வெள்ளி, 31 மே, 2019

கல்லெல்லாம்...


கல்லெல்லாம்...
====================================ருத்ரா

காகிதம் தேடி
பேனா வருடி
எழுத்தும் சொல்லும்
நெய்து
உனக்கு ஒரு கவிதை
எழுதுமுன்னே
அந்த மௌனத்தடாகத்தில்
உன் சிரிப்பு
"க்ளுக்" என்று
ஒரு கல் 
எறிந்ததே.
அதுவே நான் தேடிய
கவிதை
எனும் மாணிக்கக்கல்.

==========================================

வியாழன், 30 மே, 2019

தேடினேன்

தேடினேன்
================================ருத்ரா இ பரமசிவன்

அந்த அழகிய மஞ்சள் நிற‌
பித்தளை வெற்றிலைச்செல்லத்தை
உருட்டி புரட்டித்தேடினேன்.
கைப்பிடி
சீறும் பாம்பின் சுருண்ட 
அற்புத வடிவில் இருந்தது.
அதன் கடுகுக்கண்ணில் கூட‌
ஆலகால விஷம் தெரிந்தது.
மூடியில்
இலைப்பின்னலில்
பூக்களின் கண்கள் 
உறுத்து விழித்தன.
கலை நேர்த்தி என்னை
கவனம் திருப்பிவிட்டது.
கவனத்தை மீண்டும் தேடலில்
நீள விட்டேன்.
அந்த செல்லத்தின்
உள்ளறை ஒவ்வொன்றையும் 
தேடினேன்.
பாக்கு வைக்கும் இடம்.
சுண்ணாம்பு டப்பி
சுருண்டு படுத்து 
கனவு காணும் இடம்.
விரலின் மூலம் வெற்றிலையை
ஸ்பரிக்கும் அந்த‌
கணங்களின் கனமான ஏக்கம்
அதனுள்ளே சிறை.
தங்கபஸ்பம் புகையிலையும்
அந்த நீல கண்ணாடிப்பேப்பரும்
என் செவிக்குள்
இன்னும் சரசரத்தன.
இறுதியாய்
வெற்றிலைக்கவுளி
மரகதப்பாய் அடுக்குகளாய்
அடைந்து கிடக்கும்
அந்த பெரிய அறை
மெல்லிய ஒரு குதப்பல் ஓசையை
அற்புத சங்கீதமாய்
அலை விரித்தது.
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
என் அப்பாவை
அந்த செல்லத்துக்குள்.
முப்பது நாப்பது வருடங்களாய்
அதற்குள்
அவர் வாசனையைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
......
அதோ!
புளிச்சென்று ஒரு குரல் கேட்டது.
மரணங்களுக்கு
அவர் பயம் கொண்டதில்லை.
எமன் மீது காறி உமிழும்
வெற்றிலை எச்சிலாகத்தான்
அது எனக்கு கேட்டது.
என்னை ஒரு உற்சாகம் 
தொற்றிக்கொண்டது.
மீண்டும் அந்த செல்லத்துக்குள்
தேடினேன்.
அவர் மரணத்தை அல்ல.
மரண பயத்தால்
எப்போதும் 
காக்கைச்சிறகைக் 
கிழித்துக்கொண்டது போல்
வாழ்க்கையை கந்தல் ஆக்கிக்கொள்வதை
காறித்துப்பும்
அந்த நெருப்பு நம்பிக்கையை.
செல்லத்துக்குள்
அவர் ஒரு லாவாக்குழம்பாய்
ததும்பி நின்றார்.

========================================

திரும்பித்தான் தொலையேன்.



திரும்பித்தான் தொலையேன்.
====================================================ருத்ரா

டேய்
எத்தனை தடவைடா உன்னைப்பார்ப்பது?
இந்த பெண்கள் அமுக்குளிகள்
என்று யாரடா சொன்னார்கள்?
உன்னை
என் இதயத்தின் ஆழத்துக்குள்
அமுக்கிக்கொண்டிருக்கிறேன்.
அதனால் சொல்லியிருப்பார்கள்
அமுக்குளிகள் என்று.
போதும்
முகம் திருப்பியது.
உன்
அழுக்கு வான தலைக் கிராப்பை
சிலுப்பி
அந்த மின்னல் பிஞ்சை
இங்கே கொஞ்சம் அனுப்புடா!
என் மார்புக்கூடு என்னும்
கண்ணாடித்தொட்டியிலிருந்து
வெளியே துள்ளி விழுந்து
மீனாகத்துடிப்பது
நீயும் நானுமே!
அதனால்
இங்கே கொஞ்சம்
திரும்பித்தான் தொலையேன்!

================================================

புதன், 29 மே, 2019

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்
===========================================================ருத்ரா

வாழ்க நீ எம்மான் இந்த‌
வையத்து நாட்டிலெல்லாம்...

மகாத்மாவுக்கு தூவினான்
பாரதி இந்த வரிகளை.

மோடிஜி அவர்களே
உங்களுக்கும் இந்த வரிகளால்
குடமுழுக்கு செய்கிறோம்.
ஏனெனில்
ஜனநாயகத்தின் சிகரத்தில்
நீங்கள்
ஏறி நின்று கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள்
என்ன செய்திருந்தாலும்
என்ன செய்யப்போவதாக இருந்தாலும்
எங்களுக்கு
அவை ஒரு பொருட்டில்லை.
வாக்குப்பெட்டிகளே
தங்கள் கோடி வாக்குகளை
உங்களுக்கு
கொட்டிக்கவிழ்த்து
"அபிஷேகம்" செய்திருக்கிறது.
தென்னாட்டில்
அவை வெறுங்குடங்களை
உங்களுக்கு கொட்டினாலும்
எண்ணிக்கை தானே இங்கு
முக்கியம்.
எண்ணிக்கை கணக்கு வென்றது.
கோப தாப ரசாயனங்கள்
தோற்றது.
எது எப்படியிருப்பினும்
ஒரு அடி நீரோட்டம்
எப்படி இழையோடுகிறது
என்பதை காலம் தீர்ப்பு சொல்லட்டும்.
கடிகாரத்து முட்களை
திருப்பி வைப்பதால்
காலம் பின்னோக்கிப் போவதில்லை.
அந்தக்கடியாரம்
அப்படியே ஓடிக்கொண்டிருக்கட்டும்.
இருப்பினும்
உங்கள் உயிர் நண்பருக்கு
அந்த முணு முணுப்புகள் கூட‌
பிடிக்காதே!
உள்ளே முணுமுணுக்கும் அந்த
எச்சரிக்கையின் குயில்பாட்டுகளில் அவர்
எரிச்சல் அடையலாம்.
அந்த கடிகாரத்தை
அதாவது
இந்த பத்திரிகைகளையெல்லாம்
கசக்கிப்பிழிந்து கூழாக்கி
கஷாயம் வைத்து குடித்துவிடலாம்
என்று சொன்னாலும் சொல்லுவார்.
நீங்கள் உங்கள்
"மன்கிபாத்"தின் மனசாட்சிக்குள்....
அதுவும் கூட உங்களுக்கான‌
இமயமலைக் குகை தான்...
தியானம் எனும் உங்கள் பிலிமை
ஓடவிடுங்கள்.
மானுடம் மட்டுமே ஒளிரக்கூடியது.
மானுடம் மட்டுமே அறிவுச்சுடரில்
ஆயிரம் பிரம்மாக்களை
கர்ப்பம் தரிக்க வல்லது...மத‌
சர்ப்பங்கள் படம் காட்டுவதில்
மனத்திட்பங்கள் ஓய்ந்து போகவிடக்கூடாது.
உங்களுக்கும்
ஆயிரம் தெரியும்.
ஆயுதம் அல்ல தீர்வு தருவது என்று.
நூத்திஅம்பதாவது பிறந்த நாள்
வருகிறதாமே இந்த ஆண்டு...
மானுடத்தின்
அந்த "புறாக்குஞ்சு" புன்னகை பூத்து.
வாழ்த்துக்கள்.
ஆம்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.

================================================================










செவ்வாய், 28 மே, 2019

ஊசியிலைக்காடுகள்

ஊசியிலைக்காடுகள்



பெண்ணை மடல் மா
==========================================ருத்ரா இ.பரமசிவன்



பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!
தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக்கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.
தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.
வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

====================================================
(இதை எழுதியது ருத்ரா இ பரமசிவன்.)



விளக்க உரை
=========================================


பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!

பனைமர மட்டைகளில் செய்யப்பட்ட குதிரை குளம்பு அதிர வருவது போல் ஆரவாரத்துடன் தன் காதல் தோல்வியை ஊருக்கு உணர்த்தும் வண்ணம் எருக்கம் பூ மாலை சூடி மன நெகிழ்ச்சி யுற்று வருகின்றவனே.நகைகள் அணிந்த தன் காதலியின் பொன் போல் சுடரும் அந்த நெற்றியழகைக் காண ஒவ்வோரு வீடாக உற்றுப் பார்த்து மெல்ல மெல்ல அசைந்து வருபவனே.

தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக் கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.

தகரம் எனும் நறுமண மூலிகையின் நெய்பூசிய மணம் மிக்க அவள் கூந்தல் (தகரக்கூந்தல்) வெம்மை மிக்க கதிரவனின் ஒளிக்கூந்தல்  கற்றைகளைப்போன்று கூர்த்த நோக்கில் உன்னைப் பார்க்கும் அவளின் (காதல்) நிலையினை நீ அறியாமல் சிறுமை மிக்கவனாய் படிக்காத முட்டாளைப் போன்று (புல்லியக் கல்லா நெடுமகன் போல) இந்த பனைமடல் குதிரை ஏறி வந்து விட்டாயே! மடத்தனம் எனும் பெண்மை நிறைந்த "மடப்பம்"என்பது ஆண்மகனுக்கு கொஞ்சமும் பொருந்துமோ? அவளது மெல்லிய மடப்பத்தை (காதலை வெளிக்காட்டாத‌ சிணுக்கம் நிறைந்த மடம் எனும் உணர்வை) நீ இப்படி புரிந்து கொள்ளாமல் ஒரு முரட்டுத்தனமான மடத்தனத்தை இப்பொய்க்குதிரை ஏறியா வெளிப்படுத்துவது? உன் குதிரையின் பொய்யான பிடரி மயிர்ப் பிசுறுகள் அலரிப் பூக்களைப்போல  தெருவெல்லாம் உதிர்வது போல் நீ என் மீது இப்படி ஊரார் தூற்றும் பழிச்சொற்கள் பரவ விடலாமோ?(விரித்தனை என்னே விரியுளை அலரி)

தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.

அவள் அடைந்த பழிச்சொல்லால்  அவள் மிகவும்  துயர் உற்றதை இப்போதாவது தெரிந்து கொள். குட்டையான மயிர்கள் நிறைந்த உடம்பினை உடைய கரடியைப்போல் முள் படர்ந்தாற்போன்றே (குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர் முள் செத்தென) அந்த வரிகள் நிறைந்த நெடிய பனைமடல் குதிரையை அழித்துவிட்டு (தொலைச்சிய) அல்லது கொன்று விட்டு திரும்பிச்செல்.ஒளிமிக்க அணிகலன்கள் பூட்டிய அவள் உன்னை நினைத்து பசலையுற்று கண்ணீர் மல்கும் காட்சியை இப்போதாவது கண்டு கொள்வாயாக.

வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

நாளை விடிவெள்ளி தோன்றும் வேளை அவள் உன்னை சந்திக்கும் ஒரு அடையாளம் (விண்குறி) அறிந்து விரைந்து வந்துவிடு. குன்றுகளின் அந்த அடர்ந்த வெளியில் அவளை நீ எதிர்கொள்ள வந்துவிடு.பெருமை மிக்க அணிகள் அணிந்து அங்கு உனக்காக காத்திருக்கும் அவளை காதலுடன் சந்தித்துக்கொள்ள‌ விரைந்து நீ அங்கு வருவாயாக!

(தலைவன் மடலேறி தலைவிக்கு ஊர்ப்பழி ஏற்படுத்திய தவறைச் சுட்டிக்காட்டிய தோழி அவனுக்கு எடுத்து உரைத்தது.பனை மடல் குதிரை ஏறி தலைவன் தன் காதல் நிறைவேறாமல் போனதே என்று தன் துயரத்தை ஊருக்குச்சொல்லும் ஒரு வழிமுறை இது.தன்னைக் காதலிக்கவில்லை யென்றால் அமிலம் வீசிக்கொல்லும் இன்றைய அரக்கத்தனமான காதல் அல்ல அன்றைய சங்க காலக் காதல்)

=================================ருத்ரா இ.பரமசிவன்
20.03.2016

ஊசியிலைக்காடுகள்




ஊசியிலைக்காடுகள் 


அர்த்தம் தேடி...
=============================================ருத்ரா

அது நம்மோடு வருகிறது.
நம் புன்னகையில்
நங்கூரம் பாய்ச்சுகிறது.
நாம் பார்க்கும் சினிமாவுக்கும்
டிக்கட் எடுக்காமல்
நம் கூடவே வந்து
நம் அருகில் உட்காருகிறது.
நகர பேருந்துவில்
உட்கார இடம் கிடைக்காமல்
கம்பியில் முட்டு கொடுத்து
நாம் நிற்கும் போது
அந்த கம்பியாக
நம்மை தாங்கிக்கொள்கிறது.
வியர்வை நாற்றம்
செண்ட் வாசனை
பூ வாசனை
நெருக்கமான "ஜனநாயக" வாசனை
அவ்வப்போது
எச்சில் தெறிக்க ஊதப்படும்
நடத்துநரின் விசில்கள்
எல்லாவற்றிலும்
கதம்பமாய்க்கோர்த்து
பின்னிக்கொண்டு
நம்மோடு ஒட்டிக்கோன்டு
அது வருகிறது.
நம்மிடயே
சவடால் பேச்சுகள்
புலம்பல் குரல்கள்
ஆவேசப்பாய்ச்சல் ஒலிப்புகள்
வண்ண வண்ண அரசியல் கொடிகள்
ஆடி ஆசைக்கும்
உள் குரல்கள்
எல்லாவற்றிலும்
அந்த நீரோட்டத்திலும்
அது கால் நனைக்கிறது.
ஹாய் என்று
மனதுக்கு பிடித்தவளுக்கு
ஒரு ரோஜாப்பூ நீட்டும்போதும்
அதன் மகரந்தப்பொடியின்
சிம்மாசனத்திலும்
"அட்னக்கால்"போட்டுக்கொண்டு
உட்கார்ந்திருக்கிறது.
இவ்வளவு ஏன்
கடைசியில்
கட்டையாய் விறைத்து
நாலு பேர் தூக்கிக்கொண்டு
போகும்போது கூட‌
கொள்ளிச்சட்டியில்
புகைந்து கொண்டு நம்மோடு வருகிறது.
போலீஸ் நாய்
எல்லாவற்றையும் மோப்பம் பிடித்து
காடு மேடு கல் புல்
மரம் மட்டை மண்ணாங்கட்டி
எல்லாம் வாசனை பிடிக்கிறது.
ஆனால்
குறுக்கே ஆறு ஓடினால்
விக்கித்து நின்று விடுமாமே அது!
ஆம்..
இதுவும் அப்படித்தான்
விக்கித்து நிற்கிறது.
எதைக்கண்டு?...
தேடும் பொருளுக்கும்
தேடப்படும் பொருளுக்கும்
இடையே
கட்டப்படும் சொற்கூடங்கள்
லட்சம் லட்சமாய்
குவிந்து கிடப்பதில் அது
குழம்புகிறது..
ஆம்.
மன சாட்சி தான் அது.

=======================================================

மனவிளிம்பு





மனவிளிம்பு
========================================ருத்ரா இ.பரமசிவன்


மனவிளிம்பு ஓரத்தில்
நுரை ஜரிகையிட்ட
ஆயிரம் கனவுகள்.
கடற்குருகுகள்
வெள்ளித்திவலைகளை
மீன்கள் என்று எண்ணி
அலகு கவ்வி கவ்வி
களைத்தது போல்
நானும்
அவள்
மின்னல்  வெட்டுப்
பார்வைகளையெல்லாம்
அதே வைரத் திவலைகளில் தான்
என் மௌன வலை வீசி
பிடிக்கத்துடிக்கிறேன் .
யார் அவள்?
யாரோ ?எவளோ ?
மின்னலுக்கு முகவரி எது?
அந்த பார்வை மட்டுமே
இந்த வானம் முழுவதும்
இந்த கடல் முழுவதும்
பரந்து விரிகிறது!
எனக்கு தோன்றும்
முகத்தையெல்லாம்
செதுக்கிப்பார்க்கிறேன்.
அதோ அந்த குருகுகளைப்போல.
அவற்றின் அலகு உளிகள்
அந்த நுரையில் எதை செதுக்குகின்றன?
அவை ஒவ்வொரு தடவை
கொத்தும்போதும்
என் இதயம் வலிக்கிறது.
அவை என்றாவது ஒரு நாள்
அப்படி செதுக்கி செதுக்கி
அவள் முகத்தின் வடிவை காட்டிவிட்டால்...
வேண்டாம்..வேண்டாம் .
என்னால் தாங்க முடியாது .
முகம் தெரியவே வேண்டாம் .
வேண்டாம் ..வேண்டாம்.
கைகளால்
அந்த குருகுகளை விரட்டுகின்றேன்.
அவை அங்கே தான் கொத்திக்கொண்டிருக்கின்றன.
மீண்டும் மீண்டும் விரட்டுகின்றேன்.
அவை கடலை நோக்கி பறக்கின்றன.
நானும் விடாமல் துரத்துகிறேன்
துரத்திக்கொண்டே இருக்கின்றேன்.
நீலக்கடல் முழுவதும் என்னுள் .
அந்த நீர்விளிம்பில்
கலங்கலாய்
சிவப்பாய்
ஒரு பிரம்மாண்ட செர்ரிப்பழம்.
அது சூரியப்பழமா !..
இல்லை
அவள் முகமா ?
தெரியவில்லை.
அந்த நீலக்கடல் முழுவதும்
என் இதயத்தின் மேல்.
அல்லது
என் உடம்பின் மேல்.
முள்ளு முள்ளாய் போர்த்த மீன் கூட்டம்
ஊசிப்பற்களால்
என்னை மொய்க்க
என் உடம்பு அங்கு மாயம்.
இருப்பினும்
அங்கு தான் என் இதயம்
ஆம்
இன்னும் அங்கு தான் என் இதயம்!

ஒவ்வொரு மாலையிலும்
அந்த கடற்கரையில் நடக்கின்றேன் ..
அந்த இதயத்தை தேடி...

===================================================================
புகைப்படம் : நான் எடுத்தது ...அமெரிக்கா  லாஸ  ஏஞ்சல்ஸ் ...சுமா..பீச். ..07.10.2015.




ரஜனி ஒரு பல்கலைக்கழகம்.

ரஜனி ஒரு பல்கலைக்கழகம்.
=============================================ருத்ரா

மக்கள் அவை தேர்தல் பற்றி
பன்முகக்கருத்துகள் கூறிய
ஒரு பல்கலைக்கழகம் ரஜனி.

மோடி வெற்றி
தனி மனித வெற்றி என்றார்.
அப்படியானால் காவியை
அவரிடமிருந்து கழித்து விட்டார்.

தமிழ் நாட்டில்
மக்கள் விரோதப்போக்குக்கு
கிடைத்த தோல்வி என்றார்.
அந்த எதிர் அலையை
அவர் ஆதரிக்கப்போகிறாரா?
எதிர்க்கப்போகிறாரா?
என்று
எந்த அடையாளமும் காட்டவில்லை.
போர் வரும்போது
பார்த்துக்கொள்ளலாம் என்றவர்
இன்னும் வேறு
ஒரு அட்டைத் "தர்பாரை"தானே
படத்தாயாரிப்பில்
அடைகாத்துக்கொண்டிருக்கிறார்.

ஸ்டாலினை அன்று பாராட்டினார்.
இன்று பாராட்டமுடியாமல்
தொண்டையில் நிற்கும்
"மோடி" விக்கல் தடுக்கிறதோ?

ஒரு தலைவராக
ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி
என்று சொல்ல ஏதோ தடுக்கிறது.
ப்ராம்ப்டர் அதாவது தமிழருவி மணியன்
காதில் ஏதாவது கிசு கிசுத்திருப்பார்.

ராகுல் காந்தியின்
அயராத உழைப்பைக்கண்டு
புல்லரித்திருப்பார் போலும்.
அவர் அதற்காக
ராஜினாமா செய்யக்கூடாது
என்று சொல்லியிருக்கிறார்.
மனிதன் என்ற படத்தில்
அன்று நடித்திருக்கலாம்.
இன்று தன் சொற்களால் காட்டிவிட்டர்
மனிதன் என்று.
அதனால் தான்
தோல்வி அடைந்த ராகுல் காந்திக்கு
புத்துணர்ச்சி ஊட்டும் சொற்கள்
தந்திருக்கிறார்.

இந்த தேர்தல் பற்றி
அவர் அறிக்கைகளில்
பல வியூகங்களை அவர் தனக்குள்
சுருட்டி வைத்திருப்பதாய் தான்
தெரிகிறது.
நண்பர் கமல் பற்றி
குறிப்பிட்டு ஏதும் சொல்லவில்லை
என்றாலும்
கமலின் அந்த பதினாலு மாத‌
கட்சி வளர்ச்சிக்கு
கணிசமான வெற்றி அது
என்று பாராட்டியுள்ளார்.


கோட்சே பற்றி
கமல் சொன்ன கருத்துக்காக‌
ஆத்மீக தலைவர் ஜீயர் அவர்கள்
கமலை வெளியே நடமாட விடமாட்டோம்
என்றார்.
பால்வளத்து மந்திரி நாவளம் இன்றி
கமலின் நாவை....றுப்போம் என்று
சொல்லாமல் சொன்னார்.
அது போகட்டும்.
மோடிஜி பதவி ஏற்புவிழாவுக்கு
கமல் ரஜனி இருவருக்கும்
அழைப்பிதழ்கள் வந்திருக்கின்றன.
வித்தை காட்டும் உடுக்கைகள் ஒலிக்கின்றன.
எதற்குள் எது?
அரசியலுக்குள் சினிமாவா?
சினிமாவுக்குள் அரசியலா?

===============================================

ஞாயிறு, 26 மே, 2019

தூரம் தொலைவு அல்ல


தூரம் தொலைவு அல்ல 
==============================================================
ருத்ரா 


நம் லட்சியம் 
வெகு அருகில் தான் ..
அதுவும் கூட 
நம் கைகளில் தான் இருக்கிறது.
தொலைவில் இருக்கிறது 
என்று சொல்லி 
அதை "தொலைத்து"விடலாமா?
வெற்றியை நாம் 
எப்போதோ எழுதிவிட்டோம் .
எழுத்துக்கூட்டி 
வாசிக்க வேண்டும் அதை.
அதைத்தான் 
நாம் நம் நெஞ்சின் தகிப்பில் 
அடுப்பு மூட்டி 
அழல் வீசவேண்டும்.
ஏனெனில் 
தமிழ்  தமில் ஆகி 
நம் நாக்கின் நுனிக்கு வந்து விட்டதே!
அயல் மொழிகளின் 
தந்திரத்தில் 
அவற்றின் ஆதிக்கபோரில் 
தமிழ் விழுந்து விடும் 
தருணத்துக்கு வந்து விட்டதோ 
என்ற ஐயமே 
இங்கு புகை மூட்டமாய் 
இது வரை மூடிக்கிடந்தது.
இன்று 
வடவர்களும் 
தமிழை எழுத்துக்கூட்டி  வாசித்தே 
நம் வாய்ப்புகளைப்  பறித்துக்கொள்ளுகிறார்களாமே.
மக்கள் அவைக்கு இப்போது 
நம் வெற்றியை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறோம்.
நம் வெற்றியை இனி 
அவர்கள் 
எழுத்துக்கூட்டி வாசித்துக்கொள்ளட்டும்.
அதில் அவர்கள் புரிந்த கொள்ளப்போகும் 
வரிகள் இதுவே.
தமிழ் வெல்லும்!
தமிழ் வென்றே தீரும்!

==================================================================

சிந்தனையே ஆய்வு (தாட் எக்ஸ்பெரிமென்ட்)

சிந்தனையே ஆய்வு  (தாட் எக்ஸ்பெரிமென்ட்)
=============================================================ருத்ரா

         நா என்பது நாவை குறிப்பது.நாவின் அசைவே மொழி ஆயிற்று.ஆனால் ஒலியைக்காண முடியாது.அது கண் பார்வைக்கு தோற்றம் தருவது அல்லது எழுவது என்பது வடிவப்படுத்தலே ஆகும்.எனவே ஒலி வடிவம் வரி வடிவம்
ஆகும்போது எழுத்து ஆனது.அதன் பிறகு தான் பொருந்தி உள் நிற்பது (பொருள்) எல்லோருக்கும் புலப்பட்டது.நம் இலக்கணத்தில் எழுவாய் ("சப்ஜெக்ட்)தோன்றுவதற்கு அடிப்படை இந்த வடிவத்தோற்றமே.("எழு தரு ஞாயிறு கடற்கண்டாங்கு).மொழி முதலில் நாவின் அசைவிலிருந்து வடிவத்தோற்றமாய் "எழு"வதாலேயே எழுத்து ஆயிற்று.வாய் மொழி "செய்"மொழி ஆனது."செய்யுள்" மொழியே எழுத்து மொழி.ஆக்கை என்றால் ஆக்குதல் என்று பொருள்.ஆனை... யானை ..ஆடு ..யாடு...என்பது போல் ஆக்கை யாக்கை ஆயிற்று.எனவே யாப்பு இலக்கணமே எழுதும் முறைகளின் இலக்கணம் ஆயிற்று.கை கரம் போன்றவை தமிழ்ச்சொல் ஆகும்.இவற்றின் செயல் தான் காரியம் ஆயிற்று.காரிகை என்று வடசொல் போல தோன்றுவது வடதமிழ் தான்.(கவுட பாத காரிகை).ஓதம் ஓதை என்பது ஒலித்தல் ஆகும்.எனவே முதல் தமிழர்கள் ஓதி உணர்த்துவதே கல்வி ஆயிற்று.வேய் என்றால் புல் முதல் தமிழர்கள் உலர்ந்த புல்லில் தீ மூட்டி வட்டமாய் அமர்ந்து "ஓதி உணர்ந்து உணர்த்திக்கொண்டதே" (வேய் +ஓதம்) வேய்தம்..வேதம் ஆனது.சிந்து வெளித்தமிழர்கள் திரைகடலோடி திரைவியர்கள் ஆகி உலக மொழிகளின் கலவையை தமிழ்ப்படுத்தினார்கள்.மெய்யெழுத்துக்களை நான்கு வடிவங்களில் குறிப்படுத்தியதே சமஸ்கிருதம் ஆகியது."ஓதல் ஆதன் தந்தை தான் "ஓதலாந்தையார்" ஆனது.இந்த வடதமிழ் முதல் தமிழான தென்தமிழோடு இயைவு பெறாமல் இருந்ததே மொழி வழி இன வழியாக பிரியக்காரணம் ஆயிற்று.இன்று வரை தமிழ் மட்டுமே நான்கு வடிவ மெய்யெழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் புழங்கி வருகிறது.மறைமொழியாய் (வடதமிழ்)மக்கள் புழக்கத்திலிருந்து மறைவு பட்டதாலேயே அது மறை மொழியாயிற்று."நிறைமொழியாக மாந்தர் மொழியாக இருந்தது தொல் தமிழே.நெடி குறிலுக்கு மாத்திரை தந்தவர் தொல்காப்பியர்.இவரது மாணாக்கரான பாடினி(பாணினி...பாணன் தான் ..பாடுநன்) அந்த மெய்யெழுத்துக்கு மெல்லின வல்லின ஒலிப்புகளுக்கு
மாத்திரை தந்து வேறு படுத்தினார்.இவர் அவருக்கு மாணாக்கரா அவர் இவருக்கு மாணாக்கரா என்பது வடதமிழ் தென் தமிழ்ப் பாகுபாடு தான்.வடதமிழ்ப் பெயர்கள் தென் தமிழ்ப்பெயர்களோடு நிரவி நின்றதற்கு காரணம் இரண்டும் ஒரே தொல் தமிழ் வேர்ச்சொற்களை கொண்டிருப்பதே காரணம். இருப்பினும் சமஸ்கிருதத்தில் திரைவிய‌த்தமிழன் கொணர்ந்த எகிப்திய கிரேக்க லத்தீன் மற்றும் சுமேரிய பாரசீக பாபிலோனிய ஒலிப்புகளே அதிகம் இருப்பதால் அது அயல் மொழி போல் தோற்றுகிறது.
இது எனது பேராசை அல்ல. ஆதாரங்கள் தோண்டப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.ஐன்ஸ்ட்டின் இயற்பியலில் கண்டுபிடித்தது போன்ற சிந்தனைச்சோதனை (தாட் எக்ஸ்பெரிமென்ட்)யே ஆகும் இது.

============================================================ருத்ரா
27.02.2015

சனி, 25 மே, 2019

ஒரு யுத்த காண்டம்

ஒரு யுத்த காண்டம்
=============================================ருத்ரா

"இன்று போய் நாளை வா"
என்றான் அந்த ராமன்.
இந்த ராமர்களோ
சத்தமில்லாமல்
நியாயத்தோடு
ஒரு யுத்தகாண்டம்
இரவோடு இரவாய்
நடத்தி முடித்து
எதிர்க்கட்சி எல்லாம் எதற்கு என்று
அந்த பெட்டிக்குள்ளேயே
நடத்தி முடித்த பட்டாபிஷேகத்தோடு
அல்லவா
வெளிக்கிளம்பியிருக்கிறார்கள்.
வாழ்க ஜனநாயகம்!
அதற்கும்
நம் வாழ்த்துக்கள் உரித்தாகுக.


கணிப்பொறிக்குள் விழுந்து
காரணமாகிப்போன
அந்த கள்ளமில்லா பூச்சிகள்
கோடிக்கால் பூதங்களாகும்
காலமும் வரத்தானே போகிறது.

"பிதாவே அவர்களை மன்னியும்.
அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று
தெரிய இயலாத நிலையில் தான்
இன்னும் இருக்கிறார்கள்."

ஜனநாயகம் என்ற
கிரேக்க நாட்டு சிந்தனை
இன்னும் இந்த மண்ணில்
காலூன்றவே இல்லையோ?
எழுபது ஆண்டுகளாய்
நான்கு வர்ணம் என்ற‌
குறுகிய தொட்டியில் தான்
நம் மூவர்ணம் எனும் பிரம்மாண்ட‌
ஆலமரத்தை
"போன்சாய்" மரமாய்
குறுக்கி வெட்டிச் சிதைத்து
அழகு பார்த்துக்கொண்டிருந்தோம்.
அது இன்னும் குறுகி
மதவாதிகள் எனும் மந்திரவாதிகளின்
கைவிரல் மோதிரமாய் அல்லவா
மாறிப்போனது.
ஜனநாயகம் எனும்
எங்கள் மூவர்ணத்தாயே!
எங்கள் கண்களின் பார்வையிலிருந்து
நீ
பிடுங்கியெறியப்பட்டாலும்
எங்கள்
சிந்தனை வானத்தின் விடியல் எல்லாம்
உன் வெளிச்சம் தான்.
ஐந்தாண்டு ஒன்றும்
ஏதோ கண்ணுக்கே தெரியாமல்
ஒளிந்து கொள்ளும் ஒளியாண்டு அல்ல.
மக்களின் உரிமைக்குரல் முழக்கம்
எல்லா மூட்டங்களையும்
தவிடு பொடியாக்கும்.
உனக்கு என்றுமே
வெற்றி வெற்றி வெற்றி தான்.
வெற்றி தவிர வேறில்லை!

=======================================================



வியாழன், 23 மே, 2019

ரோடு ரோலர் போல.





தலைப்பே கவிதை.
கவிதை வேறு எதற்கு
நம் தேர்தல் பற்றி சொல்ல?

=================================ருத்ரா

புதன், 22 மே, 2019

இன்னும் ஒரு ஐந்தாண்டு

இன்னும் ஒரு ஐந்தாண்டு
==============================================ருத்ரா

இன்னும் ஒரு ஐந்தாண்டுக்கு
இதே ஆட்சி நீடிக்கும்
என்று
கருத்து மழை பொழிந்து விட்டது.
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.
ஆனாலும்
ஒரு நெருடல்.
எல்லா மதங்களின் ஊற்றுக்கண்
இந்து மதம் என்று
சொல்கிறார்களே!
பிரம்ம சூத்திரத்தை வரி வரியாக‌
படித்தால்
அதில் தத்துவங்களின் உரசல் தான்
ஞானப்பொறி தெறிக்கிறதே தவிர‌

அந்த
உருவமில்லா
பிரப்பு இறப்பு அற்ற‌
வர்ணங்கள் அற்ற‌
மன வக்கிரங்கள் அற்ற‌
பிரம்மம் எனும் பெரும்பொருளை
வேறு
எந்த குறுகிய வட்டத்துள்ளும்
அடைக்கவில்லையே.

அப்படியிருக்க‌
அந்த இந்து மதத்தை
அஸ்வமேத குதிரையாக்கி
இந்தியாவின்
மூலை முடுக்கெல்லாம் அனுப்பி
எங்கே
இதைத்தொடு பார்க்கலாம்
அப்புறம் இருக்கிறது
என்று
நாக்கு துத்தும் பயமுறுத்தல்களை
எல்லாம்
கணினிப்பொறிக்குள்
நிரப்பியது எது?

கார்ப்பரேட்டுகளா?
ஊடகங்களா?
இல்லை யெனில்
வேறு எது? அல்லது யார்?
சமுதாய பொருளாதார சித்தாந்தம்
எப்போதும்
ஆட்டுக்குட்டிகளைத் தின்னும்
புலிகளின் காடாகத்தான்
இருக்கவேண்டும்
என்று சதுரங்கம் விளையாடும்
அந்த கருப்பு நிழல்களா?
ராமன் ஆண்டால் என்ன?
ராவணன் ஆண்டால் என்ன?
கார்ல்மார்க்ஸ்கள் தான் ஆளக்கூடாது
என்னும் கருத்து
நம் நாட்டில் கொழுக்க கொழுக்க‌
வளர்க்கப்பட்டு வருகிறது.
எழுபத்தைந்து சதவீத நாட்டின் வளங்கள்
ஒரு ஐந்து சதவீதத்தினரிடமே
இருக்கிறது
என்ற உண்மையின் பக்கம்
இந்த நாடு திரும்பிவிடக்கூடாது
என்பதில் தான்
இவர்கள்
எல்லா மதங்களும்
அவற்றின் சாஸ்திர சம்பிரதாயங்களும்
மற்றும்
அவற்றின் தாரை தப்பட்டைகளான‌
ஊடகங்கள் எல்லாம்
குத்தாட்டங்கள் போடுகின்றன.

கடவுள்களின் பொன்  மொழிகளோ
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
என்பதை
மாற்றிச்சொல்வதே இல்லை.
மானிடத்தின் சமநீதி  மட்டும்
எங்கோயோ படுகுழியில் கிடக்கிறது.
இந்த உலகம்
பூமத்திய ரேகை
கடக ரேகை
மகர ரேகை
என்ற கற்பனைக்கோடுகளால்
வரையப்பட்டிருந்த போதும்
பட்டினி ரேகை
பிணிகளின்  ரேகை
மத வெறிகளின் ரேகை
இவற்றால் தான்
வார்க்கப்பட்டிருக்கிறது.
மனித வர்க்கத்தின் முதல் குடிமகன்
பிறந்த
ஆப்பிரிக்க கண்டத்தின்
இருட்டுத்திட்டுகளில்
இன்னும்
எலும்புக்கூடுகள் தான்
மனித அடையாளங்களாக
இருக்கின்றன.
தாய் எலும்புக்கூட்டில்
முலைப்பால் சப்ப நினைக்கும்
சிசு எலும்புக்கூட்டின்
அந்த குழிக் கண்களே
விஞ்ஞானிகளாலும்
கணித சூத்திரம் சொல்லமுடியாத
"பிளாக் ஹோல்"கள்  ஆகும்!

மார்பிள்களில் பள பள வென்று
உயர்ந்த கோவில்களை க்கட்டுகிறவர்களே
வறுமையின்
மார்பு எலும்புகளில்   தான்
இந்த மார்பிள்கள்
கடையப்பட்டு கலைத்தோற்றம்
காட்டுகிறது
என்பதை அறிவீர்களா?

நம் அரசியல் சிந்தனையில்
போலிக்கடவுள்களை
ஆயிரக்கணக்கான அடிகள்
உயரத்தில் சிலை செய்து
நிறுத்தியபோதும்
உண்மையின் நெருப்பு அதோ
கொழுந்து விட்டு எரிகிறதே
பசிக்கின்ற வயிறுகளில் ...
அந்தக கனல் தகிக்காத வரை
இந்த வாக்குப்பெட்டிகளை
"வெர்ச்சுவல்  ரியாலிட்டி கேம்ஸ்"
சுற்றி சுற்றி வந்து
கும்மியடிப்போம் வாருங்கள்!

தேர்தல் முடிவுகள் இன்று
எண்ணப்படுகின்றனவாம்.
கர்ப்ப அறைக்குள்ளேயே
நுழைந்து போய்
வேண்டிய
தில்லுமுல்லுகளை செய்யும்
ஒரு சர்வாதிகார ஜனநாயகம்
செழித்த தேசத்தில்
இனி மக்களின் ஜனநாயகம்
வெறும்
நெட்டைப் பகல் கனவுகள்  தான்.

பார்க்கலாம்
பிறப்பது
அசுர வித்தா ?
நல்ல வித்தா?
என்று.



====================================================
23.05.2019  நேரம் காலை 7.00 மணி.
















நடுவுல கொஞ்சம் "பட்ஜெட்டை"க்காணோம்.



நடுவுல கொஞ்சம் "பட்ஜெட்டை"க்காணோம்.
=======================================================ருத்ரா

கொஞ்சம் என்ன‌
நெறயவே காணோம்.
பைண்டு பண்ணுன புத்தகத்த‌
தெறந்தா
முதல் அட்டையும்
கடைசி அட்டையும்
மட்டும் தான்
பத்திரமா இருக்கு!

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய்
இந்த "பண்டோரா" பெட்டியை
திறந்து கொண்டே திறந்துகொண்டே
இருக்கிறார்கள்.
திறக்கும் போதே மூடிக்கொண்டே
திறந்து கிடப்பது போல் காட்டும்
அற்புதப்பெட்டி இது.
வறுமைக்கு கோடு போட்டவர்கள்.....
எல்லாருக்கும் எல்லாமும் இதோ
என்று
கனவுகளை பிசைந்து
தின்னச்சொன்னவர்கள்......
ஐந்தாண்டு திட்டங்களின்
ரங்கோலி வரைந்தவர்கள்.....
ராமராஜ்யம் எனும் அதிசயம்
உள்ளே அடைந்து கிடப்பதாய்
தூப தீபம் காட்டியவர்கள்.....

மக்களின் மனதையெல்லாம்
மங்களாசனம்
செய்த சாசனம்
எங்களுடையது என்று
மார் தட்டிக்கொன்டே இருப்பவர்கள்...

சாசனம் இருக்கிறது..
புத்தகம் இல்லை.
புத்தகம் இருந்தால்
வாக்கியங்கள் இல்லை.
வாக்கியங்கள் இருந்தால்
வார்த்தைகள் இல்லை.
வார்த்தைகள் இருந்தால்
அர்த்தங்கள் இல்லை.
அர்த்த சாஸ்திரங்கள்
ஆயிரம் இருக்கு.
அர்த்தங்களைத் தேடுங்கள் என்று
சொல்கிறார்களே என்று
ஐந்து ஐந்து ஆண்டுகளாய்
பெட்டிகளில் தேடினோம்..
மின்னணுப்பொறிகளில் தேடினோம்..
பஞ்ச பாண்டவர்களாய்
பாரதத்தையே தேடுகிறோம்..
நடுவுல கொஞ்சம் பாரத‌த்தையே காணோம்.
வியாஸரைக்கூப்பிடுங்கள்.

=======================================================ருத்ரா

செவ்வாய், 21 மே, 2019

டெல்லி கருத்துக்கணிப்புகள்.



டெல்லி கருத்துக்கணிப்புகள்.
==========================================================ருத்ரா

அந்த மரத்தடியில்
ஒரு கிளி ஜோஸ்யக்காரன்.
கூடவே இன்னொருவனும்
இருந்தான்.
பெட்டிக்குள் கிளி.
சின்ன பாய்.
கிளி கவ்வி எடுத்துத் தர‌
நிறைய அடுக்கிய சீட்டுக்கள்.
மற்றும் கிளிக்கு
உணவாக நெல்லுப்பொரி
சிவப்பு மிளகாய்ப்பழம்.
இத்யாதி..இத்யாதி..
டெல்லியில்
ஒரு பெரிய சாலையை ஒட்டிய‌
சின்னத்தெருவில்
அந்த அசோக மரத்தடியில்...

முதலில் ஒருவன் வந்தான்.
கிளி சீட்டை எடுத்துக்கொடுத்தது
"அச்சா ஹை! ஹனுமான் ஜி ஆயே ஹை!
ஜோஸ்யக்கரன்
உற்சாகமாக சொன்னான்.
கேட்டவனும் ரூபாயை கொடுத்துவிட்டு
சீட்டியடித்துக்கொண்டே
போய்விட்டான்.
இன்னொருவன் வந்தான்.
அவனுக்கும்
ஹனுமான் ஜி ஆயே ஹை தான்.
அடுத்து ஒருவன் வந்தான்.
கிளி
அவனுக்கும்
ஹனுமான் ஜி யைத்தான்
தூக்கிப்போட்டது.
இப்படி
ஹனுமான் ஜி கள் தான்
வந்து கொண்டே இருந்தார்
சீட்டுகளில்.
கரன்சிகள் குவிந்தன.
கிளி ஜோஸ்யக்காரனுக்கு
பரம குஷி.
கடையை  மூடீ
பாயைச்சுருட்டிக்கொண்டான் அவன்.
கூட இருந்தவன் தான்
கட்டு கட்டாய்
அந்த ஸ்பெஷல் அனுமான்
படச்சீட்டுகளை கிளிக்கு கொடுத்தவன்.
எல்லாச்சீட்டுகளிலும்
ஒரே ஹனுமான் ஜி
அவன் ஏற்பாடு தான்.
வசூல் அதிகம் தான் சார்
நன்றி
என்றான் ஜோஸ்யக்காரன்.
ஆமாம்பா
பங்கு மார்க்கெட்டில்
இன்று மூணு லட்சம் கோடிக்கும் மேல்
வியாபாரமாம்.
பொருளாதாரம் நிமிர்ந்தது.
என்று
அதைக்கொண்டாட
விருந்துக்கு கிளம்பிவிட்டான்.

அது சரி.
நெருப்பில்லாமல் புகையில்லை.
இது புகையா? நெருப்பா?
ஏற்கனவே நெருப்பு வைத்ததால் தான்
இந்த புகையா?
அல்லது
இனிமேல் தான் நெருப்பை
உள்ளே வைக்கப்போகிறார்களா?
இது "அலிபி"யா?
இல்லை "கிலி"பியா?
ஹனுமான் ஜி கள்
நம்மைக் காப்பாற்றட்டும்!

====================================================







படத்தை மாற்று


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், கார் மற்றும் வெளிப்புறம்

படத்தை மாற்று
=========================================ருத்ரா

படத்தை மாற்று படத்தை மாற்று
என்று
பட்சி சொல்லிக்கொண்டே இருந்தது.
கைக்கு கிடைத்த படத்தை
"கிளிக்கி"விட்டேன்.
இப்போது கிளி என்ன சொல்கிறது என்றால்
தமிழன் அன்று
அகநானூறு புறநானூறு
சொல்லிக்கொண்டிருந்தான்.
அதெல்லாம்
இப்போது "பட நானூறு"ஆகி விட்டது.
இரட்டைக்காமிராவோடு தான்
குழந்தை அந்த இருட்டறையிலிருந்து
வெளி வருகிறது.





(முக நூல் படத்தை மாற்றி விட்டேன்.)



படத்தை மாற்று
=========================================ருத்ரா

படத்தை மாற்று படத்தை மாற்று
என்று
பட்சி சொல்லிக்கொண்டே இருந்தது.
கைக்கு கிடைத்த படத்தை
"கிளிக்கி"விட்டேன்.
இப்போது கிளி என்ன சொல்கிறது என்றால்
தமிழன் அன்று
அகநானூறு புறநானூறு
சொல்லிக்கொண்டிருந்தான்.
அதெல்லாம்
இப்போது "பட நானூறு"ஆகி விட்டது.
இரட்டைக்காமிராவோடு தான்
குழந்தை அந்த இருட்டறையிலிருந்து
வெளி வருகிறது.
"எதிரே பார்ப்பது
தன்னைப் பார்ப்பது"
என்ற இலட்சியம் தவிர
வேறு ஒன்றும் இல்லை.
அன்று இந்திரனுக்கு ஆயிரம்கண்
முளைத்தது போல‌
இன்று இந்த "அண்ட்ராய்டு" மனிதனுக்கும்
கண்கள் கண்கள் கண்கள்..
ஒவ்வொரு மயிர்க்காலும் மின்னல் சிலிர்க்கும்
கண்கள் தான்.
மனிதன் என்பது சிறந்து நிலைத்து
இருப்பதைக்குறிப்பதே
நம் தமிழின் வேர்ச்சொல்லான‌
"மன்"என்னும் "பகுதி".
ஆனால் மன் என்பது மனு என்னும்
சமஸ்கிருதச்சொல்லாய் மருவியதை
தமிழன் தலைகீழாகப்பார்த்து
அதை அவர்கள் சொல்லென்று
அர்ச்சனை செய்து கொண்டிருக்கிறான்.
அவன்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்று
அன்றைக்கே
"மன் கி பாத்" ஒலிபரப்பி விட்டான்.
ஆனால் இன்றோ
ஏதோ ஒரு "சிந்து பாத்தாய்"
அன்னியமாய் நிற்கின்றான்.
அவன் முதல் ஒலி அந்த‌
"சிந்து ஆற்றங்கரையில்"தொடங்கி
உலகத்துக்கே கொடுத்த வெளிச்சத்தை மறந்து
மத இருளில் கிடக்கும்
மந்தையாகிப்போனான்.
இந்த எலிப்பொறியிலிந்து விடுபட‌
இன்னும்
கணிப்பொறி பட்டன்கள்
எத்தனை காலத்துக்கு
தட்டிக்கொண்டிருக்கப்போகிறானோ?
தமிழா
என்று
உன்னை  ஒலித்துப்பயனில்லை.
அதோ பார்
விலையில்லா "செல்ஃபோன்"
உனக்கு கொடுக்கப்படலாம்.
உன்னைப்படமெடுத்துப்பார்த்துக்கொள்.
உன் தமிழ் முகம் அதில்
காணாமல் மறைந்தே போயிருக்கும்.

================================================

    படத்தை மாற்று
    =========================================ருத்ரா

    ஞாயிறு, 19 மே, 2019

    இது என்ன?




    இது என்ன?
    =======================================================================
    ருத்ரா இ  பரமசிவன்


    ஏழு கட்டங்களாக
    பரமபதம் ஆட்டம் விளையாடி
    முடித்துவிட்டார்கள்.
    நிதிஷ் குமார்
    இப்போது  தான் வாய் திறந்திருக்கிறார்
    எதற்கு இந்த
    பலவேசங்கள் என்று?
    இது சூப்பர் கம்பியூட்டர்களின் யுகம்
    ஒரே கிளிக்கில்
    இந்த நாட்டின் ஜனநாயக நாடியை
    பிடித்துப்பார்த்திருக்கலாமே.
    நாம் விண்வெளியில் அற்புத சாதனைகள்
    எல்லாம்
    நிகழ்த்துக்கிறோம்
    சந்திரன் செவ்வாய் புதன்  சனி யென்று
    நம் ஜாகக்கட்டங்களையெல்லாம்
    விண்வெளியில் காட்டி
    உலகையே வியக்க வைத்துக்கொண்டிருக்கிறோம்.
    அப்படியிருக்க
    இந்த தேர்தல் கணிப்பொறியை மட்டும்
    மாட்டுவண்டியிலா வைத்து
    ஊர்வலம் போவது?
    நம் நாட்டு அறிவுஜீவிகளுக்கு
    இது புரியாத புதிராக அல்லவா இருக்கிறது.
     கருத்துக்கணிப்புகள் என்று
    இந்த ஊடங்கள் கூட
    பல்லாங்குழி விளையாடி விளையாடி
    வியாபாரம்
    கல்லாக்கட்டிக்கொண்டது.
    தெற்கு முனையிலே ஒரு கருத்து
    வடக்கே பூராவும் ஒரு கருத்து
    இந்த எதிர் அலை
    எதிர் அலைக்கு எதிராக ஒரு அலை என்று
    நம்
    சமுதாய சித்தாந்த சொப்பனங்கள் கூட
    எதோ ஒரு
    ஜோடிக்கப்பட்ட அலைக்கூட்டங்களின்
    கிராபிக்ஸாகக்கூட இருக்குமோ.
    வடக்கே ஒரு அலை தெற்கே ஒரு அலை
    என்ற
    ஒரு புதிய விஞ்ஞானம்
    அரங்கேற்றப்படும்
    செயற்கையான ஒரு சகுனியாட்டம்
    பதுக்கி வைக்கப்பட்டிருக்குமோ?
    வடக்கு ஓட்டத்திற்கு எதிரான ஒரு தெற்கு ஓட்டம்
    முந்தய கால கட்டங்களிலும்
     நிகழ்ந்திருக்கிறது
    என்ற
    ஒரு தந்திர யதார்த்தம் இதனுள்
    செருகப்பட்டிருக்குமோ?
    கருத்துக்கணிப்பை ஒரு கல்வெட்டு போல
    பதித்துவிட்டால்
    திரைமறைவு புராண சதியாட்டங்களை
    அப்படியே
    பிலிம் காட்டி  விடலாம்.
    அல்லது
    இதற்கு உல்டாவாகக்கூட நடக்கலாம்.

    சூட்சுமம் தெரியாத மக்கள் நம் மக்கள்.
    முணுக்கென்றால்
    வரிசையில் வரிசையில்...வரிசையில்
    நின்று கொண்டே இருப்பார்கள்
    கை உயர்த்திச்சிரித்துக்கொண்டு.
    தூக்கத்தில் நடக்கிற வியாதி போல்
    "வரிசையில் நின்று கொண்டே இருக்கிற" வியாதி
    நம் ஜனநாயத்துக்கு!
    நம் தமிழ் மக்களோ மெத்தப்படித்த மேதாவிகள்.
    "வர்ர லட்சுமியை வேண்டாம்னு சொல்லலாமா?"
    என்று வரிசைகளிலேயே நின்று
    அந்த "சீர்வரிசைக்கு"கும்பிடு போடுவார்கள்.

    நாளை நடப்பதை யார் அறிவார்.
    "நாராயண ,,நாராயண ..நாராயண"
    நாரதர்  துந்தனாவின்
    ரீங்காரங்களின்
    காது குடைச்சல்கள் தாங்க முடியவில்லை.

    ======================================================================


















    "கண்ணாடி வளையல்கள்"

    "கண்ணாடி வளையல்கள்"...ருத்ரா

    Sunday July 2, 2000
    கண்ணாடி வளையல்கள்
    - ருத்ரா.


    1
    நீ
    ஒலித்தாலும்
    உடைந்தாலும்
    இனிக்கும்.
    2
    கண்ணாடி
    வளையல்களிலிருந்து
    கண்ணாடி விரியனா
    தீண்டியது ?
    மூச்சை நிறுத்தியது
    உன் ஓசை.
    3
    உன் ஓசைப்பூக்கள்
    உதிர்க்கும்
    மகரந்தமே
    என் அன்றாட உணவு.

    4
    கண்ணாடி ஓசைக்குள்ளும்
    கனமான சம்மட்டிகளா ?
    என் இதய நாளங்கள்
    கொல்லம்பட்டறை ஆனது.
    ஆனாலும்
    துடித்து துடித்து
    அது அடித்தது
    அத்தனையும்
    அந்த மயிற்பீலியின்
    அசைவுகள் அல்லவா ?

    5
    தாஜ்மகாலை
    உருக்கிச்செய்ததில்
    உன் ஓசையில்
    காதலின்
    உளிச்சத்தங்கள்.

    6
    சோழிகளைக்
    குலுக்கி
    எப்படி
    இப்படி ஒரு
    புதை குழி
    வெட்டினாய்.
    அமிழ்ந்ததும்
    புாிந்து கொண்டேன்
    அத்தனையும்
    அமிழ்தம் என்று.


    7
    தைரியம் தான்!
    கண்ணாடி
    வீட்டுக்குள்ளிருந்து
    கல்லெறிகின்றாய்.
    ஏனென்றால்
    நீ
    உடைந்தாலும்
    நொறுங்கிப்போவது
    நான் தானே!

    8
    உன் ஒலியை
    என்றோ கேட்டது.
    அது என்னை
    விரட்டிக்கொண்டேயிருக்கிறது.
    கடந்து போகட்டும் என்று
    நின்று பார்த்தேன்.
    அது இப்போது
    என்னை
    இழுத்துக்கொண்டே
    ஓடிக்கொண்டிருக்கிறது.


    9
    எந்த ாிஷி சபித்தது ?
    செம்மங்குடிகளும்
    பாலமுரளிகளும்
    உன் கண்ணாடிக்
    குருகுலத்தில் கிடந்து
    இதன் ஓசைகளில்
    'சாதகம் '
    செய்யவேண்டும் என்று ?


    10
    உன் ஓசைகளின்
    பின்னேயே சென்று
    நின்றேன் ஒர் இடம்.
    இன்னும் உனக்கு
    நாலு ஜோடி வளையல்கள்
    விலை கேட்டேன் அவனிடம்.
    'ஜோடியாய் எல்லாம்
    கிடைக்காது '
    என்று சொல்லிச் சிரித்தான்
    கடைக்காரன்.
    ஏனென்றால்
    நான் போய் நின்றது
    ' ஒரு வீணைக்கடை '.

    11
    உன் ஓசையின்
    கைதி நான்.
    நன்றாய் உற்றுப்பார்.
    உன்
    கண்ணாடி வளையல்கள்
    என் கை விலங்குகள்.


    12
    கிளு கிளு வென்று
    எனக்குள்
    'கிடார் ' வாசித்து
    கிறு கிறுக்க வைத்தது
    போதும்!
    'மன நல மருத்துவ '
    மனைக்கு
    நான் போகும் முன்
    என் மனதுக்குள்
    வந்து விடு.


    13
    நீ
    கிளப்பிய ஒலிகள்
    வெறும்
    'டெசிபல் 'களாய்
    காற்றில் கிடந்தபோது
    ஒரு நாள்
    நான் அதில்
    இடறி விழுந்தேன்.
    வீணை இடித்து காயமா ?
    இந்த விழுப்புண்ணுக்கு
    வானவில்லில்
    ஒரு 'பேண்டேஜ் ' போட்டேன்.
    கனவை
    விரித்துப் படுத்து
    புரண்டு கொண்டிருக்கிறேன்
    உறக்கம் வராமல்.



    14
    என் கற்கோட்டைக்குள்
    கலகம் மூட்டும்
    கண்ணாடிச்சிப்பாய்களே.
    உங்கள் ராணியிடம்
    சொல்லுங்கள்
    ஓசை அம்புகளால்
    நான் வீழ்ந்து விட்டாலும்
    இந்த 'ராஜ்யத்தில் '
    தோல்வியின் அர்த்தமே
    வெற்றி தான் என்று.


    Thinnai 2000 July 02
    திண்ணை

    சனி, 18 மே, 2019

    தன் நெஞ்சு அறிவது...



    தன் நெஞ்சு அறிவது...

    ====================================================================
    ருத்ரா இ பரமசிவன் 




    முகம் பார்க்கும் கண்ணாடி 
    நம் முகப்பருவை 
    கிள்ளி விளையாடுகிறது.
    இமைகள் துடிப்பதில் 
    கருவிழிகளின் சன்னிதானத்தில் 
    எதையோ 
    தேடுகிறோம்.
    வெகு ட்ரிம்மாய் 
    போட்டுக்கொண்டிருக்கிற
    சட்டை தெரிகிறது.
    மன சாட்சி எங்கோ வேதாளம்போல் 
    தொங்கிக்கொண்டிருப்பது 
    தெரியவில்லை .
    ஆனால் 
    விக்கிரமாதித்தனாய் வாளை 
    வெறும் காற்றில் 
    வீசிக்கொண்டிருக்கிறோம்.
    கண்ணாடியின் 
    பின்னால் பூசப்பட்டிருப்பது 
    நம் 
    ஆசாபாசங்களின் 
    மற்றும் ஆபாசங்களின் ரசம் தான்.
    அந்தப்பக்கம் ஓடிவிடுகின்ற 
    நம் பிம்பத்தை 
    நமக்கு நிறுத்திக் காட்டுகிறது.
    இந்த நிழலில் தான் 
    நம் முகமூடிகள் எல்லாம் புதைக்கப்படுகின்றன.
    எங்களையுமா 
    உன்னுடன் இழுத்துக்கொள்ளுகிறாய்?
    மிகவும் சரி!
    இதோ பிழை திருத்தம்.
    பிம்பத்தில் ஒட்டியிருக்கும் 
    "நம்" ஐ எடுத்து விடுங்கள்.
    "என்"ஐ  சேர்த்து விடுங்கள்.
    கிருஷ்ணன் போல் சொல்லிக்கொள்கிறேன்.
    மாதங்களில் நான் மார்கழி.
    மனிதர்களில் நான் இன்னொரு கிருஷ்ணன் .


    ==============================================================







     
         

    குரல்





    குரல்
    ================================================ருத்ரா இ பரமசிவன்

    ஒற்றையாய் நின்று ஒரு தவம்.
    குருவிக் கூட்டங்களுக்கு ஏங்கி
    அந்த பஞ்சு சிறகுகளின் வருடல்களுக்கு
    கனவு கண்டு
    நிற்கிறது இந்த ஒற்றை மரம்.
    சூரியக்குளியலில்
    வருடங்கள் எனும் சோப்புக்கட்டிகள்
    கரைந்து
    இப்படி ஒரு சிறு மரமாய் நிற்கிறது.
    இலை இடுக்குகளில்
    வெள்ளி ஒழுகும் வெளிச்சத்தின்
    குமிழிப்பூக்களில்
    தன் கன்னி ஏக்கங்களை
    நிரவிக்கொள்ளும் சல சலப்புகளே
    அதன் இதயத்துடிப்புகள்.
    சிறுவர்களின் சைக்கிள் சக்கரங்கள்...
    கால் பந்தாட்டக்காரர்களின்
    விறைப்பான உதைப்புகள்..... .
    அடியில் சிலநேரங்களில்
    இளஞ்ஜோடிகள்
    தங்கள் தாகத்தை
    சில நுணுக்கமான சிற்பவடிவங்களைப்போல்
    வெளிப்படுத்தும் இனிய தருணங்கள்.....
    எல்லாமும்
    அதன் வேர்த்தூவிகள் முனை வரைக்கும்
    நனைத்து நிற்கும்.
    அதன் இலை நரம்போட்டத்திலும்
    "மெகந்தி"தீட்டும்.
    "இப்போது தான் தெரிந்ததா?
    என்னை?
    வாருங்கள் ..வந்து அமருங்கள்"
    அதன் குளிர்நிழலில் சற்று
    அமரலாம் என்று அங்கே சென்ற
    எனக்கு
    அந்த மெல்லிய இனிய குரல் கேட்டு
    திடுக்கிட்டு விட்டது.
    இது என்ன குரல்?
    யார் பேசுவது?
    எனக்கு உடம்பு சில்லிட்டு விட்டது.
    திரும்பி பிடரி தெறிக்க விரைந்தேன்.
    "போகாதீர்கள் ...போகாதீர்கள்.."
    குரல்
    என்னைத் தொடருகிறது!

    ==================================================

    தரிசனம்



    தரிசனம் 
    ====================================================================
    ருத்ரா இ பரமசிவன்.



    கடவுளுக்கு 
    கார்ட்டூன் வரைய 
    மனிதன் 
    சளைத்ததே இல்லை.
    வெள்ளை இதழ்கள் இங்கே குவிந்து கொண்டு 
    மௌனத்தை ஒலியெழுப்புகின்றன.
    கும்பிடும் கைகளின் ரேகைகள் எல்லாம் 
    ரத்தத்தைக்கொண்டு 
    இந்த பூமியில் 
    ரங்கோலிகள் வரைகின்றன.
    எந்தக்கடவுள் 
    யாருக்கு சொந்தம் என்று 
    துப்பாக்கிகளை உமிழவைத்து 
    எச்சில் வடிக்கின்றன.
    இவர்களின் புனிதம் 
    மரண ஓலங்களால் தான் 
    தினம் தினம் 
    தீர்மானிக்கப்படுகின்றன.
    அமைதி எனும்  ஆழ்கடலில் நங்கூரம் பாய்ச்சுவதாய் 
    இறைக்கூச்சல்கள்
    தூண்டில் இரைகளாய் விழுகின்றன.
    ஒரு தடவையேனும் 
    இறையின் வாய் 
    அந்த இரையைக்ககவ்வியதே இல்லை.
    பள பளப்பான 
    நம் பணங்களைக்கொண்டு
    உயரமான நாவுகள் எனும் கட்டிடங்களைகட்டி 
    நக்கித்தான் பார்க்கிறோம்.
    வெறிமிக்க 
    நம் பேராசைகள் அந்த ஓசோன் படலத்தை 
    கந்தலாக்கியத்தில் 
    நம் மகா மரணம் எனும் மகா நிர்வாணமே 
    தரிசனம் 
    தந்து கொண்டிருக்கிறது.



    ==========================================================




    வெள்ளி, 17 மே, 2019

    கொடுவரி முதலை குடை தண் துறைய‌.

    கொடுவரி முதலை குடை தண் துறைய‌.
    ==============================================ருத்ரா இ.பரமசிவன்

    தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ்
    தோலின் முதலை குடை தண் துறைய‌
    குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
    உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
    பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?
    அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
    அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
    வேங்கை வரித்த திண்கால் ஓமை
    அசைவுறு காலை முரண்தர முரலும்
    அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
    அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
    எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.
    எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
    ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
    ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
    கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
    இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
    தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே
    .
    ______________________________________________________________


    விளக்க உரை.
    ==============================================ருத்ரா இ.பரமசிவன்

    தன் பார்ப்பு தின்னும் தழல் குமிழ் தோலின்
    கொடுவரி முதலை குடை தண் துறைய‌
    குறிஎய்தி நெடுங்கங்குல் மடி தொலைத்து மாய‌
    உடல் உயிர் தின்னும் உயிர் உடல் தின்னும்
    பிணி தந்து கொளீஇ யாங்கு சென்றனை?

    தன் குட்டிகளையே தின்னும்முதலை.அது  நெருப்புக்குமிழிகளும் வளைந்த வரிகளும் உடையது.அந்த முதலைகள் குடைந்து நீராடும் குளிர்ந்த நீர்த்துறைகள் உடையவனே.இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா?என் உடல் என் உயிரைத்தின்கிறதா?எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?


    அம்பணத்தன்ன கவிழ் ஓமைப் புறத்து
    அரிகுரல் குருகின் பரல் ஒலி ஒழுக்கத்து
    வேங்கை வரித்த திண்கால் ஓமை
    அசைவுறு காலை முரண்தர முரலும்
    அதிர் ஒலி ஆர்க்க சிறை சிறை படுத்து
    அலமரல் செய்யும் அயற்சினை சேரும்
    எக்கர் மருங்கின் காட்சிகள் ஏய்க்கும்.

    மரக்கால் (அம்பணம்) எனும் ஒரு அளவைப்பாத்திரத்தை கவிழ்த்து வைத்தாற்போல் அசையாமல் கிடக்கும் பெரிய‌ ஆமையின் முதுகுப்புறத்தின் மேல் ஓயாமல் ஒலித்து குரல் எழுப்பும் நாரையின்அந்த ஒலி மழையில் வேங்கை மரத்தின் வரிகள் போன்ற காலை உடைய ஆமை கொஞ்சம் அசைந்து கொடுக்க அவ்வேளை அந்த நாரை ஆமைக்கு உயிர் இருக்கிறதோ என்ற எண்ணத்தில் வேறுபட்ட குரல்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்து அங்கே மீண்டும் மீண்டும் பறக்கும். பிறகு பறந்து திரிந்து அருகில் உள்ள மரக்கிளைகளில் போய் அமரும்.இத்தகைய மணற்கரைத்திட்டுக் (எக்கர்) காட்சிகள் நம் கண்களை மயக்கும்.(அது போல் ஏமாற்றி செல்லுவதே உன் வழக்கம்)



    எரியுண்ட குவளையன்ன அழிபடு நலன்கள்
    ஆவி உண்ணும் அவிர்நிலை தீர்ப்பாய்.
    ஒளி ஒளித்து ஊரும் முளிபெயர் மஞ்சும்
    கதிர் விழி மறைக்கும் அடுபோர் அட்ட‌
    இரும்பொறை நெஞ்சத்து நெக்கு வீழ்த்து
    தழீஇய வருதி!அழல்படு அளியள் யானே.

    மென்குவளை மலர் தீப்பற்றி எரிந்தால் எப்படியிருக்குமோ அது போல் என் அழகு நலன்கள் சிதைந்து அந்த வெப்பத்து ஆவி என்னை உண்ணும் அந்த அவிந்துபோகும் நிலையிலிருந்து எனைக்காப்பாய். பகலவன் ஒளியை ஒளித்து ஒளித்து  ஊர்ந்து செல்லும் குழைவான மேகங்கள் அக்கதிரவனின் கண் பொத்தி விளையாடும்.ஆனால் அது அவன் என் மீது தொடுக்கும்  கொடும் போர் ஆகும். இறுகிய பாறை போன்ற உன் உறுதியை என்னிடமா காட்டுவது? உள்ளம் இளகிய பசுந்தளிராய் என்னிடம்  வந்து என்னைத் தழுவிக்கொள்வாயாக. அனல் பட்ட நிலையில் துடிக்கும் எனக்கு அன்பினை அருள்வாய்.

    ==============================================ருத்ரா இ.பரமசிவன்


    நரைவனம்.

    நரைவனம்.
    ===================================================ருத்ரா



    அந்த ஜன்னல் வழியே

    கண்களை துருவவிட்டேன்.

    அந்த இரும்புக்கம்பிகள்

    கரும்புக்கம்பிகளாய் இனித்தன‌

    வயது பதினாறில்.

    இன்றும்

    அப்படித்தான்

    பார்வைகளின் நாக்குகள்

    கம்பிகளை வளைத்து

    நக்கிக்கொண்டிருந்தன.

    அன்று அந்த விநாடிப்பிஞ்சில்

    கண்ணின் பார்வையில்

    அவள்

    ஒரு அரை சதவீதத்தைக்கூட‌

    என் மீது வீசவில்லையே.

    அந்த மின்னல் கயிறு அன்றோடு

    அறுந்தே போனது.

    அப்புறம் நான்

    சமஸ்கிருதத்தில்

    மாங்கல்யம் தந்துநானே என்று சொல்லி

    ஆண்டுகளின் அச்சு எந்திரத்தில்

    நசுங்கிய கரப்பான் பூச்சியாய்

    அச்சிடப்பட்டு விட்டேன்.

    ஆம்.அது என் திருமணம்.

    இந்த கேடு கெட்ட அந்துப்பூச்சிக்கும்

    அழகாய் அமைந்தாள் ஒருத்தி

    ஒரு குடும்ப விளக்காய்.

    என் குடும்பம் ..என் மக்கள் என்று

    என் தேசம் விரிவடைந்தது.

    அந்த அன்புப் பிரவாகத்தில்

    திணறிபோய் விட்டேன்.



    அந்த சன்னல் பக்கம்

    என்னவோ

    ஒரு இரும்புத்திரை

    விழுந்து விட்டது.



    நரைவனம் புகுந்தும்

    சன்னல் கம்பிகளில்

    அந்த நிழற்சுவடுகள்

    ஊமைத்தனமாய் "ஷாக்"அடித்தன.

    என்றோ ஒரு நாள்

    அந்த மூளிமேகங்களிடையே

    மூண்டு எரிந்த

    இனிப்புச்சுவாலை

    இன்னும் மூட்டிக்கொண்டிருக்கிறது

    சிதைத்தீயை.

    காதலுக்கு இறப்பு நேர்ந்ததும்

    அதற்கும் வாழ்க்கை கொண்டு

    வரட்டிகள் அடுக்கத்தானே வேண்டும்.

    இருப்பினும்

    வாழ்க்கைக்கு வசந்தம் காட்டும்

    தூங்குமூஞ்சி மரங்களின்

    அந்த பஞ்சுமிட்டாய்ப்பூக்களின்

    மென் சாமரங்களைக்கொண்டு

    நான் காற்று வாங்கிக்கொள்ளப் 

    பழகிக்கொண்டேன்.

    பூ புல்  புள் வானம் என்று

    வெறுமையின் கரைசலில்

    காணாமல் போய்விட்டேன்.



    வயதுகள்

    என் இடுப்பில் முட்சங்கிலி கட்டி

    இழுத்துக்கொண்டு ஓடுகிறது.

    எங்கோ ஒரு கணத்தில்

    விழுந்துவிட்ட அந்த நினைவு வாசத்தின்

    முற்றுப்புள்ளியை

    மைல்கணக்கில் நீட்டி

    பொற்சங்கிலியாய் தட்டி தட்டி

    தடம் பதித்து

    ஓடிக்கொண்டிருக்கிறேன்.



    ==============================================================

    கமல் தொட்ட சரித்திரப்பாடம்.

    கமல் தொட்ட சரித்திரப்பாடம்.
    ==============================================ருத்ரா

    காந்திஜிக்கு
    நான் கொள்ளுப்பேரன் மாதிரி தான்
    என்று
    "மய்யம்" துவக்கிய நாளிலிருந்து
    கமல் எல்லாக்கோணங்களையும்
    தொட்டு
    அப்புறம் விட்டு
    அப்புறம் தொட்டும் விட்டும்
    உலா வந்து கொண்டிருக்கிறார்.
    அன்று
    மதவெறியின் சூது கவ்விய‌
    தர்மம் குண்டு துளைத்து
    வீழ்ந்ததை பற்றி
    அரவக்குறிச்சியில்
    நினைவு படுத்தியிருக்கிறார்.
    அந்த தேசிய தாத்தாவின்
    ஒரு கொள்ளுப்பேரனாய்
    கொந்தளித்து விட்டார்.
    நம் இந்திய சரித்திரம்
    சுதந்திரக்கொடி ஏற்றி
    பட்டொளி வீசும்போதே
    மத நல்லிணக்கத்தால்
    உலகிலேயே மானுட அன்பின்
    மிக அகன்ற ஒரு மனிதமார்பு
    ஒரு குறுகிய மனத்து இந்துவால்
    வெறியுடன் சுடப்பட்டதே
    என்று வேதனையுடன்  பேசியிருக்கிறார்.

    கடந்த எழுபது ஆண்டுகளாக‌
    நம் "தியாகிகள் தினம்"இப்படித்தானே
    அந்த தேசத்தந்தைக்கு
    உருக உருக மெழுகுவர்த்திகள்
    ஏற்றிக் கொண்டிருக்கிறது.

    ஆனால்
    இப்போது
    எப்படி
    அந்த வெறி
    ஆங்கிலப்படத்து டிராகுலா போல்
    உயிர்த்தெழுந்து
    இந்தியாவெங்கும்
    ரத்தம் கசியும் கோரைப்பற்களைக்கொண்டு
    கொக்கரிக்கத்துவங்கியது ?

    இங்கு மக்கள் எல்லாம்
    பக்தியின் ஈசல் கூட்டம் தானே.
    அதில் ஊதுபத்தி செருகிவைப்பது போல்
    மதவெறியைச்செருகி
    மத்தாப்பு காட்டி
    ஓட்டுகளின் வேட்டைக்காட்டில்
    இந்தியாவின் பன்முகத்தன்மையை
    பாழடிக்கும் ஒரு கூட்டத்தின்
    சூழ்ச்சி அரசியலே இது.

    காந்திஜியின்
    இந்த கொள்ளுப்பேரன்களை
    அராஜகத்தின் சில "லொள்ளுப்பேரன்கள்"
    சூழ்ந்து கொண்டு தாக்கும்படி
    ஜனநாயக அபிமன்யுவின் வியூகம்
    எப்படி உடைந்து போனது?

    வாக்குகளை அளியுங்கள் என்று
    பணிய வேண்டியவர்கள்
    நாக்குகளை அறுப்போம்
    என்றல்லவா
    தேசிய கீதம் பாடுகிறார்கள்.

    மின்னணு வாக்குப்பெட்டிக்குள்
    நடக்கின்ற‌
    இந்த குருட்சேத்திரப்போரில்
    மீண்டும்
    "அஸ்வத்தாமா இறந்து விட்டான்"
    என்ற பொய்ச்செய்தியை
    வானொலிபோல்
    பரவச்செய்து கொண்டிருக்கிறார்களோ?

    பொறுத்திருப்போம்.
    வானம் கிழியும்.
    விடியலில் தெளியும்!

    ======================================================

    வியாழன், 16 மே, 2019

    "வளைநரல் பௌவம் உடுக்கையாக.."

    "வளைநரல் பௌவம் உடுக்கையாக.."
    =====================================================
    ருத்ரா இ பரமசிவன்


    வளைநரல் பௌவம் உடுக்கையாக‌
    வானம் முட்டி நிற்பவன் இறைவன்.
    உடுக்கை குலுங்க உயிர்கள் அவிழும்
    உலகம் எங்கும் அம்மணம் தான்.
    சங்கு சக்கரம் பாம்பில் படுக்கை
    கார்ட்டூன் சித்திரம் உட்பொருள் விளங்க
    காயும் மனத்துள் திரைப்படம் ஓட்டி
    காலம் எல்லாம் கைபிசைந்து நின்றோம்.
    இன்னமும் புரியலை என் செய்வோம்?
    மீன்கள் வந்து வேதங்கள் காத்தன‌.
    பன்றியே வந்து பல்லை ஏந்தி
    ஊழிப்பேரலை உண்ணா வண்ணம் இம்
    மண்ணைக்காத்துக் கொடுத்து சென்றது.
    ஆமை கூட அடித்தூண் நிறுத்தி
    அண்டம் காத்து ஆறுதல் தந்தது.
    சிங்கம் வந்தது மனிதன் உடலில்
    சீறிப்பாய்ந்து குடலும் கிழித்தது.
    தீமை என்னும் அடையாளத்தை
    நார் நாராக்கி நானிலம் காத்தது.
    மனிதனும் வந்தான் உயர் பிறப்பெடுத்து.
    ஒருவன் இங்கு வில்லேந்தி வந்தான்
    பத்து தலையில் பாதகம் செய்யும்
    பொல்லறத்தினை  பொடிப்பொடியாக்கினான்.
    கோடரி கொண்டு கோபம் கொண்டவன்
    கொடுமை அரசரை வெட்டியே வீழ்த்தினான்.
    ஏரும் கலப்பையும் மறந்தவரிடையே
    ஊரையும் காத்து உலகம் காத்திட‌
    உத்தமன் ஒருவன் புன்னகை பூத்தான்.
    தாழங்குடையில் வந்தவன் ஒருவன்
    தானம் வாங்கி தர்மம் காக்க‌
    மூன்றே அடியில் அண்டம் அனைத்தும்
    சர்வே செய்தவன் சர்வேசுவரன் என்று
    போற்றித்துதித்து புல்லரித்து விட்டோம்.
    மாயக்கருப்பன் மாயம் செய்தான்.
    பகடை உருட்டலில் பாரதம் காட்டினான்
    பல்லுயிர் தின்னும் கொல்பகைப்போர் என‌
    சொல்லொளி காட்டினான் சோதி ஆகினான்.
    கல்லும் கனியும் யுகம் ஒன்றேந்தி
    கடுகியே வருவான் ஒருவன் என்று
    கண்கள் பூத்து காத்துக்கிடக்கின்றோம்.
    சப்பளாக்கட்டைகள் தட்டி தட்டி
    சரித்திரப் பாடல்கள் பாடுகின்றோம் நாம்.
    வந்தது எல்லாம் வெந்தது அல்ல.
    வேகாத அரைகுறை வேதமும் உண்டு.
    நுண்மாண் நுழைபுலம் இன்மையாலே
    உண்மையின் உண்மை தெரியவேஇல்லை.
    உண்டு என்றும் அன்று என்றும்
    உரைகள் உரைகள் ஆயிரம் உரைகள்.
    உரைக்கும் உறைகல் அறிவியல் ஆகும்.
    சூரியனைக் கூட‌ ஜூஸ்ஸாய் ஆக்கி
    குடிப்பான் "சூரிய நரனே"இங்கு.
    கோடி கோடி கோடி என்று
    மைல்கள் நீட்டிய‌ அறிவின் "ஸ்ட்ரா"வில்
    அண்டம் உறிஞ்சும் அதிசய மனிதன்
    அவதாரம் எடுத்து வருவான் காண்பீர்.
    சாதி சமய செப்பு விளையாட்டுகள்
    ஆடும் வரை ஆடுவீர் சூழ்ச்சிகள் செய்து.
    அன்றொரு நாளில் ஓர் ஆலிலை மிதக்கும்
    அண்டத்தின் முட்டை அதில் மூடி இருக்கும்.
    அழிவுகள் அழிவுகள் ஊழ் பல எடுக்கும்
    அப்போதும் அங்கு காத்திடும் அறிவியல்.
    குவார்க்குகள் குளுவான்கள் கிராவிடான்கள் என்று
    விஞ்ஞானப்புராணம் விந்தைகள் புரியும்.
    ஏதோ ஒரு அண்டம் ஏதோ ஒரு பூமி
    அதிலும் இருப்பான் ஆற்றல் மனிதன்.
    "ஏலியன்" என்று புதிர்ப்பெயர் சூட்டி
    ஏடுகள் குவிக்கும் அற்புதம் ஆயிரம்.
    அவனே நமது கல்கி என்றே..ஒரு
    கற்பனை செய்வோம்!கற்பனை செய்வோம்.

    =======================================================
    28.01.2017

    சாவிகள்

    சாவிகள்

    ===============================ருத்ரா




    ஆயுள்

    பதினாலு வயதுடன் முடிந்து போனது.

    அப்போது நான்

    பட்டாம்பூச்சியின் வண்ணங்களுடன்

    முடிந்து விட்டேன்.

    நள்ளிரவில் சுவர்க்கோழிகளுடன்

    சினிமாக்கள் பார்த்துவிட்டேன்.

    தண்ணீர்த்திவலைகளின்

    வைர மூச்சுகளில்

    "முற்றும்"எழுதிவிட்டேன்.

    வானவில் ஏழுகலரில்

    பஞ்சு மிட்டாய் சுருட்டிக்கொடுத்த‌

    இனிப்பில்

    கரைந்து விட்டேன்.

    ரோஜா இதழ்களை

    மென்று தின்று இந்த‌

    கனவுகளின் ருசி பார்த்து

    வாழ்க்கை அகராதியின் அட்டையையும்

    தாண்டிய சொல்லின் வேருக்குள்

    சமாதி ஆகிவிட்டேன்.

    அவன் விழியோடு மோதியதில்

    தெறித்த தீப்பொறிகளில்

    நான் சாம்பல் ஆகி விட்டேன்.

    இதற்கு காதல் என்று

    நெஞ்சில் பச்சை குத்தியபிறகு

    கடந்து செல்லும் நாட்கள் எல்லாம்

    கல்யாணம் கெட்டி மேளம்

    கூடு குஞ்சு குளுவான்கள்

    இரை தேடல்

    இரை ஆதல் எல்லாம் கூட‌

    அந்த அகராதி சொல்கிறது

    மரணம் மரணம் மரணம் என்று தான்.

    சங்கராச்சாரியார் பாடியதும்

    இப்போது இனிக்கிறது.

    ஜனனம் மதுரம்.

    மரணம் மதுரம்.

    சிதை அடுக்கி படுத்துக்கொண்டு

    கொள்ளிக்குடம் உடைத்து

    தீயில் கரைவது தான் மரணமா?

    வாழ்க்கை அடுப்பு ஊதும் முன்

    நம் திரைச்சீலையில்

    பிக்காசோவைக்கொண்டு

    அந்த ஓவியங்கள்

    பதியம் ஆகிவிட்ட பிறகு

    சாம்பல் பூக்களில்

    மகரந்தங்கள் தேடுகிறோம்.

    பதினாலு வயதுக்குப்பிறகு

    இந்த வயதுகள் எல்லாம்

    சாவியாகிப்போன நெல்மணிகள்.

    இருப்பினும் சாவி தேடுகிறோம்

    வீடும் இல்லாமல்

    வாசலும் இல்லாமல்

    பூட்டிக்கிடக்கும் கதவுக்கு.



    =======================================
    12.02,2017