வெள்ளி, 19 ஜனவரி, 2024

வாழ்த்து மடல்

 

"சங்கச்செம்மல்" விருது பெறும்

பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர்

ப.பாண்டியராஜா அவர்களுக்கு

ஒரு வாழ்த்து மடல்

----------------‐---------------------------------------

சொற்கீரன்.



சங்கத்தமிழா?

அப்படியும் ஒரு தமிழ் இருக்கிறதா?

என்று

தமிழனின் வரலாற்று மிச்ச சொச்சம்

ஒரு இருளில் மண்டிக்கிடக்கும் போது

மின்னல் வெட்டாய்

தங்கள் "தொடரடைவுகள்" எனும்

படைப்புகள் மூலம்

பேரொளி பாய்ச்சிய

தமிழ்ஞாயிறே!

எங்கள் நெஞ்சங்களில்

தமிழின் ஆயிரம் இமயங்கள்

விம்மிப் புடைக்கும்

ஒரு பெருமிதத்தை

நல்கி விட்டீர்களே!

நன்றி நன்றி 

கோடி நன்றி தங்களுக்கு! 

அந்த பனை ஓலைக‌ளி‌ல்

புதைந்து கிடந்த

தமிழின் 

"கிம்பர்லி"வைரங்களை 

சுடர் விடும்படி எங்களுக்கு 

தந்து விட்டீர்கள்.

இல்லாவிட்டால் நா‌ங்க‌ள் அ‌ந்த 

கூச்சல் மொழி ஈசல்கள் போல 

இறகு உரிந்து கிடப்போம்.

மீட்டுத்  தந்தீர்கள் உயர் 

வானத்து    நம் செந்தமிழை !

-------------------------------------------------




























திங்கள், 15 ஜனவரி, 2024

கடைசி வரிகள்.

 

சன்னல் திரைச்சீலைகள்

ஆடுகின்றன

சலங்கை கட்டிக்கொள்ளாமல்.

என்ன வந்தது அவைகளுக்கு?

கோபம் தான்.

மாமிச நாற்றம் பிடித்த

வில் அம்புகளால்

தீட்டு இல்லையாம்

வேட்டுவனின்

எழுத்தாணி உமிழ்ந்த

எழுத்துக்களாலும் 

தீட்டு இல்லையாம்.

வால்மீகியே

உன்னைக்கொண்டல்லவா

உன் வழிவந்த அந்த

மானிட இழையையே

வெட்டி முறிக்கின்றார்கள்.

"ஆமாம்

என் கதாநாயகனையே

இவர்கள்

என்ன பாடு படுத்தினார்கள்?

இவர்கள்

என்ன காரணம் வேண்டுமானாலும்

சொல்லிக்கொள்ளட்டும்

அந்த சரயு நதியில்

அவன் தற்கொலை  

செய்து கொண்டதற்கும்

அந்த மன உளைச்சல்களே  காரணம்

 அந்தக் கண்ணீர்

ஒரு ஊழித்தீயாக

அம்பு விடத்தான் போகிறது.

நான் எழுதாமல் விட்ட 

கடைசி வரிகளும்

அவையே தான்.

-------------------------------------------------

ருத்ரா.









செவ்வாய், 9 ஜனவரி, 2024

சாசனங்களுக்கடியில்....

"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு.

எங்கும் சுதந்திரம்......

எங்கும்.....தந்திரம்....

எங்கு....ந்திரம்....."

கிராமஃபோன் பொட்டியில

ஊசியை மாத்துங்கபபா..

ஊசிப்போனது ஊசியில்லே.

உளுத்துப்போன

சாதி மத பேதங்கள்.

-----------------------------------------

ருத்ரா.