ஞாயிறு, 21 ஜூலை, 2024

வரம்.

 வரம்.

___________________________________________

ருத்ரா



என்ன வரம் வேண்டும்?

நீ யார் என்று நான் அறியவேண்டும்.

இது ஒரு வரமா?

இது என்னை வழிபடுவது போன்ற‌

ஒரு கேள்வி தானே

வேறு உனக்கு என்ன வேண்டும்?

அதே தான் வேண்டும்.

என்ன கேட்கிறாய்?

வேண்டுதலும் வேண்டாமையும் 

இல்லாத வரம் தான் அது.

வேண்டுதல் என்றல் வரம் வேண்டுதல்.

வேண்டாமை என்றால் வரம் வேண்டாமை

இதில் உனக்கு எது வேண்டும்?

வேண்டுதல் வேண்டாமை என்பது

உன் மனத்தில் முளைப்பது.

அந்த மனத்தை கழற்றி எடுத்து

உன்னிடம் தந்து விடவா?

அப்படியென்றாலும்

இரண்டு மனம் வேண்டும் என்று

பாட ஆரம்பித்து விடுவேனே.

இது நினைப்பதை

எப்படி நினைப்பதும் 

அப்புறம் அதை எப்படி மறப்பது

என்று நினைப்பதும் தானே.

வேண்டுமானல் அந்த‌

இரண்டு மனத்தை இப்படிக்கேட்கலாம்

நீ யார் என்ற‌

கேள்விக்கே வருகிறேன்.

உன்னை அப்படியே வணங்குவது 

ஒரு மனம்.

நீ யார் என்று கேள்வி கேட்பது 

ஒரு மனம்.

சரி சுற்றி வளைக்காதே

நான் இருக்கிறேனா? இல்லையா?

என்பது தானே

உன் அம்புக்கு "புல்ஸ் ஐ"

அட ஆச்சரியமாக இருக்கிறதே

நீ என்ன ஆங்கிலேயனா?

ஆமாம்.

உனக்குத்தெரியுமா?

உலகில் முக்கால் வாசிக்கு மேல் பேசும் 

இந்த ஆங்கிலத்தில்

உங்கள் சகஸ்ரநாமத்தைச்சொல்லுங்கள் 

என்று

தினமும் நானும் 

ஒரு எதிர் சகஸ்ரநாமத்தை இவர்களுக்கு

சொல்லிக்கொண்டிருப்பது 

இவர்களுக்கு கேட்கிறதா இல்லையா

என்று தெரியவில்லையே.

அது

உங்கள் பாடு அவர்கள் பாடு.

இப்போதும்

அதே வரம் தான் வேண்டும்.

நீ...இல்லை இல்லை

நீங்கள் யார்?

என்ன அதற்குள் உனக்கு

ஒரு பயம் வந்து விட்டதே!

அந்த பயமே நான்!


__________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக