வியாழன், 17 நவம்பர், 2016

கடவுள் இருக்கான் குமாரு  (3)

கடவுள் இருக்கான் குமாரு  (3)
=========================================ருத்ரா இ பரமசிவன்.


( சென்ற காட்சியில் சிவனும் நாரதரும் நுழைந்த
தியேட்டரில் "லிங்கா"படம் ஓடிக்கொண்டிருந்தது.)


"போச்சு போச்சு "
நாரதர் தர தரவென்று
கடவுள் கையப்புடிச்சு இழுத்து
வெளியே கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்.
"இந்த புலித்தோலு காஸ்ட்யூம்ல
உங்களை அவரு பாத்துட்டார்னா
விடமாட்டாரு ..
"லட்சக்கணக்கில அந்த பணத்தை
வச்சாத்தான் விடுவாரு."
வெளியே அங்கே இங்கே
சுற்றிக்கொண்டிருந்தார்கள்.
ஈஸ்வரனுக்கோ அந்த படத்தை
பாத்துடணும்னு ஆசை!
அப்போது அங்கே அருகே இருந்த
குப்பைத்தொட்டியில்
யாரோ கரன்சிக்கட்டுகளை
கொட்டிவிட்டு ஓடிப்போனார்கள்.
கிட்டத்தட்ட ஒரு கோடி இருக்குமோ?
"இதுலேருந்து எடுத்து பிரசனையை
சரி பண்ணலாம் "
ஈஸ்வரன் அங்கே ஓட முயன்றார்.
நாரதர் கூறினார்.
"சரி தான் உங்க மச்சான் அதான்
அந்த பிருமாளப்பாத்து
உங்களுக்கும் உண்டியல்ல இப்படி
கொட்டு கொட்டுன்னு கொட்டணும்னு
ஆசை வந்துதுச்சா?
மோடிஜி பாத்தார்னா "மெர்சல்"
ஆயிடுவாரு.
இந்துவாவின் மொத்த எஜமானன்
இப்படி குப்பை  பொறுக்குவதா?"
"போகட்டும்.
அது என்னய்யா நாரதரே
"மெர்சல்"னா என்ன?
தேவலோக அகராதில கூட
இதுக்கு அர்த்தம் கிடைக்காது போலிருக்கே"
"இப்போ இப்படி லோ லோன்னு
அலையறதும் கூட ஒரு அர்த்தம் தான்."
நாரதர் அர்த்தம் கூறினார்.
"சரி இப்ப அந்த படத்தை
பார்த்தே ஆகணும்"
சிவன் அடம்பிடித்தார்.
"அதுக்கு ஒரே ஒரு தியேட்டர் இருக்கு
"........ஷ்" தியேட்டர்"
என்ன தியேட்டர் முழுசா சொல்லுமயா"
பரமேஸ்வரனுக்கு "பிரணவம் "மந்திரம் கூட
உடனே புரிஞ்சுடுச்சு  இது புரியல.
"அதோ பாருங்க அந்த "லிங்கா"க்காரா
நம்மள தேடிண்டு எம கிங்கரர் க ளோட
வந்துண்டு இருக்கா"
நாரதர் பதற்றத்தோடு கத்தினார்.
"அப்படியா விடு ஜு ட்" என்கிறார் சிவன்.
இருவரும் உடனே மறைந்து விட்டார்கள்.


(தொடரும்)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக