கோடம்பாக்கம்
-----------------------------
படமா எடுக்கிறாங்க படம்?
கந்தல் கூளங்களின்
கதை.
சமுதாய யதார்த்தங்கள்
என்று
கத்தியும் அருவாளும் தான்
கதாநாயகர்கள்.
காதலித்தே ஆகவேண்டும்
என்று
பதினாறு வயது
மின்னல் பூச்சிகளை
வைத்துக்கொண்டு
வளைத்து நெளித்து
வானவில் சேட்டைகள்.
அப்புறம்
கதை........
அது வழக்கம்ப்போல்
அந்த ரோட்டு சாக்கடை வாய்க்காலுக்குள்
மழை வெள்ளத் தண்ணீர்
போய் விழுமே
அந்த மாதிரி உள்ளே போய்விடும்.
எல்லா சாதி சமய அலப்பறைகளோடு.
சமுதாய ஒட்டு மொத்த
அடிவயிற்றில்
ஒரு தீ எரிந்து கொண்டிருக்கிறதே
அதன் சூடும் தகிப்பும்
ஏன் இன்னும் நிழலாடவில்லை.
பின்னணியில்
காட்டுத்தனமான ஒரு வெறியும் வேட்கையும்
மட்டுமே
பாக்ஸ் ஆஃபீஸை மொய்த்துக்கொண்டிருக்கிறது.
அந்தக்காலத்து
சத்யஜித் ரே என்றெல்லாம் பேசினால்
ஏ மண்ட காய்ஞ்ச பெரிசு..
போய் ஓரமா உக்காரு
என்ற அதட்டலே கேட்கும்.
22ஆம் நூற்றாண்டை
இந்த ஜிகினா தோரணங்களோடேயே
வரவேற்போம் வாருங்கள்.
__________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக