திங்கள், 14 நவம்பர், 2016

ருத்ராவின் குறும்பாக்கள்

ருத்ராவின் குறும்பாக்கள்
========================================ருத்ரா

மோடி

அடலஸ் வீரன்.
தோளில் இருப்பது பாரதமா?
கருப்பு மூட்டை பாரமா?
___________________________________________________
ராகுல்

பம்பரம் கோலி விளையாடட்டும்.
அதற்காக‌
பாங்க் க்யூவிலுமா விளையாட்டு?
___________________________________________________
நேரு

கிழிந்த நம் கந்தல் கோட்டிலும்
மின்னல் ரோஜாவின்
முகம்.
__________________________________________________
மூணு தொகுதி தேர்தல்

எவன் தொடுவான்
இப்போ அந்த‌
காகிதக்குப்பையை?
_________________________________________________

மக்கள் நலக்கூட்டணி

மூண அஞ்சால வகுக்கிற‌
வாய்ப்பாடு
மறந்து போச்சு.

___________________________________________________
வைகோ
வாளை உறையில்
போட்டு
ரொம்ப நாளாச்சு.
______________________________________________________
ஸ்டாலின்

தமிழ் மக்கள் ப்ரச்ன தான்
எப்போதும் இங்கே
தனி ஆவர்த்தனம்.
____________________________________________________

அ.தி.மு.க.வேட்பாளர்கள்.

எல்லாம்  ஜெயிச்சதுக்கப்புறம்  இது
உண்ட  சோத்துக்கு
ஊறுகாய்.

_____________________________________________________கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக