வியாழன், 30 ஏப்ரல், 2020

கொரோனா ராஜ்யம்.

கொரோனா ராஜ்யம்.
=====================================ருத்ரா

நீங்க என்னை வச்சு செய்றீங்களா?
நான் உங்களை வச்சு செய்றேனா?
கேள்வி ஓடிகிட்டே இருக்கு
அதற்கான பதில்
மூச்சு வாங்க வாங்க‌
ரொம்ப ரொம்ப பின்னால
வந்து கிட்டிருக்கு.
என்னத் திருடன் திருடன்னு
விரட்டிகிட்டே வந்து
ஒரு சந்துக்குள்ள வச்சு
அந்த திருடங்ககிட்ட‌
செமத்தியா ஒரு தொகையை
கொடுத்துட்டாங்க.
அது இருந்தா
பட்டினி பஞ்சம்னு வாடிகிட்டு
இருக்கிற மக்களுக்கு கொடுக்கலாம்ல.
ஓம் வேலையைப்பாத்துகிட்டு
போடாண்றாங்க‌
என்னயப்பாத்து.
ஆயிரத்தெட்டு முக்காடு போட்டுகிட்டு
மூக்கப்பொத்தி
மொகத்தப்பொத்தி
எல்லாரும் ஜோரா ஒரு வாட்டி
கையத்தட்டுங்கன்னு சொல்லிகிட்டு
வெளக்கேத்துங்க‌
மூதேவி போய் லெட்சுமி வருவான்னு
புராணம்பேசிகிட்டு
ஓட்டை சோதனக்கருவிகள வாங்கி
கோட்ட விட்டுட்டு
வயிறு முக்கியமா?
உயிரு முக்கியமா?ன்னு
கேட்டுக்கிட்டே
கொத்து கொத்தா
உயிரோடு வயிறுகளையும்
பலி கொடுக்கும்
சாணக்கிய சாஸ்திரங்களை
வச்சு வச்சு செய்யும்
நீங்க கொரோனாவா?
நான் கொரோனாவா?
.......
இந்த கேள்விக்கு பதில் சொல்லலேனா
உன் தல சுக்கு நூறா வெடிச்சிடும்னு
வழக்கமான கேள்விய
வேதாளம் கேக்க‌
விக்கிரமனும் அந்த‌
அட்டக்கத்தி எனும்
ஓட்டுகளை நீட்ட...
கதை தொடர்கிறது.
குரல் முழக்கும்
பறவைகளின்
கூடு அடங்கி
வீடு அடங்கி
ஊர் அடங்கி
நாடு அடங்கி
முடங்கிக்கொண்டது.
ராமராஜ்யத்துக்கு
ஆயிரம் அடிக்கு மேல்
சிலை யெழுப்பி
சம்ப்ரோக்ஷணம் செய்தாலும்
கொரோனா ராஜ்யம்
நம் மூக்கு அருகே
கை கொட்டி சிரிக்கின்றது.

======================================


MEN MAY COME...



MEN MAY COME...



MEN "MAY" COME! MEN "MAY" GO!
BUT  I STAND AND STICK
TO EVER SHINING "ROSE OF HOPE."
AN INSTINCT SAYS SO.
THE WILL OF MAN
WILL REIGN ALL.
THE MAN OF WILL
WINS ALL AND ALL.
HENCE THE MONTH "MAY" MAY COME
AS A WAY TO ONE AND ALL.
BUT
WE NEVER FORGET
THAT
"MAY" MEANS RIGHT TO WORK.
WHICH AGAIN IT MEANS
RIGHT TO FIGHT TO EXIST AND TO WORK
AND LIVE AS MAN!
WE MUST BE AWARE
THE MEANING OF "MAY"

IS NOT A MAY BUT A MUST
TO  LIVE A MEANINGFUL LIFE!


______________________________RUTHRAA



ருத்ராவின் குறுநானூறு (முதலாம் பத்து)

ருத்ராவின் குறுநானூறு (முதலாம் பத்து)
===========================================

குறு நானூறு (1)
===============================ருத்ரா

பனை படு கிழங்கு உரி பிளந்தன்ன‌

கனை கொடு வெய்நோய்

கலிங்கம் எரிக்கும். கழை அடுக்கத்து

மழை உரி உடுத்த மணி அறை வெற்ப!

மஞ்சு துகில் போலும் தழீஇயத் தருதி.

என் ஆவி ஓம்ப விரைதி மன்னே.



=====================================


குறுநானூறு (2)

==================================ருத்ரா


தன் பார்ப்பு தின்னும்

கொடுமுதலை வாய்ப்பட்டன்ன‌

நெடுநாடன் வாய்ச்சொல்

யானே பட்டழிந்தேன்

ஞாழல கரைய அலைகூர

அலையிடை காண் அளியனோ.

____________________________________


குறுநானூறு (3)

=====================================ருத்ரா


கயம் துகள் மூசும் அலர் பெய்

பேழ்வாய்க் கடுவளி சுரம் நுழைபடுத்து

குச்சிக்கை நீட்டி அஞ்சிறு பைம்புள்

அணைக்கத் தாவும் காட்சிகள் மலிய‌

தமியனாய் எல்வளை நோக்கி

வறள் பேயாறு வருந்தி மிசை கடவும்.


==========================================


குறுநானூறு (4)

=====================================ருத்ரா


யாஅ  மரத்தன்ன இலைதொறும்

கதிரொளி பூசி மின்னிய வானம்

மருட்கும் நின் அம்பசலை கண்டுழி

தாய் உள் உள் வெட்கும் குறுகும்.

குடுமி மலையன் செவி போழ்ந்திடு

காலம் காட்டும் முன் விரைந்து.


========================================
குறுநானூறு (5)

=======================================ருத்ரா

தன் கூரலகு உடையுபு வெரூஉம் குருகின்

வாய்ப்படு அயிரை துடி கண்டக்கால்.

அஃதே நீயும் நுண்பறை முரல் போலும்

அவனை உள்ளித் துடித்தாய் என்னே.

அலர் படுமுன் ஆற்றிக்கொள் அணியிழாய்.

===========================================

குறுநானூறு (6)

======================================ருத்ரா


விழி நோக்கி விழி அகலுங்கால்

அவள் மான் விழி மைவான் பரவி

வயின் வயின் இமைப்ப ஆறு இடறி

அவல் படுத்து எழுந்து அவன்

மாணடி சிலைக்கும் வாணுதல் குறிக்கும்.



===========================================


குறுநானூறு (7)

==================================ருத்ரா


சேம்பு இலை சுளகாய் அவள் கைஎறி

பூங்கரும்பு உலக்கை விசும்புடன் மூட்டி

இடை இடை இடை இல மாயம் செய்து

இடித்து உவக்கும் இன்பம் கண்டான்

மன்று மறந்தான்.மணி முடி மறந்தான்

அவள் அசைதரு நீழல் நீடு இனிதிருந்தான்.


=================================

குறுநானூறு (8)

==================================ருத்ரா


மீன்சினை அன்ன வெண்மணல் குவைய‌

ஞாழல் உறங்கும் தண்துறை நாடன்

வரும் நிமித்தம் வழி வழி நோக்கி

கழங்கு அடுக்கி கண் ஓர்க்கும்மே

மென்மயிர் சிலிர்க்க இறை வளை திருத்தி.


================================

குறுநானூறு (9)

=======================================ருத்ரா

வள் உயிர் வணர் மருப்பு

வயங்கொலிப் பாலை பண்ணிய

தீங்குரல் என்னுள் இன் தீ பூப்ப

அவன் குரல் ஆங்கு ஆவி இழைப்ப

வெள்ளி கிழித்து நெடுவான் கீறும்.

===========================================

குறுநானூறு (10)

=======================================ருத்ரா.



ஒள்ளிய குடுமி வண்ணம் அசைப்ப‌

வெள்ளிய மின்னல் இடி உண் மஞ்ஞை

கலவம் பரப்பி  க‌ளித்தது போன்ம்

கதுப்பு அலையெறி விசும்பும் களிகூர்

உள்ளத்தன்னாள் உள்ளிய வெற்பன்

கறங்கு பறையும் ஒளித்தே ஒலிக்கும்.



============================================

புதன், 29 ஏப்ரல், 2020

குறுநானூறு (6)

குறுநானூறு (6)
=================================ருத்ரா

விழி நோக்கி விழி அகலுங்கால்
அவள் மான் விழி மைவான் பரவி
வயின் வயின் இமைப்ப ஆறு இடறி
அவல் படுத்து எழுந்து அவன்
மாணடி சிலைக்கும் வாணுதல் குறிக்கும்.

=========================================

குறுநானூறு (5)

குறுநானூறு (5)
===========================ருத்ரா

தன் கூரலகு உடையுபு வெரூஉம் குருகின்
வாய்ப்படு அயிரை துடி கண்டக்கால்.
அஃதே நீயும் நுண்பறை முரல் போலும்
அவனை உள்ளித் துடித்தாய் என்னே.
அலர் படுமுன் ஆற்றிக்கொள் அணியிழாய்.

=================================

குறுநானூறு (4)

குறுநானூறு (4)
=========================ருத்ரா 

யாஅ  மரத்தன்ன இலைதொறும் 
கதிரொளி பூசி மின்னிய வானம்
மருட்கும் நின் அம்பசலை கண்டுழி
தாய் உள் உள் வெட்கும் குறுகும்.
குடுமி மலையன் செவி போழ்ந்திடு
காலம் காட்டும் முன் விரைந்து.

==========================

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

குறுநானூறு (3)

குறுநானூறு (3)
=====================================ருத்ரா

கயம் துகள் மூசும் அலர் பெய்
பேழ்வாய்க் கடுவளி சுரம் நுழைபடுத்து
குச்சிக்கை நீட்டி அஞ்சிறு பைம்புள்
அணைக்கத் தாவும் காட்சிகள் மலிய‌
தமியனாய் எல்வளை நோக்கி
வறள் பேயாறு வருந்தி மிசை கடவும்.

==========================================

குறுநானூறு (2)


குறுநானூறு (2)
==================================ருத்ரா

தன் பார்ப்பு தின்னும் 
கொடுமுதலை வாய்ப்பட்டன்ன‌
நெடுநாடன் வாய்ச்சொல்
யானே பட்டழிந்தேன்
ஞாழல கரைய அலைகூர
அலையிடை காண் அளியனோ.
____________________________________

குறு நானூறு (1)

குறு நானூறு (1)

பனை படு கிழங்கு உரி பிளந்தன்ன‌
கனை கொடு வெய்நோய்
கலிங்கம் எரிக்கும். கழை அடுக்கத்து
மழை உரி உடுத்த மணி அறை வெற்ப!
மஞ்சு துகில் போலும் தழீஇயத் தருதி.
என் ஆவி ஓம்ப விரைதி மன்னே.

======================================ருத்ரா

இலை இல மலர்ந்த முகை இல் இலவம்

இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
=======================================ருத்ரா
(ஓலைத்துடிப்புகள் -21)


என்பு நீண்டதொரு கணு உடல் இலவம்
வானம் இலை தொட்டு வடிநீர் பருக
நாவாய் ஆட்டும் நளியிலை இரட்ட
எரிப்பூவின் அவிர் இணர் சொரியும்
செந்தீயும் ஆங்கே கல்லின் பரற்கண்
பிழம்பின் யாறென இழிபடு நிரவலில்
கதழ் பரிக்  கலிமா கடி மணல் சிதைய
கான் ஊடு ஊசி கூர்த்தன்ன அவன்
கலுழ் செய் சூர் தொடு பொருள் வேட்டலில்
மீக்கூர்  துன்பம் மேனி வருத்த
இறை நெகிழ் இவள் தொடியிடை
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
ஏங்கிய வெளியை வாங்கியே நோக்கும்
ஓமை வரிய வறுங்கிளை நீவும்
சேவல் எதிர்க்கும் அணிமென் பேடை
வாராது நோன்புழி அளி பட்டன்ன
அன்றில் நரலும் நெடுங்கண் நாளின்
அனல் பூஞ் சேக்கை  அவியல் வீழ்ந்தாள்.

================================================
(ஒவையார் எழுதிய அகநானூற்றுப்பாடல் 11ல் எழில் மிக்க காட்சி நயம் செறிந்த ஒரு வரி வருகிறது.அது தான் நான் எழுதிய இச்சங்க நடைக்கவிதையின் தலைப்பு)

=====================================ருத்ரா 




திங்கள், 27 ஏப்ரல், 2020

ராஷ்ட்ரபாஷா

மோடிஜியின் கவலை
=======================================ருத்ரா
சட்.
இந்த இந்தி பண்டிதர்கள்
எங்கே தொலைந்தார்கள்?
கொரோனாவுக்கு இந்திச்சொல்
கண்டுபிடித்துச்சொல்லியிருந்தால்
இந்நேரம்
கொரோனா பரவும் வேகத்தில்
அதன் கூடவே
நம் ராஷ்ட்ரபாஷாவும்
புயல் வேகத்தில்
பரவியிருக்குமே!
இந்த "மகாமாரி" என்றால்
ஏதோ தமிழ்நாட்டுச்சொல்
போலல்லவா இருக்கிறது.

========================================

தொலைந்து போகும்வரை


தொலைந்து போகும்வரை
======================================ருத்ரா

கண்ணொடு கண்ணினை நோக்கின்
வாய்ச்சொற்கள்
என்ன பயத்தும் இல.
ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னாலேயே
வள்ளுவர் சொல்லிவிட்டார்.
இந்த முக கவசங்களினூடே
என்னத்தை
சள புள என்று பேசப்போகிறாய்?
கண்களால் 
பார்த்துக்கொண்டே இருப்போம்
இந்த கொரோனாக்கள்
தொலைந்து போகும் வரை!

==============================================



ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம்
==========================================ருத்ரா



ஒருத்தர்
ரெண்டு பேர்
அங்கும் இங்கும்
வந்து
முகம் மறைத்து வந்தால்
அவர்கள்
முகமூடிக்கொள்ளைக்காரர்கள்.
என்று நாம் நினைக்கலாம்.
ஆனால்
ஓட்டுப்போடும்
நூத்திமுப்பது கோடி சொச்சமும்
இப்படி
மூக்கு கவசம் போட்டுக்கொண்டதால்
என்ன நடக்குது இங்கே
என்று விக்கித்துப்போய் நிற்கின்றோம்.
கொரானா சின்னத்தில்
யார் இங்கே ஓட்டு கேட்கிறார்கள்?
மூச்சு விட ஜனநாயகம் இங்கே
மிஞ்சி நிற்குமா?
விரல் படாமலேயே
பட்டன்கள் தட்டப்பட்டு விடுமா?
இது நோய் தான்.
ஐயமில்லை.
நூறு சதவீதம் தொற்று
உறுதி செய்யப்படும்போது
மொத்த மனிதமும்
குவாரண்டைன் கூடாரத்தில் தான்.
ஜனநாயகம் முழுவதும்
ஒரு மாதிரியான‌
டிடென்ஷன் கேம்பில் தான்.!
ரத்தப்பரிசோதனைகள்
நடந்து கொண்டிருக்கும்
அந்த பிரம்ம முகூர்த்தத்தில்
மசோதாக்களும்
நூற்றுக்கணக்காய்
சட்டம் ஆகி விடலாம்.
எந்த வியாசன்
எந்த இதிஹாசத்தை
இங்கு எழுதிக்கொண்டிருக்கின்றானோ?
"கொரானா"
ஏதோ புரியாத ஸ்லோகங்களை
சொல்லிக்கொண்டிருக்கிறது.

================================================

சனி, 25 ஏப்ரல், 2020

அச்சமில்லை.அச்சமில்லை

அச்சமில்லை.அச்சமில்லை
======================================ருத்ரா

உன் மீது
எங்களுக்கு பயமில்லை.
உன் மீது
எங்களுக்கு வெறுப்பில்லை.
உன் மீது
எங்களுக்கு பகைமையில்லை.
இப்படி
ஒளிந்து மறைந்து
கண்ணாமூச்சி ஆடுவதும் கூட‌
ஒரு விளையாட்டு.
நீ
எங்கள் எதிரியில்லை.
ஆனால்
கொரோனாவே
ஆயிரம் ஆயிரம் கொரோனாக்கள்
அஞ்சி நடுங்கும்
ஒரு நோய் எங்களை
ஆட்டிப்படைக்கிறது.
அது தான் இங்குள்ள
சாதி மத வேறி என்பது.
அது ஒளிந்து கிடந்து
எங்களை தாக்கும்.
நீ
எங்கள் நுரையீரலைத்தானே
தின்கிறாய்!
இது
எங்கள் இன மாண்புகளை
எங்கள் உயிர் மொழியை
எங்கள் மனித நீதியை
தின்று செறித்துவிடத்
துடிக்கின்றன.
அவை
"தீண்டாமை"எனும் கொடுங்கரத்தால்
எங்களை
ஊரடங்கு மட்டும் அல்ல
இந்த தேசத்தை விட்டே
வெளியே வீசியெறிந்து விட
வெறி வளர்த்து அலைகின்றன.
எங்கள் மண்ணை
அந்த மானிட வாசனையை
கருவறுக்கும்
அந்த கொடிய நோய்
பத்திரமாய் படுத்துக்கிடக்கும்
இடம் எது தெரியுமா?
எங்கள் ஓட்டுகளே!
விண்ணை இடிக்கும் கோயில்களை
கட்டியவர்கள் நாங்கள்.
இப்போது எங்கள்
மொத்தக்கல்லறையை
கட்டிக்கொண்டிருக்கிறோம்
அல்ல அல்ல‌
கட்டி முடித்துவிட்டோம்
அந்த ஓட்டுக்களைக்கொண்டு.
கொரோனாவே
இவர்களின் நான்கு வர்ணக்கதிர் வீச்சில்
நாங்கள் ஏற்கனவே
காணாமல் போய்விட்டோம்.
உன்னைக்கண்டு அச்சமில்லை.
நீ எங்களுக்கு
துச்சம் துச்சம் துச்சமே!

===========================================

மொண்ணப் பயலுவளா

வியாழன், 1 செப்டம்பர், 2016

மொண்ணப் பயலுவளா



"மொண்ணப்  பயலுவளா"
===============================================ருத்ரா

ஒரு படத்தின் தலைப்பை
வாசிப்பதற்குள்ளே
இன்னோரு படம்
நம் முதுகைச் சுரண்டுகிறது.
ஐந்து நிமிடப் குறும்படங்களை
ரெண்டரை மணி நேரத்துக்கு
"சவ்வாய் உருட்டித் திரட்டி இழுத்து"
இளிக்கிற இனிப்புச் சவ்வு  மிட்டாய்கள்
ஆக்குகிறார்கள்.
புதிய தலைமுறைகள்
புகுகின்ற வாசலாய்
சினிமா ஒரு பரிணாமம் உற்றது
என்ற மகிழ்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது.
இந்த புற்றீசல்கள்
படைப்புத்திறனை
கொள்ளை மலிவு ஆக்கலாம்.
புது  முகங்கள் வரவேற்கப் படவேண்டியவர்களே!
ரசிகர்கள் அதே  "விசில்"பறவைகள் தானே.
"உப்புமா"ப்படங்களில்
உப்பும் இல்லை  ஒறப்பும்  இல்லை என‌
ஓடிவிடமாட்டார்களா என்ன!
"அட மொண்ணப்  பயலுவளா இதுக்கு மேலே
என்னடா படம் எடுக்கிறது ?"
பயப்படாதீர்கள்
இந்த தலைப்பிலும் படங்கள் வரலாம்!

========================================================

என்றும் உன்னோடு தான்

என்றும் உன்னோடு தான்
===================================ருத்ரா

என் உயிரில் நீ.
உன் உயிரில் நான்.
அப்படியும்
உனக்கு நான்
ஒரு ரோசாவை நீட்டித்தானே
காதலை சொல்லவேண்டும்.
ஓடோடி வந்தேன்
இந்த ரோஜாவைக்கொடுக்க.
எல்லாம் உதிர்ந்த பின்
இந்த முட்கள் மட்டுமே மிச்சம்.
முள் என்ன?
மலர் என்ன?
நீ என்ன?
நான் என்ன?
நீ என்ன?
நான் என்ன?
நம் காதலுக்கு அர்த்தங்கள்
ஏது?
(கொரோனாக்கள்
கொஞ்சிக்கொண்டன)

====================================================

வியாழன், 23 ஏப்ரல், 2020

போற்றுதும் போற்றுதும்

போற்றுதும் போற்றுதும்
(இளங்கோ அடிகள் தினம்)
====================================ருத்ரா



பூந் தமிழ் போற்றுதும்.
புலர் தமிழ் போற்றுதும்.
ஐம்பெரும்காப்பியம்
தந்த சான்றோர்
அடிகள் போற்றுதும்
அடிகள் போற்றுதும்.
இளங்கோ அடிகள்
என்றொரு இமயம்
நமது தமிழின்
இதயத்துடிப்பை
இடி குரல் நரம்பில்
யாத்ததோர் யாழின்
எரிமலைப் பாட்டை
இயம்பிய எண்ணமும்
எழுதிய வண்ணமும்
ஏந்திய ஒளியை
போற்றுதும் போற்றுதும்
போற்றுதுமே.
அலை கடலோரம்
அலையையும் எதிர்த்த‌
விரியலைக் கூந்தல்
அநீதியை எதிர்த்து
அனல் விழி வீச‌
நின்றதோர்
உயிர்ச்சிலை அது.
நம் எழுச்சியின்
உருவகக் "கார்ட்டூன்" அது.
கண்ணகிப்பெண்ணின்
கனல் உமிழ் சிலை அது.
பூம்புகார் நகரில்
கோட்டம் கண்டோம்.
சிலம்பு உருவில்
அந்த வாயிற் கதவு
"வாயிலோயே
வாயிலோயே" என‌
விளிக்கும் குரலும்
நமக்கு கேட்கும்.
தமிழ் உணர்ச்சியை
நம்மிடம் பெய்து
தமிழ் செழிக்க‌
ஆண்டவர் திறமும் அங்கு
கண்டோம் கண்டோம்.
கண்ணகி என்னும்
பேரொளி தன்னை
கோணிப்பாயில்
எங்கோ சுருட்டி
வீசி எறிந்தவர்
ஆண்ட விதமும்
நாம் கண்டோம்.
சோழி உருட்டி
பேய்க்கதை சொன்ன‌
பிரசன்னம் எல்லாம்
தமிழின் தணலை
அவித்திட இயலுமோ?
தமிழா! தமிழா!
இன்னும் இன்னும்
பகடை உருட்டி
காசுகளின் அந்த‌
சில்லறைச்சத்தமா உனை 
இயக்கி நிற்பது?
இளங்கோ என்ற‌
சேரனும் இன்று
கேரளன் ஆயினும்
நம் தமிழன் தான்.
மழை தவழும்
கார் நாட்டான்
கர்நாடகத்தான் ஆகி
முரண் பட்ட போதும்
நம் தமிழன் தான்.
தெள்ளிய தமிழென‌
தெலுங்கு "செப்பினும்"
அவனும் அவனும்
நம் தமிழன் தான்.
நம் இதயம் நுழைந்து
நம்மை இணைக்கும்
பொற்கயிறே நம்
திராவிடம் தான்.
மறைத்து மறைத்து
ஒலி செய்யும்
நான் மறை மூடி
மறைத்ததனால்
ஒற்றுமை இன்றிக்
கிடக்கின்றோம்.
மீண்டும் நாம்
ஒன்றிட வேண்டும்
பெருந்தமிழாய்.
உயர் தமிழாய்.
பேசிட வேண்டும்
மீண்டும் அந்த‌
பன்மலை அடுக்கத்து
குமரிக் கோட்டின்
குமுறும் குரல் தனை
"தமிழ்ச்சீற்றமுடன்"

==================================================







புதன், 22 ஏப்ரல், 2020

கொரோனாவின் கவிதை.

கொரோனாவின் கவிதை.
‍‍‍‍‍________________________________ருத்ரா.

‍‍‍
மனமிருந்தால் பறவைக்கூட்டில்
மான்கள் வாழலாம்.
..................
இந்த மனிதன் வாழுமிடத்தில்
பறவைகள் ஏது?
மான்கள் ஏது?
அவை எல்லாம்
சிறைக்கூண்டுகளில்.
அவனே
"மாத்தி யோசி" என்றானே
என்று
நானும் மாத்தி யோசித்தேன்.
ஆர் என் ஏ "டெக்ஸ்ட் புத்தகங்களிலிருந்து"
நானும்
வெளியே வந்து விட்டேன்.
அவர்கள் இப்போது
கூண்டுகளில்.


‍‍‍_______________________________________________

‍‍‍

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

இற்றைத்திங்கள் பிழிஒளிப் பிஞ்சும்....

இற்றைத்திங்கள் நுண்துளிப் பிஞ்சும்....
==========================================ருத்ரா


கொல் களிறும் வெரூஉம் வரிநெடு வேங்கை
இணரிய பூக்களின் சொரிபடு வெதிர்ப்பில்
கொடிய மருப்பொடு அறையும் அறையும்.
வேய்மறை அடர்கான் கண்ணொளி ஒளிக்கும்
எல்லே ஆற்றின் எழில் இலஞ்சி துழாஅய்
மயிரிழை அன்ன நுண்மணல் நூல்பிரி
நுடங்கு நுண்டுளி தூம்புக்கை கொடு
தன் மேல் நீர் இறைத்துக்களிக்கும்.
பொன்னின் வெற்பன் தண்ணிய நாடன்
குறி ஈண்டு தந்து பாணாள் கங்குல்
பிறை வருடி சில்லென புல்லின் சிறுபூ
சிலிர்த்திட என் நெடுவிழி கொய்தான்
இற்றைத்திங்கள் நுண்துளிப்  பிஞ்சும்
என்னொடு உகுக்கும் நோன்மாண் நெஞ்சே!

==================================================

லைக்குகள்

லைக்குகள்
‍‍‍‍_______________________________

"லட்சம் பிணங்களை
அசுரவேகத்தில் குவித்துவிட்டது
இந்த வைரஸ்"
என்று
ட்விட்டரில் போட்டது
"வைரல்" ஆகி
லட்சக்கணக்காய் குவித்தது
"லைக்கு"களை.
‍‍‍______________________________ருத்ரா

திங்கள், 20 ஏப்ரல், 2020

ஹஹ்ஹா..ஹஹ்ஹ்ஹா

ஹஹ்ஹா..ஹஹ்ஹ்ஹா

யாரிடமிருந்து
இந்த வெறிச்சிரிப்பு என்று
பார்க்கிறீர்களா?
ஒரு சகமனிதன்..
அதுவும் மனிதர்களின்
உயிரைக்காப்பாற்றும்
ஒரு மருத்துவன்..
அவனை நான் பழி தீர்த்து
பிணமாக்கினேன்.
ஆனால் உங்களை
அவன் மீதும்
பாய்ந்து தாக்கும்
மிருகங்கள் ஆக்கிவிட்டேன்
பார்த்தீர்களா!
கடவுளையும் பூட்டி
சாவியை
என் விரல் நுனியில் தான்
சுழற்றிக்கொண்டிருக்கிறேன்.
ஆம்.
மனிதா!
இந்த அச்சம் தான்
என் உடைமையடா!
உன் ஆயிரம் மருந்துகள்
எனக்கு துச்சமடா!
..............
இப்படிக்கு
கொரானா வைரஸ்.

===========================ருத்ரா



ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கவிஞர் ருத்ராவுக்கு "வல்லமையாளர் விருது"

கவிஞர் ருத்ராவுக்கு "வல்லமையாளர் விருது"


://www.vallamai.com/?p=53234


வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர்!

ஜனவரி  12, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு கவிஞர் ருத்ரா இ. பரமசிவன் அவர்கள் 


ruthra-paramasivan

கவிதைகள் எழுதுவதை தனது முதன்மை சிந்தனை வெளிப்பாடாகக் கொண்டாலும் அதிலும் பலவேறு கோணங்களில் திறமையைக் காட்ட முடியும் என்று தொடர்ந்து காண்பித்து வருகிறார் கவிஞர் (உ)ருத்ரா இ. பரமசிவன் அவர்கள். அவரது கவிதையிலக்கிய ஆளுமையையை வியந்து அவரை வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
கல்லிடைக்குறிச்சியை தனது பூர்வீகமாகக் கொண்டு தாமிரபரணி நதிக்கரையில் வளர்ந்த கவிஞர் ருத்ரா அவர்களின் கல்விப் பின்னணி பொருளாதாரத்துறை. தற்பொழுது 71 வது அகவையை எட்டியுள்ள ருத்ரா, கல்லூரி நாட்களில் பொருளாதார‌ப் பாட‌த்தில் தரவரிசையில் முத‌ல் நிலையில் தேர்வு பெற்றதால் ‘நேரடித் தேர்விற்கு உட்படுத்தத் தேவையில்லை’ என்ற சிறப்பு விதிகளின் அடிப்படையில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (LIC of INDIA) பணிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பல்வேறு துறைக‌ளிலும் ப‌ணியாற்றியுள்ளார். பணி ஓய்விற்குப் பிறகு தனது மனைவியுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து கலிபோர்னியாவில் வசிக்கும் அவரது மகன் மற்றும் மகள் குடும்பத்துடனும், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார்.
கல்கி, ஜூவி, குங்குமம், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளிலும் கவிஞர் ருத்ராவின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அகரமுதல, திண்ணை, வார்ப்பு போன்ற இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், தனது பல்வேறுபட்ட வலைப்பூக்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். பொருளாதாரத் துறையின் பின்னணி கொண்டாலும் அறிவியலில், அதிலிலும் குறிப்பாக இயற்பியலில் ஆர்வம் மிகக் கொண்டவர் கவிஞர் ருத்ரா. குவாண்ட‌ம் மெக்கானிக்ஸ், ஆலன் கத்ஸ் இனஃப்லேஷன் தியரி(Alan Guth Inflation Theory), சவ்வுப்படல வெளிகள் (RS MODELS I AND II), அண்டம், பெருவெடிப்பு, ஹிக்ஸ் போசோன் சப்அட்டாமிக் பார்டிகில் (higgs boson subatomic particles) போன்றவற்றைப் பற்றி விளக்கிக் கட்டுரைகள் எழுதும் வல்லவர். இயற்பியல் கட்டுரைகள் மட்டுமன்றி அத்தகவல்களை கவிதையின் கருப்பொருளாகவும் கொண்டு கவிதைகளும் எழுதுவார்.
கவிஞர் ருத்ராவின் கவிதைகளின் பாடுபொருள் பொதுவாக வழங்கிவரும் கருப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை, கவிதைகளின் நயமும் கவிதைநடையில் வேறுபட்டவை. பொதுவான புழக்கத்தில் இருக்கும் கவிதை பாணியிலும் இவரால் எழுத முடியும், பிற கவிஞர்கள் தொட்டிராத கோணங்களையும் கவிஞர் ருத்ராவால் காட்ட முடியும். இவர் எழுதும் கவிதைகளுக்கு சொல்லலங்காரம் ஆதாரம் அல்ல. சொல்லவரும் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர். இவர் கவிதைகளின் பல்வேறு கோணங்களை அடுத்து பார்ப்போம் (கவிதைகள் முழுமையாகவோ அல்லது சிறப்பு வரிகள் மட்டுமோ இடத்திற்குத் தக்கவாறு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது).
அறிவியல் தாக்கக் கவிதைகள்:
களிப்பருளும் “களிப்பே” என்ற கவிதையில் கவிஞர் ருத்ரா இயற்பியல் கருத்துக்களின் வழி ஆன்மிக விளக்கமளிக்கிறார்.
களிப்பருளும் “களிப்பே”!
=======================
[…]
எது ஞானம்?
எது அஞ்ஞானம்?
அது மெய்ஞானம்?
எது விஞ்ஞானம்?
முடிவில்லாததற்கு
முடி போட்டு குடுமி போடமுடியாது.
முனை தெரியும் வரை
கையில் கருத்தில் நிரடும் வரை
பாதியாக்கு
பாதியாக்கிக்கொண்டே இரு.
கிரேக்க மொழியில்
மெலிடஸ் (கிமு 610_540)
இதை “அபெய்ரான்” என்றார்.
இன்ஃபினிடி என்று
இது நுண்கணிதம் ஆயிற்று.
லிமிட்டிங் டு சீரோ என்பது
டிஃபரன்ஷியல் கால்குலஸ்.
லிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது
இன்டெக்ரல் கால்குலஸ்.
தொகுத்ததை பகுத்த போதும்
பகுத்ததை தொகுத்த போதும்
வெறுமையே அங்கு விஸ்வரூபம்.
விஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான்.
மெய்ஞானிக்கு அது ஹிரண்யகர்ப்பன்.
ஆத்திகத்தையும் நாத்திகத்தையும்
குவாண்டம் பிடித்து
ஒரு லிங்கம் செய்தால்
அதுவே இங்கு ஒரு
குவாண்ட லிங்கம்.
ஃபெர்மியானும் போஸானும்
கொண்டு பிசைந்த லிங்கமே அது.
[…]
ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரு வேறு தன்மை கொண்டு இருப்பதை இன்று அறிவியல் அறிகிறது, ஆனால் இந்தக் கருத்தை ஆன்மிகம் முன்னரே குறிப்பிட்டுள்ளது. இறைவன் ஒரே நேரத்தில் சிவனாகவும் சக்தியாகவும் இருப்பது அணுவின் தன்மையைப் போன்றது என்று மாணிக்கவாசகர் கூறிய “அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க” கருத்தை கவிஞர் ருத்ரா இக்கவிதையில் கையாண்டதை முனைவர் க. கணேசலிங்கம் பாராட்டியுள்ளார்.
சங்கநடைக் கவிதைகள்:
பிற கவிஞர்களிலும் இருந்து ருத்ராவை வேறுபடுத்திக் காட்டுவது அவரது சங்கஇலக்கியச் சாயல் கொண்ட கவிதைகள். கீழே ஒரு எடுத்துக்காட்டு…
பசலை பூத்தே…
=============
கதழ்பரி கலிமா அலரிதூஉய்
ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும்
முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும்
இன்னிய பலவின் முள்பசுங்காய்
மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும்.
நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும்
ஓதையுண்பினும் ஓவா உறுபசி
உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும்.
நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர்
தடுக்கும் மறிக்கும் எவன் கொல் செயினே.
பெரும்பணைத் தோளின் கடுப்ப விரையும்
துப்புநிலை அறியும் அதிர்கலிப் பொறிமா.
துவள்படும் நெஞ்சின் என் பொங்குதிரை ஈண்டு
அடு கிளர் அகலத்து அவன் உள் உள் தைக்கும்
அகவும் மஞ்ஞை என்னுள் அகவி
உருவும் என்னுயிர் மின்னல் மயிரிய‌
நார்ப்பூ தொடுக்கும் பசலை பூத்தே!
============
பொழிப்புரை:-
============
குளம்புகள் பதிய குதித்துச்செல்லும் குதிரையை அதன் அலரிப்பூக்குஞ்சம் அசைய அதனால் அப்பூக்கள் எங்கும் உதிர குதிரை (பூட்டிய தேரில்) செல்லும் காதலன் வழியெல்லாம் வேங்கை மரங்கள் அடர்ந்திருக்கும் அந்த வெங்காட்டு வழியில் செல்கிறான்.நெருக்கமான வழி அது.இடையிடையே உள்ள இலஞ்சி எனும் சுனைகள் செறிந்த ஊரில் இனிய தன்மை கொண்ட பலாமரங்கள் தரை தொடும்படி பலாக்கனிகளை (வேர்ப்பலா)வீழ்த்திக்கிடக்கும்.பலாவின் மேல் புறம் முள் அடர்ந்தது போல் உள்ள தோற்றத்தைக்கண்டு அவையும் சிறு சிறு வண்டுகள் என நினைத்து அந்த பசுங்காய்கள் மீது வண்டுகள் மொய்க்கும்.
அவை யாழ் போல சிறகுகளை அதிரச்செய்து இசைக்கும்.காதலனின் நெடிய தேரின் மணியின் நாக்கும் நடுங்கலுற்று அதிலிருந்து மெல்லொலி கேட்கும்.
அந்த இன்னொலியை உண்டபோதும் தன் தீராத பசியால் அலைவுற்று அவை அந்த வெட்டவெளியில் மொய்த்துப்பறக்கும்.வழியில் குறுக்கு நெடுக்காக கிடக்கும் மரத்தின் வேர்கள் நீண்ட மலைப்பாம்புகள் போல் காதலன் செல்லும் வேகத்தை தடுத்து மறிக்கும்.இதை என்ன செய்வது?என் பிரிவுத்துயரத்தை இது இன்னும் அதிகப்படுத்துகிறதே என்று காதலி துன்பம் கொள்கிறாள்.மனக்கண்ணில் காதலன் விரைந்து வரும் காட்சிகள் விரிகின்றன.
அவன் திரண்ட தோளின் வலிமைமிக்க செயலினால் விரையும் குதிரைகள் அவன் வலிய தன்மையை அறியும்.உடம்பில் அழகிய புள்ளிகள் நிறைந்த அரிய அந்த அழகிய குதிரை அதிர்வோடு துள்ளி துள்ளி ஓடும்.இங்கு துவண்டு போன உள்ளத்தோடு வேதனை அடையும் என் நெஞ்சில் பொங்கும் அலைகள்
அவன் அகன்ற நெஞ்சத்தில் சூடேற்றி கிளரச்செய்து அவன் நெஞ்சக்கூட்டிலும் உள்ளே உள்ளே தைத்து வருத்தும்.எங்கோ கூவும் மயில் அதன் அகவல் ஒலியை என்னுள் பாய்ச்சும்.அது என்னுயிர் ஊடுருருவி மயிரிழை போன்ற மின்னல் உணர்வை நுழைத்து அதை நார் ஆக்கி பூ தொடுக்கும்.அந்த மலர் மாலை பசலை நோயாய் (பிரிவு துன்பத்தின் வலி)என் மீது மலர்ந்து படரும்.
இவை காதலியின் மனவெழுச்சி மிக்க காதலின் சொற்கள்.
“கவிதை என்ற பெயரில் அயற் சொற்களைக் கலந்து உரை நடையைத் தருவோர் இடையே மரபுப் பாடல்கள் புனையும் தங்கள் ஆர்வமும் ஆற்றலும் பாராட்டிற்குரியது,” என்று முனைவர். இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் இவர் முயற்சியைப் பாராட்டி உள்ளார்கள். காப்பியாற்றுப்படை, மாவின் அளிகுரல், நெடுநல் மாயன், இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும், காய்நெல் அறுத்த வெண்புலம், கல்பெயர்த்து இழிதரும், வேழ விரிபூ! என்று பல தலைப்புகளில் சங்க இலக்கிய நடைக் கவிதைகளை கவிஞர் ருத்ரா வழங்கியுள்ளார். இக்கவிதையை எழுதியவரும் முன்னர் குறிப்பிட்ட அறிவியல் கவிதையை எழுதியவரும் ஒரே கவிஞரா என வியக்காமல் இருக்க இயலாது.
குறும்பாக்கள்:
குறும்பாக்கள் குறைந்த வரிகளில் முக்கியமானக் கருத்தை சொல்வதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் சொல்லப்பட்ட கருத்தும் மனதில் தக்க வேண்டும். கவிஞர் ருத்ராவின் மற்றொரு சிறப்பு, குறும்பாக்களிலும் முத்திரை பதிப்பது. குறும்பாக்கள் பற்றி அவர் சொல்லும் குறும்பா….
குறும்பாக்களைப்பற்றி குறும்பா…
===============================
ஆயிரம் பக்க
எழுத்துக்களின்
”போன்சாய்” மரம்
கீழே அவருடைய இருவேறு குறும்பாத் தொகுப்புகளில் இருந்து சில பாடல்கள். எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனத்தை மூன்று நான்கு வரிகளில் மிகக் கச்சிதமாக முடித்து விடுக்கிறார். தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் சிலரில் அவர் தன்னைப்பற்றிக் கூறுவதும் இடம் பெறுகிறது.
சுஜாதா
======
எழுத்துக‌ளுக்கு எல‌க்ட்ரானிக்ஸை
ஊற்றிய‌வ‌ர்….ஆயிர‌ம்
“எந்திர‌ன்”க‌ளின் அடிப்ப‌டை “சிப்”
கல்கி
=====
எத்தனை தலையணைகள்.
அத்தனையிலும்
சரித்திரம் விழித்துக்கொண்டிருந்தது.
ருத்ரா
======
ருத்ராவா? யார் அது?
ப‌த்திரிகை ஆஃபீஸ்க‌ளின்
குப்பைத்தொட்டியில் தேடுங்க‌ள்.
(ம‌ற்ற‌ ருத்ராக்க‌ள் ம‌ன்னிக்க‌)
*****
எழுதிச்செல்லும்
விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்.
எங்கே முடியும் விதி?
பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை
======
பேனாவுக்கு
மட்டுமே புரிந்தது.
காகித‌ம் ம‌ட்டுமே
ர‌சித்த‌து.
“க‌விதை”
======
எழுதி முடிக்க‌வில்லை.
பேனாவில் எல்லாம்
எறும்புக‌ள்.
த‌மிழுக்கும் அமுதென்று பேர்
======
இங்கு சுட்டப்பட்ட எழுத்தாளர்கள் தவிர்த்து, தமிழ் எழுத்தாளர்களில் மேலும் பலரை விமர்சித்து நான்கு தனிப் பாடல் திரட்டாகக் கொடுத்துள்ளார். அவை கீழ்காணும் சுட்டிகளின் வழி படிக்கக் கிடைக்கும்.
எழுத்தாளர்களின் ஊர்வலம்- பாகம் 1பாகம் 2 , பாகம் 3பாகம் 4 .
விமர்சனக் கவிதைகள்:
அறிவியல் ஆன்மிகக் கவிதைகளுக்கும், சங்க நடைக் கவிதைகளுக்கும், குறும்பாக்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட வகையில் முற்றிலும் வேறுபட்ட பாடுபொருளைக் கருத்தாக வைத்தும் கவிஞர் ருத்ராவால் கவிதை எழுத முடியும். யாரும் பொதுவாகக் கையாளும் கவிதைக் கருவுக்கு மாறுபட்டு விளையாட்டு விமர்சனம் என்பதைக் கூடக் கவிதையாக வடிப்பவர் ருத்ரா. சென்ற உலகக் கால்பந்து போட்டியில் நெதர்லாந்தும் மெக்ஸிகோவும் மோதியதையும் விமர்சனக் கவிதையாகவே வழங்கியிருந்தார்…அக்கவிதை கீழே.
உலக கோப்பை கால்பந்து
நெதர்லாந்தும் மெக்ஸிகோவும்
=============================
நியூயார்க் டைம்ஸ் கொப்பளிக்கிறது
பி.பி.ஸி ஸ்போர்ட்ஸ்
நரம்பு புடைக்கிறது.
டிவி திரை பூராவும்
உணர்ச்சிக்கம்பளிப்பூச்சிகளின்
அடைசல்கள்.துள்ளு முள்ளுகள்.
கழுத்துப்பிடியாய்
கடையில் ஒரு அமுக்கு.
அப்புறம்
பெனால்டியில்
மெக்ஸிகோ தோல்விக்குப்பெட்டிக்கு
கடைசி ஆணி.
தொண்ணூத்து நாலாவது நிமிடத்தில்
“க்ளாஸ் ஜான் ஹண்டெலார்”
அடித்த கோல்..
வானத்தின்
உச்சிமண்டை பிளந்து கொண்டது.
அந்த உற்சாகக்குரல்
உலகத்தின்
செவிட்டுக்காதுகளின்
பாறாங்கல்லையெல்லாம்
கூட‌
உருட்டித்தள்ளியிருக்கும்.
நாக் அவுட் வந்த பிறகும்
இனியும்
ஒரு நாக்கை
தொங்கப்போட்டுக்கொண்டிருக்க முடியுமா?
சிலிக்கு
இப்படித்தானே பிரேஸில்
ஒரு பச்சை மிளகாயை
கடிக்க கொடுத்தது.
அவர்களுக்கு
பச்சை மிளகாய் எல்லாம்
இனிப்புக்காய்கள் என்றாலும்
இந்த நாக் அவுட்டின்
அந்த “ஆலப்பினோ அல்லது ஜாலப்பினோ”
செம காரம் தான்.
மூக்கில் காதில் கண்ணில்
எல்லாம் காரம் தான்.
பிஃபாவின்
வண்ண வண்ண ரத்தப்புடைப்புகளை
இந்த கால்பந்தில் பார்த்து
நரம்புக்குள்
நல்லபாம்புகளை கொத்தவிட்டு
நுரை தள்ளி
பார்த்து ரசிக்கும் விளையாட்டு
எந்த சொர்க்கத்திலும்
கிடைக்காது.
கிரிக்கெட் கூட‌
அகராதிப்படி
வெறும் பூச்சி விளையாட்டு தான்.
மாறுகோணச் சிந்தனையின் மறுஉருவமாக பலகோணங்களில் கவிதைகள் படைத்து வரும் கவிஞர் ருத்ராவை இவ்வார வல்லமையாளராக தேர்வு செய்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம். தொடர்ந்து கவிதை இலக்கியத்தில் புதுமைகள் புகுத்த அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
***
கவிஞர் ருத்ராவின் வலைப்பூக்கள்:
http://ruthraavinkavithaikal.blogspot.com/
http://ruthraasivan.blogspot.com/
http://ruthraa.wordpress.com/
http://nunpaa.blogspot.com/
http://nunbaa.blogspot.com/
http://oosiyilaikkaadukal.blogspot.com/

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
Print Friendly, PDF & Email
Download PDF

சிவ நானூறு

சிவ நானூறு
====================================ருத்ரா

அவலும் மிசையும்
ஒரு படுத்தன்ன‌
செல்வமும் வறுமையும்
சமன் செய்யுபு
ஒரு நுண்ணுயிர் தொற்று
ஊழ் படை செய்யும்
மாயம் என் கொல்?
உண்பது நாழி
உடுப்பது நான்கு முழம்.
மன்பதை காக்கும்
கோல் என் கோல்?
அகவும் மஞ்ஞையும்
அகநானூறு முரலும்.
மற்று ஈண்டு
ஈயல் கூட ஓர்
ஆற்றுப்படை யாக்கும்.
கல்லும் புல்லும்
பூவும் புழுவும்
பதிற்றுப்பத்து
கீறித் தரூஉம்
தமிழின் செம்மண்
செம்மை அறிந்தும்
செம்மறிப்படையாய்
திரிதரும் வாழ்வில்
ஓர்மை யாங்கண்
தொலைத்தாய் தமிழா?
பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்பும்
விழுமியம் மறந்ததே
பெரு வீழ்ச்சி இங்கு.
ஒளிஉறு விழி பெறு
ஓடிடும் கொல் இருள்.
ஓங்கல் பூக்கும்
ஞாயிறு ஒப்பாய்!

===============================================
ஒரு சிவநானூற்றுப்பாடல் இது.
அகம் சிவந்து புறம் சிவக்கும்
ஒரு பொதுமைப்பாடத்தின்
என் சிவ நானூற்றுப்பாடலின்
முதல் பாடல் இது
=============================================ருத்ரா

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

"கொரோனாமிக்ஸ்"

"கொரோனாமிக்ஸ்"
======================================ருத்ரா

பொருளாதார வளர்ச்சி
7 சதவீதத்தையும்
தாண்டிவிடுமாமே!

ஆனால்
இப்பொதே நெகடிவ் 1 க்கு
போகும் என்கிறார்களே.

அடடே! ஆமாம் அப்பா ஆமாம்.
ஏழுக்கு முன்னால் ஒரு
நெகடிவ் போடவேண்டும்.
அதற்குள்
அட்மின் அவசரப்பட்டு விட்டார்.

=====================================================

வியாழன், 16 ஏப்ரல், 2020

ஏழ்கடல்




ஏழ்கடல்
=========================================ருத்ரா

போதிய விழிப்புணர்வு இல்லை
என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.
ஊடகங்கள் படுத்திய பாடு அது.
ஆமாம்.
"விழிப்புணர்வே" இல்லை.
என்ன சொல்கிறாய் ?
பின்னே என்ன?
நான் உன்னைப்பார்த்தால்
நீ எங்கோ வேண்டும் என்றே
அந்த மரக்கிளையில் வழக்கமாய் 
ஒரு நொண்டிக்காக்கா வருமே
அதைப்போய் பார்க்கிறாய்.
நானும் 
நீ என்னப்பார்க்கும் போது
ஆண்பிள்ளைத்தனமாய் 
உன்னை எதிர் நோக்கி பார்க்காமல்
வேறு எங்கோ பார்க்கிறேன்.
ஆனால் அது சட்டென்று நீ
பார்வையைய வேறு எங்கும் 
திருப்பிவிடக்கூடாதே என்று தான்..
"விழிப்புணர்வே" இல்லை.
என்ன கீறல் விழுந்த ரிக்கார்டாய்
பேத்திக்கொண்டே இருக்கிறாய்.
நானா? வள்ளுவனிடம் போய்க்கேள்
............................
"கண்ணொடு கண்ணிணை நோக்கின்.."

அது அப்படியா?
அவள் விழிகளில் 
ஏழ்கடலும் ததும்பி வழிந்தன‌
காதலாய்!
இப்போது விழிகள் சங்கமித்துக்கொண்டன.

================================================





ஹாலிவுட் படம் அல்ல இது!


ஹாலிவுட் படம் அல்ல இது!
===============================================ருத்ரா

ஹாலிவுட் சைஃபை படம்.
செமத்ரில்.
பேனிக்கின் உச்சம்.
எல்லா இடங்களிலும்
சக்கை போடு போடுகிற‌து.
அடுப்பில் சுட சுட பேக் பண்ணிய‌
குக்கிகளை
க்ராண்ட்மா குவித்து அடுக்கி
அடுக்கி குவித்து
அப்புறம்
பிணங்களாக
ப்ளாஸ்டிக் பேக்கில்
அய்யோ..என்ன இது?
ஏலியன்கள்
நம் மூளைக்குள்
அவற்றின் மரணகரமான‌
உலகங்களை
உருவாக்குகின்றனவா?
படம் அல்ல இது.
நம் சாவுகளின்
புள்ளிவிவரங்கள்
வரை படமாக ஏறி ஏறிப்போகும்
பயங்கர நிகழ்வுகளாக‌
ஹாலிவுட் செட்ட்டிங்கை தாண்டி
நம் முகத்தில் குத்து விடுகின்றன.
முககவங்களையும் தாண்டி
அவற்றின் வலியும் வேதனையும்
நம் கண்ணீர் தளும்பல்களில்
பிம்பங்களைக் காட்டுகின்ற‌ன.
அவை வெர்ச்சுவல் ரியாலிடிகள் இல்லை.
நம் மார்ச்சுவரி ரியலிட்டிகள்.
உலக மனிதா?
உன் தேசக்கொடியும் மொழியும்
மற்றும் மதமும் கோட்பாடுகளும்
அதோ
அந்த குப்பைத்தொட்டிக்குள் குவிகின்றன.
வர்த்தக உள் குத்துகளும்
வெளிச்சிரிப்புகளும்
ஏற்கனவே அணிந்த முக கவசங்களை
இப்போது தான் கழற்றுகின்றன.
எங்கே மனிதம்?
எங்கே சக மனித நேயம்?
கொரோனாவின்
கொடிய நாக்குகள்
நம்மை மில்லியன் பிணங்களாய்
சுருட்டிக்கொள்ளுமா?
பொம்மைகளை கொண்டு கட்டிய‌
மாளிகையா ஐ.நா சபை?
ஆளுக்கொரு "வீட்டொவை"க்கையில்
வைத்துக்கொண்டு
பூமராங் விளையாடும் உங்கள்
கூத்துப்பட்டறையில்
உலகத்தின் தீர்க்கப்பட வேண்டிய
சில நியாய வழக்குகள்
ஒழிந்து மறைந்தனவே.
இலங்கையில் அறம் பிறழ்ந்த
ஒரு படுகொலை
லட்சம் தமிழ்ப்பிணங்களை குவித்தது கூட‌
வெறும் "சோப் ஓபரா" காட்சிகளாய்
கடந்து போயினவே!
இந்தப்போரிலும்
ஏதோ அரசியலின் "நோய்" தொற்றாமல்
அறத்தோடு நின்று வென்று காட்டு!
உலக மனிதா!
உன் கூரிய நோக்கும் அறிவும்
உன் வீரிய எழுச்சியும்
ஒரு மாமனித திரட்சியாய்
அந்த ஆர்.என்.ஏ அத்துமீறல்களை
அடித்து நொறுக்கட்டும்.
முறி மருந்துகள்
முனை முறியாத உன் முயற்சியில்
வெற்றிகள் குவிக்கட்டும்
நம் தோல்வித்துயரங்கள்
தொலைந்து போகட்டும்.
நம் நம்பிக்கையின் மீது குவியும்
இந்த மரண ஓலங்கள்
மண் மூடிப்போகட்டும்.
புதிய துளிரின் கதிர்வீச்சில்
நாளைய‌ப்பொழுது
பொலிவு மிக்க மகிழ்ச்சியின்
புன்னகையாய் விரியட்டும்.
அந்த இனிய நினைப்பில்
தூங்கி விழிப்போம்.
நம் கைகளில் எல்லாம் வசப்படும்.
வெற்றி நமதே!

=========================================================






புதன், 15 ஏப்ரல், 2020

"நேனோ டார்வின்" கூறுகிறார்

"


நேனோ டார்வின்" கூறுகிறார்
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________ருத்ரா

உயிர்
உயிரை அளிக்கும்
உயிர்
உயிரை அழிக்கும்.
உன் வெர்ச்சுவல் கேம்ஸில்
"சர்வைவல் ஃபிட்டெஸ்ட்"
இன்னும் முடியவில்லை.
"கோரோனா கேம்ஸ்"

_____________________________________

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

எருமைக்காரன் பட்டி என்றொரு தேசம்!




எருமைக்காரன் பட்டி  என்றொரு தேசம்!
===============================================ருத்ரா 





தமிழா!
திருவள்ளுவர் ஆண்டு
பொங்கல் திருநாளில்
தமிழர் புத்தாண்டை
ஒளி காட்டிய பிறகும்
இருட்டுத்திரையில் ஏன் இந்த‌
சித்திரை சினிமாப்படம்?
இந்த "வருஷப்பிறப்பு"
வரிசையாய் உச்சரிக்கும்
பெயர்களில் 
ஏதாவது உனக்கு
விளங்குகிறதா?
எதுவும் விளங்காமல்
கோயில்கள் செல்கின்றாய்.
தேங்காய் உடைக்கின்றாய்.
கற்பூரம் காட்டுகின்றாய்.
அவர்கள் கொப்புளிக்கும்
சமஸ்கிருத எச்சில்களில்
தமிழை நீ குளிப்பாட்டுகிறாய்.
அதற்கும்
ஊரடங்கு வந்து விட்டதே என்று தான்
தமிழா
உனக்கு வருத்தம்.
ஊர்கள் உன் உரிமை ஆகவில்லையே
என்னும் வருத்தம் கொஞ்சமும் இல்லை
தமிழா
அதற்கு கோபமும் உனக்கு வருவதே இல்லை
தமிழா.
அதோ ஒரு குக்கிராமம் 
எருமைக்காரன் பட்டி என்று
அதுவே உன் தேசம்.
...........................
செந்தமிழ் நாடெனும் போதினிலே...

சட். நிறுத்து.
வடக்கத்திக்காரர்களின்
காதுகளுக்கு அது தீட்டு.
அதனால் 
தமிழும் தமிழ் மண்ணூம்
மாசு பட்டு நின்றது தான்
மிச்சம்.
எடுத்துச்சொன்னாலும் புரியாது.
எழுதிச்சொன்னாலும் புரியாது.
உணர்ந்து சொன்னாலும் புரியாது.
உரத்துச்சொன்னாலும் புரியாது.
சினிமாக்காரர்கள் செய்த‌
மூளைச்சலவையில்
வேட்டியை எடுத்து முண்டாசு 
கட்டியிருக்கிறாய்.
இனி
உன்னிடம் என்ன இருக்கிறது
காப்பாற்றிக்கொள்ள?
தேர்தலின் போது
கோவணம் கிடைக்கும்
அது வரை
ஒளிந்திரு.
தனித்திரு.
பசித்திரு.
உன் சவப்பெட்டியை
நீயே சுமந்துவர தோள் கொடுக்கவும்
காத்திரு.
தமிழா காத்திரு!
சாலை ஓரங்களில்
அகதிகளாய் நீ அலைந்து திரிய‌
இந்த 
"கொரோனா"வை வைத்து
ஒத்திகைப்பார்த்து
காத்திரு 
தமிழா காத்திரு.

=======================================================