திங்கள், 27 நவம்பர், 2023

தாக்கோல்



பெட்டி போனால் போயி

தாக்கோல் இவ்ட உண்டு நோக்கிக்கோ

என்று 

ஓட்டு வைத்திருப்பவர்களாய்

கூவிக்கொண்டிருப்பவர்களே!

சற்று உங்களை உற்றுப்பாருங்கள்

ஆம்...

உங்களையே அங்கு காணோம்.

நீங்கள் எங்கோ வீசியெறியப்பட்டு

கிடக்கிறீர்கள்.

இங்கே அரசியல் சாசனம்

அட்டை கிழிக்கப் பட்டு

பக்கங்கள் சுக்கல் சுக்கலாய்.....

எழுத்துக்கள் அர்த்தங்கள் எல்லாம்

சிதைக்கப்பட்டு....

ஜனநாயகத்தாலேயே

ஜனநாயகம் கசாப்பு செய்யப்பட்டு....

என்ன இது?

பயங்கரமான கற்பனை.

கற்பனை தான்

இதன் கனபரிமாணம்

புரிந்து கொள்ளுமுன்

ஓட்டாளனே!

 நீ

காணாமல் போய் விடாதே.

----------------------------------------------------

ருத்ரா.







.




.

சனி, 25 நவம்பர், 2023

காதல் சஹாரா.


நெஞ்சம் கிழிந்ததே.

நெகிழ்ந்த அந்த இடைவெளியைத்

தைக்க என்

ஊசி நினைவுகளைத் தேடினேன்.

அழகிய ரோஜாவின் 

அந்த முட்கள்

ரத்தம் கசிய கசிய 

தையலைத் தொடர்ந்தது.

தையலும் 

தொடர்ந்து தொடர்ந்து

வீசிய விழித்தூண்டில்களில்

இன்னமும் 

துடித்துக்கொண்டு தான்

இருக்கின்றேன்.

அவளா இன்று இந்த 

சொற்களை வீசி வீசி என்னைத்

துண்டு துண்டாக்குகின்றாள்.

காதல் 

வாழ்க்கையின் வறண்ட 

எலும்புக்கூடுகளின்

பாலைவனத்தில் பயணிக்கும் போதும்

"பசுஞ்சோலை"களின்

தண்ணிழல் வரிகளை தன் மீதின்

சாட்டை அடிகளில்

சாகாத இனிப்புகளாய்

சப்பு கொட்டிக்கொண்டிருக்கிறது !

----------------------------------------------------------

"கீட்ஸ்"யன்











தரிசனம் இலவசம்.



இலவசம் தான்.

ஜனநாயகத்தை

உண்டியலில் போட்டுவிட்டு

நீங்கள்

பெற்றுக்கொள்வது

சர்வாதிகாரத்தையே.

---------------------------------------

ருத்ரா.


சனி, 18 நவம்பர், 2023

வதம்.

வதம் 

-------------------------


ஓட்டுகள்

சீட்டுகள் 

எல்லாம் சரி தான்.

பின்னால் விரட்டிக் கொண்டு வரும் 

குதிரை பேரங்கள் தான் 

அந்த மன்றத்தில்

கழுதை லாயங்களை 

அமைக்கப் போகின்றன.

இந்த தேசத்தில் 

இன்னும் நம்பிக்கைகளின் பெயர் 

அவநம்பிக்கை தான்.

மன்னித்துக்கொள்ளுங்கள்.

நமக்கு இப்போது தேவை 

எச்சரிக்கை மட்டுமே.

எச்சரிக்கை இல்லாவிட்டால் 

தேர்தல் மரா மரங்கள் வழியே கூட

ராமன் அம்புகள் நம்மை 

வதம் செய்து விடலாம்.

---------------------------------------------

ருத்ரா.





புரட்டி போட்ட புத்தகம்....


புரட்டி போட்ட புத்தகம்....

-----------------------------------------------------

கல்லிடைக்குறிச்சிக்காரன்.


எல ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லன்னு 

சொல்லி கிட்டு 

இந்த அண்டத்த அளந்து 

மொளம் போட்டுக்கிட்டு

போறது தாம்லே இங்கே 

"குவாண்டம் "ங்கிறது.

அழகா இதைத் தமிழில் 

"அளபடையம் னு " சொல்லலாம்ல

எல ..

நான் இப்பம் ஒரு புத்தகம் 

படிச்சி கிட்டு இருக்கேம்ல ... 

அதும்  பேரு. .

"குவாண்டம் கம்பியூட்டிங் வித் அவுட் மேஜிக் 

...டிவைஸஸ்"னு  பேரு ல. 

அத எழுதுனவரு 

"ஸ்டிசிஸ்லா மெக்லிக்கி "யாம் ல 

ஏல எதாவது புரியுதாலே.

அத விடுலே...

...

குவாண்டம் இயற்பியல் பத்தி 

ஒண்ணு சொல்லியிருக்காரு 

புல்லரிச்சுப் போச்சுலே...

என்னனு பாப்பம் டே...








.


..



வெள்ளி, 17 நவம்பர், 2023

நான் உன்ன கேட்டனா.??

நான் உன்னக்கேட்டனா

------------------------------------------

ருத்ரா 


நான் உன்னக் கேட்டானா

உன்ன கும்பிடச்சொல்லி ?

நீள நீளமான மந்திரங்களை 

நீ சொன்னாலும் 

நீ என்னை நம்பலங்கிறது‌ம் 

நான் உன்னை நம்பலங்கிறது‌ம் 

நம்ம ரெண்டு பேருக்குத் தானே தெரியும்.




ஜிகர் தண்டா.

ஜிகர்தண்டா 
--------------------------------
ரூஸோ.


ஒரு அம்புலிமாமா கதைக்குள் 
ஒரு அக்கினி குழம்பையே
தூரிகையாக்கி 
8 எம் எம் பொம்மை காமிராவுக்குள் 
எவருக்குமே எட்டாத 
ஒரு சிகரத்தை 
எட்டிக்காட்டியிருக்கிறார் 
கார்த்திக் சுப்பராஜ் !



-----------------------------

புதன், 15 நவம்பர், 2023

தோழர் சங்கரய்யா!

தோழர் சங்கரய்யா!

--------------------------------------------

செங்கீரன் .


அவர் அனுமதிக்கவேண்டும்

இவர் அனுமதிக்க வேண்டும் 

என்று 

ஈக்கள் மொய்த்துக்கிடக்கும் 

விருதுகளா

இந்த மாமனிதனை 

சிறுமைப்படுத்துவது ?

உழைக்கும் ம‌க்க‌ளி‌ன் 

ஒவ்வொரு வியர்வைத்துளியும்

ஒவ்வொரு முத்துக்களாய்

அவருக்கு அணி வகுத்து அலங்கரித்து

வைக்கப்பட்டிருக்கு‌ம் 

இந்த தருணங்களில் 

உங்கள் பாரத ரத்னாக்கள் கூட 

வெறும் கண்ணாடிக்க‌ல்கள் தான்.

அவர் சமுதாயக்கனவுகளின் சமநீதியி‌ன் 

உயிர்ப்பான உருவகம்.

வாசித்து முடிக்கப்படாத 

ஒரு புதிய யுகத்தின் 

ஒரு புதிய புத்தகம். 

அவர் பக்கங்களுக்கு இன்னும் 

மரணமில்லை.

இன்னும் நா‌ங்க‌ள் 

கேட்டுக் கொண்டிருக்கிற அவர் 

முழக்கங்களுடன் 

அவர் எங்களுடன் வாழ்கிறார்!

-------------------------------------------------










செவ்வாய், 7 நவம்பர், 2023

கவலை.


கவலை

----------------------------------------------

அடுத்த ஆட்சியைப் பற்றி 

எப்போது கவலைப்படப் போகிறார்கள்?

கணினியில் காக்காய் கழுகுகள் 

எல்லாம் எச்சம் போட்டு 

அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறது.    

துப்புரவு செய்ய டெண்டர்

விட்டிருக்கிறார்கள் .

அதே கழுகுகள் தான் காத்திருக்கின்றன.

மூக்கில் வேர்த்துக்கொண்டு.

------------------------------------------------------

ருத்ரா.



சனி, 4 நவம்பர், 2023

காணாமல் போயினர்

கடவுள்கள் 

தண்டனைகளை காட்டினார்கள் 

பலிகளைக் கேட்டார்கள் 

அதற்கு 

அன்பு என்றும் விசுவாசம் என்றும் 

அர்த்தம் சொன்னார்கள்.

வசனங்கள் ஆகும்  முன்

அவை 

துப்பாக்கிகளாகவும் 

கொத்துக்குண்டுகளாகவும் மாறின. 

மனிதம் கந்தலாகியதில் 

கடவுள்களும் காணாமல் போயினர்.

-----------------------------------------------------------

ருத்ரா.