செவ்வாய், 16 ஜூலை, 2024

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே

 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே

_______________________________________________________
கல்லாடன்


கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே
அந்த காலத்தை
எங்கோ ஒரு சவ்வுமிட்டாய்க்காரன் கையில்
உள்ள கம்பில்
சிவப்பும் பச்சையுமாய்
அந்த மிட்டாய் காலப்பாம்பு போல்
சுற்றிக்கொண்டு வரும்.
அதற்கு கொஞ்சம் காசு கொடுத்து
கூப்பிட்டு
நீ நீடூழி வாழ்க என்பேன்.
பாம்பு கேட்கும்
யாருக்கு அப்பா என்று.
அப்புறம் புரிந்து கொண்டு
ஓ அந்த மிட்டாய்க்காரனா?
அவன் இந்த பிரபஞ்சைத்தையே
இழுத்து இழுத்து
இழை பின்னி
கிளி மயில் கடிகாரம்
என்று வித விதமாய்
பிம்பம் காட்டுவானா
அவனுக்கா?
காலம் என்னும்
மாய மண்ணைக்குழைத்து
எத்தனை பாத்திரங்களை
அவன் கற்பனைச்சக்கரத்தில் வைத்து
சுழற்றியிருக்கிறான்.
காதல் என்னும் சனியன் தான் என்ன‌
என்று
அவனிடம் கேட்டு எழுதி
வாங்கிப்பார்த்தேன்.
"ஆல கால விஷமே!
உன் பார்வை தீண்டி
உன் பார்வை வழியே
அந்த பஞ்சுமிட்டாய் மேக மண்டலத்துள்
உன்னுடன் கொஞ்சம் உலாவ
சில சில்லறை நேனோ செகண்டுகளைத்தந்தால்
போதும்..
அப்புறம் இறந்து உன்னில் பிறந்து
அப்புறம் இறந்து உன்னில் பிறந்து..
............
"ஏய்..ஏய் நிறுத்து
என்னைத்தலை சுற்றி வீழ்த்திவிடாதே"
இந்தா
இந்த கவிதையை நீயே வைத்துக்கொள்.
அதற்குப்பரிசிலாக‌
இதை வைத்துக்கொள்.
அது செத்துப்போன ஒரு காலப்பாம்பு..
காலத்தைக்கூட தோற்கடிக்கும்
கவிஞனே..
காலத்தின் முற்றுப்புள்ளி
உனக்கு இல்லவே இல்லை..
கவிஞன் அந்த ரப்பர்பாம்பை
கழுத்தில் போட்டுக்கொண்டான்.
வைரமுத்து எனும் கவிஞனே
இந்த கூழாங்கற்குவியலிலே
உன் வைரங்களுக்கு
விலை மதிப்பு இல்லை.
அதற்கு விலை பேசும் வலிமை கூட‌
உன் கவிதைக்கு மட்டுமே உண்டு.
நீ வாழ்க!
சொற்கள் குடை பிடிக்கும்
உன் வெண்கொற்றக்குடை வாழ்க!
__________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக