ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தமிழ் மணம் தர வரிசை (30.04,2017)

3 Month Traffic Rank :104
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog

3 Month Traffic Rank :105
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog


நகைச்சுவை (18)

நகைச்சுவை (18)
====================================ருத்ரா

"இந்தக்கட்சி தமிழ் நாட்டில் "காலூன்ற" முடியாது என்கிறார்களே!"
"அதற்கு அவசியமேயில்லை."

"என்ன சொல்கிறீர்கள்?"

"அவர்கள் எதையும் தலைகீழாக பார்க்கும் யோகிகள் ஆயிற்றே.அதனால்  சிரசாசனம்"செய்துகொண்டே வருவதற்கு முயலலாம்.

========================================================

நகைச்சுவை (17)

நகைச்சுவை (17)
===================================ருத்ரா

("தினத்திகில்" என்ற பத்திரிகை அலுவகம்)

அச்சு கோர்ப்பாளர்

  ஸார்! கட்டுரைத்தலைப்பு "கொடநாடு"என்பதற்குப்பதில் பிழையாக‌ "கொலநாடு" என்று அச்சாகி எந்திரம் ஓடிக்கொண்டே  இருக்கிறதே.
நிறுத்தி விடவா?

ஆசிரியர்

வேண்டாம். விடு.

=============================================================


நகைச்சுவை (16)

நகைச்சுவை (16)
==================================ருத்ரா இ பரமசிவன்.

அந்தப்பொறியை அக்குவேறாய் ஆணிவேராய்
பிரித்துப்பார்த்து விட்டார்கள்.

என்ன கிடைத்த தாம்?

செத்த எலியும் மசால்வடையும் தான்.

அப்படின்னா..?

அதாவது வாக்குகளும் இலவசங்களும்.

================================================
நகைச்சுவை (15)

நகைச்சுவை (15)
==================================ருத்ரா இ பரமசிவன்

சிந்து பாத்தும் கடற்கிழவனும் னு ஒரு படக்கதையை பத்திரிகையில்
படிசிருக்கேன்.

சரி

அதுல சிந்துபாத்து அந்த கிழவனைத் தோளில் சுமந்து கொண்டு
அங்கும் இங்கும் திரிந்து கொண்டே இருப்பான்.

ஆமாம் அதுக்கென்ன இப்போ

அப்படியே அந்த பத்திரிக்கை 400 ,500 எபிசொடு நீட்டிக்கிட்டே இருக்கும்.

இப்போ என்ன சொல்ல வர்றீங்க?

தினகரனோட அந்த கேஸ  வச்சுகிட்டு  மத்திய சர்க்கார் சென்னைக்கும் டெல்லிக்குமா இப்படி சிந்துபாத் கதை எழுதிக்கிட்டிருக்காகளே ....அதைத்தான் கேட்டேன்..!!

============================================================

உன்னையே நீ எண்ணிப்பார்

உன்னையே நீ எண்ணிப்பார்
=======================================செங்கீரன்.

இது சாக்ரடீஸ்
புதுத் தலைமுறையினரை நோக்கி
அறைகூவல் விட்டதாய்
எழுதிய‌
கலைஞரின் எழுத்துக்கள்.
தமிழா என்ற‌
உரத்த முழக்கமே
அதற்குள்  ஒலித்தது.
தமிழ் என்றால்
தேவாரம் இனிக்கும் மொழி.
திருவாச‌கம் உருக்கும் மொழி.
கம்பன் கலக்கிய மொழி.
ஆனால்
மனிதனுக்கு மனிதன்
கூறுபோடுவதையும்
சுவர்கள் கட்டி
குறுகிக்கொள்வதையும்
சமுதாயச்சடங்குகள் ஆக்குவதையும்
நம் இனிய மொழி
அடைகாக்க வேண்டுமா?
தமிழ்
எல்லா ஆதிக்கங்களையும்
தகர்க்க வந்த மொழி!
எல்லா கொடுமைகளயும்
எரிக்க வந்த மொழி.
உலகின் அறிவுத்திரட்சியை
உள்ளடக்கி வந்த மொழி.
அதனால் தான்
கலைஞர் எழுத்துக்கள்
அந்த
கடல்நுரைபோல் நரைத்த‌
கிரேக்கத்துப் "பிசிராந்தையார்" போல்
மொழி இமிழ்த்தது!
கோவில்கள் நம் வரலாற்றின்
கற்கண்ணாடிகள் தான்.
ஆனால் சிந்தனையற்ற‌
சாதி மத அழுக்குகளைக்கொண்டு
அதை அபிஷேகம் செய்யும்
போலித்தனங்கள் எல்லாம் போகவேண்டும்.
சாதிகள் "தமிழிலும்" உண்டு என‌
சாதிக்கும் சனாதனிகள்
அணியும் வேடங்களையும் முகமூடிகளையும்
அடித்து நொறுக்கத்தான் வேண்டும்.
வேர்வை வடிய வடிய‌ உழைக்கும் கரங்கள்
இந்த சமூக அநீதிகளை
எரித்துவிட எழுச்சிகொள்ளும்
நெருப்பின் அலைகள் ஆகும்.
தூய காற்றை உட்கொள்ளத்துடிப்பவனே
தூய தமிழை உட்கொள்ளும் தமிழனாய் நீ
ஆகவேண்டும்.
மந்திர மொழிக்கும்பல்கள்
மண் கவ்வ வேண்டும் இனி!
தமிழ் உன் மொழி மட்டும் அல்ல.
அதுவே உன் அரசியல்.
உன் உயிர் மெய் காப்பாளன்.
டெல்லி சாணக்கியர்கள் நகர்த்தும்
ஒவ்வொரு காய்களிலும்
தமிழ்த்திருநாட்டை
சுடுகாடு ஆக்கும் சுவடுகள்
மட்டுமே தெரிகிறது.
தமிழா!
உன் குழந்தைகளுக்கு
சமஸ்கிருதப்பெயர்களை சூட்டி
அழகுபார்க்கும்
நீ
எப்போது புரிந்துகொள்ளப்போகிறாய்
ஒரு கிடு கிடு மரணப்படுகுழியில்
விழ இருக்கிறாய் என்று!

================================================


வெள்ளி, 28 ஏப்ரல், 2017

நகைச்சுவை (14)

நகைச்சுவை (14)
=======================================ருத்ரா இ பரமசிவன்


சிங்கமுத்து.

அண்ணே ! "சின்னம்" வாங்க அறுபது கோடியாம்ணே !

வடிவேலு.

என்ன்ன இது!  "சின்ன்ன"ப்புள்ளத் தனமாவுல்ல  இருக்குது!

(இது கற்பனை உரையாடல்)


=============================================================நகைச்சுவை (13)

நகைச்சுவை (13)
===========================================ருத்ரா இ பரமசிவன்

தொண்டர்

"உங்களை பின்னால் யாரோ இயக்குகிறார்களாமே?"

தலைவர்

"அப்படி ஒன்றும் இல்லையே!"

தொண்டர்

"என்ன சொல்றீங்க?"

தலைவர்

"அப்படி "பின்"னால் இயக்கினால் முதுகில் முள் குத்தியது போல்
சுறுக் சுறுக்கென்று வலிக்குமே!"


=======================================================

வியாழன், 27 ஏப்ரல், 2017

நகைச்சுவை (12)

நகைச்சுவை (12)
==========================================ருத்ரா இ பரமசிவன்


டில்லிக்கு போனாராமே விசாரணைக்கு

ஆமாம்.

அப்புறம்

அங்கே இங்கே என்று சென்னைக்கு அவர் வீட்டுக்கே வந்தார்களாம்
பல மணிநேரங்கள் விசாரணையாம்.

அப்புறம்.

ராஜாஜி"பவனுக்கு" கூட்டிட்டுப்போனார்களாம்.

ஏன்? "டிஃபன்" சாப்பிடவா?

===============================================================

ஞாழல் பத்து

ஞாழல் பத்து
=============================================ருத்ரா இ பரமசிவன்.

ஐங்குறு நூறு தமிழின் தொன்மை மிக்க புதுக்கவிதைகள் போன்றவையே.சொல் ஆக்கம் அதன் பொருள் அதில் பொதிந்த கற்பனைச்செறிவு எல்லாம் படித்து படித்து பெரு மகிழ்வு அடைய தக்கவை.இதில் நெய்தல் திணை சார்ந்து நூறு செய்யுட்கள் ஆக்கியவர் அம்மூவனார்.அவர் பெயரில் ஒளிந்திருக்கும் பொருளும் வழக்கும் தமிழின் "செம்மை மற்றும் தொன்மை" சாற்றும் தன்மையுடையன.
மூ என்றால் மூன்று என்ற பொருள் யாவரும் அறிந்ததே.ஆனால் மூ என்று தனியெழுத்தே தமிழின் தொன்மை சுட்டுகிறது.அழகிய சிறந்த அறிவார்ந்த மூத்த குடிப்புலவன் என்று தான் "அம்மூவன்" என்பதற்கு
நாம் பொருள் கொள்ளவேண்டும்.மூவேந்தர்கள் என்று "மூன்று" அரசர்களோடு முடக்கிக்கொள்வதல்ல அப்பெயர்கள்.காலத்தால் மூத்த இனத்தின் அரசர்கள் என்பதே பொருள்.தமிழ் நாட்டில் "மூதேவி" என்றால் துடைப்பம் கொண்டு விரட்டி விட்டு ஒரு ஸ்ரீ யைச்சேர்த்த "சீர் தேவி(இது தமிழ்ச்சொல் தான்)யை நடு வீட்டுக்கே கொண்டு வைத்துக்கொள்ளும் வழக்கம் ஏன் வந்தது.இவள் செல்வம் கொண்டு வருவாள்.அவள் வெறுமே தொன்மை அறிவு மட்டுமே தானே தருவாள் என்ற அந்தக்காலத்து "பணப்பேராசை" எனும் டாஸ்மாக் தனம் நம்மிடையே நுழைந்ததால் இருக்கலாம்.மனிதர்கள் செல்வச்செழிப்போடு வாழ வேண்டும் தான்.அதற்காக மூத்தோர்கள்
மூளி அலங்காரிகளாக வெறுக்கப்படும் கலாச்சாரம் எப்படி நுழைந்தது? "மூதேவி" என்றால் வறுமை அல்லது தரித்திரம் வந்து விடும் என்று  அடித்த‌ கோடாங்கியின் ஒலி இன்று வரை எதிரொலிக்கிறது.சரி போகட்டும்.
அம்மூவன் எழுதிய அரிய தமிழ்ச்செய்யுட்கள் கண்டு இன்புறுவோம்.


ஞாழல் பத்து
==============
"எக்கர் ஞாழல் செருந்தியோடு கமழத்
துவலைத் தண்துளி வீசிப்
பயலை செய்தன பனிபடு துறையே."....(செய்யுள்.141)மூன்று வரிகளில்
அந்த புலிநகக்கொன்றையும்
செருந்தியும்
மலர்கள்
என்று பெயர் சொல்லிக்கொண்டு வந்து
அவள் உள்ளத்தையே
பெயர்த்து எடுத்து
காதலில் கடைந்து
வதை செய்ததை
காட்டுகின்றான் அம்மூவன்.
பயலை என்பது
பசலை என்று
இடைப்போலியின் இலக்கணம் தந்தாலும்
அவள் உடலில்
மாயக்கைகள்
மருதாணிக்கீற்றுகள் (மெகந்தி)போல்
சித்திரம் காட்டி
சித்திரவதை செய்வது எல்லாம்
துவலைத் தண் துளி வீசும்
பனிபடுத் துறைவன் தானே!
அந்த "துவலைக்குள்" அல்லவா
அம்மூவன்
அழகாக நெய்யப்பட்டிருக்கிறான்.
"நெய்யப்பட்டிருக்கிறானா?"
அவன் தானே
அச்செய்யுளை நெய்தது?
அவன் நெய்திருக்கலாம்
அதில் அவளது "பசலையின்"
தீச்சுடும் வரிகளில்
ஒரு துன்ப "டிசைனை"
கோர்த்து நெய்தது
அந்த பிரிவுத்துயரின்
வலியும் வேதனையும் தானே!
"துவலைத் தண்துளி" என்று
பாம்பே டையிங்
தேங்காய்ப்பூத்துவாலையை
அலைத்துளியாய் வீசி
அம்மூவன் அங்கே
போர்த்த நினனத்தாலும்
தலைவியின் உணர்ச்சியே
அங்கு கடல்.
அங்கு அலைகள்.
===============================================ருத்ரா
20 மார்ச் 2015 ல்  எழுதியது.

புதன், 26 ஏப்ரல், 2017

கோமாவில் தமிழ்

கோமாவில் தமிழ்
=============================ருத்ரா


ஜாவா சுமத்ராவில் தமிழ்.
பர்மா மலேசியா சிங்கப்பூரில் தமிழ்.
அது போல்
"கோமா"வில் தமிழ்..
அது என்ன கோமா?

அந்நிய மொழி மயக்கத்தில்
சொந்தமொழிக்கே
இங்கு
ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை.


அறுபது தமிழ் "வருஷங்கள்"
உங்கள் வாயில் நுழைந்தது உண்டா?

பார்த்து பார்த்து
கம்பியூட்டர்களில் தடவி தடவி
வைத்தாலும்
உங்கள் குழந்தைகளின்
தமிழ்ப்பெயர்கள் யாவும்
ஏன் "ட்ரியா .ட்ரிஜா ப்ரிஜா..."
என்று ஒலிக்கின்றன.

பத்திரிகைகள் சினிமாக்கள்
டி.வி, கை பேசி கலாச்சாரங்கள்
எல்லாமே
த‌மிழை கோமாவில் தான்
ப‌டுக்க‌வைத்திருக்கின்ற‌ன‌.

ஆங்கில‌த்தில் ப‌டியுங்க‌ள்
த‌மிழில் ப‌டுத்துக்கொள்ளுங்க‌ள்.
உல‌க‌த்த‌மிழ் வாழ‌ட்டும்
த‌மிழுக்கு
த‌மிழ் நாட்டில்
சுடுகாடு போதும்.

க‌ல்லூரிக‌ளில்
ஆங்கில‌த்தில் தானே
ப‌டிக்கிறீர்க‌ள்.
ப‌ள்ளிக‌ளில் ப‌டிக்கும்
ஆனா ஆவ‌ன்னா கூட‌
உங்க‌ளுக்கு
"தீட்டு" ஆகிப்போன‌தென்ன‌?
ஆரம்பக் கல்வியிலேயே
அன்னைத்தமிழுக்கு
"ஆணி" அடிக்க்
கிளம்பிவிட்டீர்களே.

என்றைக்குத்தான் அந்நிய மொழியை
புரிந்து கொள்வது
என்று ஆதங்கப்பட்டால்
கோவில்களிலிருந்தே
ஆரம்பியுங்களேன்.
ஆங்கிலத்தில் அர்ச்சனைக்கு
சீட்டு வாங்குங்கள்.

பேராசை.........வாழ்க்கை முறை
ல‌ஞ்ச‌ம்.......ஆட்சி முறை
க‌ட‌வுளே இல்லாத‌ ம‌த‌ங்க‌ள்
ம‌ர‌த்துப்போன‌ தேர்த‌ல்கள்

எனும்
புதிய‌ வ‌ர்ணாசிர‌ம‌த்தின்
நான்கு வ‌ர்ண‌ங்க‌ளில்
நீங்க‌ள்
த‌மிழ‌னின் சாய‌ம் இழ‌ந்து போனீர்க‌ள்.
ம‌னித‌னின் நிற‌ம் இழ‌ந்து போனீர்க‌ள்

================================ருத்ரா
மே 26  2013 ல் எழுதியது.

சனிப்பார்வைJoin the Cassini orbiter in real time - or at any point during its epic mission. NASA's Eyes on the Solar System is a 3-D environment full of real NASA mission data. Explore the Saturnian system from your computer. Hop on a moon. Fly with Cassini. See the entire solar system moving in real time. It's up to you. You control space and time.

சனிப்பார்வை
==========================================ருத்ரா

சனிப்பார்வைக்கு பயந்து திருநள்ளாறு கோவில் போய் கருநீலத்துண்டு வாங்கிக்கொடுத்து அர்ச்சனை செய்ய அலைமோதும் மக்களே !
அந்த நாசாவின் "கேசினியை " பாருங்கள்." சனியையே  முறைத்துப்பார்த்து நிமிடத்துக்கு நிமிடம் அதன் "லக்கினத்தையே" படம் பிடிக்கும் மனிதனின்
அறிவு எங்கோ ஒரு உயரத்துக்கு போய்விட்டது.நீங்கள் ஏன் இன்னும் சனி பகவான் என்றொரு "அச்சத்தின்" வடிவத்துக்கு அடி பணிய வேண்டும்.?
கடவுளை வேண்டாம் என்று சொல்லத்தேவையில்லை. ஜாலியாக பாக்கெட்டில் படம் வைத்துக்கொள்ளுவது போல் அந்த கருத்தை வைத்துக்கொள்ளுங்கள்.ஆம் அந்த உயிரற்ற படத்துக்கு நீங்கள் உங்களையே அடகு வைத்துக்கொள்ள தேவையில்லை.  மத வாதிகள் அப்படித்தான் உங்களை மழுங்கடித்துக்கொண்டு தேர்தல் காலங்களில் உடுக்கையடிக்கிறார்கள். அப்புறம் பாம்பும் பல்லியும் பசுவும் பன்றியும் உங்களை சிலைகளாக சூழ்ந்து கொள்ளும்.அதற்கு கற்பூரம் காட்டியே உங்கள் வாழ்க்கை  யெல்லாம் கரைந்து விடும்.

எனவே இனி மனிதன் அறிவால் பிரபஞ்சத்தையே ஒரு "போன்சாய்" மரம் ஆக்கி வீட்டில் வைத்து அழகு பார்க்கப்போகிறான்.ஏழரை எட்டரை என்று நீங்கள் குலை நடுங்கவேண்டாம்.ராசி பலன் சொல்வதாய் எல்லா டி .வி களும் உங்கள் மூடத்தனத்தின் தலையில் மிளகாய் அரைத்து கல்லா கட்ட விடலாமா?  கீழே உள்ள இந்த சுட்டியை தட்டி "அந்த சனியின்"பல்லைத்தட்டி
அதன் கையில் கொடுத்து விடுங்கள்.
https://saturn.jpl.nasa.gov/mission/saturn-tour/where-is-cassini-now/

ஓடி வருவது யார்?

ஓடி வருவது யார்?
=============================ருத்ரா

கட உள்.
கடந்து உள்ளே செல்.
இந்த முகமூடிகளையும் கூச்சல்களையும்
கழற்றி வைத்து விட்டு செல்.
அறிவு வெளிச்சம் நோக்கி செல்லுவதற்கும்
ஒரு சிறு வெளிச்சம் வேண்டும்.
தீக்குச்சி கிழித்து
இந்த இருட்டுத்திரை கிழித்தால்
சூரியனையும் நீ கைகுலுக்கும்
ஒளிப்பிழம்பு உன்னிடம் இருப்பதை
நீ அறிவாய்.
அந்த கீற்று வெளிச்சம் உன்
அறிவுத்தேடல் மட்டுமே!
கடவுள் என்றொரு
கனமான முற்றுப்புள்ளியை
உன் முதுகில் சுமந்து கொண்டபிறகு
எதைத்தேடி உன் பயணம்?
உன் கடவு சொல் சாவி கொண்டு
இந்த கடவுளைத்திறக்க
மதத்தையா நீ கையில் எடுப்பது?
மதாமதம் என்று ஸ்லோகம் சொல்கிறது.
மதத்தை மதமற்றதாக ஆக்கும் அறிவே
சிறந்த அறிவு.
கடந்து உள் செல்.
அது குகை அல்ல.
எல்லைகள் உடைந்த அறிவு வெளி அது.
வெளியே போவதைத்தான்
உள்ளே செல் என்கிறோம்.
அதுவே
கட உள் !
நாம ரூப வர்ணங்களால்
எச்சில் படுத்தாதே!
கடவுளை மறுக்கும்
ஒரு விஞ்ஞானம் கொண்டு
கடவுளை நீ கண்டுபிடித்தால் கூட‌ போதும்
அதை அப்படியே வாங்கி அறிந்து கொள்ள‌
உன் பின்னே
ஓடி ஓடி வருவது யார்?
கடவுளே தான்.

====================================================

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

புறவு கொடு செய்தி

புறவு கொடு செய்தி
=============================================ருத்ரா இ பரமசிவன

மதிமலி புரிசை பன்மாடப் பெருநகர்
மண்டமர் கடுவளி புன்சிறை ஆர்ப்ப‌
காண்குவன் கண்குவன் கண்டிலன்.
பொருள்வயின் பிரிந்த நின் வெள்ளிய குன்றத்து
அறிவுசெறிக் கிழவன் நுண்பொறி ஆற்றும்
மனை எது? வினை எது?அறிகிலன் மன்னே!
காற்றின் வெளியிடை ஓர் கனைகுரல் கேட்டேன்.
மின்னல் காட்டின் அதிர் ஓதை மிழற்றும்
துடியன்ன உருவும் அஃதில் அறைதர‌
கண்டிசின் யானும் பொறி கிளர்ந்தேன்.
புறவு கொடு செய்தி எதிர்வரும் முன்னே
பசலைப்புன் நோய் நின்னை வருத்தும்
அளிநிலையான் என்னிலும் முன்னே
பறந்தாய்! பாவாய் ! திண்தோள் மார்பன்
தழீஇச்செல்ல வானும் கிழித்து
ஆறு செய்தாய் அவிர்த்தீ அவி உற‌
அங்கொரு மாடத்து உள் உள் உறைசெயும்
அவனைக்காண்பாய் உன் ஆவி மீக்கொளவே!விளக்க உரை
==============================================

( அந்தப்புறா அந்த நியூயார்க் நகரத்தை ஒட்டிய கடற்பரப்பில் பறந்துகொண்டிருக்கிறது.புறாவின் சிறகுத்துடிப்புகள் இங்கே தலைவியின்
இதயத்துடிப்புகளாய் கேட்கிறது)

பொருள்வயின் பிரிந்த தலைவன் வெளிநாட்டுக்கு வந்து கணினி  மின்பொறியில் பணியாற்று கிறான். நிலவு தொடும் உயரத்தில் கட்டிடங்கள் நிறைந்த நகர் அது.அங்கு போய் அவனைக் கண்டுவந்து செய்தி சொல்லும்படி தலைவி ஒரு புறாவைஅனுப்புகிறாள்.ஆனால் அதுவரைக்கும் கூட இருப்புகொள்ளாமல்பிரிவு நோயின் துன்பம் மிகுதியால் தலைவனைக்கண்டுவிட வேண்டும் என்று தானே அந்த புறாவுக்கும் முன்பே பறக்கிறாள்.(அல்லது மனப்பறவையை அனுப்புகிறாள்).புறாவும் காற்றின் இடுக்குகளில் அந்த தலைவியின் உள்ளொலியைக்கேட்கிறது.அவளது
துடியிடை எழிலை ஒரு வரைவு  உருவமாக அங்கே காண்கிறது.

"எனக்கும் முன்னே வந்து விட்டாயே இங்கு! உன் காதல் வேதனை புரிகிறது.அந்த பல அடுக்கு கட்டிடடங்களில் ஓர் அறையில் தான்
"வெள்ளியங்குன்றத்து தலைவன்" எனும் உன் காதலன் இருக்கிறான்.
உன் ஆவியால் அவனைப்போய் பற்றிக்கொள்" என்கிறது புறா.
கணினி யுகத்திலும் சங்ககாலக் காதல் இங்கே துடிக்கிறது.
அந்த புறாவின் சிறகுத்துடிப்புகளை கற்பனைக்கண்கொண்டு   உற்றுப்பாருங்கள். அவள் துடிப்புகள் உங்களுக்கு புரியும்.

================================================================

"சப்தங்கள்" போடும் சத்தங்கள்.


"சப்தங்கள்" போடும் சத்தங்கள்.
============================================ருத்ரா


"த்யுப்வாத்யாயதனம் ஸ்வஸப்தாத்"


த்யு பூ ஆதி ஆயதனம் ஸ்வ ஸப்தாத்.


(மேலே உள்ளது கோர்த்து எழுதியது.கீழே உள்ளது பிரித்து எழுதியது)

இது ப்ரம்ம சூத்ரம் முதல் பகுதி 2 ஆம் பிரிவின் 3 ஆம் உட்பிரிவின் முதல் வரி.

வேதம் என்பது ஒலி மொழி.அதுவும் கடவுள் மொழி.அது மனிதர்களால் எச்சில் படுத்தப்படக்கூடாது.மனிதன் அதை ஒலித்தால் அது மாமிசம் ஆகி விடும். ரிஷிகள் மட்டுமே ஒலிக்கலாம்.ஏனெனில் அதை கேட்டதே அவர்கள் தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆணி அடிக்கப்பட்ட இந்த "சனாதனமே" இந்துத்துவாவின் அடிப்படை."பிறப்பு" "பூப்பு" "இறப்பு" என்ற சொற்கள் எல்லாம் "புண்யாஜலம்"தெளிக்கப்பட பிறகே காதில் விழவேண்டிய சொற்கள்.அது வரை அது தீட்டு தான்.அதனால் தான் குழந்தை பிறந்த செய்தியின் "பிறப்பு" மகள் பெரியவ‌ள் ஆகி விட்ட செய்தியின் "பூப்பு"ஆகிய சொற்கள் கூட தீட்டு ஆகி காதில் தேள் கொட்டியது போல் ஆகிறது அந்த "வைதிகாளுக்கு".

போகட்டும் பிரம்ம சூத்திரத்துக்கு வருவோம்.
த்யு பூ ஆதி = ஒளி நிறைந்த மேலுலகம்(வானம்) கீழ் உலகம் (பூமி)முதலியன‌
ஆயதம் = முன்கூட்டியே வந்தவை (செல்வமாய்)தங்கியவை.

இவையெல்லாம் நமக்கு படைக்கப்பட்டவை."ஏற்கனவே(சொத்தாக) இருப்பவை"
இதையே அந்த சப்தம் (வேதம்)சொல்கிறது என்கிறார் பாதராயணர்.
இந்த "ஸ்வஸ்ப்தாத்" என்ற சொல்லே இங்கு மிகவும் சிந்திக்கத்தக்கது. இதற்கு

"சப்தமே அப்படி சொல்லிவிட்டது அப்புறம் என்ன?"

"சப்தமே தானாக அப்படி பூமி வானம் போன்றவற்றை சொல்கிறது அல்லது படைத்து விட்டது."

சப்தம் சப்தம் என்கிறார்கள்.அதை இன்னும் சமஸ்கிருதப்படுத்தி "ஸ்ருதம்" அல்லதி "ஸ்ருதி" என்கிறார்கள்."காதால் கேட்டது" அல்லது "காதில் விழுந்தது" என்பதே அது.இன்னும் பாதராயணரைக்கேட்டால் ஸ்ருதி கூட மனித செவியில் பட்டு தீண்டப்பட்டு மாமிசம் ஆகி தீட்டு ஆகிவிடலாம் அல்லவா. எனவே "சப்தம்" "சப்தம்"என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். பிரம்மத்துக்கு எதிராக வாதம் செய்பவர்களும் "ரிஷிகள்" கேட்டது தானே ,கேட்டதை விகாரமாக்கி (மாற்றி)உபநிஷதம் (அருகில் உட்கார் கேள் )சொல்லி யிருக்கிறார்களே என்றால் "ரிஷி"களுக்கே எல்லா லைசென்ஸ் கொடுத்தாகி விட்டது என்பது போலும் பேசுகிறார் பாதராயணர் என்ற வியாசர்.
"ரத்தத்தின் ரத்தம்" "உடன்பிறப்பு" போன்றவற்றிற்கே இந்த தீண்டாமை என்றால் அழுக்குப்பிடித்த அடுத்தவர்கள் மீது அவர்களது "ஜாதீய" தீண்டாமை எப்படியிருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை.

சரி.பூமி தோன்றியது வானம் தோன்றியது பற்றிக்கூறும் "ஒலி"யே பூமி ஆகுமா? வானம் ஆகுமா? எது காரணம்(பூமி முதலியன)? எது காரியம் (பூமி பற்றிக்கூறிய ஒலி)?என்பதை ஆராயவேண்டும் அல்லவா என்பதே பிரம்மசூத்திரத்தை விமர்சிப்பவர்கள் நொக்கம்.அவர்கள் இங்கே ஸாங்கியம் ந்யாய வைசேஷிகம் போன்ற தத்துவங்களை வைத்து வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். புத்தமும் இதில் அடங்கும்.பிரம்ம சூத்திரம் முழுவதம் "சப்தம்" என்று ஒலிக்கும்போதெல்லாம் நாம் இந்த சிந்தனைகளை யெல்லாம் முன்னே கொண்டு வரவேண்டும்.வேதம் எனும் ஒலி எல்லோர் காதிலும் விழட்டும் அப்போது தான்... அதற்கப்புறம் தான் அது நகர்வதற்கே வழிகிடைக்கும்.."ஒலி கொடு வழி பெறு" என்பதும் இதுதான்.பிரம்ம சூத்திரம் வந்த பின்னணியும் இது தான்.காட்டு மனிதன் ஒலி அல்ல அது என்றும் அப்படி இருந்தால் அது கராத்தே ஒலி போல் ஆ ஊ என்று தான் இருந்திருக்கமுடியும்.பித்தாகோரஸ் தேற்றம் எல்லாம் அது சொல்கிறது என்கிறார்கள்.எனவே ரத்தமும் சதையுமாய் இருக்கும் மனிதனை அதே ரத்த வாடையிலும் காம குரோத விரோத உணர்ச்சித்தீயை கொளுத்தியும் தான்
அது கூச்சல் கிளப்புகிறது.ரிஷி மூலம் நதி மூலம் கேட்கக்கூடாது என்று ஆரம்பித்து அந்த "நாலு வித"மதமாச்சரியங்களே நான்கு மறை ஆகிப்போனது.

ஒரு வழியாய் அதற்கு வரிவடிவம் கிடைத்த பிறகு தான் தெரிகிறது அந்த ஒலி எங்கிருந்தோ வரவில்லை என்று. (விட்டால் "பிக் பேங்க்"
குக்கு முன்னாலேயே ஒலித்தது என்று சொல்லிவிடுவார்கள்.ஏற்கனவே இந்த வேதத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட பிள்ளயாண்டான் ஃபிஸிக்ஸில் பி.ஹெச்.டி வாங்கினால் "மைக்ரோ பேக்கிரவுண்ட் ரேடியேஷனுக்குள்"ரிக் வேதம் இருக்கிறது என்று விக்கிப்பீடியாவை சாக்கடைப்பீடியா ஆக்கி விடுவான்). நம் அசிங்க ரத்தம் சொட்டும் வாள் அம்பு ஈட்டி மற்றும் சக்கராயுத சண்டையிலும் சோமக்கள் போதைக்கூச்சல்களிலுமிருந்து தான் வந்தது என்று புரிகிறது.

இருப்பினும் வேதம் எல்லோராலும் அறியப்படவேண்டும்.

சனாதனம் என்ற சொல் எவ்வளவு முரண் பட்டது என்பது இன்னும் ஒரு சான்று உள்ளது.பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலந்து ஒன்றான பிறகு தான் விடுதலை எனும் "மோட்சம்" கிடைக்கும்.அது வரை இது மும்மலங்களால் (பிறப்பு ஞானம் கர்மம்)அழுக்கடைந்து இருக்கும்.அதனால் தான் "பிறப்பு" முதலானவை எல்லாம் இங்கு தீட்டு.பரமாத்மா எனும் பிரம்மம் இன்று வரை "ஒலி"க்கப்படுவதே சனாதனம் என்றால் அப்படி ஒலிப்பதற்கு வாய் நாக்கு உமிழ்நீர் அதற்கு ஒரு உடம்பு உயிர் முதலியன வேண்டுமே? என்றும் நிலைத்திருக்கும் தன்மை என்றால் அது இன்றுள்ள நாக்கு இன்னும் மில்லியன் ஆண்டுகளுக்கு பின் வரும் நாக்கு என்ற உயிர்ச்சங்கிலி தொடரவேண்டுமே. அதை வெட்டி விட்டு பிறப்பு என்பதே தீட்டு வேறு உயிர்களும் தீட்டு என்று சொன்னால் மேற்கிளையில் இருந்து கொண்டு கீழ்க்கிளையை வெட்டுவதைப் போன்ற மேதாவித்தனம் தான் சொல்கிறது "நியாய வைசேஷிகம்"?வரிசையாக சிந்திக்கும் அறிவு என்று தான் நியாய வைசேஷிகத்துக்கு அர்த்தம்.சாங்கியம் என்பதும் அப்படி ஒரு அறிவின் ஒழுங்குமுறையைத்தான் (லாஜிக்)வலியுறுத்துகிறது.வேதம் சும்மா சும்மா "சப்தம்" போடுகிறது.இப்போது ஸ்லோகம் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

அடுத்து தர்க்கத்துள் நுழைவோம்.

===========================================================

மனத்தின் மரணம்.

மனத்தின் மரணம்.
=====================================ருத்ரா

எங்கே பார்த்தது அதை?
நினைவுக்கு வரவில்லை.
அந்த மலை வானம் பறவைக்கூட்டங்கள்.
கடல் அலையின் வெள்ளி ஜரிகைகள்.
பச்சைப்புல் வெளி.
ரோஜாக்கள்.
ரோஜாக்களைச் சுற்றும் வண்டுகள்.
எங்கே பார்த்தேன் அதை.
என் நினவுப்புலத்துக்குள் அது இல்லை.
ஞாபக வலைக்குள்
அது அகப்படவில்லை.
ஆனால் எல்லா இடத்திலும்
பார்க்கிறேன் அதை.
அன்றொரு நாள்
சாலையை கடக்கும்போது
கிரீச்சென்று ஒரு கார் நின்றது.
கண்முடி திறப்பதற்குள்
நசுங்கிய பாச்சையாய்
காருக்கு அடியில் ஒருவன்.
என் அருகே உரசிச்சென்றவன் தான்.
என் கண் முன்னேலேயே
அவன் அடிபட்டு விழுவான் போல்
கண்டிப்பாய் தெரிந்தது.
அதில் அடிபடாமல்
நான் நினைத்து இருந்தால்
இப்பக்கமாய்
இழுத்துத்தள்ளியிருக்கலாம்
என் அனிச்சைச்செயல்
அப்படித்தான்
என் மோட்டர் நரம்புகளை
நிமிண்டியது.
அப்படியிருந்தும் நான் செய்யவில்லை?
நமக்கேன் வம்பு என்ற‌
அரக்க எண்ணம் எப்படி வந்தது?
அது ஏன்?
அது என்ன?
எனக்குப் புரியவில்லை
அதைத்தான் தேடுகிறேன்.
சரி.
இந்த மலையிலும்
மரத்து மட்டையிலும்
புல் பூச்சியிலுமா தேடுவது?
மலர் மகரந்தங்களின்
தூள் மண்டலங்களிலா
தேடுவது?
அது யார்?
அது எது?
அது பிரம்மம் என்று சொல்லி
கண்ணை மூடிக்கொண்டு
காயலாங்கடை
நசுங்கிய டப்பாவாய்
கிடக்கவேண்டியது தானே!
அப்புறமும் ஏன் இந்த தேடல்?
மூளையின் கற்பனையில்
புற்று வளர்ந்து
நான்
வால்மீகி ஆக வேண்டும்
என்று
யார் அழுதார்கள்.
மனிதனை
சாகவிடும்
மனிதன்
மனிதன் தானா?
கலர் கலராய்
எனக்குள் விழுந்த‌
அந்த நிழல்களை
கொண்டு
வரட்டி அடுக்கவா
நான் உலவிக்கொண்டிருந்தேன்.
என்னுள்
சொருகிக்கிடக்கும்
அந்த கசாப்புக்கத்தியைத்தான்
ஒரு கவிதை போல‌
தேடிக்கொண்டிருக்கிறேனா?
மரணத்தின்
கோடி கோடிப்பங்கில்
ஒரு துளியாய்
என்னை நிரவிக்கொண்டிருப்பது
எது?
ஒரு மண் புழு ஊர்ந்து கொண்டிருக்க‌
உயிரோடு இருக்கும்போதே
அதை மொய்த்து தின்னும்
எறும்புக்கூட்டம் அங்கே.
புழு அடங்கிப்போகவில்லை.
அது
வளைந்து நெளிந்து
சுருண்டு நீண்டு
துடித்து துடித்து......
அதை கம்ப்யூட்டரில்
சிமுலேட் செய்தால்
இந்தோனேஷியாவின்
சுநாமி சுருட்டல்களே
கண் முன் வரும்.
ஒரு புழு புரட்சி செய்கிறது.
நெருக்கடிகளை நீக்கிவிடும்
புரட்சி இது.
என் மனப்பிழம்பில்
இது எப்படி செத்துப்போயிற்று.
சாகவிடப்பட்ட‌ அவனின்
முகம் எனக்குத்தெரியாது.
நான் இன்னும் தேடுகிறேன்.
எதை என்று
இன்னும் தெரியவில்லை.
நான் தேடுகிறேன்.
அதே ரோட்டுக்கு வந்துவிட்டேன்.
போலீஸ்காரர் போட்ட‌
அந்த சாக்பீஸ் வட்டம்
அதற்குள் தெரிந்த‌
வெற்றிலைச்சாறு துப்பியது போன்ற‌
கருஞ்சிவப்புக்கறை...
அட!இது என்ன?
அய்யோ..அய்ய்ய்யோ
இப்போது
நானும் இங்கு இல்லையே .
அது
நானா? இவனா?


=============================================ருத்ரா

திங்கள், 24 ஏப்ரல், 2017

"ரிமோட் "

"ரிமோட் "
=========================================ருத்ரா

காகிதமும் பேனாவுமாக கவிஞன்.
எதிரே கடவுள்
கையில் ஒரு "ரிமோட்டுடன்".
"கவிஞனே!
காதல் கத்தரிக்காய் எல்லாம்
இருக்கட்டும்..
ஒரு பத்துப் பாட்டு
காதலின் வெத்துப்பாட்டு என‌
இல்லாமல் பாடு.
தவறி நீ பாடினாயானால்
இதை ஒரே அழுத்து..
உங்கள் எல்லோரையும் சேர்த்து
நானும் கூட‌
வெடித்துச்சிதறுவேன்.
தயாரா?
இறைவன் சீறினான்.
இப்போது தான்
ஏதோ ஒரு திரைப்படம் பார்த்தான்
போலிருக்கிறது.
காதலை குத்தாட்டம் குரங்காட்டமாக‌
பார்த்துவிட்டு வந்த
அவன் கூட
அதோ வெறி பிடித்து
ரிமோட்டை வெடிக்க காத்திருக்கிறான்.
கவிஞனுக்கு பயம்.
நான் போனாலும் பரவாயில்லை.
இந்த உலகம் காப்பாற்றப்படவேண்டுமே
என்ற நடுக்கத்தில்
"சிந்தனை செய் மனமே..."
பாடல்கள் தொடங்கி விட்டான்.
முதல் பாட்டு..
2 ஆம் பாட்டு..
3 ஆம் பாட்டு..
........
.........
11 ஆம் பாட்டு

இந்த தடவை கவிஞன் ஏமாறவில்லை.
கடவுள் காப்பு பாட்டையும் சேர்த்து தான்
பாடியிருக்கிறான்.
......
ஆனாலும்
என்ன ஆயிற்று?
இறைவன் ரிமோட்டை அழுத்திவிட்டான்..
எல்லாம் தொலைந்தது..
எல்லாம் புகைமயம்.
சூன்யம் எனும் வெறுமை...

காளைமாட்டின் மேல் இருந்த‌
தேவனிடம் தேவி
படபடத்துக்கொண்டிருந்தாள்!
"என்ன காரியம் செய்து விட்டீர்கள்?"
கவிஞன் சரியாகத்தானே பாடியிருந்தான்.
"என்ன பாட்டு
காதலாகி..என்று ஆரம்பித்து
கடைசியில் ..இன்பம்" என்று ஒலிக்க‌
அல்லவா அத்தனை பாட்டும் பாடினான்."

"சரி தான்.
உங்களுக்கு ஒரு புலவன் பாடினானே
காதலாகி கசிந்துருகி..
அது போல் துவக்கி
பேரின்பத்தை "பெரும்பேர் இன்பம்"
என்று
உங்களைப்பற்றியே அல்லவா
உருகி உருகிப்பாடினான்.

அப்படியா?
ஐயோ! தவறு செய்துவிட்டேனே!
மீண்டும்
"ரீ ப்ளே"பட்டனை அமுக்கிவிட்டால்
போயிற்று.
"தேவையில்லை"
இது ஆண்டவனின் அசரீரி அல்ல.
மனிதனின் கணீர்க்குரல்..
படைப்புக்கும் அழிப்புக்கும்
"பாஸ் வர்டே"
இன்பம் தான்..
மகிழ்ச்சி தான்.
இதில் சிறிது என்ன? பெரிது என்ன?
மனிதனே தான்
உனது பாஸ் வர்டு
உன்னை அறிய நீ
என்னைப்படைத்தாய்!
அறிந்து கொண்டாயா?
சொல்?
காளை மாட்டோடு
கடவுள் ஓடியே போய்விட்டார்!
மனிதனின் "ரிமோட்"ட்டுக்கு
ஞானக்குறும்பு  அதிகம்
கடவுள் இருக்கு என்று தட்டினால்
இல்லை என்று வரும்.
இல்லை என்று தட்டினால்
அது தான் கிரிட்டிகல் லிமிட்.
படீரென்று வெளிச்சம் காட்டும்!.
சுழியம் அல்லது  ஒன்று !
இது தான் அதன் பூலியக்கணிதம்.
மற்ற சாதி சமயக்கும்பாபிஷேகங்கள் எல்லாம்
வெறும் "ஏமாற்றுக்கராஃபிக்ஸ்" தான்.

==============================================

சனி, 22 ஏப்ரல், 2017

எதைப்பற்றி...

எதைப்பற்றி...
=======================================ருத்ரா
எதைப் பற்றி கவலைப்படுவது?
அல்லது எழுதுவது?
இதோ மூச்சிறைக்கும் ஏக்கவிழுதுகளின்
இறகுப்பேனாவில்
கிறுக்கத்துவங்கினேன்.
இளம்பிராயத்தின் இடுப்பு அரைஞாண் கயிறுகள்
திடீரென்று ஒரு நாள்
மின்னல் கயிறுகள் ஆனபோது...
அந்த பூச்சி மயிர்களின்
மீசை வரிசை
திடீரென்று
ஏதோ ஒரு வானத்தின்
ஏதோ ஒரு விண்மீன் கண்ணடிப்புகளில்
பிரளய அலைகளாய்
புரட்டி போடும்போது...
வெறும் கூழ்ப்பூச்சியும் சிறகுமாய்
இருப்பதை
"பட்டாம்பூச்சியாய்" ஆக்கி
தன் பகல்கனவுகளின்
ஹார்மோன் எழுச்சிகளை
அதில் "பிக்காஸோ" ஓவியக்கூடமாக்கி
பிரமை தட்டிப்போய் கிடப்பது...
எதற்கு
இப்படி வார்த்தை ஜாலங்களைக்கொண்டு
என்னைச்சுற்றி
ஒரு "கோக்கூன்"கட்டிக்கொண்டு...
சட்டென்று
புதிய சிறகுகளைக்கொண்டே
பழைய சிறகுகளை முறித்துத் தள்ளிவிட்டு
ஒரே சொல்லில்
உயிரோடு எனக்கு
பளிங்கு சதையில் பொன் குழம்பு ரத்தத்தில்
கல்லறை கட்டிக்கொண்டேன்
சாக அல்ல‌
சாகாமல் சாவதை
ஒத்திகை பார்க்க..
காதல் என்று....
============================================

வியாழன், 20 ஏப்ரல், 2017

இருட்டின் வயிறு கிழித்து

இருட்டின் வயிறு கிழித்து
=========================================ருத்ரா

இருட்டின் வயிறு கிழித்து
ஒரு மின்னல் பிரசவம்.
சவமாகவே பிறந்து
சவமாகவே கிடந்து
சவமாகவே மறையும்
மனித குப்பைகளை
மாணிக்க நெருப்பின்
சுடர்கள் பூக்க வைத்தவன்
மாமனிதன் அம்பேத்கார்.
அம்பேத்கார் எனும் சரித்திரம்
அக்கினி மகரந்தங்கள் தூவிய‌தில்
ஆதிக்க வேள்வியின்
காவிப் புகை மூட்டம்
காணாமல் போனது.
ஆனாலும் வாக்குப்பெட்டிக்குள்
அந்த மதவெறியின்
விரியன் பாம்புக்குட்டிகள்
விரிக்காத சாணக்கிய தந்திரங்கள் இல்லை.
அச்சமில்லை !அச்சமில்லை !
ஆம்! அச்சம் எதற்கு?
சாதி சமயக் கொடுநெருப்பையே
கொளுத்தி சாம்பலாக்க வந்த‌
ஊழி நெருப்பு அல்லவா அம்பேத்கார்.
சமுதாயமும் பொருளாதாரமும்
சட்டமும் அரசியலும்
இவனிடமிருந்து
புது அத்தியாயங்களை
பதிப்பித்துக்கொண்டன.
நம் நாட்டு தெய்வங்கள்
ஆறு வகையாய் நின்று
திருவிழாக்களில்
நான்கு வர்ண மத்தாப்பு
கொளுத்தி கொளுத்தியே
மனிதனை பிளந்து விட்டன.
அடித்தட்டு மனிதனை தொடாதே
என்று வஞ்சகங்கள் ஓதின‌
வேதங்களின் இரைச்சல்கள்.
எளிய மனிதர்களின் கூக்குரல்களை
கேட்காத அந்த
இறந்து போன தெய்வங்களை
சாதி மதத்தில் இறந்து போன
அந்த பிணங்களே
கட்டிக்கொண்டு அழட்டும் என்று
அறிவின் அன்பின் புதிய ஒளி
பாய்ச்சும் மானிடவியலின்
படிக்கட்டுகள் கட்டித்தந்த‌
நம் பயணத்தின்
சிற்பியே
நம் மாமேதை அம்பேத்கார் !

==========================================================செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அந்த சூரியனை நனைக்க முடியாது

அந்த சூரியனை நனைக்க முடியாது
=======================================ருத்ரா இ பரமசிவன்.
(ஜெயகாந்தன் எழுத்துக்கள்)

எழுத்துக்கள்
வெறும் நிப்புகளின் வடுக்கள் அல்ல!
அவை ஒவ்வொன்றும்
கடி எறும்புகள் ஆனபோது தான்
தமிழ் இலக்கியம்
தூக்கம் கலைத்தது.
புதிய யுகம் காண‌
தூக்கம் கலைத்த அவருக்கு
தூக்கம் ஏது?
தூங்கி விட்டார் என்ற செய்தியில்
செய்திகள் ஏதும் இல்லை.
ஒரு வெட்டியானைப்பற்றிய‌
அவரது சிறுகதைக்கு
இப்போது தான்
பிள்ளையார் சுழி போடுகிறார் என்று
எடுத்துக்கொள்வோம்.
பிள்ளையார் என்று சொல்லால்
அவரை நாம் கொச்சைப்படுத்தினாலும்
மார்க்ஸ் எங்கல்ஸின்
டையலக்டிகல் மெடீரியலிஸம்
அவருள்
நாடி துடித்துக்கொண்டிருப்பதாய் தான்
தெரிகிறது.
நடப்பு (தீஸிஸ்)
எதிர்ப்பு (ஆன்டி தீஸிஸ்)
இணைப்பு (சிந்தெஸிஸ்)
என்ற சங்கிலியின் கண்ணிகள்
அவர் பேனாவுக்குள்
தர்க்கம் கழன்றதில்லை.
அவர்
சமுதாய முரண்களின்
சமுக்காளம் நெய்ததில்
எத்தனை வண்ணங்கள்?
அத்தனையும் சிவப்பை உடுத்தி வந்ததாய்
பின் நவீனத்துவம் பேசியவர்கள்
புளிய மரத்துப்பேய் வளையங்களில்
ஃப்ராய்டிஸக்குஞ்சம் கட்டினார்கள்.
இந்த மண்ணின் உள் நரம்பின்
தமிழ் கூட அவருக்கு
ஒரு உலகக்கோணத்தில்
அந்நியப்பட்டு போயிருக்கலாம்.
அதனால்
அந்த சில உரசல்களின் தீப்பொறிகளில்
அவர் விதை தூவியிருக்கலாம்.
ஆனால் அந்த "சிறுகதை மன்னன்"
எழுத்தில் ஒரு  குறுநில மன்னன் அல்ல.
சிந்தனை ஊற்றுகளின் சக்கரவர்த்தி அவன்.
வால்டர் ரூஸோவும் ஆன்டன் செக்காவும்
எழுத்தில் கனல்மூட்டி ரோஜாக்களை
பதியம் இட்டதை மகரந்தங்கள் ஆக்கியவன்.

சிந்துபூந்துறை ஆற்று பனங்காடுகளின்
ஒரு "கயிற்றரவு"மயக்கத்தை
சமுதாய உள்வலியாய் உள்வாங்கிய‌
ஒரு  புதுமைப்பித்தனின்
ஆவித்துடிப்பையும் ஆங்காரம் ஆக்கியவன்.

"யாருக்காக அழுதான்?"
என்ற கேள்வியை வீசிவிட்டுப் போனவன்.
அக்கதையின் கரு
இன்னும் கருக்குலையாமல்
தழல் வீசிக்கொண்டு தான் இருக்கிறது.
இப்போது சொல்கின்றான்.
யாருக்காகவும் அழவேண்டாம் என்று.
மரணங்களின் அர்த்தம் அழுகை அல்ல.
அழுகைகளால்
அந்த சூரியனை நனைக்கமுடியாது!

=========================================================

திங்கள், 17 ஏப்ரல், 2017

(ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!)

"அந்த கனத்த சட்டப் புத்தகம்"
=====================================================ருத்ரா.
(ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!)


ஒரு சுதந்திரத்தின் கருவறையில்
இன்னொரு சுதந்திரத்தின் கல்லறையும்
கட்டிவைக்கப்பட்டிருந்த
விசித்திர  வரலாறு கொண்டது
நம் இந்திய தேசம்.
மனிதனை மனிதன் கைகுலுக்கிக்கொள்ளும்
மானிடப்பூவின் மாணிக்க மகரந்தங்கள்
இந்த உலகத்தின் காற்றையே
தூய்மைப்படுத்திக்கொண்டிருந்த காலகட்டத்தில்
இங்கு மட்டும் "தொட்டால் தீட்டு"
என்று அநாகரிகத்தின்
முடைநாற்றம் வீசிக்கொண்டிருந்ததே!
அதில் வெளிப்பட்ட சிந்தனைச்சீற்றத்தின்
விடியல் "உருவகமே" அண்ணல் அம்பேத்கார்!

மூவர்ணக்கொடியேந்தி சுதந்திரத்தின்
மூச்சுக்காற்றை முழங்கியவர்களின்
நரம்புப்புடைப்புகளில் எல்லாம்
நாலு வர்ணம் அல்லவா குதித்தோடிக்கொண்டிருந்தது.
தளை என்றால் தமிழில் "கட்டு"என்று பொருள்.
அப்படித் தளையில் தளைக்கப்பட்டு கிடக்கும்
கருஞ்சிறுத்தைகளின் கட்சியைத்தான்
தலித்துகளின் புதிய யுகமாய் திரட்டியவர் அம்பேத்கார்.
தலித் எனும் சிங்க மராட்டியனின் அந்தக்கவிதையில்
தமிழின் விடுதலைத்தாகமும் இருந்தது என்பது
இன்றும் நாம் காணும் உண்மை.

துப்பாக்கித் தோட்டாவுக்கு
பசுக்கொழுப்பா? பன்றிக்கொழுப்பா? என்று
மதக்கொழுப்பு கொழுந்து விட்டு எரிந்ததில்
ஒரு சிறு பொறியே
நம் நாட்டின் விடுதலைத்தீ வெள்ளத்தை
கர்ப்பம் தரித்தது..அதை
அற்பம் ஆக்க வந்ததே சாதீயின் ஆதிக்கம்.
சாதிக்கொடுமையை
சான்றோர்களே தவறு என உணர்ந்து கொள்ளச்செய்து
தன் ஓங்கி உலகளந்த கல்வியால்
சட்டமும் பொருளாதாரமும் கற்றுத்தேர்ந்த‌
மாமேதை நம் அம்பேத்கார்.
மேன்மை மிக்க
நம் முன்னாள் குடியரசு தலைவர்
அப்துல் கலாம் அவர்கள்
கனவு காணுங்கள் என்று
சரியாகத்தான் சொன்னார்.
இன்னும் தழல் வீசும் அந்தக்கனவே
நம் அம்பேத்கார் தான்.

வெள்ளயனுக்கு
"சிப்பாய் கலகம்" என்று
சின்னத்தனமாய் தெரிந்த அந்த நெருப்பு
பாரதியார் கவிதையில்
அக்கினிக்குஞ்சு அல்லவா!

வெந்து தணிந்தது காடு.
வேகாமல்
மானிட தர்மத்தை இன்னும்
சாகடிக்கப்பார்ப்பதே
சாதி மதங்கள்.
நாலாம் கிளாஸ் மாணவன்
ஏதோ "இம்போசிஷன்"எழுதுவது போல்
வருஷம் தோறும் வந்து போவது அல்ல‌
"அம்பேத்கார்" எனும் பெயர்.

இதன் கனலும் கனவுமே
இன்னும் வாக்குப்பெட்டியின் உள்ளே
மண்டிக்கிடக்கும்
நூலாம்படைகளை "தூய்மை"ப்படுத்த முடியும்
என்பதே இன்றைய யதார்த்தம்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும்
தேர்தல் எனும் கும்பமேளாவுக்கு
"கரன்சியாபிஷேகம்"கொண்டு
கும்பாபிஷேகம் தடபுடல் படும்
நம் அரசியல் அவலங்களின் நோய் தீர்க்கும்
அருமருந்து ஆகுவது
"மானிட நேயப் பார்வை" மட்டுமே.
அம்பேத்கார் எனும் புதிய யுகம்
ஆளுயர மாலைகளுக்குள்
அமிழ்ந்து போவது அல்ல.
இந்த சமுதாயப்ரக்ஞையின்
ஞான சூரியன்
வாக்குப்பெட்டியில் உதயமாவதை
அதே வாக்குப்பெட்டியில்
அடைக்கப்பெட்டிருக்கும்
அஞ்ஞான மேகங்களே
மறைத்துக்கொண்டிருக்கின்றன.
சமநீதியின் பளிங்குத்தடாகத்தில்
முதல் கல்லெறிந்து
காயப்படுத்த முற்படும்
பால் தாக்கரே சிந்தனைகள்
நம் பாரதத்தை மீண்டும்
பாதாளத்தில் வீழ்த்த நினைக்கும்
பாதகங்கள் ஆகும்.
அம்பேத்காருக்கு ஆயிரம் அடியில் கூட‌
இவர்கள் சிலையெழுப்புவார்கள்.
ஆனால் அஸ்திவாரத்தில் இவர்கள் இடுவதோ
இட ஒதுக்கீட்டின்
கபாலங்களும் எலும்புக்கூடுகளும் தான்.
வாக்குப்பெட்டியை நிரப்ப‌
தாற்காலிகமாய் கைகோர்த்துக்கொள்வார்கள்
இந்த கருப்புஜனங்களுடன்.
ஆனால் சாதிமதங்களின் சாக்கடை கங்கைகளில்
வீசும் இவர்களின் அரசியல் நாற்றத்தை
கண்டு கொள்ளுங்கள்.
அதனால் அனல் மிகு சீற்றத்தோடு
உச்சரிக்கப்பட வேண்டிய பெயர்
"அம்பேத்கார்"
கங்கையைக் கொண்டு
கண்ணில் கண்டதையெல்லாம்
சுத்தப்படுத்திய
அந்த சனாதனிகளின் கங்கையை
சுத்தப்படுத்தியது
அந்த கனத்த சட்டப்புத்தகம் மட்டுமே.
அந்த கறுப்புத்தங்கத்தின்
கை பட்ட புத்தகம் அல்லவா அது!
ஓங்குக அண்ணல் அம்பேத்கார் புகழ்!

============================================ருத்ரா

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

பெண்ணை மடல் மா

பெண்ணை மடல் மா
==============================ருத்ரா இ.பரமசிவன்

பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!
தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக்கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.
தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.
வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

=======================================


விளக்க உரை
=========================================

பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!

பனைமர மட்டைகளில் செய்யப்பட்ட குதிரை குளம்பு அதிர வருவது போல் ஆரவாரத்துடன் தன் காதல் தோல்வியை ஊருக்கு உணர்த்தும் வண்ணம் எருக்கம் பூ மாலை சூடி மன நெகிழ்ச்சி யுற்று வருகின்றவனே.நகைகள் அணிந்த தன் காதலியின் பொன் போல் சுடரும் அந்த நெற்றியழகைக் காண ஒவ்வோரு வீடாக உற்றுப் பார்த்து மெல்ல மெல்ல அசைந்து வருபவனே.

தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக் கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.

தகரம் எனும் நறுமண மூலிகையின் நெய்பூசிய மணம் மிக்க அவள் கூந்தல் (தகரக்கூந்தல்) வெம்மை மிக்க கதிரவனின் ஒளிக்கூந்தல்  கற்றைகளைப்போன்று கூர்த்த நோக்கில் உன்னைப் பார்க்கும் அவளின் (காதல்) நிலையினை நீ அறியாமல் சிறுமை மிக்கவனாய் படிக்காத முட்டாளைப் போன்று (புல்லியக் கல்லா நெடுமகன் போல) இந்த பனைமடல் குதிரை ஏறி வந்து விட்டாயே! மடத்தனம் எனும் பெண்மை நிறைந்த "மடப்பம்"என்பது ஆண்மகனுக்கு கொஞ்சமும் பொருந்துமோ? அவளது மெல்லிய மடப்பத்தை (காதலை வெளிக்காட்டாத‌ சிணுக்கம் நிறைந்த மடம் எனும் உணர்வை) நீ இப்படி புரிந்து கொள்ளாமல் ஒரு முரட்டுத்தனமான மடத்தனத்தை இப்பொய்க்குதிரை ஏறியா வெளிப்படுத்துவது? உன் குதிரையின் பொய்யான பிடரி மயிர்ப் பிசுறுகள் அலரிப் பூக்களைப்போல  தெருவெல்லாம் உதிர்வது போல் நீ என் மீது இப்படி ஊரார் தூற்றும் பழிச்சொற்கள் பரவ விடலாமோ?(விரித்தனை என்னே விரியுளை அலரி)

தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.

அவள் அடைந்த பழிச்சொல்லால்  அவள் மிகவும்  துயர் உற்றதை இப்போதாவது தெரிந்து கொள். குட்டையான மயிர்கள் நிறைந்த உடம்பினை உடைய கரடியைப்போல் முள் படர்ந்தாற்போன்றே (குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர் முள் செத்தென) அந்த வரிகள் நிறைந்த நெடிய பனைமடல் குதிரையை அழித்துவிட்டு (தொலைச்சிய) அல்லது கொன்று விட்டு திரும்பிச்செல்.ஒளிமிக்க அணிகலன்கள் பூட்டிய அவள் உன்னை நினைத்து பசலையுற்று கண்ணீர் மல்கும் காட்சியை இப்போதாவது கண்டு கொள்வாயாக.

வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.

நாளை விடிவெள்ளி தோன்றும் வேளை அவள் உன்னை சந்திக்கும் ஒரு அடையாளம் (விண்குறி) அறிந்து விரைந்து வந்துவிடு. குன்றுகளின் அந்த அடர்ந்த வெளியில் அவளை நீ எதிர்கொள்ள வந்துவிடு.பெருமை மிக்க அணிகள் அணிந்து அங்கு உனக்காக காத்திருக்கும் அவளை காதலுடன் சந்தித்துக்கொள்ள‌ விரைந்து நீ அங்கு வருவாயாக!
(தலைவன் மடலேறி தலைவிக்கு ஊர்ப்பழி ஏற்படுத்திய தவறைச் சுட்டிக்காட்டிய தோழி அவனுக்கு எடுத்து உரைத்தது.பனை மடல் குதிரை ஏறி தலைவன் தன் காதல் நிறைவேறாமல் போனதே என்று தன் துயரத்தை ஊருக்குச்சொல்லும் ஒரு வழிமுறை இது.தன்னைக் காதலிக்கவில்லை யென்றால் அமிலம் வீசிக்கொல்லும் இன்றைய அரக்கத்தனமான காதல் அல்ல அன்றைய சங்க காலக் காதல்)

=================================ருத்ரா இ.பரமசிவன்


Click here to Reply or Forward

வியாழன், 13 ஏப்ரல், 2017

"பிரிச்சு மேய்வோம்" கணிதத்தை.


A single branch of the complex logarithm. The hue of the color is used to show the arg (polar coordinate angle) of the complex logarithm. The saturation and value (intensity and brightness) of the color is used to show the modulus of the complex logarithm. The image file's page shows the encoding of colors as a function of their complexvalues.https://en.wikipedia.org/wiki/Complex_logarithm"பிரிச்சு மேய்வோம்" கணிதத்தை.
=============================================ருத்ரா இ பரமசிவன்.

ஜெ.இ.லிட்டில் வுட் என்பவர்.கணிதத்தில் பெரிய மேதை.அவர் ஒரு முழுமை இயங்கியம் (என்டைர் ஃபங்ஷன்) பற்றிய ஒரு கணித விளக்கம் த‌ருகிறார். அது உண்மையில் மிக மிக சுவாரஸ்யமான ஒரு கணித விளக்கம்.வீஸ்ட்ராஸ் சிக்மா இயங்கியம்  என்பதை கணித மொழியில்  "பிரிச்சு மேய்ஞ்சு"விடும் ஒரு அற்புத அறிவு இயக்க ஓட்டமே அது என்கின்றனர் .அந்த சிந்தனை இயக்கம்  "ஏற‌ணம் அல்லது இற‌க்கணம்"  எனும் லாஜிக் விஞ்ஞானத்தை
அழகிய தேற்றங்களாக  பியூடிஃபுல் தியரம்ஸ்) நமக்குத் தருகின்றது .


ஒரு கணித மதிப்பிடலை முழுமைப்படுத்துவது என்பது எல்லாவற்றையும் "அடக்கிய விஸ்வரூபத்தை"காட்டுவது ஆகும்.கீதையில் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு காட்டியது இன்று வரைக்கும் யாருக்கும் புரிந்ததாய் தெரியவில்லை.அது கடவுளை தேடும் வழி என்று சொன்னாலும் அதற்குள்
வில்லும் அம்பும் மனிதமந்தைகளும் ரத்தமும் சடலங்களும் உயிரும் கலந்த ஒரு சமன்பாட்டில் சமன்பாடற்ற வானங்களும் நட்சத்திரங்களும் இன்னும் என்னவெல்லாமோ கலப்படம் பெற்று ஒரு "கனவுக்குழம்பாக" இருப்பதை நாம் அறிகிறோம்.

இது தான் முழுமை பெற்றது என திட்டவட்டமாய் குறிப்பிட இயலாதபோது
அது ஒரு "பரவலான"(ரேண்டம்) தன்மையை கொண்டிருக்கிறது.இப்படி கணக்கீட்டை "தொட்டும் தொடாமலும் "(ஆசிம்ப்டோட்டிக் ) ஒரு முழுமையை அது சொல்கிறதாயிருந்தால் அது கணித உலகில் "சிக்மா"இயங்கியம் என அழைக்கப்படுகிறது.

பெயர்களைக்கண்டு பயந்து விடவேண்டாம்..
முழுமை இயங்கியங்கள் கீழ்க்கண்டவாறும் அழைக்கப்படுகின்றன.


(1) ஃப்ரெஸ்னல் தொகுவிய‌ங்கள் (இன்டெக்ரல்ஸ்)
(2) ஜேகோபி தீட்டா இயங்கியம்.
(3) தலைகீழான(ரெசிப்ரோகல்) காமா இயங்கியங்கள்
(4) மிட்டாக்   லெஃ ப்லர்  இயங்கியம்              

இவை சுவாரஸ்யமான காடுகள் தான்.கணித சிந்தனை எனும் "டார்ச்" ஏந்தினால் நாம் இங்கிருந்தே எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
பிரபஞ்சத்தில் ஒரு ஜன்னல் செய்து அந்த பக்கத்து வீட்டு (அண்டைய பிரபஞ்சங்களையும் ) நோட்டம் விடலாம்.
செவ்வாய், 11 ஏப்ரல், 2017

எது அது?

எது அது?
==============================================ருத்ரா

யார் இந்த மானிடப்புழு?
நெளிந்து கொண்டிருந்தாலும்
நெளிந்த தடம் எல்லாம்
மின்னல் உமிழ்வுகள்.
ஆயிரம் கைகள்.
ஆயிரம் கண்கள்..தலைகள்.
ஆயிரம் ஓசை எழுப்பும்
ஆயிரம் நயாகராக்களை
கடைவாயில் ஒழுக விடும்
கடையனுக்கும் கடையவன்.
ஒளியாக‌
ஒலியாக‌
நரம்புகளைத் துளை போடும்
அதிர்வுகளை
இரைச்சல்களை வெளிச்சங்களை
சர்க்கரைப்பொங்கலாய்
தின்று கொண்டிருப்பவன்.
எங்கிருந்தோ
எதையோ
எப்படியோ
இழுத்துவந்து வெளியே போட்டு
அதன்
கருப்பொருள் தெரியாமல்
ஆரவாரம் செய்து கொண்டிருப்பவன்.
காரணமே கரு தரிக்காமல்
காரியமாய்
பெரிய
அசிங்கமான அழகான‌
ரெட்டை மயிர் மீசையை
ஒற்றி ஒற்றி
இந்த பில்லியன் ஆண்டுகளை
துப்பறிய வந்த கரப்பான் பூச்சியாய்
துரு துருப்பவன்..
கொடிய மரண வடிவத்தை
வைரஸ்ல் புதைத்து
தன் பிம்பம் காட்டுபவன்.
"செர்ன்"உலையில்
குவார்க் குளுவான் குழம்பை
தாளித்துக்கொண்டிருப்பவன்.
ஹிக்ஸ் போஸானயும்
நியூட்ரினோவையும்
கடுகு வெடிக்க வைத்து
கலகச்சமையல் செய்து கொண்டிருப்பவன்.
சீசனுக்கு சீசன்
எந்த நாட்டிலாவது
ரத்தம் கொப்புளித்துக்கொண்டிருப்பான்.
உண்மை சதை பிய்ந்து
கிடக்கும் போது
உண்மையை மொய்த்துக்காட்டும்
ஈக்களாய் அங்கே
அலையடிப்பான்.
வெள்ளமாய் வந்து
தேர்தல் பிரகடன‌ங்களை
கொட்டு முழக்குவான்.
ஈசல்களின் சிறகுகளில்
ஈஸாவாஸ்யம் ஸ்டிக்கர் ஒட்டி
தெறிக்க வைப்பான்.
காளையாய் வந்து
கொம்பை ஆட்டி ஆட்டி
ஒரு தேவரகசியத்தை
தெருவெல்லாம்
மூக்கணாங்கயிறு வழியே
மூசு மூசு என்று
மண் குத்தி
மண் கிளறி
தன் "பார் கோடு" தனை
தரையில் கிழித்துக்காட்டுபவன்.
வதை செய்பவர்கள்
வாலை முறுக்குபவர்கள் அல்ல.
பிரபஞ்ச மூச்சையே சுவாசிக்கத் தெரியாமல்
ஒரு வட்டமேஜைக்குள்
வார்த்தைகளை
சவைத்துக்கொண்டிருப்பவர்கள்
கையில் தான் வெட்டரிவாள்
என்று
கொதித்துக்குதிப்பவன்.
படீரென்று
கீழே விழுந்து
சுக்கல் சுக்கலாக‌
நொறுங்கியது அது.
அது நிழலா?
நிழலின் இமேஜா?
உடுக்கையிலிருந்தும்
வெர்ச்சுவல் ரியாலிட்டியின்
தூரிகை மயிர்கள் துடித்தன.
கோணா மாணா சித்திரத்துள்ளே
கோணல் கோட்டின் இன்ஃபினிடியில்
காட்சியில் பிடி படாத நேர்கோடு
வளைந்து வளைந்து
வக்கிரம் காட்டியது.
யார் அவன்?
எது அது?
அது வேறு ஒன்றுமில்லை.
தன் "செல்ஃபியை"
கீழே எறிந்த‌
இறைவனே அது!

===============================================

சனி, 8 ஏப்ரல், 2017

செதில்கள்.

செதில்கள்.
==========================================ருத்ரா

காதலே!
உனக்கு ஒரு சிலை வடிக்க ஆசை.
கல் தேடினேன்.
வைரம் தான் கிடைத்தது.
உளி தேடினேன்
மனம் தான் கிடைத்தது.
சம்மட்டிக்கு..
தேவையில்லை.
இனியெல்லாம்
க‌னமான தருணங்களில் தானே
அதையும் விட கனமான கனவுகளை
சுமந்துகொண்டு காத்திருக்கப்போகிறேன்.
அது போதுமே.
உருவம்..
எதை உருவகம் செய்வது..
கைக்கு அகப்படாத கனவுப்பிழம்பா?
தலைகீழ் பிம்பங்களா?
கடலை ஆகாயத்திலும்
ஆகாயத்தை கடல் தளும்பல்களிலும்
"மார்ஃப்"செய்வதா?
ரத்த சதை உடலங்களா?
மாயத்தைப்பிசைந்த‌
வெர்ச்சுவல் ரீயலிடிகளா?
ஐ பேடுகளை
சுரண்டினேன்.
லைட் எமிட்டிங்க் டையோடு
லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளே
பில்லியன் பில்ல்யன் பிக்செல்களிலும்
பிக்காஸோ
அவளின் புதிர் காட்டினான்.
இருப்பினும்
அந்த நுரைப்பட‌ல‌த்தில்
கண்ணீர்த்துளிகள்..
விம்மி விம்மி வரும்
அதிர்வுகள்..
திடுக்கிட வைத்தன.
அவளா அழுகிறாள்?
காதல் கண்ணீர்த்துளிகளிலா
இங்கே அவள்
செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள்?
அன்று ஒரு நாள்
என்னையே உற்று உற்று
பார்த்துக்கொண்டிருந்தாள்.
ரத்த சதையாய் நான் உன்மீது
துடித்துக்கொண்டிருக்க‌
இன்னும் ஏன் உன் கல் மனத்தை
இங்கு ஏன் சிற்பமாக்கி சித்ரவதை செய்கிறாய்
என்று கேட்பது போல் இருந்தது.
என் முகம் அங்கு திரும்பாமல்
நானும் என் கழுத்தைத் திருகி
இந்தப்பக்கமே வைத்துக்கொண்டிருந்தேன்.
அந்த மரணவலி
எனக்கு மட்டுமே தெரியும்.
எதற்கு அப்படி மிருகம் ஆனேன்.
விடையை
காதல் எனும் அந்த‌
மிருகத்திடம் தான் கேட்கவேண்டும்.
ஆனால்
அந்த விழிகளில்
இந்த "டெட் சீ" எனும் கருங்கடல்
என் பிணங்களை அல்லவா
மிதக்க விட்டுக்கொண்டிருக்கிறது.
போதும் சிற்பமும் சிதிலமும்....
என் கைகள் அங்கே
உளி இங்கே
துண்டு துண்டாய் சம்மட்டிகள்.
எதனுள்ளோ
நசுங்கிக்கிடக்கிறேன்.
யாராவது வாருங்களேன்...
மீன் குழம்பு வைக்க‌
சொறிக்கல்லில் தேய்க்கப்படும்
மீனாக..நான்...
வெள்ளை வெள்ளையாய்
வைரச் சிதிலங்களின்
செதில்களில் இறைந்து கிடக்கிறேன்..
ஆனாலும் துடித்துக்கொண்டு..


================================================


ஒற்றை சிவப்பு ரோஜா


ஒற்றை சிவப்பு ரோஜா
======================================ருத்ரா இ பரமசிவன்

"என்னில் நீ
உன்னில் நான்."

....பேனா ஓடியது.
பேப்பரில் எல்லாம்
உழுத சுவடுகள்.
தினமும்
ஒன்று எழுதி நீட்டுவேன்.
புரிந்து கொண்டாளா அவள்?
தெரியவில்லையே.
ம்
என்று வாங்கிக்கொள்வாள்.
கசக்கி முகத்தில் வீசவில்லையே
என்று எனக்கு ஆறுதல்.
இது தான் சாக்கு
என்று
எங்கே இவன்
"மாயா பஜாரின்"
இருட்டு மூலைக்கு
இழுத்துக்கொண்டு ஓடுவானோ
என்று
அவளுக்கு ஒரு பயம்.
அந்த மிரட்சி
மருண்டு உருண்ட
அவள் மான்விழிகளில்
தெரிந்தது.
இடையே ஏன் இந்த பனிமூட்டம்.

மச்சிகள் மன்றத்தில்
என் தலை உருண்டது.
"மச்சான்.
ரீம் ரீமா
முத்துக்குமார் லேகியங்களை
உருட்டிக்கொடுத்து புண்யமில்லடா.
தனியாப் பாத்து
சும்மா நச்சுன்னு கேட்டுடு."
மசோதாவும் சட்டமும்
ஏகமனதில் நிறைவேறியது.

பட்டாம்பூச்சிகளின்
அந்த சுடிதார் வனத்தில்
சூடு கிளப்பியது
அவள் "ம்"கள்.
"என்னடி
ம் னு சொன்னா
பெரிய "எம்"தியரின்னு நெனப்பா?
குவாண்டமும்
காதலும் ஒண்ணு தான்.
புரியாமலேயே பட்டம்
வாங்குற மாதிரிதான்.
உன் புன்சிரிப்புலெ
நூறுல ஒரு பங்காக்கியாவது
கோடு போட்டுறக் கூடாதா?
புள்ள ரொம்ப தவிக்குது."
அவள்
அதற்கும் ஒரு "ம்"தான்.

தனியா "நச்"சுண்ணு கேக்கும்
அந்த தருணமும் வந்தது.

ஒற்றை சிவப்பு ரோஜாவும்
அதன் மேல் ஒரு வெறும் பேப்பரும்
(கவிதை எழுத வில்லை
அது அவனிடம்
முரண்டு பிடித்துக்கொண்டது.
அட போப்பா.நீ மட்டும் என்று.
பேனா கூட "ட்ரா"வுக்குள்
தூங்கபோய் விட்டது)

அவள் முன் நீட்டினான்.
அவள்
அந்த வெள்ளைப்பேப்பரை
ஆவலுடன் எடுத்துக்கொண்டாள்.
"எனக்குப் பிடித்த கவிதை."
"க்ளுக்"கென்று
சிரித்துவிட்டுப்போய்விட்டாள்.
அந்த‌
வெள்ளைச்சிரிப்புக்கும்
வெள்ளைப்பேப்பருக்கும்
என்ன அர்த்தம் என்று
அவனுக்கு விளங்கவில்லை.
அந்த ஒற்றைச்சிவப்பு ரோஜா மட்டும்
அவன் கையில்.

==================================================ருத்ரா
23.11.2013 ல் எழுதியது

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

முக்குளி

Inline image 1
ஓவியம்  by  ருத்ரா


முக்குளி
===================================ருத்ரா


தாக்குப்பிடிக்க முடியவில்லை.
நீர்ச்சுருள்கள்
பந்து விளையாடுகின்றன.
உன் கண்களே
என் முதுகில் சுமக்கும்
ஆக்சிஜன் கூடுகள்.
அதைத்தேடியே
ஆயிரம் தீவுகள் செல்லுவேன்.
தூக்கம் தின்ற சுறாக்கள்
என்னைத் துண்டு துண்டு ஆக்குகின்றன.
உன் ஒரு சிமிட்டலில்
வானவில்கள் எத்தனை?
மின்னல் விழுதுகள் எத்தனை?
வானங்கள் உருகி கடல்கள் ஆகின.
அன்று 
கல்லூரி வகுப்பில்
முண்டைக்கண் எண்கள் துருத்திய‌
வட்டக்கடிகார
வினாடி முள் கூட‌
செக்கு மாடு போல்
சுழன்று கொண்டு தானே இருந்தது.
இருப்பினும்
என்னிடம் "டைம்" கேட்டாயே!
அந்த இனிப்பு
அறை முழுத்தும் நீரூறி
நினைவெல்லாம்
கனவின் சுவை படர்ந்ததே.
ஒரு சின்ன இழையை சிரிப்பாக்கி
நெளியவிட்டு
நெய்து விட்டு
கணப்பொழுதில் ஓடிவிட்டாய்.
என் நெஞ்சம் 
தறி ஆகி தட்டிக்கொண்டே இருக்கின்றது.
அப்போது
இந்த சமுத்திரத்துள் பாய்ந்தவன் தான்.
பவளத்திட்டுகள் காயப்பட்டு போயின.
என் அவசரமும் ஆசையும் எனக்குத்தானே.
கடற்பாசிகள் ஊஞ்சல் கட்டின.
வண்ண வண்ண வரிமீன்கள் வால் மீன்கள்
குடை விரித்து நூல் பிரியும்
கூழுடலின் ஜெல்லி மீன்கள்
எல்லாம் என்னுடன் கை கோர்த்து ஆடவந்தன.
முகவரி கேட்டேன்.
சாயல் கேட்டேன்.
அஞ்சிறை முளைத்தாற்போல்
அவள் பளிங்குக்கால் உளைந்து நீந்திய‌
அழகிய சுவடு உரசி
கடலடியில்
அற்புத பிருந்தாவனம்
ஏதேனும் பதியம் ஆனதா
என்றும் கேட்டேன்.
தடயம் இல்லை.
முடியவில்லை.மூச்சு முட்டுகிறது.
கரை எங்கு இருக்கிறது.
ஆழம் ஆயிரம் ஆயிரம் அடிகள் இருக்குமே!
காலால் உதைத்து எம்ப முடியவில்லையே.
எப்படி?
எப்..எப்..எப்ப்"

"அடேய் அண்ணா!
க்ராஃபிக்ஸோடு குறட்டையா?"

சடக்கென்று
தட்டி விட்டுப்போனாள் தங்கை.

=====================================================ருத்ரா


வியாழன், 6 ஏப்ரல், 2017

எங்களுக்கு...

எங்களுக்கு ....
==========================================ருத்ரா

எங்களுக்கு...
நிவாரண மானியமாக‌
சில ஆயிரங்கள்
வங்கி கணக்கில் ஏறினால் சரி.
காந்திக்கணக்காக‌
சில ஆயிரங்கள்
கைக்குள் விழுந்தாலும் சரி!
அந்த அரைஇருட்டில் முகம் தெரியாதவர்கள்
எப்படித் தந்தாலும் சரி!
ஜனநாயகத்தை நிச்சயமாக‌
பூதாகரமாய் பலூன் ஊதி பெரிதாய்
பறக்க விடுவோம்!
இந்த சமூகமே கந்தலாகிக்கிடக்கிறது.
சமுதாயப் பிரக்ஞை இல்லவே இல்லை.
மானிட வெளிச்சம்
இந்த இருட்டுக்குகையில்
பாயவே இல்லை.
வர்ண வர்ண வெளிச்சங்களை
நம் முகத்தில் அடித்து
கண் கூசச்செய்யும்
தொலைக்காட்சி ஊடகங்களில்
கூட‌
மக்களின் உயிர்ப்பான ஜனநாயகம்
தொலைந்தே போய்விட்டது.
ரோட்டில்
லாரியில் நசுங்கிக்கிடக்கும்
ஒருவனின் ரத்தச்சகதியை
வர்ணமயமாய் காட்டிவிட்டு
அமைதி கொள்வதைப்போல்
இந்த ஜனநாயகம்
ஒவ்வொரு தேர்தலிலும்
கசாப்பு செய்யப்படும்போதும்
அந்த கண்ணுக்குத் தெரியாத‌
வெட்டரிவாளைப்பற்றிய‌
வெலாவரியாய் வர்ணனைகளுடன்
டிவிக்களின்
வியாபாரக்கடமை  முடிந்து விடுகிறது.
இவை
மருத்துவமனையில்
அறுவைக்குமுன் போடப்படும்
மரப்பு ஊசியாய்
இவர்களை "பிண மனிதர்கள்" ஆக்கிவிடுகின்றன.
அந்த பொறியில் பட்டன் தட்டும்
பொறி மனிதர்களாய் இங்கே
வரிசைகள் மொய்க்கின்றன.
"தூக்கத்தில் நடக்கின்றவர்களைப்போல"
 வக்கிரமான
"சோம்னாம்புலிச வோட்டிங்"எனும்
அந்த காட்சிகளின்
லேசர் ஒளிப்புகையைக் காட்டி
ஊடகங்கள்
தன் டி ஆர் பி ரேட்டை உயர்த்திக்கொள்வதோடு
சரி.!
நாளைக்கு எவனாவது ஒரு
இடி அமீன் வந்தால் கூட
அவனை வைத்துக்கொண்டு
பட்டி மன்றம் நடத்தினாலும் நடத்துவார்கள்!

அதோ டாக் ஷோ ஆரம்பித்து விட்டார்கள்.
யாருக்கு என்ன அக்கறை?
அந்த கூச்சல்கள் சப்தம் எழுப்பிக்கொண்டிருக்கட்டும்.
மௌனமாக ஜனநாயகத்தின்
சமாதிக்கு
எங்கோ எப்படியோ
குழியும் தோண்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.

==================================================

ஓக் மர இலைகளுக்குள்..........ஓக் மர இலைகளுக்குள்..........
=======================================ருத்ரா இ பரமசிவன்.
சூரியனோடு
ஒரு "ஹைட் அண்ட் ஸீக்".
அது அந்த‌
ஓக் மர இலைகளின்
இதயங்களுக்குள்
ஒளிந்து கொண்டுவிட்டது.
இன்னும்
அது வெளியே வரவில்லை.
அவை
என்ன ரகசியம் பேசிக்கொண்டன?
இயற்கை தனக்குள்
புதைத்துவைத்திருக்கும்
கணினிக்குள் நுழைய‌
கடவுச்சொல்
அந்த ஓக் இலையும்
அதன் நரம்புகளும் தான்.
ஆம்
"பசுமை"யே
இங்கு
ஆயுதமும் கேடயமும்.
==============================================================
photo taken in my cell while I walked in Los Angeles Oak Park in USA

ஆர் .கே நகர்

ஆர் .கே  நகர்
=========================================ருத்ரா


ஜனநாயகத்தின்
அவமானச்சின்னமா?
அல்லது
அழிவின் சின்னமா?
இந்த ரெண்டெழுத்து நகர்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
என்று முழங்கியவர்களின்
மூச்சில்
இந்த மூன்றெழுத்து தான் இருந்ததா?

பணம்...பணம்...பணம்..

இது இன்று அர்த்தப்படுத்தப்படுவதெல்லாம்
ஜனநாயகத்தின்
பிணம்...பிணம்...பிணம்.

தமிழ்நாட்டைப்பார்த்து
மற்றவர்கள் எல்லாம் எள்ளி நகையாடுகிறார்கள்.
ஊழல் பிரச்னைகூட ஒன்றும் இல்லையாம்.
அதில் இந்தியா பூராவுமே நாறினாலும்
இந்த "இனாம்" நாற்றம் சகிக்கவே இல்லை!

எரிமலை போல் சீறிப்பாய்ந்து
நம் சமுதாய இலட்சியங்களை
வார்த்தெடுக்க வேண்டியவர்கள்
ஏன் இன்று இப்படி
பிச்சை எடுப்பவர்கள் போல்
கை பிசைந்து நிற்கிறார்கள்?

"எப்படியாவது வெல்வோம்"
என்று
கொள்ளிவாய்ப்பிசாசுகள்
வாக்குகளுக்கு
கோரமாய் வாய் பிளந்து நிற்பது
தெரிகிறது!
லஞ்சப்பணமாய்
லட்சங்களின்  கோடிகள்
சிதைகளை அடுக்குகின்றன.
ஒரு சில கோடிகளே போதும்
தேர்தல் நியாயங்களை
தீயிட்டுப்பொசுக்க!
வாக்கு நேர்மையும்
ஆட்சி நேர்மையும்
சாம்பலாய் போக!

ஊழித்தீ எனும் நெருப்பை
வாக்குகளாய் கையில் வைத்திருப்பவர்களே
கேவலம் பீடி நெருப்புக்கா
இப்படி பிச்சை எடுப்பது?

அன்று மெரீனாவில்
கருவுற்ற மக்களின் "லாவா"
இந்தப் பேய்களின் எச்சில்களிலா
நீர்த்துப்போவது ?

சிந்திக்க வேண்டும் தமிழா
நீ சிந்திக்க வேண்டும்.
குத்தாட்டம் போடும் சினிமாக்களைத்
தின்று நீ
வெறும் நிழல்களின்
கந்தல் உருவங்களாய்
கரைந்து போகலாமா? தமிழா!
சிந்திக்க வேண்டும் நீ.
யாரோ ஒரு ராமனுக்கு
குரங்காட்டம் போடவா நீ பிறந்தாய்!
உன் வரலாறு திருடப்படும்
திருவிழா இரைச்சல்களை விட்டு நீ
மீண்டு நீ வரவேண்டும்..தமிழா
மீண்டு நீ வரவேண்டும்!

=================================================
புதன், 5 ஏப்ரல், 2017

ஏப்ரல் ஃபூல்

ஏப்ரல் ஃபூல்
==================================ருத்ரா

நான் ஒரு முட்டாளுங்க‌
சந்திரபாபு இப்படி பாடியே
ஒரு மேதை ஆனாருங்க.
நான் ஒரு எம்.ஏ.பி.ஹெச் டி முட்டாளுங்க‌
அறிவு ஜீவி என்று ஜோல்னாபை
தொங்குதுங்க‌
தூக்கணாங்குருவிக் கூடு கணக்கா.
அப்பாவி அந்து பூச்சியாகிவிட்டேங்க.

தாலுக்கா ஆபீஸின் மேஜை முன்னே
கை கட்டி வாய் பொத்தி பவ்யமாத்தான்
கேட்டேங்க.
வெறும் ஜீனி மட்டும் வாங்கும் கார்டில்
என்ட்ரி விட்டுப்போச்சுன்னு
பட்டியல்ல இருந்து எடுத்துட்டாங்க.
மறுபடியும் சேக்கணுங்கன்னு
பி.ஹெ.டி த்தனமா
தலையை சோறிஞ்சுக்கிட்டுத்தான்
கேட்டேங்க.
வி.ஏ.ஒ வை  பாருங்கன்னு
சொல்லிட்டாங்க.
பாக்கறதுன்னா என்னன்னு
பக்கத்துல நின்னவரிடம் கேட்டேங்க.
அவரு
பக பகன்னு சிரிச்சாருங்க.
இதுக்கு என்னங்க அர்த்தம்?
அர்த்தம் தெரியற வரைக்கும்
நான் ஒரு முட்டாளுங்க.
நல்லாவே படிச்சிருந்த
அந்த நாலு பேருங்க சொன்னாங்க‌
நான் ஒரு முட்டாளுன்னு!

==============================================


நடு கற்கள்

நடு கற்கள்
====================================ருத்ரா


அது எந்த வருடம்?
ரெண்டாயிரத்து சொச்சம்
இருபத்தஞ்சா?
முப்பத்தஞ்சா?
ஏதோ ஒன்று விடுங்கள்.
மதுரையிலிருந்து
ராமேஸ்வரம் செல்லும் பாதை
அல்ல அல்ல..
ஃபோர் வே ரோடு...
மைல் கற்களில்
இந்தி மட்டுமே..
வழியில் ஒரு ஸ்வச்சாலய்க்கு இறங்கி
இயற்கைக் கடன்..
மீண்டும் காரில் ஏரும் போது
அந்த மைல் கல்லை
இந்தியை எழுத்துக்கூட்டி படித்தேன்.
கீ...ழ..டி..
என்ன தமிழனின் தொன்மை
அடையாளம் அல்லவா?
காரை நிறுத்திவிட்டு
அதைச்சுற்றி பார்க்க நினைத்தேன்.
அங்கே இருந்த
தகவல் பலகைகள்.
இந்தியில்
என்னென்னவோ எழுத்துக்களை
வடாம் பிழிந்து வைத்திருந்தார்கள்.
வரவேற்பு தோரணத்தில் பெரிய இந்தி எழுத்து.
அதன் கீழ் ஆங்கிலத்தில்.
"திஸ் சைட் இன்டிகேட்ஸ் அவர் "ஆர்யன்" சிவிலிசேஷன்"
ஐயகோ!
தமிழின் தொன்மை
வடமொழிக்குள் தொலைந்து போய் விட்டதோ?
காரில் பயணம் தொடர்ந்தேன்.
ராம..ராம..ராம....ராம....
ராமேஸ்வரம் வரைக்கும்
அந்த மைல்கற்களில் எல்லாம்
ரத்தம் வழிந்தது.
தமிழன் தமிழை மறந்ததால்
அவன் பயணத்தின் மைல்கற்கள் எல்லாம்
இங்கே
அவன் அழிவை  அடையாளப்படுத்தும்
நடுகற்களாகவே தோன்றின!

திடுக்கிட்டேன்.
................
.....................
சட்டென்று விழித்துக்கொண்டேன்.
தூக்கத்திலிருந்து தான்!
இந்த‌ வரலாற்று திருத்தங்களிலிருந்து
நாம்
எப்போது விழித்தெழுவது?

==================================================

திங்கள், 3 ஏப்ரல், 2017

விஜயசேதுபதியின் ராஜ வேட்டை.

விஜயசேதுபதியின் ராஜ வேட்டை.
==========================================ருத்ரா இ பரமசிவன்.

குறிவைத்து தான் அடித்திருக்கிறார்
விஜயசேதுபதி.
அதுவும் "மாணிக்கக்  கல் கொண்டு".
இது விஜய்சேதுபதியின் ராஜவேட்டை.

இந்த யுகம் ஊடகங்களுக்கானது !
இருப்பினும் அத்தனை குறுகியதா?
டிவிக்களின் டி ஆர் பி  ரேட்டிங்க்
அத்தனை ரத்தக்களரிகளிலா
நிச்சயம் செய்யப்படுகிறது?
அந்த அகல ஆந்தைக்கண் காமிராவுக்குள்ளும்
அத்தனை அரசியலா? வில்லத்தனமா?
அந்த அடி தடிகளின் கொட்டங்கச்சிக்குள்ளும்
ஏழு கடலையே நீச்சல் குளம் ஆக்கி
"ஜலக்கிரீடை" நன்றாகவே செய்கிறார்
விஜய சேதுபதி.

இவர் அந்த பாத்திரமாகவே மாறி விட்டார்.
அந்த பாத்திரத்திற்காகவே
பிறப்பெடுத்து வந்திருக்கிறார்.
கதைக்காகவே அளவெடுத்து தைத்தது  போல்
பாந்தமாய் பொருந்துகிறார்.

இப்படியெல்லாம் தான்
"யதார்த்த மான பாத்திரத்தை"
புளி போட்டு விளக்குவார்கள்
பேனா மன்னர்கள்.

நடிப்பின் எழுத்துக்களில்
இவருக்கு தெரிந்தது எல்லாம்
உயிரெழுத்து உயிரெழுத்து உயிரெழுத்து தான்.
நடிப்பில்
உயிர்ப்பை வரவழைக்க அரிதாரத்தால் முடியாது
என்று
தன்னை செதில் செதிலாக உரித்துக்காட்டுபவர்.

சினிமா என்பதே "ஜிகினாக்காடுகள்" தான்.
இவரால்  மட்டுமே தன்  மீது
மண்வாசனையை பூசிக்கொள்ள முடிகிறது.
மனித வாசனையை அணிந்து கொள்ள முடிகிறது.

இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள்
நம் தமிழ்ப்பட எல்லா "ஜாம்பவான்களையும்"
ஒரே கிண்ணத்தில்
ஜூஸாக்கி தரும் திறமை மிக்கவர் என்றால்
அது மிகையே இல்லை.
கவண் (கல்)  உண்மையிலேயே
இந்த இருவர்க்கும் சிறப்பான திருப்புமுனையை
தரும் ஒரு மைல்கல்.

=========================================================ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

புதிய இமயம்.
புதிய இமயம்.
====================================================ருத்ரா

மக்களே
உங்களுக்கு என்ன வேண்டும்?
அவர்களுக்கு
உங்கள் வாக்கு வேண்டும்?

உங்கள் கோரிக்கைகளை
அவர்களே
குவிக்கத்தொடங்கி விட்டார்கள்.

உங்கள் தேவைகளும் ஒலிக்கின்றன.
ஆனால்
உங்கள்தமிழின்
ஊற்றுக்கண்ணிலிருந்து வழியும்
கண்ணீரின் ஒலிப்புகள்
உங்களுக்கு கேட்பதே இல்லை.
உங்கள் குழந்தைகள்
"ஷா ஜா ட்ரிக்ஷயா " என்றெல்லாம்
அழைக்கப்படுவதில் தான்
உங்களுக்கு இன்பம்  எனும்
ஒரு விநோத "டாஸ்மாக்" காடுகளில்
ஆழ்ந்து கிடக்கிறீர்கள்.

உங்களுக்கு தெரியுமா?
கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆதிக்கத்தை
பொடி  பொடியாக்கும் வலிமை
தமிழின் கூர்மைக்கு இருக்கிறது!
அதை இந்த இலவசங்களிலா
நீங்கள் மழுங்கடித்துக் கொள்வது?

ஓட்டு வலிமை
உங்கள் தமிழில் தான் இருக்கிறது.
ஆனால் நீங்களோ
ஏதோ ஒரு அர்ச்சனை மொழிகளில்
புதைந்து கிடக்கிறீர்கள்.
உங்கள்  தூக்கம் கலையாத வரை
இந்த ஓட்டு விளையாட்டில்
விடியல் என்பது பூட்டிதான்  கிடக்கிறது
என்பது மட்டும் அல்ல
உங்கள் வானமும் கூட
முழுதுமாய் தொலைந்து  போய்விடலாம்!

திராவிடம் என்பது
விளம்பரம் அல்ல.
ஊழல் அல்ல.
பண மூட்டைகளை அண்டை கொடுத்து
நிறுத்தப்பட்ட
உயரமான ஒரு நாற்காலியும் அல்ல.
நம் தொல் தமிழின் மூச்சுக்காற்று.
மேற்கத்திய கணவாய்களின்
வழியே வந்த பொய்மைகளின்
ஊளைச் சத்தங்களை அடக்கும்
நெருப்புக்குரலின்
தமிழ் அலைகள் !

முகம் தெரியாத
ஒரு தமிழின் குரல்
ஒரு சமுதாய எழுச்சியின் குரல்
ஒரு இளைய தலைமுறையின் குரல்
இந்த ஆர்.கே நகரில்
வெல்லும் ஆனால்
அப்போது தான் தமிழும்
நம்  குமரி விளிம்பில்
ஒரு புதிய இமயமாய் நிமிர்ந்து நிற்கும்!

============================================