சனி, 20 ஜூலை, 2024

ஆன்டன்செகாவ்



1 நபர் படமாக இருக்கக்கூடும்







 ஆன்டன்செகாவ்

___________________________


யுகங்களை திருப்பிப்போடும்

எழுத்து நடையின் மன்னன்.

எந்த சொல் வலிக்கும்

எந்த சொல் இனிக்கும்

எந்த சொல் எரிக்கும்

அவன் பக்கங்களில்

ஒட்டகங்கள் போல் ஊர்ந்து

செல்லும்போது தெரியும்.

அவனது அந்த‌

சிறுகதைத்தொகுப்பின்

மொழி பெயர்ப்பே

இத்தனை கூர்மையா?

இத்தனை அழகா?

இத்தனை செறிவா?

அவன் மூல எழுத்துக்குள்

குடைந்து பார்த்து

திளைக்கவேண்டும் என்னும்

அவா

பெரு நெருப்பாய் 

கொழுந்து விட்டுக்கொண்டிருக்கிறது.

சமுதாயம் 

அழகிய கலைநேர்த்தி உள்ள 

பீங்கான் கோப்பைகள் தான்.

அவை சுக்கல் நூறாகிய போதும்

அவற்றிலும் தேனீர் ஊற்றி

சிந்தனையின் தீப்பொறி குடித்து

உறிஞ்சி உறிஞ்சி

உட்கார்ந்து கொண்டு 

ஒரு விடியலை மடியில் வைத்து

பேனாவில் வருடிக்கொண்டிருந்த‌

எழுத்தாளச்சக்கரவர்த்தி அவன்.

அவன் புத்தகம்

செத்துப்போன யுகங்களின் 

மியூசியக்கிடங்கின்

தூசி துரும்புகளிலிருந்து

ஒரு சிகப்பு புயலை

எழுப்புவதாகத்தான் தோன்றுகிறது.

என் அலமாரியில்

அந்த புத்தகம் 

ஒரு ராட்சசக்குமிழியாய்

எல்லா உயரங்களையும் விண்முகடுகளையும்

விழுங்கியதாய்

மேலெழும்பிக்கொண்டே இருக்கிறது.

மானுட நுட்பம் என்பதே

சமுதாயச்சிற்பம் என்று

ஒவ்வொரு சிதறல்களையும்

உயிர்ப்பு ஊட்டிய‌

உருவங்கள் ஆக்கினான்.

பருகப் பருக தீராத தாகம்

அவன் புத்தகம்.

உண்ண உண்ண தீராத பசி

அவன் புத்தகம்.


______________________________________________________

செங்கீரன்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக