வெள்ளி, 31 டிசம்பர், 2021

Happy New Year

 


Happy birthday to all of you!

with this NEW BORN moment 

of NEW YEAR!

Brimmed all with  new,

sans 

caste colour creed

and gods!

sans all those

fenses and flags

bounde at barbed-wires

with more blood stained

than those Rosy 

Dawns...

your own universes are

at your own

big bangs  and big crunches...

your own 

brane-cosmic designs

with your powerful 

Quantum Computing

with all your

"Fourier Transfoms"

and

all those "Slap-Sticks"

for a wonderful SHOW!

 Now let your 

that nearest candle

the SUN smile

at you with all its

ORANGE flares!

Happy New Year 

to

all and all and all and...

all of YOU!

_____________________________RUTHRAA


தமிழா!தமிழா!

 


தமிழா!தமிழா!

____________________________________________ருத்ரா

தமிழா!தமிழா!

இந்தக் குரல் உனக்கு கேட்கின்றதா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு

முன்னே

இமயங்களுக்கும் இமயமாக‌

உயர்ந்து நின்றவன் நீ.

இன்று வெறும் கூழாங்கற்களாய்

உருண்டு கொண்டிருக்கிறாய்.

உனக்கு எடுபிடியாய்

மந்திரம் சொல்ல வந்த இரைச்சல் மொழி

உன்னையே இரையாக்கிக்கொண்ட‌

அவலம் இன்னுமா

உனக்கு புரியவில்லை?

அறுபது வருஷம் என்றும்

தமிழ் வருஷப்பிறப்பு என்றும்

அறுபது உளறல் பெயர்களை

நாரதர் தந்த அழுக்கு மூட்டைகளாய்

முதுகில் இன்னமும் 

சுமந்து கொண்டிருக்கிறாயே.

பிலவ போய் சுபகிருது வருகிறது என்று

உன் மீது "ஜலம்"தெளித்து

ஸ்லோகம் சொல்லி 

புனிதப்படுத்த வருவார்களே

அந்த எச்சில் மொழி தெறித்தா

உன்னைப் புதுப்பித்துக்கொள்ளப் போகிறாய்?

"வள்ளுவன் தன்னை  உலகினுக்கே  தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!" என்ற

எட்டயபுரத்து எரிமலைக்கவிஞனின்

வீறு கொண்ட நெஞ்சத்தை

எங்கே தொலைத்தாய் சொல்?

சொல் தமிழா சொல்!

அறிவொளி காட்டி

அடர் இருள் நீக்கிய‌

நம் வள்ளுவப்பெருந்தகை

நற்பெயர் ஏந்திய‌

தமிழ்ப் புத்தாண்டே வருக வருக என‌

சொல் தமிழா சொல்!


_______________________________________________________



ஞாயிறு, 26 டிசம்பர், 2021

தடாகம்

 தடாகம்

____________________________________

ருத்ரா




நான் கடவுள்.

நீ மனிதன்.

உன்னைப்படைத்தவன் நான்.

உன் அறிவு

வெறும் தும்மல் எனக்கு.

கூகுள் என்பாய்.

ஞானங்களையெல்லாம்

சுருட்டிவைத்திருக்கிறேன் என்பாய்.

அது

என் கைரேகைகளின்

கோடி...கோடி..கோடி...

(எத்தனை கோடிகள்

உன் கம்ப்யூட்டர்களின் மூலம்

போட்டுக்கொள்ள முடியுமோ 

போட்டுக்கொள்)

கோடிகளில் ஒரு பங்கு கூட இல்லை.

உன் விஞ்ஞானம்

என் மூக்குப்பொடி டப்பியில்

ஒரு சிட்டிகை கூட இல்லை

அதிலும் நேனோ நேனோ ..நேனோ

துளி தான்.

ஒரு பிரபஞ்சத்தை நீ யோசித்தாலேயே

உனக்கு தலை சுற்றும்

அது போல் "மீண்டும்"

கோடி கோடி ..என்று அடுக்கிக்கொண்டே

போகும் அளவுக்குள்ள‌

பிரபஞ்சங்களைப் பற்றி 

நீ என்ன சொல்கிறாய்?

இப்போதாவது

என் விஸ்வரூபத்தை

உன்னால் பார்க்க முடியுமா

என்று யோசித்தாயா?

. . . . . . . . . . .

. . . . . . . . . .  .

அசையாத நீர்ப்பிம்பத்தை உடைய‌

அந்த தடாகத்தில்

என்னைப்பார்த்து தான்

இவ்வளவும் பிதற்றினேன்....

நான் சவைத்த சூயிங்க் கம்

தடாகத்தில் விழுந்து

வட்டமாய் பெரிய பெரிய வட்டமாய்

பிம்பங்கள் விரிந்தன?

அவ்வளவு பிரம்மாண்ட விடையை

இத்தனை சிறிய கேள்வியா

தெறிக்க விட்டது?

அந்த விஸ்வரூபம்

மனிதனா?

கடவுளா?

கேள்வியை எறிந்ததும் மனிதனே.

விடையை தெறிக்க விட்டதும் மனிதனே.

இதில்

கடவுள் எங்கிருந்து வந்தார்?

மனிதனின் பிம்பம்

கடவுளிடம். 

கடவுளின் பிம்பம் 

மனிதனிடம்.

தடாகமும் அலைகளும்

தம்முள் சொல்லிக்கொண்டன.


____________________________________________

26.12.2015 மீள்பதிவு

வெள்ளி, 24 டிசம்பர், 2021

இன்று உதித்தது.

 இன்று உதித்தது

___________________________________________"விடிவானவ‌ன்"



இன்று உதித்தது

ஒரு நற்செய்தி

இரண்டாயிரத்து 

இருபத்தியொன்று சொச்சம்

ஆண்டுகளுக்கு முன்பு

இதே பனித்துளிப்பூக்களுக்கிடையே

மாட்டுக்கொட்டிலில்

மகத்தான நம்பிக்கையை

மனிதனுக்கு ஊட்டுவதற்கு.

மனதுக்குள்

மனிதன் கட்டிவைத்திருந்த‌

"பரமண்டலத்தை"

அன்பின் 

அமைதியின்

இதயவடிவில் 

கையோடு கொண்டு வந்தது போல்

பொன்சுடர் புன்னகை ஏந்தி

வந்தது அந்த பிஞ்சுமுகம்.

துப்பாக்கித்தோட்டாக்களெல்லாம்

தோற்றுப் போகும்படி

அந்த இடங்களில் இனி

பூக்களே வந்து

நிரம்பிக்கொள்ளட்டும்.

மானிட நேயத்து மாணிக்க வருடல்களே

உலகமெலாம் கதிர் வீசட்டும்.

அடக்குவதற்கு வந்த அந்த‌

சிலுவைகள் இனி

சிதிலங்களாய் சிதறுண்டு போகட்டும்.

புதிய சுதந்திரத்தின்

"பிறப்பு" ஒலித்து இசைக்கட்டும்.

இனி

பாவங்களும் இல்லை.

அதன் சம்பளமாக‌

மரணங்களும்  இல்லை.

மனிதன் மரணத்தில் முற்றுப்புள்ளியாக‌

முடிந்து விடுவதற்காக‌

பிறப்பு ஏற்பதில்லை.

மனிதம் அன்பின் ஆற்றோட்டமாய்

என்றும் 

ஓடிக்கொண்டிருக்கவே

இன்றும்

பிறப்பு ஏந்தி நம்மிடையே

முகம் காட்டிச்சொல்கிறது

நற்செய்தியை..

அன்பே எல்லாம்.

அன்பினிலே தான்

எல்லாம் என்று. 

நமக்கு

அதுவே

எல்லாம் இன்பமயம்.

"மெர்ரி கிருஸ்த்மஸ்"


______________________________________

25.12.2021..         00‍.35 A M

சொன்னார்கள்.

 சொன்னார்கள்.

____________________________ருத்ரா



சொன்னார்கள்

அவர் அவதரித்த பின்

அதர்மங்கள் அழியும் என்று.

சொன்னார்கள்

அவர் தன்

அன்பினால் இந்த‌

ரத்தக்கறைகளைக்

கழுவினார் என்று.

சொன்னார்கள்

அவரின்

ஒரே வெளிச்சத்தால்

இருட்டுகள் யாவும் 

கரையும் என்று.

சொன்னார்கள்

அவர் போதனைகளால்

மக்களின்

மயக்கங்களெல்லாம்

மாயும் என்று.

சொன்னார்கள்

ஆகாயத்தைப்பார்த்து

அவர்கள் சொன்னதே

வேதம் என்று.

விசுவாசம் காட்டுங்கள் 

விசுவரூபம் காட்டுகிறேன் என்று.

என்னவெல்லாமோ

சொன்னார்கள்.

இன்னமும் இங்கு

ஒலிக்கின்றன‌

அழுகுரல்கள்.

இன்னமும் இங்கு

துடிக்கின்றன‌

கொலைப்பட்டு

மனித உயிர்கள்.

ஒளிந்து கொண்டிருக்கும்

கடவுளே

இது கண்ணாமூச்சி

விளையாட்டு உனக்கு.

நாங்கள் கழுமரங்களில் 

வதை பட்டுக்கொண்டா

உனக்கு இத்தனை 

வழிபாடுகளை செய்வது? 

நம்பிக்கை தேடி

ஒரு ஊசிமுனையில்

இந்த கனமான உலகத்தை

நிறுத்திக்கொண்டா

எங்கள் கீதங்களைப்

பாடிக்கொண்டே

இருக்கவேண்டும்?

ஆதிக்க மிருகங்களின்

கோரைப்பற்களில் 

இரையாகிக்கொண்டே

எங்கள் அவலங்களை

ஆரோகணம் அவரோகணம்

ஆக்கி

முழங்கிக்கொண்டிருக்கிறோமே!

பாழ் மண்டபத்து

வௌவ்வால்களாய்த்

தொங்கிக்கொண்டிருக்கிறோமே!

என்ன செய்வது?

எதைத்தேடுவது?

........

ஆம்!

அதைத்தான் 

நானும் கேட்கிறேன்.

என்ன செய்வது?

எதைத் தேடுவது?

எதை அறிவது?

நம்மோடு தொங்கிக்கொண்டிருக்கிற‌

அந்த கடவுள் தான் 

கேட்கிறார்.

காத்திருங்கள்

அவர் தேடித்தெளியும் வரை

அவர் அறிந்து முடிக்கும் வரை

வெறும்

தலை கீழ் வேதாளங்களாய்!


_______________________________________



 

புதன், 22 டிசம்பர், 2021

சிந்துபூந்துறை

 சிந்துபூந்துறை

_________________________________

ருத்ரா



ஒரு திருநெல்வேலிக்காரனின்

நினைவுக்குள்

பளிங்குப்படித்துறையாய்

நீண்டுகிடப்பது

சிந்து பூந்துறை.

கரைத் திட்டில் அந்த‌

பனங்குட்டி நிழல்களில்

இன்னும் சொட்டு சொட்டாய்

உதிர்ந்து கொண்டிருப்பது

புதுமைப்பித்தனின்

"கயிற்றரவு"

சிந்தனைகளின் 

எழுத்துச்சிதிலங்கள் தான்.

அந்த சிறுகதை 

பிளந்த உதடுகளில் வழியும்

சொல் ஒலிப்புகளில்

நியாய வைசேஷிக தத்துவங்கள்

கடவுளை

பனைமரத்து சில்லாட்டைகளில்

வடிகட்டித்தரும்

அந்த அரைகுறைப் புளிப்பு இனிப்பு

பதனீரை ஊறிஞ்சுவது போல‌

எழுதிக்காட்டியிருக்கிறார்

புதுமைப்பித்தன்.

சிந்துபூந்துறைக்கும் 

வண்ணாரப்பேட்டைக்கும் 

நடுவே படுத்துக்கொண்டு

ஊர்ந்து கொண்டிருக்கும்

தாமிரபரணியைக்கூட‌

தன் எழுத்தின் தீக்குச்சி கொண்டு

உரசி உரசி 

நெருப்பு பற்றவைத்து அதில் அவர் 

சமுதாயத்தின்

இனிப்பையும் கசப்பையும்

பரிமாறியிருக்கும் நுட்பமே

சிந்துபூந்துறையின் கருப்பை கிழிந்த‌

பனிக்குட உடைப்புகள் தான்.

அவர் எழுத்துக்களின் பிரசவம் 

ஒரு ஏழைக்குமாஸ்தா வீட்டு

கிழிந்த பாயில் 

அரங்கேறும் வெப்பத்தில்

ஒரு உயர்வான இலக்கியம்

குவா குவா என்ற 

ஒலிப்புகளோடு ஒரு

புதிய யுகத்தின் முகத்தை

பதிவு செய்யும்.

ஒவ்வொரு தடவையும் அந்த‌

சிந்துபூந்துறை ஆற்றில்

நான் முக்குளி போடும்போதெல்லாம்

ஏதோ ஒரு புதிய‌

முலாம் பூசி எழும் ஓர்மையை

தைத்துக்கொண்டு வருவதையும் 

உணர்கின்றேன்.

அந்த ஆற்றுக்குள்ளும் ஒரு

ஆற்றுப்படை 

ஊர்வலம் போவதை

நான் படித்து படித்து

அந்த பனங்காட்டு சலசலப்புகளின்

பனைச்சுவடிகளில்

பதிந்து கிடப்பதை பிய்த்துக்கொண்டு

வெளியேற முடியவில்லை.


________________________________________________





செவ்வாய், 21 டிசம்பர், 2021

என்... இ சி ஜி வரிகள்.

 என்... இ சி ஜி வரிகள்

__________________________________ருத்ரா



இதை விட்டு விட்டுப் போய்விட்டாய்.

சந்தர்ப்பம் கிடைத்தது என்று

தூக்கிக் கொண்டு வந்து விட்டேன்.

அந்த சிறிய நாய்க்குட்டி

வெல்வெட் உடம்பில்

சிலிர்த்துக்கொண்டே இருந்தது.

எத்தனை நாளாய் காத்திருந்தேன்.

திருட்டுப்பழி 

ஏதோ ஒரு காக்காவின் எச்சம் போல்

என் மீது விழுந்த போதும்

பரவாயில்லை என்று முகத்தைத்

துடைத்துக்கொண்டேன்.

இருப்பு கொள்ளவில்லை.

தொலைபேசியில் அதைப்பற்றி

உன்னிடம் விசாரித்தேன்.

முகத்தோடு முகம் வைத்து

முத்த மழை பொழிவேனே!

என் இதயத்துள் எல்லாம்

இனி வெறும் சஹாரா பாலைவனம் தான்

அதை நீ பார்த்தாயா

என்று கேட்டாய்.

நான் 

மனத்துள் சொல்லிக்கொண்டேன்.

இது தானே 

என் இதயம் அருகே இருந்து

இன்னொலிப்பிஞ்சுகள் மூலம்

உன்னை

என் மீது யாழ் வாசித்துக்கொண்டிருக்கிறது.

அப்படியா?

தெரியாது என்றேன்.

ஒரு வாரம் போய் விட்டது.

அந்த வெல்வெட் குரல் இழைகளில்

அவள் தான்

வழ வழத்து தன் உள்ளம் வருடினாள்.

ஒரு நாள் எனக்கே

அவள் படும் துயரம்

பிசைந்து பிசைந்து உருட்டித்தள்ளியது.

அவளை வியப்பில் ஆழ்த்த‌

திடீரென்று

அதை அவளிடம் கொண்டுபோய்

கொடுத்து விட்டேன்.

அவள் முகத்தில்

ஆயிரம் மத்தாப்பூக்களின் நந்தவனம்!

ஒன்றுமே சொல்லத்தோன்றவில்லை

அதை படக்கென்று

தன் ரவிக்கைக்குள் செருகிக்கொண்டாள்.

எனக்குத்தான்

அது குலைப்பது

இந்த வானத்தை முழுவதுமே

கிடுகிடுப்பது போல் இருந்தது.

உனக்கு கேட்கிறதா?

என் செல்லப்பொமரேனியனே!

என் கைகளில் வைத்து

எப்போதும் கொஞ்சிவிளையாட‌

உன்னைத்தானே என் இதயக்கார்ட்டூன் போல்

இந்த கைக்குட்டையில் 

பூத்தையல் போட்டு வைத்திருந்தேன்.

அவள் முகம் மகிழ்ச்சியில்

பூரித்துக்கொண்டே இருந்தது.

அவள் கைக்குட்டையை 

எடுத்து வைத்துக்கொண்டால்

மலர் போன்ற 

அவள் எண்ணத்துடிப்புகளை

விஸ்வரூபமாக்கி 

மீண்டும் அப்படியே

அதில் என் துடிப்புகளை மடித்து வைத்து

அதை என் அருகே

அமர்த்தி வைத்த 

"போன்ஸாய்" ஆக்கி

அதன் மின்னல் நிழல்களில்

ஆழ்ந்திருப்பேன் என்று தான் 

நினைத்திருந்தேன்.

இப்போதும் கேட்கிறது

காது மடல்களை

உடுக்கையாக்கி

சன்னக்குரலில் குலைக்கும்

அதன் அமுத ஒலிகள்..

அந்த தையல் கோட்டு ஓவியத்தின்

வரிகளில்

என் இ சி ஜி வரிகள்...


__________________________________________







"கல்யாண்ஜி"


திரு வண்ணதாசன் அவர்களுக்கு ..... ========================================= திரு வண்ணதாசன் அவர்களுக்கு "சாஹித்ய அகாடெமி விருது"அளிக்கப்பட்டதற்கு மிக மிக மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.

"கல்யாண்ஜி" என்ற பெயரில் அற்புதமான கவிதைகள் படைத்திருக்கிறார். அவர் கவிதைகளில் மெய்மறந்து ரசித்தவை எத்தனை எத்தனையோ உள்ளன. அவர் எழுத்துக்களை அசைபோட்டதே இக்கவிதை.


"கல்யாண்ஜி"
===========================================ருத்ரா


கவிதை என்றதும்
கல்யாண்ஜியைத் தாண்டி
போக முடியவில்லை.
யாரோ முகம் தெரியாத‌வ‌ள்
வைத்துச்சென்ற‌
ம‌ல்லிகைப்பூவை பார்த்து
தெருப்புழுதியைக்கூட‌
பிருந்தாவனம் ஆக்கிவிடுவார்
காத‌லின் நுண்ணிய‌
நிமிண்ட‌ல்க‌ளை
சில சொல் தூண்டில்க‌ளில்
துடிக்க‌ துடிக்க‌
பிடித்து விடுவார்.
ம‌ற்ற‌வ‌ர்க‌ளின்
சிற‌ந்த‌ க‌விதைக‌ளை
ச‌ட்ட‌ம் போட்டு மாட்ட‌லாம்.
இவ‌ர்
வெறும் ச‌ட்ட‌த்தை ம‌ட்டும்
மாட்டியிருப்பார்.
உள்ளே நுழைந்த‌வ‌ர்க‌ளே
உருகிக் க‌ரையும் க‌விதைக‌ள்.
யதார்த்த‌த்தை
பிச்சு பிச்சு எறிவார்.
சிந்திக்கிட‌ப்ப‌தோ
"பாரிஜாத‌ங்க‌ள்".
அவ‌ர் பெய‌ரில் ஒட்டியிருக்கும்
"ஜி"
ஏதோ ச‌ட்டையில் ஒட்டியிருக்கும்
பூச்சி அல்ல‌.
புதுக்க‌விதையின்
ஜீன்.
ஓடிப‌ஸ் காம்ப்ளெக்ஸில்
சிக்மெண்டு ஃப்ராய்டு
சித்திர‌ம் வ‌ரைவ‌து போல்
இந்த‌ ச‌முதாய‌ ந‌மைச்ச‌ல்க‌ளை
சொறிந்து விடும்
கிளி இற‌கு தைல‌ங்களின்
வார்த்தைப்பிழிய‌ல்க‌ளே
இவ‌ர் "ந‌வ‌ர‌க்கிழிச‌ல்க‌ள்".
த‌ட‌ம் புரியும் வ‌ரை
ஒத்த‌ட‌ம் சுக‌மான‌து.
தி.லி டவுன்
வாகையடி முக்கு
அல்வாக்கடை
இவையெல்லாம்
இவர் எழுத்துக்களை
வாசனை பிடித்துக்கொண்டே இருக்கும்.
அல்வாப்பொட்டல காகிதத்தின்
துணுக்கு எழுத்துக்கள் கூட
இவரைச்சொல்லியே
இனிக்கும்.
எழுத்துக்களே எழுத்துக்களுக்கு
அல்வா கொடுக்கும்
அவர் அக்குறும்பில்
"குறுக்குத்துறை"
முக்குளிப்புகள் ஏராளம்.

====================================

23 நவம்பர் 2012 ல் எழுதியது. 

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

"நான்"

 "நான்"

________________________________ருத்ரா



என் இருப்பை உணர‌

"நான்"என்ற சொல்லை

உரித்து உரித்துப்பார்த்தேன்.

எக்சிஸ்டென்ஷியலிசம் என்று

அதை அழகாய் 

சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

பாம்பு போல்

அறிவின் என் நீள நாக்கை வைத்து

அந்த சொல்லை

நக்கி நக்கிப் பார்த்தேன்.

இலக்கணம் அடையாளம் செய்தது

"தன்மை" என்று.

அந்த "நானை"என் எதிரே 

நிறுத்திய போது

"முன்னிலை" என்றது.

அதே "நானை" எங்கோ

தூரத்தில் வீசினேன்.

அது படர்ந்து பரந்து

படர்க்கை ஆகி

இந்த மண்ணை ருசித்தது.

மண்ணுக்குள்ளிருந்து

தலை நீட்டிய "நான்"களையெல்லாம்

வருடிக்கொண்டது.

மனிதன் நிற்கும் இடம்

இலக்கணக்குறிப்புக்குள்

அடைபட்ட போது

மனிதனின் உள்ளுக்குள்ளிருந்து

அடங்காத மனிதன்

ஆர்த்தெழுந்தான்.

சிந்தனை என்னும் அலைகளின்

பிழம்பில்

அவன் எங்கெங்கோ சென்றான்.

விண்வெளியின் அங்குலங்கள்

கோடி மோடி மைல்களின் கூட்டமாய்

ஒளியாண்டு என்னும் அலகுக்குள்

மிடையப்பட்ட போதும்

அவன் அறிவுச்செல்களின்

மின் துடிப்புகள்

தகவல் கடல்களின் திவலைகளில்

இழைந்து நின்றன.

கடவுள் என்ற சொல் அவன் மீது

எறியப்பட்ட போது

அவன் அறிவின் தேடல்

கொஞ்சம் காயம்பட்டது.

கொஞ்சம் மூளியாகிப்போனது.

விண்வெளிப்படலங்களில்

ஆற்றலின் அதிர்விழைகள்

ஆயிரம் ஆயிரம் முனையங்களாய்

முகம் காட்டின.

அதில் ஒரு முகமே எலக்ட்ரான்.

இப்போது

புரிந்து கொண்டான்

நான் 

நீ 

அவன் 

எல்லாமே 

இந்த துடிப்பில் தான்

எல்லாம் ஆகின.

ஒலிப்புகளை ஒலி பெருக்கி 

அதிருத்ர யக்ஞம்

என்று

கூப்பாடு போட்டுக்கொண்டார்கள்.

பெரும் தீயைத்தான்

ருத்ரன் என்றும்

சமகம் நமகம் என்றும்

ஸ்லோகங்களால் உருப்பெருக்கினார்கள்.

அது 

ஒரு பக்கம் அழிவு.

ஒரு பக்கம் ஆக்கம்.

இந்த விண்பிண்டத்தின்

மூன்று ஆற்றல்களை 

விஞ்ஞானிகள் ஒருமை எனும்

சிம்மெட்ரிச் சிமிழுக்குள்

அடைத்தார்கள்.

நான்கு ஆற்றல்களையும்

அதாவது ஈர்ப்பு விசையையும்

அடைத்து வைக்க 

சூப்பர் சிம்மெட்ரிக்குள்

விஞ்ஞானத்தின் விரல்களைக்கொண்டு

சூத்திரம் எழுதினார்கள்.

அது அண்டவெளிகளையும் 

தாண்டிச்சென்றது.

மொத்தமும் 

அதிலிருந்து பிதுங்கும் சவ்வுமே தான்

இந்த அண்டங்களின் 

அலகுகள்.

பல்க் அன்ட் ப்ரேன் என்று

சமன்பாடுகள் காட்டினார்கள்.

ஸ்ட்ரிங்க் தியரி எனும்

அதிர்வெளி இழையங்களே

இங்கு கோடி கோடி 

ஆற்றல் துகள்களாய்

விரிகின்றன.

தமிழில் உருவகமாய்

"பொன்னார் மேனியன் புலித்தோலை

அரைக்கு அசைத்தவன்"

என்றார்கள்.

ஹிக்ஸ் போசான்

எனும் விரிசடைத்தாண்டவன்

வீறு கொண்டு நிற்பதை

"அச்சங்களாக்கி"

அர்ச்சித்துக்கொண்டனர்.

நான் எனும் செதில்கள்

உதிரத்தொடங்கின.

அதிரத் தொடங்கின.

பக்தி உடுக்கையாகி ஒலித்தது.

அறிவு தூண்டில் விசியதில்

அகப்பட மறுத்ததும்

அகப்பட்டு அடங்கி வந்தது.

மனிதன் ஆண்டவன் ஆனான்.

ஆண்டவன் மனிதன் ஆனான்.

பொய்மை வர்ணங்கள்

மறைந்தே போயின.

மறைகள் எல்லாமும் 

மறைந்தே பொயின.


________________________________________

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்


இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

_______________________________________

சொற்கீரன்.



எத்தனை காலத்துக்குத் தான்

கடவுள் என்றும்

தங்கத்தேர்கள் என்றும்

இந்த‌

"லாலி பாப்"களை 

வைத்துக் கொண்டிருப்பீர்கள்?

கண்ணுக்குத்தெரியாத‌

நிகழ்வியல் காரணிகளைக்கூட‌

ப்ராபபலிடி எனும் 

கணிதக்கூறுகள் ஆக்கி

மனிதன்

அந்தக் "காலம்"என்ற

குறும்புக்காரனின்

காதுகளைத்திருகி

பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

அந்த இருட்டின் புள்ளியை விட்டு

நகரவே மறுப்பதற்கா

இத்தனைப்பிரகாசமாய்

மத்தாப்பு 

கொளுத்திக்கொண்டிருக்கிறீர்கள்?

அறிவுடைமை எல்லாம் உடைமை

என்ற ஒளியேந்தி

நமக்கு 

விழியேந்திக்கொடுத்தானே வள்ளுவன்!

அந்த மனிதனின் பிறந்த நாளைத்தாங்கிய‌

நம் "தமிழ்ப்புத்தாண்டு"

இதோ வருகிறது.

இப்போதாவது

விழிகளைத் திறவுங்கள்!

எச்சில் தெறிக்க‌

செவிகளை காயப்படுத்தும்

இரைச்சல் துண்டுகளை

விளங்கா சொற்களாய்

நம் மீது எறியும்

அந்த புது"வருஷத்துக்கு"

பல்லக்கு தூக்கி தூக்கி

மூச்சிறைத்தது போதும் தமிழர்களே.

வாழ்க வள்ளுவம்!

வாழ்க தமிழ்!


________________________________________




கீறல்கள்

  கீறல்கள்

_____________________________________

ருத்ரா


புலியின் பற்களும் நகமும்

கூட‌

மழுங்கிப்போகும்

உமிழப்பட்ட சில சொற்களின்

நச்சுக்கூர்மையில்.

அவை சிற்றுளிகள்

அன்பின் கோடுகளை

விரித்து

சிற்பமாக்கும் போது

அந்த சொற்கூட்டம்

உயர்ந்த நாகரிகத்தின் அடையாளம்.

சொற்களே!

நீங்களும் கூட கவனமாயிருங்கள்

உங்களை

பிரசவித்துக்கொள்ளும் போது.

காலப்பறவையின் எச்சங்களாய்

நீங்கள்

எழுத்துக்களில்

மிஞ்சி விட்ட போது

அதுவே

வரலாறாய் யுகங்களுக்குள்

உயிர் பாய்ச்சிப் பாய்கிறது.

"கல் பொரு சிறு நுரை"

என்று

சுவடிகளில் கீறினான்

ஒரு தமிழ்க்கவிஞன்.

கல்லும் ஒரு சிறு நுரையும்

அந்த கடற்கரையின்

தருணங்களில் மோதி மோதி

மௌனமாய் ரத்தம் வடித்தது

காதலை வெளிப்படுத்தி.


_______________________________________


வெள்ளி, 17 டிசம்பர், 2021

நம் விடியல்களே

 நம் விடியல்களே

_________________________________ருத்ரா



கடவுளும் மதமும்

கை கோர்த்து நமக்கு

கத கதப்பு ஊட்டுவது போல்

உணர்கின்றோம்.

குறிப்பாக‌

நாம் துன்பங்களில்

தோய்ந்திருக்கும் போது

இந்த உணர்வு தான்

எங்கிருந்தோ நீளுகின்ற கைகளில்

"காக்டெயில்" ஏந்தி

நம்மை வண்ணக்கனவுகளில்

வலி நீக்கும் மயிலிறகுகளாய்

வருடிக்கொடுக்கின்றன.

சமரசம் செய்து கொள்ளாத‌

கெட்டி தட்டிப்போன 

அறிவு அங்கே

பொய்மை வெப்பத்தில் 

ஆவியாகிப்போய் விடுகின்றது.

உணர்ச்சிகளின் "பேரிடர்களில்"

நம் தீவுகள்

மூழ்கிப்போகும் அபாயங்களே

நம் 

வாழ்க்கைப்பயணத்தின்

மைல் கற்களாய்

நம்மை இழுத்துக்கொண்டு ஓடுகின்றன.

சிந்திக்கும் நிழல் ஓரங்களில்

கொஞ்சம் இளைப்பாறுங்கள்.

இந்த அறிவின் மங்கல் மூட்டங்கள்

விலகி ஓடட்டும்.

வெளிச்சங்கள் 

நம் பசிக்கு உணவு ஆகட்டும்.

அப்போது

நம் இமை விளிம்பில்

படிந்திருப்பது

நம் விடியல்களே!


________________________________________________

அன்புள்ள திரு.சிவசங்கரசுப்ரமணியன்

 அன்புள்ள திரு.சிவசங்கரசுப்ரமணியன்

___________________________________________________



என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நம் கல்லூரி நாட்கள்

ஏதோ ஒரு இனம்புரியாத‌

வானத்தின் விடியல் விளிம்புகளை

பொன் வண்ண சிவப்புக்கோலத்தில்

பதியம் இட்டுத் தந்ததை 

மறக்க இயலுமோ?

சமுதாயம் ஒரு பெரும் ஊற்று

எழுச்சி கொள்ளும் கனவுகளுக்கு!

அதன் விலங்குகளை உடைக்கும்

சம்மட்டியும் அதில் தான் இருக்கிறது.

நுட்பமாய் ஒரு பாடம்

படிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

அருமை நண்பனே!

நீடு நீ வாழ்க!

எழுச்சியோடு உனக்கு என் வாழ்த்துக்கள்

என்றும் உரித்தாகுக!


அன்புடன்

இ பரமசிவன்.

16.12. 2021

அன்பிற்குரிய திரு முரளி அவர்களே

 அன்பிற்குரிய திரு முரளி அவர்களே

ஜே கே அவர்களை 

அவரது சிந்தனைப்படிவங்களை

நன்றாக செதுக்கிக்காட்டியிருக்கிறீர்கள்.

இறப்பு என்பது நினைவுச்சுமைகளை

களைந்து விடுவது மட்டுமே என்றும்

முக்தி ஆன்மா போன்ற பூச்சாண்டித்தனங்கள்

அற்றது என்றும்

அவர் கருதுவது ஒரு தெளிவான‌

சிந்தனை ஓட்டம் என்றும்

ஒரு பளிங்குப்புத்தகம் ஒன்றை

உங்கள் விரிவுரையில்

பக்கம் பக்கமாய் புரட்டிக்காண்பித்திருக்கிறீர்கள்.

மிக்க நன்றி.

மிக்க மகிழ்ச்சி.

இறப்பு பற்றி எண்ணுவது கூட‌

ஏதோ ஒரு இருட்டுக்கடை அல்வா சாப்பிடும்

இனிய நினைவு என்று

அவர் படிவங்களை வைத்து

காட்டியிருக்கிறீர்கள்.

இங்கு இரு சுமைகளை அழகாக காட்டுகிறீர்கள்,

சுமையை சுமக்காத ஒரு சுமை.

சுமையில் சுமக்கப்படும் ஒரு சுமை.

இரண்டுமே எண்ணங்கள் தான்.

இவற்றை எறிந்து விடுவதும்

மீண்டும் 

இன்னொன்றை தன் தோளில்

தூக்கிக்கொள்வதுமே

இறப்பு அல்லது இருப்பு ஆகிறது

என்று சிந்திப்பது

மிக மிக அருமை.

மீண்டும் நன்றி.


அன்புடன்

கவிஞர் ருத்ரா

ஜே கே எனும் ஜே கிருஷ்ணமூர்த்தி.

 ஜே கே எனும் ஜே கிருஷ்ணமூர்த்தி.

____________________________________________

ருத்ரா



ஜே கே ஒரு திறவுகோல்

ஆனால் 

அதை வைத்து ஒரு 

சிறிய ஜன்னலைக்கூட‌

திறக்க முடியாது

என்று அவரே எண்ணுகிறார்.

ஆம் 

இந்த "எண்ணுதல்கள்"தான் சிறை.

இதிலிருந்து விடுபட்டு

கூடவே ஒரு நீரோடை போல் 

வருகின்ற‌

அந்த கால இழையைப்பற்றிக்கொண்டு தான்

நம் "எண்ணுதல்"களை

உற்று நோக்க வேண்டும்.

இதில்

எந்த குருவும் இல்லை

எந்த உபதேசமும் இல்லை.

வேதங்கள் இல்லை

மதங்கள் இல்லை.

இவை நம்மை 

ஏற்கனவே வளைத்துக்கொள்ள‌

நம்மீது

அச்சிடப்பட்டவை.

இந்த எழுத்துக்களை களைந்த

ஒரு நிர்வாணத்தையே

எண்ணுதல் ஆக்கி

உற்று  நோக்கவேண்டும்.

அந்த தூய பளிங்கு பிம்பம்

மனித அன்பும் 

சமுதாய நேயமும் தான்.

இந்த எண்ணுதல்கள் உரிக்கப்பட்டு

நம் மடியிலேயே கிடக்கும் 

தருணங்களும் நேரலாம்.

நாம் நம்மில் எப்போதும்

மூழ்கிக்குளித்து

திளைக்கும் போது

அந்த திளைக்கும் நிகழ்வில்

ஒரு பொது மனிதன் 

உருவாகிறான்.

கணித மொழியில்

அவன் அவனை வைத்தே

உருவாக்கிய அப்ராக்ஸிமேஷன் ஆக‌

ஒரு பிரபஞ்ச மனிதனை நெருங்கியவனாக‌

அவன்

ஆகி விடுகிறான்.


_____________________________________




வியாழன், 16 டிசம்பர், 2021

வாழ்ந்தே தீருவோம்.

 வாழ்ந்தே தீருவோம்.

__________________________________ருத்ரா.


காசிக்குப் போ!

கர்மம் தொலைக்க‌

அல்லது

கர்மம் தேட.

இயங்குவது தானே

கர்மம்.

வாழ்க்கை எனும் இயக்கம்

என்பதே

சமுதாய ஓட்டத்தில்

இயைந்தது தான்.

சமுதாயத்தை பிய்த்து எடுத்துவிட்ட‌

மனிதம்

அல்லது மனிதம் தொலைத்த‌

சமுதாயம் 

இரண்டும் 

அந்த கங்கையில் எறியப்படும்

பிணம் தானோ?

நம் ஜனநாயகம் கூட‌

ஒரு கங்கைக்கரையில் தான்

நின்று கொண்டிருக்கிறது.

ஆறாக தெளிந்த சிந்தனையாக‌

ஓட வேண்டியதில்

ஏன் இத்தனை அறியாமைக்குப்பைகள்?

நாளை கணினி எனும்

எலிப்பொறிக்குள் நுழையும் முன்

வெறும் மசால் வடையை

கொறிக்க ஓடும் எலிகளாகவா

நாம் இன்னும் இருப்பது?

மானிட நீதியும் உரிமையுமே

நம் வெளிச்சங்கள்.

பட்டன் தட்டும் நம் கைவிரலில் தான்

நம் வாழ்க்கை மதம்

பொதிந்து கிடக்கிறது.

இருட்டை மட்டுமே 

பூசித்துக்கொண்டிருந்தால்

நம் கிழக்குகள்

ஒளியை இழந்த உழக்குகள்

எனும் பொய்மை வரலாற்றில்

புதையுண்டு போகும்.

நம் வாழ்க்கையை நாம்

உரிமையோடு

வாழ்ந்தே தீரவேண்டும்

என்னும்

இந்த மதத்தைத் தவிர 

எந்த மதமும் 

நமக்கு சம்மதம் இல்லை.


_____________________________________________




புதன், 15 டிசம்பர், 2021

ஓ மனிதா!

 https://www.msn.com/en-in/video/news/historic-human-made-object-touches-sun-for-first-time-know-about-nasa-s-solar-probe-mission/vi-AARQliZ?ocid=msedgntp


ஓ மனிதா!

அறிவின் வைரக்கிரீடம் 

சூட்டிக்கொண்ட உனது

இந்த வெற்றியின் முன்

அந்த சூரியன் 

நாணம் கொண்டு முகம்

புதைத்தது.

அந்த சூரியனை புராண புருஷனாய்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

ஸ்லோகக்காடுகளுக்குள்

புதையவிட்டு

தன் அறியாமையால்

அந்த நெருப்பையே

அழுகவிட்டுக்கொண்டிருந்த‌

நம் இருட்டு

இன்று இமை உரித்தது.

ஆம்.

நம் விண்கருவி இன்று

அந்த சூரியனின் புருவங்களுக்கு

மை தீட்டி 

அழகு பார்த்து

அந்த வெப்ப மூச்சின் 

நுண் துகளை விஞ்ஞானத்தின் அறிவில்

ருசி பார்த்து விட்டதே!

அந்த சூரியனுக்கு சொல்கிற‌

"போற்றிகள்"

ஓ! மனிதனே

உனக்கும் தான் கேட்டிருக்கும்.

இந்த பிரபஞ்சத்தின்

வாசலில் நீர் தெளித்து உன்

அறிவின் ரங்கோலி கோலம்

போட முனைந்த 

மானிட அறிவே

இனி நம் கோடி சூரியன்கள்.


___________________________________________

ருத்ரா

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

ரஜினிக்கு ஒரு அன்பான வாழ்த்து.

 ரஜினிக்கு  ஒரு அன்பான வாழ்த்து.

________________________________________ருத்ரா


உங்களுக்கு

எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

வரலாற்றில் சில திருப்பங்களை

செய்து காட்டுவது என்பது

உங்களுக்கு

சிகரெட்டுகளை வாயால் 

கேட்ச் செய்து காட்டும்

அபூர்வ கிரிக்கெட் விளையாட்டு 

என்பதை நாங்கள் அறிந்தோம்.

"அந்த ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ்"

விளையாட்டுக்கு நீங்கள்

சென்ற தேர்தலில்

வர மறுத்ததே அந்த இனிய திருப்பம்.

இருப்பினும்

தலைக்கு மேலே கள்ளச்சிறகுகள்

பட படத்துக்கொண்டிருப்பதை

நீங்கள் கவனம் வையுங்கள்.

நீங்கள் கன்னடத்தமிழர் என்றாலும்

அதிலும் ஒரு கனல்வீசும்

திராவிடம் கதிர் வீசிக்கொண்டிருப்பதை

நாங்கள் அறிவோம்.

காவிரி என்னும் வரப்புச்சண்டைகளுக்கு

அப்பாலும்

ஒரு வரலாற்றுச்சண்டைக்கு

நம் கரங்கள் கோர்த்துக்கொண்டிருக்க வேண்டும்

என்ற‌

ஒரு நுட்பம் 

உங்கள் புன்னகையில் சுடர்கிறது

என்பதை நாம் அறிவோம்.

நோபல் பரிசு பெற்ற நம் தேசிய கவிஞர்

"பஞ்சாப சிந்து குஜராத மராட்டா.."

என்று பாடிய பின்

அந்த "திராவிட"வில் தான்

நம் வருங்கால இந்தியா

அலையடித்துக்கொண்டிருக்கிறது

என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

"முல்லைப்பெரியாறுகள்" "மேக தாட்டு"க்கள்

எல்லாம் 

முட்டுக்கட்டைகளாக தெரிந்தாலும்

முற்றிய தமிழ் வீச்சின் திராவிடமே

இமயப்பனிச்சிகரம் வரையிலும்

சுவடு காட்டிகொண்டிருக்கிறது.

தமிழர்கள் தமிழுக்கு உயர்ந்து நின்ற போதும்

இந்திய மொழிகள் யாவற்றையும்

இணைத்தே அந்த 

"தொல் காப்பியத்துள்"

வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தம்மை நைந்து போகவிட்டுகொண்டிருந்தாலும்

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின்

மண் தான்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

என்று ஒலித்தது.

அந்த சிந்துவெளித்தமிழின்

வெளிச்சத்தை ஏந்தி இன்றும் சொல்கிறோம்.

"உலக மானிடம் மலர்க!

அதில்

உலகத்தமிழும் சுடர்க!"

இதே இதய வீச்சில்

உங்களை வாழ்த்துகிறோம்.

நூறாண்டு..நூறாண்டு 

நீவிர் வாழ்க!


________________________________________________________


நெஞ்சு பொறுக்குதில்லையே...

 நெஞ்சு பொறுக்குதில்லையே...

_____________________________________ருத்ரா



"அஞ்சி அஞ்சி சாவார்..இவர்

அஞ்சாத பொருள் இல்லை

அவனியிலே...."

அந்த எரிமலைக்கவிஞன் கூட‌

மனம் நொந்து அல்லவா

இவ்வரிகளைப் பாடியிருக்கிறான்.

அந்த வஞ்சனைப்பேய்கள்

சாதி மத வர்ணங்களைப்

பூசிக்கொண்டு  தானே

நம்மிடையே குத்தாட்டம் 

போட்டுக்கொண்டிருக்கின்றன.

கோடிக்கணக்கில் 

பணம் கொட்டி 

கோவில்கள் 

புத்துருவம் பெறுகின்றன.

அங்கே

இறைவன் 

எந்த தூண் மறைவில் 

ஒளிந்திருக்கிறான்?

எந்த துரும்புக்குள்

அலையடிக்கும்

பாற்கடலை பாய்விரித்து

படுத்துக்கொண்டிருக்கிறான்?

வேலைப்பாடும் கலை நேர்த்தியுமாய்

மிடையப்பட்ட‌

அந்த சலவைக்கல்லின்

எந்த சதைத்திரட்சிக்குள்

புடைத்துக்கொண்டிருக்கிறான்?

எங்கோ கிராமங்களில்

புழுக்களாய் நசுக்கப்படும்

சூத்திர ஜந்துக்களில்...

அல்லது

அதற்கு அடியிலும் 

ரத்தச்சேற்றில் 

குற்றுயிர் குலைஉயிராய்

முனகிக்கொண்டிருக்கும்

உயிர்ச்சிதலங்களில்...

மற்றும் 

பிற மதங்களில் ஒலிக்கும்

வழிபாடுகள்

பாதுகாப்பற்ற கூடங்களில்

அடித்து நொறுக்கப்படும் 

அவலங்களிலிருந்தெல்லாம் மீள..

நம் 

"ஜன கண மன"..

சுருதி சேர்த்துக்கொண்டிருப்பதை

இந்தப்பேய்கள் 

ஏன் விழுங்கிவிட ஆட்டம் போடுகின்றன?

இவர்களின் பிரம்மத்தின் குரல்

எங்கோ பாஷ்யங்களில்

ஒலி பரப்பிக்கொண்டிருப்பதைக்

கூட‌

அதில் கசியும் மனிதத்தின் ஒரே

ஆத்மாவைக்

கூட‌

கேட்க மறுக்கின்ற‌

அரக்கத்தனமான செவிகளை உடைய‌

ஒரு மூர்க்கம் அல்லவா

இங்கே மூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.

ஓ! பாரதி எனும் செந்தமிழ்ப்பிழம்பே!

"தனி ஒரு மனிதனுக்கு 

உணவு மட்டும் அல்ல‌

அதன் வாழ்வு உரிமையும் 

மறுக்கப்படும் என்றால்

அதன் தடைகளை

தட்டி நொறுக்கத்தயங்காதே"

என்று

நீ கோடு காட்டிவிட்டுப்போயிருக்கிறாய்.

அந்த இமய உச்சியில் நின்று

முழங்குகிறோம்!

வாழ்க மக்கள் ஜனநாயகம்!

வெல்க மக்கள் ஜனநாயகம்!


__________________________________________








சனி, 11 டிசம்பர், 2021

"எல்லோரும் நல்லவரே"

"எல்லோரும் நல்லவரே"

_________________________________ருத்ரா



அந்தக்காலத்தில்

"கிருஷ்ண பக்தி"யை

அந்த திரைப்படத்தில்

சொல்லடி பட்டு கல்லடி பட்டு

நைந்து நைந்து உருகிப்பாடிய‌

அந்த பெருங்கலைஞர்

பி யு சின்னப்பா அவர்களின்

குரல் வெள்ளத்தை

எவராலும் மறக்க முடியாது.

ஆனால் இன்றோ

ஒரு கிருஷ்ணனை 

இன்னொரு கோவிலுக்குள் நுழைத்துக்

குடம் குடமாய்

வெறித்தீயைக் கொண்டு குளிப்பாட்டி

இந்த கிருஷ்ணனை 

குளிர்விக்கப் போகிறார்களாமே!

அரசியல் சாசனத்தை

அந்த அரசியல் சாசனத்தின்

சந்து பொந்து ஷரத்துக்களைக்கொண்டே

சுக்கு நூறாய் கிழித்தெறிந்து விட்டு

இந்த மகாபாரதத்தை

கொலை பாதகம் எனும்

பளிங்கு கற்களாலும் 

சலவைக்கற்களாலும்

அடுக்கி அடுக்கி வெறும்

கோவில்களின் வறட்டுத்தூண்களில்

தூக்கி நிறுத்தப்போகிறார்களாமே!

உயிர்ப்பு நிறைந்த கோவில்களுக்குள்

மானிட நேயம் தானே

மயில் இறகுக்கிரீடமும் 

புல்லாங்குழலும் ஏந்தி

அமைதி கீதம் மூலம் 

கிருஷ்ண கானத்தை 

எதிரொலிக்க முடியும்?

கிருஷ்ணம் எனும் 

இந்த "கறுப்பு மனிதர்களின்"

உள்ளக்கிடக்கையை

அந்த வெள்ளை "எஜமானர்களா"

அடித்து நொறுக்க ஆவேசப்படுவது?

மனிதர்களை சாதி மத வர்ணம் பூசி

ஆதிக்க மிருகங்கள் தன் காலடியில்

போட்டு

மிதித்து நசுக்கிக்கூழாக்கவா

இந்த "சப்பளாக்கட்டைகள்"

இரைச்சல் போடுகின்றன?

"எல்லோரும் நல்லவரே"

என்ற அந்த மனிதத்தின் 

பூங்குரல் புகைந்து போகவோ

இத்தனை ஆர்ப்பாட்டங்கள்?

"ஹரே ராம! ஹரே கிருஷ்ண!

என்ற கீதங்களுக்குள்

இந்த கசாப்புக்கத்தியை 

செருகியவர்கள் 

யார்?யார்?யார்?.

கேள்விக்கணைகள்

சல்லடையாய்த் துளைக்க...

அந்த பாடல் வரி

நம் பாரதத்தின் குருத்தெலும்பிலும்

சிலிர்த்து நிற்கிறதே!

"எல்லோரும் நல்லவரே"


____________________________________________

 


சனி, 4 டிசம்பர், 2021

புளு சட்டை மாறன்

 புளு சட்டை மாறன்

‍‍‍___________________________ருத்ரா


இவர் படத்தில்

பிணம் ஒரு உருவகம்.

மனிதன் 

பிறக்கும்போதே

பிணமாய் பிறந்து

பிணமாய் வாழ்ந்து

அவன் இறுதியில்

மனிதம் பற்றி நினைக்கையில்

மீண்டும் பிணமாகவே கிடந்து

பிணமாய் மறைகிறான்.

அது வரைக்கும் 

அவனைச்சுற்றி சுற்றி வரும்

மொழி 

இனம் 

சாதி மதம்

அரசியல்

லாபம்

பொருளாதாரம்

மற்றும் 

இந்த நடைப்பிண வாழ்க்கையின்

கலைடோஸ் வண்ணத்திருப்பங்களே

இங்கு

கும்மி அடித்து

கும்மாளம் போடுகின்றன.

ஒட்டு மொத்தமாய்

அரசியலின் உள்கிடக்கை

அடித்து துவைக்கப்பட்டு

அலசப்படுகின்றன.

ஒரு ஆழ்ந்த சமூகசிந்தனையாளனுக்கு

தேசியம் என்பதே

தேசிய விரோதம்.

நேசனலிசத்தின் எதிர்மறை

இன்டர்நேசனிலிசம்.

இந்த எதிர்மறையில் கூட 

முதன் முதலில் 

ஒரு நேர்முறையின் வீச்சு தந்தவன்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

என்றவன் தானே.

தேசியம் என்ற சொல்லில்

வெறிகிளப்பும் போர் முரசுகள்

லட்சக்கணக்காய் மனிதர்கள்

கொல்லப்பட்டு பிணங்களாய் குவியும்

அவலங்கள்.

இந்த கொலைத்தீப்பந்தங்களில்

குளிர்காயும்

தன்னலப்பேய்கள்.

இதை வைத்துக்கட்டப்படும்

அரசியல் பொருளாதாரக்

கோட்டை கொத்தளங்கள்..

இறுதியாய் இதனடியில்

நசுங்கிப்போகும் 

"மனிதம்"...

இதுவே தேசியத்தை

பச்சைக்குத்திக்கொண்டு

தேசவிரோதம் 

ஆகிப்போகிறது.

முகமூடிகளை மாற்றி மாற்றிப்

போட்டுக்கொண்டு

கடவுளும் சைத்தானும்

எதிர் எதிராய் உட்கார்ந்து

சொக்கட்டான் ஆடும் 

விளையாட்டு தான்

இங்கே தத்துவங்கள்.

இவர்கள் உட்கார்ந்து

விளையாடும் மேடை....

மனிதம் கல்லறையில் 

காணாமல் போய்விடும்

இடமே அது.

புளு சட்டை மாறன்

அப்பட்டமாய் தோலுரிந்து கிடக்கும்

சமூக அவலங்களின் 

ஒரு நீலப்படத்தை

மிக மிக காரமான 

சிவப்பு மிளகாயாக  தந்திருக்கிறார்.

உறைக்குமா இது

ஒரு விடியலுக்கு?


_____________________________________

வெள்ளி, 3 டிசம்பர், 2021

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


____________________________ருத்ரா




மனிதா 


ஒரு நொடி போதும் உனக்கு


உன் சூழ்நிலைகளை


சுருட்டி


உன் பாக்கெட்டில் வைத்துக்கொள்ள.


உன் சிந்தனைப் பதிவில்


தடம் ஏற்படுத்திக்கொள்ள.


நீ 


என்றாவது எண்ணிப்பார்த்தது


உண்டா?


உன்னோடு 


உன் அருகே


இருப்பவர்கள்


மானிட நேசம் கொண்டவர்களா?


என்று.


இன்னும்


விலங்கியல் மிச்சங்களின்


விலங்கு மாட்டிக்கொண்டவர்களா?


என்று.


அப்படியென்றால்


நீயும் அந்த வட்டத்துள்


ஒடுங்கிக்கொண்டாயா?


என்று.


இந்த கேள்விகள் தான்


நம் திறவுகோல்கள்.


இவை நமக்கு இல்லாமல் இருப்பதே


வெளிச்சம் படாமல் நாம்


இருள் பூசி நிற்பதற்கு


காரணம்.


நாம் மழுங்கடிப்பட்டுக்கிடக்கிறோம்.


பலப்பல நூற்றாண்டுகள் 


கழிந்த பின்னும்


நாம் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை


நம் காலத்தை தொலைத்து விட்டோம் 


என்பதை.


நம் மனிதமே நம்மை விட்டு


பிய்ந்து கிடப்பதை


நாம் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை.


நாம் விழித்துக்கொள்ள 


இமைகள் திறக்கும் போதெல்லாம்


போதை நனைக்கும் அருவிகளில்


சொர்க்கக் கனவுகளில்


துவண்டு போய் விடுகிறோம்.


என் கத்தி


இன்னொருவன் முதுகில்...


என் முதுகில்


இன்னொருவன் கத்தி...


இந்த நச்சுச்சங்கிலியை


பின்னிவைத்த சாதி ஏற்பாடுகளில்


மனிதம் தன் சவப்பெட்டியை


தானே சுமந்து செல்கிறது.


கடவுள் முகம் பார்க்கும்போது


அந்த கண்ணாடியில்


சைத்தான் தெரிகிறது.


சைத்தான் 


அந்தக்கண்ணாடியில்


கடவுளாய் 


ரூபம் காட்டுகிறார்.


உடன் பயணிக்கும்


என் இனிய நண்பனே!


அடித்தட்டில் நசுங்கிக்கிடக்கிறவர்களின்


பிதுங்கிய ஒலிக்கீற்றுகளில்


ரத்தம் பீறிடும் தருணங்களே


நம் காலச்சுவட்டின் கன பரிமாணங்கள்.


போதும்!


வில் அம்பு ஏந்திய அந்த ராமர்களை


அங்கே எங்கேயாவது ஒளித்து வையுங்கள்.


உங்கள் அழுக்குகள் அகற்றப்பட‌


"சலவைக்கல்" கட்டிடம் எழுப்புங்கள்.


வர்ணங்களை கொண்டு வதம் செய்யும்


சாஸ்திரங்களை அப்புறப்படுத்துங்கள்.


மனிதமுகம் யாவும் அன்பின் ரோஜா தானே.


சமூக ஒருமை சிந்தும் மகரந்தங்களில்


அந்த ரோஜா புன்முறுவல் செய்யட்டும்.


அந்த சமாதானபூச்செண்டு போதும் இனி.


எதற்கு இன்னும் அந்த ஆயுதக்கிடங்குகள்?


இனி எதற்கு


சாதிபடிமங்களில் வெறியைக்கொண்டு


குளிப்பாட்டும் கும்பமேளாக்கள்?


எல்லாம் தொலையுங்கள்!


பளிங்கு வானமாய் துடைத்து வையுங்கள்.


மானிடத்தின் விடியலுக்கு


அந்த கனத்த சன்னல்களை


திறந்து வையுங்கள்!


_________________________________________

வியாழன், 2 டிசம்பர், 2021

"மாநாடு".

 "மாநாடு"

_______________________________ருத்ரா


இப்படத்தின் கதாநாயகன் 

சிம்புவா?

கதையா?

இயக்குநரா?

தயாரிப்பாளரா?

பட்டியலை நீட்டிக்கொண்டே

போகலாம்.

இதில் உள்ளே

நீறு பூத்த நெருப்பாய் இருந்து

உமிழ்ந்த 

நம் சுதந்திர வரலாற்றுச்

சீற்றத்தின் லாவாவில்

இழையோடிய சிவப்புக்குள்

இருந்த பச்சையான உண்மையே

இப்படத்தின் கதாநாயகன்.

இந்திய தேசத்தின் எழுச்சி வடிவம்

பிளவு இல்லாதது.

பிசிறு இல்லாதது.

மதங்களின் அழுக்குகள் முகம் காட்டாத‌

காட்டாற்று வெள்ளம் அது.

சிந்திய ரத்தம்

இந்து இஸ்லாம் 

என்ற வேறுப்பாட்டால்

ஆபாசம் அடைந்ததில்லை.

ஆனால்

நம் விடுதலை விடியலின்

விளிம்பில் எப்படி

அந்த கீறல் 

மறுபடியும் ரத்தம் சிந்திய‌

விரிசல் ஆனது?

அந்த கோர விரல்களும் அதன்

கூரிய நகங்களும்

இன்னும் 

இன்றும்

இந்த காவல் கோட்டங்களில்

ஏதோ ஒரு பசிக்காக‌

கூர் தீட்டிக்கொண்டிருக்கிறதே.

ஏன் அந்த மரண மூட்டம்

நம் ஜனநாயக உயிர்ப்பின் கழுத்தில்

காலை வைத்து மிதித்துக்கொண்டிருக்கிறது?

"ராம் அவுர் ரஹிம்" ஆக 

இழைந்து வெள்ளைத்துப்பாக்கிகளை

அடித்து நொறுக்கிய‌

கரங்களிடையே

"ராம் யா ரஹிம்"

என்ற வேற்றுமை வெறி

எப்படி ஊடுருவியது?

இடிக்கப்பட்ட மசூதியின் சிதலங்களும்

புதிய கோவிலின் பளிங்குக்கற்களும்

அருகருகே 

நம் சின்னங்களாக..

நம் வரலாற்று ஏடுகளின் மீதுள்ள‌

தூசிகளாக...

"மனிதம்" மொத்தமாய்

கல்லறைக்குள் அடங்கிப்போய்விடுகிற‌

ஒரு அதர்மத்தின் பிம்பமாக...

எச்சமாகிக்கிடக்கிறோம்.

இது தீயாய் நம்மை சுட்டுபொசுக்கும்

வெப்பமே

இந்த "மாநாடு".


________________________________________








செவ்வாய், 30 நவம்பர், 2021

குரல்கள்

 குரல்கள்

____________________________ருத்ரா


ஆண்டவனே!

எங்கள் கூக்குரல்கள்

உனக்கு எட்டாத உயரத்தில்

நீ

ஊஞ்சல் ஆடுகிறாய்.

எங்கள் சிந்தனையில் 

நீ நிழலாடுவது மட்டுமே

மட்டுமே தெரிகிறது.

எங்களுக்கு விருப்பமான‌

புன்முறுவல்கள் பூத்த‌

ஒரு முகத்தை உன் மீது

மாட்டி வைத்து 

உன்னைத் தினம் தினம்

குளிப்பாட்டுகிறோம்

எங்கள் ஆராதனைகளால்.

எங்களுக்கு நீ புரிந்து கொள்ளும்

மொழியில் 

இல்லாவிட்டாலும்

உன்னை எங்கள் இதயத்துடிப்புகளில்

ஏந்தி

ஒலிகளை உன் மீது தூவுகிறோம்.

எவரோ 

ஏதோ 

சொன்னதை 

உன் மீது முழங்க வைக்கிறோம்.

"மனிதா....நிறுத்து.

உன் குப்பைகளை என் மீது

கொட்டுவதை நிறுத்து.

பன்றிகள் உறுமுவதும்

மாடுகள் கத்துவதும்

நாய்கள் குரைப்பதும்

ஏன்

இந்த சில்வண்டுகள்

ரீங்காரம் செய்வதும் கூட‌

எனக்கு புரிகிறது.

நீ ஒலிப்பது

எனக்கு புரியவில்லை.

உன் கூச்சல்களில்

சவுக்கடிகள் கேட்கின்றன.

ரத்த விளாறுகளில் தோல் உரிந்து

கிழிந்த இதயங்கள்

முனகுவதே கேட்கிறது.

மிதிக்கின்ற கால்களின் அடியில் 

குரல்வளைப் பிஞ்சுகளின்

நசுங்கிய குரல்கள் கேட்கின்றன.

நீ வீசியெறியும் சொற்கள் எல்லாம்

பாறாங்கற்களாய்

என்னையே 

கூழாக்கி

கூளமாக்கி..."

"ஐயோ...போதும் இறைவா!

புரிந்து கொண்டோம்

உன்னை நாங்கள் துன்புறுத்துவதை.

இந்தக்கல்லையும் மண்ணையும்

மதம்பிடிக்க வைத்து

நாங்கள் வெறியாட்டம் ஆடுவதை.

கடவுள் என்பது

அந்த அடிவானத்துக் கரை அல்ல.

அதற்கு நீந்த நினைக்கும்

சிந்தனை மட்டுமே."


____________________________________

ஞாயிறு, 28 நவம்பர், 2021

ஜனநாயகம் வெல்லட்டும்

 ஜனநாயகம் வெல்லட்டும்

_________________________________ருத்ரா


ஜனநாயகம் 

ரோஜாவா?

தாமரையா?

அந்த இரண்டும் 

இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்

அது இனிப்பான‌

ஒரு ஆப்பிள்.

அந்த ஆப்பிள்களை

கொள்(ளை)முதல் செய்ய வந்த‌

அரசுவின் செல்லப்பிள்ளைகளாய்

கார்ப்பரேட்டின் சூட் கோட்டு அவதாரத்தில்

இருந்து கொண்டு

கொடூர ரத்த உறிஞ்சிகளாய் 

வந்து அச்சம் ஊட்டியதில்

விவசாயிகள் எனும் சிங்கங்கள்

சிலிர்த்து எழுந்தன.

"அதன் கர்ஜனை அலைகள்

நாளை 

அந்த கணினிப்பட்டன்களில்

அமர்ந்திருக்கும் 

நம் நாற்காலிகளின் கால்களை

முறித்துப்போட்டுவிட்டால் என்ன செய்வது?"

இது ஏற்படுத்திய அந்த 

நரம்பு நடுக்கமே

வேளாண் சட்டங்களின் வாபஸ் அரங்கேற்றம்.

விவசாயப்போராளிகளின்

உறுதியான நோக்கங்கள்

அந்த ஆப்பிள் கனிகளை

ஜனநாயகம் காக்கும் கேடயமாய்

பரிணாமம் அடையச்செய்து விட்டன.

இந்த சாணக்கியர்களோ

எம் எஸ் பி எனும் 

உயிர்க்கவசத்தை தந்திரமாய்

உடைத்து நொறுக்கவே

இத்தனை நாடகமும் நடத்தினர்.

பேச்சு வார்த்தை என்கிற‌

ரப்பர் வடம்பிடித்து

அந்த "பொம்மைத்தேரை" இழுப்பதாய்

பாவனைகள் காட்டினர்.

எத்தனை பழிச்சொற்களை

கூர் தீட்டிய அம்புகளாக்கி எய்தனர்.

தன் உயிரை உழைப்பை

வேர்வைச் சேறாக்கி அதில் இந்த‌

தேசத்தின் சோறாக்கி தந்தவர்களை

தேசவிரோதிகள் எனத்தூற்றிய‌

அந்த வன்முறைச்சொல்லாடலை

தூள் தூளாக்கினார்களே!

அவர்களின் 

கலப்பைகளே இங்கு

கனரக பீரங்கிகள்!

கோடிக்கணக்கான கிசான்கள் 

அப்பாவித்தனமாய் அந்த முண்டாசுகளில்

இருக்கட்டும்

நம் "ராம பாணத்தை"வைத்து

இவர்களை அந்த கார்பரேட்டுகளின்

அடிமைகள் ஆக்கி விடலாம்

என்று தானே அந்த‌

பண்ணைச்சட்டங்கள்

அவசர அவசரமாய் "குரல்"வாக்கெடுப்பில்

பிரசவிக்கப்பட்டன.

ஆனால் அந்த அரைகுறைப்பிரசவத்தில்

குரல்வளை நெறிக்கப்பட்டது

நம் ஜனநாயகம் அல்லவா.

அந்த அழுக்கு முண்டாசுகளின்

உள் சீற்றம் காட்டிய சுநாமியில்

இவர்கள் கட்டி வைத்த‌

"அரக்கு" மாளிகைகள் அடித்துச்செல்லப்பட்டனவே.

எழுநூறு உயிர்களை ஆகுதியாக்கி

வளர்த்த இந்த அக்கினி உழவர்களின்

வேள்விகளில்

அவர்களின் தந்திர சனாதன வேள்விகள்

எல்லாம் சாம்பல் ஆகட்டும்.

ஜனநாயகத்தின் அறுவடையை

அர்த்தம் உள்ளதாக ஆக்கிய‌

ஏர் உழவர்கள் இந்த‌

போர் உழவர்கள்!

ஒற்றுமையே ஜனநாயகம்.

இந்த‌

ஜனநாயகமே என்றும்

வெல்லட்டும்.


______________________________________

28.11.2021

வெள்ளி, 26 நவம்பர், 2021

வாருங்கள் ஓட்டாளர்களே!

 வாருங்கள் ஓட்டாளர்களே!

________________________________ருத்ரா.


ஓட்டாளர்களே!

இந்திய ஜனநாயகம் 

அதன் தேசியக்கொடியை

மானிட சமநீதி

மானிட நேயம்

சமூக உணர்வு

இவற்றில் பின்னி சுற்றிய‌

ஒரு "தொப்பூள் கொடியில்" தான்

பதியம் இட்டிருக்கிறது.

இதை மறைக்கும் 

மாய மந்திர மூட்டங்களாய்

மத முகமூடி மாட்டிக்கொண்டு

வரும் 

பாரத மாதாவிடம் கேளுங்கள்.

தாயே உன் புத்திரர்கள்

ஒரே வார்ப்பில் உதித்தவர்கள் தானே.

அவர்களுக்கு 

வேற்றுமை வர்ணம் பூசும்

சதிகளின் சாஸ்திரங்களை

உருவாக்கியவர்கள் கையிலா

இந்த நாட்டைத்தருவது?

இந்தக்கேள்விக்கு பதிலாய்

இப்போது அந்த தாயின் கண்களில்

கண்ணீர் வெள்ளம்.

பாரத புத்திரர்களே!

இந்த "பேரிடர்"களை நீங்கள்

கடப்பதற்கு

ஒற்றுமையோடு

ஒரு "நோவா"கப்பல் கட்டுங்கள்.

அதில் இந்த நாட்டு

ஓட்டாளர்களின் சிந்தனைகள்

ஒரு முகமாய் குவிக்கப்படவேண்டும்.

சீறிப்பாயும் ஆதிக்கவெறி பிடித்த‌

அந்த அலைகளை அடக்கவேண்டும்.

அந்த அலைகளை கடக்கவேண்டும்.

அந்த அலைகள மிதித்து

அதன் மீது நடக்கவேண்டும்.

அதோ

மதநல்லிணக்கத்தை அடையாளம் 

காட்டும் புறாக்கள்

சிறகு விரித்து உங்களை

வரவேற்கட்டும்.

பளிங்குகற்கள் அடுக்கி

இவர்கள் கோவில் எழுப்பலாம்.

ஆனால்

அதன் இருட்டுமூலைகளில் தான்

இவர்கள் வௌவ்வால்கள்

பசியோடு 

உங்கள் மீது பாயக்காத்திருக்கின்றன.

அறிவு வெளிச்சம் ஏந்திப் புறப்படுங்கள்.

கணினியின் 

படுகுழியில் விழுவதற்கு முன்

உங்கள் சமதர்மப்பார்வையின்

அல்காரிதத்தை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். 

உங்கள் புதிய யுகத்தின்

"பாஸ் வர்டை" தொலைத்து விடாதீர்கள்.

மானிடத்துச் சமூகநீதியின்

சமத்துவமான சிந்தனைக்கீற்றுகளே

அந்த "பாஸ் வர்ட்".

இது வரை

தோற்பதற்காக ஜெயித்தது போதும்.

இம்முறை

ஜெயிப்பதற்காகவே ஜெயித்துக்காட்டுவோம்

வாருங்கள் ஓட்டாளர்களே!


_____________________________________________________







வியாழன், 25 நவம்பர், 2021

குலை குலையாய் முந்திரிக்காய்..

 குலை குலையாய் முந்திரிக்காய்..

___________________________________________ருத்ரா


"குலை குலையாய் முந்திரிக்காய்

நரியே நரியே சுற்றிவா...."

எல்லாவற்றையும் விழுங்கலாம்.

நரியே நரியே ஓடிவா!


இந்த சாணக்கியர்களின்

ஆட்டம் துவங்கி விட்டது.

மக்கள் என்றால் வெறும்

கணிப்பொறிகளில் விழும் குப்பைகள்

தானே!

கடவுள் புராணங்களோடு

மதவெறித் தீ மூட்டி

அதையே தேசியம் ஆக்கி

ஆயிரம் கூச்சல்கள் போடலாம்.

அவ்வளவும் நமக்கு ஓட்டுக்கரன்சிகள்.

அதை வைத்து

கீரி பாம்பு வித்தை காட்டி

நம் ஜனநாயக முற்றங்களில்

மசோதாக்குப்பைகளை

மனம் போனபடி வாரி இறைக்கலாம்.

அவை சட்டங்கள் எனும்

பாறாங்கல்லாய் இந்த ஓட்டுப்புழுக்களை

நசுக்கி கூழாக்கலாம்.

அப்புறம் ஓட்டுக்கரன்சிகள் விழுவதில்

தடங்கல் ஏற்பட்டால்

நாம் போட்ட அந்த மசோதாக்குப்பைகளை

மீண்டும் அகற்றி

"தூய்மை நாயகன்"களாய்

வலம் வரலாம்.

நாம் எதற்கும் அஞ்சவேண்டாம்.

நம் கையில் கண்ணுக்குத்தெரியாத‌

அந்த சூலமும் வில் அம்பும் இருக்கிறது.

ரத்தம் வழிய வழிய

அதன் மிரட்டல் பிம்பங்களும் இருக்கின்றன.

அந்த "மாட்டுச்சாணத்தை விடவா"

வலிமையான பீரங்கிக்குண்டுகள்

நமக்கு வேண்டும்?

நான்கு வர்ண புகை மூட்டமும்

இருக்கிறது.

அப்புறம் என்ன?

"குலை குலையா முந்திரிக்காய்"

விளையாட்டு தான்.


___________________________________________

செவ்வாய், 23 நவம்பர், 2021

குவாண்டம் அறிவோம்‍‍ (1)

 

குவாண்டம் அறிவோம்‍‍  (1)

____________________________________________________________ருத்ரா இ பரமசிவன்


குவண்டம் என்பது அறியவில் பயணத்தின் அழகிய மைல்கல்.மனித அறிவு ஆற்றல் அல்லது அறியும் ஆற்றலின்

நுண்மை அடுக்குகளை வெளிக்கொணர்வதே குவாண்டம் தான்.அறிவுத்திரட்சியை இரு கூறாய் பிரிக்கலாம்.

அதில் நாம் அறிந்ததும் அறியாததும் அல்லது அறிய முயல்வதுமான ஒரு குழம்பியம் அல்லது கலம்பகம் இருக்கிறது.நாம் அதை அறிந்துவிட்டோமா?இல்லையா?என்ற கேள்வி ஏதாவது ஒன்றைப்பற்றி நாம் குறிப்பிடும் இடத்தில் "அதுவா? அது இல்லையா?"என்ற கேள்வியைப்போன்றது தான்.இந்த உறுதியின்மையே (அன்செர்டனிடி)

தான் குவாண்ட இயற்பியலின் உள் சாறு எனலாம்.அதனால் தான் இதைக்குழம்பியம் என்று குறிப்பிட்டேன்.இதை ஆங்கிலத்தில் ப்ராபபிலிடி என்று குறிப்பிடுகிறார்கள்.ஆனால் குவாண்டம் என்னும் போது அதன் மொழி ஆங்கிலம் அல்ல என்பது உண்மை யெனினும் "பராபபலிடி" எனும் சொல்லே தான் குவாண்டத்தின் மொழி என்று நாம் சொல்வது மிகையாகாது.

(தொடரும்)



குவண்டம் என்பது அறியவில் பயணத்தின் அழகிய மைல்கல்.மனித அறிவு ஆற்றல் அல்லது அறியும் ஆற்றலின்

நுண்மை அடுக்குகளை வெளிக்கொணர்வதே குவாண்டம் தான்.அறிவுத்திரட்சியை இரு கூறாய் பிரிக்கலாம்.

அதில் நாம் அறிந்ததும் அறியாததும் அல்லது அறிய முயல்வதுமான ஒரு குழம்பியம் அல்லது கலம்பகம் இருக்கிறது.நாம் அதை அறிந்துவிட்டோமா?இல்லையா?என்ற கேள்வி ஏதாவது ஒன்றைப்பற்றி நாம் குறிப்பிடும் இடத்தில் "அதுவா? அது இல்லையா?"என்ற கேள்வியைப்போன்றது தான்.இந்த உறுதியின்மையே (அன்செர்டனிடி)

தான் குவாண்ட இயற்பியலின் உள் சாறு எனலாம்.அதனால் தான் இதைக்குழம்பியம் என்று குறிப்பிட்டேன்.இதை ஆங்கிலத்தில் ப்ராபபிலிடி என்று குறிப்பிடுகிறார்கள்.ஆனால் குவாண்டம் என்னும் போது அதன் மொழி ஆங்கிலம் அல்ல என்பது உண்மை யெனினும் "பராபபலிடி" எனும் சொல்லே தான் குவாண்டத்தின் மொழி என்று நாம் சொல்வது மிகையாகாது. 



ஞாயிறு, 14 நவம்பர், 2021

a man wriggles like a worm

 a man wriggles like a worm

when he is thoughtful of
his olden days
when he figures out an
invisible finger to write
a long and long sentence
charmed with nostalgic foolery
and when
he is like a pen thrown
amidst the farthest clouds
of non-sensical imaginations
that impost poetry of moments!
iam also picking one such a
pebble along the shore of death
where the pinches of sand
sing a lullaby and eulogy
at the edge of my bed and pillows.
_________________________ruthraa
விரும்பு
கருத்துத் தெரிவி

வெள்ளி, 12 நவம்பர், 2021

எழுந்து வா!

 எழுந்து வா!

________________________________

ருத்ரா


என்னை கவிஞனே?

என்ன எழுதப்போகிறாய்?

உன் மேக மண்டலங்களும்

உன் பிரபஞ்சத்துக் "கருங்குழிகளும்"

உன் சிந்தனைகளையெல்லாம்

விழுங்கித்தீர்த்து விட்டனவே என்ற‌

மனச்சோர்வு

உன்னை 

இந்த படுக்கையில் வீழ்த்திவிட்டதோ?

இந்த மக்களை புடம் போட்டு புடம் போட்டு

மீண்டும் 

ஆனா ஆவன்னா...

எழுதுவதாய் எண்ணமோ?

உண்மையான சுதந்திரம்

அச்சமும் பேயாட்டங்களுமாய்

நிறைந்து போய் விட்ட‌

இந்த சாதி மத இருட்டுக்காடுகளை

பொசுக்கி விடுவது தானே!

ஆனால் 

அறியாமையின் இந்த சொக்கப்பனை

ஆகாயம் முழுவதும் தீ நாக்குகளாய்

எழுந்து சாம்பல் ஆக்கத்துடிக்கின்றனவே!

உண்மை தான்.

கவிஞனே!

உன் எழுத்துக்கள் வெறும்

இலக்கண இலக்கிய முகடுகளில்

உலவிக்கொண்டிருப்பதல்ல 

என்பதை இப்போதாவது புரிந்து கொள்.

மானிட ஆற்றலின் 

உள் எழுச்சியிலிருந்த 

அந்த எரிமலைக்குழம்பிலிருந்து

உன் எழுத்துக்களை

அச்சு கோர்க்கும்

ஒரு சீற்றத்தோடு எழுந்து வா!

இந்த மயில்பீலிகளையும்

பட்டாம்பூச்சிகளயும்

வருடிக்கொண்டிருக்கும் 

அந்த "ஃப்ராய்டிச"ப்பிறாண்டல்களிலிருந்து

எழுந்து வா!

இவர்கள் எழுப்பும் உயரமான சிலை

அந்தக்கடவுளை இடித்து

காயப்படுத்தியது தான் மிச்சம்.

மனித ரத்தம் பருகவா

கடவுள் அத்தனை உயரத்தில்

காத்துக்கொண்டிருக்கிறார்?

மனிதம் எழுப்பிய அறிவு தாகம்

கடவுளை இன்னும் எட்டவில்லை.

இந்தக் கூச்சல்கள் நிற்கட்டும்.

ஓ! கவிஞனே!

உன் உயிரெழுத்துக்குள்..மெய்யெழுத்துக்குள்

ஓராயிரம் முழக்கங்கள்

மானிடத்து மணி முழக்கங்கள் ஆகி

ஒலிக்கட்டும்.

உன் எழுத்துப்புயலில்

இந்த குப்பைகள் விலகி ஓடட்டும்!

புதிய யுகமாய்

எழுந்து வா!


_________________________________








வியாழன், 4 நவம்பர், 2021

மின்னுகின்றன....

 மின்னுகின்றன.

‍‍‍‍__________________________________ருத்ரா


என் இரவை நான்

நார் உரித்து அதிலிருந்து

கனவு இழைகளை

நெசவு செய்த என்

நெய்தல் பாட்டுகளில்

கண்ணுக்கு எட்டா கடலிலிருந்து

அலைகள் பிளிறும்.

ஓங்காரம் கேட்கும்.

அடி ஆழத்தின் வக்கிரங்கள்

வண்ண வண்ண பவளத்திட்டுகளாய்

என் காகிதங்களில்

கரு தரிக்கும்.

ஒற்றை ஆள் ஒரு சமுதாயமா?

கால்களின் விரலிடுக்கின் பரல்களில்

ஒரு கூழாங்கல்லைக்கேட்டேன்.

கரை மணல் சர சர வென்று

பின்னணி இசை அமைத்தது.

விளங்காத கேள்வி அது?

என் கண்ணீரின் ஒற்றைச்சொட்டில்

உங்கள் அவலங்களும் சீற்றங்களும்

பிம்பம் காட்டும் வாய்ப்பு உண்டா?

புரியாததை வைத்து புரிந்து கொள்.

இல்லாததை இருப்பதாகக்கொள்.

கட கடவென்று சிரித்துவிட்டு

ஒரு ஒலி மறைந்து தேய்ந்து விட்டது.

அது என்ன கட்டளை?

யாருக்குத் தெரியும்?

என் தோளில் கட்டளைப்பலகையை 

சுமந்து கொண்டு

மிக மிக உயரமான சிகரங்களிலிருந்து

வேக வேகமாய் இறங்குகின்றேன்.

பலப்பல நூற்றாண்டுகளின்

துருவேறிய படிமங்கங்கள்

பொடிபோடியாய் உதிர்ந்து விட்டன.

அந்த வெறிக்குரல்களுடன்

கழுத்துகளை சீவித்தள்ளும்

வாள் முனைகள் மட்டும்

அந்த சூரிய வெளிச்சத்தில்

தக தக வென்று மின்னுகின்றன...

ஆனால் 

இப்போது துப்பாக்கிக்குண்டுகளாய்.


_____________________________________________

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

_________________________________ருத்ரா



விழா என்று

வரிசை வரிசையாக‌

தீபங்கள் ஏற்றுகிற நாட்டில்

அவை ஒவ்வொன்றும்

ஒரு விடியல் குஞ்சு என்ற‌

ஓர்மை அந்த திரியில் 

பற்ற வில்லையே அது ஏன்?

அந்த எண்ணெய்க்குள் துடிக்கும்

நம் இதயவிளிம்புகளின்

எண்ண ஓட்டத்தின் ரத்தம்

வழிவதில்லையே ஏன்?

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாய்

நம் சிந்தனையின் சதுப்புக்காடுகளில்

சாதி மதங்களே

அசுரன்கள் ஆகி கோரைப்பல் 

காட்டுகின்றன.

அதன் வேர்களின் வயது

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல்

என்று

நம் அறிவின் கீற்றுகளை நசுக்கி

கூழாக்கி 

மூச்சுத்திணறும் பாரமாய்

நம்மை அமுக்கிக்கொண்டிருக்கின்றன.

"என்னைத் திறந்து பார்க்க வேண்டுமா?

அதன் கொத்துச்சாவி அந்த 

உளறல் மந்திரக்காரன்களின்

இடுப்பில் தான் இருக்கிறது.

அவனிடம் போ"

என்று சொல்லும் கடவுளா

நம்மை ஆட்கொள்ளுவது?

அந்த ஆட்கொல்லிகளின் பிடியில்

இருந்து மீட்டா

அந்த ஆண்டவனை நாம் தேடுவது?

பாருங்கள் இன்னும்

இருட்டைப் பிய்த்து பிய்த்து வைத்துதான்

தீப விழா நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

உயிர்கள் உள்ள வெறும் 

நகர்வன இனமாய்

காலத்தின் கழிவுகளிலேயே நாம்

களிப்புக்கொண்டிருக்கிறோம்.

மனித அடையாளம் இல்லாமல் இந்த‌

விலங்கு முத்திரைகளோடு

காலம் கழிகின்றது.

மானுடம் என்ற சுவடே இல்லாத‌

மானிடர்கள் இந்த மண்ணில்

ஊர்ந்து கொண்டிருக்கும் அவலங்கள்

அகலும் நாள் என்ற ஒரு நாள்

அரும்பவே அரும்பாதா?

தெரிய வில்லை.

இந்த இருட்டுகளின் அகல்விளக்குகளில்

என்றைக்காவது

ஒரு நாள் 

புடைக்கும் நம் 

கழுத்து ந‌ரம்புகளின் 

சுருதிகளில் யுகமாற்றத்தின்

ஒரு லாவா மலர் விரிக்கும்!

இருப்பினும் எல்லோருக்கும் 

எப்போதுமே

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


_____________________________________


புதன், 3 நவம்பர், 2021

ஆர்ப்பரித்து வா!

 


ஆர்ப்பரித்து வா!

________________________________ருத்ரா



மானிடனே

நீ மரம் ஏறினால் மட்டும் 

போதாது.

அதன் உச்சியில் ஏறி

பழம் பறித்துப் போடுவது

இருக்கட்டும்.

உன் தலையில் விண் இடிக்கும்

ஒரு உணர்வு தட்டுப்பட வேண்டும்.

அதுவே

உன் கேள்வியின் திரிமுனை.

உன் அறிவு கிளர்ந்து ஒளிர்ந்து

பரவ வேண்டிய முனை.

மனிதன் என்று

நீ தலை நிமிர்த்திய போதே

உன்னை அமுக்கிக்கொண்டிருந்த‌

ஆதிக்கப்பின்னல்கள்

கட்டறுத்து விழும் காட்சி

கண்முன் தெரிகின்றதே!

இதை மறைக்கும் அபினி மூட்டங்கள்

பொய்மைக்கதைகள் பேசி

உன்னை இன்னும்

கீழே கீழே புதைக்க‌

மந்திரங்கள் பொழிகின்றார்கள்.

இது வரை நீ கேட்ட 

நரகாசுரன்கள் எல்லாம் நீயே தான்!

உன்னை நீயே வெடித்துச்சிதறி

விளையாடும் 

இந்த அறியாமை விலகும் வரை

உனக்கு விடியலும் இல்லை.

குளியலும் இல்லை.

அடர்த்தியான இந்த அமாவாசை இருட்டே

உன் கண்களில் குடியிருக்கும்.

தமிழா! விழி!

வெடித்த பட்டாசுகளின்

காகிதக்குப்பையா நீ?

இந்த காகிதக்கூளங்கள் தான் இனி

உன் அரசியல் சாசனம் ஆகிபோகும்

ஆபத்து

உன் பிடறியை உந்தித்தள்ளுவதை

உணர்ந்திடு தமிழா!

டன் டன்னாய்

சுலோகங்களை உன் மீது

கொட்டிக்கவிழ்த்து

உன் முகமே

அடையாளம் இழந்துவிடும் முன்

தமிழ் எனும் கோடிச்சுடர்

முகமாய் பூத்து வா!

அண்டமே அதிர 

உன் தமிழை

ஆர்ப்பரித்து வா!

தமிழா!

நீ ஆர்ப்பரித்து வா!


‍‍‍‍‍‍______________________________

செவ்வாய், 2 நவம்பர், 2021

ஜெய்பீம்

 ஜெய்பீம்

_____________________________ருத்ரா

(திரைப்படம்)


நம் மண் 

அரச அமைப்புச்சட்டங்களால்

அடர்ந்த ஆலமரக்காடுகளாய்

இருட்டிக்கிடந்த போதும்

மனித சமூக நீதியின்

அருகம் புல்லும் 

கால்நடைகளுக்கு 

அங்கே இங்கே என்று

தலை காட்டுவதுண்டு.

இந்த 74 ஆண்டு கால இருட்டை

ஒரு சில தீக்குச்சிகள் 

மத்தாப்பு வெளிச்சம் காட்டி

மனத்தில் கிளு கிளுப்பு ஊட்டி

"நெஞ்சத்தையும்" கொஞ்சம் 

கிள்ளிக்காட்டி வலிக்க வைக்கும்

"அகாடெமி" வெளிச்சங்களில்

தீயின் கீற்றுகளும் கொஞ்சம்

வலம் வந்து போகின்றன.

நடிப்பு சூப்பர்.

காமிரா படுசூப்பர்.

இந்த மண்ணின் 

தண்டனை ஆயுதங்கள் எல்லாம்

ஆயுத பூஜையின் 

மஞ்சள் குங்குமத்துக்கு மட்டுமே

காத்திருக்கின்றன.

ஆண்டு தோறும் 

அந்த காகித அசுரனை

நிஜம் போல காட்டி

பொய்மையின்

காகித வெடிகளில் அவனை சிதறடிக்கின்றன.

சாதி மதங்களின் வெறித்தீயில்

ஜனித்த அசுரன்களுக்கு

மயிற்பீலி சாமரங்கள்

அசைந்து கொண்டே இருக்கின்றன.

அதில் இந்த‌

ஜெய்பீம் மெழுகுவர்த்திச்சுடர்

அணைந்து விடுமோ என்ற‌

அச்சத்தையே நிழல் காட்டுகின்றன.


________________________________________________

(இது விமர்சனம் அல்ல)







எதிரே ஒரு முட்டுச்சந்து

எதிரே ஒரு முட்டுச்சந்து

________________________________________ருத்ரா



ஜனநாயகத்தை நோக்கி

பயணம் போகின்றவர்களே!

வரும் 2024 ல்

நீங்கள் எதிர்கொள்ளும் மைல்கல்

அந்த பயணத்தின்

கல்லறையின் மேல் நடப்பட்ட‌

இறுதிக்கல் ஆக இருக்கலாம்.

அது உங்கள் சுதந்திர சுவாசத்தின்

பூங்காவாய் மாறும்

மாற்றத்தின் மாயம் 

நடக்கும் உங்கள் நடையில் இருக்கிறது.

உங்கள் பார்வையில்

அந்த புதிய பாரதம்

ஒரு வேங்கையின் விழிகளாய்

எச்சரிக்கை கொண்டு உற்று நோக்குகிறது!

மனித நாகரிகத்தை 

குழி தோண்டி புதைக்கும்

சாதி மதக்காடுகள்

ஒரு மரண இருளை

இன்னும் வெளிச்சம் என்று சொல்லி

புராணங்கள் குவித்துக்கொண்டிருக்கின்றன.

ஓட்டாளனே!

எதிரே உன்னை எதிர் கொள்வது

ஒரு முட்டுச்சந்து.

அந்த முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு

உன் முகம் நொறுங்கிப்போகாதே!

கதிர் முகம் காட்டு!

அந்தக்கனலில் இந்த‌

தூசுகள் கருகித்தொலையட்டும்!

துணிந்து செல்!

வெற்றி உனதே!


__________________________________________





புதன், 27 அக்டோபர், 2021

 


புதிதாய் ஒரு குரல்!

___________________________ருத்ரா


"மனிதா!மனிதா!"

....................

..................

அற்ப புழுக்கள் 

ஆச்சரியப்பட்டன‌

இப்படியெல்லாமா

இருந்தனவா

நம் பெயர்கள்?

"புரட்டு"ச்சுவடிகளை 

புரட்டிப்பார்த்தன.

"அய்யோ"

அவை பதறின.

தேவ தூஷணை அல்லவா இது?

தண்டனை

கிருமி போஜனம்

கும்பி பாகம் அல்லவா.

வேண்டாம் அந்தப்பேர்கள்.

மிலேச்ச பாஷை இது.

தோஷம்.தோஷம்.

பொந்துகளுக்குள் 

போய்விடலாம் வாருங்கள்.

போய் அடைந்து கொண்டன 

அந்த புழுக்கள்.

___________________________________________



___________________________________

 மரமும் இலையும்

பட்டாம்பூச்சிகளும்

ஹைக்கூ எழுதின.

பாவம்! 

மனிதன் கிடந்தான் 

குப்பைக் கூடையில்.

________________________ருத்ரா.

செவ்வாய், 26 அக்டோபர், 2021

 ஈரோடு தமிழன்பன்

________________________ருத்ரா.



நம் எழுத்துக்களின் எலும்புகள் 

கூன் நிமிர்த்தியபோது தான் தெரிந்தது 

உன் உயிர் மூச்சு எனும்  

மானிட உரிமையை 

அதில் பெய்திருக்கிறாய் என்று.

தமிழ்க்கவிதையின் முதல் இமயம் அது! 

இன்று இந்த விருதுகள்

வளைந்து  கொண்டன உன்னை

வணங்கி வாழ்த்த!

___________________________________


திங்கள், 25 அக்டோபர், 2021



ஓலைத்துடிப்புகள்-117

______________________________________கல்லிடைக்கீரன்.



சிறு வெள்ளருவி பெருங்கல் நாடன்

கல் பொருதிறங்கும் நுண்டுளி அன்ன‌

கவி நிழற்சுனையின் கலங்கு பளிக்கின்

அவள் உரு தேடி அவள் விழி பொருதும் 

கயற்சுழி ஆழும் என   மலைந்தானே!

நீள் அடர்க்கானிடை இலைக்குடை மறைக்க‌

இரவெது?பகல் எது? என மருள் படுத்தாங்கு

முளி திரை முன்னீர் ஏணி இறந்தும் 

எல்லை வெண்குரல் பாழ்வெளி பரப்ப‌

சில் பூ நீட்டும் அவள் நகையே   தீங்கரை!

தும்பி நிரைய அஞ்சிறை பறைய

திரள் காழ் மராத்த திண் பெருங்கானம்

மயக்குறு பல் குறி மாயம் காட்டும்.

ஆயிழை தோன்றும் இரவுக்குறியின் 

அழல் அவிர் பாயல் ஆனாது கலுழும்

நோயில் அவனும் துயில் கெடுத்தானே.

________________________________________________

வெள்ளி, 22 அக்டோபர், 2021




ஓலைத்துடிப்புகள் -116

______________________________கல்லிடைக்கீரன்.


நவ்வி நிரைத்த திரி மருப்பின் வால் இனம்

மின்னல் குழுமி வான் போழ்ந்தன்ன‌

உள்ளம் கலித்து நிழல் குளித்த இலஞ்சிய 

சுனையாய் பசலை பாய்தர படர்த்தாள் அளியள்!

பொருள் வேட்கையில் ஆறு இறந்தவர்

பொறை தொறும் பொறை தொறும் 

பொறிமலிக் காட்சியின் புள்ளி நன்மான்

கணம் கொளப்பாய்ந்த சாயல் அத்தம்

அவள் துள்ளும் மீன்விழிக் கடையென மருளும்.

எவன் கொல் செய்யும்?அவர் கொடுங்கவர் ஆரிடை?

சால்கொடு கீறி ஊன் கிழித்தன்ன‌

செஞ்சுவல் வித்திய அருவினை உழவர் 

ஊன் பொதியா  பசுங்குடை தலைஇய சூடி

வெயில் மறைப்ப    மரைக் கோடு நீட்டிய‌

மண்கொற்றக் குடையுளும்

அவன் ஊர்ந்தான் அவள் உள்ளிப் பெரு ஊழே!

______________________________________________________





புதன், 20 அக்டோபர், 2021

 

ஓலைத்துடிப்புகள்-115

____________________________________கல்லிடைக்கீரன் .


நுண்கலை நன்மான் முதன் முதல் கவர்த்த‌

மணிச்சுவட்டின் கண் படுத்தன்ன

கழை வரி தோறும் வளை நெகிழ்திறங்கும்

மென்சாயல் நிழல் தோய்த்து ஆங்கே

மயிலாடு முன்றில் அன்ன 

கடுஞ்சுரம் நீர்க்கும் .

பேஏய் ஆறும் பின்னே ஏகும்.

வாட்சுறா வழங்கும் வௌவ்வல் ஆழியென

மயக்குறூஉம் காட்சியும் மறைந்திடும் மன்னே!

நெய்தல் கனைத்த கதிர் எதிர் கல் சேர்பு கதிரும்

குடை தேடும் வெஞ்சுரம் திணை மயங்க‌

கல்லாடன் கை ஓலை எழுத்தும் கனற்கீர‌

எரிக்கும் பாலையின் கடுவழியிடையும்

அவள் பாளை உதிர்த்த  நறவு எயிற்று நகையும்

பாலை மீட்டி களி கூட்டும்மே! 

______________________________________________


சாமியோ சாமி!

_________________________________ருத்ரா.


ஏஞ்சாமி? 

நா சாமி  கும்புட 

வந்துருக்கேஞ் சாமி .

எனக்கும் கொஞ்சம் 

சாமிய காட்டுங்க சாமி. 


ஆசாமிகளின் மந்திரங்கள் 

உண்மையான சாமிகளை 

இங்குமங்கும் அலைக்கழித்தன. 


நூல்களுக்கெல்லாம் நூல்களின் 

கருவாக திருவாக 

இருக்கும்  அந்த "சாமி" தான்

அங்கு

நூல் இல்லாமல் நின்றிருந்தார்.


நகரு...நகரு....

காவலர்கள் அவரை விரட்டித் தள்ளினார்கள்.

மந்திரத்தை நிறுத்திவிட்டு

 இந்த சாமி கத்தினார்....

தமிழில் தான்!

"இந்தப் படியைத் தாண்டி

சூத்ராள்ளாம் வந்துடுர்ரா...

அவாளை அந்தப் பக்கமா தள்ளிவிட்டுருங்கோ . ..

__________________________________________________________




செவ்வாய், 19 அக்டோபர், 2021

 ஒரு  ஆரியப் பொருளாதாரம்.

______________________________________ருத்ரா.


எங்களை நரகாசுரன் ஆக்கி

எங்கள் மீது வெடித்து மகிழுங்கள்.

ஆனால்

பட்டாசுக்கு தடை விதித்து 

எங்களை "வதம்" செய்யாதீர்கள்.

______________________________________________

திங்கள், 18 அக்டோபர், 2021

Throw all your masks

along with your faces

of fake smiles and snobbery looks.

your soothing words 

really add fuel to injuries

of your own wounds.

The reasons stem from your

own desires and  judgement

that your golden ballots

will fetch  an all-out sigh of relief.

But again and again it is a

Golden Knife

making you bleed with

rosy phrases of Democracy

as for the people and by the people

and the people endowed with

Ultimate Power.....

the tom-toming is going  on

And

trumpet is playing on !

Alas.and

The bills of their own

Whims and fancies

Roar and roar as "draconian Acts"

Rolling on the feeble and meek

Throats and voices of the very same

Golden Democracy.


------------ ------------------------------------------------ruthraa










செவ்வாய், 5 அக்டோபர், 2021

 கடவுளுக்கெல்லாம்  கடவுள்.

________________________________________________ருத்ரா.


நீங்கள் கடவுளைக் கும்பிடும்போது 

உங்களைக் கும்பிடுவது யார் தெரியுமா?

கடவுள் சொன்னார்:

நான் தான் உன்னைக் கும்பிட்டுக் கேட்கிறேன்.

என்னைக் கண்டுபிடித்தாயே!

என் கடவுள் யார் என்று கண்டுபிடித்துச் சொல்லேன்......

நீங்கள் தலையைச் சொறிந்து கொள்ளுகிறீர்கள்.

இன்னும் உள்ளே சொறிந்து தேடு.

கடவுள் சிரித்துக் கொள்கிறார்.

"தெரியவுில்லையே ஸ்வாமி"

உன் அறிவு தான் கடவுளுக்கெல்லாம் கடவுள்.

"ஒண்ணும் விளங்கவே இல்லை"

ரொம்ப. சந்தோஷம்.....அது வரை

இந்தக்கல்லுக்கு 

"கும்பாபிஷேகம்" நடத்திக்கொண்டே இரு.


____________________________________________________________________


வெள்ளி, 1 அக்டோபர், 2021

கணிப்பொறிகள் காத்திருக்கின்றன

----------------------------------------------------------------------------------ருத்ரா.


பகடைகளுக்கும் சகுனிகளுக்கும் 

பரிச்சயமாகிப் போன 

பாரத புத்திரர்களே !

பாராளுமன்றத்திற்குள் ராமர்கோயிலா?

ராமர்கோயிலுக்குள் பாராளுமன்றமா?

மாயமான்கள் ஓட்டம் காட்டுகின்றன.

இந்த சப்பளாக்கட்டைகள் 

சப்தமெழுப்பிக்கொண்டிருக்கட்டும்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!

"கணிப்பொறிகள் "காத்திருக்கின்றன!

--------------------------------------------------------------------------------


வியாழன், 30 செப்டம்பர், 2021

.ஃப்ரான்சிஸ் கிருபா 

______________________________ருத்ரா


சொல்லுக்குள்

ஒளிந்திருந்து

சொல்லோடு

அம்பு  

விட்டுக்கொண்டிருந்தாயே!

அது எந்த அர்த்தத்தைத் தேடி 

வாழ்க்கையா ? மரணமா?

அந்த மரணத்தையா உன்

முகநுாலாக்கி ஒளிந்து

கொண்டாய்?

உன் சொற்பசியெடுத்த 

மான்களாய்

அம்பு தைத்து நாங்களும் இங்கு 

வீழ்ந்துகிடக் கின்றோம்.

------------------------------------------------------










வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஐங்குறும்பாக்கள்

 ஐங்குறும்பாக்கள்

_________________________ருத்ரா



தினம் தினம் 

வண்ணங்களை உலர்த்தி எடுத்தது

மொட்டை மாடி கொடிக்கம்பியில்.


பட்டாம்பூச்சி

____________________________ 1



பச்சைப்புல் பனித்துளியில்

ஒரு தற்கொலை.

ஏழு வர்ண இரத்தம்.


காலைச் சூரியன்

_____________________________ 2



கவலைகளை களைந்து விட்டு

என் வீட்டுக்குள்

வாருங்கள்.


நத்தைக்கூடு

______________________________3





திராவிடமா? தமிழா?

ஆரியம் ஒளிந்து கொள்ள‌ 

வந்த கேள்வி இது.


தமிழ் அற்ற தேசியம்.

____________________________5

வியாழன், 16 செப்டம்பர், 2021

கறங்கு வெள்ளருவி .....

 


கறங்கு வெள்ளருவி

__________________________________கல்லிடைக்கீரன்.



கறங்கு வெள்ளருவி கடிமிசை ஆங்கு

களிமென் குரல் படர் தூஉய் தரும்

முரல் மன்றின் பால் திறந்தன்ன‌

கழங்கு ஆடு ஆயம் விளி கிளர் ஓசை

இணர் அவிழ் வீக்களின் இமிழ்தரூஉம்

சிறைமணம் உகந்து அவள் சில்பூ நகையில்

சிறைப்படூஉம் இன்பில் என்பும் கிளத்த

புல்லெனும் சொல்லில் அன்பே என்னும்

அதிர் ஒலி யாழ ஆழி வீழ்ந்தனன்.

எவன் கொல் ஈனும் இக்கதிர் பரி மண்டிலம்.

மண்டை சிதறிய வெண்சோற்றுப் பரலென‌

மண்டிய வான்பூ இனநிரை கொளீஇ

சொல்லின் கீரன் கீறிய சொல் தொறும்

மணிநிறம் அவிழ்க்கும் அணிதிறம் விரிக்கும்.

முருகின் சுள்ளிய வெறியாட்டு அயரும்

நெஞ்சில் வேர்த்து நெருநல் ஊழ்த்து

அவளின் அவிர்சொல் ஓங்கல் தெறித்தன்ன‌

படுகதிர் இரட்டும் ஒலிபு ஊண் ஊட்டும்.

அன்பின் உருகெழு ஓண்கூர் தீட்டி

ஒற்றித்தருகென மைவிழி காட்டும்

யானும் ஒற்றுவன் நயவர நோக்கி.

வெள்ளாறு நீண்டு பொரி படர ஏகும்

நிரம்பா நீளிடை நிழல் சூன்று உண்ணும்

இனிய பாழில் ஊர்ந்தனம் மன்னே.


____________________________________________


தலைவியின் காதல் நிறைந்த சொல்லும்

அன்பு கூர்ந்த விழியும் தலைவனை

காதலின் அடி ஆழத்து ஒரு ஆழிக்குள்

வீழ்த்துகிறது.பாலையின் வெறுமைத்தீயும்

அவனுள் ஒரு தண்ணிய நிழலே ஆகும்.

இக்கருத்தில் நான் எழுதிய சங்கநடைச்

செய்யுள் கவிதை இது

_____________________கல்லிடைக்கீரன்

புதன், 15 செப்டம்பர், 2021

ஓலைத்துடிப்புகள் 110

 பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.

_______________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 110)



காழ்த்த நெடுங்கால் தண்பறைக் குருகின்

களிதுள் கயல்ஆரும் நளிகடல் சேர்ப்ப!

எக்கர் ஞாழல பாசிலை அடைகரை

வதிநிழல் ஓமை பொருந்தாக் காணிய‌

நெய்தலங் கானல் கண்டிசின் பெரும.

மாழை வரிவிழி நுதல் அளை நோக்கில்

ஆகம் அணியிழை சேக்கும் காதலின்

கறை உழற்றன்ன கொடு எழில் பூப்ப‌

புன்கு அவிழ் பொரிப்பூ படர்ந்த நகையில்

அவள் ஆங்கு சுழித்த நாணில் வீழ்தரு நின்

நாணில் நீர்மை கண்டுநனி நெடுவான்

வெட்கும் ஒட்கும் எல் களைந்து எல்லின்

பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.


_________________________________________

காதல் செழித்த தலைவியையும் மறந்து

பரத்தமையின் பால் காமுறும் தலைவனுக்கு

தோழி அறிவுறுத்தியதே இப்பாடல்.புன்கை மரம்

பூத்துச்சொரிந்தது "பொரி" படர்ந்தாற்போல்

இருக்கும் அந்த பரத்தையின் நாணமற்ற‌

சிரிப்பில் தலைவன் விழ்ந்தது அதை விட ஒரு

நாணமற்ற செயல் என தோழி இடித்துக்காட்டுகிறாள்.

அதையே இங்கு என் சங்கநடைச்செய்யுள் கவிதையாக்கி

இங்கு எழுதியிருக்கிறேன்.

______________________________கல்லிடைக்கீரன்


செவ்வாய், 14 செப்டம்பர், 2021

"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு"

 "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு"

_______________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 109)


ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு

உறையும் உழுவை துஞ்சுதல் அறியா

அடர் சுரம் நுழைஇ ஆறுபடுகடாம்

அஞ்சுதல் அறியா நீளிலை எஃகமொடு

நீள வைகும் கணைக்கால் கழல‌

இலஞ்சி பழனச் செந்நிலக் குன்றன்

அடுபரல் முரலும் கொடு இடைக் கழிய‌

துடியென இசையும் நெஞ்சொடுக் கிளந்து

கல்லென ஒலிக்கும் கொல்வனத்து ஆரிடை

பயிற்றும் சொல்லே அவள் பேர் சாற்றும்.

இறைய நீட்டும் வளையின் வளையின்

இன்னொலி உய்க்கும் பல்பாற்பட்ட‌

கான்பேராறு கவி இருள் புகுந்துழி

சுரும்பின் நுண்சிறை அதிர வாங்கு

வான்பூச் சினை இடற நோக்கும்.

இறைய நீட்டும் வளையின் வளையின்

இன்னொலி எறியும் மைவிழி தேடி

கலிக்கும் ஒலிமென் கூந்தல் அடர்த்த‌

ஊழி நீள்க்கும் கானாறு தேய்க்கும்

கழி நெடில் அத்தம் இனிதுடன் நந்தும்.


_____________________________________________

அகம் 52..நொச்சி நியமங்கிழார் பாட்டின் 5 ஆம்  வரியை

முதல் வரி ஆக்கி நான் எழுதிய சங்கநடைச்செய்யுள் இது

_____________________________________கல்லிடைக்கீரன்

திங்கள், 13 செப்டம்பர், 2021

"மாளவிகாக்னி மித்ரன்"

 ஒரு கவிஞன்

==========================="மாளவிகாக்னி மித்ரன்"


காகிதமும் பேனாவும் கொண்டு

சில தமிழ் மற்றும் பல சமஸ்கிருத சொல் கடைந்து

மனப்புழுக்கத்துக்கு வர்ணம் தீட்டி

மன உள் வெளிக்குள் பூதம் காட்டி

எழுதித்தீர்த்தேன்.

பிடித்தவர்கள் படித்தார்கள்.

படித்ததை பகிர்ந்தார்கள்.

அச்சு மையிலும் அது

ஆயிரம் ஆயிரம் பிரதிகளாய்

கருப்பு ரத்தத்தில் கன்னிக்குடம் உடைத்து

பிரசவமாகி பரவசம் ஆனது.

என்ன சொன்னேன் ?

எதற்கு சொன்னேன் ?

சொற்களின் வைக்கல் படப்பில்

அவர்களே 

ஒரு ஊசியை போட்டுவிட்டு

அவர்களே தேடிக்கொள்ளட்டும்.

விசைப்பலகையில் எண்டர் தட்டுவதை

இவர்களின் யாப்பருங்கலக்காரிகை

ஒரு "நொண்டி சிந்து" என்று

நொட்டைச்சொல் சொல்லிக்கொள்ளட்டும்.

ஒரு "சுப்புடுத்தன" தண்டி அலங்காரத்தில்

தடைசெய்து தண்டித்துக்கொள்ளட்டும்.

புனைபெயரில் ஒரு பெண் இருந்தால்

கூட்டமாய் கும்மியடித்து

பின்னூட்டங்களில் மொய்த்து மகிழட்டும்.

புதுக்கவிதை என்றாலே

குவார்டர் கட்டிங்க் சீயர் அப்புக்கு

மசாலா தொட்டுக்கொள்வது போல்

ஆகிவிட்டதோர் யுகம் இது.

இதில் காதலை கலக்கி

நொதிக்கச்செய்து நுரை தள்ளும்

கலாச்சாரம் இது.

விக்கிரமாதித்தனின் கவிதையை

பெயரின்றி போட்டால்

குப்பைத்தொட்டிக்குள் வீசி

குதூகலிக்கும் காலம் இது.

லா.ச.ரா வைப்போல்

எழுத்தின் ஆழத்துள்

மூச்சடக்கி மூழ்க முடியாதவர்கள்

கரையோரத்துக் கிளிஞ்சல்களை

கை நிறைய அள்ளிக் களிப்பர்களின்

இலக்கிய யுகம் இது.

"எழிற்கீரன்"

இந்த அருமையான 

தமிழ்ப்பெயரில் 

கவிதைகள் படைக்க எண்ணினேன்.

என்ன?

தமிழ்ப்பெயரா?

தமிழ் நாட்டில் தமிழ் ஒலிப்பு என்பதே

தீட்டு ஆகிவிட்டதே!

தேவ பாடையில்

"மாளவிகாக்னி மித்ரன்"

என்ற பெயரில்

கவிதை அனுப்புகின்றேன்.

பார்க்கலாம்.

____________________________________

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

வ.உ.சி

 வ.உ.சி

___________________


புயல் ஒன்று

நம் அருகே 

கடந்து போயிருக்கிறது

மூச்சுக்காற்று கூட‌

நமக்கு வேண்டும் என்று

நாம் அறியாமல் 

கிடந்த போது

________________________ருத்ரா


துடைத்துகொள்ளுங்கள்


மிக மிக உயரமாக 

சிலை செய்து கொண்டு

அவரை தரிசனம் செய்ய

ஊர்வலம் சென்றார்கள்.

காக்கா ஒன்று உயரமாய்

பறந்த போது 

அவர்கள் மீது 

எச்சம் இட்டுச்சென்றது.

பிரசாதம் அருளுங்கள்

என்றார்கள்.

அப்போதே போட்டு விட்டேனே

துடைத்துகொள்ளுங்கள் 

என்றார்

கடவுள் சிரித்துக்கொண்டே.

____________________________

ருத்ரா






திங்கள், 6 செப்டம்பர், 2021

an anachronistic bluff



 "hey!

an anachronistic bluff

get off these pages.

you just are

nostalgic with

old aged and grey haired dreams!

your rosy days are

worth nothing but

brimming with our

trashes.........."

it's just not bothered!

simply make this piece of

writing

dated at a sufficiently later date

when all the digital heaps and piles

of tons and tons of

graphical fallacies and fantasies

or 

at that second impact of a

"BIGGER BIG BANG"

with a bigger question of a

queer "Higgs Boson"

that will be in such a mystery

of each photon a bigger universe

losing all the topologies of

man and his dreams!

and

or at your own Quantum Computing

that throws the dice of probabilty

of your extinction or distinction.


__________ruthraa e paramasivan

வியப்பு அடங்கவில்லை

 வியப்பு அடங்கவில்லை

__________________________________ருத்ரா


உன்னைப் பார்த்த‌

மின்னல் கணங்களை

என் தூரிகையில் கருவாக்கி

கோட்டோவியம் ஒன்று

வரைந்தேன்.

அழகு தான்.

அருமை தான்.

மீண்டும்

அதைப்பார்க்கும் போது

நான் திடுக்கிட்டேன்.

என் தொப்பூள் கொடியில்

நான் கொடி சுற்றிக் கிடந்தது

போல் அல்லவா

இருந்தது அது?

நீ தாயா?

அல்லது

ஒரு பெண்ணா?

முட்டாள்.

அன்பு எனும் பெருங்கடல்

தாய் எனும் 

அன்பின் 

முதல் உயிர் எழுத்தை தான் 

காட்டுகிறது.

உன் காதல் கோடு

அதிலிருந்து தானே

பெயர்த்து வரையப்பட்டிருக்கிறது.

உன் வண்ணங்களை வேண்டுமானால் 

இனி நீ தீட்டிக்கொள்.

சற்று நேரத்தில்

அங்கே வந்த அம்மா

அந்த ஓவியத்தை

உற்றுப்பார்த்துவிட்டுக் கேட்டாள்.


"ஏண்டா?

அழகாய்த்தான் இருக்கிறாள்.

எங்கேயடா இவளைச்சந்தித்தாய்?

அப்பாவைக்கூப்பிட்டுக்கொண்டு

இவள் வீட்டுக்கு

சென்று விட வேண்டியது தான்."

எனக்கு வியப்பு அடங்கவே இல்லை.

இப்போது

அவள் அந்த தொப்பூள் கொடியாய்...

என் முகத்தருகே

ஒரு பூங்கொடியாய்....

காற்றில் அசைகின்றாள்.


__________________________________________


சனி, 4 செப்டம்பர், 2021

என் சிலேட்டுப் பலகை

 என் சிலேட்டுப் பலகை

_______________________________ருத்ரா.




பெண்களுக்கு குப்பையே 

பிடிக்காது.

ஆனால் இங்கே

ஆண்களே தான் குப்பை!


ஒரு வீடு

_________________________1


வானம் பாடிகளுக்கு

தமிழ்ச்சொற்களில்

வானம் காட்டியவர்


மு.மேத்தா

________________________2


 


ஆண்டு தோறும் 

ஆசிரியர் தினம்.

இன்று தான்

ஆசிரியரின் மடியில்

இன்னொரு ஆசிரியர்.


"மடிப்பொறியில் கல்வி"

_________________________3



கை வலிக்கிறது.

கொஞ்சம் நேரத்துக்கு

இந்த வீணையை யாராவது

வாங்கிக்கொள்ளுங்களேன்.



ரவிவர்மாவின் சரஸ்வதி ஓவியம்.

________________________________

மீட்சி

 மீட்சி

___________________________ருத்ரா



கண்ணாடியில் அழகு பார்க்கையில் 

அந்த பிம்பத்திற்கும் பின்னே

அசிங்கங்கள் தான் நிழல்களாக‌

தெரிகின்றன என்று

நெற்றி சுருக்கிக்கொள்கிறீர்கள்.

நெற்றிக்கண் திறந்து 

நெருப்பு வீசுகிறீர்கள்!

கண்ணாடி அசிங்கமாக காட்டவில்லை.

அசிங்கத்தை காட்டுவது நாமே!

சாதாரணக்கண்ணாடியில் 

பிரதிபலிக்காமல் வழுக்கிக்கொண்டு ஓடி

வெளியே காட்டுவதை 

மறைத்து சப்கான்ஷியஸ் எனும் 

ரசம் பூசியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.

அப்போது

நம் அடிமனத்து முரண்களே 

அப்பட்டமான அழகிய‌

காட்சிகளாய் எதிரில் தோன்றுகின்றன.

இது தனிமனித முரண்கள் என்றால்

மொத்த சமுதாய முரண்களுக்கும்

காரணம் 

மக்களின் அடி மனதுகளின் முரண்கள்

என்கிறார்

ஃபெடினன்ட் ஸ்வீக்.

அது "சோசியல் ஃப்ராய்டிஸம்"

என்கிறார் அவர்.

இந்த அழுக்குகள் தான்

சாதி மத இன நிற சுரண்டல் வெறிகள்.

இந்தக்கண்ணாடியின் 

அழுக்கைத்துடைத்துவிட்டால் போதும்

என்கின்றவர்களே

ஆகாயத்தை நோக்கி

கூக்குரல் போடுகிறார்கள்.

பறவைகளின் கூச்சல்களை விடவா

அவை

இனிய சங்கீதம்?

கண்ணாடி சுக்கல் சுக்கலாக‌

நொறுங்கும்

புரட்சிகள்

வரலாறுகளை நகர்த்தியிருந்த 

போதிலும்

நம் நியூரோன்களும் ஹார்மோன்களும்

இன்னும்

ஸினாப்டிக் ஜங்கஷன்களும்

நரம்புகளின் யாழ்களில்

மானிடத்தின்

இனிய பண்களை

மீட்டும் வரை நமக்கு

மீட்சியில்லை


______________________________ருத்ரா