திங்கள், 8 ஜூலை, 2024

விடியலுள் ஒரு அஸ்தமனம்.

 



விடியலுள் ஒரு அஸ்தமனம்.

____________________________________

சொற்கீரன்.



மேஜை விளக்கு

தன் மவுனத்தை

தன் பொறுமையை

ஒளிப்பிழம்புக்குள்

ஒளித்து வைத்துக்கொண்டு

அங்கு இருந்தது.

என் காகிதங்கள்

எழுத்துக்களால்

கடிகாரத்தை கரைத்து

விழுங்கிக்கொண்டிருந்தது.

முட்களையும் காணோம்

நேரத்தையும் காணோம்.

நான் என்ன எழுதுகிறேன்

என்று

என்னால் படிக்க முடியாமல்

ஒரு மங்கல் காட்டில்

என் பேனாவின் பயணம்.

இறுதி வரிகளோடு

அந்த முண்டைக்கண் விளக்கு

தன் தொப்பிக்குள்

அவித்துக்கொண்டது.

"சூரியன் அந்தக்கடலில் விழித்தான்.

விழித்த  போதே

அந்தக்கடலில் விழத்தொடங்கி விட்டான்.

நம் சுதந்திரம் பிறந்தது

நம் கையிலும் கருத்துகளிலும்

விலங்குகளோடு.

இத்தனை காலமாய்

விடியல் விடியல் என்று

பிம்பம் காட்டிக்கொண்டிருந்தது

நம் அஸ்தமனங்களைத்தான்."


________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக