அகழ்நானூறு 73
______________________________________________
சொற்கீரன்
மூவா நெடுந்திரை மூசு திண்கரை
ஞாழல் நிழத்த ஞெண்டு பறித்த
அங்குழி நிறைக்கும் நீரின் நுண்டுளி
நோக்கிச் செயிர்த்து இறைவளை நெகிழ
அத்தம் ஏகிய முந்நீர்ப் பரவையில்
முழுவிழி நாஞ்சில் எறி எறி கொண்டு
ஏந்தினை என்னே!எல்லின் கனல் வரி
பின் பின் தொடருழி திரைவியம் வாரி
வரூஉம் என்று செங்கால் நாரை
செப்பிய புள்மொழி அறிவைவோ அரிவையே
ஊதும் காற்றின் நுண்வழி நுழைபு
அஃதின் நுவல்குறி அறிதி அறிதி.
மஞ்சில் குழைத்த நீல விசும்பும்
உன்பால் உரைப்பதும் கேள்மதி மன்னே.
___________________________________________________
குறிப்பு.
...................................................................................
கடலில் அலைகள் கடந்து திரைகடல் ஒடி "திரைவியம்" தேடச்
சென்றவனை எதிர்பார்த்து காத்து இருக்கும் தலைவியைப் பற்றிய
எனது சங்கநடைச் செய்யுட் கவிதை இது.
________________________________________சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக