புதன், 17 ஜூலை, 2024

இதோ..இதோ.

 

இதோ..இதோ..

______________________________

கல்லாடன்.



இது என்ன‌

இப்படி உறுமுகிறது.

கோரைப்பற்களில்

கடித்துக்குதறிய‌

அரை குறை இரையுடன்..?


ஆட்டுக்குட்டிகளுக்கு 

புகலிடம் தருகிறேன் 

என்று தான்

அழகிய பட்டாக்கத்திகள்

போட்ட பந்தலில்

விழா நடக்கிறது..


வருங்காலம் முழுவதுமே

பளிச்சென்று பாலிஷ் போட்ட‌

புது மெருகில் இதோ

உங்களுக்கு

என்று

காலண்டர் தாள்களே 

இல்லாமல் 

அழகிய வண்ணத்தில் 

அச்சடித்த காலண்டர் நம் முன்

காட்டப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக