகளாக‌
பரிணாமம் பெற்றது
வளர்ச்சியா? வீழ்ச்சியா?
எங்கோ
ஆயிரம் ஒளியாண்டுகள்
தூரத்தில் இருக்கும்
ஒளிபிழம்புகளை
நம் வீட்டு அறைக்குள்
கொண்டு வந்து
சமையலுக்கு வெங்காயம் உரிப்பது போல்
இதழ் இதழாக
பிரபஞ்ச முகம் உரித்து
உற்றுநோக்குவதாய் ஆனது
நம் அறிவு வளர்ச்சியின்
பரிணாமங்கள்.
அதை வைத்துக்கொண்டு
மனித உள் ஆழங்களில்
தூண்டில் இடப்போகிறேன்
என்று
சிக்மெண்ட் ஃப்ராய்டின் முகமூடியைப்
போட்டுக்கொண்டு
சில்லறை மழையை
விளம்பரங்கள் மூலம்
பொழிய வைத்து
பார்வையாளர்களை
அச்சம் முதல் அசிங்கம் வரை
ஒரு மாயக்கயிறு கட்டி
அறிவு வீழ்ச்சியின் ஒரு
பாமரத்தனமான மலையை
வடம் பிடித்து இழுத்துக்கொண்டிருப்பதே
இந்த பிக் பாஸ் மாய்மாலங்கள்.
உண்மை மனிதர்களின்
பிம்பத்துக்கு சட்டை போட்டு
ஜீன்ஸ் மாட்டி
மற்றும் சல்வார் கமீஸ்
சில்லிப்புகளோடு
சித்திரம் காட்டும்
இந்த "ஹாலுசினேஷன்"களின்
வக்கிரங்கள்
சமுதாய மன மலர்ச்சிக்கு
தோண்டப்படும் புதைகுழிகள்.
பரபரப்பு திகில்
குற்ற மிழைக்கும் வெறிப்படுகைகள்
இவற்றை பூச்சாண்டி காட்டி
காதல் காமம் இவற்றையும்
பஞ்சு மிட்டாய் ஆக்கி
ஒளி பரப்பும்
இந்த சமுதாய மனமுறிவுகளில்
ஆக்கபூர்வம் என்பதை விட‌
அழிவுக்கு தினவு ஊட்டும்
காட்சி விருந்துகளே அதிகம்.
உலகம் பூராவுமே
மனிதனின் பலவீனங்களே
பணம் காய்ச்சி மரங்களாய்
மகசூல் குவிக்கின்றன.
இதற்கு எதிர் மறை சிந்தனையோட்டம்
ஒன்று
சமுதாய மின்காந்தப்புலனில்
ஒரு மின்னொளிப்புயலை
தோற்றுவிக்க வேண்டிய கட்டாயம்
நமக்குள்
உந்துதல் ஆகத்தான் வேண்டும்.
இந்த புதைகுழிகளில்
புதைந்து போய்விடாதீர்கள்
அன்பான பார்வையாளர்களே!

===========================================================

யோகிபாபுவின் தர்மப்பிரபு

யோகிபாபுவின் தர்மப்பிரபு
==========================================ருத்ரா

புராணங்களில்
எமதர்மன் என்பவன்
எருமைமாடும் பாசக்கயிறுமாய்த்தான்
அலைவான்.
இறப்புக்கடவுள்
இங்கே எப்படி
யோகிபாபுவிடம்
சிரிப்புக்கடவுள் ஆனார்?
இன்று நேற்று அல்ல‌
சினிமா நடிகர்களின்
சிரிப்பு வசனங்கள்
எப்போதுமே இந்த
எம தர்ம ராஜாவை
சின்னா பின்னப்படுத்தி
சும்மா ஆயிரம் வாலாக்களை
தெறிக்கவிட்டு
சிரிப்பினால்
சிலுப்பவைத்துக்கொண்டிருக்கின்றன.
ஐந்து ஆண்டுகளாய் நடத்திய‌
தமாஷ்
போதாதென்று
இன்னொமொரு ஐந்தாண்டு
தமாஷ்க்கு
குத்தகை எடுத்த காவிக்காரர்கள்
பற்றி வயிறு குலுங்க
சிரிக்கவைக்கும் பாணியை
யோகிபாபு கையில் எடுத்திருப்பதே
வசூல் குவியக்காரணம்.
முக நூல் வழியாகவும்
யோகி பாபுவுக்கு
ஒரு செவண்டி எம் எம் திரை
சிரிக்க சிரிக்க
விரிந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய
நிகழ்வு தான்!
அந்தக்காலத்தில்
திராவிட ஆட்சியை கிண்டல்
பண்ணிய "துக்ளக் சோ"வுக்கு
ஒரு படை திரண்டது போல்
இப்போதும் இளைஞர் படை
திரள்கிறது.
"ஆரியக்கூத்தாடினாலும்
காரியத்தில் கண் வைத்திருப்பவர்கள்
அல்லவா வடக்கத்தியர்கள்.
பாருங்கள்
புதுச்சேரி வழியாகவும்
ஒரு பொம்மைத்துப்பாக்கியை
நீட்டுகிறார்கள்.
தமிழர்களே!
துப்பாக்கி வேண்டுமானால்
பொம்மையாக இருக்கலாம்
ஆனால் குறி வைப்பது
உண்மை தான்.
சிம்பு தேவர்களே
இந்த யோகி பாபுவை வைத்து
அந்த பொம்மை ராஜ்யத்தையும்
கொஞ்சம்
தோலுரித்துக்காட்டுங்களேன்.
நாங்கள் முன்னூறுக்கும் மேல்
ஜெயித்த பெரிய ஜனநாயகம் என்பார்கள்.
அன்று அந்த "துக்ளக்கும்"
இந்த பெரிய ஜனநாயகத்தை
சட்டை செய்யவில்லையே.
மதம் சுரண்டலுக்கு துணைபோயிருக்கலாம்.
மதமே சுரண்டல் ஆனது தான்
இன்றைய வேதனையான வரலாறு.
வேதனைகளையும் நகைச்சுவையாக்கி
நம் சிந்தையில் கூர் தீட்ட வேண்டிய‌
கால கட்டம் இது.
இட்லரின் நறுக்கு மீசையை
ஒட்டி வைத்துக்கொண்டு
அன்று
சார்லி சாப்ளின் அடிக்காத லூட்டியா?
யோகிபாபுகள்
நம் விடியலுக்கு வழிகாட்டட்டும்.

==============================================

திங்கள், 1 ஜூலை, 2019

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.
==============================================ருத்ரா

தமிழ் என்றால் தமிழுக்குள்ளும்
ஆயிரம் மொழிகளின் விதை இருக்கும்.
உலகம் இமை விரித்திட‌
சிந்தனைக்கதிர்கள் தந்தது தமிழ்.
ஞா என ஒலிக்கும்போது
நாவின் ஊஞ்சல் ஓசை கேட்கும்.
ஞாலுதல் என்பது தொங்குதல் குறிக்கும்.
நாண்டுகிட்டு இறந்தான் என்பது
ஞான்று கொண்டு இறந்தான் என்பதே ஆகும்.
ஊஞ்சல் எனும் ஊசல் தான்
இந்த ஞாலம் எனும் உலகம்.
விண்வெளியில் ஈர்ப்புக்கயிற்றில்
தொங்குவதே நம் ஞாலம் என்னும்
உலகம் ஆகும்.
ஞான் என்றும் நான் என்றும்
உட்கிடக்கை அறிவதே ஞானம் ஆகும்.
தமிழ் எனும் சொல்லுக்கும்
ஒரு வேர் உண்டு.உயிர் உண்டு.
ஒலித்தல் இமிழ் ஆகும்.
தம் ஒலி எனும் நம் மொழி அல்லது பேச்சு
இங்கு தமிழ் ஆனது.
தமிழ் எனும் மொழி
இனிய தண்ணிய அருவி போல்
ஒலிக்கும்.
தனிமையில் இருக்கும் போதும்
தமிழ் பற்றி நினையுங்கள்.
தமிழ் தனில் நனையுங்கள்.
சிந்தனை விரியும்.கற்பனை பெருகும்.
அதுவே அறிவின் ஒளி.

===========================================================