செவ்வாய், 31 ஜனவரி, 2017

மனமே நலமா?



மனமே நலமா?
=======================================ருத்ரா இ பரமசிவன்

நிலவு அழகாய் இருக்கிறது
என்று சொல்வதை விட‌
அந்த அசையாத நீரின்
பளிங்குப்படலத்தில்
ஒரு சிறு கூழாங்கல் எறி.
அந்த நிலவின் பிம்பம்
கசக்கி கசக்கி பிழியப்பட்டு
உன் கண்களையும்
கசக்கிப் பிழிந்து விட்டு
சிறிது நேரத்தில்
நிலைத்து நிற்கும்.
இந்த நிலவின் அழகில்
நூறு நிலவுகளை சலவைசெய்த‌
வெள்ளை நிலா தெரியும்.
இப்போது நீ புரிந்து கொண்டிருப்பாய்
இது வரை சுக்கல் சுக்கலாக‌
உடைத்து நொறுக்கப்பட்ட‌
உன் மனது
ஒரு பளிங்கின் கவிதையாகி இருப்பதை!
======================================================

பட்ஜெட் (2)



பட்ஜெட்  (2)
===============================================ருத்ரா இ பரமசிவன்

( செந்திலும் கவுண்டமணியும் காய்கறி மார்க்கெட்டிலிருந்து காய்கறிகளோடு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்)


"ஏண்ணே ! கருப்புப்பணம்னா என்னண்ணே ?"

"அடே ! பெல்லாரி வெங்காயத்தலையா..கருப்புப்பணம்னா கண்ணுக்கு தெரியாத பணம்டா."

"சரிண்ணே! "ரொக்கமில்லா பரிவர்த்தனை"ன்னாலும் கண்ணுக்குத்
தெரியாத பணம் தானேண்ணே !"

"அட ! ஆமாண்டா ! ங்கொக்க மக்கா! கொழப்பரையடா.

(கவுண்ட மணி கையில் உள்ள சுரைக்காயை செந்தில் மீது வீசுகிறார். செந்தில் ஓடுகிறார்)

-------------------------------------------------------------------------------------------------------------------



எறும்பு எறும்பாய்....

எறும்பு எறும்பாய்....
====================================ருத்ரா இ பரமசிவன் 

காகிதத்தில் கவிதை எழுதத்தொடங்கினான்.
முதல் வரி
எறும்பு எறும்பாய் ஊர்ந்தன.
ஒரு எறும்பு
இரண்டு எறும்பு.
மூன்று எறும்பு.
நான்கு எறும்பு.
எறும்புகள்
எண்ணிக்கொண்டே சென்றன.
முப்பத்தைய்யாயிரங்கோடியே தொண்ணூற்றொம்பதாயிரத்து
தொள்ளாயிரத்து தொண்ணூற்றொன்பது...
நாப்பதாயிரங்கோகோகோகோகோகோகோ.....கோடி கோடி.....
வாழ்க்கையில்
காதல் எனும் இனிப்பு தேடிய‌
பயணம்பற்றிய‌
கவிதை அது...

=============================================================
ஜூலை 7  2013 ல் எழுதியது.

திங்கள், 30 ஜனவரி, 2017

"ருபர்ட் ப்ரூக் "கின் கவிதை

January 29, 2017

Love

Rupert Brooke
Love is a breach in the walls, a broken gate,
    Where that comes in that shall not go again;
Love sells the proud heart’s citadel to Fate.
    They have known shame, who love unloved. Even then,
When two mouths, thirsty each for each, find slaking,
    And agony’s forgot, and hushed the crying
Of credulous hearts, in heaven—such are but taking
    Their own poor dreams within their arms, and lying
Each in his lonely night, each with a ghost.
    Some share that night. But they know love grows colder,
Grows false and dull, that was sweet lies at most.
    Astonishment is no more in hand or shoulder,
But darkens, and dies out from kiss to kiss.
All this is love; and all love is but this.
Facebook Like Button  Tweet Button
This poem is in the public domain.

About This Poem

“Love” was published in Volume 1, Number 3 of the Blue Review in July 1913.
Rupert Brooke was born on August 3, 1887, in Rugby, Warwickshire, England. His books include Poems(Sidgwick & Jackson, Ltd., 1911) and an anthology entitled Georgian Poetry, 1911-12 (Poetry Bookshop, 1912), which he compiled with Edward Marsh. He died on April 23, 1915.
"ருபர்ட் ப்ரூக் "கின் கவிதை

காதல் உடைப்பெடுத்தால்......
=====================================


காதல் உடைப்பெடுத்தால் 
சுவர்கள் பிய்ந்து போகும் 
கிழிந்த உடம்புகளாய்..
வாசல் கதவுகள் முறிந்து கிடக்கும்.
வெளியேறும் காதல் உணர்சசி 
மறுபடியும் அந்த கூட்டுக்குள் போய் 
அடைவதில்லை.
காதல் தன்னை செதில் செதிலாக 
செதுக்கிய அந்த 
பெருமிதம் விடைத்த இதயக்கோட்டையை 
அந்தோ ! விதியெனும் 
ஒரு சூதாடிக்கு விற்றுவிடுகிறது.
ஒரு காதல் மறுதலிக்கப்படும் 
அவமானக் கழுமரத்தில் 
சிதைந்து சிதிலமாகிறது.
ஆனாலும் 
அந்த இரண்டு உள்ளங்களின் 
அக்கினித்தாகம் எரிக்கும்போது 
சூரியன்கள் கூட கருகி விழும்.
அவை அந்த வாய்களுக்குள்
தாக்க வெக்கையை தணிக்கும்
எலுமிக்கப்பழங்களாய் திணிக்கப்படும்.
அந்த ஊமை வலி மறக்கடித்து 
மரத்துபோக வைக்கப்படும்.
அதன் ஊடு கசிவுகளில் 
அழும் கேவல்கள் கீற்றுகளாய் சிதறும்.

சொர்க்கத்து கற்பனையை அப்படியே நம்பிவிடும்
இளைய உள்ளங்கள் தழைய தழைய
அந்த கந்தல் கனவுகளின் கைகளில் வீழ்ந்து கிடக்கும்.
தனிமையை தழுவிப்போனவர்களாய்
இரவைப்பிசைந்து கிடப்பார்கள்.
ஓவ்வொருவரும்  சல்லாத்துணி உருவங்களாய்
சல சலத்து ஓடும் ஆவிக்கூட்டங்களுடன்
கலந்து கிடப்பார்கள்.அந்த இரவு அவர்களுக்கு
அவற்றோடு தான் பந்தி விரிக்கப்படும்.
யார் யாரை தின்பது?
காதல் காதலையே தின்னுமா?
அவர்களுக்கு தெரியும்
காதல் குரூரமாய் வளர்கிறது என்று.
அந்த பொய் வளர்சசி பொலிவற்று
வற்றிக்கிடந்தாலும்
அடியில் இனிப்புக்கடல் அவர்களுக்கு
அலைகளில் ஆர்ப்பரிக்கும்.
காதல் தழுவலில் கைகள் அந்த
மின்னல் ஸ்பரிசத்தை உணராது.
தோள்களில் காமம் களியூரக்  கலந்தாலும்
ஏதுமே தெரியாது.
காதல் எனும் புனித வியப்பு
எங்கோ புதையுண்டு போகும்.
இருளடித்துப்போகும் ஒரு குகை வரும்.
இதழுக்கு இதழ் அந்த
முத்தங்களின் மின்பாய்சசலில்
எல்லாமே எங்கோ புதையுண்டு போகும்.
காதல் இறந்து போகும் புள்ளி இதுவே.
ஆனாலும்
காதல் எல்லாம் இதுவே.
இதுவே தான் எல்லாமும் காதலாய்.
காதல் காதலை காதல் செய்யும்
காதல் இதுவே தான்.

==========================================
மொழி மறு வார்ப்பு :--- ருத்ரா இ பரமசிவன்





ஞாயிறு, 29 ஜனவரி, 2017

"அதேகண்கள்"

"அதேகண்கள்"
===================================ருத்ரா

அறுபதுகளில்
இயக்குநர் திருலோகசந்தர்
இதே தலைப்பில்
எடுத்திருந்த படம்
கண் முன் நிழல் ஆடுகிறது.
"பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்
பூதத்தப் பாத்து பயந்தாளாம்.."
அப்புறம்
"சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா
சொன்னவா சொன்னவா சொன்னவா..."
இந்த இனிய சௌராஷ்ட்ர ஒலிப்பும்
தமிழ்ச் சுவையும் சேர்த்து
பதித்த அந்த பாடல்
இன்னும்
அந்த "ஆர்யபவான்"ஸ்வீட்ஸாய் இனிக்கிறது.
தமிழனுக்கு
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்"
அதே "அதே கண்கள் தான்" தான்
இப்போதும்
சாதி லேபிள்கள் உரித்துப்போட்ட போதும்
"ஐயரும்" "நாயரும்"
கலக்கு கலக்கு என்று
கலக்கியிருக்கிறார்கள்.
அன்றைய காதல் இளவரசன் ரவிச்சந்திரன்
அதே கண்களில் கண்டது
திகில் திகில் திகில் மட்டுமே.
கடைசி வரை முடிச்சு அவிழ்க்கப்படாமால்
விரட்டிக்கொண்டே இருந்தது.
இதில் கலையரசன்
அதே கண்ககளில் கண்ட கன்னி மாறியதே
பெருந்திகில்.
"செல்" யுகம்
சினிமாவை புரட்டிப்போட்டு விட்டது
என்பது போல்
அந்த "கைப்பொறியில்"தன் கண்பொறியை
டவுன் லோடு செய்வது போல்
தன் அருமையான நடிப்பை
அவர் வெளிப்படுத்திய விதம்
ஒன்றே சாட்சி.
"பிளேடு முனையில்"
வெற்றிப்பயணம் செய்திருக்கிறார்கள்.
கொஞ்சம் பிசகியிருந்தால்
ரண களம் தான்.
பெரிய பட்ஜெட் படங்களை
அநாயசமாக எட்டிப்பிடித்து
சினிமாவில் "ட்ரபீஸ்" விளையாடி
சர்க்கஸ் காட்டியிருக்கிறார்கள்.
புதிய இயக்குநராம்!
யார் சொன்னது
பல பழங்கள் தின்று கொட்டை போட்டவர் போல்
கோட்டையைப் பிடித்திருக்கிறார்.
===============================================

பொமரேனியன்.

பொமரேனியன்.
=======================================ருத்ரா
பொமரேனியன் நாய்க்குட்டியாய்
கழுத்துச்சங்கிலியுடன்..
அது என்னை இழுத்துக்கொண்டு ஓடுகிறதா?
நான் அதை செலுத்துகிறேனா?
ஒரு வழியாய்
இந்த சேவல் முட்டையிட்டு விட்டது.
இரண்டாயிரத்து பதிமூணுக்குள்
பதினாலாய் ஒரு முட்டை.
முட்டையின் இன்வெர்ஸ் கோழி.
கோழியின் இன்வெர்ஸ் முட்டை.
கணிதத்தை ஆய்லரும் ரெய்மானும்
டேவிட் ஹில்பர்ட்டும் எட்வர்டு விட்டனும்
கைமா போட்டுவிட்டார்கள்.
அதன் மீது நம்மூர் ராமானுஜம் போட்ட‌
முட்டை தோசையோ
அந்த "நாமக்கல்"பரோட்டோ கடைக்காரனுக்கு கூட‌
மிகவும் பரிச்சயம்.
ஒன்றை சீரோவால் வகுத்தால் இனிஃபினிடி.
ஒன்றை இன்ஃபினிடியால் வகுத்தால் சீரோ.
இப்போது ஏன் இந்த முட்டையை
ஜபமாலை போல் உருட்டி உருட்டி
2013..2014..என்று
ஜபித்துக்கொன்டிருக்கவேண்டும். 

காலம் நழுவுகிறது 
காலடியில் 
தலை மீது.. 
காலத்தை கையில் 
கட்டியதாய் 
கர்வப்பட்டு கொண்டோம் 
கைக்கடிகாரம் கொண்டு. 
அதை 
மின்னணுத்துடிப்புகளாக்கி 
தலையணை ஓரத்து 
நண்பனாக்கி 
நாம் தூங்குவதை 
கவனிக்க வைத்துக்கொண்டோம். 
காலத்தை 
முண்டைக்கண் உருவில் 
எண்களாக்கி அச்சிட்டு 
சுவரில் நிறுத்தினோம். 
கோழி ரெக்கையை உரிக்கும் விதமாய் 
தினம் தினம் 
நாள் கிழித்தோம். 
கணக்குப்பார்த்தால் 
கீழே நாம் 
சருகுகள். 
அது உயர்த்தில் எங்கோ? 
போக்கு அற்ற நமக்கு 
பொழுது போக்க‌ 
காலம் தேவை. 
கணங்கள் பறந்து போய் விட்டபிறகு 
அதைப்பிடிக்க 
இன்னும் புதிய கணங்கள் 
நமக்குத் தேவை. 
அப்போது 
கடிகாரம் கூட‌ 
"கடி"க்கும் குதறும். 
பழசு புதிதாகிறது. 
புதிது பழசாகிறது. 
நம்மால் 
களைத்துப்போகாமல் 
எண்ணிக்கொண்டிருக்கும் வரை 
எண்ணிக்கொண்டிருப்போம். 
இந்த கடற்கரையில் 
கால்கள் அளைய வரும் 
இந்த அலை 
எத்தனையாவது அலை? 
தெரியவில்லை. 
இனியாவது அதில் ஒரு 
ஆணி அடித்து வைப்போம். 
சிலுவைகள் அறைய அல்ல‌ 
நம் கனவுகளை 
காலண்டர் அட்டைகளாக்கி 
அதில் மாட்டி வைக்க. 

======================================ருத்ரா இ பரமசிவன்
ஜனவரி 8  2014 ல் எழுதியது

ஜனவரி முப்பது


ஜனவரி முப்பது
==========================================ருத்ரா

ஜன வரிகளை
நெஞ்சில் தாங்கியதற்கா
அவரை நோக்கி
அந்த தோட்டாக்கள்?

ஏ ராமா!
இது தீனக்குரல் தான்.
ஒரு ராம் நோக்கிய‌
இன்னொரு ராமின்
தீனக்குரல் இது!

தியாகம் அலைஅடிக்கும்
பெருங்கடலை
சில விநாடிகளுக்கு
நம் "உள்ளங்"கையில்
ஏந்துவதற்குள் நம்மை
ஏழுகடல்கள் வியர்த்து நிற்கும்.

அஹிம்சை எனும்
சிலபஸ்
நம் வாழ்க்கைப்
ப‌ல்கலைக்கழகங்களிலிருந்து
நீக்கப்படவே முடியாது?
தொப்பூள் கொடியை அறுத்து
மனிதம் ஒலிக்கச்செய்யும்
அந்த ஹிம்ஸையைத்தவிர.

ஹிம்சையின் சின்னமாய்
நம் கடவுளர்கள் கையில்
எத்தனை ஆயுதங்கள்?
"சைரன்" ஒலிக்கும்போது
அவை கீழே எறியப்படுமானால்
மனிதன் கடவுள் முன்னே
காட்டுவான் விஸ்வரூபம்!

மீசை கூட முற்றாத‌
அந்த வீர இளைஞன்
காஷ்மீர பனிச்சரிவில்
உயிர் மூச்சை உதிர்த்தபோது
தியாகத்தின் கனபரிமாணம்
நமக்கு புரிந்தது
கண்களில் முத்துக்கள் கோர்த்து.

ரத்தம் வழிந்த சிலுவையில்
தியாகம் செறிந்த
அந்த பச்சைப்பிறை நாயகத்தில்
எல்லாம் ஊடுருவி கசிந்தது
அந்த‌
"ரகுபதி ராகவ ராஜாராம்"

=================================================
https://www.google.co.in/imgres?imgurl=http://www.thefamouspeople.com/profiles/images/mahatma-gandhi-31.jpg&ihtmgrefurl=tp://www.thefamouspeople.com/profiles/mahatma-gandhi-55.php&h=500&w=600&tbnid=lsJrGogs-B6M6M:&vet=1&tbnh
==========================================================
with THANKS for PHOTO with the above LINK


Related image










மணல் கூட .....




மணல் கூட ....
================================ருத்ரா இ பரமசிவன்

மணல் கூட
ஒரு நாளில் பொன்னாகலாம்
என்றான் கவியரசன் கண்ணதாசன்,
அற்றைச் சில திங்கள்களில்
நம் சென்னை நகரக்கடற்கரை
மணற்துளிகள் ஒவ்வொன்றும்
பகலில் சூரியன்கள் ஆகின.
இரவில் நிலவுகள் ஆகின.
பொன்னையும் விட‌
விலை மதிக்க முடியாத‌
தமிழ்க்குரல்கள் ஆகின!
உரிமைக்கதிர் வீச்சின்
உண்மை ஒளிப்பூக்கள் ஆகின.
கைப்பொறியில் தன்  க‌னவுகளை
விண் முட்டும் வரை சென்று
முட்டித்திரும்பிய‌
புயற்காளைகளின் புறநானூறுகள் கண்டு
புல்லரித்து நின்றோம்.
பதிலைக் கூட எதிர்பாராமல்
வெறும் அஞ்சல் அனுப்பி
மாமூல் கடன் கழித்துக்கொண்டிருந்த  நம்
மாநில அரசு செயல் வீரம் காட்டியதும்
கண்டோம்.களித்தோம்.
இவரும் நோக்கினார்.
அவரும் நோக்கினார்.
சட்டம் வந்தது.
சட்டத்துக்கு வலுவாய்
ஒரு சட்டம்
ஆணி அடித்து மாட்ட
ஆவன செய்திருப்பதாய்
அறிகின்றோம்.
மகிழ்கின்றோம்.
அது வெறும்
திருப்புமுனையா?
இல்லை
நெருப்பு முனையா?
ஆனால்
அது நம் தமிழின்
கரு உயிர்ப்பு முனை!
என்ன இது?
பலப் பல ஆயிரம் ஆண்டுகள்
தொன்மை கொண்ட தமிழ்
இப்போது தான்
குவா குவா என்று
குறுந்தொகையும் கலித்தொகையும்
ஒலிக்கின்றதா?
இது கேள்வி அல்ல.
ஒரு வெடிப்பின் திரிமுனை.
நம் வரலாறு நீர்த்துப்போனதாக‌
தூர்த்துப்போனதாக‌
நம் அறிவின் நிறம் மாறிவிட்ட‌
நிகழ்வுகளின் தளும்பல் முனை இது.
ஆம்..
மீண்டுமாவது
நம் தமிழ் தளிர்த்து தான் ஆகவேண்டும்!
நம் மாண்பு உயிர்த்து தான் ஆகவேண்டும்!

====================================================




சனி, 28 ஜனவரி, 2017

நகைச்சுவை (8 )



நகைச்சுவை (8 )
______________________________ருத்ரா இ பரமசிவன்.




வாடிவாசல் திறந்து விடப்பட்டது.காளைகள் ஒன்று கூட வரவில்லை.துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் ஒருவர்:

"ஏனுங்க.இவங்கல்லாம் யாரு? காளையை காணோமே."
.
நடத்துபவர்:

இதெல்லாம் ஒரு "பாதுகாப்பு ஏற்பாடு" தான்.காளையை எல்லாம் ஜெயில்ல புடிச்சு போட்டாச்சு.பயப்படாம பாக்கலாம்.



_______________________________________________________________________

ஒரு  "சோசியல்  ஃப்ராய்டிசம்" (கவிதை)

ஒரு  "சோசியல்  ஃப்ராய்டிசம்" (கவிதை)





ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.
======================================ருத்ரா இ பரமசிவன்

நான் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.
இது பீரா?பிராந்தியா?
எதுவாகவும் இருந்துவிட்டுப்போகிற‌து.
நான் கொஞ்சநேரம்
இந்த கண்ணாடிச்சவப்பெட்டிக்குள்
என் நினைவுகளை இறந்து போகச்சொல்லுகிறேன்.
அநியாயங்களை நியாயம் என்று
விற்றுக்கொண்டிருக்கும் இந்த‌
சமுதாய"ஷைலக்கின்"கையில்
எப்போதும் ஒரு தராசும் கத்தியும்
ஆடிக்கொண்டிருக்கிறது!
வலுத்தவனின் ரத்தம் கசியும்
கொடூர கோரைப்பற்கள்
இங்கே நிழல் பரப்பிக்கொண்டிருக்கிறது.
அதன் கீழ்
எத்தனை ஆரவாரங்கள் நெரிசல்கள்.
அந்த கோரப்பல்லே
இவர்கள் வழி பாட்டில்...
இவர்கள் சள சளப்பு பேச்சுகளில்...
இவர்கள் வாழ்க்கை ஓட்டங்களில்...
ஏன் இது இவர்களின் "புரிதல்" பரிமாணங்களில்
விழவில்லை.
டிவிக்களில்... 4ஜி கைபேசிகளில்...
அதன் காமிராவின் அசிங்கப்பார்வையின்
ஏதோ சில கோணங்களில்...
இவர்கள் எதைத்தேடுகிறார்கள்?
மனிதனை மனிதன் செய்யும்
மௌனமான கசாப்புகள்
ஏன் இந்த மனத்திரைகளில்
அழுத்தமான பிம்பங்களாக பதியப்படவில்லை?
கொத்து கொத்தாய் கொலைகள்
சிற்றினங்களை
பேரினம் அப்படியே பிரியாணி பண்ணி சாப்பிடும்
அக்கிரமம் அநியாயம்...
அவை கலர் கலராய்
ஊடகங்களில் வாந்தியெடுக்கப்பட்ட போதும்
மனம் மரத்துப்போனவர்களாய்
சாலைகள் தோறும் ஈசல்கள் அப்பி அப்பி செல்வது போல்
எங்கே இவர்களின் பயணம்....இலக்கு?
மனவெளியின் மேல் ஓட்டமும் கீழ் ஓட்டமும்
தனி மனிதனுக்குள் முரண்பட்டு
முறுக்கிக்கொள்வது "ஃப்ராய்டிசம்".
மொத்த சமுதாயமும்
இந்த வக்கிரங்களின் முரண்பாட்டில்
சில்லு சில்லுகளாய் தெறித்துக்கிடப்பதில்
ஒரு "சோசியல் ஃ பிராய்டிசம்"
ரத்தவெள்ளமாய்  காட்சியளிக்கிறது.

"போதும்..போதும்
உன் புலம்பல்களையே
போதையாக்கி..
இப்படியும் ஒரு பாசாங்கா?"
திடீரென்று கோபம் முறுக்கேறுகிறது.
கண்ணாடிக்கிண்ணம்
உடைந்து தூள் தூள் ஆகிறது!
அந்த ரத்தச்சிதிலங்கள்
சிலந்திப்பூச்சி வலையாய்...
என் காரின் முகப்புக்கண்ணாடியில்!
எதுவும் எனக்குள் இன்னும்
அடங்கவே இல்லை.
அதற்குள் அந்த "டமார்".
ஒரு விபத்து நிகழ்ந்த‌
அந்த பிரம்ம முகூர்த்தத்தில்
ரெண்டு கடவுள்கள் என் மண்டையில்
தேங்காய் உடைத்துக்கொண்டனர் போலும்!
சிவப்புச் சகதியாய்
அந்த சிதறு தேங்காய்கள். சாலை நிறைய!
இந்தக்குப்பையைக்கொண்டு
என்ன செய்யப்போகிறார்கள்?
காவலர்கள் சாக்பீஸில் வரைந்த‌
வட்டத்துள் கிடந்தேன்.
ஈக்களை நான் மொய்த்துக்கொண்டு!

===============================================

கலைடோஸ்கோப்

கலைடோஸ்கோப்
=============================ருத்ரா

எத்தனை திருக்கு?
எத்தனை முறுக்கு?
அத்தனை கோணமும் காதல்.

கண்ணாடித்துண்டுகளில்
மின்னல் துண்டுகள்.
காதலின் கற்கண்டுகள்.

இதய நாளம்
காதலின் ஏழுவர்ண‌
ரத்தத்தில் துடித்தது.

செல்லில் அவன் நம்பரையே
திருப்பி திருப்பி பார்க்கும்
என் "பயாஸ்கோப்" இது .

"சீ யூ" என்றால் யார் சொன்னது
நாளை என்று?
அடுத்த "நானொ செகண்டுடா ஃபூல்".

==============================================

பிப்ரவரி 4  2015 ல் எழுதியது.

பல்லூழ் நீட்டிய


யாழ்நிலம் இன்று பாழ்நிலம்
======================================

பல்லூழ் நீட்டிய பல்மலை அடுக்கமும்
பேரியாழ் அன்ன ஒலி உதிர் அருவியும்
கானும் கல்லும் புள் பரவி உகுக்கும்
யாழ்நிலம் இன்று பாழ்நிலம் ஆனது
அந்தோ!இன்று!அளியேம் யாமே!
நாளை கதிர்க்கும் புத்தொளி ஆங்கு
செந்தமிழ்ப்பாலின் செந்தணல் ஊட்டும்.
முள்ளிவாய்க்கால் முற்றம் தன்னில்
முகம் காட்டிய அற்றைத்திங்கள்
குருதியில் தோய்ந்து கண்ணீர் உகுக்கும்.
கொடு நிழல்  தழீஇ  கொல் பகை உறுத்து
நிணநீர் வாய்க்கால் நீள ஓடி
நிவந்த காலை அரசம் சினைக்கீழ்
புத்தன் இருந்த கொழு நிழல் ஒழுகி
ஒளி மழை பெய்தே மன்றம் வீழ்க்கும்.
ஆர்க்கும் அன்பொலி கேட்டே மயங்கும்.
புத்தம் சரணம் கச்சாமி
பிறழ்ந்தது  கேண்மின் பிறழ்ந்தது கேண்மின்
ரத்தம் சரணம் கச்சாமி என
பிறழ்ந்தது கேண்மின் பிறழ்ந்தது கேண்மின்.
.தமிழின் குருதி உறிஞ்சிய சிங்களம்
கறைப்பட்டே போனது காண்!
மனம் ஒடிந்த புத்தனுமே
அத்தருவின் கிளையில் வீசிய கயிற்றில்
தூங்கினான் ஊசல் நிழல் ஆடி .
முழுவெண்ணிலவும் முகம் புதைக்க
மஞ்சு பொதி மண்டலம் மறைந்ததுவே!


==============================================ருத்ரா இ பரமசிவன்.
(சங்க நடை த் தமிழ் செய்யுட் கவிதை)









குறுக்கே வந்த நந்தி.


குறுக்கே வந்த நந்தி.
















மத்திய ஆதிக்கம் தமிழக உரிமைகளை  விழுங்காமல் குறுக்கே வந்து தடுத்தது  ஜல்லிக்கட்டு அறப்போர்!


இடி தாக்கி
இங்கே ஒரு
பள்ளம் விழுந்தது.
இட்டு நிரப்ப
கள்ள நிழல்கள்
போட்டிக்கு வந்தன.
காளை ஒன்று
இடையே புகுந்தது.
தமிழ்க்காளை
ஒன்று
இடையே புகுந்தது.
கோயில் காளை தானே
குங்குமப்பொட்டு  வைத்து
கும்பிட வைப்போம் என்று
சகுனிகள்
பகடை உருட்டி
சாணக்கியங்கள்
பலப்பல
செய்திட்டாரே.
விடைத்த காதுடன்
விறைத்த கொம்புடன்
காளையே  இங்கு
கேள்வித்தீ
வளர்த்து நிற்கும்.
திருட்டுகள்
போல வந்த
இருட்டுகள்
விலகி ஓடும்!

========================================ருத்ரா இ பரமசிவன்.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

வைரல் வரிகள் (2)

வைரல் வரிகள் (2)
===================================ருத்ரா

தடியடி


கொசுக்களை விரட்ட மருந்தை
"அடித்தார்களாம்"
அரசு சொல்கிறது.

ஜல்லிக்கட்டு


கொம்புகளின்
ஒலிம்பிக் திடல்
அலங்காந‌ல்லூர்.

சட்டசபை


அவர்கள் மேஜையை தட்டினாலும்
கேட்கிறது
"லாட்டிகளின்" ஓசை.

உ.பி.யில் மோடி


வெளிநாடு செல்லும்
இவர் விமானங்கள்
"வாட்டர் சர்வீஸில்"


பீட்டா

நாய்க்குட்டிகள் படுக்க‌
மனிதத்தோலில் மெத்தை தைத்து
தரச்சொல்பவர்கள்!

ஐ.நா

மூன்றாம் உலக நாடுகளுக்கு
விளையாட்டுப்பொம்மை
இந்த ரப்பர் சிங்கம்!


===============================================================


நகைச்சுவை (7 )

நகைச்சுவை (7 )
====================================ருத்ரா இ பரமசிவன்


எஸ்.ஐ ஒரு போலீஸ்காரரிடம்


"ஏய்யா! பாலியல் தொழில் சம்பந்தமா ஒரு கேஸும் கெடைக்கலேண்றதுக்காக "இந்த "பால் வியாபார தொழில்" செய்யறவர் மேலே கேஸ் போட்டு கொண்டாந்திருக்கியே!விடுய்யா அவரை."

=================================================================

விமானக்கட்டிடத்தில் "பர்கர்"



விமானக்கட்டிடத்தில் "பர்கர்"


http://www.msn.com/en-us/foodanddrink/casual/the-most-incredible-mcdonald%e2%80%99s-restaurants-in-the-world/ss-AAm9kN8?ocid=spartanntp#image=13

==========================================================================
THANKS FOR THE ABOVE LINK.




கொறிப்பதற்கு கொஞ்ச நேரம் .....

=============================================ருத்ரா இ பரமசிவன்.


அமெரிக்காவில் கார் ஓட்டுவது சுகம்.பிறர் ஓட்ட அதில் சவாரி செய்வது அதை விட சுகம்.சாலையோர சொர்க்கங்களாய் "தீனிக்கான" தீவுகளில்
கொஞ்சம் இளைப்பாறி செல்வது மிக மிக சுகம்.ஆம்."மேக்.டொனால்டு"
எனும் அந்த சிற்றுணவு கூடங்களை மறக்கவே இயலாது.பத்தாயிரம் மைல்கள் தாண்டி நான் இந்த மதுரைக்கு திரும்பி வந்த போதும் பசிபிக் கடல் அளவுக்கு எச்சில் ஊற வைக்கும் அவற்றின் சுவையான சிற்றுணவு மிகவும் சிலிர்க்க வைக்கும்."எம்" என்ற அந்த பூதாகரமான எழுத்தை தாங்கி நிற்கும்
வித விதமான கட்டிடங்களைப் பாருங்கள்.(மேலே உள்ள சுட்டியில்) அமெரிக்கா மற்றும் எல்லா இடங்களிலுமாய் 36 600 இருக்கின்றன.

நம்மூர் அழகர் திருவிழா மண்டகப்படிகள் போல இவற்றை தரிசித்துக்கொண்டே சென்றாலும் புண்ணியம் தான்.

"அன்னம் பிரம்மம்"
"அன்னாதம் பிரம்மம்"

ஏதோ ஒரு உபநிஷதம் கூறுகிறது.

"சாப்பிடுவதும் பிரம்மம்.
சாப்பிடப்படுவதும் பிரம்மம்"


ஆகாய விமானம் போல் இருக்கும் அந்த சுவை உணவுக்கூடத்தில் அமர்ந்து
விண் சுவைப்பண்டம் தின்று மகிழலாம்! அந்த படங்களை பாருங்கள்!

======================================================================


மூவர்ண குறும்பாக்கள்

மூவர்ண குறும்பாக்கள்
=======================================ருத்ரா இ பரமசிவன்



வர்ணங்கள்


கொடியில் காயப்போட்ட பின்னும்
சாயம் ஏறியது எப்படி?
நான்கு வர்ணமாய்!


--------------------------------------------------------------------


அ"சோக" சக்கரம்.


சக்கரம் சரிதான்...
சக்கர நாற்காலியில்
நம் ஜனநாயகம்!


---------------------------------------------------------------------


ஜனவரி 26 சொற்பொழிவு


மைக்குக்கே
பாவம் முடியவில்லை ...
கொட்டாவி!


---------------------------------------------------------------------


ஜல்லிக்கட்டு அறப்போர்


யார் அந்த "ஜெனரல் ஓ டையர்"?
கடைசியில்
"ஜாலியன் வாலா பாக்" ஆக்கியது.


------------------------------------------------------------------------


பழைய ஓட்டைக்காலணா


இதன் மதிப்பு கூட இல்லை
இன்றைக்கு ஓட்டை விழுந்து விட்ட
ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு .


-------------------------------------------------------------------------


பட்ஜெட்


கட்டு கட்டாய் காகிதங்கள் பெட்டியில்!
வாசலில் காத்திருக்கிறான்
பழைய பேப்பர் கடைக்காரன்.


---------------------------------------------------------------------------









வியாழன், 26 ஜனவரி, 2017

குடியரசு தின விழா!


"தாயின் மணிக்கொடி "........
====================================ருத்ரா இ பரமசிவன்.

68 ஆவது குடியரசு தின விழா!
நெஞ்சமெல்லாம் இனிக்கிறது !
உள்ளமெல்லாம் பூரிக்கின்றது.
எத்தனை மொழிகள்? எத்தனை இனங்கள்?
விடுதலை எழுச்சி எனும்
உயிருக்கும் மேலான அன்னையின்
முலைப்பாலை
அன்றே நம் அணுவுலைக்கூடம் ஆக்கினோம்.
வெள்ளை வேர்கள் இற்று வீழ்ந்தன.
நம் மூசசுக்காற்றை முடக்கிக்கொண்டிருந்த
விலங்குகள் தூளாயின.
வெள்ளை சட்டங்களுக்கு
"மூவர்ண"அட்டையை மட்டுமே
நம்மால் அணிவிக்க முடிந்தது.
உறிஞ்சும் "நான்கு வர்ண"அட்டையை
அடியில் வைத்துக்கொண்டு.
உள்ளடக்கத்தை
அப்படியே வைத்துக்கொள்ளவா
நாம் குடியரசு எனும் கூட்டு கட்டினோம்.
அஹிம்சையால் ஜெயித்து
ஹிம்சையால்  அதை தோற்கடிக்கும்
ஒரு சுதந்திரத்தையா நாம் பெற்று
ஆனந்தக் கூத்தாடுகிறோம் ?
ஜனநாயகம் என்பது எதிர்க்குரலையும்
மக்களின் மனப் பூந்தோட்டத்தில்
பதியம் இடுவது தானே ?
"வந்தேமாதரம்" என்றால்
எதிர்க்குரலின் குரல்வளையை நெறிப்பது
என்றா பொருள்?
காவல் தெய்வங்கள்
ஜனநாயகம் படுகொலை செய்யப்படும்போது
சாதுவாய் படுத்துக் கிடக்கிறது.
ஜனநாயகம் காக்கப்பட எங்காவது
ஒரு உரிமைக்குரல் கேட்டால்
உறுமிக்கொண்டு பாய்கிறது அதன் மீது
கோரைபற்கள் காட்டி.
மெரீனா கடற்கரையில் அந்த அமைதிப்புரட்சி
எத்தனை மகத்தானது?
ஏன் தமிழ்க்குரல்கள் மீது
காழ்ப்பு எனும்
இந்த அமில வீச்சு?
இறுதி நேரத்தில் ஒரு ஜலியன் வாலா பாக் ஆக்கிய
"லத்தி சார்ஜ்" எனும் மராமரங்களின் வழியே
அம்பு விட்டது யார்?
பட்டொளி வீசி நம் தாயின் மணிக்கொடி பறக்கிறது!
ஆனால் தேசிய கீதம் மட்டும்
தடி யடிகளின் தாக்குதல் ஓசைகளில்.

==================================================







தமிழன் டா! கொம்பன் டா !!


தமிழன் டா! கொம்பன் டா !!
=========================================================================
ருத்ரா இ பரமசிவன்



புதன், 25 ஜனவரி, 2017

விலங்குகள் நல வாரியம்

விலங்குகள் நல வாரியம்
======================================ருத்ரா

விலங்குகளை நலமாக‌
காப்பாற்றி வைக்கிறார்கள்.
விலங்குகளை பத்திரமாக‌
காப்பாற்றி வருகிறார்கள்.
விலங்குகள் பாதுகாப்புக்கு
பாடுபடுகிறார்கள்.
விலங்குகளை பயன்படுத்துவதில்
மிகவும் நேசம் காட்டுகிறார்கள்.
விலங்குகளை பூஜித்து
கொண்டாடுகிறார்கள்.
இந்த விலங்குகளை
சுதந்திரமாக வைக்க வேண்டுமாம்
போராடுகிறார்கள்.
ஆம்!
மனிதனின் உரிமைகளுக்கு
விலங்குகள் மாட்டவே
இந்த‌
விலங்குளை பத்திரமாக‌
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழுக்கு விலங்கு பூட்ட‌
பாவம் இந்த வாயில்லா
விலங்குகள் தான்
அவர்களுக்கு கிடைத்ததா?

================================================

ஜல்லிகட்டு....ஒரு சொல் ஆராய்ச்சி



ஜல்லிகட்டு....ஒரு சொல் ஆராய்ச்சி
===============================================ருத்ரா இ பரமசிவன்



ஜல்லிகட்டு என்பது சல்லிக்கட்டு என்பதன் மரூஉ தான்.ஜ வும் ச வும்
தமிழுக்கும்  வடதமிழுக்கும்(சமஸ்கிருதம்)இடையே உள்ள "மாறுகொள்"
வழக்கு (கம்யூட்டேடிவ்)தான்.நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் . சல்லி என்றால் காசு என்று பொருள்.அந்த காசுகளை காளைகளின் கொம்புகளில்  ஒரு துணி முடிப்பில் கட்டி விரட்டி விடுவார்கள்.வீரமான இளைஞர்கள் காளைகளின் திமிலைபற்றி "தழுவி" அடக்கி அந்த காசுகளை பரிசுப் பொருளாக எடுப்பார்கள்.சல்லிக்கட்டு தான் ஜல்லிக்கட்டு ஆக மாறியிருக்கிறது.

"ஜலம்"என்ற சொல் வடதமிழ் சொல் என்று. அருவியின் ஓடை "சல சல"என்று ஓடுகிறது என்பதில் உள்ள சல என்பது தான் ஜல என்று மாறியிருக்கிறது. இன்னும் நம் வழக்கில் புண் சீழ் வைத்து நீர் கோத்தால்  "சலம்" வைத்திருக்கிறது என்கிறோம்.ஓடு நகரு செல் என்ற பொருளில் சலித்தல் என்ற சொல் தூய தமிழ்ச்சொல் ஆகும்.கடல் அலைக்கும் சலித்தல் என்ற பொருள் உண்டு.அந்த அசைவு நீர் மேலும் கீழும் அசைதல் ஆகும். வீடுகளில் முறத்தில் அரிசியும் உமியும் மேலும் கீழும்  அசைக்கப்படுதலே சலித்தல் எனப்படுகிறது.

வ‌டமொழியில் "அ"என்ற எதிர்மறைச்சொல் "சல"த்தோடு சேர்த்து அசலம் ஆகி அது அசையாத மலையைக்குறிக்கிறது.அந்த "அ" என்ற எதிர்மறை வழக்கு கூட "அல்" அற்று என்ற தமிழ்ச்சொல்லின் குறுகல் தான்.எனவே "வேர்ச்சொல்" வழியேநுழையும் நுட்பமான "வழக்கியல்" தமிழ் மூலம் சமஸ்கிருதம் என்பது நம் வடதமிழே.சிந்துவெளித்தமிழன் உலகின் பல ஒலிக்குறிப்புகளை இங்கு கொண்டு வந்த தமிழின் உயிர்மெய் எழுத்துக்களான க ச ட த ப வுக்கு நான்கு வித ஒலிப்புக‌ளையும் (மிகு மெல்லினமும் மிகு வல்லினமும் கலந்த)ஒலிப்புகளையும் வேறு சில மாற்று ஒலிப்புகளையும் சேர்த்து சமஸ்கிருதம் கண்டுபிடித்தான்.சமம் என்பது தூயதமிழ்ச்சொல்(சான்று...."சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல்..."எனும் குறள் வரிகள்.)கிருதம் "கரம் என்ற தமிழ்ச்சொல்லின் மரூஉச்சொல் தான்.தமிழ் மொழிக்கு இணையாக (சம) ஒரு "செய்யப்பட்டது"(கிருதம்) என்ற பொருளில் தான் சமஸ்கிருதம் உருவானதுஅந்த "ஸ்"என்பது இருசொல்லை (சமம்+கரத்தம்) சேர்ப்பதற்கான அசை ஆகும்.இது தமிழுக்கு ஒரு மறு மொழி ஆகும்.அது தமிழ் மக்களுக்கு  புரியாத ஒலிப்புகளை நிறைய உள்ளடக்கியிருந்ததால் "மறை மொழி" ஆகும். தமிழர்களிடையே இது பெரும்பாலும் "மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட மொழியாக இருந்ததால் "மறை" மொழி என்றே பண்டை வழக்கில் அழைக்கப்பட்டது. தமிழ் நிறை மொழியாகவும் அந்த வட தமிழ் மறை மொழியாகவும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இன்றளவும் (தண்ணீரும் எண்ணெயும் போல ) ஒட்டாமல் தமிழ்  நாட்டில் மட்டுமே இருக்கிறது.மற்ற மாநிலங்களில் மொழிக்கலப்பு நடை பெற்றது போல் தமிழ் நாட்டில் நடை பெற வில்லை.இன்றும் தமிழ் மற்ற கலப்பு மொழிகளைப்போல் "க ச ட த ப "
வில் 4 வகை ஒலிப்புக்களை கலக்காமல் தனியாகவே வழங்கிவருகிறது. இன்று வரை இந்திய மொழிகளின் மூல மொழியாயும் தொன்மை சிறந்த மொழியாயும் "உயர் தனிச்செமொழியாயும்" நம் தமிழ்மொழி விளங்கி வருகிறது.

இந்த கோணத்தில் பார்த்தால் இந்தியாவின் மூல மொழியாகவும் முதல் மொழியாகவும்  இருப்பது இருக்க வேண்டியது "தமிழே" ஆகும்.ஆனால் அந்த நமது வடதமிழ் முதல் தமிழின் மீது பகைமை கொண்டு அடியோடு இந்த முதல் தமிழையே அழித்து ஒழிக்க நடந்த வரலாற்று வடிவங்களில்  காரணமாக இருந்தது  ஆட்சி அரசியலும் மற்றும் உட்பகையுமே ஆகும்.

====================================================================







செவ்வாய், 24 ஜனவரி, 2017

நகைச்சுவை  (6)



நகைச்சுவை  (6)

======================================ருத்ரா இ பரமசிவன்.


மெரீனா கடற்கரையில் ...


"தேங்கா மாங்கா ஜல்லி பீட்டா..."

"என்னப்பா வியாபாரம் புதுசா இருக்கு?"

"அதே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் தான்.ஆறேழு நாளா இதே முழக்கத்தை  கேட்டு பதிஞ்சு போச்சு சார்!"


--------------------------------------------------------------------------------------------------------------------

சூரியன் தலை வாரிக்கொள்கிறான்.


Flux Ropes on the Sun






















சூரியன் தலை வாரிக்கொள்கிறான்.
===================================================ருத்ரா

சூரியன் தலைவாரிக்கொள்ளும் அழகைப்பாருங்கள். சூரியன் பொருள்
சுவாலைகளால் ஆனது.அவற்றின் எழுச்சி அதற்குள்ளேயே சுருண்டு விழுவது
சூரியன் மேற்பிழம்பின் சுருள் (கொரானால் லூப்) ஆகும்.இதன் புயலே நம் பூமிக்கு மின்காந்த மண்டலத்தை கட்டுப்படுத்துகிறது.அமெரிக்காவின்
"நாசா"சூரியன் இந்த சிகை அழகை பல் கோணங்களில் படம் பிடித்து அனுப்பியிருக்கிறது.

நாம் சூரியநமஸ்காரம் செய்து சில சுலோகங்களை முணு முணுப்பதால்
அது நம் முற்றத்தில் வந்து நமக்கு பொன்னும் பொருளும் வாரிக்குவிக்கும்
என்று நாம் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஆனால் நாம்  போக வேண்டிய சூரியன் கோவில் எஸ் டி ஓ (சோலார் டைனமிக் ஆப்சர்வேட்டரி)
தான்,ஆனாலும் நாம் இன்னும் சூரியனை கும்பமேளாவில் கங்கையில் முங்குவதன் மூலம் அந்த ஆற்றையே  மாசு படுத்திக்கொண்டிருக்கிறோம்
திருநாகேஸ்வரம் மற்றும் சூரியனார் கோவில்களில் போய் அர்சசனை செய்வது இருக்கட்டும்.நாம் பார்க்கவேண்டிய இடம்

திரு "நாசா"யேஸ்வரம் .ஆகும்.

ஆம் "நாசா"  போட்டோ வெப் சைட்டுகளே ஆகும்.
























This is an image of magnetic loops on the sun, captured by NASA's Solar Dynamics Observatory (SDO). It has been processed to highlight the edges of each loop to make the structure more clear.

A series of loops such as this is known as a flux rope, and these lie at the heart of eruptions on the sun known as coronal mass ejections (CMEs.) This is the first time scientists were able to discern the timing of a flux rope's formation. (Blended 131 Angstrom and 171 Angstrom images of July 19, 2012 flare and CME.)

Image Credit: NASA/Goddard Space Flight Center/SDO
Last Updated: July 30, 2015
Editor: NASA Administrator

நன்றி நாசா போட்டோஸ் https://www.nasa.gov/multimedia/imagegallery/image_feature_2451.html


அரிஸோனா .


SDC11894.JPG


அரிஸோனா .
==============================ருத்ரா

அந்த அத்தானக்காட்டில்
ஒருவ‌ர் ஒரு இட்டிலிக்கடை நடத்த‌
அதன் "சிவச்சுவை" அறிந்து
இட்லி வாங்கி சாப்பிட்டு விட்டு
காசு கொடுக்காமல் போய்விட்ட‌
பெருமானை
மாவாட்ட வைத்து விட்டார்
கடைக்காரர்.
அதனால் அந்த‌
அரிஸோன லிங்கன் இப்படி
மாவாட்ட
அவரைச்சுற்றி
அரிசோனாவின் கொலராடோ நதி
லிங்கத்தை சுற்றிய  பாம்பாய்
நெளிந்துக்கொண்டு இருக்கிறது.
இந்த வருடம் சிவராத்திரிக்கு
அமெரிக்காவுக்கு
கிரேண்ட கேன்யான்
ஹார்ஸ் ஷூ பெண்டுக்கு
வாருங்கள் பக்த கோடிகளே!
திவ்ய தரிசனம் இது.
இது இயற்கையின் வெள்ளம்
மற்றும் நிலஅரிப்பு
இவற்றால் எழுதப்பட்ட
சிவபுராணம் .
நம் வீட்டு ஆட்டுக்குழவி கூட
நமக்கு சிவன்.
அமெரிக்கருக்கு அழகிய சுற்றுலாத்தலம். இது.
பிரமாண்டமான
தலை சுற்றும் ஆசாமி இது.
அந்த நீலப்பச்சை நிறத்து தண்ணீர்
ஒரு அற்புத அழகு!
நான் அங்கு சென்று
இந்த புகைப்படம் எடுத்தபோது
என் கால்கள் அந்த உயரத்தில்
நடு நடுங்கின.
என் அமெரிக்க பயணத்தின்
மறக்க முடியாத அனுபவம் இது.

===================================================




ஞாயிறு, 22 ஜனவரி, 2017

மெரீனா குறும்பாக்கள்



மெரீனா குறும்பாக்கள்
=======================================ருத்ரா இ பரமசிவன்


கடல் உள் வாங்கிக்கொண்டது
இப்போராட்ட அலையின்
அதிசயம் கண்டு.


வாட்ஸ் அப்பும் முகநூல்களும்
கத்தியின்றி ரத்தமின்றி
கண்ட குருட்சேத்திரம்.


"காளையின் படம் வரைந்து
பாகங்களைக் குறி".....விடைத்தாளில்
எரிமலையின் படம்..


ஜல்லிக்கட்டா ? பீட்டாவைக்கேள் என்றவர்கள்
அவசர கூட்டங்கள் போட்டு
பெற்றெடுத்தார்கள் அவசர சட்டத்தை.!


செல்போன்கள் இரவுக்கு இட்டன
நிலாப்பிஞ்சுகளில்
முத்துப்பந்தல் தனை!


எல்லோருடைய கண்களிலும் தெறித்தது.
எல்லோருடைய குரல்களும்  ஒலித்தது
உலகத்தமிழின் ஒரே இதயம்!

===========================================================





இன்று போய் நாளை வா




இன்று போய் நாளை வா
============================================ருத்ரா

உன் வில்லை வளைப்பது இருக்கட்டும்.
கேள்விகளின் கூர் முனை
உன்னைக் குறி பார்ப்பதை கவனித்தாயா?
ஏன் பிறந்தேன்?
எதற்கு பிறந்தேன்?
யாருக்கு பிறந்தேன்?
யாரை பிறப்பித்தேன்?
எனக்கு முன்
அதற்கும் முன்
அதற்கும் முன்..
............
அதற்கும் முன்
கபாலங்கள் குவிந்து கிடக்கின்றன‌
தலைச்சோறு (மூளை) தீர்ந்து போனபின்.
வேதங்கள் வசனங்கள்..
பாஷ்யங்கள் சூத்திரங்கள்
மந்திரங்கள் கூப்பாடுகள்..
கம்பியூட்டர்களிலும்
க்ளவ்டிங்க் அப்ளிகேஷன்களிலும்
விலா எலும்பு தெறிக்க‌
நாய் குரைப்புகள்...
அறிவின் "ரேபிஸ்" சிந்தனை தடத்தை
நுரை தள்ளி ஊளையிரைச்சல்களாக்கி.....
விறைத்த  துடிப்புகளாக்கி.....
எல்லாவற்றிலும்
வேட்டையின் நீள நாக்குகள்
மரணச்சுவை ஒழுகும் அருவிகளாய்...
வாழ்க்கை என்ன?
என்ன வாழ்க்கை?
பங்கு மூலதன இண்டெக்ஸ்கள் காட்டுகின்றன‌
பச்சை ரத்தத்தின் ருசியை.
பகவானின் கீதைகள்
பலப்பலவாய் உபதேசப்போதைகள்
மற்றும்
தர்ம அதர்ம‌
மாமிச நாற்றங்கள்
எல்லாமே
ஒரு ருசிக்கு
வெறி பிடித்து ஓடுகிறது.
முத்தங்கள் பிதுக்கித்தர‌
உதடுகள் தெருக்களில்
தீப்பிடித்து ஓடுகிறது.
வட துருவம் தென் துருவம் என்று
ஏதோ
ஒரு அச்சுக்கோட்டில்
இந்த பூமியை
கோடி கோடி தடவைகள்
சுழற்றிக்கொண்டிருக்கிறதே!
அந்த காலம் கூட‌
இந்த‌ பேராசையின்
பேய் நகங்களால் பிறாண்டப்பட்டு
பொறி கலங்கி தடுமாறி விடும்
பிரளயம் ஒன்று
பின்னே நிற்கிறது.
கண்ணுக்குத்தெரியாத‌
ஊழித்தீயாய்
அது எங்கும் பிரகாசம் காட்டுகிறது.
கண்கள் கூச‌
கருத்து குருடு ஆகி
வருங்காலத்தின்
சன்னல் அங்கே
தூள் தூள் தூள்.
இருட்டின்
கண்ணாடி நொறுங்கல்களாய்
மை இருளின் மக்கிய‌
தூள் தூள் தூள் அங்கே!
நட்சத்திரங்கள் கூட‌
வெறிச்சுவையின்
இறைச்சித்துண்டுகளாய்...
அங்கே!அங்கே!
==============================================
டிசம்பர் 7 2014 ல் எழுதியது.

தமிழ்டா!

தமிழ்டா!
==========================செங்கீரன்.

என் ஆக்ஸிஜனை
எனக்குத்தெரியாது.
ஆனால் அது தான்
தமிழ்
என்று தெரியும்.

இந்த வானம் எப்படி
விரிந்தது என்று
எனக்குத்தெரியாது.
ஆனால் தெரியும்
அது
தமிழின் ஒலி விரிப்பு.

ஏழு கடல் என்றார்களே
அது எனக்குத்தெரியாது
என் தமிழின்
ஓரெழுத்துச் சொல்
ஒன்றை உரித்துப்பார்த்தேன்
அப்பப்ப!
அதனுள்ளே
எத்தனை ஆயிரம் கடல்கள்!

என் அரைஞாண் கயிறு
ஒரு நாள்
மின்னல் கயிறாய்
கிளர்ந்தது.
இதழ்களின் மேல்விளிம்பில்
என் பூ மயிர்
என்னை புல்லரிக்க வைத்து
ஒரு பெண்ணின் முன்னே
படபடக்க வைத்தது.

அதை காதல் என்றார்கள்.
ஆனாலும் அது
இந்த பிரபஞ்சத்தின்
ப்ளாக் ஹோல் புதிர் போல‌
எனக்கு என்ன வென்று
விளங்கவே இல்லை.

"உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று"
என்று ஒரு குறள் தமிழ்
என்னை
அந்த பூவின் அருவியில்
குளிப்பாட்டியது.

தமிழ் என்பதும் காதல்
காதல் என்பதும் தமிழ்.
ஒரு மின்காந்தமாய்
எத்தனை எத்தனை
ஒளியாண்டு தூரத்திலும் அவள்
விழியாண்டு எனை
மொழிபெயர்க்கும் அவளாக!

காதல் என்ற நாணயத்தை
சுண்டி எறிந்தேன்
அதன் அடுத்த பக்கமே
கொம்பு சிலிர்க்கும்
காளையை தழுவும் வீரம்
என்று கண்டேன்.

அந்த கலித்தொகைத்தமிழின்
தாழ்
தரவு
கொச்சகம்
தனிச்சொல்
சுரிதகம்
என்னும் இனிய‌
"அனாடமி"அறிந்து கொண்டேன்
இந்த‌
மெரீனாவின்
ஒவ்வொரு மணலின்
அல்ல அல்ல‌
மனதின் பொன் துளி கண்டு.
ஆம்!
இது தமிழ்டா!
"கபாலிடா நெருப்புடா"
என்று
பூட்ஸ் தேய்த்து
புளகித்துக்கொண்டாலும்
இது தமிழ்டா
என்று
உலகம் எனும் கால்பந்து
உதைத்துச் சொல்வேனடா!
எரிமலையை
உமிழ்ந்த தமிழ்டா இது!
நினைக்க நினைக்க‌
அமிழ்துடா இது!

======================================================