புதன், 10 ஜூலை, 2024

கழுகின் பார்வைக்குள்




எங்கோ தூரத்தில் 

இரண்டு எறும்புகள்

காதல் செய்வது கூட‌

கழுகின் பார்வைக்குள்

ஒரு ஹாலிவுட் படப்பிடிப்பு.

கவிதைகள் எனும் கழுகுகள்

நிறையவே வட்டமிடுகின்றன.

வெற்றுக்காகிதத்தின் 

அழுக்குப்புள்ளிகளில் 

கூட‌

ஆயிரம் "ஆற்றுப்படைகள்."

_____________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக