சனி, 31 டிசம்பர், 2022

ஹேப்பி நியூ இயர்

 ஹேப்பி நியூ இயர்

_________________________________________________

ருத்ரா





ரெண்டு முள்ளும் ஒண்ணா சேந்தப்புறம்

அந்த ஊசிமுனையில் நின்று கொண்டு

2023ன்

அல்ஜிப்ராவை அலசலாம் என்ற

நினைப்பில் 

கண்ணயர்ந்து விட்டேன்.

ஒன்றரை மணிகழித்து தான் 

முழித்தேன்.

அதற்குள் அந்த ரயில்வண்டி 

எங்கு ஓடிப்போயிருக்கும்?

அவ்வளவு தான்.

காலக்குப்பியை பிதுக்கி எடுத்த நிகழ்வுகளை

இனியும் அதில் 

அடைத்து பிதுக்க முடியுமா? என்ன?

காலமாவது..குப்பியாவது?

காலமும் வெளியும்

பூஜ்யமாய் இருக்கும்

அப்பாலுக்கே அப்பால்

பில்லியன் அப்பாலும் கடந்து

தன்கண்களைக்கொண்டு

துருவிக்கொண்டு நிற்கிறதாமே

ஜேமஸ் வெப் தொலைனோக்கி.

அப்புறம் 

என்னடா வெங்காயம்?

உங்கள் சாதிகளும் சாத்திரங்களும்

கடவுளின் கதைக்குப்பைகளும்.

உன் பயம் என்று தீர்ந்ததோ

அதுவே புது ஆண்டு.

அல்ல அல்ல‌

காலமே காலமாகிவிட்ட‌

உன் உள்ளத்தின்

ஒளிபிழம்பு அது.

எல்லா இருளையும் குடித்துத்

தீர்த்துவிட்ட‌

அறிவின் பிழம்பு அது.

உன் கடிகாரம் உன் உள் துடிப்புக்குள் தான்.

இந்த பிரபஞ்சத்தைக்கொண்டு

உன் முகம் ஒற்றிக்கொள்.

புத்தம் புதிதாய்

ஒரு புன்னகையைத் துளியிடு!


_________________________________________________________

(இந்த வலைப்பூ உட்கார்ந்திருக்கும் காலக்கோட்டில் ஹேப்பி நியூ இயர் இன்னும் இமை விரிக்கவில்லை.நான் மதுரையில் அதிகாலை (01.01.2023) 1.25க்கு இக்கவிதையை எழுதினேன்.........ருத்ரா)



ஞாயிறு, 25 டிசம்பர், 2022

ஒரு சுடரேந்தியின் சொல்லேந்தி!

 ஒரு சுடரேந்தியின் சொல்லேந்தி!

_________________________________________________‍



வண்டி வண்டியாக தத்துவங்களை

சுமந்து கொண்டிருக்கும்

இந்து மதத்தின் முதுகு வளைந்தே போனது.

மூவர் வந்தனர்

மூண்டு கிடந்த இருட் சிப்பத்தை

பிரித்து வெளிச்சம் பெறுங்கள் என்று.

மனிதனும் கடவுளும் ஒன்றே 

என்றார் சங்கரர்.

ஒன்றே என்பதையும் 

வேறுபாடுகளை களைந்து

சென்று உணரவேண்டும் என்றார்

ராமானுஜர்.

ஒன்றா?

இல்லவே இல்லை 

கடவுளை மனிதன் தொட்டுக்கூட‌

பார்க்க முடியாது.

உள்ளத்தால் உருகிக்கொண்டே

இருக்க வேண்டியது தான் என்றார்

மத்துவர்.

இவை சிந்தித்துப்பார்த்து

உணர்ந்து உணர்ந்து

உருகத்தக்கவை தான்.

இவற்றுள் வர்ணம் காட்டும்

நச்சுப்பாம்புகளின் முட்டைகள்

ஏன்?

அவை படம் விரித்து நஞ்சு பொழிந்து

கீழ்மனிதர்கள் எனும்

இந்த மனிதர்களின்

வாழ்க்கைப்படலங்களை

அழித்தொழிப்பது ஏன்?

இதற்குத்தான 

இறை சிந்தனையில்

ஒரு சமத்துவம் வேண்டும்

என்று சான்றோர்கள் எண்ணினினர்.

ராமானுஜர் 

அதன் பெருவெளிச்சம் ஆவார்.

முதலில் அதை

"அறிய விடு"

அப்புறம் தானே அது

கருப்பா?சிவப்பா? என்று தெரியும்.

இந்த இருட்டை துடைப்பது தானே.

"தமஸோ மாம் ஜோதிர்கமய'

இந்த முக்தியே இவர்களுக்கு

கிடையாது என்பது

இறைவனுக்கே கருப்பு முக மூடி போட்டு

தூக்குமேடையில் நிறுத்துவது தானே!

தமிழ்ப்பேராயர் திரு மோகனரங்கன் வி.ஸ்ரீ ரங்கம் அவர்கள்

எழுத்துக்களில்

தத்துவங்களின் அந்த சுடரேந்தியான‌

ராமானுஜரை தரிசிக்க 

கொள்ளை ஆவல்.

அடுத்த தடவை அவர் நூலில் தோய்ந்து

களிப்புமிகும் வரிகளோடு

அவரை சந்திப்பேன்.

ஞானத்தின் ஒரு சுடரேந்தியின் 

சொல்லேந்தி அவர்களுக்கு

என் வணக்கங்கள்!


அன்பன் ருத்ரா

________________________________________________________________




 














கணினிக்கருவறையிலிருந்து

 கணினிக்கருவறையிலிருந்து

_____________________________________‍

ருத்ரா



எனக்கு நானே 

பேசிக்கொள்வதா?

என்னை 

என் முன் நிறுத்தி

அவனோடு ஒரு

கற்பனை உரையாடல் செய்வதா?

"சேட்பாட்"

என்றொரு கணினிப்பிஞ்சு 

களத்துக்கு வந்து விட்டது.

தனக்குத்தானே

மகுடம் சூட்டி ஒத்திகை

பார்த்துக்கொள்வது தான் இது.

மனிதன் 

தன் உள்ளுக்குள் நுழைந்து

தன் அறிவுத்திரட்சியை (ஐ க்யூ)

செறிவு படுத்திக்கொள்வது.

இப்போது அவன்

யாரையும் பேட்டி எடுக்கலாம்.

"எலான் மஸ்கை" கூட‌

ஹலோ என்று

கலாய்க்கக்கிளம்பி விடலாம்.

பிரஸ் மைக்குகளுக்கு

தன் உதடுகளை இறுக்கி 

மூடி வைத்துக்கொள்ளும்

பெரிய தலைவர்களிடமிருந்து கூட‌

பேச்சை பிடுங்கி

தண்ணி குடிக்க வைத்து விடலாம்.

கம்பெனி சாம்ராஜ்யங்களிலிருந்து

கெடு பிடி நாட்டுத்தலைவர்கள் வரை

ரகசியங்களை பறித்துக்கொண்டு

அவற்றைக் கொள்ளை கொள்ளையான‌

மூலதனங்களாக மாற்றி விடலாம்.

பெரிய பெரிய‌

சி இ ஓ க்களின்

மூளைப்பெட்டிக்குள்ளேயே

புகுந்து கல்லா கட்டுவது இது.

இளைய தலைமுறைகளின்

இளைய செல்வங்களே

பாம்புச்சட்டைகள் போல் உரித்துக்கொண்டு

அப்படியே

தலைமுறைகளையே 

கழற்றிப்போட்டுவிட்டு

காலச்செதில்களை உதிர விட்டு

உந்துவிசை கொள்ளும்

ஒரு "வோர்ம் ஹோல்"பயணம் இது

உங்களுக்கு.

முன்னேறுங்கள்.

முன்னேற்றம் தான்

உங்கள் மூச்சும் நுரையீரலும்.

முன்னேறுங்கள்.

உயர உயர முன்னேறுங்கள்.

____________________________________________________‍














rosy phrases

 

rosy phrases

_______________________________

ruthraa




they manipulate with their

bits or bytes end even qubits

and they set to a verbal butchery

called chat.bots coupled with

AI warp fiction virtualities.

their poems out mind and

out brain with silicon nerves and fleshes

when impulsed electric charges 

wedded with neuronic up-heavels.

their synthetic purkinje cells and

synoptic junctions deceive all

true charms of life and latitudes.

Let the poetry eat its own blue

and green and red

from those silly meadows and boughs

and furious suns of promising "easts"

Corporatism mars the very heart and  spirit

down to the earth with dirty dust and

heaps of deadly lust of bit-coins

and all that painful Despotism

hovering on these meek and feeble

multitudes that are rosy phrases of

democracy where always these skeletons

manifest the mortuary of digital corpses.


__________________________________________




சனி, 24 டிசம்பர், 2022

பெரியார்

 பெரியார்

______________________________________

ருத்ரா



நினைவு கொள்வது

என்றால்

மறந்து போனதின் 

மறு பக்கம் தானே.

நினைவாவது

தினமாவாது

வெங்காயம்.

"அதை சிந்தி..

அதை யோசின்னு..

சொன்னேனே

அது என்னாச்சு?"

அவர் சொடுக்கிய சவுக்குநுனி

உள்ளே போய் 

குத்துகிறது

குத்துகிறது

குத்திக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவின் 

மக்கள் தொகையை

இந்த கும்பாபிஷேகங்களும்

தீபாவளி நெரிசல்களும் தான்

காட்டிக்கொண்டே இருக்கின்றன

வெறும் அம்மணமாய்.

ஆனால்

இவர்கள் மந்தைகள் அல்ல.

மாக்களும் அல்ல.

இந்த 130 கோடி மக்களையும் 

உருட்டி திரட்டி

ஒரே உயர் மனிதனாய்

நம் அரசியல் அமைப்பு செய்து தந்தது.

குடியரசு தலைவர் என்று.

அவரோ 

ஒரு மதத்தலைவர் காலடியில்.

கோவிலில் கடவுள் அருகில் 

செல்லாமல் மறிக்கப்பட்டு

எங்கோ 

ஒரு படிக்கட்டில்.

மனிதனுக்கு மனிதன்

மகத்தானவனே.

மனிதனை மதிக்காத மனிதன்

மிருகமாக கூட இருக்க‌

தகுதியில்லை.

செத்துப்போகட்டுமே இந்த‌

சாதியும் மதமும் என்று

இவன் நினைக்கும் வரை

தினமும் இவன்

செத்துக்கொண்டு செத்துக்கொண்டு தான்

இருப்பான். 

தன்மானம் இல்லாத ஜனநாயமே

கடைந்தெடுத்த சர்வாதிகாரம்.

இதைத்தான் சொன்னார் அவர்:

சிந்தி..

யோசி..என்று.

தீக்குச்சியை கிழிக்கிறோம்

ஒவ்வொரு தடவையும் நாம்

சிகரெட் பற்ற வைத்துக்கொள்ள மட்டுமே.


______________________________________________________






"அகழ்நானூறு" 4 ன் பொழிப்புரை

  "அகழ்நானூறு" 4 ன் பொழிப்புரை

____________________________________________________

சொற்கீரன்.


"ஒரு அரிசோனன்" என்கிற என் இனிய அமெரிக்க நண்பர் "அகழ்நானூறு" 4 ன் "பொழிப்புரை" எழுதுங்கள் என்று எழுதியிருந்தார்.அவருக்கு எழுதியதே இந்த பதிலுரை.


நான் எழுதிய மற்ற சங்கநடைச்செய்யுட் கவிதைகளை பொழிப்புரையுடன் தான் எழுதியுள்ளேன்.இதற்கு முன் எழுதிய "அகழ்நானூறு 3"ல் குறிப்புரை ஒன்று எழுதியுள்ளேன்.அதில் தலைவி கடற்கரையில் மீன் பிடிக்கச்சென்ற தன் தலைவன் வரும் வரை பிரிவுத்துயரோடு இருப்புகொள்ளாமல் தவித்து கால்விரல்களால் கிறுக்குவது மணலில் நண்டுகள் ஊர்ந்ததால் ஏற்படும் வரிகள் போல இருக்கின்றன என்றும் அது தலைவனின் மனக்கண்ணில் புலமை மிக்க "கல்லாடனாரின்"செய்யுள் வரிக்களை ஒத்து இருப்பதாகவும் எழுதியிருக்கிறேன்.

நான் வல்லமையில் 2015 ல் ஓலைத்துடிப்புகள் என்ற பெயரில் இது போன்ற சங்கநடைச்செய்யுட்கவிதைகள்

நிறைய(பொழிப்புரைகளுடன் தான்) எழுதியுள்ளேன்.இப்போதும் நான் எழுதும் ஒவ்வொரு செய்யுட் கவிதைக்கும் பொழிப்புரை எழுதுகிறேன்.இருப்பினும் சங்கத்தமிழ்ச்செய்யுட்களின் அழகும் பொருள் ஆழமும் கற்பனைச்செறிவும் நிறைந்த சொற்களை படித்து இன்புற்ற போது தமிழ் ஆர்வத்தில் உடனேயே எனக்குத்தோன்றும் சொற்களை "பொறியாக"க்கொண்டு இந்த கவிதைகளை எழுதுகின்றேன்.அதற்கு விரிவாக‌

உரை எழுத விரைவாக தட்டச்சு செய்ய வேண்டும்.அதற்கு பொறுமையும் வலிமையும் இல்லாததால் பொழிப்புரை இன்றியே பல செய்யுட்கவிதைகளை பதிவு இட்டுள்ளேன்.நீங்கள் இப்படி பொழிப்புரை விரும்பி எழுதியது எனக்கு இன்னும் ஆர்வத்தூண்டல் அளிக்கிறது.ஆனாலும் பொழிப்புரை இல்லாமல் பதிவிடுவது மிகத்தவறு தான்.உங்கள் ஆர்வமும் ஆதரவுமே என் பேனாவுக்குள் ஊறும் தமிழ் இலக்கிய தாகம் ஆகும்.


 பொழிப்புரை

______________________________________________________________________________

அகழ்நானூறு  4

________________________________‍

சொற்கீரன்


வரைமுதற் சிதறிய மண்ணா முத்தம்

ஆலி இழைய  பளிங்கு நீராட்டி

கழை ஆடு அடுக்கத்து மஞ்சுபடு கடாஅம்

வௌவ்வும் கொலைநர் படர் அகல் எஃகம்

குழாஅத்த அடர்சுரம் அளைஇ ஆறு தடவி

அறஞ்செய் பொருளுக்கு ஆவி பொருட்டன்று என‌

ஆன்றவன் துப்பின் துணைசேரச் சென்றான்.

பானாட் கங்குல் ஞெகிழியிற் கொடிவிடு 

மின்னல் போழ்ந்த நெடுவான் பொறாது

பூமயிர் இறைவளை நெகிழ நோன்றாள்.

உளைமா கலித்த பரியொலி கேட்டனள் 

ஊர்ந்து தரை தொடுமுன் அவள் எல்வளை 

ஏறல் உற்றதாய் களியின் வீங்கு 

எறி கடல் ஆர்த்து இன் நகை பூத்தாள்.

--------------------------------------------------------------------------------------


பொருள் தேடிச்செல்லும் தலைவன் செல்லும் வழியைப்பற்றி இப்பாடல் சொல்கிறது.

மலைப்பாறைகள் நீரால் கழுவப்படாத முத்துக்கள் சிதறிக்கிடப்பது போல் தோன்றுகின்றன.அங்கே பெய்யும் ஆலங்கட்டி மழையின் பளிங்கு விழுதுகள் வரி வரியாய் நீராட்டி படர்கின்றன.உயர்ந்த மூங்கில் மரங்கள் ஆடுகின்ற அந்த  மலைத்தொடர்களில் மழைமேகங்கள் தழுவும் வழியில் அவன் கடந்து செல்லும்போது வழிப்பறி செய்யும் கள்வர்களின் கொலைவெறி மிக்க இலை போல அகலமான எஃகு வேல்கள் இடைப்படுகின்றன. அக்கூட்டத்தாரால் அடர்ந்த அந்த காட்டுவழியில் கால் பதித்து அளைந்து செல்கிறான்.அறத்தொடு நின்று பொருளீட்டுவதில் உயிரையும் பொருட்டாகக்கொள்ளாமல் முன்னேறிச்செல்கிறான்.அதற்கு தகுதியும் திறமையும் மிக்கவனாய் தன் வலிமை ஒன்றையே துணையாகக்கொண்டு செல்கிறான்.அந்த நட்ட நடு இரவில்

அவர்கள் எறிகின்ற தீப்பந்தங்கள் வானில் மின்னலின் கொடியைப்போல் பிளந்து கொண்டு விழுகின்ற காட்சியை காணப்பொறாதவளாய்  தலைவி துயரம் கொள்கிறாள்.பூப்போன்ற மெல்லிய மயிர்கள் உடைய அவளது முன் கையின் வளையல்கள் நெகிழ்ந்து விழுமாறு துயர் கொள்கிறாள்.அப்போது பிடறியை உலுக்கிக்கொண்டு குதித்துவருகிற தலைவனின் குதிரையின் ஒலியைக்கேட்கிறாள்.நழுவி நழுவி ஊர்ந்து அவள் வளையல்கள் தரையில் விழ தொடு முன்னரே அவள் அடைகின்ற எல்லையில்லாத மகிழ்ச்சியில் ஒளி மிக்க அவள் வளையல்கள் களிப்பு மிகுதியால் கையில் ஏறிக்கொள்கின்றன.மகிழ்ச்சியின் அந்த பொங்குமாங்கடல் வீசும் அலைகள் எழுந்தததில் இன்முகத்தோடு முறுவல் பூத்தாள்.

____________________________________________________________________________

சொற்கீரன்




 

"ஹேப்பி நியூ இயர்"

 "ஹேப்பி நியூ இயர்"

_____________________________________

ருத்ரா



வரலாற்றின் பாதைக்கு

அடையாளம் காட்ட‌

மைல் கல்லாக‌

ரத்தம் சொட்ட சொட்ட‌

வாள் ஈட்டிகளையும்

கொய்த தலைகளையும் 

முண்டங்களையும்

நட்டு சென்றார்கள்.

பிணம் தின்னும் கழுகுகளால்

வானமே கந்தல் ஆனது.

கடவுள் என்றால் 

அச்சம் தண்டனை கொடூரம்

என்பவையே அவதாரங்களாய்

ஆர்த்தெழுந்தன.

வில் அம்புக் கூடுகளில் தான்

மதம் கூடுக்கட்டியிருந்தன.

அப்போது

ஒரு பேரொலி.

"பிதாவே இவர்களை மன்னியும்"

கடவுளே இந்த அம்பு பட்டு

வீழ்ந்து போனான்.

கடவுளுக்கும் மனிதனுக்கும்

உள்ள‌

இடைத்திரை கிழிந்தே போனது.

மானுடம் 

மிக்கதோர் அன்பின் ஒளியில்

கன்னிக்குடம் உடைத்து

ஜனனம் காட்டியது.

அப்போது தான்

பயம் கொண்ட மரணம்

என்ற சொல்லே

மரணம் அடைந்தது.

அந்த மாதா கோவில் மணியும்

பெருமாள் கோவில் மணியும்

பள்ளிவாசலின் வான் நோக்கிய‌

இறையொலியும்

ஒரே சுருதிக்குள்

சுருண்டு கொண்டு விட்டது.

அடிப்படையே அற்ற இந்த‌

அடிப்படைவாதிகளின்

குப்பை இரைச்சல்கள்

மறைந்தொழியட்டும்.

புத்தாண்டின் புன்முறுவல்

மொழிபெயர்த்துச்சொன்னது.

பாவம் அந்த எண்கள் களைத்துப்போயின.

ஏதோ ஒரு எண் இருக்கட்டும்.

குவாண்டம் டெலிபோர்டேஷனில்

அந்த ஸ்டேஷனில் போய்

இறங்கிக்கொள்ளும் வரை

அந்த 

ஏதோ ஒரு எண்ணில்

நாளை விடியட்டும்.

"ஹேப்பி நியூ இயர்"

இதற்கு 

மொழி இல்லை

விழி மட்டுமே உண்டு.

___________________________________________





 


வெள்ளி, 23 டிசம்பர், 2022

அச்சம்

 அச்சம்

_____________________________________

ருத்ரா


இலை உதிர்க் காடுகளில்

துளிர் இலைகள்

சுவடு காட்டிவிடுமா?

நம்பிக்கைப் பொன்கோடுகளின்

கீற்றுகள் தெரிகின்றன.

கொடு மிருகங்களின் சீற்ற மூச்சுகளில்

அந்த சம்மட்டிகள்

திசைமாறி விழுந்து விடுமோ

தெரியவில்லை?

விடியல் கொழுந்துகள்

ஒளி காட்டுமா?

கூழாகுமா?


______________________________________________________


வியாழன், 22 டிசம்பர், 2022

அகழ்நானூறு 4

 அகழ்நானூறு  4

________________________________‍

சொற்கீரன்


வரைமுதற் சிதறிய மண்ணா முத்தம்

ஆலி இழைய  பளிங்கு நீராட்டி

கழை ஆடு அடுக்கத்து மஞ்சுபடு கடாஅம்

வௌவ்வும் கொலைநர் படர் அகல் எஃகம்

குழாஅத்த அடர்சுரம் அளைஇ ஆறு தடவி

அறஞ்செய் பொருளுக்கு ஆவி பொருட்டன்று என‌

ஆன்றவன் துப்பின் துணைசேரச் சென்றான்.

பானாட் கங்குல் ஞெகிழியிற் கொடிவிடு 

மின்னல் போழ்ந்த நெடுவான் பொறாது

பூமயிர் இறைவளை நெகிழ நோன்றாள்.

உளைமா கலித்த பரியொலி கேட்டனள் 

ஊர்ந்து தரை தொடுமுன் அவள் எல்வளை 

ஏறல் உற்றதாய் களியின் வீங்கு 

எறி கடல் ஆர்த்து இன் நகை பூத்தாள்.

--------------------------------------------------------------------------------------


அகம் 108-ல்    தங்கால் பொற்கொல்லனார் எழுதிய பாட்டின் சொற்களில் ஆழ்ந்த போது அதில் அகழ்ந்த சில சொற்களை வைத்து  நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை இது.

----------------------------------------------------------------------------------------------

சொற்கீரன்.



அன்புக்கவிஞர் திரு.அரவிந்தன் R அவர்களுக்கு

 அன்புக்கவிஞர் திரு.அரவிந்தன் R அவர்களுக்கு

_________________________________________________________


உட்கார்ந்திருந்த 

தருணங்களையெல்லாம்

கவிதை ஆக்கினீர்கள்.

படுத்திருக்கும் போதும்

கவிதைக்கு சிம்மாசனம் 

தருகின்றீர்கள்.

உங்களுக்குத்தெரியாமலேயே

உங்கள் மனவலிமை 

உங்களை உயர்த்திப்பிடித்து

சிகரம் ஏற்றி அழகு பார்க்கிறது.

வாழ்த்துக்கள்.

உங்கள் உறுதியே உங்கள் ஆளுமை.

மீண்டும் வாழ்த்துக்கள்.

_____________________________________

ருத்ரா




அகழ்நானூறு 3

 அகழ்நானூறு  3

____________________________________________

சொற்கீரன்






"குடுமி நெற்றி நெடுமரச்சேவல் "

-------------------------------------------------------------------

சொற்கீரன் 



புலால் நாறு கடல்புறத்து மருங்கில்

முரல் பறை நாரை சிறை கவிழ் வானம்

எல்லும் மறைக்கும் ஆங்கே  இருளும் ஒளியும்

மயங்கித்திரியும் எக்கர் ஞாழல‌

கரை சோர்ந்து திரை எதிர் நோக்குவாள்.

பல்கண் கோர்த்த ஒலிமணி வலையில்

மீன்பொதி குவிய திரும்புவான் என‌

அலைபொரு நுரையென கரைவாள் உடைவாள்.

அலவன் உழுத அரிகுரல் வரிய 

மணல் அளைச்  சீறடி எழுதிய யாப்பின் 

கல்லாடம் அவள் கண்ணுழி  ஓச்சும் 

தமிழ் விடிவானப்  பண்ணில் தோய்ந்தான்.

கொல்சுறா கோட்டின் எறியும்  முறித்து 

கடல்விளை இனங்கயல் படகின் நிரப்பி 

பாய்திரைப்  பின்னிட விரைந்தான் அவனும்.

"குடுமி நெற்றி நெடுமரச்சேவல் "

கீறித் தந்த குணவாயில் கோட்டம் 

இன்னகை காட்டி அவள் வாலெயிற்றின் 

வள் ஒளி வழங்கி வழி நீராட்டும்.

அவள் ஏற்றிய வைகுசுடர் உள்ளே 

உரம் தந்து அருஞ்சுரம் அனைத்தும் 

அகலத்தந்து கொல் யாறும் நல் யாறே  என 

நனி ஊறும் களி படர்ந்தற்று 

பசப்புமுன் பணைத் தோள் பற்றி அவள் 

நோதல் தவிர்த்தான் அற்றே அடைந்து.


--------------------------------------------------------------------------------


குறிப்பு உரை 

----------------------------------------------------------------------------சொற்கீரன்.


எனது "அகழ்நானூறு" தொகுப்பில் இது 3 வது செய்யுட்கவிதை.


அகநூனூற்றுப்பாடல் 87 ல் மதுரை பேராலவாயனாரின்  சொல்லாற்றல் பெருமை மிக்கது.

வீட்டு த்தலைவன் பொருள் தேடி ஈட்டிய பின் அருஞ்சுரம் கடந்து வருகையில் நகருக்குள் "தன் உச்சிக்குடுமி குலுங்க குலுங்க கூவும் அந்த நெடு மரத்துசேவல் "பற்றி "குடுமி நெற்றி நெடுமரச்சேவல் " என்று குறிப்பிடுகிறார். எனது மனக்கண்ணில் அந்த சேவலின் தோற்றம் பெரும்  வியப்பையூட்டுகிறது.இந்த வரியைத்தான்  எனது இந்த சங்கநடைச்செய்யுட்கவிதைக்கு தலைப்பாய் சூட்டியிருக்கிறேன். மேலும் "வைகு சுடர்" என்றால் "விடி விளக்கு".அது நகரங்களில் ஏற்றப்பட்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார்.நான் அவனுடைய இல்லத்தலைவி அவன் நெஞ்சில் ஏற்றிய விடி விளக்கு அவன் கடந்து வரும் காட்டு வழியையும் நல்ல வழியாய் ஆக்கி மீட்டு வரும் என்று எழுதியிருக்கிறேன். மேலும் தலைவனான அவன் கடலில் சென்று மீன் பிடித்து திரும்பும் வரை கடற்கரையில் காத்திருந்து அவள் பிரிவுத்துயரம் உற்றதையும் எழுதியிருக்கிறேன்.அப்போது அவள் கால்விரல்கள் மணலில் அளைந்து அளைந்து கிறுக்கிய வரிகள் நண்டுகள்  அந்த மணலில்  உருவாக்கிய வரிகளைப்  போலிருக்கின்றன.ஆனால் அவை தலைவனுக்கு புகழ்பெற்ற அந்த  "கல்லாடன்"எழுதிய வரிகளைப்போன்று இருக்கிறதாம்.

சான்றாக அகநானூறு பாடல் 83 ல் உள்ள கல்லாடன் எழுதிய வரிகளைப்பாருங்கள்:

"வலம் சுரி  மராஅத்துச் சுரம் கமழ்  புதுவீச் 

சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடி "

இந்த வரிகளை படிக்கும் போது கல்லாடனாரின் யாப்புத்திறன் மிகவும் நுணுக்கம் நிறைந்தது என்றும் தமிழின் சொல் இயல் அதன் பொருள் அழகு யாவும் படித்து இன்புறத்தக்கவை  என்றும்  அறிகிறோம்.

வலப்புறமாக சுருளும் இயல்புடைய "மராமரம்" பூத்த சிறு பூக்கள் கொண்ட மாலையை அலை போல ஆடும் அழகிய சுருட்டை முடிகொண்ட மலைஞர்கள் (கல்லர்கள் ) சூடிக்கொள்வது பெரும் அழகு என்கிறார் கல்லாடனார்.

"கல்லாடனாரின்" இந்த சொல் ஆளுமையே என்னை பெரிதும் ஈர்த்து எனது இந்த சங்க நடைசெய்யுட்கவிதையில் "அவர் பெயரை" எழுத வைத்தது.

இந்த கல்லர்களே கல்லாடர்களாக மருவி அதில் சிறந்தவர்கள் "கல்லாடனார்களாக "ஆகியிருக்கலாம்.இந்த மலைவாழ்னர்களில்  "வால்மீகி"கள் இருந்திருக்கலாம்.(வால் மிகி எனும் வேர்ச்சொல்) ஒளி மிகுந்த எறும்புகளை (கரையான்) குறிக்கலாம்.வால் மிகிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் "தமிழின் மரவம் எனும் மரா மரத்தைசுசுட்டிக்காட்டியா நாரதர் "ராமன்" பெயரை ஒலித்துக்காட்டவேண்டும்? ஏதாவது ஒரு எழுதப்படாத  வரலாற்றுக்குறிப்பின் படி  அந்த( தமிழ் )வேடன் வேற்று மொழி பேசுபவனாகவும் அப்புறம் (காளி  தாசன் போல் வடமொழியில் எழுதுபவனாகவும் ஆகியிருக்கலாம்.மரவம்  என்றும் குரவம் என்று காட்டின் மரங்களை சங்கத்தமிழ் குறிக்கிறது.இன்னும் மேலே காட்டியது போல்  "மராஅத்து "என்ற சொல் வழக்கமே "மரா"மரம் ஆகியிருக்கலாம்.

(ஆராய்சசியாளர்களே !கவனிக்க!)


--------------------------------------------------------------------------சொற்கீரன்.





செவ்வாய், 20 டிசம்பர், 2022

நம்மோடு ஒரு நமைச்சல்...

 நம்மோடு ஒரு நமைச்சல்...

________________________________

ருத்ரா



நாம் பதிவிடும் எழுத்துக்களோடு

கட்டப்பட்டு அது வருகிறது.

நம் பாட்டும் நடனமும் கூட‌

அதில் தோய்த்துக்கொண்டு தான்

வருகின்றன.

சூடான அரசியல் பேச்சுகளினூடே

அதுவும்

சூடான பக்கோடாக்களாய்

பார்சல் செய்யப்பட்டிருக்கின்றன.

சினிமா நடிகர்கள் பற்றிய‌

துணுக்குகள் கிசு கிசுக்கள் 

அவர்கள் படங்களின் டீசர்கள்

ஆகியவற்றின் இடைவெளிகளில்

அதுவும் படுத்துக்கிடக்கிறது.

என்னவோ சங்கரரின் தத்துவங்கள்

ஐன்ஸ்டீனின் கோட்பாடுகள்

தொலைக்காட்சி விவாதங்கள்

என்று

யூ டியூப்களின்

எல்லா நமைச்சல்களிலும் அல்லது

எல்லா சுவாரஸ்யங்களிலும்

அது "படுதா"கட்டிக்கொண்டு

பொம்மலாட்டங்கள் காட்டுகிறது.

நம் மூளைக்கும் அறிவுக்கும் 

நல்ல பயிற்சி என்ற பெயரில்

சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை

விதம் விதமாய் களிக்கும்

கேம்களின் வி ஆர் காட்சிகளையும் 

பிளந்து கொண்டு

நரசிம்ம அவதாரம் காட்டுகிறது அது.

நம் கணினி அறிவு

ஒவ்வொரு நேனோ செகண்டிலும்

புதுப்பிக்கப்படுகிறது என்று

நமக்கெல்லாம் மிக மிக பெருமிதம்.

ஆனால் 

அவையாவும்

இதற்குத்தான் படைக்கப்படுகிறது.

ஆம்

விளம்பரங்களுக்கும் மற்றும்

கசா முசா துக்கடாக்களுக்கும் தான்.

நம்மோடு ஒரு நமைச்சலாய்...இது

சொரிய வைத்துக்கொண்டிருக்கிறது.

டாலர்களின் ஒவ்வொரு சென்டும்

ராட்சசத்தனமாய் குட்டி போட்டு பெருகி

பங்குமூலதனத்து பெரும் பலூன்களாய்

தாராளமய வெளியில் 

மிதக்கின்ற‌ன.

ஆனால் பசியும் பட்டினியும்

நோயும் நொம்பலமும்

உலகத்தின் எல்லா

அட்சய ரேகை தீர்க்க ரேகைகளின்

கட்டங்களில் இன்னும்

கோரைப்பல் 

காட்டிக்கொண்டு தான் இருக்கின்றன.


__________________________________________________________















திங்கள், 19 டிசம்பர், 2022

இளையராஜா

 இளையராஜா 

__________________________

ருத்ரா




ஒரு இன்னிசைத் தீவு இவர்.

அலைகள் வந்து 

சும்மா குசலம் விசாரித்து விட்டுப்போகும்

இவர் வீசிய ஒலிப்பூஞ்செண்டுகளிடம்.

உளைச்சலுறும் மனங்களின்

தொட்டில் கூடு

இவர் கொடுத்த பண்கள் அமைத்த‌

தூண்களில் தான்.

இந்த அமைதிப்பூங்கா

ஏன் இன்று கொதிக்கிறது?

குதிக்கிறது?

மனிதர்கள் அடிமைச்சங்கிலிகளில்

இருந்து கொண்டு தான்

தேவாரம் என்றார்கள்.

திருவாசகம் என்றார்கள்.

ஜனனி என்றார்கள்.

சிவ ஓம் என்றார்கள்.

சங்கீத வர்ணத்துள்

சங்கிலி மாட்டிக்கொண்டு வந்தது

சனாதன வர்ணங்கள்.

ஆனால்

அறிவின் சிற்றுளி பட்டு

தெறித்த வைரத்திவலைகளில்

கோடி சூரியன்கள்

கொப்பளித்தார்கள் 

விடுதலை என்று.

தமிழ் என்று.

தன்மானம் என்று.

மனிதம் என்று.

இளையராஜா அவர்களே.

எங்கள் காதுகளில்

இனிய வண்டுகளாய் சிறகசைத்தீர்கள்.

எங்கள் இதயங்களைத் தொட‌

ஏன் மறுக்கிறீர்கள்?

மனிதம் மகத்தானது.

இறைவம் அதில் தான்

நிழல் காட்டுகிறது.

சாதி மத வன்மங்களுக்கு

மெட்டு அமைக்கவா

இந்த ஆர்மோனியப்பெட்டிக்குள்

அடைக்காத்துக்கொண்டிருந்தீர்கள்?

இசை 

மனித சமுதாயத்தின்

அபஸ்வரங்களை

சம கீத இனிமைக்குள்

ஸ்வரப்படுத்த தவறிவிட்டால்

அந்த இசைக்கு ஞானம் ஏது?

அந்த இசைக்கு ஞானி ஏது?

இந்த கேள்விக்குள் ஒளிந்திருக்கும்

அந்த அக்கினி ராகத்துக்கும் கூட‌

நோட்ஸ் எழுத 

உங்களால் முடியும்.

அதற்குள் உங்கள் கைககளுக்கு

ஒரு அரசியல் சங்கிலி வந்து

பூட்டு போட்டு விட்டதே.

இளையராஜா அவர்களே

கதவுகளை திறந்து கொண்டு

எப்போது அந்த‌

இனிய சுவாசத்தின் விடுதலை ராகத்தை

இசைக்கப்போகிறீர்கள்?


__________________________________________________________











அகழ்நானூறு 2

 அகழ்நானூறு 2

___________________________________

சொற்கீரன்




ஆழல் வாழி அம்புவிழி அணங்கே.

_________________________________________

சொற்கீரன்.



ஆழல் வாழி! அம்புவிழி அணங்கே!

பொறிகொள் சிறுகண் கூர் எயிற்ற‌ரவு

ஆறுபடு அத்தம் நிரம்பா நீளிடை

முள்ளிய இலவம் முளியிலை போர்த்த‌

கொடுங்கவலைய பேழ்விரி விழித்தீ

வானும் நீந்தி வரூஉம் அவன் அஞ்சல்.

புத்தகன் மண்டையர் புளித்தநுரை ஏற்றிய‌

நறவின் களிகூர் இரும்பேர் ஒக்கல்

நசைஇய குழாஅம் தீர் இருள் இடையின்

தமியச் சென்றான் அரும்பொருள் தேடி.

அறல்மணல் அமர்த்தி பூவொடு நெல் தூஉய்

கல்லென் சும்மையர் வதுவைகொள் என‌

தமர்தர இற்கிழத்தி ஆதலென்ன செம்பூ பூத்தது.

ஆகுந ஆகுக அவிர்தீ இமைக்கண்  திறந்தனம்

கடைக்கோல் காட்டிய நூல்கள் அன்றி

புரியும் திரியும் மெய் மறைத்து புகலும்

முப்புரி நூல்கள் நுவலும் ஓதம்

எற்றுக்கு இவண் என நுண்மாண் அறிவு

நுழை படுத்தாங்கு அன்பின் ஓர்மை

ஒன்றே மக்களின் நெறிகோள் மன்னே.

"மாமுது பார்ப்பான் மறைவழி காட்டும்"

மந்திரம் இன்றி மணங்கொள் விழவை

ஏத்திய நெஞ்சில் களியின் மிதவை

கால்வழிப் படூஉம். தீர்க நின் படரே.

கொடுவெண் திங்கள் கொடும்பிறை காட்ட 

செறிசுரம் கடந்தான் நின் இறைவளைப் பற்ற.


_____________________________________________________

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

"ஸ்தல புராணம்"

 

"ஸ்தல புராணம்"

__________________________________________

ருத்ரா


"இஸ்ரோ"வின்

அந்த விஞ்ஞானிகளையெல்லாம் 

காக்கா விரட்டுவது போல் 

விரட்டி விட்டு

சலவைக்கல்லில் இந்தியில்

இப்படி எழுதுவார்கள்.

நம் ராமபக்த ஹனுமான்

வெற்றி பெற்ற‌

ராமலட்சுமணர்களை

ஏந்திக்கொண்டு

அயோத்தியாபுரிக்கு

வருகிற வழியில் 

வானத்தில் சூரியன் இருக்குமிடத்தை

ஓட்டை போட்டு

ராமச்சந்திர மூர்த்தியின் மேல் மட்டும்

சூரியன் ஒளி பெய்து நீராட்டி

பட்டாபிஷேகம் செய்ய‌

ஏற்பாடு செய்தான்

என்று "ஸ்தல புராணம்"

எழுதி வைப்பார்கள்.


_____________________________________________________________







கடைசி "ஈடன்"

  


பூமியைத்தின்ற கைபேசியில்

மிச்சம் இருந்த

துடிப்புகளில் நம் இதயம்.


கடைசி "ஈடன்"

__________________________________

ருத்ரா




செவ்வாய், 13 டிசம்பர், 2022

கூட்டிக்கழித்துப்பார் உன்னை.

 கூட்டிக்கழித்துப்பார் உன்னை.

___________________________________


நான் ஒன்றுமே இல்லை 

என்ற கண்டுப்பிடிப்புக்கு

"கூட்டிக்கழித்துப்பார் உன்னை"

என்ற விஞ்ஞானமே 

ஒரு கருவி.

படிக்கின்றவை எல்லாம்

ஆவியான பிறகு

என்ன மிச்சம் என்று

மூளைப்பாத்திரங்களை

கடா முடா என்று

உருட்டிப்பார்த்ததில்

ஏதோ கனவு அல்லது

ஒரு கெட்டி தட்டிப்போன 

ஆசையே மிச்சம்.

உன்னை வகுத்து மிச்சமே விழாத‌

ஒரு எண்ணாக நீ இருப்பாயானால்

நீ தான் "ப்ரைம் நம்பர்".

நீ வைத்திருக்கும் செல்வங்கள்

இந்த சமுதாயத்துக்கு

முழுதுமாய் பயன் பட்டு விடவெண்டும்.

"பயன் மரம் உள்ளூர் பழுத்தற்றால்"

என்று ஒரு சமுதாய மனிதன்

"அச்சாணி"யாகி

இருப்பதே அந்த "முதன்மை எண்"

பெற்றவன் என்று

வள்ளுவரின் ஃபெர்மேட் தியரம் 

சொல்கிறது.

சமுதாயத்தை மிச்சமே வைக்காமல்

சுரண்டி வைத்துக்கொள்ளுபவர்கள் 

இடையே

அந்த மனித குல மாணிக்கங்களை

எங்கே என்று தேடுவது?

வள்ளுவனின் நுண்ணோக்கியில்

இந்த வைரஸ்களை தனிப்படுத்தி

நாம் சமுதாய மருத்துவம் செய்யத்தான்

வேன்டும்.

நோய் நாடி நோய் முதல் நாடி...

அன்றாடம் தெரியும் இந்த‌

குறள் வெளிச்சமே நம்

நம் தமிழ் வெளிச்சம்.


___________________________________________________________

ருத்ரா





dawn

 


even billions of light years

away

it spells my dawn

a bat-like Nebula.

that rodent bleeds with light

with a fractal geometry of

Qubits

Studded in poetic convulsions of

"sick- fatigue and

languid doubts"

-----‐--------------------------------------------

ruthraa. 


திங்கள், 12 டிசம்பர், 2022

அந்த ஈக்கள் மட்டுமே.

 "விட்னெஸ்"

______________________________________

ருத்ரா



ரத்தம் சொட்ட சொட்ட 

ஒரு இருதயத்தை அறுத்து

அந்த "வெள்ளிதிரை"யில்

வைத்திருக்கிறது.

அரசியல் சட்டங்கள் 

துடி துடிக்க வேண்டும்.

மக்கள் மன்றங்கள்

மண்டியிட்டுக் கதற வேண்டும்.

பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்களின்

புள்ளி விவரங்களில்

புளகாங்கிதம் 

அடைந்துகொண்ண்டிருக்கும்

சூப்பர்ஸ்டார்களின் மனசாட்சி

கொஞ்சமாவது சூடேறவேண்டும்.

மக்கள்?

மக்களா?

அவர்கள் ம‌ரத்துப்போய்

கோவில்களில் அர்ச்சனை சீட்டுகளுக்கும்

கும்பாபிஷேகக்கூட்டங்களுக்கு

முண்டியடித்துக்கொள்ளும்

கியூ வரிசைகளுக்கும்

தவம் இருந்து

"சவ"யோகம் இருப்பதற்குமே

பொழுதுகள் போதவில்லை.

இளைய தலைமுறையோ

சினிமா எனும் கச்சாஃபிலின்

டாஸ்மாக்கில் உழன்று கொண்டிருக்கின்றது.

இல்லாவிட்டால்

செல்ஃபோனின் பொந்துகளுக்குள்

அடைந்து கிடக்கும் ஈசல்களாக‌

மொய்த்துக்கிடக்கின்றது.

சமூக நீதியின் சமத்துவம்

அழிந்து போய் 

ஒரு சாக்கடையின் சங்கமத்தில்

மனித தத்துவம் 

பிணங்களாகி

ஈ மொய்த்துக்கிடக்கும்

காட்சிகள் பற்றி

கவலைப்படுவது

அந்த ஈக்கள் மட்டுமே.


______________________________________________




சனி, 10 டிசம்பர், 2022

பளிங்குத்தூண்கள்

 பளிங்குத்தூண்கள்

_________________________________________

ருத்ரா



இந்த நாட்டை இனி

கடவுளாலும் காப்பாற்றமுடியாது.

ஏனென்றால்

கடவுள் இல்லாத‌

கோவில்களும் 

பளிங்குத்தூண்களும் மட்டுமே 

இங்கு பளபளப்பு 

ஏற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.


_________________________________________


வியாழன், 8 டிசம்பர், 2022

நிரைவளை ஊருந்தோள்

 நிரைவளை ஊருந்தோள்

_________________________________________________

சொற்கீரன்



வங்கம் வரி உழுத வங்கூழ் திரங்கும்

பாம்புரியன்ன வங்கு வற்று பௌவத்துக்

கிழிந்த கலிங்கம் இடைநெகிழ உடுத்தாங்கு

கடல் பாவு செலவின் கடம்படுத்தான் கண்ணழி

துயில் இன்றி வெண்குருகின் சிறைக்குழீஇ

கரையடுத்து ஊர்ந்தான் மன் சங்குவளை 

ஒலித்தாள் உய்த்து உய்த்து அழிந்தான் கொல்.

முன்னீர்ப்பறந்தலை மூள் வெய்யப்பாலையென‌

முளிதரு நீடுவெள் அலையெறிய எதிர்தந்தான்.

அவள் நிரைவளை ஊருந்தோள் துயர்மலி 

நகையொடு கலித்தாள் முள்ளின் முறுவல் வாங்கி.

கண்ணில் கனல்படர் கங்குகள் தெறிப்பக் கலாஅய்

மாட ஒள் எரி ஒளித்து ஒளித்து விழிக்கும் ஆறு

கடல்கண்டன்ன வதை தரு மதியம் ஆங்கு

எழுதரூஉம் கோலம் தரு கொடுந்தொழில் 

கொலையின் அஞ்சி பேழ்வாய்ப் பெருந்திரைச்

செருவின் வென்றி முனைந்தான் முனை முறியா

திறத்தோடு நின்றான் நிமிர்ந்தான் கறங்கு வெள்

கடலொடு மள்ளல் முன்னியவன்.


___________________________________________________________


அகநானூறு பாடல் 255 ல் மருதன் இளநாகனார் "நிரைவளை ஊருந்தோள்" என்று தலைவி வரிசையாய் அடுக்கி அணிந்திருந்த வளையல்கள் எல்லாம் அவள் தோள் நெகிழ மெலிந்ததால் அவை ஊர்ந்து வந்து இறங்கின"என்ற பொருள் பட எழுதியிருக்கிறார்.காதலியின் பிரிவுத்துயரத்தை "ஊர்ந்து இறங்கி நெகிழும்"அந்த வளைகளில் படம்பிடித்துக்காட்டும் அந்த வரிகள் எண்ணி எண்ணி வியக்கும் வண்ணம் இருந்ததால்

அதையே தலைப்பாக்கி என் சங்கநடைச்செய்யுட்கவிதையை இங்கு எழுதியிருக்கிறேன்.


சொற்கீரன்


_____________________________________________________________________________





அன்பின் ஒளிர்வு

 அன்பின் ஒளிர்வு

____________________________________________________

ருத்ரா




பனி விழுதுகள்

மண்ணைப்போர்த்துகின்றன.

அடிவயிறு 

எரிமலைக்குழம்பில்

எதைக் கர்ப்பம் தரிக்க‌

காத்திருக்கிறது?

பரிணாமக்கனவுப்படலங்கள்

தோலுரிந்து தோலுரிந்து

வெளிக்காட்டுகிறது.

பிரம்மாண்ட மிருகங்களின்

எலும்புக்கூடுகளும்

கண்ணுக்குத்தெரியாத‌

நுண்ணுயிரிகளும்

பனிப்பாளங்களில்

இப்படிப்பதிவிட‌

இந்த கணினிகளுக்கும் 

முன்பாக வந்த‌

கணினிகள் ஏதேனும் வந்து

எலும்புக்கூடுகளின் 

எலும்புக்கூடுகளாக அங்கு

மிஞ்சிக்கிடக்குமா?

அடிமுடியே தெரியாத ஒரு கணிதம்

ஞானப்பிழம்பாய்

மனிதனின் கருவுக்கு முந்தியே

ஒரு கருவின் நிழலாய்

இங்கே எங்கேயோ

இழைந்து கிடக்கிறதோ?

இன்வெர்ஸ் ஆஃப் இன்ஃபினிடி இஸ் சீரோ.

இன்வெர்ஸ் ஆஃப் சீரோ இஸ் இன்ஃபினிடி.

கடவுளுக்கு அடியில் சைத்தான்.

சைத்தானுக்கு அடியில் கடவுள்.

அதற்கு அடியில் இது.

இதற்கு அடியில் அது.

பொய்யும் மெய்யும்

கலந்து செய்த இந்த‌

பொரு(ள்) விளங்கா உருண்டை

இனிக்கிறது 

அல்லது 

கசக்கிறது.

புத்தாண்டு தோறும் வருகிற‌

பிரசவ வலி இது.

வலியே இங்கு உயிர்ப்பு.

மனிதனின் காக்காய் வலிப்புச்சித்திரங்களில்

மத நொதிப்புகளே

இங்கு 

சிலுவைமரங்களாய் 

முண்டு தட்டிக்கொண்டு நிற்கின்றன.

ஓ!

மனிதா!

உன் வானம் உன் வெளிச்சம் எல்லாம்

இனி

உன் அறிவின் துளிர்ப்பு தான்.

அன்பின் ஒளிர்வு தான்.

இருட்டுக்கந்தல்கள் அழிந்தொழியட்டும்.

இன்னிசைப்பண்கள் முழங்கட்டும்.


________________________________________________________





செவ்வாய், 6 டிசம்பர், 2022

உங்கள் முன் ஒரு காமிரா

 புற்று நோய் 

மனிதனின் முற்றுப்புள்ளியை

நீட்டித்தரும் வலிக்கொடுமையின் 

நாவலாக இருக்கலாம்.

இல்லை

எழுத என்ன இருக்கிறது என்று

அந்த எழுத்துப்பறவை 

சடக்கென்று எச்சமிட்டு விடலாம்.

சூரியனின் அந்தியும் உதயமும்

முகமூடிகளை மாற்றி மாற்றிக்

காட்டிக்கொண்டிருக்கலாம்.

மனிதன் நோயாளியாக இருக்கும்போது

மட்டுமே 

இலேசான மனத்திற்கும்

இத்தனை  கனமா

என்று எடைபோடுகிறான்.

எப்படியும் சக மனிதர்களின்

நேயமான சொற்பூங்காக்களில்

நயமான நிழற்கவரிகளால் அவன்

வெம்மையை ஒதுக்கி

புன்முறுவல்கள் பூக்கட்டும்.

காலத்தின் நேனோ இடுக்குகளிலும்

மகிழ்ச்சி பிரளயங்களின்

ஆரஞ்சுப்பழத்து தோல் உரித்து

சுவைத்து ரசிக்கட்டும்.

வாழ்ந்து முடிக்கும் விளிம்புகள்

எங்கேயோ இருந்து விட்டுப்போகட்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே தான்.

உங்கள் முன் ஒரு காமிரா 

கேட்கும் மென்குரல் ஒலிக்கிறதா?

"சீஸ்" சொல்லுங்கள்.


______________________________________________

ருத்ரா



(திரு வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்களன் உருக்கமான ஒரு பதிவுக்கு "கருத்து தெரிவி"என்ற வறட்டுக்கட்டத்தில்

என் நெஞ்சத்தைக் கிள்ளிய அந்த வரிகளுக்கு இழைய முடியாமல் இழைந்த வரிகள் இவை)

07.12.2022/ 00_12.அதி காலை.

_____________________________________________







charm

 charm

__________________________________


the word WORSHIP was

wrongly spelt as WOSHIP

in my poem "IDOL WORSHIP"

Both the Words are meaningless

and the spellings do not matter

that matter nothing but sounds.

Sonic boom pregnant with 

a luminous bob is mural charm

at epistemological flavour.

our beloved GOD doesn't care this.

"God" is a throw away word

and spelt in haste of the word "Good"


______________________________________

ruthraa


idol worship

 idol worship

___________________________
a boom of void
with a fantasy of gloom.
a subjective glow
whose subject is not at all
a subject matter of anything.
a shroud of rosy vapor
sublimating all the traces of god
into a vanity of pain and pleasure.
pouring tons of hymns
as a sound of music
but alas
is a hound of sick and
languid doubts!
______________________________________________
ruthraa

திங்கள், 5 டிசம்பர், 2022

"அயலாள்"

 "அயலாள்"

_________________________________________

சொற்கீரன்



ஏலியன் என்ற சொல் 

ஹாலிவுட் துணிவிரிப்பில் வந்து

விழுந்த 

விண்வெளி ஆளின் குழுந்தை.

பூமிக்கற்பனையில்

வடித்த புதிய சாராய நொதிப்பு.

வேர் ஓடி விட்டது.

கிளை பிரித்து பூ விரித்து

எலான் மஸ்கிய கார்பொரேட்

விஞ்ஞானத்திலும்

இன்னும் தொப்புள்கொடி அறுக்கப்படாமல்

பச்சையும் நீலமும் கலந்த‌

ஒரு பச்சை வாடைப் பிசினில் 

எழுதிய பூலியன் கணிதப் "பூரான்" பூச்சி.

மனிதனுக்கு

தன்னைச்சுற்றிய புசு புசு வென்ற‌

அந்த பூ மயிர்க்கண்களில்

பில்லியன் ஒளியாண்டுகள் தாண்டிய‌

ஹார்மோன் காய்ச்சலை 

பதியமிட்டுக்கொண்டே இருக்க ஆசை.

ஆனால் 

இது சின்ன சின்ன ஆசை இல்லை.

ஆசைப்பிரளயங்களின் 

பிரம்மாண்ட சுநாமி.

அறிவின் வீக்கமே இங்கு இந்த‌

பிரபஞ்ச வீக்கம்.


_______________________________________________________






மரம்



தினம் தினம் 

அந்த ஈடன் தோட்டத்து மரம்

கிளையை அசைக்கிறது.

இலைகளுக்குள்

செங்கனி சூரியனைக்காட்டுகிறது.

கற்பனையாய்

கூடவே பாம்பும் நெளிகிறது.

வெட்ட வெளியாய் தெரிந்த வானம்

முதன் முதலாய்

மேகங்களை உடுத்திக்கொள்கிறது.

ஏதோ ஒரு ஈர்ப்பு 

அன்றே

நியூட்டனையும் ஐன்ஸ்டீனையும்

தூவியது.

ஜேம்ஸ்வெப் எனும்

பிரபஞ்சத்தின்

முண்டைக்கண் விடாது துரத்தியது.

கர்த்தரின் கர்த்தர்கள்

குமாரர்களின் குமாரர்கள்

வசனங்க‌ளை 

மழை பொழிந்தார்கள்.

வசனங்கள் புத்தகங்கள் ஆயின.

ஈடன் பூங்கொத்துக்களைக்காட்டுகிறது.

அதனூடு ஏன் 

இந்த ஓலங்கள்?

மரண அவலங்கள்.

புகை மூட்டம்.

தீ மழை.

சூன்யத்தை பிளந்து பார்த்து

சூட்சுமத்தைத் 

தொட்ட மனிதன்

ஏன் இப்படி

கல்லறைகள் கட்டுகின்றான்.

அது

வீடா?

கோவிலா?

இன்னும் காடு தானா?

மரக்கிளைகள் அசைந்து கொண்டிருக்கின்றன.

செங்கனி நிழல் காட்டியதில்

வெளிச்சத்தின் பழத்திலிருந்து

இருட்டின் விதைகள் 

தெறித்துச்சிதறுகின்றன.


_____________________________________________________

ருத்ரா


சனி, 3 டிசம்பர், 2022

தமிழ்ப்பூவே.

 கவனம் கொள்

_____________________________________

ருத்ரா



தமிழ்ப்பூவே.

உனக்குள் புயல் உண்டு.

தழல் உண்டு.

தாகமும் உண்டு

வேகமும் உண்டு

எப்படி இந்த‌

பிணத்தூக்கம் வந்தது?

உன் மண்ணும் மொழியும்

நீ மறந்து விட்டால்

உன் கால் படும் 

புழுதி கூட‌

ஹை ஹை என்று

உனை குதிரை ஓட்டும்

கவனம் கொள்.

இந்தி மொழியும் உன்

சிந்துவின் மொழிதான்.

ஆனால்

அது தேவபாடையாய் அல்லவா

உனக்கு ஒரு

பாடை கட்ட வருகிறது.

கவனம் கொள் தமிழா!

கவனம் கொள்!


_________________________________________







ஒளிப்புலம்

 

ஒளிப்புலம்

__________________________________________________

ருத்ரா



கண்டவர் விண்டதில்லை.

விண்டவர் கண்டதில்லை.

கடவுள் என்கின்ற ஒரு

மனப்பொருள் இங்கு கண்டார்.

மற்றவர்க்கு சொல்லிவிட‌

மடை திறந்தார் வெள்ளமென‌

தொண்டை எல்லாம் இங்கு

வற்றியது வார்த்தை இல்லை.

மொழிகளோ போதவில்லை

விழிகளோ இருளாகின.

யார் அவர் சொல்லு

அடையாளம் என்ன என்ன?

எது தான் என்று சொல்லு.

இது என காட்டு போதும்.

மக்களோ மொய்த்துவிட்டார்

எங்கணும் மக்கள் கூட்டம்

அலையென கடலென‌

ஆர்ப்பரித்திட்டார்.


பொறுங்கள் பொறுங்கள்.

கடவுளுக்கு அருகில் சென்று

பார்த்ததை பிம்பம் காட்டி

சொல்கிறேன் இங்கே

காண்மின் காண்மின்.

ஜேமஸ்வெப் என்றொரு

தொலைநோக்கி சொன்னது.


மனம் எனும் பலூன்கள் 

வேண்டாம்.

கற்பனை எனும்

கலக்கலும் வேண்டாம்.

விரிவாய் நன்கு இங்கே

உற்று நோக்கிடும் ஒரு

கருவி உண்டு.

கருவிலும் துருவிப்பார்க்கும்

கணிதங்கள் இங்கு உண்டு.

அகம் புறக்கண்கள் உண்டு

அலசலாம் அறிவால் நன்கு

அறியலாம் தெளிமின் தெளிமின்.


விடைத்த‌தோர் ஆற்றல் இங்கு

வெடித்ததன் பெருவெடிப்பே

விரிந்து மேல் விரிந்து வீங்கி

விண்வெளிக்கடலாய் ஆச்சு.

கடலென்றால் கரைகள் இல்லை.

சொல்லவோ உரைகள் இல்லை.

இருப்பினும் பெரிய உண்மை

கண்டதைச் சொல்லுகின்றேன்.

துடிப்பும் வெடிப்பும் எல்லாம்

ஒன்று தான் உணர்ந்து கொள்வீர்.

துடிப்பதற்கும் முன்னே இருந்த‌

தடம் ஒன்று கண்டுகொண்டேன்.

காலமும் வெளியும் இங்கு

உருண்டு திரண்டு ஒரு

உருவம் பிடிக்கும் முன்

எல்லாம் ஒரு கூழ் தான்.

அந்தக்கூழியம் எனும் 

ஃப்ளூடிடி தான்

பல் உருவம் காட்டும்

பூதங்களாச்சு.

வண்ணத்துப்பூச்சி 

வடிவமும் உண்டு

வவ்வால் என்றொரு 

வடிவமும் உண்டு.

சிறகு முளைத்த‌

தேவதை உண்டு

இன்னும் இன்னும்

உருவங்கள் உண்டு.

அந்த "ஒளிப்புலமே"

நெபுலம் என்று உண்டு.

அதனுள் ஒரு கணம்

ஆற்றலும் நிறையும்

அடர்வு கொண்டதில்

பெருவெடிப்பே ஒளியின்

பெருந்துடிப்பே ஆனது.

அந்த கன்னிக்குடம்

உடைந்து போனதில்

வெளியும் வழியும்

விரிவு கொண்டது.

சிலம்பு உடைத்த‌

அந்த கண்ணகி யார்

என உருவகமாய்

உற்றுப்பார்த்தேன்.

ஹைட்ரஜன் பரல்களும்

ஹிக்ஸின் துகள்களும்

தெறித்த கணமே

பிரபஞ்ச‌த்தின் ஒரு

குவா குவா 

கேட்ட கணமாம்.

அந்த சீற்றம் எதுவென‌

கணிதம் கண்டேன்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்

சொன்னது அதுவே!

ஒற்றையாய் வந்த‌

கற்றையின் கனப்புள்ளி

சிங்குலாடியாய் ஒரு

சித்திரம் விரித்தது.

என்ட்ரோபி எனும்

கணித சமன்பாடு

எல்லாம் சொன்னது.

எல்லாம் புரிந்தது.

புரியும் வரை

கேட்டோம் கேட்டோம்

அம்புலிமாமாக்கதைகள்

ஆயிரம் ஆயிரம்.

அறிவெனும் பேழை

திறந்தது கண்டோம்.

மற்றவை யாவும் 

பிழை எனக்கண்டோம்.

ஜேம்ஸ்வெப் இனி

காட்டும் தரிசனம்

அறிவின் ஆலயம்

காட்டும் தரிசனம்.


___________________________________

கல்


கல்

____________________________________

ருத்ரா




ஓடிப்பிடிச்சு விளையாடலாம்

வாருங்கள்.

கடவுள் போய் ஒளிந்து கொள்ளட்டும்

அல்லது 

அப்படி ஒருவர் இல்லாமலேயே

நாம்

அப்படி ஒருவர் இருப்பதாகவும்

அவர் ஒளிந்து கொண்டிருப்பதாகவும்

நாம் அவரை

தேடிக்கண்டு

பிடித்துக்கொள்வதாகவும்

விளையாடலாம்.

இந்த விளையாட்டு தான் இங்கு

விறு விறுப்பாக இருக்கிறது.

சுறு சுறுப்பாகவும் இருக்கிறது.

இதில் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.

"கடவுள்"என்றால் என்ன‌

என்று

கண்ணை மூடி 

சிந்தனையை கூர் தீட்டி

புலித்தோலோ மான்தோலோ

எதன் மீதாவது 

அமர்ந்து தேடுவோம்

அதாவது ஆழ்நிலையில் ஆழ்ந்து

தேடுவோம்.

இதிலும் தொய்வு அடைகின்றோம்.

இருட்டே திரையாகி

இருட்டே படமாகி

ஒரு திரைப்படம் காட்டுகிறது.

நனவும் கனவும் கலந்த‌

படலம் விரிகிறது.

அப்புறம் 

விலுக்கென்று விழித்துக்கொள்கிறோம்.

என்ன கடவுளை பார்த்துவிட்டீர்களா?

அருகில் அமர்ந்தவர் கேட்கிறார்.

என்னது?

கடவுளா?

யார் அது?

கேள்வி பிறக்கிறது விடையாக.

கண்டுவிட்டேன்.

கண்டுவிட்டேன்.

விடை பிறக்கிறது கேள்விக்கு.

இந்த விளையாட்டு எப்படி?

விளையாட்டு போல் இப்படி

விளையாடுவதே வாழ்க்கை.

விளையாட்டை 

துவக்கவும் முடிக்கவும்

அதோ விசில் ஊதுகிறாரே

அவர் யார்?

அவரும் நம்மோடு 

விளையாட வந்தவரே.

அது அவர் விளையாட்டு.

அவர் ஒன்றும் எனக்கு

ஒரு கோவில் கட்டு என்று 

சொல்லவில்லை.

நாம் தான் அந்த‌

விளையாட்டுக்கூட்டாளிக்கு

கோவில் கட்டிக்கொள்கிறோம்

அதுவுமே ஒரு விளையாட்டு.

அவர் என்றில்லை

கூடவே ஒரு

பன்றிக்குட்டியோ நாய்க்குட்டியோ

வந்து விளையாடினால்

அதற்கும் உண்டு ஒரு கோவில்.

ஆகா..இது என்ன சித்தாந்தம்!

புல்லரிக்கிறது!

புல்லா?

புல் புழு எதுவாயினும்

டி என் ஏ...ஆர் என் ஏ

என்று உயிருக்குள்

பிளந்து பார்ப்பதே இங்கு

விஞ்ஞானம் எனும் மெய்ஞானம்.

ஞானம் எனும் அறிவும்

முதலில் கல் தான்.

அதைப்பிளந்து அல்லது உரசி

உற்றுப்பார்ப்பதே இங்கு "கல்"வி.

கல்வி இருக்குமிடமே கோவில்.

மற்ற இரைச்சல் கூடங்கள் பற்றி

யாருக்கு இங்கு கவலை இல்லை.


____________________________________________

வெள்ளி, 2 டிசம்பர், 2022

ஓடி விளையாடு

 ஓடி விளையாடு

_____________________________________

ருத்ரா




ஓடிப்பிடிச்சு விளையாடலாம்

வாருங்கள்.

கடவுள் போய் ஒளிந்து கொள்ளட்டும்

அல்லது 

அப்படி ஒருவர் இல்லாமலேயே

நாம்

அப்படி ஒருவர் இருப்பதாகவும்

அவர் ஒளிந்து கொண்டிருப்பதாகவும்

நாம் அவரை

தேடிக்கண்டு

பிடித்துக்கொள்வதாகவும்

விளையாடலாம்.

இந்த விளையாட்டு தான் இங்கு

விறு விறுப்பாக இருக்கிறது.

சுறு சுறுப்பாகவும் இருக்கிறது.

இதில் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.

"கடவுள்"என்றால் என்ன‌

என்று

கண்ணை மூடி 

சிந்தனையை கூர் தீட்டி

புலித்தோலோ மான்தோலோ

எதன் மீதாவது 

அமர்ந்து தேடுவோம்

அதாவது ஆழ்நிலையில் ஆழ்ந்து

தேடுவோம்.

இதிலும் தொய்வு அடைகின்றோம்.

இருட்டே திரையாகி

இருட்டே படமாகி

ஒரு திரைப்படம் காட்டுகிறது.

நனவும் கனவும் கலந்த‌

படலம் விரிகிறது.

அப்புறம் 

விலுக்கென்று விழித்துக்கொள்கிறோம்.

என்ன கடவுளை பார்த்துவிட்டீர்களா?

அருகில் அமர்ந்தவர் கேட்கிறார்.

என்னது?

கடவுளா?

யார் அது?

கேள்வி பிறக்கிறது விடையாக.

கண்டுவிட்டேன்.

கண்டுவிட்டேன்.

விடை பிறக்கிறது கேள்விக்கு.

இந்த விளையாட்டு எப்படி?

விளையாட்டு போல் இப்படி

விளையாடுவதே வாழ்க்கை.

விளையாட்டை 

துவக்கவும் முடிக்கவும்

அதோ விசில் ஊதுகிறாரே

அவர் யார்?

அவரும் நம்மோடு 

விளையாட வந்தவரே.

அது அவர் விளையாட்டு.


______________________________________________________





புதன், 30 நவம்பர், 2022

நுனி

 நுனி

________________________________________

ருத்ரா



ஆகா..குரல்

வெண்கலக்குரல்.

பேசும்பொருள் 

கேட்பதற்கு முன்னரே

ஆவியாகப்போய் 

காணாமல் போய்விடும்

கவர்ச்சி நிறைந்தது.

கேட்டாலே போதும்.

கையில் கம்பு கட்டையை 

தூக்கிக்கொண்டு

அவர் குறித்த நபரை

தாக்கி கந்தலாக்கி விட்டுத்தான்

மறுவேலை

என்று மயிர்க்கால் எல்லாம்

மஞ்சள் குங்கும

மதநீர் ஒழுக வைத்துவிடும்.

சோமபானம் காய்ச்சி

வடித்துத்தந்த‌

சொற்கள் எல்லாம்

வானத்திலிருந்து வரும் 

சொற்கள் என்று

பொய்க்குமிழிகள் 

பூதாகரமாய்

இந்த மண்ணை 

கரையான் அரித்தது போல்

அழித்துவிட்டதில்

மிஞ்சி இருப்பதெல்லாம்

வெறித்தீயின் சாம்பல்கள் மட்டுமே.

மானுடமே இந்த சவப்பெட்டிக்குள் தான்.

அதற்கு இறுதி ஆணிகள்

அடிக்கும் சம்மட்டியின் கொடு நிழலே

இது.

இதன் காட்டுக்கூச்சல்களில்

நம் மரண ஒலங்களே

நமக்கு மத்தாப்பு காட்டுகின்றன.

அவை எரிந்து எரிந்து

நம் கையையே பொசுக்கும்

மரண நுனி

இதோ அருகில் அருகில்..

அதுவே இது.

2024.


_______________________________________________________

செவ்வாய், 29 நவம்பர், 2022

ஜெகதீஷ்சந்திரபோஸ்

 

ஜெகதீஷ்சந்திரபோஸ்

_________________________________ருத்ரா


செடி கொடி இனங்களுக்கு

தமிழன் "பயிர்" என்று

பெயர் வைத்ததிலேயே

ஒரு அறிவியல் உளது 

என்று காட்டிவிட்டான்.

அச்சம் மடம் நாணம் அப்புறம்

"பயிர்ப்பு"என்று

சொல் வழங்குவதைப் பாருங்கள்.

பயிர்ப்பு எனும் மெல்லிய சிலிர்ப்பு

உணர்ச்சியையே அந்த சொல் சுட்டுகிறது.

"வாடிய பயிரை"கண்ட போதெல்லாம்

நம் வள்ளலார் வந்து விடுகிறார்.

ஜெகதீஷ் சந்திரபோஸ்

"பயிர் என்றால் உயிர்"

என்ற தமிழ் விஞ்ஞானத்தை

நமக்கு புகட்டிவிட்டார்.

போஸின் அறிவியல் ஒரு 

சிந்தனைப்புரட்சியின் வடிவம் தான்.

இயற்கையின் அறிவியல் அவரிடம்

உயிர் மூச்சாய் இழைந்து

இந்த உலகிற்கு ஒரு வெளிச்சம்

தந்திருக்கிறது.

அந்த மேதையின் புகழ் ஓங்குக!


________________________________________________

சத்தியேந்திரநாத் போஸ்!

சத்தியேந்திரநாத் போஸ்!

_____________________________________



இயற்பியல் மேதையே!

உன் பெயரைத் தொட்டுக்கொண்டு தான்

இந்த பிரபஞ்சமே 

அந்த ஊசிமுனையில் 

களிநடம் புரிகிறது.

அதுவே "போஸான்"

வாழ்க வாழ்க நீ.

இறப்பே இல்லாத அறிவொளியின்

ஒரு வழிப்பாதை நீ.

அதுவே மனிதனின் வெற்றி.

________________________________

சொற்கீரன்



இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்!

_______________________________________________



அருகில் யாழ் இல்லை.

அதன் நரம்புகள் இல்லை.

இருப்பினும் 

அகன்றதொரு வானின்

வெளிச்சமாய்

எப்போதுமே

ஒரு உற்சாகத்தையும் உந்துவிசையையும்

மானிடராகமாய்

பண் இசைத்துக்கொண்டிருக்கும்

உன் அப்பா

செங்கோடியை

தொட்டுக்கொண்டு தான்

எனக்கு விடிகிறது.

கல்லிடைக்குறிச்சியின்

பளிங்கு நீர் வாய்க்காலும் பசும்புல்லும்

அவனைக்கொண்டு தான்

துளிர்த்து சிரிக்கிறது.

அன்பின் கார்த்திக்

நீடுழி நீடூழி நீ வாழ்க!

உன் இனிய குடும்பம்

எல்லா நலங்களும் செழித்துச் சிறந்து

வாழ்க!வாழ்க!வாழ்கவே!


அன்புடன்

பெரியப்பா ..பெரியம்மா


மதுரை‍ 7

30.11.2022

___________________________________________












கொழுநிழல் மறைக்கும் . . . . . .

 


கொழுநிழல் மறைக்கும்.............

___________________________________________________

சொற்கீரன்




கொழுநிழல் மறைக்கும் அடர்செறிக்கானின்

வரிநிழல் காட்டும் ஓர் வேங்கை கண்ணுறீஇ

உறுமிய ஒற்றும் செஞ்சின வேங்கையும் 

வெரூஉய் ஒளிக்கும் குழைகவி யோமை

சேய்மையின் வரூஉம் ஆளி ஆங்கு கண்டே.

வெண்கோடு குத்தி வெரு வெரு செய்யும்

மள்ளற் களிறும் சுரத்தின் கண்ணே 

பிளிறும் ஓதையில் நோலா நெஞ்சும் நோன்றார்

கலி மிழற்றும் காட்சி மலியும் நிரம்பா நீளிடை

அரசிலை எஃகம் தனியன் ஏந்தி 

வரும் கொல் என துயில் மறுத்து

நெஞ்சில் வேகும் வேர்க்கும் வேர்க்கும்.

புள் மொழி ஓர்த்து புதல் மறைத்து ஆங்கே

புல்லென ஒலிக்கும் நிமித்தம் அஞ்சும்.

பொருளும் வேண்டாம் புதைபடு இருளின்

மருளும் வேண்டாம் எல்லே உயிர்க்கும்

அவன் புன்னகை ஈண்டு புகுதந்திடுக என‌

இறை இறைஞ்சும்மே இறைவளை நெகிழ.


_________________________________________________________


குறிப்புரை

_________________


(நக்கண்ணையார் பெண்பாற்புலவர் ஆவார். ’பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணை’ எனவும் கூறப்படுவார்.இப்பாடலில் வரும் "ஆளி" என்பது நம் தமிழின் தொன்மை அடையாள விலங்கான"யாழி"யைக்குறிக்கும். புலியைக்கண்டு யானை அஞ்சும்.இவை இரண்டுமே யாழியைக்கண்டு மிகவும் அஞ்சும்.அத்தகைய வெஞ்சுரம் ஏகி பொருள் தேட்டைக்குப் போன தலைவனை எண்ணி எண்ணி அஞ்சும் தலைவியின் நிலப்பாட்டையே நான்இந்த சங்க நடைச்செய்யுளில் எழுதியிருக்கிறேன்.......சொற்கீரன்)



திங்கள், 28 நவம்பர், 2022

கோடு

 கோடு

_________________________________

ருத்ரா




மூச்.

இதற்கு மேல் பேசாதே

எதையும் கேட்காதே

எதையும் பார்க்காதே

ஒரு குரல்

நம் பிடறிக்குப்பின்னே

நம்மை இழுத்து நிறுத்தியிருக்கிறது.

அறிவு என்பது

கோடுகளை உடைப்பது.

விளிம்புகளை கடப்பது.

வாசல்களை திறப்பது.

அச்சம் எனும்

துருப்பிடித்த பூட்டுகளை

அடித்து நொறுக்குவது.

முன்னே ஒரு குரல்

நம்மை ஈர்க்கிறது.

இருட்டுக்குள் 

மேலும் ஒரு இருட்டான‌

கோட்டை தாண்ட அஞ்சிய கால்கள்

முடமாகின.

விளிம்பு எனும் ஊசி முனையில்

நின்றுகொண்டு

விழாமல் நிற்கிறோம்

கையில் சிந்தனைச்சுடர் ஏந்தி.

ஒரு சிறுவன் வரைந்த‌

கோட்டுச்சித்திரமாய்

பிரபஞ்சங்கள்

மேல் அடுக்கிய‌

கோடி கோடி பிரபஞ்சங்கள்.

கோடு ஆவியாகி அகன்றது.

விளிம்பு எல்லாம் நம்

சொகுசு மாளிகை ஆனது.

நமக்கு விளக்கு ஏந்த

குட்டிச்சூரியன்கள்.

நியூகிளியர் ஃப்யூஷன் 

எனும் அறிவின் திறவுகோல்

இந்த இருட்டுப்பிழம்பையே

பழரசம் ஆக்கி நீட்டுகிறது.

மனிதனின்

துளியிலும் துளியாய்

இருக்கும் 

உந்து விசை

குவாண்டமாய்

கிரீடம் சூட்டிக்கொண்டிருக்கிறது.

மனித ஆற்றலின்

வர்ணமற்ற வர்ணத்துக்கா

பொய்மைப்புருசுகொண்டு

வர்ணம் தீட்ட வருகிறீர்கள்?

சோமச்செடி என்றாலும் 

கஞ்சாச்செடி என்றாலும்

போதை போதை தானே.

அது கடவுளின் குரல் என்று

உங்கள் மூலம் 

பாஷ்யங்களாய்

எங்களை ஏமாற்றியது எல்லாம்

புரிந்து கொண்டோம்.

அறிவே அகண்ட மானிடம்.

மற்றக்

குப்பைகள் எல்லாம் அகலட்டும்.


______________________________________________





வீட்டு முற்றத்து கிரில்

 நிழலாடு முன்றில்

______________________________________________

சொற்கீரன்



வீட்டு முற்றத்து கிரில் 

வீட்டுக்குள்

சூரியனைக்கொண்டு

நிழலைக்கலந்து

பிக்காசோவை பிசைந்து

ஊற்றியிருந்தது.

கிரேக்கத்து அந்த அழகிய அரக்கி

கூந்தலின் ஒவ்வொரு இழையிலும்

பாம்புகளாய் நெளிந்து

சிரித்துக்கொண்டிருந்தாள்.

காற்றெல்லாம் நஞ்சு.

எப்படி நஞ்சு கூடவா அழகு?

ஆமாம் 

இரண்டும் ஒன்று தான்.

அது அரக்கர்களிடம் இருந்தால்

நஞ்சு.

தேவர்களிடம் இருந்தால் அது

அமுதம்.

என்ன ஒரு மோசமான கணிதம்?

சமன்பாட்டை மாற்றிவிடத்தான்

சிவன் எண்ணினான்.

அதை அவனே குடித்துக்கொண்டான்.

அப்படியும் 

பிதுங்கி வெளியே வழிந்தது

நான்கு வர்ணமாய்!

அது அவனுக்கு மட்டுமே தெரியும்.

தேவர்களே அரக்கர்கள் என்றும்.

அரக்கர்களே தேவர்கள் என்றும்.

அதை தெரிவிக்க‌

அதோ

அவன் உடுக்கை ஒலிகள்

துடிக்க துடிக்க‌

கேட்டுக்க்கொண்டே இருகின்றன.

மாலை வந்தது.

நிழல்கள் கரைந்தன.

சமநீதியற்ற அந்த‌

நிஜங்களின் முள் மண்டிய‌

தேசத்தில் 

கால்களின் ரத்தம் பீறிட பீறிட‌

அவன் ஆடிக்கொண்டே இருக்கிறான்

அந்த‌

"ஊர்த்துவ தாண்டத்தை"


_____________________________________________________


ஞாயிறு, 27 நவம்பர், 2022

நிழலாடு முன்றில்


 நிழலாடு முன்றில்

_______________________________________________

சொற்கீரன்




வீட்டு முற்றத்து கிரில் 


வீட்டுக்குள்


சூரியனைக்கொண்டு


நிழலைக்கலந்து


பிக்காசோவை பிசைந்து


ஊற்றியிருந்தது.


கிரேக்கத்து அந்த அழகிய அரக்கி


மெடுஸா 


கூந்தலின் ஒவ்வொரு இழையிலும்


பாம்புகளாய் நெளிந்து


சிரித்துக்கொண்டிருந்தாள்.


காற்றெல்லாம் நஞ்சு.


எப்படி நஞ்சு கூடவா அழகு?


ஆமாம் 


இரண்டும் ஒன்று தான்.


அது அரக்கர்களிடம் இருந்தால்


நஞ்சு.


தேவர்களிடம் இருந்தால் அது


அமுதம்.


என்ன ஒரு மோசமான கணிதம்?


சமன்பாட்டை மாற்றிவிடத்தான்


சிவன் எண்ணினான்.


அதை அவனே குடித்துக்கொண்டான்.


அப்படியும் 


பிதுங்கி வெளியே வழிந்தது


நான்கு வர்ணமாய்!


அது அவனுக்கு மட்டுமே தெரியும்.


தேவர்களே அரக்கர்கள் என்றும்.


அரக்கர்களே தேவர்கள் என்றும்.


அதை தெரிவிக்க‌


அதோ


அவன் உடுக்கை ஒலிகள்


துடிக்க துடிக்க‌


கேட்டுக்க்கொண்டே இருகின்றன.


மாலை வந்தது.


நிழல்கள் கரைந்தன.


சமநீதியற்ற அந்த‌


நிஜங்களின் முள் மண்டிய‌


தேசத்தில் 


கால்களின் ரத்தம் பீறிட பீறிட‌


அவன் ஆடிக்கொண்டே இருக்கிறான்


அந்த‌


"ஊர்த்துவ தாண்டத்தை"


_______________________________________


கனவுக்குள் கனவாய்...

 கனவுக்குள் கனவாய்...

____________________________________

ருத்ரா


ஒரு கனவு காண்பதாக‌

ஒரு கனவு.

கடவுளை

கனவுகளின் கனவாகத்தான்

தரிசிக்கிறோம்.

தூக்கத்தை சுற்றிவைத்துக்கொண்ட‌

ஒரு விழிப்பின் கணப்பில்

கண்களின் உள் நெருப்பில்

கடவுளை

வார்த்துக்கொள்கிறோம்.

என் முகத்தில் மற்றவர் முகம்.

மற்றவர்கள் முகத்தில்

என் முகம் என்று

ஆயிரமாயிரம் பிம்பங்கள்

கருவுற்றதில்

உருவு தெளிவு இல்லை.

நிழல்களின் நெளியல்களும் சுழியல்களும்

இங்கு 

ஒவ்வொரு பாஷ்யங்கள்.

மனிதனுக்குள் கடவுள்

கடவுளுக்குள் மனிதன்

என்று மந்திரம் சொல்லிவிட்டு

அப்புறம் ஏன்

அசிங்கமாய் இந்த‌

நாலு வர்ண பிலாக்கணங்கள்?

கொன்றுவிட்ட கடவுளை

பிணமாக நிறுத்தி வைத்துக்கொண்டு

எதற்கு இத்தனை

நைவேத்தியங்களும் அர்ச்சனைகளும்?

இருங்கள்..

சற்று பொறுங்கள்.

எங்களுக்கு மனம் புண்பட்டு விட்டது

என்று தானே

சொல்லப்போகிறீர்கள்.

தினம் தினம் உங்கள்

மொக்கைச்சொற்களைக்கொண்டு

தாக்கு தாக்கு என்று

தாக்கியதில்

புண்பட்டு குற்றுயிரும் குலைஉயிருமாய்

கிடக்கிறாரே கடவுள்..

அதற்கு யாரை சிறை வைப்பது?

உங்களையா?

உங்கள் கூச்சல் பாஷைகளையா?



___________________________________________



















வெள்ளி, 25 நவம்பர், 2022

வனம்.

 வனம்.

____________________________________________________

ருத்ரா




எனக்கு என்ன வேண்டும் என்று

எனக்குத்தெரியாது

என்று ஒரு மனிதன் 

எய்தும் நிலை 

கடவுள் நிலையா?

"ஆட்டிசம்"நிலையா?

இரண்டிலும் 

நினவு ஓர்மை முதலியன‌

கழன்று விட்ட நிலை தான்.

இதில் முதல் நிலைஞர் யார்?

இரண்டாம் நிலைஞர் யார்?

யாரானால் என்ன?

அவர்கள் இருக்கும் இடம்

ஒன்று கோயில் ஆக இருக்கும்.

இல்லாவிட்டால் 

குணப்படுத்த முடியாத நோய்களுக்கு 

மருத்துவம் தருவதாக முயற்சிகள்

மட்டும் நடந்து கொண்டே இருக்கும்

மருத்துவ மனையாக இருக்கும்.

மிருகம் தான்

வளர்ச்சியின் உயர்ந்த நிலையில்

மனிதன் ஆகிறான்.

இன்னும் இன்னும் உயர்ச்சி பெற்ற‌

மனிதன் யார்?

மீண்டும் அவன் மனிதனே.

மனிதன் இயல்பு 

வளர்ந்து கொண்டே இருப்பது.

மலர்ந்து கொண்டே இருப்பது.

மொத்தமாய் பில்லியன்கள் கணக்கில்

அவன் பெருகிக்கொண்டே இருந்தாலும்

அவன் 

மொத்த மனித இனத்தை

ஒரு நேயம் கொண்டு கோர்த்துக்கொள்கிறான்.

அந்த மனிதம் தான்

புரிந்து கொள்ளப்படவேண்டும்.

உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

இதன் அர்த்தம் புரிந்துகொள்ளப்படாத வரை

இங்கு கடவுள்களின் குத்தாட்டமே தான்.

கண் கூசுகிறது

இந்த "லேசர்"வனங்களில்.


_________________________________________________________________




செவ்வாய், 22 நவம்பர், 2022

நீ மட்டும் தான்.

 

நீ மட்டும் தான்.

_______________________________________________

ருத்ரா


ஜாபாலா முனிவர் சொல்லுகிறார்.

"புருவமத்தியில் 

அவிமுக்தம் எனும்

குண்டலினியின்

உச்சாங்கிளை இருக்கிறது.

அதற்கு சன்யாசம் எனும் 

கோடரி கொண்டு

அடிக்கிளையான அறிவுகளை

வாழ்க்கை முடிச்சுகளை

வெட்டிவிடு " என்று.

வீடு எனும் முக்தி பற்றி.

எதிலிருந்து எதற்கு விடுதலை வேண்டும்?
மனித சிந்தனையில்
எப்பொழுது தேக்கம் ஏற்படுகிறதோ
அப்பொழுது தான்
பாழ்வெளிகள் தோன்றுகின்றன.
ஆம்.
அந்த அழகிய பூமி கூட‌
அவனுக்கு சூன்யம் ஆகிவிடுகிறது.
பிறக்கிறாய்
இறக்கிறாய்.
எதற்கு பிறந்தாய்?
எதற்கு இறந்தாய்?
இந்த‌ கேள்விகள்
வெறும் மொக்கையானவை.
ஆன்மீக பொக்கிஷம்
என்று
வெறும் புழுக்களாய்
நெளிந்து கொண்டிருப்பது தான்
இந்திய தத்துவம்.
ஐரோப்பியன்
உயிரின் உந்துதலை உணர்ந்து
உயிர்ச்சங்கிலியின்
முன்னும் பின்னும் பார்வையிடுகிறான்.
இந்த இன்டர்பொலேஷன் எக்ஸ்ட்ராபொலேஷனில்
காலம் எனும் முழுமையை
ஆராய்ச்சி செய்கிறான்.
சும்மா நடந்து கொண்டிருந்தவன்
பறவையின் இறக்கையை
மாட்டிக்கொள்ளலாமா என்று நினைக்கிறான்.
காற்றுப்படலங்களுக்குள்
படுத்துக்கொண்டிருக்கிற‌
வெளியையும் அதனுள்
நெசவு செய்து கொண்டிருக்கும்
மின்காந்தப்படுகையையும்
தொட்டுப்பார்த்து விடுகிறான்.
அது அறிவின் புரட்சி.
அதி சிந்தனையின் வெளிச்சம்.
இங்கே
பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையே இருக்கிற சூன்யம்
நம்மை என்னவோ பாடாய் படுத்துக்கிறது.
அப்போது
அவனுக்குக்கிடைத்த முட்டுச்சந்து
பிரம்மம்.
உயிர்களே போதும்
நீங்கள் உண்டு உடுத்து உறங்கியது.
உங்கள் எலும்பு சதைகளை
உரித்து எறியுங்கள்.
உயிர்க்குப்பின் நீங்கள் உலாவ‌
ஒரு திடல் உண்டு.
ஒரு இன்பத்தீவு எனும் சொர்க்கம் உண்டு.
அதுவே முக்தி.
அதை நோக்கி நடக்க
ஒரு ஊன்றுகோல் உண்டு
அது பிரம்மம்.
பாருங்கள் அந்த முட்டுச்சந்து
அவனுக்குள் ஒரு
மன முறிவை ஏற்படுத்துகிறது.
அதன் ஊளையும் ஊங்காரமும்
வெறி கொள்கிறது.
பேதங்களின் தோற்றங்களில்
மனிதம் எனும் வெளிச்சத்தையே
வேண்டாம் என்று
மரண குழிக்குள் சமாதியாவதையே
பிரம்மம் என்கிறது.
மனித மதிப்புகள்
வர்ணங்களுக்குள் எரிந்து போகின்றன.
வெறியோடு
எதையோ எதுவோ
ஆதிக்கம் செய்வதே பிரம்மம்
என்று கூப்பாடு போடுகிறது.
அந்த கூச்சல் மொழி
வெட்டியானாய் மாறி
மனிதத்தையே சுட்டுப்பொசுக்கி
சாம்பல் ஆக்குகிறது.
மேலை அறிவு வாசனையைக்கொண்டு கூட‌
இந்த வெறியின் வேதாந்தம்
அக்கினி வளர்த்துக்கொண்டே இருக்கிறது.
மனிதா
உன் மோட்சம் முக்தி எல்லாம்
இந்த பொய் அறிவின் தேக்கத்தை
உடைத்து நொறுக்குவது தான்.
குப்பையாய் மக்கிக்கிடக்கும் மக்களின்
அறிவுச்செதில்களிலிருந்து
பெரு வெளிச்சம் தோற்றுவிப்பது தான்.
மனித ஆளுமையின் நிழல் தான்
ஆத்மா.
நிழல் ஏற்படுத்தும்
முதல் அறிவை
மனித மலர்ச்சியை
அழித்து விட்டால்
ஆத்மா ஏது? பிரம்மம் ஏது?
இந்த பிம்பங்களுக்கு
இவர்கள் கும்பாபிஷேகம்
நடத்திக்கொண்டிருக்கட்டும்.
அறிவின் ஒளி நோக்கி
இந்த பிரபஞ்சங்களின் ஜியாமெட்ரியை
மாற்றி அமைத்து
புதிய கணித தேற்றங்களை எழுது.
கடவுள் என்ற‌
பாறாங்கல்லை
உன்னை இடறவிடாதே.
அதைப் படி பரவாயில்லை.
அல்லது
உன் படிகளாய் செதுக்கிக்கொண்டு
அதையும் மீறிச்செல்.
வெளிச்சமே எல்லாம்.
அதற்குள் ஒரு
இருட்டு ஆற்றலும் இருட்டுப்பிண்டமும்
டார்க் எனர்ஜி..டார்க் மேட்டர் என்று
மொத்தமாய் மூளியாய்
திரண்டு இருக்கும் விஞ்ஞானத்தையும்
தோலுரிப்பவன் மனிதனே.
மனிதா
அது நீ தான்.
நீ மட்டும் தான்.

_____________________________________________

திங்கள், 21 நவம்பர், 2022

ஒடக்காய்

 


பதரே பதரே..

__________________________________________


ஒரு திரைப்படக்காட்சி.

நான் கோவையில் இருக்கும் போது

பெரியநாயக்கன் பாளையம் எனும்

ஒரு அரை நகரத்தில்

ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது

ஊருக்குள் வாக்கிங் செல்வது உண்டு.

அப்போது நாலைந்து சிறுவர்கள்

கையில் சிறிய நீண்ட கம்பு வைத்துக்கொண்டு

அங்கேயும் இங்கேயும் 

அலைந்து கொண்டிருப்பார்கள்.

அண்ணா...ஒடக்காய் அடிக்க‌

ஓடுகிறோம் என்பார்கள்.

அந்த திரைப்படம் இக்காட்சியை

அப்படியே அச்சடித்து காட்டியது.

அந்த ஒடக்காயை விடாதீங்கடா

என்பான் ஒருவன்.

அதற்குள் அதன் வாலை சிறு கயிற்றில்

கட்டி அதை ஓட விட்டு

மேய்த்துக்கொண்டிருப்பான் 

இன்னொருவன்.

இவர்களின் "வாலி வதைப்"படலத்தில் 

கண்ணைப்பிதுக்கி

குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும்

அந்த ஒடக்காய் என்ற ஓணான்.

டே அடிக்காதீங்கடா..பாவண்டா

உட்டுருங்கடா என்பார்

கமலஹாசன் என்ற சப்பாணி.

போங்கண்ணா உங்களுக்கு தெரியாது.

அது ராமருக்கு ஒண்ணுக்கு அடிச்சிக் குடுத்துது.

ராமாயணத்தில் இப்படி ஒரு

இன்னா நாற்றக் காண்டம் இருப்பது

இப்போது தான் தெரிகிறது.

"சரிடா..விட்டுடுங்கடா..அதை.

இனி அது ஒண்ணுக்கே அடிக்காது"

இப்படி அவர் சொல்லும்போது

அவர்காட்டும் 

நகைச்சுவை

அப்பாவித்தனம்

அச்சம் 

அனுதாபம் எல்லாம் கலந்த

அற்புத நடிப்பை நம்மால்

மறக்கவே முடியாது.

அதற்கே தனியாக 

ஒரு "ஆஸ்கார்"கொடுக்கலாம்.

அந்த இடத்தில் 

உலகளாவிய இலக்கிய உலகில்

ஒரு தலைசிறந்த எழுத்தாளரை

நிறுத்தி வைத்துப்பாருங்கள்.

அவர் தான் நம் பதிப்புக்கும் பெருமைக்கும்

உரிய திரு பெருமாள் முருகன் அவர்கள்.

அந்த ஒடக்காய் தான் 

அவர் எழுதிய‌

"மாதொரு பாகன்" எனும்

ஒப்பற்ற நாவல்.

அந்த விடலைச்சிறுவர்கள் தான்

"ஆண்ட பரம்பரைடா"

எனும் கூச்சல்காரர்கள்.

ஒரு உயிர்த்துடிப்பான நாவல் என்பது

ஆயிரம் ஆயிரம் பக்கங்களில்

பெய்யும் "மையின்"அடர்மழை அல்ல.

கல்லெறிகளிலும்

ரத்த விளாறுகளிலும்

மரண காயங்களிலும்

உயிர்ப்பலிகளிலும்

உருவாவதே அந்த‌

உயிர்த்துடிப்பான எழுத்துக்கள்.

அந்த ஆசிரியர் எழுதியதே

ஆனந்த விகடன் தீபாவளி இதழில்

வெளி வந்த‌

"பதரே பதரே"

இதுவும் ஒரு "பாதர் பாஞ்சாலி"குவாலிடி

சிறுகதை தான்.

மனம் எனும் கலைடோஸ்கோப்பை

வண்ண வண்ணமாய் 

திருப்பி திருப்பிக்காட்டும்

அற்புதக்கதை.

அந்த எழுத்துக்களின் தீயில்

குளித்து எழ முடியாது.

எரிந்து தான் குளிக்க முடியும்.

அதையும் தான் பார்த்துவிடுவோமே


(தொடரும்)

_______________________________________________

ருத்ரா

ஞாயிறு, 20 நவம்பர், 2022

வாக்குறுதிகள்.

 வாக்குறுதிகள்.

_____________________________________

ருத்ரா



பாதை மங்கல்.

புகை மூட்டம்.

முகமும் தெரியவில்லை.

முகவரியும் தெரியவில்லை.

என்ன செய்வார்கள்?

எப்படி செய்வார்கள்?

இனி 

உங்களுக்கு

கல்வியே தேவை இல்லை.

கல்வியை வைத்துக்கொண்டு

தீப்பொறி உரசுகிறீர்கள்.

இருட்டையும் 

கிளறி கிளறி

நட்சத்திரங்களைக்கூட‌

மடி நிறைய அள்ளி

வைத்துக்கொள்கிறீர்கள்.

மறு பிறவி மண்ணாங்கட்டிகள்

இருக்கட்டும்.

இப்பிறவியிலேயே

சொர்க்கங்களை

கிலோ பத்துரூபாய்

என்று 

பொட்டலம் கட்டித்தந்து விடுங்கள்

என்கிறீர்கள்.

அதெல்லாம் போகட்டும்

ஓட்டுக்கு

ஸ்கூட்டர்கள் தருகிறீர்களா

சந்தோஷம்.

வீடுகள் தருகிறீர்களா

சந்தோஷம்.

அட சுடுகாடுகளைக்கூட‌

டிஜிடல் ஆக்கித்தருகிறீர்களா

ரொம்ப சந்தோஷம்.

என்னது?

எங்களையும் பிராமணர்கள்

ஆக்கி விடுகிறோம் 

என்கிறீர்களா?

ஆகா!ஆகா!

திவ்யம்..திவ்யம்.

"அஹம் ப்ரஹ்மாஸ்மி"

"தத்வமஸி"...

அப்புறம் என்ன?

இனி எல்லாம் சமம் தான்.

மரம் மட்டை புழு பூச்சிக்கு கூட 

பூணூல் தான்.

அதோ கத்திக்கொண்டு ஒடுகிறதே 

அந்த எருமையின் குரலும் 

வேதம் தான்!


_____________________________________________________


சனி, 19 நவம்பர், 2022

பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்

 பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்

__________________________________________________

ருத்ரா


காதறுந்த ஊசியும் வாராது காண்

கடைவழிக்கே

வாழ்க்கையே ஒரு தத்துவம்.

இது வாழ்க்கையை 

கரடு முரடாய் பார்க்காத‌

தெருவில் பம்பரம் விளையாடும்

சிறுவர்களின் மகிழ்ச்சிக்குமிழி ஒன்று

மூச்சு விடும் தருணங்களின்

அடிவயிற்றுக்கடல்.

ஊசிமுனைக்காதில் ஒட்டகங்கள்

நுழையலாம்

பணக்காரர்களுக்கு சொர்க்கம் இல்லை.

ஏழைகளாக இருப்பதே

இறைவனுக்கு மிக அருகில் 

இருக்கும் இடம்.

இறைவன் என்றால் கொம்பு முளைத்தவனா என்ன?

இந்த இறுமாப்பு தான்

விடுதலை பெற்ற எண்ண ஒழுக்கு.

இறைவன் அருகே இருப்பவன் தான்

இப்படி பட்டவர்த்தமான மொழியில்

இறைவனை உற்றுப்பார்க்க முடியும்.

பணம் என்றால் இறைவன் தான்

என்ற‌

ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறதே.

அதுவும் பெண் உருவில் அழகாகவே

இருக்கிறது.

பண மறுப்பு வாதம்

கடவுள் மறுப்பு வாதம் அல்ல.

எல்லோரும் 

மகிழ்ச்சியாய் இருப்பது.

எல்லோருக்குள்ளும்

கடவுள் இருப்பது

அல்லது

அப்படி எதுவுமே இல்லாமல்

ஒரே வெள்ளையாய் கருப்பாய்

இருப்பது.

இப்படி பம்பரம் விடுவது எல்லாம்

உருமா கட்டப்படும் அடையாளம் தான்.

கூடவே நடந்துவரும்

இன்னொரு மனிதனுக்கு

கோரைப்பல் கொம்பு இருப்பதாய்

பகைப்புகை எப்படி கிளம்புகிறது.

ஒரு குருட்டுத்தனம்

வெறித்தனம் ஆகி

கொழுந்து விடுகிறது.

ஏதோ ஒரு பயம் இருட்டாய்

அதுவே பயமுறுத்தும் நிழலாய்

விரிகிறது.

சரி போகட்டும் வெறும் நிழல் தானே!

அதை கொஞ்சம் உற்றுப்பார்ப்பதற்குள்

எத்தனை

ரத்த ஆறுகள்?

எத்தனை எத்தனை

கபாலக்குவியல்கள்?

மனிதப்பரிமாணம்

மனிதனை விட்டு கழன்று விடுகிறது.

அப்புறம்

வரலாறுகள் கூர்மை மழுங்கி

மூளியாகி விடுகின்றன.

மீண்டும் எப்போது

கண்ணைத்திறக்கும் 

வெளிச்சம் வரும்.

மண்டையில் வெறும் கொண்டை வைத்த‌

பம்பரங்கள்

இங்கே சுழன்றுகொண்டிருக்கின்றன.

நிற்கும் போது 

திசைகள் அழிந்து

சுழன்று கொண்டேயிருக்கின்றன.

_______________________________________________________










ப்ராபபலிடி

 ப்ராபபலிடி

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________________

ருத்ரா


சோழி குலுக்கிப்போடலாமா?

எதற்கு?

ஒற்றையா ரெட்டையா விளையாட்டுக்குத்தான்.

எப்படி?

குலுக்கிப்போட்டு பார்த்து

ஒற்றைப்படை வந்தால் 

நீ இருக்கிறாய் என்று பொருள்.

இரட்டைப்படை வந்தால்

நான் இருக்கிறேன்

என்று பொருள்.

அமர்த்தலான சிரிப்புடன்

சோழிகளை குலுக்கிக்கொண்டே இருந்தது

சைத்தான் கடவுளின் எதிரில் உட்கார்ந்து.

சோழிகள் சிதறின.

எண்ணிப்பார்த்து சொல்லவேண்டும்.

விண்ணில் எத்தனை நட்சத்திரப்புள்ளிகள் என்று?

கடவுளுக்கு அக்கறையில்லை.

சைத்தானும் கவலைப்படவில்லை.

அதோ

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்

துருவிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.

யாரால் யார்?

யாரிடம் யார்?

யாருக்கு யார்?

இந்த கேள்விகள் விடைகளை எதிர்பார்க்கவில்லை.

அந்த விடைகளுக்கும் கேள்விகள் தேவையில்லை.

இருப்பினும்

விளையாட்டு தொடர்ந்து கொண்டேஇருக்கிறது.


_____________________________________________________


என்ன தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கிறது?

தமிழில் என்ன தலைப்பு?

"நிகழ்தகைமை"

புரிந்தது போலும் இருக்கிறது.

புரியாதது போலும் இருக்கிறது.

கடவுளும் சைத்தானும் அப்படியே.

_____________________________________________________

ருத்ரா


வியாழன், 17 நவம்பர், 2022

சரணம் அய்யப்பா.

 சரணம் அய்யப்பா.


‍‍‍‍‍‍‍‍‍‍‍______________________________________


ருத்ரா








சாமியே சரணம் அய்யப்பா.


இதை மீண்டும் மீண்டும்


கேளுங்கள்.


அது அந்த தூய புத்தனை


சரணம் அடைந்தவர்களின்


அடிவயிற்று முழக்கம் அது.


சங்கம் சரணம் கச்சாமி


என்ற தூய 


மானிட சங்கம் நோக்கித்தான்


அதுவும் ஒலியெழுப்புகிறது.


வைதிகம் கவ்விப்பிடித்திருக்கிற‌


காரணத்தால்


புராணக்கதைகள் அதில் 


ஒட்டிகொண்டன.


நாயர் புடிச்ச புலிவால் கதை தான்.


அந்த யாத்திரையின் நடுவில்


வாவர் சாமிகள்


எனும் பாபர் சாமிகள் தான்


ஐயப்பனின் அத்யந்த நண்பராக‌


இருக்கிறார்.


அவருக்கும் சேர்த்து தான்


பக்தர்களின் யாத்திரை இங்கு


தொடர்கிறது.


இந்த வாவரைக்காட்டி


ஐயப்பனைப்பிரிக்க


இவர்கள் நினைத்தால்


ஐயப்பனே அந்த‌


அந்த மசூதிக்குள் போய் 


உட்கார்ந்து கொள்வார்.


இது தான் 


"நாயர் புடிச்ச புலி வால்" என்பது.


மிகவும் "வைராக்கியம்" மிகுந்த‌


தபசு இவருடையது.


அதனால் தான் அந்த‌


சாவதானமான‌


பத்மாசனைத்தை  விட்டு


முழங்கால்களை மடக்கி


குத்த வைத்த அந்த‌


கடினமான ஆசனத்தில் 


அமர்ந்து இருக்கிறார் அய்யப்பன்.


இரு முடிகளோடு


கல்லையும் முள்ளையும்


காலுக்கு மெத்தையாக்கி


ஊர்கின்றன.


பிறப்பு என்பது தாய்மையின் வாசல்.


அது தோன்றும் இடமே


பிரம்மமும் தோன்றுகிறது.


அது எப்படி பாவத்துவாரம் ஆகும்?


அது எப்படி தீட்டு ஆகும்.


அங்கு கன்னிக்குடம் உடைத்து


வரும் பிரம்மம் கூட‌


தீட்டு ஆகிவிடுமா?


அதனால் தானே உச்சநீதி மன்றமும்


அந்த தீர்ப்பை நல்கியது.


பெண்களும் 


படியேறி வந்து 


படிநிலையில் 


அவள் ஒரு கொற்றவை ஆகலாம்


என்பது தானே உட்குறிப்பு.


ஆனால் பழமை வாதிகளோ


அந்த தீண்டாமைக்கு 


இன்னும் பூண் பிடிக்க‌


நீதி மன்றத்திற்கு 


போய்க்கொண்டிருக்கிறார்கள் 


அன்பு தானே படைப்பின்


உலக மகா ஊற்று.


இது தானே "தெளிவு" எனும் ஒளிர்வு.


இதை சமஸ்கிருதத்தில் பிரசாதம் என்று 


சொல்லி அப்பமாய் அதிரசமாய்


உண்கிறோம்.


இந்த வெளிச்சம் தானே


அந்த காந்தமலையில் 


மகரஜோதியாய் தெரிகிறது.


அன்பு கொழுந்து விட்டு எரிந்து


சுடர் காட்டும் இந்த‌


மனித உணர்வே பக்தியின் அடிப்படை.


மனித உணர்வில் பேதங்கள் வளர்க்கும்


அசுரத்தனம்


கொளுத்தப்படத்தானே வேண்டும்.


சாமியேயே...ய் 


சரணம் அய்ய்..யப்பா!


இந்த அடிமனத்து ஆழத்தின்


முழக்கம் 


உலகமெல்லாம் கேட்க வேண்டும்.




__________________________________________________________‍


குயில் குரல்கற்ற வேனில்

 குயில் குரல்கற்ற  வேனில்

______________________________________________________

சொற்கீரன்


மாமை மணிநிறம் மறப்ப விடாது

இலஞ்சி அடர்நிழல் அருகு சினைஇய‌

பழுப்புத்தீயின் தளிர்மின் கலிப்ப‌

மாவும் நோக்கும் என் பசலை ஆர்த்து.

புன்காற் பாதிரி வரிநிழல் தூஉய்

தும்பி சேர் நெடுவனம் கல்லென எடுக்கும்

புலம்பொலி மறக்கல் நேராது ஈண்டு

என் மொழி அவன்பால் நுணங்கறல் போன்ம் 

நீள்வரி எழுதும் என் கண்ணிணை நோக்கும்.

வேனில் பொறிகிளர் வெங்கான் பறந்தலை

துடிசெய் அம்புள் கருங்குயிலும்

என் புலம்புகொள் பண்ணில் தன்

அலம்பல் தீங்குரல் கற்றிட வருமே.

குயில் குரல்கற்ற  வேனில்  இவண்

மாறுகொள் நோன்றல் எய்தியது என்னே.


_____________________________________________________________



செவ்வாய், 15 நவம்பர், 2022

பாடுங்கள் ஒரு பாட்டு.


உங்களுக்கு நான் 

எத்தனை தடவை தான் சொல்வது?

என்னைத்தேடி

கூட்டம் கூட்டமாய் வந்து

ஈசல் சிறகுகள் உதிர்த்து

மீண்டும் சிறகுகள் முளைத்து

மீண்டும் மீண்டும்

சிறகுகள் உதிர்த்து

என்னத்தைக்கண்டீர்கள்?

கல்லில் இறுகிக்கிடக்கும்

அந்த மூடத்தனத்தை தான்

எத்தனை 

தடவைகள் தான் குளிப்பாட்டுவீர்கள்?

அதிலும் நீங்கள் குடமுழுக்கு என்று

சொல்லிவிட்டால்..

அதெல்லாம் இல்லை..

அந்த நீச பாஷையெல்லாம் வேண்டாம்.

கும்பாபிஷேகம் என்றால் தான்

கர்மம் தொலையும்.

தீட்டு கழியும் 

என்பார்கள்.

நீங்களே

உங்கள் உழைப்பின் நரம்புகள்

தெறிக்க கட்டிய கோவில்கள்

நீங்கள் நுழைந்து விட்டதால்

எப்படிப்பாவப்படும்?

எப்படித்தீட்டுப்படும்?

அதை தூய்மைப்படுத்துவதாய்

சொல்லும் மந்திரங்கள்..

உங்களின் அடிமைச்சேறு

என்பதை 

எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?

போதும் ஈசல் சிறகுகளே.

இந்த வானம் முழுதும் 

உங்கள் அறிவின் சிறகுகளால்

தூய்மைப்படுவது உங்களுக்கு

தெரியவில்லையா?

ஓ மனிதர்களே!

இறைவா என்று என்னை நோக்கி

நீங்கள் கைகள் குவித்தாலும்

உங்களிடம் தான் இருக்கிறது

என் அறிவின் பல்கலைக்கழகம் எல்லாம்.

இவர்களின் எச்சில் தெறிப்புகளை

என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

என்னைக்காப்பாற்றுங்கள்.

உங்கள் நெஞ்சில் 

மனித அன்பின் கூடு ஒன்றை

கட்டிக்கொள்ளுங்கள்.

அதில் அந்த‌ சிறகொலிகள்

உங்களை சிலிர்க்கச்செய்யட்டும்.

போதும்.

உங்கள் போலித்தனங்களுக்கு

போடுங்கள் ஒரு பூட்டு.

பாடுங்கள் ஒரு பாட்டு

மனித நேயத்துக்கு

பாடுங்கள் ஒரு பாட்டு.


____________________________________________________

ருத்ரா





























"லவ் டுடே"

 "லவ் டுடே"

______________________________________

ருத்ரா




எத்தனையோ படங்கள்

ஒரு சின்னப்பொறியை வைத்து

சொக்கப்பனை

ஆக்கியது போல் 

தூள்கிளப்பியிருப்பார்கள்.

நவீனத்துவ படங்கள் எல்லாம்

நாடி துடிக்கிற‌

சிறு மணித்துளிகளிலேயே

படம் துவங்கி முடிந்தும் விடுகிறது.

கதை என்று எதுவுமே

இல்லாமல்

ஒரு நிகழ்வு

ஏதோ கண்ணுக்குத்தெரியாத‌

ஒரு காக்கா

எச்சம் இட்டு விட்டு

சரேலென்று 

மறைந்தது போல் தான்

இருக்கும்.

இந்தப்படமும் அப்படி

பொறியிலும் சிறு பொறியாய்

ஒரு "கை மாத்து" ஒன்றை

ஒரு பெரும் யுகப்புரட்சியாய்

உருட்டு விட்ட கதை தான்.

எப்போதும் செல்ஃபோனுக்குள்

குடியிருக்கும் காதலர்கள்

ஒரு நாள் முழுதும் அந்த செல்களை

பரிமாற்றம் செய்து கொள்ளவேண்டும்.

அதாவது

இருவரும் ஒரே மௌனராகத்தை மட்டும்

மீட்டிக்கொடிருக்க வேன்டும்.

தம் இதயங்களைக்கூட‌

பெயர்த்து எடுத்து 

மாற்றிக்கொண்டு விடுவார்கள்.

ஆனால் செல்ஃபோன்களை 

அப்படி மாற்றிக்கொள்ளச் சகியார்!

அந்த இதயங்களாகவே ஆகி விட்ட‌

சிலிகான் கிணுகிணுப்புகளையும்

டிஜிடல் வருடல்களான அந்த‌

"எண்ணியத்தில்" 

தங்கள் கனவுகளையே

தடவி தடவி பெறும் கிளுகிளுப்புகளையும்

விட்டுக்கொடுக்க முடியாமல்

அவதிப்படுகிற‌

அந்த தருணங்கள் 

ஒவ்வொன்றும்

ரீல் ரீலாக ஓடும்

தேனாறுகளாய் பொங்கி ஓடுகின்றன.

புதுமுக நடிகர் ஒரு முதிர்ச்சியான‌

இயக்குநராக இங்கு

பரிணமித்து இருப்பது அருமை.

காதலியாக வரும் நடிகையின்

தவிப்பில்

ஒரு காஷ்மீர் பனிக்கட்டியின்

ஐஸ்கிரீம் உருகி உருகி

சித்திரவதை செய்கிறது.

வசூல் வசூல் என்று

முரட்டுக்கண்ணும்

கரடு முரடான தோற்றமும்

உடைய அசுரத்தனமான‌

பாக்ஸ் ஆஃபீஸ் பூதமும்

சாதுவாக நின்று

இமாலய சாதனையை

செய்து காட்டியிருக்கிறது.

இந்த அற்புத இயக்குநருக்கு

நம் வாழ்த்துக்கள்.

____________________________________________________







திங்கள், 14 நவம்பர், 2022

கெமிஸ்ட்ரி

 கடவுள் 

மனிதன் 

இந்த இருவர்க்கிடையே

எந்த கெமிஸ்ட்ரியும் இல்லை.

மனிதன் 

தன்னையே கழற்றி

தனியாக வைத்துக்கொண்டு

அதனோடு 

கொஞ்சுவான்

கொதிப்பான்

மதிப்பான் 

மிதிப்பான்.

ஆணாக்குவான் 

பெண்ணாக்குவான்.

உள்ளவியல் முரண்களுக்கும்

உள்ளவியல் உறவுகளுக்கும்

வெளிப்பாடுகள்

என்பது 

வக்கிர வெளிப்பாடுகள் தான்.

அவை வெளியே

பீறிட்டுத் தீர்வதே இயற்கை.

அவை

ரத்த ஆறுகளாக போர்களாக‌

நமக்கு அறிய கொடுக்கப்படுகிறது.

இது தான் 

சமய சமூக வரலாற்றுப்படிமானங்கள்.

______________________________________

ருத்ரா.


சிலம்பு நக இயலி..

 சிலம்பு நக இயலி..

__________________________________________

சொற்கீரன்.


கருங்கால் ஓமை பைஞ்சினை அமரும்

வெண்குருகு நரல அயல நான்ற சில்பூ அதிரும்.

மண்ணிடை ஊழ்க்கும் வள்ளியெனப் படர்ந்து

வரிபூ காட்டும் சுரனிடைத் துணிந்தாள் மன்னே.

சூர் உடை இருள் வெளி கண்டும் அஞ்சா

விழி உறுத்து எதிர்வரு கவலை யாறும்

கணித்து முன் சென்றாள் குறி எதிர்த்தாங்கே.

சிலம்பு நக இயலி வணர் குரல் மூசி

கடுங்கால் அறைமுகம் கடுப்பவும் ஆனாது

ஆடமை புரையும் தோள் திரள் அகலன்

அழ்தரு நகையின் களி மூழ்க விரைந்தாள்.

வட்டில் சோறு மறுத்தாளாய் கட்டில் படுத்தாங்கு

துஞ்சுதலும் இயலாள்.தகரம் மண்ணாள்

பூவும் தொடையா பாழ்நிலைக்கூந்தல்

நறும்புகை யறியாக் கிடந்தாள்

அண்ணல் முகம் நோக்கும் நோக்கம் அன்றி

மறு நோக்கு மறுத்து மற்று ஆறும் தவிர்த்தாள்.

வேழம் முற்றிய பழனத்திடையே ஒரு

வேங்கைத்திட்டில் சிலம்பிய பண்ணின்

குறியாங்கு எய்தும் கூர்பட நடந்தாள்.

பிரிதின் வெஞ்சிறை தகர்த்திடும் நடையில்

அஞ்சிறைதும்பி ஆர்த்திடும் மரத்த‌

வரிநிழல் குறியிடம் சேர்ந்திடும் விசையில்

கலிமாவன்ன பாய்பரி தன்னில்

காற்றையும் பிளந்துக் கடுகினள் ஆங்கே.


______________________________________________________


அவள் அவனைக்கண்டதும் காதல் கொண்டாள்.

அவனைக்காணாது ஒரு கணம் இருக்க முடியாதாளாய்

பிரிவு நோய் மிகுந்து வேதனையுற்றாள்.தோழி மூலம்

அவனை ஒரு இடத்தில் சந்திக்க முனைந்தாள்.இப்படி

ஒரு இடம் "குறி" செய்து காதலர்கள் சந்தித்துக்கொள்வது

சங்க கால மரபு. காதலர்கள் தற்போது இப்படி சந்தித்துக் 

கொள்வது தற்காலத்திலும் உண்டு என்பது நாம் அறிவோம்.

அப்படி அவள் ஒரு வேங்கை மரம் இருக்கும் இடமே

இங்கு "குறி"யாக தோழி மூலம் அவள் அறிந்தாள்.

அந்த குறித்த இடம் ஒரு அடர்ந்த காடு.அந்த அடர்

சுரத்தையும் கடக்கத்துணிந்து செல்லுகின்றாள்

என்பதையே நான் எழுதிய இந்த சங்க நடைச்செய்யுள்

கவிதை சொல்கிறது.


_______________________________________________சொற்கீரன்


ஞாயிறு, 13 நவம்பர், 2022

அது என்ன?...1


அது என்ன?...1

_____________________________________________

ருத்ரா



 ஓ வென்று

வாய்விட்டு அழலாம் 

என்று தோன்றுகிறதா?


"தனியொருவனுக்கு 

உணவில்லை எனில் 

இந்த ஜெகத்தினை

அழித்திடுவோம்" என

சீறவேண்டும் என்று

தோன்றுகிறதா?


இவை இரண்டு

எதிர்நிலைகள்.

உணர்ச்சிகளையெல்லாம்

கழற்றியெறிந்து விட்டு

அதோ

அந்த அரசமரத்தடியில் 

உட்காருங்கள்.


ஒரு மனிதன்

தன் தலையை தானே

வெட்டிக்கொள்ளவேண்டும்

இல்லையெனில்

அடுத்தவன் 

தலையையாவது 

வெட்டி எறிய வேண்டும் 

என்ற வெறிக்குள்

மூழ்கி விடும் 

அபாயங்கள்

அவன் மனக்கடலின்

ஆழத்துள் கிடக்கின்றன.


இதை 

சமப்படுத்தும்

ஒரு ஆழ்நிலையின்

வெளிப்பாடு தான்

மதங்களும்

அவை காட்டும் கடவுள்களும்.


அந்த கடவுள்களே

வெறி கொண்டு

பலி கேட்பதாக‌

இந்த மனிதன் மீண்டும்

அரிவாள்களை 

தூக்கிக்கொண்டிருப்பதை

பார்க்கும் போது

இந்த மனிதனை

கோபம்,

ஏதோ ஒரு பழிவாங்கும்

வெறி,

இவையெல்லாம் இல்லாத‌

"ரோபோட்டுகளாக"

படைத்தால் என்ன‌

என்று 

அறிவுக்கு தினவு

எடுத்ததின் விளைவு தான்

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.

மகிழ்ச்சி தான்

என்று ஆரவாரம் செய்தோம்.

இனி இந்த உலகமே

ஒரு அமைதிப்பூங்கா

என்று மகிழ்ந்திருக்கையில்

இந்த ரோபோட்டுகளின் கைவிரல் நுனி

இருக்கும் இடத்தைப்பார்த்து

நாம் மீண்டும் ஒரு

அழிவுக்கடலுள் விழும் அபாயத்தில்

இருக்கிறோம் 

என்பதே இப்போது 

பேரதிர்ச்சி

பெருங்கவலை.

அது என்ன?


(தொடரும்)

சனி, 12 நவம்பர், 2022

கல்லூரிக்காலம்

 கல்லூரிக்காலம்

____________________________________

ருத்ரா


முதலில் அது

ஒரு வினாக்காலம்.

விடைகள் தேடி அலுத்த பின்

வினாக்களை துரத்தும்

விடைகளின் 

பட்டாம்பூச்சிச்சிறகுகளை

கையில் குவித்துக்கொண்டு

அவன் திரியும் போது

வானங்கள் அவனைக்கவிந்து 

கொண்டன.

அதுவே அவனது 

கனாக்காலம்.


___________________________________

"எண்ணியம்"

 

"எண்ணியம்"

__________________________________

ருத்ரா


டிஜிடல்கள் இருக்கும்போது

நெல்லுமணிகள் எதற்கு?

ஆன் லைனில்

சிலிகான் ரவைகளில்

வைட்டின்மின்களை

பூசி வைத்துக்கொண்டால் போயிற்று.

எதற்கு காளையும் பசுவும்?

எதற்கு தென்னை மரங்கள்?

டெர்மினேட்டரில் வருகின்ற‌

மண்டையோட்டு சிதலங்களில்

சர்க்யூட் சமாச்சாரங்கள்

செயற்கை எச்சில் வடித்து

செயற்கை ரத்தச்சேற்றில்

முடியப்போகும்

நம் கூகிள் வயல்களை

உழுது கொண்டிருப்போம்

வாருங்கள்


___________________________________________________

வெள்ளி, 11 நவம்பர், 2022

வெற்றிசெல்வர்கள்

 வெற்றிசெல்வர்கள்

அன்புச்செல்வி_தியாகராஜன்

அவர்களுக்கு....


வெள்ளிப்பனி மலையின் 

வண்ணத்தில் ஒரு "கார்"

நெடுங்கனவுத் திட்டத்தின்

எண்ணத்தில் ஒரு "கார்"

அழகு அழகு அது பேரழகு!

அற்புதம் அருமை அக்"காரழகு"

உங்கள் இருவர்க்கும் அந்தத்தேர் அழகு.

உலகையே வென்று வலம் வருவான்

நம் அன்புச்செல்வன் சங்கரனும்.

திருவளர்ச்செல்வி சங்கவியும்

தீரம் மிக்க அவள் லட்சியத்தின்

வெற்றிப்பவனியை நடத்திடுவாள்.

வெள்ளி முளைத்த வானம் போல்

வெற்றி செழிக்க வலம் வருவீர்.

வாழ்க!வாழ்க!நீடூழி! 

யாவரும் அங்கு நீடூழி!

வாழ்வீர் வாழ்வீர் நீடூழி!


அன்புடன்

பரமசிவன்‍_கஸ்தூரி.

12.11.2022

_________________________________________________

வியாழன், 10 நவம்பர், 2022

தொலைந்து போயிற்று.

தொலைந்து போயிற்று.

_______________________________________

ருத்ரா



வாய்க்கால் வரப்போரம்

கலித்தொகையாய் ஒரு

"செய்யுள்"

செங்குருதி குருத்து விட்டு

கதிர் விரிக்கும் 

உயிர்ப்பின் பொன் சிரிப்பு

விடியல் இங்கு!

கழனிச்சேற்றில்

கெண்டைக்கால் பதிய‌

நாற்றுமுடியை 

நறுக் நறுக் என்று

வயலில் நட்டுக்கொண்டே

கண்டாங்கிச் சேலையோடு

கதை நூறு பேசுகின்றாய்

உன் பசும்புன்னகையை

சேற்றோடு சமைத்து 

பெருஞ்சோறு ஆக்குகின்றாய்.

மக்களின் பசியே அங்கு 

வாய் பிளந்து வாய் பிளந்து

கேட்டதாய் நினைத்து 

உழைப்பின் உன் மின்னல் துளிகளை

அல்லவா 

அங்கு இட்டுக்கொண்டு செல்கிறாய்!

காற்று தானே கேட்கட்டும் என்று

"க்ளுக்" சிரிப்பை தூவி விட்டாயே

முத்துப்பல் வரிசையிலே.

பெண்ணே!

இந்த தீபாவளிகளின் 

மொத்த மத்தாப்பு வெளிச்சமும் 

எங்கோ தொலைந்து போயிற்று

உன் சிரிப்பின் முன்!

________________________________________

புதன், 9 நவம்பர், 2022

முக "நூல்கள்"

 

இந்த ட்விட்டர்களை
கூட்டிப்பெருக்கி அள்ளினால்
நகராட்சி குப்பைத்தொட்டிகள்
தோறும்
மில்லியன் மில்லியன் மில்லியன்
லைக்குகள்.
முக "நூல்கள்" கொண்டு
திறந்து கிடக்கும்.
இதில்
நம் மானம் மறைக்கும்
ஆடை நெய்ய முடியுமா?

____________________________________________-
ருத்ரா

செவ்வாய், 8 நவம்பர், 2022

09.11.2022ல் உதிர்ந்த ஊசியிலைகள்.

 


09.11.2022ல்   உதிர்ந்த ஊசியிலைகள்.




ஜிக்கி

___________________________


அவருடைய‌

"எல்லாம் ஏசுவே"என்ற‌

பாடல் கேட்கும் போது

எனக்கு பத்து வயது

இருக்கலாம்.

இப்போது எனக்கு

வயது எண்பது.

நான் பிறந்த கல்லிடைக்குறிச்சி

ஊரின் மண்ணிலும் மணத்திலும்

அன்று விதையூன்றிய 

அவரது இசை

இன்னும் அமைதியை

அன்பு மொழியாய்

எனக்குள் கிளை 

பரப்பிக்கொண்டிருக்கிறது

என் நுரையீரலின் உயிர்க்காற்றாய்.

______________________________________

கவிஞர் ருத்ரா


பச்சை படர்ந்த தேசத்துள்

சிவப்புச்சூரியப் பழம்!

தோழர் லூலா பிரேசிலில்

அதிபராய் தேர்வு.

________________________________

ருத்ரா


இருப்பு எனும் 

கருப்பையிலிருது

இல்லை பிறந்தது.

இதுவே

ஆதியும் அந்தமும்.

________________________

ருத்ரா


எதிலிருந்து எது

வந்ததோ?

ஆனால் இந்த‌

கேள்வியே 

இப்போது கடவுள்.

____________________________

ருத்ரா


வி ஆர் + ஏ ஐ ல் 

மண்டைவீங்கிப்போன‌

ஒரு அப்பனுக்கும்

ஒரு ஆயிக்கும்

ஒரு குழந்தை பிறந்தது.

தாதி குழந்தையை குளிப்பாட்ட‌

எடுத்துப்போனாள்.

அப்போது தான் பார்த்தாள்

வீல் என்று அலறினாள்.

குழந்தை வி ஆர் ஹெட்செட்டோடு

பிறந்திருந்தது.

கழற்றிப்பார்த்தாள்.

கண் இல்லை.

விழி இல்லை.

குழி தான் இருந்தது.

வாய்த்துவாரம் வீல் வீல் என்று

அலறியது.

பால் வேண்டுமாம்.

அதுவும் 

சுவைக்க‌

வி ஆர் ப்ரெஸ்டில் 

வி ஆர் மில்க்.


________________________________________

ஒரு ஃப்யூச்சரிஸ்ட் கவிஞன்.


ஒரு நூறு ஆண்டுக்கு முன்

இந்த உலகம்

குருடாகவா இருந்தது?

மேடம் மேரி க்யூரியின் 

நினைவு நாள் இன்று.

__________________________________

ருத்ரா