சனி, 30 நவம்பர், 2019

ரஜினி எத்தனை ரஜினி


ரஜினி எத்தனை ரஜினி
====================================================ருத்ரா


மோடி அமித்ஷாக்கள் தான்
கிருஷ்ணரும் அர்ஜுனரும்
என்று
சூப்பர் ஸ்டார் சொல்லிவிட்டார்.
அது யார் எழுதிய
மகாபாரதம் என்று தெரியவில்லை.
ஆனால் இன்று
மகாராஷ்டிரம் எழுதி விட்டது
இவர்கள் தரித்திருந்தது
வெறும்
அட்டை முகமூடிகள் என்று.

கொசுவை கொல்ல
கோடரி தூக்கியவராக‌
அந்த கனமான
"ஸ்பெஷல் செக்சன் ரூல் நம்பர் 12 ஐ"
தூக்க முடியாமல் தூக்கி
பயன்படுத்தி
காலில் போட்டுக்கொண்டு
காயம் பட்டு போனார் மோடிஜி.
ஆனாலும்
தப்பியது ஜனநாயகம்
அந்த படுகொலையிலிருந்து!
வியூகம் வகுத்த அமித்ஷாவோ
அந்த வியூகத்திலேயே மாட்டிக்கொண்டு
வெளியே வர முடியாமால்
எங்கோ மறைந்து கொண்டார்.
ரஜனி அவர்களே
நீங்கள்
வாயை திறக்காமல் இருப்பதும்
அதிசயம் தான்.
வாயைத்திறந்தாலும்
அதிசயம் தான்.
மகா பாரதத்தை  இப்படி
கொச்சை படுத்தியது போல்
நாளைக்கு
எங்கள் வள்ளுவன் சிலையைப்பார்த்து
அது "வால்மீகியின் சிலை"
என்று கூறினாலும் கூறிவிடுவீர்களோ
என்று நாங்கள் அச்சப்படுகிறோம்.
"தர்பாரின்" கதை
 எப்படியிருந்தபோதும்
தமிழ் நாட்டில் மீண்டும் ஒரு
"பொம்மைக்கொலு"வின்
தர்பார் வந்திடுமோ
என்றொரு அச்சமும் இருக்கிறது.
ரஜனி அவர்களே
அரசியல் என்பது
மூடு மந்திரம் அல்ல.
வேடங்கள் போதுமா?
ரஜினி அவர்களே
ரஜினி எத்தனை ரஜினி
நீங்கள்?

==========================================================

ஐந்து விரல் அழகு

ஐந்து விரல் அழகு
========================================ருத்ரா

நகம் கடித்துக்கோண்டே
ஓரப்பார்வையில்
என்னை பார்க்காதது போல்
பார்க்கின்றாயே நீ!
கொள்ளை அழகு அது.
ஐந்து விரல் நகத்தையும்
கடிக்கின்றாய் நீ.
ஆனால் அது எப்படி
ஐந்து தலை நாகமாய் 
என்னைக் 
கடித்துக்கொண்டே இருக்கிறது? 

============================================

வியாழன், 28 நவம்பர், 2019

கிருஷ்ணரும் அர்ஜுனரும் ரஜினியும்...

கிருஷ்ணரும் அர்ஜுனரும்  ரஜினியும்...
====================================================ருத்ரா


மோடி அமித்ஷாக்கள் தான்
கிருஷ்ணரும் அர்ஜுனரும்
என்று
சூப்பர் ஸ்டார் சொல்லிவிட்டார்.
அது யார் எழுதிய
மகாபாரதம் என்று தெரியவில்லை.
ஆனால் இன்று
மகாராஷ்டிரம் எழுதி விட்டது
இவர்கள் தரித்திருந்தது
வெறும்
அட்டை முகமூடிகள் என்று.

கொசுவை கொல்ல
கோடரி தூக்கியவராக‌
அந்த கனமான
"ஸ்பெஷல் செக்சன் ரூல் நம்பர் 12 ஐ"
தூக்க முடியாமல் தூக்கி
பயன்படுத்தி
காலில் போட்டுக்கொண்டு
காயம் பட்டு போனார் மோடிஜி.
ஆனாலும்
தப்பியது ஜனநாயகம்
அந்த படுகொலையிலிருந்து!
வியூகம் வகுத்த அமித்ஷாவோ
அந்த வியூகத்திலேயே மாட்டிக்கொண்டு
வெளியே வர முடியாமால்
எங்கோ மறைந்து கொண்டார்.
ரஜனி அவர்களே
நீங்கள்
வாயை திறக்காமல் இருப்பதும்
அதிசயம் தான்.
வாயைத்திறந்தாலும்
அதிசயம் தான்.
மகா பாரதத்தை  இப்படி
கொச்சை படுத்தியது போல்
நாளைக்கு
எங்கள் வள்ளுவன் சிலையைப்பார்த்து
அது "வால்மீகியின் சிலை"
என்று கூறினாலும் கூறிவிடுவீர்களோ
என்று நாங்கள் அச்சப்படுகிறோம்.
"தர்பாரின்" கதை
 எப்படியிருந்தபோதும்
தமிழ் நாட்டில் மீண்டும் ஒரு
"பொம்மைக்கொலு"வின்
தர்பார் வந்திடுமோ
என்றொரு அச்சமும் இருக்கிறது.
ரஜனி அவர்களே
அரசியல் என்பது
மூடு மந்திரம் அல்ல.

====================================================

புதன், 27 நவம்பர், 2019

இதோ வந்து விட்டாய்.

இதோ வந்து விட்டாய்.
========================================ருத்ரா

மீண்டும் சந்திப்போம் 
என்றாயே!
வந்து வந்து போயிற்று.
இந்த சூரியனும்
லட்சம் லட்சம் தடவைகள்.
இந்தக் காலமா
நம் காதலை விழுங்க வருவது?
நம் காதலுக்குள்
யுகங்கள் எல்லாம் குமிழிகளாய்
கரைந்து போயின.
இதோ வந்து விட்டாய்
தூரங்கள் தொலைந்து போயின.
ஆம்.
இதோ வந்து விட்டாய்.

==================================================

இது தான் அது.

https://tamil.oneindia.com/news/madurai/enemies-have-to-die-before-we-come-to-power-otherwise-they-will-face-action-says-seeman/articlecontent-pf417879-369786.html

இது தான் அது.
========================================ருத்ரா

கிளை விட்டு கிளை தாவும்.
யாரேனும் உற்றுப்பார்த்தால்
உர்ரென்று
வலிப்பு காட்டும்.
தேவையில்லாமல்
குட்டிக்கரணங்கள் போடும்.
இங்கிருந்தே இலங்கைக்கு தாவும்.
அங்கிருந்து தமிழ் நாட்டுக்கு தாவும்.
சம்பந்தா சம்பந்தமில்லாமல்
அதை
ராமா ராமா
என்று தான் கூப்பிடவேண்டும்.
மாமியார் செத்துவிட்டதாய்
மார்பில் மார்பில் அடித்துக்கொள்ளும்.
தண்ணீர் சுமந்து வருவது போல்
கைகளை தலை மேல் வைத்துக்கொண்டு
தள்ளாடி நடந்து வரும்.

புலிகள் எல்லாம்
அதுவே போட்ட குட்டிகள்
என்று
மீசை முறுக்கும்
பல்லைக்கடிக்கும்.
நரம்புகள் புடைக்கும்.
இதை "அட்மிட்"செய்துகொள்ள
பத்து
கீழ்ப்பாக்கங்கள் கூட
பத்தாது.
இதன் கையில் ஒரு பூமாலை.

தமிழ்
தமிழர்
திராவிடம்
தமிழின் முருகக்கடவுள்
அண்ணா
பெரியார்
கலைஞர்
ஜன நாயகம்
ஈழத்தமிழர்
கொஞ்சம் சினிமா
வெந்தும் வேகாத
சில இளைஞர்கள்
ராஜிவ் காந்தி

இத்தனைப்பூக்களையும்  கொண்ட
அந்த பூமாலை
அதன் கையில்
என்ன பாடு படுகிறது ?
பூக்களைப்பிய்த்து பிய்த்து
தின்கிறது.
கழுத்தில் போட்டுக்கொண்டு
சுற்றி சுற்றி முறுக்கி
கழுத்தையே நெரித்துக்கொள்கிறது!

இது
இஞ்சி தின்று
கள்ளும் குடித்து
தேளும் கொட்டி

எப்படியெல்லாம்
திருக்கு முறுக்காய்
வில்லங்கம் செய்யும்?
தெரியுமா?

அது தான் மேலே உள்ள சுட்டியில்
காணும் பேச்சு.

============================================================



இந்த புன்னகை என்ன விலை?

இந்த புன்னகை என்ன விலை?
===============================================ருத்ரா

கல்லூரி வகுப்பில்
அப்படித்தான்
அன்று ஒரு நாள்
என்னைப்பார்த்து
க்ளுக் என்று ஒரு சிரிப்பின்
பிஞ்சை உதிர்த்து விட்டு
போய்விட்டாய்.
வகுப்பு முடிந்து எல்லோரும்
போய்விட்டார்கள்.
நான் மட்டும் உன் இருக்கையில்
அதைத் தேடினேன்.
அது அப்போதே விதையூன்றி
அந்த அந்த அறைமுழுவதும்
பரவியிருந்தது
பிரம்மாண்ட விருட்சமாய்.
நீ
எந்த கிளையில்
என்ன இலையாக இருக்கிறாய்.
நீ
எந்த இலை மறைவில்
மொட்டாக இருக்கிறாய்.
நீ
எப்போது அரும்புவாய்?
உன் பசுந்துளிர்
வானத்து
நட்சத்திரங்களுக்கெல்லாம்
தண் ஒளி பாய்ச்சிநிற்கிறது.
அன்பே!
உன் முகம்
விடியல் காட்டும் வரை
இந்த கனவுகளின் ஆரண்யமே
என் இதய அரண்மனை.
இதில் உன் புன்னகையின்
ஆட்சி மட்டுமே நடக்கிறது.

====================================================


செவ்வாய், 26 நவம்பர், 2019

கார்ட்டூன்

கார்ட்டூன்   by  ருத்ரா

(பிஜேபி ஆட் சி  கவிழ்ந்தது)




திங்கள், 25 நவம்பர், 2019

"சும்மா கிழி" (தர்பார்) டீசர்

"சும்மா கிழி" (தர்பார்) டீசர்
=============================================ருத்ரா

(தமிழர்களே! தமிழர்களே!
நீங்கள் விழிதெழ வேண்டிய வேளை இது)

சும்மா கிழி கிழி
கிழிச்சு தோல உரி உரி
தமிழா தமிழா
குதிச்சு குதிச்சு
நீயும் இங்கே
குத்தாட்டம் போடு போடு.

வெத்தாட்டம் ஆடி ஆடி
விசை இழந்து போனியே.
தமிழன்னா
நெருப்புடா!
திராவிடம்னா
உயிர்ப்புடா
தெரிஞ்சுக்கடா
புரிஞ்சுக்கடா
நெழலுக்குள்ளே
பொதஞ்சு போனா
நெஜம் மறஞ்சு
போகுமடா!
வெறும் புல்லு இல்லே நீ
தெருப் புழுவும்  இல்லே நீ
பெரும்புயல் நீயடா!
ஊழிக்காற்று வீசடா!
அரிதாரக்குப்பையிலே
அடஞ்சு கெடந்தது
போதுமடா!
எரிகாரம் நீயடா
எரித்து விடு
எரித்து விடு
இந்த
கச்சா பிலிம்
கனவுகளை.
திரைக்கதை
ஜிகினாக்கோட்டை
கட்டுனது
போதுமடா.
தரை உதைத்து
எழுந்து வா
தூசி பறக்கும்
தூசி பறக்கும்
பொடிப்பொடியாய்
இங்கு இனி
பொய்மை செட்டிங்
பொம்மை எல்லாம்
தூளாகி தூளாகி
தூசி பறக்கும்
பாரடா!
ஒளி படரும்
ஒளி படரும்
ஓங்குக நம் தமிழடா
வெல்க நம் திராவிடம்.

====================================================

நீ







நீ
======================================ருத்ரா

சோலையிலே நீ குயில்.
அலையிலே நீ துளி.
வானிலே நீ பிறை.
பூவிலே நீ கனவு.
காயிலே நீ கனி.
எழுத்திலே நீ சுழி.
கருத்தினிலே நீ கனல்.
எனக்குள்ளே நீ பறவை.
உனக்குள்ளே நீயே நான்.
காதலே காதலிக்கும்
என் காதலே நீ.

========================================

ஞாயிறு, 24 நவம்பர், 2019

பேரின்பம்

பேரின்பம்
================================================ருத்ரா

நயாகரா அருவியின்
ஓசையாய் என் மீது
விழுந்துகொண்டே இருக்கிறாய்.
அதன் நீர்ப்புகையில்
சூரியனின் ஏழுவண்ணங்கள்
பிசைந்து பிசைந்து
உன்னைக் காட்டுகிறது.
வாழ்க்கையின் அடர்வனங்களிடையேயும்
உன் ஓசை ஊடுருவுகிறது.
வயதுகள் கரைகின்றன.
ஊனும் உணர்வும்
உருகுகின்றன‌
உறைகின்றன‌
அன்பே!
என் இதயம் துடிக்க‌
இன்னொரு இதயமாய்
என்னோடு
எல்லா திசைகளுக்கும்
பயணிக்கிறாய்.
மாய உதடுகளாய்
என்னைப் புல்லாங்குழல் ஆக்கி
உன் உயிரைப்பொழிகிறாய்.
இன்பம்
இது பேரின்பம்!

======================================================

சனி, 23 நவம்பர், 2019

அரசியல் ஒரு சாக்கடை.


அரசியல் ஒரு சாக்கடை.
=================================================ருத்ரா

அரசியல் ஒரு சாக்கடை.
ஊழல் புழுக்கள் நெளிகின்ற‌
அசிங்கங்களின் ஆரண்யம்.
இப்படி பேசுவதும் ஒரு அரசியல்.
அச்சமூட்டுவது
அருவருக்க வைப்பது
எனும் உத்திகளால்
ஒட்டு மொத்தமாய் உருண்டு திரண்டு
வரும் சமுதாயப்பிழம்பை
நீர்க்க வைத்து
அதில் ஒரு அதிகாரபோதைக்கு
தனியாய் வழி ஏற்படுத்திக்கொள்ளும்
ஏற்பாடே இது.

அரசியல் என்பது
சிந்தனை வெளிச்சம் நிறைந்தது.
இதில்
சாதி சமயம் மற்றும்
மனிதனை மனிதன் சுரண்டும்
பழமை வாத அமைப்புகள்
எல்லாம்
அடிபட்டுப்போகும்
இதில் பளிங்கு ஆறே எண்ண இயக்கத்தில்
ஓடுகிறது.
தனிஉடைமை எனும்
ஊசிமுனையில்
பெரும் சமுதாயம் எனும்
இமயமே நிற்லிறது.
இந்த கூர்முனையில் பெரும்பான்மை மக்கள்
கழுவேற்றப்படுகிறார்கள்.
இரண்டு மூன்று விழுக்காடு மக்கள்
நாட்டின் தொண்ணூற்று ஏழு விழுக்காடு
சொத்துக்களையும்
செல்வாதாரங்களையும்
தன் உடைமை ஆக்கிக்கொண்டு
ஆதிக்கம் செலுத்துவதை
எப்படி முறைப்படுத்துவது?
இந்த கொடுமையான நுட்பம்
மறைக்கப்பட‌
இங்கே எத்தனை எத்தனை புகைமூட்டங்கள்?

தொலைக்காட்சி மற்றும் சினிமாக்கள்..
செய்தி ஊடகங்கள்..
கோவில் திருவிழா கும்பமேளாக்கள்
பக்தி பரவசம் எனும் பொய்மை ரசங்களை
சோம பான சுரா பானமாய்
ஊற்றிக் கொடுத்துக்கொண்டே  இருக்கும்
"சுலோகங்களின் "பீப்பாய்கள் ...
கில்லர் த்ரில்லர்களை வைத்துப்பின்னப்பட்ட
கிரிமினல் கதைகள்...
வர்ண வர்ண கோட்பாடுகள் கொண்ட‌
வகை வகையான கட்சிகள்..
இந்த திசை  திருப்பல்களில்
உலகம் திசையையே இழந்து போனதால்
வறுமையின் கோர நகங்கள்
ரத்தக்கீற்றுகளைக்கொண்டு
இந்த உலகத்தை
ஓவியம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.

ஆப்ரிக்காவில் பல நாடுகளில்
உணவின்றி
எலும்புக்கூடுகளாகவே  பிறந்து
மக்கள்
எலும்புக்கூடுகளாகவே
கல்லறைக்குள் .விழுகின்றார்கள்.

விண்ணை இடிக்கும்
கட்டிடங்களைக்  கொண்ட நாடுகள்
பட்டினியும் பிணியுமாக செத்துவிழும்
மக்கள் பிதுங்கி வழியும் நாடுகளைக்
கண்டு கொள்வதே இல்லை.
மரத்துப்போன மனங்களைக்கொண்டு
கிருஸ்துமஸ் மரங்களை
வண்ணமாக்கி  மகிழ்ந்து கொள்கிறார்கள்.
பிதா மகனும் தேவகுமாரனும்
இன்னொரு புதிய ஏற்பாட்டை
அரங்கேற்றி
நியாயத்தின் ஜீவ அப்பத்தை
எப்போது  பங்கிட்டு கொடுப்பார்கள்?

ஒரு வியர்வைத்துளி என்பது
மனித உயிரின் கோடிக்கணக்கான‌
செல்களின் உயிர்ப்பில்
மழை பொழிவது....
இந்த
"விசும்பின் துளி வீழி ன் அல்லால் "
உலகம் தலை  நிமிர்தல் அரிது.

அந்த மழையின் பயன்களில் எல்லாம்
செழித்துக்கொள்வது
சில குடைக்காளான்களே!
ஆட்சியின் வெண்கொற்றக்குடை
அந்த நாய்க்குடைகளின்
நலம் பேண மட்டும் தானா?
இதைப்பற்றி சிந்திக்க‌
நுண்மாண் நுழைபுலம் வேண்டும் என்கிறார்
வள்ளுவர்.
அது இல்லாத மண்பொம்மைகளால்
எதுவும் விடியப்போவதில்லை.
சிந்தியுங்கள் அன்பான மக்களே!

======================================================







வெள்ளி, 22 நவம்பர், 2019

கண்ணாடி வளையல்கள்

கண்ணாடி வளையல்கள்
========================================ருத்ரா

நாகரிக ஓட்டத்தில்
இந்த கண்ணாடி வளையல்கள்
காணாமல் போய்விட்டாலும்
அந்த கிலுகிலுப்பையில் தான்
காதலில் கிளு கிளுப்புவின்
அகர முதல தொடங்குகிறது.
அன்பே!
இப்படி நான் சொன்னதற்காக...
இதுவும் கூட‌
ஒரு நாவலைப்படித்ததால்
ஏற்பட்ட கிளர்ச்சி தான் அது...
என்னை ஏற இறங்க பார்த்து
என் வயதுகளை ஆராய ஆரம்பித்து விட்டாய்.
"சுடிதார்"ப்பெண்ணல்லவா நீ!
அப்புறம்
அந்த கண்ணாடி வளையல்
ஒலிப்புகளை உடைத்து நொறுக்கிவிட்டேன்.
அன்றொரு நாள்.
செல்ஃபோனில் கிணு கிணுத்தாய்.
அது என்ன அப்படி யொரு
சுண்டி இழுக்கும் இசையொலி?
உன் காலர் டியூனில்
கண்ணாடி வளையல்கள்
கிளுகிளுத்தன!

=========================================================

"கமல் ரஜனி கூட்டணி"

கமல் ரஜனி கூட்டணி
==========================================ருத்ரா

நீங்கள் ஊழல் பலூன்கள் ஊதலாம்.
ஆனால்
சினிமாவின் இருட்டுப்பணங்களின்
திமிங்கிலத்தின் முதுகில் அமர்ந்து தான்
ஆரவாரம் செய்கிறீர்கள்.

கடலின் திரைகளை ஆண்ட‌
தமிழன் வரலாற்றுப்பெயர் தான்
திரைவிடன் எனும் திராவிடன்
என்பது
உங்களுக்கு ஏன் அலர்ஜி ஆனது?

கணவாய்களின் இடுக்கு வழியாய்
இந்தியா எனும் சிந்து வெளி தேசத்துக்கு
குடியேற வந்தவர்களே
இந்தியாவின் குடியை கெடுக்கவந்தவர்கள்
என்பது தானே
அந்த ரத்தம் சிந்திய சரித்திரம்.


"ராமன் எத்தனை ராமனடி ?"
என்று ராமனின் பல பரிமாணங்களை 
கொண்டாடுபவர்கள் தானே 
அன்பான இந்தியர்கள்.
அத்வைதம் என்றால் 
பாபர் எனும் மனிதனுக்குள்ளும் 
ஒளிர்கிறது என்று தானே 
சங்கரர் ஊர் ஊராய் போய்ச் சொன்னார்.
உங்களுக்கு எப்படி 
"கடப்பாரை ராமனாய்" தோன்றினார்?.
எப்படியோ ஏதோ ஒரு வெறி வளர்த்து 
இந்த தேசத்தையே வாரிச்சுருட்ட‌
வந்திருக்கும் வந்தேறிக்கூட்டத்துக்கு
மறைமுகமாய் தோரணம் கட்ட‌
மத்தாப்புப் பேச்சுகளை
கொளுத்திப்போடும் கூட்டணியா
உங்கள் கூட்டணி?

சரி!
வரலாற்றின் தொலைதூரத்துக்கு
எல்லாம் செல்லவேண்டாம்.
இப்போது வர்ணாசிரமக்கல்வி முறையை
புதிய கல்விமுறையாய்
புகுத்த நினைக்கும் தந்திரம்
சமூக நீதியைக்குழி தோண்டி
புதைப்பது மட்டும் அல்ல‌
தமிழ் இனத்துக்கே
கல்லறை கட்டும் திட்டம் அல்லவா?

திராவிட சிந்தனை ஒன்றே
தடுக்கும் கூரிய ஆயுதம்.
ஆனால்
இதை மழுங்கடிப்பதே
உங்கள் அரசியல் பயணத்துக்கு
நடப்பட்டிருக்கும் மைல் கல்.
நீங்கள்
அந்த மதவாத ஆட்சிக்கு
எதிராக எய்வதாக காட்டுவதே
ஒரு அட்டை அம்பு தான்.
அதன் கூர்முனையை கமல் பிடித்திருக்கிறார்.
வால் பகுதியை ஆன்மீக ரஜனி ஏந்தியிருக்கிறார்.

தமிழ் மக்கள்
ஒரு மாற்றம் விரும்புகிறார்கள்
என்ற மாயமானை
தமிழ் மக்களிடையே ஓடவிட்டும்
அதை "வேட்டையாடு விளையாடு"
என்று போக்கு காட்டுவதும் ஆன‌
ஒரு பொம்மைக்கொலுவின்
"தர்பார்" காட்சியை
நீங்கள் நடத்த முயலுவதும்
தமிழர்களை முட்டாள்கள் ஆக்கும்
கூட்டணியைத்தவிர
வேறு ஒன்றும் இல்லை.

================================================



வியாழன், 21 நவம்பர், 2019

மின்னல் குழம்புகள்



மின்னல் குழம்புகள்
=======================================ருத்ரா

படபடக்கும் உன் இமைமயிர்கள்
கிச்சு கிச்சு மூட்டியதில்
பட்டாம்பூச்சிகளின் இறக்கைகள்
சத்தமில்லால் 
சிரித்து சிரித்து உதிர்ந்தன.
பிக்காசோகள் பொறுக்கியது போக‌
எனக்கு இரண்டு இறக்கைகளே மிச்சம்.
அந்த இமைப்புகளில்
உன் விழிகள் கசிந்த மின்னல் குழம்புகளே
இப்போது
என் "கவிதைத் தொகுதிகள்"

=================================================



செவ்வாய், 19 நவம்பர், 2019

"அதிசயப்பிறவி" ரஜனி

"அதிசயப்பிறவி" ரஜனி
============================================ருத்ரா

அதிசயப்பிறவி என்ற படத்தில்
ரஜனியின் நடிப்பு
ஒரு அதிசயம்.
அவர் நகைச்சுவையில் ஒரு
அதிசயப்பாணியைக் காட்டி
அசத்தியிருப்பார்.
அதிலும் அந்த எமதர்ம ராஜாவாக வரும்
வினு சக்கரவர்த்தியிடம்
"பேஜா..ர்ரா ப்போச்ச்சு"என்று
நீட்டி முழக்குவார்.
சிரிப்பில் தியேட்டரே கலகலக்கும்.
அது போல் தான்
அதிசயம்..அற்புதம்
என்று
எடப்பாடி அவர்கள்
அரசு நாற்காலியில் உட்கார்ந்ததும்
அந்த நாற்காலியில் ஒட்ட்ட்ட்டிக்கொண்டு
உட்கார்ந்து இருப்பதும்
உலகத்தின் எட்டாவது அதிசயம் என்று
கலாய்த்திருக்கிறார்.
தானும் இப்படி அதிசயங்கள்
நிகழ்த்தலாம் என்று ஒரு குறிப்பு
காட்டுகிறாரோ?
இந்த இரண்டு பேருக்கும்
"காட் ஃபாதர்" ஒருவர் தான்
என்று
அவர் அறிந்து பேசுகிறாரா?
அறியாமல் பேசுகிறாரா?
என்பதும் அவர் அறியார்!
எனவே அவர் மொழியில்
அது இன்னும் "பேஜா...ர்ராக"த்தான்
இருக்கும் எனத் தெரிகிறது.
அது சரி!
அவர் கால் இன்னும்
தமிழ் மண்ணில்
தமிழ் மொழியில்
தமிழர் உணர்வுகளில்
பதியம் ஆகவில்லையே.
இந்த ஒட்டுச்செடியில்
இயற்கை ரோஜாக்கள் பூக்குமா?
இல்லை
காகித ரோஜாக்கள் தான் பூக்குமா?
என்று தெரியவில்லை.
ஆனால்
"காவி"ரோஜாக்களை
பூக்க விடாமல் செய்யும்
ஒரு காவியத்தலைவனாகத்தான்
வலம் வருவேன்
என்று டயலாக்கை வைரல் ஆக்கும்
உரை வீச்சு நிகழ்த்தியிருக்கிறார்.
இவரிடம் உள்ள ஆன்மீகத்தை வைத்துக்கொண்டு
அர்ஜுனன் சம்பத்துகள்
நாளை நம் அய்யன் வள்ளுவன் சிலையை
"வால்மீகி" சிலை என்று
கர்ஜனைகளை முன் வைத்தாலும் வைக்கலாம்.
அப்போது அவருக்கே உரிய‌
பஞ்ச் டயலாக் பேசலாம் இப்படி.
நாம் வள்ளுவரையும் பார்த்ததில்லை.
வால்மீகியையும் பார்த்ததில்லை.
சிலை தானே.
பார்ப்பவர்கள்
அவர்களுக்கு வேண்டியவர்களை
பார்த்துவிட்டுப் போகட்டுமே.
இப்படி பேசும் அதிசயங்களும்
நாளை நிகழலாம்
அல்லது
நிகழாமலும் போகலாம்.
அதிசயப்பிறவியான இவர்
எம்ஜியார் போல்
தனிப்பிறவி ஆகும் ஒரு
அதிசயப்பிறவியாய்
பரிணாமம் அடைவதற்கு
தயார் ஆகிக்கொண்டிருக்கிறாரா?
21ல் தேர்தல் எந்திரத்தின்
"3.0" எந்திரன் ஆவாரா?
பார்ப்போம்!

===============================================




திங்கள், 18 நவம்பர், 2019

காத்திருத்தல் மட்டுமே

காத்திருத்தல் மட்டுமே
===============================================ருத்ரா.


"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
"ஸ்பூன் ஸ்பூன் ஆக 
இந்தக் கடல் நீரையெல்லாம் 
இறைத்து வெளியேற்றிக்கொண்டிருக்கிறேன்."
"ஓ! புரிகிறது.
காத்திருத்தல் மட்டுமே காதல் என்று."


================================================

இனித்தது எனக்குத்தானே

இனித்தது எனக்குத்தானே
==============================================ருத்ரா


சிற்பியால் செதுக்க முடியவில்லை
சிற்பமாக‌
உன் நினைவுச்சிப்பத்தை.
ஓவியம் தீட்டும்
புருசும் தோற்றது
உன் இமையோர பூமயிர்
வரிசையின் முன்னே.
உன் விழி பற்றி
கவிதை எழுதப்புகுந்தவர்
அந்த சுழியில் வழி இழந்து
நிலை குலைந்தனர்.
அசட்டுக்காதலன் நான்
நகம் வெட்டிய பின்
நீ வீசிய "மிச்சப்பிறைகளை"
பத்திரமாக வைத்தேன்
வானத்தில் நிலாப்பிறைகளாய்.
நகம் கடித்து அமர்ந்து
நினைவில் மூழ்கியிருப்பாய்.
அது
என்னைப்பற்றித்தான்
என்று எண்ணி நான்
மிக மிக நாணம் மிகக்கொண்டேன்.
அப்படி
கடித்ததே போதும் கண்ணே எனை.
இனித்தது எனக்குத்தானே.

=========================================================


ஞாயிறு, 17 நவம்பர், 2019

வெற்றிடம் பற்றி பேசும் ரஜனி


வெற்றிடம் பற்றி பேசும் ரஜனி
========================================ருத்ரா



தமிழ் நாடு வெற்றிடமாய் இருக்கிறது.
ஆண்டவன் சொல்லிட்டான்
அருணாசலம் கேட்டுட்டான் 
என்பது போல‌
பேசுகின்ற ரஜனி அவர்களே!
ஒரு ஆன்மீக அரசியல்வாதி 
இப்படி பேசுகின்றார் என்றால்
பளிச்சென்று தெரிகிறது
அவர் ஞானத்தில் வெற்றிடம் 
இருக்கிறது என்று.

அன்று 
சங்கரர் வரும்பாதையில்
எதிரே 
ஒரு தீண்டத்தகாதவர் வந்தபோது
கடவுளை தீட்டுப்படுத்தி விடாதே
விலகு விலகு 
என்றார்களாம்.
அவரும் அப்பாவியாக‌
சாமி எந்தப்பக்கம் விலகணும்னு
சொல்லுங்க.
கடவுள் இல்லாத பக்கத்தைச் சொல்லுங்க‌
விலகிக்கிறேண்ணு
சொன்னாராம்.
அப்போது தான் 
சங்கரருக்கு மண்டையில் அடித்தது
போல் இருந்ததாம்.
எங்கும் நிறைந்த ஆண்டவன்
என்ற உண்மையை உறைக்கும்படி
சொல்ல‌
ஒரு பஞ்சமன் தான் வேண்டியிருந்தது.
மானிட சமூக நீதி தான் 
இறைவத்தின் சிகரம் ஏறும் 
முதல் படிக்கட்டு.

தமிழ் நாட்டில்
எங்கும் உயிரும் காற்றுமாய்
உலவும் தமிழ் வீச்சு
கலைஞர் எனும் ஒலிப்பில்
அண்ணா எனும் ஒலிப்பில் 
இருக்கும்போது
ஏதோ வெற்றிடத்தை
நிரப்ப வந்திருக்கிறேன் என்று
பேசுவதே
கண்மூடித்தனமான திமிர்வாதம் அல்லவா?

தமிழர்களின் பிரச்னைகளில்
கொஞ்சம் கூட நனைந்து கொள்ளாமல்
ஏதோ ஒரு அரிதார மேடையில் நின்று
அவதாரம் போல் பேசுவது
தமிழ் மக்கள் உள்ளங்களை
காயப்படுத்துவதாகும்.
திராவிடம் என்றாலும் 
தமிழ் என்றாலும் 
அதுவே இங்கு 
கண்ணுக்கு த்தெரியாத 
இறையாண்மை.
இதை  வெற்றிடம் என்று 
பலூன் ஊதிக்கொண்டிருக்கும் 
பம்மாத்துக்காரர்களே!

ஆதிக்க வர்ணம் பூசிக்கொண்டு 
ஆள நினைக்கும் 
நிழற்பொம்மைக்களே!
இவர்கள் இங்கே மண்ணாங்கட்டிகள் அல்ல.
மக்கள் குரலே மகேசன் குரல் 
என்கிறார்களே 
அந்த ஜனநாயகத்தின் 
மின்காந்த விசை  ஊடுருவி நிற்கும் 
மண் வெளியும் விண்  வெளியும் 
எங்கள் தமிழ் வெளி ஆகும்.
சிந்து வெளியிலிருந்தே 
சிந்து பாடும் 
எங்கள் சிங்கத்தமிழ் 
உங்கள் ஆத்மிகப்பூச்சாண்டிகளையெல்லாம் 
உருக்குலையச்செய்திடும்.
தமிழ் வாழ்க ! தமிழ் வெல்க!

=============================================================





சனி, 16 நவம்பர், 2019

உறக்கம் பிடிக்கவில்லை






உறக்கம் பிடிக்கவில்லை
========================================ருத்ரா

உறக்கம் பிடிக்கவில்லை தான்.
கனவில் கூட‌
நீ சினம் கொள்கிறாய்.
அதுவும் அழகு தான்.
அப்புறம்
கல கல வென்று சிரிப்பாய்
என்று பார்ப்பதற்குள்
உறக்கம் கலைந்து விடுகிறது.
அந்த படுக்கையை
உதறி உதறி தேடுகிறேன்
உன் சிரிப்பொலிகள்
உதிர்ந்து கிடக்கின்றனவா என்று?
காதலியே இன்னும் இல்லை.
கனவு நனவில் இன்னும் கைப்படவில்லை.
அந்த பூப்போட்ட போர்வையை
உதறி உதறி தேடுகிறேன்.
நட்சத்திரங்கள் இங்கே உதிர்ந்து கிடக்குமா
என்று தேடுகின்றேன்.
வானமே இல்லையே!
அவள் அதையும் சேர்த்துக்
கொண்டு வருவாள்
என்று
சன்னல் கதவுகளை திறக்கின்றேன்.

==================================================

வெள்ளி, 15 நவம்பர், 2019

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி...

Malibu Temple.Los Angeles.


வேண்டுதல் வேண்டாமை இலான் அடி...
================================================
ருத்ரா இ பரமசிவன்.



பக்தர்களின் 
வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கு 
இருப்பவரே 
கடவுள் என்றால் 
வேண்டுதல் வேண்டாமை இலான் 
என்பவர் யார்?
பக்தர்களின் வேண்டுதல்களை கொடுக்க 
அவர் 
தன்னிடம் 
வேண்டுதல்களை குவியல் குவியலாக அல்லவா 
வைத்திருக்க வேண்டும்.
அல்லது 
"வேண்டாமை"யின் வடிவம் அவர் என்றால் 
அவருக்கு பக்தர்களும் வேண்டாம்.
கடவுள் என்ற பட்டமும் வேண்டாம் 
அப்புறம் 
"வேண்டுதல் வேண்டாமை இலான்"
என்ற 
அடைமொழி இல்லாது போய்விடுமே.


வேண்டாமை உள்ளவர்களுக்கு 
கடவுளும் வேண்டாம்.
கடவுளுக்கு 
வேண்டாமை உள்ளவர்களும் 
வேண்டாம்.
வேண்டுதல் வேண்டாமை இல்லாத 
தூய துறவறம் என்பதே 
நாத்திகம் 
என்று 
கடவுளுக்கு தெரியும்.
கண்ணை மூடிக்கொண்டு கற்பனையாய் 
நிறுத்தியிருக்கும் 
அந்த கடவுள் வேண்டும் 
என்று 
அடம் பிடிப்பவனும் 
துறவி ஆகமாட்டான்.
பற்றுக 
பற்றற்றதை.
பற்று விடற்கு 
அதுவே 
பற்று .
வேண்டுதல்களை  மூட்டை மூட்டையாய் 
என் முன் குவிக்காதே.
வேண்டாமையே  என் வேண்டுதல் 
என்று 
எவன் என் முன் நிற்கிறானோ 
அவனே 
என் முன் நிற்கலாம் 
என்று 
கடவுள் ஒருநாள் 
தன்  முன் 
ஒரு "போர்டு" வைக்கிறார்.
அதன் பின் 
அங்கே யாருமே இல்லை 
நாத்திகனைத்தவிர!


================================================




குறும்பாக்கள்

குறும்பாக்கள்
========================================ருத்ரா


ராமன் குரல்
______________

அன்பு சொல்லும் என் வழி எங்கே?
அம்பும் வில்லுமா நான் கேட்டேன்
கோயில் கட்ட.

தீர்ப்புகள்
___________

எதிர்க்குரல் எழுந்தால்
நாக்குகள் அவிந்திடும்.
ராமனும்
வாய் பொத்தினான்.

மகாராஷ்ட்ரா
_________________

மகாபாரதத்தின் அரக்கு மாளிகை
யாருக்கு இங்கே
யார் கட்டியிருக்கிறார்கள்?

பொருளாதாரம்
____________________

யானையை தடவி தடவிப்பார்த்து
சொன்னார்கள்.
தூண்கள் ரெடி.
கோவில் தான் பாக்கி.

ஜனநாயகம்
_____________

எடை எந்திரத்தில் பட்டன் தட்டினோம்.
அதிர்ஷ்ட சீட்டு வந்தது.
எந்திரமே நொறுங்கி விழுந்தது
சீட்டில் கதாயுதத்துடன் அனுமார்!

சரணம் அய்யப்பா
____________________

பொம்மனாட்டிகள விட்டுடுங்கோ
ஆத்திலே அவாளுக்கு
நெறைய வேலை இருக்கு.

சிதம்பரம்.
___________

ஜாமீன் என்றால் என்ன?
"இம்போசிஷன்
எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்."

செழிப்பான வியாபாரம்
________________________

வியாபாரம் மந்தம் என்று
யார் சொன்னது?
கொள்ளை மலிவு.
எதிர்க்கட்சிக்காரர்களை
வாங்கிக்குவிக்கலாம்.

தமிழ் நாடு
 ------------------

வி ஐ பிக்கள்
அமெரிக்காவுக்கு படையெடுப்பு.
"அவார்டுகள்" மலிவு விலையில்
விற்கப்படுகிறதாமே

உள்ளாட்சித்தேர்தல்
---------------------------------

 தடுப்பு ஊசிகள் தயார் ஆகட்டும்.
வரப்போவது
பன்றிக்காய்ச் சலா?
பறவைக்காச்சலா?



=============================================================







வியாழன், 14 நவம்பர், 2019

கணிப்பொறியை வச்சு செஞ்ச...

கணிப்பொறியை வச்சு செஞ்ச...
=========================================ருத்ரா

ஜனநாயகம் என்பது
எண்ணிக்கையில்
எழுப்பப்படும் மாளிகை.
அந்த எண்ணிக்கையும்
ஒரு விளிம்பை
உடைத்துக்கொண்டு போகும்போது
"மிருகபலம்"என்று
மக்களால் அஞ்சப்படுவதுண்டு.
கணிப்பொறி
என்ற விஞ்ஞானப்பெருமிதத்தை
வச்சு செஞ்ச ஜனநாயகம்
ஜனநாயகமா?
சர்வாதிகாரமா?

சத்தமில்லாமல்
மசோதாக்களுக்கு  மேல்
மசோதாக்களாய்
ஆளுவோர் மடியில்
செல்ல பொமரேனியன்களாய்
கொஞ்சப்படலாம்.
அவை சட்டமாகும் போது
மக்கள் அதில் அச்சப்படலாம்.
என்னவோ அரசியல் அமைப்பு புத்தகமாமே.
முதலில் அட்டைகள் நன்றாயில்லை
என்று
கிழித்துப்போடப்படலாம்.
அப்புறம்
முகவுரைகளின்
முகங்கள்
கரி பூசப்படலாம்.
அதற்கு அப்புறம்
இத்தனை பக்கங்கள் ஷரத்துக்கள்
எல்லாம் எதற்கு
என்று அவையும் கிழித்தெறியப்படலாம்.
ஒரே நாடு.
ஒரே பக்கம் போதும்.
ஆனால்
அது யார் பக்கம்?

ஆமாம்..
அது தான் வாட்ச் டாக் எனும்
பாதுகாப்பு எந்திரங்கள்
இருக்குமே என்று
கேட்கிறீர்கள்.
அவையும் எல்லாமே
செல்ல பூனைக்குட்டிகளாய்
ஆள்வாரின் காலடியில்
தொண்டரடிப்பொடியாழ்வார்கள்
ஆகி விட்டால்....?
தேர்தலை நடத்தும்
மகா எந்திரமே
எந்திரி என்றால் எந்திரிக்கும்
உட்காரு என்றால் உட்கார்ந்து விடும்.
மன்னன் எவ்வழி
மக்கள் அவ்வழி
என்பது நேற்று.
மக்கள் எவ்வழி
மன்னன் அவ்வழி
என்பது இன்று.
ஆனால் அந்த
வரலாற்று மாற்றம்
என்பதும்
ஏமாற்றம் ஆகும் போது..
கணிப்பொறிக்கும் கூட
பொறி கழன்று போய்விடுமோ?
வழிகள் தவறின.

வழி தவறிய
ஜனநாயகம்
சர்வாதிகாரம்
எனப்படும்.

=======================================================



அந்த விழியுள் நான்..




அந்த விழியுள் நான்..
==========================================ருத்ரா 


எத்தனை எத்தனை நினைவுகள் 
வேதாளங்களாய் 
என் தோளில்.
வெட்டி வீழ்த்த முடியவில்லை.
அன்று 
நான் தாமிரபரணியில் 
பூ மயிர் மீசை அரும்பிய 
உதடுகளுடன் 
அந்த பளிங்கு நீர் 
சுவைத்து சுவைத்து 
குளித்துக்கொண்டிருந்த போது 
அந்த படித்துறையில் 
அவள் வீசிய விழித்தூண்டில் 
என் நெஞ்சில் செருகியது.
அதன் பின் மின்னலென 
மறைந்தாள்.
முகம் பதியவில்லை.
உருவம் பிடிபடவில்லை.
இன்னும் 
அவளை மீண்டும் 
பார்க்க இயலவில்லை.
அந்த விழி 
என்னை முழுவதுமாய் 
விழுங்கிக்கொண்டது.
எங்கும் எதிலும் 
அது பூதம் காட்டியது.
வயதுகள் 
ரோடு ரோலராய் 
என் நினைவின் ஓரம் 
மொய்த்துக்கிடந்த 
பட்டாம்பூச்சிகளை 
நசுக்கிக்கொண்டு 
ஊர்ந்தது.
வாழ்க்கையின் உப்பு மூட்டை 
சுமந்து சுமந்து 
விளையாடிக்களைத்தேன்.
அந்த விழி மட்டும் 
விடவில்லை என்னை.
அந்த 
விடலையிலிருந்து 
சுடலை வரை 
என்னைப்பற்றிக்கொண்டு 
வானவில்லாய் 
ஏழு வர்ணத் தீயில்
என்னை மூழ்கடித்தது.
அந்த தாமிரபரணி 
பளிங்கு நீர் விழிப்படலத்தில் 
சிதைகள் அடுக்கியது.
என் முற்றுப்புள்ளி 
சாம்பல் கூடு கட்டி 
எங்கோ தொங்கிக்கொண்டிருந்த போதும் 
அதோ 
அந்த விழி 
ராட்சத ரெக்கை கொண்டு 
சட  சடக்கிறது.
இந்த வானப்பிழம்புள் 
அந்த விழியுள்  நான் ....
நட்சத்திரங்களாய் பூத்திருக்கிறேன்.

================================================








புதன், 13 நவம்பர், 2019

திமுக காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள்!

திமுக காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள்!
=======================================================ருத்ரா

நேற்றுவரை காவி
கண்களைக் கூசியது.
இன்று சிலர்
அதில்
அதிகாலைச்சூரியனையும்
வேறு சிலர்
விடியலின் இளஞ்சிவப்பையும்
கண்டு விட்டார்கள் போலும்!
காங்கிரஸ்காரர்கள்
அப்போதே இடிக்கும் வரை
இடிக்க வைத்து விட்டு
கிளிசரின் கண்ணீரை
கண்களில் தேக்கிக்கொண்டார்கள்.
மக்கள் ஜனநாயகம் நோக்கிய‌
அரசியலில் ஏன் இந்த வீழ்ச்சி?
உச்ச நீதி மன்றத்தின் குரலின் பின்னே தான்
நம் மிச்சக் குரல்கள் எல்லாம்
என்று
நீதிக்கு தலைவணங்கும் அரசியலா?
அப்படி நீங்கள் கீழே நோக்கி
தலை வணங்கும்போது
சிதறிக்கிடக்கும்
மானுட நேயத்தின் இடிபாடுகளும்
மதச்சார்பற்ற தன்மையின்
இடிபாட்டுச் சிதிலங்களும்
உங்கள் கண்களில் படவில்லையா?
அன்று இடித்தது
பாமர் மசூதி என்றால்
இன்று
இவர்கள் கோயில் கட்டி
இடிக்கப்போவது
ராமன்
எனும் நம்பிக்கையைத்தான்.
அன்பான இந்துக்களே!
இவை உங்கள் கைகளின்
கடப்பாரைகள் அல்ல
என்று
இந்திய  மக்கள் அறிவார்கள்!
கண்ணுக்குத்தெரியாத‌
வெறித்தனமான ஆதிக்கமே இது.
ரத்த ஆறு ஓடும் என்று உறுமும்
ஓநாய்களின் ஓலம் தான்
இனி ஒலிக்கும் தேசியகீதமா?

நோபல் பரிசுக்குழுவினர்களே
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் "அமைதிப்பரிசு"க்கு
தகுதியானவர் ஒருவர்
எங்கள் தமிழ் நாட்டில் இருக்கிறார்.
பத்திரிகை தர்மம் மற்றும்
மக்களின் மானுட நேயத்தின்
அமைதி வேட்கையை
நியாயமாய் வெளிப்படுத்தி
மதங்களின் வன்மங்களுக்கு
அடிபணியாமல்
சிந்தனையின் சுடரேந்தியாய்
நின்ற‌
திரு.ஆர்.கே. ராதாகிருஷ்ணன்
எனும்
பத்திரிகையாளர் தான் அவர்!

ஜனநாயகம் என்பது
அடி முட்டாள்தனமானதா?
இந்துக்களின் ஓட்டுகள்
வடையாய்
இந்த ஓட்டாளர்கள்
எனும் அழகிய காக்கையிடம்
இருப்பதாகவும்
தேர்தலின் போது
காக்காயே! ஒரு பாட்டு பாடு
என்ற நரி வேடமிட்ட‌
திமுக களும் இடது சாரிகளும் காங்கிரசும்
கெஞ்சுவது போன்ற‌
கார்ட்டூன் அல்லவா இது!
போதும்.
ஓட்டுப்பெட்டியை
ஜனநாயகத்தின் சவப்பெட்டியாய்
ஆக்கியது போதும்.
தேர்தல் அது இது என்று
இனி கூவாதீர்கள்.
சீட்டாட்டம் போதும்.
கலைத்து விடுங்கள்.
போதுமடா சாமி!.

===========================================================








செவ்வாய், 12 நவம்பர், 2019

ரஜனியும் கமலும்

ரஜனியும் கமலும்
===========================================ருத்ரா

ஒருவர் பிறந்த தினவிழாவில்
இன்னொருவர் பேருரை.
கட்டித்தழுவிக்கொள்கிறார்கள்.
காலில் விழுகிறேன் என்கிறார்கள்.
ரசிகர்களை மோதவிட்டு
ஏன் இந்த சினிமாக்காத்தாடிக்கு
"மாஞ்சா"தடவிவிட்டுக்கொள்ளவேண்டும்?
என்பது போல்
ஒருவர் உணர்ர்ச்சி வசப்படுகிறார்.
இருவரும் நடிப்பில்
மக்களை தூண்டில் போட்டு
வைத்திருக்கிறார்கள்.
வள்ளுவர் சொன்னது போல்
சினிமா எனும்
இந்த சூதாட்ட பொன் தூண்டிலை
விழுங்கியவர்களாய்
மக்கள் 
துடிக்கிறார்கள்
துள்ளுகிறார்கள்
குத்தாட்டங்கள் போடுகிறார்கள்.
திரையிலும்
தரையிலும் 
எப்போதும் இவர்கள்
அட்டைக்கத்திக்காரர்கள் தானா?
நீதியின் 
உச்ச பட்சக்காரர்களே
ஒரு கட்டைப்பஞ்சாயத்து மாதிரி
ஆனால்
வெண்ணெய் வெட்டும் கத்தி கொண்டு
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக‌
சொல்லிவிட்டார்கள்.
தொல்லியல் சிலைகள் சொல்லுகின்றன‌
இவர்களுக்குத்தான் பூமி என்று.
அப்படியென்றால்
நம் நாட்டில் 
சிந்துவெளி தொடங்கி
தோண்டும் இடங்களில் எல்லாம்
தமிழ் எனும் திராவிடதேசத்தின்
சுவடுகள் தானே கிடக்கின்றன.
அப்படியென்றால்
இந்திய நாடு அடிப்படையில்
ஒரு தமிழ்நாடு தானே.
ஓ!வீரர்களே!
புரட்சித்திலகங்களே!
புறப்படுங்கள்
குதிரைகள் காத்திருக்கின்றன.
இந்தியாவின் மண்ணுள் புதைந்திருக்கும்
அந்த தமிழ் நாட்டை
மேலே உயர்த்துங்கள்.
ஓட்டு எந்திரங்களில் கூட‌
உங்கள்
எந்திரன் 1
எந்திரன் 2
என்ற சரித்திர சகாப்தங்களை
உருவாக்குங்கள்.
உங்கள்
இந்தியன் 1
இந்தியன் 2
என்ற வெற்றிமுகங்களை
காட்ட‌
சிலிர்த்தெழுங்கள்.
திமுக அதிமுகளிலிருந்து
கறை படியாத‌
புதிய திமுகவை கட்டி எழுப்ப‌
புறப்படுங்கள்.
யாருக்கும் இங்கு ஆட்சேபணை இல்லை.
இதற்கு 
நீங்கள் செய்யவேண்டியது
உங்கள் இடுப்புகளில் கட்டப்பட்டிருக்கும்
அந்த மாய சூத்திரக்கயிற்றை
அறுத்துவிடுங்கள்.
அப்போது தான்
இந்த பொம்மலாட்டப் பொய்மைகள்
இற்று வீழும்.
வாழ்க உங்கள் அரசியல் பணி.
வெல்க உங்கள் அரசியல் பணி.

=======================================================



எல்லோரும் போகலாம்

எல்லோரும் போகலாம்.
========================================ருத்ரா

ஆயிரத்து சொச்சம் பக்கங்கள்
அத்தனையிலும் மஞ்சள் தடவி
மங்கள கரமாக எழுதி
ஒரு
மதச் சார்பற்ற ஜனநாயகத்துக்கு
மங்களம் பாடி முடித்து விட்டார்கள்.
கச்சேரி முடிந்து
கதவை இழுத்து சாத்தி விட்டார்கள்.
ஓ!பசுக்களே!
இது பசுக்கள் ராஜ்யம் என்று
நீதி கேட்டு
"ஆராய்ச்சி மணி" அடிக்க வராதீர்கள்.
அதே போல் தேர்க்காலில் இட்டு
நியாயம் வழங்கும் நாடகம்
முடிந்து விட்டது.

ஒரு கடவுள்
இன்னொரு கடவுளுக்கு
சமாதி கட்டும்
உயரிய புனித சடங்கு
மிக  உயர்ந்த ஒரு மேடையில்
நடந்து முடிந்து விட்டது.
தொல்லியல் ஆராய்ச்சி முடிவுப்படியான‌
ஒரு முடிவு இது.
மண்ணின் அடியில்
எலும்புக்கூடு தான் கிடைத்தது.
அதனால்
ஓ மக்களே!
இப்படி நீங்கள்
சதையும் ரத்தமுமாக இருப்பதே
சட்ட விரோதம்.
இனி
உணவு கிடையாது.
காற்று மாசுகளால்
சுவாசிக்க காற்றும் கிடையாது.
இனி நீங்கள் எலும்புக்கூடுகள் தான்.
தீர்ப்பு செயல் படுத்தப்பட்டது.
எல்லோரும் போகலாம்.
ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்.

‍‍‍‍____________________________________________

ஏதோ ஒரு தேசத்தில்
ஏதோ ஒரு வழக்கிற்காக‌
வழங்கப்பட்ட தீர்ப்பு இது
_______________________________________________

ஞாயிறு, 10 நவம்பர், 2019

தீர்ப்பு

தீர்ப்பு
==============================================ருத்ரா


மண்ணில் மனிதன் வந்ததும்
வரலாறு.
மண்ணுள் மனிதன் புழுவாய் மறைவதும்
வரலாறு.
வரலாறுகள் எழுதப்படலாம்.
வரலாறுகள் புனையப்படலாம்.
மனிதன் தன் பிம்பத்தை பார்க்கும்போது
அழகாய் இருக்கிறான்.
அவன்
மொத்த மனிதர்களின் பிம்பம்
எனும் சமுதாயத்தை
உற்று நோக்கும் போது
கோடி ஆண்டுகளுக்கும் முன்
கேட்டிருந்த‌
டைனோசார்களின் உறுமல் ஒலிகள்
எதிரொலிக்கின்றன.
அந்த ராட்சத எலும்புக்கூடுகளில்
மிச்ச சொச்சமாய் கிடக்கும்
காலத்தின் சுவடுகள்
மனிதனின் தோள்களில்
கிடக்கின்றன.
உலகைக் கண்டு முதன் முதல்
வியந்த மனிதன்
முதன் முதல் அச்சம் என்ற‌
உணர்வையும் அடைந்து நின்றான்.
பயத்தோடு அதை கடவுள் என்றவன்
அந்தப் புள்ளியை இன்னும்
கடந்து போக முடியவில்லை அவனால்.
மனிதர்களிலிருந்து
விசையுடன் வெளியேறிய ஆற்றலே
மனிதம்.
இப்போது அவனை இயக்கிக்கொண்டிருப்பது
உயிர் அல்ல.
கடவுள் அல்ல.
மனிதம் என்ற ஆற்றலே தான்.
மனிதம் எனும் அடி நிழல்
அந்த அடி நிழலை அச்சடித்துத் தந்த‌
ஒளியை தேடிக்கொண்டிருக்கிறது.
ஆம்
இன்னும் தேடல் தொடர்கிறது.
இந்த அடர்த்தி மிகுந்த இருட்டுக்குள்
தேடலின் காலடி ஒலிகள்
இன்னும் நமக்குக்
கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.

=============================================================

வெள்ளி, 8 நவம்பர், 2019

ராமா

ராமா
====================================================ருத்ரா

ராமா
நீ ஒரு அவதாரம்.
உன்னை வைத்து பிழைப்பு நடத்தும்
கூட்டம்
உன்னை கொச்சை படுத்துவது
உனக்கு புரிகிறதா?
உன்னை மனித உருவில்
அதுவும் ஒரு க்ஷத்திரிய வர்ணத்தில்
பூமியில் பிறக்கவைத்திருக்கிறார்கள்.
நீயே தான்
இங்கு அவதாரம் எடுத்தாயா?
இல்லை இவர்கள்
கற்பனையைக்கரைத்து
இறகுப்பேனாவை அந்த மையில் முக்கி
எழுதினார்களா?
அறுபதினாயிரம் பெண்களில்
கோசலை என்ற பெண் தான்
உன் வாசலை திறந்து வைத்தாள்.
அப்போதே
உனக்கு "தீம்" இது தான்..
அதாவது உனக்கு ஒரு மனைவி மட்டுமே தான்.
அரசர்கள் என்பவர்கள்
அந்தப்புரங்களை
பெண்களால் நிரப்பி
இன்பம் நுகர்ந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால்
இதில் நீ தப்பி பிறந்து
அவதாராமாக நீ வாழ்ந்து காட்டவேண்டும்.
மேலும்
அரண்மனை உனக்குக்கிடையாது.
காடு தான் உன் வீடு.
அரசனின் மணிமகுடம் உனக்கு
கடைசியில் சூட்டப்படும்.
இடையில் நடைபெறுவது எல்லாம்
நாடக செட்டிங்குகள் தான்.
நீ அவதாரம் எனும் அரிதாரம் களைந்த பிறகு
மிஞ்சி நிற்பது
ஆத்மாக்கள்.
பெரிய்ய்ய்ய்ய ஆத்மா எனும் கடவுளும்
பிஞ்சிலும் பிஞ்சு ஆத்மாவான மனிதனும்
தராசு தட்டுகளில் சமம் ஆகி விடுகிறார்கள்.
ஆத்மாக்கள் இரண்டல்ல ஒன்று
என்று
எல்லாம் கரைந்து உருகிய பின்
இந்த கோவிலுள்
இன்னும் பூதமாகக்கிடந்து
அடம்பிடிக்கிறாயே ராமா!
இது என்ன நியாயம்?
கால ஓட்டத்தில்
க்ஷத்திரியர்கள்
மாறி மாறி வந்து விட்டார்களே.
நீ இருந்த‌
நிழலை இவர்கள்
கையில் பிடிக்க வரிந்து கட்டுகிறார்கள்.
எங்கோ இருக்கும் சூரியன்
வீழ்த்தும் நிழலுக்கு
இங்கே இவர்கள் பட்டா போடுவது
என்ன அறம்?
அவதாரம் முடிந்து திரை போட்டு
நாடகம் முடிந்த பின்னும்
மனிதனுக்கு மனிதன் வதம் நடத்துவது
என்ன வகை அவதாரம்?
அடம் பிடிக்கும் அவதாரமற்ற அவதாரம் அன்றி
வேறு என்ன இது?
ராமா!
நீ உன் கிரீன் ரூமுக்குப் போ.
ஒரு புதிய அவதாரத்தை
முதலிலிருந்தே
எங்கள் "சிலேட்டில்"
நாங்கள் மீண்டும்
ஆனா ஆவன்னா என்று
எழுதிப்படித்துக்கொள்கிறோம்.
மனிதன் என்றால்
அன்பு மட்டுமே.
அம்புகளை வைத்து
புராணம் எழுதியதெல்லாம் போதும்.

========================================================

வியாழன், 7 நவம்பர், 2019

தெரியவில்லை



தெரியவில்லை
=========================================ருத்ரா

இந்த மலர்க்கூட்டத்தில் தான்
அன்று
என் கனவு ஒன்றை எறிந்தேன்.
பூப்போல வந்த கனவிற்குள்
காக்காய் முட்கள்.
குத்தி குத்தி அது சிவப்பாக்கியதில்
மலரின் வண்ணமே
மறைந்து போனது.
கிடக்கட்டும் அது
மலரோடு மலராக.
திரும்பி நான் அதை
பார்க்க விரும்பவில்லை.
வாழ்க்கைப்புத்தகத்தின் 
பக்கங்களுக்கிடையே
என் பொன் நினைவின்
இந்த மயிற்பீலிக்கீற்றுகளை
செருகி வைத்திருப்பேன்.
குட்டி போடும் என்கிறார்கள்.
நினைவுகளின்
குட்டிக்கரணங்களில்
அந்த மின்னல் குஞ்சு முட்டை
என்னவாய் ஆகியிருக்கும்?
தெரியவில்லை.

================================================



புதன், 6 நவம்பர், 2019

ரஜனிக்கு விருது

ரஜனிக்கு விருது
================================ருத்ரா 


என்றோ கிடைத்திருக்க வேண்டியது.
இன்று கிடைத்ததும்
நன்றே
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
விருதுக்குப் பின்னே
நீங்கள் தரும் கால்ஷீட்டுகளில்
நீங்கள் காட்டப்போவது திரைப்படம் அல்ல.
நம் வாழ்வின் அவலங்களின்
தரைப்படம் ஆகும்.தரைப்படம் ஆகும்!
விருதுக்குப்பதிலாய்
அவர்களுக்கு
உங்கள் ஆன்மீக முகமூடியே வேண்டும்.
நீங்களே
அவர்கள் விரும்பும் பேனா.
உங்களைக்கொண்டு இனி
உல்டாவாக சரித்திரங்கள் எழுதிடுவார்.
குருகுலக்காவலர் ஆகிடுவீர் இனி
கல்வியெல்லாம் இனி  உயர் குடிக்கே.
மற்றைக் கீழ்ச்சாதியெல்லாம் இனி
மாடுகள் ஆடுகள் மேய்க்கட்டும்.
பஞ்சமர் எனப்பட்டவரெல்லாம் இனி
படு குழியில் போய் விழவேண்டும்.
சூத்திரர்கள் தொட்ட ஓட்டெல்லாம்
தீட்டுப்பட்டு போவதாலே
ஓட்டுரிமை இனி அவர்க்கில்லை.
மீண்டும் கபாலியாய் காலாவாய்
சீறுங்கள் சினமும் காட்டுங்கள்
ஆட்சேபணை இல்லை எங்களுக்கு .
ஆனால் அந்த சீற்றமெல்லாம் இனி
சூத்திரர்  பஞ்சமர் நோக்கித்தான்!
ராமனைக்கும்பிடுவோர் மட்டும் தான்
இந்தியப்பிரஜை ஆகிடுவார்.
மற்றவரெல்லாம் அங்கே அந்த
அரபிக்கடலில் போய் விழுவார்.
இது தான் இங்கே இனிமேலும்
ராமராஜ்ய சினிமாவாம்!
இமயமலை பாபாவின்
பூச்சாண்டிஎல்லாம்   இனி போதும்.
சிஸ்டம் சரியில்லை என்றீர்கள்.
அந்த சிஸ்டமே உங்கள் மணி மகுடம்.
நீங்கள் பச்சைக்கன்னடர் ஆனதனால்
இந்தத் தமிழரை ஒரு கை பார்த்திடுவீர்.
நெஞ்சைக்கிழிக்கும் அனுமாராய்
காட்சி ஒன்றைக்காட்டிடுவீர்.
தாமரை அதிலே பூத்திருக்கும்
அதுவே போதும் எங்களுக்கு!
பாரதத்  தவப்புத்திரனே..,உனக்கு
பாரத ரத்னா காத்திருக்கு!

======================================


வள்ளுவனை உலகினுக்கே தந்து..

வள்ளுவனை உலகினுக்கே தந்து..
=============================================ருத்ரா

வான் புகழ் கொண்ட
தமிழ் நாடு
கொல்லும் சாதிவெறிக்குள்ளா
குறுகி விடும்?

காவி உடையுடன்
காசு அகலப்பொட்டும்
இட்டுவைத்து
தமிழின் ஓர் இமயத்தை
மடக்கி விட நினைக்கும்
உங்கள்
மடமையை நினைத்தால்
சிரிப்பு தான் பொங்கும்.
அவன் என்ன‌
கணிப்பொறியா?
மாய பட்டன் தட்டி
தமிழ்த்திரு நாட்டை
நீங்கள்
பறித்துக்கொள்ள?
மழித்தலும் நீட்டலும்
வேண்டாம்
மானுட அறமே
நல் அறமாம்.
பிறப்பில் யாவரும் சமமே.
இரந்தும்
உயிர் வாழ்தல் வேண்டின்
பரத்து கெடுக
உலகு இயற்றியான்
எனும்
இறைவன் அல்லது அரசன்
என்று முழங்கிய வள்ளுவன்
மனிதனை மனிதன் சுரண்டும்
சனாதனத்தை
ஒழித்திடவே
திருக்குறள் என்னும்
சுடர் தந்தான்.
அல்லல் பட்டு ஆற்றாது
அழுத கண்ணீர் அன்றே
செல்வச்செருக்கு தந்த
ஆதிக்கத்தை...
சாதிக்கொடுமைகளை...
தேய்க்கும்படை என்று
"தீ"க் குரல் தந்தான்.
அதனால் தான்
"தீக்குறளை" சென்று ஓதோம்
என்று
வள்ளுவனைக்கண்டு
அஞ்சி ஓடினீர்கள் அன்று!
இன்று
ஓட்டு வங்கியை
கொள்ளை அடிக்க
காவி முக்காடு போட்டு
வள்ளுவம்
என்ற முழுச் சூரியனை
ருத்ராட்சக்கொட்டையில்
மறைக்க வந்தீர்.
தமிழ் என்றாலே
ஒரு செம்புயல் தான்.
உங்கள் குப்பைக்கூளங்கள்
யாவும் இனி
ஓடித்தொலைந்து ஒழிந்திடுமே !
உங்கள்
இருட்டு யுகங்களை
விரட்டியடித்து
தமிழ்ப்பேரொளிக்கடல்
இன்று
பொங்கட்டுமே !

=============================================================






திங்கள், 4 நவம்பர், 2019

கேள்வியும் நானே பதிலும் நானே

கேள்வியும் நானே பதிலும் நானே
===========================================ருத்ரா

கடவுள்
உண்டா?இல்லையா?
இருந்தால்
ஆணா? பெண்ணா?
ஆண் என்றால்
சிவனா?விஷ்ணுவா?
பெண் என்றால்
பார்வதியா?லட்சுமியா?
அஃறிணை என்றால்
உயிருள்ளதா?
உயிரற்றதா?
உயிரற்றதென்றால்
அதுவா?
இதுவா?
கடவுளுக்கு
மதம் உண்டா? இல்லையா?
இருந்தால் எந்த மதம்?
இல்லாவிட்டால்
ஏன் இல்லை?
அவர்
நாத்திகரா? ஆத்திகரா?
நாத்திகர் என்றால்
திராவிட நாத்திகரா?
ஆரிய நாத்திகரா?
ஆத்திகர் என்றால்
நித்யானந்தா பக்தரா?
சங்கராச்சாரியார் பக்தரா?
அவர் கடவுள் இல்லை.
அவர் மனிதன் இல்லை.
அவர் உயிரும் இல்லை.
அவர் உயிரற்றதும் இல்லை.
அவ‌ர் அறிவா?
அறிவு என்றால்
க‌ம்பியூட்ட‌ரா?"கை பேசி"யா?
அவ‌ர் அறியாமையா?
அறியாமை என்றால்
அவ‌ர் ப‌ன்றிக்காய்ச்ச‌லா?
ப‌ற‌வைக்காய்ச்ச‌லா?
அவ‌ருக்கு
நோவும் இல்லை
நொம்ப‌ல‌மும் இல்லை.
அவ‌ர்
ஜ‌ன‌ன‌மும் இல்லை
ம‌ர‌ண‌மும் இல்லை.
அவ‌ருக்கு பிற‌க்க‌த்தெரியாதா?
அவ‌ருக்கு பிற‌க்க‌ இய‌லாதா?
பிற‌ந்தால்
இற‌க்க‌த்தெரியாதா?
இற‌க்க‌ இய‌லாதா?
பிற‌க்க‌த்தெரியாத‌வ‌ரையும்
இற‌க்க இய‌லாத‌வ‌ரையும்
ப‌ற்றி
பிறக்கின்ற‌வ‌ர்க‌ளும்
இற‌க்கின்ற‌வ‌ர்க‌ளும்
வாழ்த்துக‌ளையும்
ஒப்பாரிக‌ளையும்
கூடி கூடி குரலெழுப்பி
ப‌ட்டிம‌ன்ற‌ம் ந‌டத்த‌ப்ப‌டுகிற‌தே.
ப‌ட்டிம‌ன்ற‌த்துக்கு
ஒரு ப‌க்க‌மா? இரு ப‌க்க‌மா?
......................
.........................
........................
அய்யோ சாமி..ஆளை விடு..
........................
........................
எங்கே ஓடுகிறீர்க‌ள்.?
ஏன்?

உப‌னிஷத்..உப‌னிஷ‌த்..
கேளுங்கள்.
அப்ப‌டியென்றால்
அருகில் உட்காருங்க‌ள்..உட்காருங்க‌ள்..
என்று அர்த்த‌ம்..

இது தான் "கேள்விகளால் ஆன‌"
"ப்ர்ச்னோப‌னிஷ‌த்"
கேள்விக‌ளை
நீங்க‌ள் கேட்கிறீர்க‌ளா?
நான் கேட்க‌ட்டுமா?
.............
..............
அய்யய்யோ!
மீண்டும் முதல்லேருந்தா?
கேள்விகளை முதலில்
கேட்டவர் கடவுள்.
பதில்கள் சொன்னவரும்
கடவுள்.

இப்போது
பாம்பு தன் வாலையே
கவ்வி விழுங்கிக்கோன்டிருப்பது போல்
ஞானப்பயிற்சி எனும்
ஞானவேள்வி
நடந்துகொண்டிருக்கிறது.
வாருங்கள்.
உங்களுக்கு எது வேண்டும்?
ஞானப்பயிற்சியா?
ஞானவேள்வியா?
.........
..........
கேள்வியே வேண்டாம் சாமி.
நான்
"விடை" பெற்றுக்கொள்கிறேன்.

========================================================

ஞாயிறு, 3 நவம்பர், 2019

தமிழர்களே! தமிழர்களே!

தமிழர்களே! தமிழர்களே!
================================================ருத்ரா

சங்கம் முழங்கிய தமிழெல்லாம் நம்
சரித்திரம் என்று அறிந்திருந்திருந்தோம்.
ஏடுகள் உழுத வரியெல்லாம் நம்
எழுத்தெனும் உணவென உண்டிருந்தோம்.
ஒரு குறுந்தொகைப்பாடல் போதுமடா.
நம் நெஞ்சம் நிறைந்த விருந்தாகும்.
கலித்தொகைக் காட்சி ஓவியங்கள்
களிப்புக்கடலின் அலைவிரிக்கும்.
எட்டுத்தொகையும் எழில் காட்டி
மொட்டு விரிக்கும் தமிழ்ப் பூக்கும்.
பத்துப்பாட்டு அத்தனையும் நம்
மொத்த மக்கள் வாழ்க்கை எனும்
இதயத்துடிப்புகள் ஆகிடுமே!

இடையே எப்படி வந்ததடா? இந்த‌
வயிற்றுத்திருக்கல் மொழிக்கூச்சல்.
மறைத்து மறைத்துக் கிசு கிசுத்து
மந்திரங்கள் என்றார் தந்திரமாய்.
மனதுள் இருந்த அச்சமெனும்
மனப்பேய் வளர்த்து மதம் செய்தார்.
மனிதனைப் பிரித்து சாதிமுறை
பலப்பலவாக  பிரித்து வைத்தார்.
தன்னையே கடவுள் புத்திரனாய்
தருக்கம் செய்தார் நம்மிடையே.
மன்னன் கூட மதிமயங்கி அவர்
சொற்படி ஆடும் பொம்மையென
ஆகிப்போன கொடுமைகளைத் தான்
கண்டிட்டோம் நாம் வரலாறாய்.
தானே குருவாய்  முதல்வன் என்றான்.
அடுத்தது தான் அரசன் என்றான்.
மூன்றாவதாய் வணிகன் என்று
சூழ்ச்சிகளுமே செய்து  விட்டான்.
உழவும் தொழிலும் இங்கே அன்று
வந்தனை செய்யப்படவில்லை.
நிந்தனை செய்தார் பற்பலவாய்.
உழைக்கும் மாபெரும் கூட்டமெலாம்
பிராமணர்களுக்கு காலடிகள்.

அந்தணர் என்போர் அறவோர்
மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்
என்றாரே  நம் வள்ளுவரும் .
அந்த அந்தணரோ இவரில்லை.
பிறப்பினாலே  வர்ணம் தீட்டி
கோத்திரங்கள் சொல்லி
குலங்கள் சொல்லி
சூழ்ச்சி செய்தவர்களே
இவர்கள் ஆகும்.

அரசன் தரித்திடும்
மணிமுடி உச்சியில் ..இந்த
உச்சிக்குடுமியே
உட்கார்ந்து கொண்டது.

நம் தொன்மைத் தமிழ்
எங்கோ சென்றது.
பின்னணியின் ஒரு
மந்திரக்கூச்சலே
மன்னன் வாய்வழி
வந்தது.வந்தது.

சூத்திரர் என்றும்
பஞ்சமர் என்றும்
மக்களையெல்லாம்
மந்தைகள் ஆக்கினர்.
தொடுதல் குற்றம்.
பார்த்தல் குற்றம்
மூச்சு விடுதலும்
குற்றம்.குற்றம்.
முண்டாசு கூட
குற்றம் குற்றம்.
இடுப்புத் துணியும் குற்றம்
கால் செருப்பும் குற்றம்
படிப்பும் குற்றம்
பக்தியும் குற்றம்.
கொற்றவன் எல்லாம்
இற்றவன் ஆனான்.
செத்தால் கூட‌
சுடுகாடு இல்லை.
அல்லல் பட்டு  ஆற்றாது
அழுத கண்ணீர் எல்லாம்
சமூக அநீதி அத்தனையும்
தேய்க்கும் படையாகிடும்.
தெளிவாய்  தெளிவாய்
தமிழா  நீ
திரள்வாய் திரள்வாய்
தமிழா நீ.

நான்கு வர்ணம் நானூறு ஆனது.
மேலே உள்ளவன் கீழே மிதிக்க
கீழே உள்ளவனும் தனக்குக் கீழே
உள்ளவனையும்  இன்னும் மிதிக்க
சாதி அடுக்குகளின் சரித்திரமே
பல நூற்றாண்டுகளையும் தின்று
முடித்ததையே கண்டோம் நாம்!

வெள்ளையன் வந்தான்.
அவனும் இங்கு
ஆண்டுகொள்ளவே
அறிவு சன்னல்
கொஞ்சம் திறந்தான்.
கொஞ்சம் திறந்ததில் நம்
கொத்தடிமைத்தனமே
தெளிவாய் தெரிந்தது.
வேடம் போட்ட
வேதம் தெரிந்தது.
பிரம்மம் என்னும்
புரட்டு தெரிந்தது .
மூன்று கோட்டையை
எரித்த சிவனை
கும்பிட வைத்த
பொய்மை புரிந்தது.

சிந்துவெளிக்கோட்டைகள்
தமிழன் கோட்டைகள்.
அறம்பிறழ்ந்த ஆரியக்கூட்டம்
அக்கோட்டைகளை எல்லாம்
சூழ்ச்சியால் எரித்த கதையே ..இங்கு
முப்புரம் எரித்த சிவ காண்டம்.
வெள்ளையன் திறந்த
கல்விக்கண்ணில்
வேதாந்தம் எல்லாம் வெறும்
வெங்காயம் தான்.
வேண் தாடி வேந்தன்
சொன்னது பலித்தது.
பகுத்து அறிந்தவன் ஒரு
"சுய மரியாதை "
இயக்கம் தந்தான்.
"தன்மானம்" என்று
தமிழில் சொன்னால்
அதையும் ஒரு
இலக்கணக்குறிப்பாய்
படித்துக்கொண்டே
இருப்போம் நாம்.
மழுங்கடித்தே
கிடப்போம் நாம்.
அதனால்
அவன் சொல் கொண்டே ..அவன்
ஆதிக்கம் அழிப்போம்.
அதுவே
நம் "சுயமரியாதை" இயக்கம்.

மன்னன் இடம் மாறிப்போனது
பொய்மைக் கூச்சல் குப்பைகளின்
மந்திர சுலோகங்கள் ஆளவந்தது.
சாதி மதத்தை அரசியல் ஆக்கினான்
கடவுளாவது  கத்தரிக்காயாவது
தர்ப்பையை தூர எறிந்துவிட்டு நம்
செங்கோல்  ஏந்தி நிற்கின்றான்.

கணினிக்குள்ளும் புகுந்துவிட்டான்.
எந்த "பட்டன்"  தட்டினாலும்
ஓட்டுக்களை எண்ணிப்பார்க்கும்போது
நான்கு வர்ண பேதங்கள்  தான் ..ஆ ட்சி
நாற்காலியில் அமர்ந்திடுமாம்.

சூது அறிந்திடு தமிழா நீ
தீது அறிந்திடு  தமிழா நீ
தமிழின்
சூழ் பகை அறிந்திடு நீ
தமிழா நீ .

விழித்திடு ! விழித்திடு !
தமிழா நீ!
விடியல் இனி வெகு தூரமிலை.
விழித்திடு !விழித்திடு!!
தமிழா நீ!


==============================================


















சனி, 2 நவம்பர், 2019

கடவுளோடு ஒரு விளையாட்டு

கடவுளோடு ஒரு விளையாட்டு
=============================================ருத்ரா

நாமே ஏற்படுத்திக்கொண்ட கடவுள் என்பதால் நமது விருப்பு வெறுப்பு கோபம் பகை என்பதையும் கடவுளுக்கு உடுத்திப் பார்ப்பதும்  நமது ஏற்பாடு தான். வாழ்க்கையே மாயை என்னும் போது கடவுளும் ஒரு மாயையாகத்தான் நம்மிடம் இருக்கிறார். இந்த மாயைகளை களைவதற்கு மனிதனின் அறிவார்ந்த சிந்தனையே தேவை.

அஜாதம்
அவர்ணம்
அவ்யக்தம்
அவ்வியவஹார்யம்
அச்சிந்தயம்
அவித்யா
அபவுருஷம்
அமதம்
அனாதி
அனந்தம்
என்று இப்படி அடுக்கிக்கொண்டேபோனால்
அவேதம் (வேதம் அற்றது )
அப்பிரம்மம் (பிரம்மம் அற்றது)
என்னும்
நாத்திகம் தான்
மிஞ்சும்

.அப்புறம் ஏன் இந்த தேவம் அசுரம் எனும் பொம்மை விளையாட்டு? அடையாளங்களை களைந்த பின் எதற்கு இந்த ஆயுத அடையாளங்கள்? ஒரு உட்குறிப்பாய் ஒரு இனப்போரை காட்டுவதற்கே இது புராணமாய் எழுதப்படுகிறது. அதர்மத்தை வெல்லுவதற்குத் தான் அத்தனை ஆயுதங்களும் என்றால் தர்ம அதர்மத்தை தாண்டிய பிரம்மம் என்று சொல்வதெல்லாம் பொய் என்று ஆகிறது.மொத்தத்தில் கடவுள் என்பது மனிதன் விளையாடுவதற்கு அவனே செய்து கொண்ட பொம்மை ஆகும்.சில மனிதர்களிடையே இந்த பொம்மைக்கு கொம்பு முளைத்து கோர ரூபமாய் கோரைப்பல்லும் முளைத்துவிடுவதே பிரச்னை ஆகி  விடுகிறது.

மேலே சொன்னவாறு கடவுளைத்தேடும் "தத்துவ விச்சாரத்தில் " மூழ்கிவிட்டால்  அப்புறம் கடவுள் இல்லை என்று தான் எழுந்து நிற்போம். இந்த உண்மை  தெரிந்து விடக்கூடாது என்பதற்குத்தான் அந்த நான்கு வேதங்களும் கூட மறைத்து மறைத்து ஓதப்படுகிறது.அவை நான்கு "மறைகள் "எனப்படுவதும் இதனால் தான். கடவுள் எனும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டில் மனிதனை மனிதன்  வெறுக்கும்    ஒரு மனிதாபிமானமற்ற வெறி எப்படி நுழைந்தது?

அவர்ணம் என்று சுலோகம் சொல்லிக்கொண்டே "சதுர் வர்ணம்"புகுந்து கொண்டது. பிரம்மம் அபுருஷமானது என்று சுலோக இரைச்சல் கேட்டது தான் மிச்சம். புருஷ சூக்தம் என்று நான்கு வர்ண சனாதனம் அட்டை போல்
மக்களை உறிஞ்சிக்கொண்டிருப்பதைத்தான் நாம் பார்க்கிறோம்.மனிதர்கள் மரக்கட்டைகளாய் விறைத்துப்போனார்கள்.இதனால் தான் மதம் ஒரு அபினி என்றான் சமுதாய இயக்கவியலின் ஒரு மேதை.

===================================================================