வியாழன், 3 நவம்பர், 2016

ஜெல்லி ஹவுஸ்"

ஜெல்லி ஹவுஸ்"
===================================================ருத்ரா
கற்பனை ஜெல்லியில்
கட்டினேன் ஒரு ஜெப வீடு.
வழ கொழ வசனங்களில்
சன்னல்கள் திறந்து வைத்தேன்.
ஆகாயமும் உருகி வந்து
மூக்குநுனியில்
சளி பெய்தது.
குற்றம்
தண்டனை
நல்வினை
புண்ணியம்
கும்பிபாகம்
கிருமி போஜனம்
எல்லாம் கிராஃபிக்ஸில்
உறுமியது.
செறுமியது.
சொர்க்கம் என்று
போர்னோக்களை
வளைத்து நெளித்து
குழைத்து குவித்து தந்தது.
இந்திரனும் இந்திராணியும்
சோமத்தில்
குமிழி விட்டார்கள்.
காட்சிகள்
காமா சோமாக்கள்.
டாஸ்மாக்குகளில்
ஆர்டிகிள் முன்னூத்தி அறுபத்தெட்டு.
ஜனநாயகத்தைக்கூட்டல் செய்து
ஜனநாயகத்தை கழித்தல் செய்வோம்.
ஒண்ணு மட்டும் மிஞ்சும்.
அசோகசக்கரம் இனி நிறுத்துவோம்
உருட்டுக்கட்டையில்.
இனி
அம்பத்தொண்ணு சதவீதம் வேண்டாம்.
ஒண்ணே ஒண்ணு
போதும் ஜனநாயகத்துக்கு!
அதுவே கட்டிங்க்..கட்டிங்க்
கட்டிங்க் தவிர வேறு இல்லை.
பாட்டில்கள் உடைத்து
சத்தியம் செய்தன.
மேலவை கீழவை எல்லாம்
இந்த ஜெல்லி ஹவுஸ் தான்.
ஜெல்லிப்புழுக்கள் எனும்
ஓட்டுகளின்
டேப் வோர்ம்கள் தான்.
நம் 69 வருட நீள சுதந்திரத்தின்
மிச்சங்கள்
இந்த "குடி"மைப்புழுக்களின்
ஜெல்லி ஹவுஸ்களே.

=========================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக