புதன், 16 நவம்பர், 2016

சிரிப்பு என்றொரு தேசம் (3)


சிரிப்பு என்றொரு தேசம் (3)
============================================ருத்ராவாடிக்கையாளர் வங்கி ஊழியரிடம்

"விரல்ல மை வைக்கிறீ ங்களே ...இது எந்த தொகுதிக்கு?"


--------------------------------------------------------------------------------------

-"என்ன வெறுமனே திரும்பி வர்றீங்க?"

"விரல்ல மச்சம் தான் இது சொல்லிப்பாத்துட்டேங்க
டாக்டர் சர்டிபிகேட் கேக்குறாங்க!"


-------------------------------------------------------------------------------------------------

தேர்தல் "பூத்"துக்குள் மை வைக்கும் அதிகாரி ஒட்டு போட வந்தவரிடம்

"என்ன எவ்வளவு பணம் கொண்டு வந்திருக்கீங்க?

தேர்தல் தலைமை அதிகாரி :- "ஏன்ன லஞ்சமா கேக்கறீ ங்க?

மை வைக்கும் அதிகாரி :-சாரி சார். நான் பாங்க் கேஷியர் சார்
எலக் சன்   டியூட்டி திடீர்னு இங்க போட்டுட்டாங்க சார்.


-----------------------------------------------------------------------------------------------------------

ஒருவர் :-" இந்தியாவின் மத்திய வங்கி  ரிசர்வ் வங்கி தானே

மற்றவர் :- ஆமாம் இப்போது நம்ம "மை "ய வங்கியும் அது தான்.


---------------------------------------------------------------------------------------------------------------


வாடிக்கையாளர் :-  "நீங்க தானே இங்க "மை "ஃ பேர் லேடி" ?

பெண் கேஷியர் :-(ஆத்திரமாக) என்ன சொல்றீ ங்க?

வாடிக்கையாளர் :- கோவிச்சுக்காதீங்க மேடம்.இங்க நீங்கதானே

                                          விரல்ல மை வச்சு கேஷ் குடுக்கிறீங்க?----------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக