செவ்வாய், 1 நவம்பர், 2016

கமல்

கமல்
========================================ருத்ரா

கமல் எனும் அக்கினி புத்திரனே
உன்னைச்சுற்றியா
இந்த கிசுகிசுக்கள் எனும்
கொசுக்களை மொய்க்க விடுவது?
இது உன் அந்தப்புரம்.
இது உன் அந்தரங்கம்.
"அந்தரங்கம்" புனிதமானதும் கூட‌
ஜெயகாந்தன் சொன்னதுபோல்.
பத்து விதமாய் அவதாரம் அடுத்து
பகவான் காட்டியதையும்
உன் பாணியில் காட்டினாயே!
இந்த அவதாரம்
அரிதாரங்கள் தந்த நோயா?
மேக் அப் பல விதமாய்
போட்டு போட்டு  அவிழ்த்து
நடிப்புக்கோயிலின்  கருவறைக்குள்ளேயே
போய் விடக்கூடிய உன்
உத்தம நடிப்புக்குள்
ஒரு "உத்தம வில்லத்தனம்"
ஏன் வந்தது?
எப்படி வந்தது?
என்று கேட்க‌
அரசியல் சாசனம்
எங்களுக்கு எந்த அதிகாரமும் தரவில்லை
என்று நன்றாக தெரியும்.
இருப்பினும்
சினிமாவுக்குள் இப்படி
இன்னொரு சினிமா காட்டும்
ஜகதலபிரதாப வித்தைகள்
உன் அறிவார்ந்த ஆளுமைக்கு
எந்த வகையிலும் பொருந்தவில்லையே !
நீ
விஸ்வரூபம் நடிக்கலாம் .
விஸ்வரூபம் காட்டலாமா?
"அமுதுக்கும் தமிழ்" என்ற வாயால்
கமலுக்கும் தமிழ் என்று பேர்
என்று எங்களை
முணுமுணுக்க வைத்தவன் அல்லவா நீ!
கலைஞன் என்ற
சந்திரனுக்கு
இந்த கிரகணங்கள்
கிரகணங்கள் மட்டும் அல்ல.
புகழ் ஒளியின் மீதான
ரணங்களும் அல்லவா அவை..
என்ற வருத்தத்துடன்
இந்த வரிகளுடன்
முழுக்கு போட்டுக்கொள்கிறோம்..

3 கருத்துகள்: