வியாழன், 11 ஜூலை, 2024

வெள்ளைத்துணி

 


வெள்ளைத்துணி

________________________________‍

ருத்ரா



அஞ்சு ஜி

ஆறு ஜி

என்று 

நம் அறிவின் 

நியூரான்களில் 

கோடி கோடி ரூபாய்களை

விவசாயம் செய்யும்

விரல் விட்டு எண்ணக்கூடியவர்களா

இந்த தேசம் மொத்தத்தையும்

கிரீடமாக்கி

சூட்டிக்கொண்டிருப்பது?

பங்குகள் பகடைகளாய்

சுழல்வத்தில்

ஆயிரம் கங்கைகள்

ஒன்று சேர்ந்து 

இவர்களுக்கு

பண அருவி கொட்டுவதில்

இங்கே

யாருக்கு என்ன மிச்சம்?

எலும்புகள் நொறுங்கி

ரத்தம் வறண்டு

குடல்கள் காய்ந்து

அதோ ரோட்டோரம்

ஈ மொய்த்துக்கிடக்கின்றன.

பிய்ந்து கிடக்கும் காக்கைச்சிறகுகளாய்

இடுக்குகள் வழியே பார்வைகள்

பிதுங்கிக்கிடக்கின்றன.

ஜன வெள்ளம் வற்றியா போனது?

வெள்ளைத்துணி மூடி

டாலர்கள் வியாபாரத்துக்கு

இங்கே ஊர்வலம் போகின்றன‌

அட்டையில் வெட்டி ஜிகினா ஒட்டிய‌

பாரத மாதாக்கள்!


_______________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக