பச்சைக்குதிரைகள்.
______________________________________
இந்த உயரம்
உன்னை மிரள வைக்கலாமா?
அதற்கும் மேல் இருக்கும்
ஒரு விண்மீனாய் நினை.
பச்சைக்குதிரை விளையாடும்
களம் உனக்கு
இந்த விண் உச்சிகள் தான்.
லட்சக்கணக்கான மக்களையும்
தன் பால் ஈர்க்கும்
ஒருவரைக்கண்டு
துவண்டு போகாதே.
உன் முன் மொட்டையாய்
ஒரு பொட்டல் இருக்கும் போதும்
அந்த ஒலிவாங்கி தான்
உன்னை ஏற்றிக்கொண்டு
போகும் ஒரு பறக்கும் குதிரை
என்று எண்ணிக்கொள்.
உனக்கு பாசிடிவ் உணர்வின்
வெற்றித்தினவு
தீப்பற்ற வேண்டுமானால்
தோல்விகளின் ருசி
எனும் நெகடிவ் உணர்வின்
காந்தக்கல் உரசிக்கொண்டே
இருக்க வேண்டும்.
நம் காலில் மிதிபடும்
புல் கீற்றுகளில் கூட
எத்தனை
நெப்போலியன்கள் அல்லது
அலெக்சாண்டர்கள்
"ஸ்பர்சித்து"க் கொண்டிருக்கிறார்கள்
தெரியுமா?
கணினி யுகம்
எழுத்துக்களின்
இதய சரசரப்புகளையெல்லாம்
வெறும்
லைக்குகளின்
சருகுச்சத்தங்கள் ஆக்கி
உலர்ந்து போய்க்கிடக்கின்றன.
பசுமை துளிர்க்கட்டும்.
"புல்லின் கீற்றுகள் அல்லது
கத்தி முனைகள்"
என்று
கவிதைகளை சாணை தீட்டி தீட்டி
பொறி வளர்த்து
சிந்தனை வேள்வி மூட்டியவன்
வால்ட் விட்மன்..
அவநம்பிக்கைகளும்
நம்பிக்கைகளும்
மாறி மாறி
மரத்தில் ஏறி விளையாடும்
அணில்கள்.
நானும் இப்படி
விளையாடிக்களிக்கும்
வாழ்க்கையின்
வைக்கல் போர்க்கட்டுகளின்
ஊடே சருக்கி ஆடும்
களிப்புச்சேக்காளிகளில்
ஒருவன்.
__________________________________________________
எப்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக